Wednesday, May 23, 2007

மனைவி - ஜாக்கிரதை

சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.


மனைவி ஒரு மந்திரம்

நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்

மனைவி ஒரு மந்திரி

மண்டையில் ஒரு மண்ணும் இருக்காது என்று பொருள்
அல்லது பெரிய கிரிமினலா இருக்கலாம். இது ரெண்டு இல்லேன்னா மந்திரி வரும்போது 'மடையா நீ எந்திரி'

மனைவி ஒரு தீபம்

இருட்டா இருந்தா மட்டும்தான் உபயோகம் ;-)
(உள்ளதச் சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லிடுவீங்களே?)

மனைவி ஒரு மாணிக்கம்

ரொம்ப காஸ்ட்லியான விசயம்

மனைவி ஒரு மண்ணாங்கட்டி

எந்தக் கணவனும் வாய்விட்டு வெளியில் சொல்லாமல் மனதுக்குள் மட்டும் முணுமுணுப்பது

மனைவி ஒரு மத்தாப்பூ

நெருப்பாய் சிதறுபவள்

மனைவி ஒரு மகாராணி

ராஜவம்சம் ஒழிந்தும் ஒழியாமல் இருப்பவள். மான்யம் அழுதுக்கிட்டு இருக்கணும்

மனைவி ஒரு முன்மாதிரி

எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு

மனைவி ஒரு மகத்துவம்

யாருக்கு என்று யாருக்கும் தெரியாது

மனைவி ஒரு மனுஷி

ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது

மனைவி ஒரு மனைவி

இப்படி ஏன் எந்த மனைவியும் நினைப்பதில்லை?!

21 comments:

நாமக்கல் சிபி said...

அனுபவங்கள்தான் மிகச்சிறந்த படைப்பாளியை உண்டாக்குகின்றன என்பது எவ்வளவு நிதர்சனம் என்று இப்போதுதான் உணர்ந்து கொண்டேன்!

:)

பொன்ஸ்~~Poorna said...

//மனைவி ஒரு மனுஷி

ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது//
பொதுவாக ஆண்கள் ஒப்புக் கொள்ளத் தயங்கும், மறுக்கும், மறைக்கும் உண்மையை தைரியமாக பதிவு செய்ததற்கு எங்களின் சிறப்பு பூங்கொத்து அமீரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது :)))

நாகை சிவா said...

நாம எல்லாம் இன்னும் பேச்சு உலர் தான். அதான் நான் ஜுட்...

இருந்தாலும் பேச்சிலருக்கு இம்பட்டு கவலைகள் இருக்கா?

வாசகன் said...

கல்யாணமே செஞ்சுக்கிட்டாலும் ஆண்கள் பேச்சிலர் தான். பேச்சு இலர்.
((பேச்சில்லாதவர்கள்))

(இங்க, ஒரு பட்டிமன்றத்துல கேட்டது)

களவாணி said...

பழ மொழிய போல்டாப் போட்டுட்டு புதுமொழிய ஸைடுல விட்ட சாத்தான் குளத்தாரே கவுஜ சூப்பர். இது கவுஜ இல்லன்னு மட்டும் சொல்லிராதீங்க...

Jazeela said...

நாமக்கலார் சொன்னா மாதிரி அனுபவத்தின் பிரதிபலிப்பு உங்களுடைய இந்த பதிவு. மனைவி என்ற இடத்திலெல்லாம் உங்க மனைவி பெயரை மட்டும் போட்டிருந்தால்தான் பொருந்தும். ;-) ஏன்னா அவங்கள பத்தி மட்டும் சொல்லத்தான் உங்களுக்கு அனுமதியுண்டு. மனைவி ஒரு தீபத்திற்கு நீங்கள் எழுதியிருந்தது தாங்க முடியவில்லை ;-(. சிரிப்பை வரவைக்கிறேன் பேர்வழின்னு எரிச்சலைத்தான் வரவைக்கிறீங்க.

Anonymous said...

நாமக்கல்லாரே,

இப்படி கல்நெஞ்சன் மாதிரி பேசுனா எப்படி? :-)சொந்த அனுபவம் பொதுவான அனுபவத்தோட ஒத்துப்போகும்போதுதான் அவன் உலகளாவிய படைப்பாளியாக முடியும். அப்படின்னா நான் உலக எளக்கியவாதி ஆயிட்டேன்னு சொல்றீங்களா?

பொன்ஸ்,

நெனச்சேன். மனைவி ஒரு மனைவியா நடந்துக்கிட்டா மனைவி ஒரு மனுஷின்னு கட்டாயம் கணக்குல வச்சுக்கலாம்தான் :-)

சிவா அண்ணாச்சி

இப்ப பேச்சு உலர். க.பி பேச்சு இலர் ஆயிடுவீங்க - வாசகன் அண்ணாச்சி சொன்னா மாதிரி

செந்தில்,

படிக்கட்டு கட்டுனதால கவுஜைன்னு தீர்மானிச்சுட்டீங்க. இருந்துட்டு போவட்டும் :-)

சாத்தான்குளத்தான்

koothanalluran said...

மனைவி ஒரு மருத்துவர்/மருந்து

இம்மாதிரி 'கெக்கே பிக்கே' தத்து பித்து என சொல்லும்போது

நாமக்கல் சிபி said...

//இப்படி கல்நெஞ்சன் மாதிரி பேசுனா எப்படி?//

சாத்தான்குளத்தாரே! எனக்கா கல் நெஞ்சுன்னு சொன்னீங்க?

:(

நீங்க உலகளாவிய படைப்பாளிதானய்யா! உலகளாவிய படைப்பாளிதானய்யா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!

ALIF AHAMED said...

இம்புட்டு இருக்கா...

நா வேற அவசரபட்டுயிப்பேன்

யோசிக்கிறென் ஐயா அடுத்து என்ன செய்வது...??

நாகை சிவா said...

//கல்யாணமே செஞ்சுக்கிட்டாலும் ஆண்கள் பேச்சிலர் தான். பேச்சு இலர்.
((பேச்சில்லாதவர்கள்))

(இங்க, ஒரு பட்டிமன்றத்துல கேட்டது) //

வாசகன் அய்யா, உமக்கு கேள்வி அறிவு... நம்ம அண்ணாச்சிக்கு பட்டறிவு போல....

Anonymous said...

///மனைவி ஒரு தீபத்திற்கு நீங்கள் எழுதியிருந்தது தாங்க முடியவில்லை ;-(. சிரிப்பை வரவைக்கிறேன் பேர்வழின்னு எரிச்சலைத்தான் வரவைக்கிறீங்க.///

ஜெஸிலாக்கா..! என்ன இப்படி எரிச்சல்படுறீங்க, தீபம்லாம் இருட்டுல வெளிச்சம் தர்ரமாதிரி மனைவியும் வெளிச்சம் தர்ராங்கன்னு சொல்ல வந்தார் அண்ணாச்சி :-))

மத்த 'வெளிச்சம்' இருக்கும் போது தீபத்துக்கு வேலையில்லால, :-))

மணிகண்டன் said...

மஞ்சக்கயிறை கையில கட்டினா காப்பு
பொன்னு கழுத்துல கட்டுனா ஆப்பு

(இதுவும் பட்டிமன்றத்துல கேட்டது தான் :) )

Anonymous said...

மனைவி ஒரு மந்திரம்

நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்
///


சூப்பர்

வெட்டிப்பயல் said...

எங்கேயோ கேட்ட குரல்

மனைவி ஒரு முந்திரி - கொழுப்பு (Fat) அதிகமா இருப்பதால்...

Syam said...

என்னமோ எழுதி இருக்கீங்க என்னானு புரியல.... :-)

(PS.என்னோட தங்கமணியும் அப்போ அப்போ இங்க வந்து படிப்பாங்க)

Unknown said...

ithai vaithuthaan enn nanban oru pudiya kural sonnaan."ekkuliyil viluntharkum oyvundaam;ouyvillai ikkuliyil veelntha mantharku;" inraikku ithu pothum.

ulagam sutrum valibi said...

ஆசிபு,
இது நல்லா இல்ல சொல்லிபுட்டேன் துபாயில் இருந்த என்னா
பறந்துவந்து உன்னைய புடிக்கிறேன் பாரு எங்கே உன் தங்கமணி??

நாமக்கல் சிபி said...

//(PS.என்னோட தங்கமணியும் அப்போ அப்போ இங்க வந்து படிப்பாங்க)
//

:) ம்ஹூம்!

அவரவர் கவலை அவரவர்க்கு!

ILA (a) இளா said...

Thangamani is also reading so, No I offend MR. Asifji.
(Nalaikku vanthu unmaiyana comment podurein)

Celia said...

@poorna,@Jesila - Way to Go!! naan solla vandhadhe neenga solliteenga.

@Asif - unga wife blog site edhuvum vechu irukaanga saar?