Thursday, June 7, 2007

என் முதல் ராத்திரி அனுபவம்...!

என் முதல் ராத்திரி அனுபவத்தை இப்போது உங்களுடன் வலைப்பதிவிலேயே முதன்முறையாக பகிர்ந்து கொள்கிறேன்.



எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. மூளைகூட சரிவர செயல்பட மறுத்தது. என் எண்ணம், மூளை, செயல் எல்லாம் என் கட்டுப்பாட்டில் சுத்தமாக இல்லை! 6.6.19**- அன்றுதான் நான் இந்த பூமியில் ஜனித்த நாள்... அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தபின் நான் கொஞ்சம் லேட்டாக 1 மணி நேரம் கழித்து பிறந்தேன்... என்னையும் சேர்த்து அந்த ஆஸ்பத்ரியில் 5 குழந்தைகள் பிறந்தோம் அன்று..! அவர்கள் எல்லாம் எனக்கு முன்னாடியே பிறந்து விட்டிருந்தனர். நான் பிறந்தது பெரிய தனியார் மருத்துவமனை எல்லாம் இல்லை.. அரசாங்க இலவச மருத்துவமனை... இரு மருத்துவர், 5 தாதிகள், ஒரு கோட்டி, இரு துப்புறவாளர்கள் கொண்ட சிறிய மருத்துவமனைதான்.

பூவுலகைத் தரிசித்ததும் நிறைய அழுதேனாம். கண்களில் மட்டும் நீர் வரவே இல்லை என்று பிறகு சொன்னார்கள். தாதிகள் அம்மாவுக்குப் பக்கத்தில் என்னையும் படுக்க வைத்திருந்தனர். அப்பா வந்து ஆஸ்பத்ரியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மருத்துவ ஊழியர் சிலருக்கு பணமாக அன்பளிப்பும் வழங்கினார்.

மாலை நேரமாகியது. அம்மாவையும் என்னையும் பார்க்க வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் ஒருவர்பின் ஒருவராக விடைபெறத் தொடங்கினர். நானும் அம்மாவும் மட்டுமே தனித்து விடப்பட்டோம். அது பொது அறை என்பதால் அடுத்தடுத்த படுக்கைகளில் என் நண்பர்கள் அவரவர் அம்மாவோடு படுத்திருந்தனர்.

அனைவரும் போகும் வரை எனக்கு ஏதும் தெரியவில்லை.. ஆனால் சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிய எனது அழுகை பெரியதாக மாறியது.! அம்மாதான் பால் கொடுத்து என்னை அழவிடாமல் தடுத்தார். உண்ட மயக்கத்தில் திருப்தியாக உறங்கிப் போனேன். நள்ளிரவு நடுநிசி... கனவில் பெரியார், அல்லா, ஏசு, சிவன் வந்தனர்.... பயந்து போன நான் 'ஓ' வென்று கத்திக்கொண்டே படுக்கையை 'ஈர'மாக்கி விட்டேன்..!!!

ஈரம் பட்டதால் விழிப்பு வந்த அம்மா என்னைத் துடைத்து படுக்கைத் துணிகளை மாற்றினார்.

-இதுதான் எனது முதல் ராத்திரி அனுபவம்....



பதிவுலகில் ரொம்ப பேர் மொக்கை போடுறாங்க... கருப்பு மட்டும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகாமல் இருந்தால் எப்படி? அதான்.... சாரி சார்... ரொம்ப கோவிச்சுக்காதீங்க.... சும்மா கலாய்ச்சேன்!

55 comments:

Anonymous said...

இது ரொம்ப ஓவர்!

கருப்பு said...

மிக்க நன்றி அனானி சார் உங்கள் பின்னூட்டத்துக்கு.

இம்சை said...

Belated Birthday wishes விடாதுகருப்பு uncle.

இம்சை said...

பதிவுலகில் ரொம்ப பேர் மொக்கை போடுறாங்க... கருப்பு மட்டும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகாமல் இருந்தால் எப்படி?

Vanga Vanga Ready start Music

அபி அப்பா said...

கருப்புக்கு இந்த மாதம் மூஞ்சி முழுக்க ஒரே சிரிப்பா இருக்கே...இதுதான் வ.வா.ச வின் மகிமையா:-))

நாகை சிவா said...

முதல் ராத்திரியில் கனவு வேறயா?

அதுவும் பெரியார்......ம்ம்ம்ம்

நாகை சிவா said...

//இது ரொம்ப ஓவர்! //

ப்ரீயா விடுங்க அனானி.... கருப்பையே... சங்கத்து காத்து, கருப்பு எல்லாம் அண்டிடுச்சு போல... அதான் அவரும் கலாய்க்குறார்....

அபி அப்பா said...

கருப்பு சாரே! போட்டோல செகப்பா இருக்கீங்க ஜூப்பரா:-))

Anonymous said...

ரெம்ப காமேடியா போச்சுதுங்கோ..

ILA (a) இளா said...

//பதிவுலகில் ரொம்ப பேர் மொக்கை போடுறாங்க... கருப்பு மட்டும் அந்த ஜோதியில் ஐக்கியம் ஆகாமல் இருந்தால் எப்படி? //
Welcome to the Board Mr. Karuppu. ஆட்சி மாறினால் காட்சி மாறும்ன்னு கேள்விபட்டு இருப்பீங்களே, அதுமாதிரிதான் தலைப்பு மாறினா பதிவோட போக்கும் மாறும். கருப்பு எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குங்களா?

nagoreismail said...

நல்ல அனுபவம் -கடைசியில் பசியையும் பயத்தையும் போக்கியது அம்மா தான், இல்லையா? - நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

i have a blog and i have a problem in add my blog to thenkoodu &thamizmanam.com. Any one give me the full details to add it .PLEASE MAIL ME YUVANFAN@YAHOO.CO.IN .THANK YOU

நாமக்கல் சிபி said...

மொக்கை போட்ட கருப்பு அண்ணாச்சிக்கு மிக்க நன்றி!

நாமக்கல் சிபி said...

//கருப்புக்கு இந்த மாதம் மூஞ்சி முழுக்க ஒரே சிரிப்பா இருக்கே...இதுதான் வ.வா.ச வின் மகிமையா:-)) //

அபி அப்பா!
எங்க நோக்கமே அதுதானே!
இதைப் படிச்சிட்டு எனக்கு ஆனந்தக் கண்ணீரா வருது!

நாமக்கல் சிபி said...

//கடைசியில் பசியையும் பயத்தையும் போக்கியது அம்மா தான், இல்லையா? -//

ம்ம்!
அட்லாஸ் வாலிபருக்கு ஆப்பு ஆரம்பமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்!

:)

நாமக்கல் சிபி said...

இம்சை அரசே!

எங்கே போயிருந்தீர்கள் இத்தனை நாளா காணவில்லை!

நாமக்கல் சிபி said...

//இது ரொம்ப ஓவர்! //

இது யாருப்பா இது மூணு போஸ்டுக்கே ஓவர் சொல்லுறது!

ஆறு போஸ்ட் போட்டாதான் ஒரு ஓவர்!

சரியா!

நாமக்கல் சிபி said...

நல்ல முதல் இரவு அனுபவம்தான் கருப்பு!

ஞாபகம் வெச்சி எங்களோட பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

அப்பவே கனவுல பெரியாரெல்லாம் வந்தாரா?

அப்பவே உங்களைத் தொண்டராக்கிட்டார்னு சொல்லுங்க!

:))

Anonymous said...

blackie ungaluku memory power ivalavu jastiya?ennaku 2 varusam munnadi enna nadanthathu nu kuda njabagam illai.aana ungaluku pirantha naal enna nadanthathu nu njabagam irruku... :-))))

ILA (a) இளா said...

//என் எண்ணம், மூளை, செயல் எல்லாம் என் கட்டுப்பாட்டில் சுத்தமாக இல்லை! //
எங்க தளபதிக்கு இப்பவுமே இப்படிதான்.

ILA (a) இளா said...

//நான் 'ஓ' வென்று கத்திக்கொண்டே படுக்கையை 'ஈர'மாக்கி விட்டேன்..!!!//
அது ராம் அடிக்கடி Profile படத்தை மாத்தறார் தானே., அப்படி மாத்தும் போது அவர் படத்தை பார்த்து இருப்பீங்க. அவ்ளோதான்.

நாமக்கல் சிபி said...

//எங்க தளபதிக்கு இப்பவுமே இப்படிதான்//

ஆமா!

இளா,
தளபதி போஸ்ட் கைமாறி இப்போ உங்ககிட்டே இருக்கு என்பதை மறந்துட்டீங்களா?

ஓ! எதுவுமே உங்கள் நினைவில் (கட்டுப்பாட்டில்) இருக்காதல்ல!

நாமக்கல் சிபி said...

//blackie ungaluku memory power ivalavu jastiya?ennaku 2 varusam munnadi enna nadanthathu nu kuda njabagam illai.//

தங்கச்சி,
எனக்குக் கூட சின்ன வயசுல வெச்ச பேரு இன்னமும் எனக்கு ஞாபகத்துல இருக்கு!

நாமக்கல் சிபி said...

//அது ராம் அடிக்கடி Profile படத்தை மாத்தறார் தானே., அப்படி மாத்தும் போது அவர் படத்தை பார்த்து இருப்பீங்க. //

:) இருக்கலாம்!

இதை நான் வழிமொழிகிறேன்!

ILA (a) இளா said...

//பூவுலகைத் தரிசித்ததும் நிறைய அழுதேனாம்.//
இது ஆனந்த கண்ணீருங்க கருப்பு.

//பூவுலகைத் தரிசித்ததும் நிறைய அழுதேனாம்.//

வ.வா.ச எழுதுற மொக்க கதைய எல்லாம் படிச்சே ஆவனும்னு யாரோ உங்ககிட்ட சொல்லி இருக்காங்க போல.

இராம்/Raam said...

/அது ராம் அடிக்கடி Profile படத்தை மாத்தறார் தானே., அப்படி மாத்தும் போது அவர் படத்தை பார்த்து இருப்பீங்க. அவ்ளோதான்.//

போய் விவசாயத்தை பாருங்கய்யா... :)

ILA (a) இளா said...

//ஓ! எதுவுமே உங்கள் நினைவில் (கட்டுப்பாட்டில்) இருக்காதல்ல! /
அதெல்லாம் 6 வட்டம் ஆச்சுன்னா தான். அதுவும் கமுக்கமா சுருண்டு படுத்துருவோம். அப்புறமா பொலம்புவேன் பாருங்க. ராம் ஏழுதுற கவிதை மாதிரியே இருக்கும்

ILA (a) இளா said...

//போய் விவசாயத்தை பாருங்கய்யா... :) //
ஆமா, ஆமா. நான் விவசாயம் பார்க்க போறேன், நீங்க Profile படம் மாத்த போங்க

Anonymous said...

//தங்கச்சி,
எனக்குக் கூட சின்ன வயசுல வெச்ச பேரு இன்னமும் எனக்கு ஞாபகத்துல இருக்கு!
//

ungalaku rombaaaa vellai nu sound vithu vidu inga enna pannuringa?unga lollu thanga mudiyala!

நாமக்கல் சிபி said...

//அதுவும் கமுக்கமா சுருண்டு படுத்துருவோம்//

நானும் அப்படித்தான்!

இல்லைன்னா ஓ ண்ணு அழுவேன்!

யாராரோ பிரச்சினைக்கெல்லாம் எனக்கு ஃபீலிங்க்ஸ் ஆப்பு இண்டியா வந்துடும்!

இராம்/Raam said...

//அப்புறமா பொலம்புவேன் பாருங்க. ராம் ஏழுதுற கவிதை மாதிரியே இருக்கும்//


அடபாவமே... என்னோட கவி(ஜ)தை என்ன போதையிலே பொலம்புறமாதிரியா இருக்கு??? :(

ILA (a) இளா said...

//இல்லைன்னா ஓ ண்ணு அழுவேன்!//

இந்த உலகம் உருண்டை. அதாவது கருப்பு அழுதார்ன்னு ஆரம்பிச்சு, வட்டம் அடிச்சு மறுபடியும் அழுவாச்சிக்கே வந்து இருக்கோம். அதனால உலகம் உருண்டைதான். ஆனா ஏன் சிலநேரம் தலைகீழா தெரியுதுன்னுதான் தெரியல..

ILA (a) இளா said...

//அடபாவமே... என்னோட கவி(ஜ)தை என்ன போதையிலே பொலம்புறமாதிரியா இருக்கு??? :( //
அட ஒரு வெளம்பரம்தான். நாம அப்ப பேசுறது கவிதை மாதிரி இருக்கும்னு. உலகம் உருண்டை. இப்போதானே சொன்னேன். மாத்திதான் படிக்கனும்

நாமக்கல் சிபி said...

//என்னோட கவி(ஜ)தை என்ன போதையிலே பொலம்புறமாதிரியா இருக்கு??? //

ஒரு நாள் போதையோட படிச்சிப் பார்த்தேன்!

அப்பவே எல்லாம் தெளிஞ்சிடுச்சு! மறுபடி ஒரு குவார்ட்டர் வாங்கி அடிச்சேன்!

குவார்ட்டர் செலவை என் அக்கவுண்டில் போட்டுடுங்க!

நாமக்கல் சிபி said...

//அட ஒரு வெளம்பரம்தான்//

:))

கரகாட்டக்காரன்
காட்சி
ஏனோ
என்
நினைவுக்கு
வருகிறதே!

நாமக்கல் சிபி said...

//ungalaku rombaaaa vellai nu sound vithu vidu inga enna pannuringa?unga lollu thanga mudiyala! //

மொக்கை/கும்மிப் பதிவு போட்டும் சிபி கண்டுக்கலைன்னு நாளைக்கு வரலாறு என்னை இகழ்ந்து பேசக் கூடாது அல்(ல)வா! அதான்!

நாமக்கல் சிபி said...

//i have a blog and i have a problem in add my blog to thenkoodu &thamizmanam.com. Any one give me the full details to add it .PLEASE MAIL ME YUVANFAN@YAHOO.CO.IN .THANK YOU
//

டெக்னிக்கல் இஷ்யூஸ்!

ஓவர் டூ இராம்!

Anonymous said...

இராம் said...
//அப்புறமா பொலம்புவேன் பாருங்க. ராம் ஏழுதுற கவிதை மாதிரியே இருக்கும்//

///


ராம் கவிதையெல்லாம் போதையில எதுறதுனு சொல்லுரீங்களா விவ்

இம்சை said...

நாமக்கல் சிபி சொன்னது...
இம்சை அரசே!

எங்கே போயிருந்தீர்கள் இத்தனை நாளா காணவில்லை!

I just came only yesterday, till date I was one of the anony but now I thought of giving இம்சை to everyone so Ready start Music...

இராம்/Raam said...

//விவ் ரசிகை மன்றம் சொன்னது...

போய் விவசாயத்தை பாருங்கய்யா... :)///

ராம் நீங்க மட்டும் கடலை விவசாயம் செய்யலாம் எங்க அத்தானை வெறும் விவசாயமா....??? :)//

தாயே மன்றத்துகாரவுகளே... அவரு பேச்சு இலர்'ன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியுமா??

ILA (a) இளா said...

வாங்க இம்சை சாரே. எந்தா சுகந்தன்னே? கொறச்ச நாள் ஆயி நிங்கள கண்டு

ILA (a) இளா said...

////விவ் ரசிகை மன்றம் சொன்னது...

போய் விவசாயத்தை பாருங்கய்யா... :)///

ராம் நீங்க மட்டும் கடலை விவசாயம் செய்யலாம் எங்க அத்தானை வெறும் விவசாயமா....??? :)//
சாரி .Wrong Number. ராம் நம்பர் எப்பவுமே பிசியா இருக்கிறதானலே சில நேரம் கால் வேற பக்கம் divert ஆகுது போல

ILA (a) இளா said...

//Wrong Number. ராம் நம்பர் //

நோட் பண்ணிக்குங்கப்பா, பொண்ணுங்களா.

ராங் நம்பர்
ராம் நம்பர்

Anonymous said...

//
தாயே மன்றத்துகாரவுகளே... அவரு பேச்சு இலர்'ன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியுமா??

///

ரஜினி கமல் கூடதான் பேச்சி இலர் இது தெரியுமா உங்களுக்கு


விவ் கொல வெறி
ரசிகை மன்றம்
கத்தார் கிளை

இம்சை said...

வந்தாச்சிய்யா வந்தாச்சிய்யா இம்சை வ.வா.ச பீலிங்க்ஸ் கண்டுக்கலைன்னு நாளைக்கு எனக்கு ஆப்பு வைக்க கூடாது அதான்! , ஆமா தல எங்க காணாம் ?

Anonymous said...

சாரி .Wrong Number. ராம் நம்பர் எப்பவுமே பிசியா இருக்கிறதானலே சில நேரம் கால் வேற பக்கம் divert ஆகுது போல
///


சங்கத்து சிங்கமெல்லாம் ஆப்புக்கு பயந்துகிடக்கு

ராம் நான் கைப்புயில்லனு சொல்லுறாரு

நீங்க ராங் நம்பருனு சொல்லுரீங்க

ஒண்ணுமே புரியல நாராயணா நாராயணா...:)

இம்சை said...

//i have a blog and i have a problem in add my blog to thenkoodu &thamizmanam.com. Any one give me the full details to add it .PLEASE MAIL ME YUVANFAN@YAHOO.CO.IN .THANK YOU
//

டெக்னிக்கல் இஷ்யூஸ்!

ஓவர் டூ இராம்!


ராம் அண்ணா appadiye yenakum konjam sollunga, namma blog kum add panna mudiyala, it says the blog is either not written in unicode or lot of roman charecters are in it.
But I have only copied some contents in tamil from other blogs and tried still it gives problem.

இம்சை said...

உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அழகிய முதல் ராத்திரி!

குசும்பன் said...

வாழ்கையில உங்களுக்கு முதல் இரவே இனி நடக்காது...சபிப்பது குசும்பன்.

வெட்டிப்பயல் said...

கருப்பு,
கலக்கிட்டீங்க..

இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்...

நல்ல பதிவு

வெட்டிப்பயல் said...

Belated Birthday wishes Sathish

VSK said...

கண்களில் மட்டும் நீர் வரவில்லையாம்!

ஆனா, அம்மாவை எழுப்ப மட்டும் ஈரம் பண்ணத் தெரிஞ்சிருக்கு.

நல்லாவே மூளை[??] செயல்பட ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இது உதாரணம்!
:))

G.Ragavan said...

ஹா ஹா ஹா....முதலிரவு பிரமாதங்க. :-))) வாழ்க்கைல மறக்கவே முடியாதுன்னு சொல்லுங்க.

PPattian said...

பரவாயில்ல உங்க முதல் ராத்திரி... சிலருக்கு முதல் ராத்திரி "Incubator" லயே கழிஞ்சுடுது...:(