Wednesday, June 13, 2007

நகைச்சு வையுங்களேன்!



ஒசாமா: அமெரிக்காவ இந்த உலக மேப்ல இருந்தே மொத்தமா அழிச்சிடனும்!

தல: கவலையே வேனாம். அந்த பொறுப்ப என்கிட்ட விட்டுரு... நம்ம அமைச்சரோட அஞ்சாவது பொன்னு ஸ்கூல் பேக்ல இருந்து திருடுன அழி ரப்பர் இப்ப எங்கிட்டதான் இருக்கு!


********************

அமைச்சர் வேகவேகமாக ஓடிவருகிறார்...

அமைச்சர்: மன்னா மன்னா...!

தல : என்னா?

அமைச்சர்: தூது வந்த புறாவை ரோஸ்ட் செய்து சாப்பிட வேனாம்னு சொன்னேன், கேட்டீங்களா?

தல: இப்ப என்னா அதுக்கு?

அமைச்சர்: அந்த அரசன் நம்ம மேல இப்போ படையெடுத்து வந்து கொண்டிருக்கிறான்...

*****************

ஈராக்கில் தீவிரவாதிகளின் பகுதியில் ஒரு அமெரிக்க ஹெலிகாப்டர் பழுதாகி விழுந்து, பைலட் மாட்டிக் கொண்டார். முகமூடி அணிந்தவர்கள் அவரை வீடியோ எடுத்து, மண்டையில் ரைஃபிள் வைத்துச் சுடும் நேரத்தில்... அந்த இளம் பைலட் பாஸ்டனில் படிக்கும்போது கொஞ்சம் அரபிக் கற்றிருந்ததால் தீவிரவாதிகளிடம், "நண்பர்களே, சண்டை முடியப்போகிறது. நாங்கள் உங்கள் நாட்டைவிட்டு இதோ ஓடிப் போகப் போகிறோம். எனக்கு இளம் மனைவி, இரு பெண் குழந்தைகள் உண்டு. இதோ அந்த போட்டோ! உங்கள் உள்ளத்தில் கருணை உண்டு என்பது எனக்குத் தெரியும். என்னை விடுவித்தால், உங்கள் மனிதாபிமானம் வெளிப்படும். கொஞ்சம் யோசியுங்கள்!"...என்றான்.


தீவிரவாதிகள் கும்பலாக கூடி கூடிப் பேசினார்கள். "சரி, உன்னை விடுவிக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷனின் பேரில்..!"

"எது வேனாலும் செய்றேன்... சீக்கிரம் சொல்லுங்கள்?"

"அதோ, அங்கே மூன்று கூடாரங்கள் இருக்கின்றன பார்... அவற்றில் அடுத்தடுத்துப் புகுந்து, மூன்று காரியம் செய்து முடித்துவிட்டு வெளிவந்துவிட்டால் போதும். உடனே விடுவிக்கிறோம்!"


"அவ்வளவுதானே... கூடாரத்துக்குள் என்ன?"

"முதல் கூடாரத்தில் பத்து பாட்டில் வோட்கா இருக்கும். நாங்கள் குடிப்பதில்லை. அனைத்தையும் ஒரு மணி நேரத்தில் குடித்துவிட்டு வெளிவர வேண்டும். இரண்டாவது கூடாரத்தில் ஒரு பசித்த புலி இருக்கிறது. அதற்குப் பத்து நாட்களாக உணவில்லை. பல்வலியால் மிகுந்த அவதிப்படுகிறது. வெறும் கைகளால், ஒரு மணி நேரத்தில் அதன் பல்லைப் பிடுங்க வேண்டும்...!"

"சரி... மூன்றாவது கூடாரத்தில்?"

"ஓர் அழகான, ஆரோக்கியமான இளம்பெண் இருக்கிறாள். அவளை இன்பமாக்கி விட்டு வந்தால், உன்னை விடுதலை பண்ணுகிறோம்!"

அமெரிக்க பைலட், உயிர் போகப்போறது நிச்சயம்... எதற்கும் முயற்சி பண்ணிப் பார்ப்போமே... காசா, பணமா? என்று முதல் கூடாரத்தில் நுழைந்தான். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை மடக், மடக்கென்று குடிக்கும் சத்தம் கேட்டது. காலி வோட்கா பாட்டில்கள் வெளியே ஒவ்வொன்றாக வந்து விழுந்தன. ஒரு மணி நேரத்தில், நிற்கக்கூட முடியாமல் தள்ளாடித் தள்ளாடி வெளியே வந்தான். பத்து பாட்டில் என்றால் சும்மாவா? அதுவும் வோட்கா!

தடுமாற்றத்துடன், "ழெண்டாவது கூடாழம் எங்க?" என்று கேட்டுக்கொண்டே அடுத்த கூடாரத்திற்குள் நுழைந்தான். புலியின் பெரிய உறுமல் கேட்டது. அவன் அதனுடன் நைச்சியமாகப் பேசுவதும் கேட்டது.

"ஒனக்கு நல்லழுதானே செய்யப் போழேன். கொஞ்சம் அஷங்காம இரு, புளி!"

முதலில் எழுந்த போராட்ட சத்தங்கள் மெள்ள மெள்ள அடங்கி, கொஞ்ச நேரத்தில் புலி மௌனமானது. தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பைலட் வெளியே வந்தான், ஒரே தள்ளாட்டமாக... சட்டை கிழிந்து... உடம்பெல்லாம் புலி கீறிய ரத்தத்துடன். ஆனால், ஆள் முழுசாகத்தான் இருந்தான். சுற்றிச் சுற்றி வந்தான்.

"என்னப்பா தேடுற?"

"இல்ல வந்து வந்து... அ... அடுத்தது... அந்தப் பல்வலிப் பெண் எங்க... காட்டுங்க?" என்றான்.


**************

16 comments:

Anonymous said...

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ்ஹா

செம சிரிப்பு.

நாமக்கல் சிபி said...

:))

Nice One

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ்ஹா

வெங்கட்ராமன் said...

///////////////
இல்ல வந்து வந்து... அ... அடுத்தது... அந்தப் பல்வலிப் பெண் எங்க... காட்டுங்க?" என்றான்.
///////////////

காலங்காத்தாலேயே நன்றாக சிரிக்க வைத்து விட்டீர்கள்.

கருப்பு சார் விடாது சிரிப்பு அப்படின்னு தனி வலைப் பூவே ஆரம்பிக்கலாமே நீங்க . . . .

ILA (a) இளா said...

உனக்கு யாருங்க கருப்புன்னு பேர் வெச்சாங்க, பச்சைன்னே வெச்சு இருக்கலாம்

Anonymous said...

செம சிரிப்பு.

Anonymous said...

நிறைய சிரித்தேன்.
கண்களில் நீர்
அருகில் இருந்தோர்
ஒரு மாதிரியாக
பார்த்தனர்!

Anonymous said...

படி ஒரு சம்பவமே நடைவெற வில்லை. இது முற்றிலும் பொய்யான சிரிப்பு.

கப்பி | Kappi said...

super :))

உண்மைத்தமிழன் said...

கருப்பு நினைக்கவே இல்லை.. கடைசியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. A ஜோக்தான் என்றாலும் சொல்வது கருப்புதானான்னு சந்தேகமே வருது..

Anonymous said...

அமெரிக்க அதிகாரிகள் மாட்டினால் ஈராக்கிய வீரர்கள் விடுவது இல்லை கருப்பு.

சங்குதான்.

Anonymous said...

நகைச்சுவை என்பது ஒரு கலை.

உங்களுக்கு நன்றாகவே வருகிறது!

Anonymous said...

விடாது கருப்பு,

நகைச்சுவையிலும் இறங்கிட்டீங்களா?

சூப்பர். இந்த ஒரு மாதமும் நன்றாக அமையட்டும்.

உங்க மடல் வந்தது.

அடுத்த மாதம் தூள் கிளப்புங்க. பழைய ஸ்டைலில்.

உண்மை said...

விடாது சிரிப்பு !

சாதிக் said...

நல்ல ஜோக் :)))))))

ALIF AHAMED said...

ஓஷோ சொன்ன கதைதானே கருப்பு...:)

Anonymous said...

//இறைநேசன் சொன்னது...
விடாது கருப்பு,

நகைச்சுவையிலும் இறங்கிட்டீங்களா?

சூப்பர். இந்த ஒரு மாதமும் நன்றாக அமையட்டும்.

உங்க மடல் வந்தது.

அடுத்த மாதம் தூள் கிளப்புங்க. பழைய ஸ்டைலில்.//


சகோதரரே இந்த இறை நேசன் நான் இல்லைங்க.

இறை நேசன் என்ற பெயரை நான் பட்டா போட்டு ஒன்றும் வாங்கவில்லை. எனவே யாரோ சகோதரர் விடாது கருப்புவுடன் மடலில் தொடர்புள்ள ஒருவர் தனது பெயரை இறை நேசன் என வைத்துக் கொள்வதில் தவறு எதுவும் இல்லை.

ஆனால் அது நான் தான் என தவறாக கருதப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம்.

மற்றபடி சகோதரர் விடாது கருப்புவின் மற்றொரு முகம் ரசிக்கும் படியாகவே உள்ளது. அதே போன்று மேலே உள்ள இறை நேசன் கூறியது போன்று //அடுத்த மாதம் தூள் கிளப்புங்க. பழைய ஸ்டைலில்.// என்பதை நானும் வழிமொழிகின்றேன்.

அன்புடன்
இறை நேசன்.