Friday, November 3, 2006

கானா ரசிகவ்நாதன்

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தில் என்னையும் இணைத்துக்கொண்டு என்னை ஒரு வாரம் பதிவுகள் இடச்சொல்லி அன்புக்கட்டளையிட்ட நாகை சிவா மற்றும் நண்பர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இதோ என்னுடைய பதிவு . என்ன பதிவு முதலில் இடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பாடலை பதிவாக போடலாமே என்று நினைத்தேன்.

என்னுடைய திருமணத்திற்கு முன் அந்த திருமணத்தைச் சம்பந்தப்படுத்தி நான் எழுதிய வாளமீனு என்ற பாடலை எனது மனைவியாக போறவளுக்கு அனுப்பினேன். படிச்சிட்டு அவங்க குடும்பத்திற்கே ஒலிபரப்பிட்டாங்க. என்ன ஒரு வருத்தம்னா அவங்களுக்கு மட்டும் இந்தப்பாட்டே பிடிக்கலையாம். இதோ அந்தப்பாடல்..

Photobucket - Video and Image Hosting


கானா ரசிகவ்நாதன்

வாலு ஞானிக்கும் அழகுஜஹானுக்கும் கல்யாணம்
அந்த பாளையங்கோட்டை பக்கமெல்லாம் ஊர்கோலம்
அன்னை மண்டபத்தில் நடக்குதய்யா திருமணம்
அங்கு சதக் காலேஜ் ஆளுக்கெல்லாம் கும்மாளம்

ஓ..ஓ.ஓ

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்


வாலு ஞானிக்கும் அழகுஜஹானுக்கும் கல்யாணம்
அந்த பாளையங்கோட்டை பக்கமெல்லாம் ஊர்கோலம்



ஊர்வலத்தின் கூட்டம் கண்டு பகையெல்லாம் ஓடிடும்
அய்யா
மேலதாளம் சத்தம்கேட்டு மேலப்பாளையம் கூடிடும்
ஊர்வலத்தின் கூட்டம் கண்டு பகையெல்லாம் ஓடிடும்
அய்யா
மேலதாளம் சத்தம்கேட்டு மேலப்பாளையம் கூடிடும்

வாலு ஞானி ப்ரண்டுக்கெல்லாம் பார்ட்டியும்
நம்ம வாலு ஞானி ப்ரண்டுக்கெல்லாம் பார்ட்டியும்
அங்கே காதல்பேசி கூடுதய்யா கல்யாண காட்சியும்..கல்யாண காட்சியும்..


வாலு ஞானிக்கும் அழகு ஜஹானுக்கும் கல்யாணம்
அந்த பாளையங்கோட்டை பக்கமெல்லாம் ஊர்கோலம்


பூரிக்கிழங்கு திருடி தின்னு பூத்ததய்யா லவ்வுங்கோ..
பார்க் பீச் எதுவுமில்லை பத்து வருச பிரியங்கோ..
பூரிக்கிழங்கு திருடி தின்னு பூத்ததய்யா லவ்வுங்கோ..
பார்க் பீச் எதுவுமில்லை பத்து வருச பிரியங்கோ..


கண்டு கடந்து போன கண்ணு மீனுதானுங்கோ
கண்டு கடந்து போன கண்ணு மீனுதானுங்கோ

அந்த கண்ணிரண்டும் ஒண்ணாகி வருதுபாரு ஓலைங்கோ
கல்யாணம் நடக்கப்போகுது ஜுலைங்கோ

வாலு ஞானிக்கும் அழகுஜஹானுக்கும் கல்யாணம்
அந்த பாளையங்கோட்டை பக்கமெல்லாம் ஊர்கோலம்


மாப்பிள்ளை சொந்த பந்தம் சதக் ஸ்டுடண்ட் தானுங்கோ
உலகத்துக்கே அனுப்பினாலும் இப்ப போஸ்டல் செலவு மிச்சங்கோ.. (?)

மாப்பிள்ளை சொந்த பந்தம் சதக் ஸ்டுடண்ட் தானுங்கோ
உலகத்துக்கே அனுப்பினாலும் இப்ப போஸ்டல் செலவு மிச்சங்கோ..



பெண்ணுக்கு சொந்தபந்தம் கொரியரில வருகுது
பெண்ணுக்கு சொந்தபந்தம் கொரியரில வருகுது
எங்க கல்யாண மேட்டரு கொடகொதிப்பை தருகுது..சிலருக்கு
கொடகொதிப்பை தருகுது



வாலு ஞானிக்கும் அழகுஜஹானுக்கும் கல்யாணம்
அந்த பாளையங்கோட்டை பக்கமெல்லாம் ஊர்கோலம்


மாப்பிள வாலுஞானி மேலப்பாளையம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணு ஜஹானுக்கு வேதம்புதூர் தானுங்கோ..
மாப்பிள வாலுஞானி மேலப்பாளையம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணு ஜஹானுக்கு வேதம்புதூர் தானுங்கோ..
எங்க திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோருக்கு நன்றிங்கோ..
எங்க திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோருக்கு நன்றிங்கோ..

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ..


தலைவரு... கடவுள் தானுங்கோ..




நட்புக்காக

ரசிகவ் ஞானியார்

27 comments:

Anonymous said...

good one!!! congrats and wish u a happy married life!!
நீங்க சதக் mca student-அ? which year did u passout?

பொன்ஸ்~~Poorna said...

சூப்பரா இருக்கு ஞானியார்! :)))

சரி, ஒரு வாரத்துல நழுவிடலாம்னு யோசனையா! சங்கத்துச் சிங்கங்களே பாருங்க.. அட்லாஸ் ஒரு மாதத்தை வாரமாக்கி காலை வாரப் பார்க்கிறார் :)))

ILA (a) இளா said...

பார்க் பீச் எதுவுமில்லை பத்து வருச பிரியங்கோ..//
அடேங்கப்பா, 10 வருஷமா?
ஏற்கனவே சொல்லியிரிந்தாலும், காலதாமானாலும், இன்னொரு முறை "வாழ்த்துக்கள் நண்பரே".

Unknown said...

கானா ரசிகவ் நாதன்... அய்யோ ஆரம்பமே அசத்தலா இருக்கே....

கானா காதுக்கு கேட்டாச்சு.. ஆமா அந்தப் பாட்டுல்ல மாளவிகா வந்து டான் ஸ் ஆடுவாங்களே...

ம்ம் இப்போ புரியுதா உங்க வீட்டுகார தங்கமணிக்கு பாட்டு ஏன் பிடிக்கல்லன்னு...
நம்ம பினாத்தலார் ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கிட்டிங்களா நண்பரே.. மனைவியல் டிகிரியை டிஸ்டிங்ஷ்ன்ல்ல பாஸ் பண்ணலாம்

வெட்டிப்பயல் said...

முதல் அட்லாஸ் பதிவிலேயே பாடலுடல் கலக்கும் ஞானியாருக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

ஆமா ஒரு வாரமா... தோடா ஒரு மாசம்ப்பா.... அப்படி எல்லாம் விட்டுர மாட்டோம்ய்யா...

ம்ம்ம் இந்த 10 வருசக் காதல் மேட்டர் படிச்சுப் பார்த்தாத் தான் நிலவு நண்பன் பெயர் காரணம் புரியுதுங்கோ.

நிலவு நண்பன் = நீ ''லவ்''வு நண்பன் அப்படித் தானே...

கில்லி பையன் said...

அடுத்த அட்லாஸ் வாலிபனா என்னியத் தான் நீஙக் தேர்ந்தெடுக்கணும் மரியாதையா உங்களக் கேட்டுக்குறேன்

இப்படிக்கு

பாலா.. Punch பாலா

ILA (a) இளா said...

//அடுத்த அட்லாஸ் வாலிபனா என்னியத் தான் நீஙக் தேர்ந்தெடுக்கணும் //
கண்டிப்பா நல்லா சோக்கா எழுதினா அடுத்த வருஷத்துக்கு பரிந்துரைச்சுரலாம். அதுவரைக்கும் Wait Please

நாமக்கல் சிபி said...

ஞானியார்,
பாட்டு கலக்கல்...

வாழ்த்துக்கள்!!!

Syam said...

பாட்டு ரொம்ப அனுபவிச்சு பாடி இருக்கீங்க போல...ஆமா மாளவிகாவ கண்ணுலயே காட்டாம போய்டீங்களே... :-)

Syam said...

சங்கத்து சிங்கங்க கூட இருந்தா ஒரு மாசம் ஒரு வாரம் மாதிரி போய்ரும்னுதான சொல்ல வந்தீங்க :-)

இலவசக்கொத்தனார் said...

அட்லாஸ் வாலிபர் அப்படின்னா இந்த படம்தான் போடணமுன்னு இல்லை. சரியான அட்லாஸ் வாலுபரா இருப்பீங்க போல இருக்கே. அடுத்த பதிவுக்கு ராசு படமா? :-D

நாகை சிவா said...

நைனா, படம் சோக்கீது. ஆனா கொத்துஸ் படத்தை திருடி அதில் ஒட்டு வேல பாத்து இருக்கீங்கனு அவரு ரொம்ப கோபப்படுறார் பாருங்க..... படத்துக்காக கூட அவரு இவ்வளவு வருத்தப்படல.

ராமராஜனுக்கு அப்புறம் மஞ்ச சட்டைனா அது கொத்துஸ் தான்... அதுனால் அந்த சட்டைய மாத்திட்டு வேற சட்ட கலருக்கு வாங்க.

Udhayakumar said...

ங்கொக்கமக்கா, என்ன நடக்குது இங்க??? பூரி திருடன் இதயத் திருடனா ஆன கதை...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//aparnaa said...
good one!!! congrats and wish u a happy married life!!
நீங்க சதக் mca student-அ? which year did u passout? //


MCA - M.S University

Bsc (Maths) in sadak.... ( 1996 -1999)

which year u r? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பொன்ஸ் said...
சூப்பரா இருக்கு ஞானியார்! :)))

சரி, ஒரு வாரத்துல நழுவிடலாம்னு யோசனையா! சங்கத்துச் சிங்கங்களே பாருங்க.. அட்லாஸ் ஒரு மாதத்தை //


நன்றி பொன்ஸ்..

ஒருவாரம்தான்னு சொன்னாங்க பா..? சரி சரி நேரம் கிடைக்கும்பொழுது அனுப்புகின்றேன்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
அடேங்கப்பா, 10 வருஷமா?
ஏற்கனவே சொல்லியிரிந்தாலும், காலதாமானாலும், இன்னொரு முறை "வாழ்த்துக்கள் நண்பரே". //

சரி நானும் இன்னொரு முறை நன்றி சொல்லிக்க|றேன் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தேவ் | Dev said... கானா காதுக்கு கேட்டாச்சு.. ஆமா அந்தப் பாட்டுல்ல மாளவிகா வந்து டான் ஸ் ஆடுவாங்களே...//

பார்த்தீங்களா வம்புல மாட்டி விடுறீங்களே

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//பித்தானந்தா said...
முதல் அட்லாஸ் பதிவிலேயே பாடலுடல் கலக்கும் ஞானியாருக்கு வாழ்த்துக்கள். //

நன்றி..

பிரேமானந்தாவுக்கு உங்களுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டோ? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தேவ் | Dev said...

நிலவு நண்பன் = நீ ''லவ்''வு நண்பன் அப்படித் தானே... //


பேசாம நீங்க ஜோசியம் படிக்கலாம்.. :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Punch பாலா said...
அடுத்த அட்லாஸ் வாலிபனா என்னியத் தான் நீஙக் தேர்ந்தெடுக்கணும் மரியாதையா உங்களக் கேட்டுக்குறேன்

இப்படிக்கு

பாலா.. Punch பாலா //


ஆமாப்பா இல்லைனா Punchகுத்து விட்டுற போறாரு

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வெட்டிப்பயல் said...
ஞானியார்,
பாட்டு கலக்கல்...

வாழ்த்துக்கள்!!! //

நன்றி வெடடிப்பயல்..

( உங்கள நான் திட்டுறமாதிரி இல்லை..) :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Syam said...
பாட்டு ரொம்ப அனுபவிச்சு பாடி இருக்கீங்க போல...ஆமா மாளவிகாவ கண்ணுலயே காட்டாம போய்டீங்களே... :-) //

:)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Syam said...
சங்கத்து சிங்கங்க கூட இருந்தா ஒரு மாசம் ஒரு வாரம் மாதிரி போய்ரும்னுதான சொல்ல வந்தீங்க :-) //

அது எப்படிங்க என் மனசுல உள்ளது உங்களுக்கு தெரியுது..? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இலவசக்கொத்தனார் said...
அட்லாஸ் வாலிபர் அப்படின்னா இந்த படம்தான் போடணமுன்னு இல்லை. சரியான அட்லாஸ் வாலுபரா இருப்பீங்க போல இருக்கே. அடுத்த பதிவுக்கு ராசு படமா? :-D //

அழகான படம் போட பயமா இருந்துச்சு அதான் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நாகை சிவா said...
ராமராஜனுக்கு அப்புறம் மஞ்ச சட்டைனா அது கொத்துஸ் தான்... அதுனால் அந்த சட்டைய மாத்திட்டு வேற சட்ட கலருக்கு வாங்க.
. //



ராமராஜனுக்கு மட்டுமா மஞ்ச சட்டை எழுதி வச்சிருக்கு..?

நல்லவங்க யாருன்னாலும் போடலாம்..நீங்க போடமாட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/Udhayakumar said...
ங்கொக்கமக்கா, என்ன நடக்குது இங்க??? பூரி திருடன் இதயத் திருடனா ஆன கதை...//

ச்சும்மா... :)