Tuesday, November 28, 2006

தொடர் கொள்ளை-தொடர் மழை

நெல்லையில் சமீப காலமாக தொடர்ந்து கொள்ளையும் தொடர்ந்து மழையும் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. அவை இரண்டிற்கும் இடையே உள்ள சுவையான வித்தியாசங்கள்.

எண் - தொடர் கொள்ளை - தொடர் மழை
1 ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான் -

ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

2 பெரும்பாலும் இரவில்தான் -

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்

3 விலையுயர்ந்த பொருள் - பணம் என்று தேடிப்பிடித்து சுருட்டுவான் -

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்

4 மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான் -

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும் தகர்த்துவிட்டு நுழையும்

5 காவல்துறைக்கு பயப்படுவான் - காவல்துறையே பயப்படும்

6 தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம் -

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்.

7 மக்களின் மனநிலை அறிக்கையால்தான் கண்டுபிடிக்கமுடியும் -

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

8 வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம். -

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்

9 நகைகளைத் திருடுவான் - புன்னகையைத் திருடிவிடும்

10 வீட்டுக்குள் சதி - வீட்டுக்குள் நதி

11 வரப்போவது தெரிந்தால் வாசலில் அல்லது

வீட்டைச் சுற்றி காவல் இருக்க வேண்டும் -
வரப்போவது தெரிந்தால் மாடிக்கு செல்ல வேண்டும்

12 வந்தால் பொருட்கள் சுத்தமாகிவிடும் -

வந்தால் இடம் சுத்தமாகிவிடும்

13 பாதுகாப்பு கோரி காவலரிடம் புகார் கொடுக்கலாம் -

பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்


-ரசிகவ் ஞானியார்

9 comments:

ILA (a) இளா said...

//வீட்டுக்குள் சதி - வீட்டுக்குள் நதி//
hahahahhahahahhahah

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
//வீட்டுக்குள் சதி - வீட்டுக்குள் நதி//
hahahahhahahahhahah //



உங்க வீட்டுக்குள்ள எப்பவாவது நதி வந்திருக்கா இளா..

ILA (a) இளா said...

//உங்க வீட்டுக்குள்ள எப்பவாவது நதி வந்திருக்கா இளா.//
ஆண்டவன் புண்ணியத்துல அப்படி ஒன்னும் நடக்கலைங்க.

ILA (a) இளா said...

//உங்க வீட்டுக்குள்ள எப்பவாவது நதி வந்திருக்கா இளா.//
ஆண்டவன் புண்ணியத்துல அப்படி ஒன்னும் நடக்கலைங்க.

Syam said...

சூப்பர் கம்பேரிசன் :-)

Syam said...

//காவல்துறைக்கு பயப்படுவான் //

எதுக்கு அவங்களுக்கு எவ்வளவு பர்சண்டேஜ் குடுக்கனும்னா :-)

Divya said...

Good comparison

Anonymous said...

கைப்புள்ள சார்,

சங்கம் பரிந்துரையில் சேர்த்து என்னை அங்கீகரித்தற்காக மிக்க நன்றி

Unknown said...

யப்பா நெல்லையிலே வெள்ளம் வடிஞ்சுட்டாடே??? சோமா இருக்கியளா? நல்லாத் தான் சேத்து வச்சு விளக்கம் கொடுத்துருக்கீரு..