கற்பு பற்றி பெரிசா எனக்கு ஒன்னும் சொல்லத் தோணலை. ஆனால் அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகமிக முக்கியம்னு மட்டும் தெரியும். இந்தியாவில் இருந்து சிங்கைக்கு வந்த புதிதில் குட்டைப் பாவாடை பெண்களை பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல பார்ப்பேன். சிவப்புப் பெண்களின் அந்த கெண்டைக்கால் புதிதாக வந்த இந்தியாக் காரனுக்கு என்னவோ செய்தது உண்மை.
ஆனால் அதற்காக தவறான வழியில் எல்லாம் போகலை. மனசு கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு. அது எல்லா மனிதனுக்கும் வேனும். எத்தனையோ முறை எத்தனையோ நேரங்களில் வழி தவற அருமையான வாய்ப்பு கிடைத்தும் அந்நியன் அம்பி மாதிரி ஒரே நேர்கோட்டில் நூல் பிடித்தது போல நல்வழியில் சென்றேன்.
நாகரீகம், கலாச்சாரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். 10 வயசு பெண் இங்கே எனக்கு ஒரு பாய்பிரண்டு இருக்கான் என்று சொல்வதை சமூகம் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. தந்தை, தாய் இருவருமே வேலைக்குப் போகும் கட்டாயத்தில் இருப்பதால் மதிய நேரங்களில் வீட்டில் யாருமில்லா சூழ்நிலையில் தொலைக்காட்சியில் "ஆய்" படங்கள் பார்த்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் சிறார்கள் மிக அதிகம். நாகரீக வளர்ச்சி என்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் உள்ளே இறங்கிப் பார்த்தால் ரொம்ப அசிங்கம்.
பகல் நேரங்களில் கூட விரைவு ரயில்களில், சாலைப் பேருந்துகளில் உடலைக் காட்டும் உடைகளும், கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சிகளும் வெகு சாதாரணம். பகல் வேளைகளில்கூட பூங்காக்களில் காதல்கள் அரங்கேறும். அடுக்குமாடிக் கட்டிடங்களில் இளைப்பாற கட்டப்பட்டுள்ள சிமெண்டு கட்டைகளில் விரல்கள் களியாட்டம் போடும். விரல் விளையாட்டு இங்கே வெகு பிரசித்தம்!
இதை எல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கு பெண்கள் என்றாலே ஒருவிதமான வெறுப்புதான். வேலைக்காக மேம்போக்காக பேசினாலும் அருகில் அமர்ந்து உண்மையை, சக இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளும் நிலையில் நான் அவர்களை பார்த்ததே இல்லை! அதனாலேயோ என்னவோ எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நீண்ட நாட்களாக இல்லை.
என்னுடன் ஒன்றாக பணிபுரியும் "அத்தாக்" என்ற சீன நண்பரும் திருமணம் செய்துகொள்ள வில்லை. அவருக்கு என்னைவிட இரண்டு வயது அதிகம். ஒருநாள் திடீரென என்னிடம் கல்யாணப் பத்திரிக்கை கொடுத்தார். சந்தோஷமாக வாங்கி பிரித்துப் படித்தேன்... வாழ்த்தினேன். ஆனால் பெண் இந்தோனேசியா என்று இருந்தது பத்திரிக்கையில்!
"என்ன அத்தாக், ஏன் அங்கே போனே? இங்கேயே பாத்திருக்கலாமே? லவ் மேரேஜா?"
"அட அதெல்லாம் இல்லை. அதான் உனக்கே தெரியுமே.. இங்க உள்ளது ஒன்னுமே பிடிக்கலை. அதான் அங்கே போய்ட்டேன்"
"ஓ சரி சரி.. புரியுது.."
"அதுசரி நீ ஏன் கல்யாணம் கட்டிக்கலை இன்னும்?"
"I am waiting for a virgin"
"Better you go and search in Kindergarden!"
நடுமண்டையில நச்சுன்னு எவனோ இரும்புக் கழியால அடிச்சதுபோல உணர்ந்தேன்!
14 comments:
அனுபவம் புதுமை கருப்பு. நீங்க சொல்றது சரிதான்.
சிங்கப்பூரில் ரொம்ப மோசம்.
//சிங்கப்பூரில் ரொம்ப மோசம்//
:(
//மனசு கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு. அது எல்லா மனிதனுக்கும் வேனும்.//
ஆமாங்க! அதுதான் தனிமனித ஒழுக்கம் என்பது! அதுதான் நம்மை வழிநடத்தும்! நமக்கு வந்து சேரும் நன்மை தீமைகளுக்கு நம்முடைய ஒழுக்கமே முக்கிய காரணம்!
"நன்றும் தீதும் பிறர்தர வாரா"ன்னு சொல்லியிருக்காங்களே!
//இதை எல்லாம் பார்த்துப் பார்த்து எனக்கு பெண்கள் என்றாலே ஒருவிதமான வெறுப்புதான்//
இதனால ஒட்டுமொத்த பெண்களையே தப்பா பார்ப்பது தப்போன்னு எனக்கு தோணுது கருப்பு அவர்களே!
அவங்க நாட்டு கலாச்சாரமும், சுதந்திரமும் அப்படி!ன்னு நாம எடுத்துகிடலாம்!
//"Better you go and search in Kindergarden!"
//
:)
நீங்க ஏங்க இந்தியா வந்து ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கக் கூடாது!
சீக்கிரமே விவாக பிராப்திரஸ்து!
பெரியார் பாசறையிலிருந்து இப்படியொரு பதிவா?
மற்றவர்கள் என்ன சொல்கிறார்களென்று பார்ப்போம்.
me too.
Dear Karuppu Sir,
"மனசு கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு. அது எல்லா மனிதனுக்கும் வேனும்"
There are lots of girls who still follow your above policy. Those you have seen might be only 5% but 95% of girls in India are good.
/////////////////////////
நாகரீக வளர்ச்சி என்று வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் உள்ளே இறங்கிப் பார்த்தால் ரொம்ப அசிங்கம்.
/////////////////////////
நீங்கள் சொல்வது சரிதான் பல விஷயங்களில்
//மனசு கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு. அது எல்லா மனிதனுக்கும் வேனும்.//
ரொம்ப சரி
கருப்பு, அந்த நண்பர் சொன்னது சரிதான்.. ஆனால் இன்னமும் நீங்கள் 'அதே' காரணத்துக்காகத்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்களா? டூ மச்..
தேவதை போலொரு பெண்ணின்று வந்தது தம்பி! உன்னை நம்பி!
இந்த மைத்துனன் கைத்தளம் பற்றிட வந்தது தம்பி! உன்னை நம்பி!
அடக்கடவுளே! அந்தக் காரணத்துனால திருமணம் செஞ்சுக்கலையா! ம்ம்ம்... நல்ல கருத்தா தெரியலை. இது என்னுடைய கருத்து.
Kindergarten
//ஆனால் பெண்களுக்கு அது மிகமிக முக்கியம்னு மட்டும் தெரியும்.//
"கற்பு நெறியென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்" - பாரதி
கருப்பின் கற்பே கற்பு! வாழ்க, வாழ்க!
//"நன்றும் தீதும் பிறர்தர வாரா"ன்னு சொல்லியிருக்காங்களே!//
தீதுதான்யா முதலில் வரும்!
////ஆனால் பெண்களுக்கு அது மிகமிக முக்கியம்னு மட்டும் தெரியும்.//
"கற்பு நெறியென்று சொல்ல வந்தார்
இரு கட்சிக்கும் அதை பொதுவில் வைப்போம்" - பாரதி
//
காயத்ரி,
என் குணநலன் பற்றி இப்பதிவிலேயே விவரித்து இருக்கிறேன். நான் அநியாயத்துக்கு பெண்கள் விஷயத்தில் நல்லவன். மற்றவர்காளும் அவ்வாறே இருக்க வேண்டும் என்பதுவே எனது ஆசையும்.
Post a Comment