Monday, May 28, 2007

கவுஜை தொகுப்பு போடுவது எப்படி?

'அண்ணாச்சி, கவிதை தொகுப்பு போடலியா நீங்க?' என்று கேட்டார் நண்பர் ஒருவர்.
உண்மைதான். ஒரு மனுசன் வறுமைக்கோட்டுக்குக் கீழயாவது இருக்கலாம். ஆனால் அதுக்காக கவிதைத் தொகுப்பு போடாம மட்டும் இருந்துடவே கூடாதுங்குறதுதான் தமிழ் கூறும் நல்லுலகத்துக் கவிஞர் பெருமக்களின் ஆசையாக இருக்கிறது. 'சென்றிடுவீர் அச்சகமெங்கும். அடித்திடுவீர் கவிதைத்தொகுப்புகளை' என்பதுதான் ஆவேசம் தரும் முழக்கமாக இருக்கிறது.

இப்படி உரத்த முழக்கம் ஊரெல்லாம் கேட்கும்போது, செவிட்டுக் காதோடு எத்தனைக் காலம்தான் வாழ முடியும் ஒரு மனிதனால்? எல்லா மனிதர்களுக்குள்ளேயும் கவுஜை எச்சிலை விட மோசமாக ஊறுகிறது என்பது புதுக்கவிதை மடையைத் திறந்த நாளிலிருந்தே எல்லா கவுஞனுக்கும் தெரிஞ்ச விசயமாக இருக்கிறது.. எல்லாரும் இந்நாட்டு மன்னரோ இல்லையோ எல்லாரும் இந்நாட்டு கவுஞர் என்பது மட்டும் உலகக் கோப்பையில் பங்களாதேசிடம் பல்லடி பட்ட இந்திய அணி போல சத்தியமான உண்மை.

ஒரு மன்னனுக்கு தான் எழுதியதை தானே பதிப்பித்துப் பார்க்கும் ஆசை வரக்கூடாதா? வந்தால்தான் அவன் கவுஞன். ஆக, எப்படி தனிமனிதனுக்கு மின்னஞ்சல் முகவரியும், வலைப்பூ முகவரியும் தவிர்க்க முடியாததாகி விட்டதோ அதே போலத்தான் கவுஜை பொஸ்தவமும் கவுஞனுக்கு தவிர்க்க முடியாததாகிறது.

பஞ்சாங்கக்குறிப்பு கூடத்தான் புத்தகம்ங்குற அடைமொழியோட விக்குது. அதே மாதிரி சாணித்தாள்ல அடிச்சா கவுஜைக்கும் அந்தத் தாளுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடும் வாய்ப்பு இருக்குறதால, கவுஜை புஸ்தவம் போடுறதுக்கு முன்னால சில அடிப்படையான விசயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.

கவுஜைத் தொகுப்புங்குறது எப்படியும் விலாச அட்டைக்கு பதிலா கொடுக்கப் போற விசயம்கறதால அதைக் கொஞ்சம் மெலிசா தயாரிச்சா அது கவுஞரான உங்களுக்கும் வாசிக்கப் போறவனுக்கும் நல்லது.

கவுஜை பொஸ்தவம் போடுறதுன்னு முடிவெடுத்துட்டா உடனே கவுஜை எழுதித் தொலைச்சுடாதீங்க. ஒரு கவுஜைத் தொகுப்புக்கு கட்டக்கடைசிலதான் கவுஜை தேவைப்படும். என்ன இது அநியாயமா இருக்கு?'ன்னு முறைக்காதீங்க.தெளிவாத்தான் சொல்றேன்.

கவுஜை தொகுப்பு போடுறதுன்னு தீர்மானிச்சதும் சிரைக்குறதை விட்டுடுங்க மொதல்ல. காசா, பணமா தாடி பாட்டுக்கு வளர்ந்து தொலையட்டும்னு விடுங்க. கவுஞனா இருந்து தாடியும் இருந்தா கவுஜைக்கு மருவாதை அதிகம்தான். என்னை மாதிரியே உங்களுக்கும் தாடி வளராம அழிச்சாட்டியம் பண்ணுதுன்னா அப்படியே விட்டுட வேண்டியதுதான்.

இனி தினமும் ஒரு முக்கியமான பயிற்சியை மேற்கொள்ளனும்.'பிசியோதெரபி' மாதிரி இது கவியோதெரபி. ஒரே இடத்தை ஒரு 30 டிகிரி கோணத்துல தலையை சாய்ச்சுகிட்டு மொறச்சு பார்க்கணும். இப்படி ஒரு நாளைக்கு 10 நிமிசம் செஞ்சு பழகிக்கோங்க. முக்கியமான விசயம் என்னன்னா, அப்படிச் செய்யும்போது பக்கத்துல ஆட்கள் இல்லாம பார்த்துக்கோங்க,. இல்லேன்னா எங்கயோ பாக்குறீங்கன்னு நெனச்சு உங்களை போட்டுத் தள்ளிடப் போறாங்க.

இந்தப் பயிற்சி முடிஞ்சதும் அடுத்த பயிற்சி முக்கியமானது. வானத்தை உத்துப் பார்க்குற பயிற்சி. ஏதோ கெட்ட கவுஜையை வாசிச்ச மாதிரி நெனச்சுக்கிட்டு முகத்தை உக்கிரமா வச்சுக்கிட்டு வானத்தை மொறச்சுப் பார்க்கணும். இதுவும் தினம் 10 நிமிசம் பயிற்சியோட செய்யுங்க.

இந்த பயிற்சி ஒருவாரம் முடிஞ்சதுன்னா நீங்க முதல ்கட்டத்துக்கு தயாராயிட்டீங்கன்னு அர்த்தம். இனி இந்தப் பயிற்சியில் இருக்கும்போதே உங்க நண்பர் மூலமா ஒரு படம் எடுத்துக்கோங்க. சபாஷ்!! இந்தப் படம்தான் உங்க கவுஜை தொகுப்புக்கான ஆதாரம்.

கவுஜை - அதை மெதுவா எழுதிக்கலாம்யா. அதுக்கும் முன்னாலே இன்னும் செய்ய வேண்டியிருக்கு நெறய..

(மீதி நாளைக்கு)

22 comments:

Anonymous said...

'கவுஜ' 'கவுஜை' யாக அமர்ந்தது எப்படி?

தம்பி said...

:)))

தம்பி said...

இதுவரை மூன்று கவிதை தொகுப்புக்களை வெளியிட்டு நான்காவதாக கவுஜை காணுங்கள் என்ற தொகுப்பினை வெளியிடப்போகும் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.

மோகன்தாஸ் said...

//'அண்ணாச்சி, கவிதை தொகுப்பு போடலியா நீங்க?' என்று கேட்டார் நண்பர் ஒருவர்.//

எனக்கு அந்த நபர் யார் என்று தெரியும் என்பதை மட்டும் இந்தச் சமயத்தில் சொல்லிக் கொள்கிறேன். ;-)

மஞ்சூர் ராசா said...

எனக்கு மிகவும் பிடித்த இந்த தொடரின் அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.....

மஞ்சூர் ராசா said...

தம்பி புகைப்படத்திற்கு கொடுத்திருக்கும் போஸை பார்த்தால் கவிதை தொகுப்பு வெளியிடும் முஸ்தீபில் இருக்கிறார் போல தெரிகிறது.... சரியா தம்பி கதிர்?

மின்னுது மின்னல் said...

எச்சிலை விட
மோசமாக
ஊறுகிறது
கவுஜை
///


சூப்பர்...:)

பினாத்தல் சுரேஷ் said...

சும்மா வானத்தைப்பார்த்தால் மட்டும் போதுமா?

பேனாவின் நுனியை வாயால் கடித்தபடி தென்மேற்கு திசையை நோக்கி அடிக்கண்ணால் நோக்கினால் வாஸ்து சாஸ்திரப்படி கவுஜர் என்று அழைக்கப்படும் பெரும்பேறு கிடைக்கும்.

இந்தத் தகவலை மடத்தலைவன் மறைத்தது ஏன்?

மின்னுது மின்னல் said...

இந்தப் பயிற்சியில் இருக்கும்போதே உங்க நண்பர் மூலமா ஒரு படம் எடுத்துக்கோங்க. சபாஷ்!! இந்தப் படம்தான் உங்க கவுஜை தொகுப்புக்கான ஆதாரம்.
////

அனுபவஸ்தர் சொன்ன கேட்டுகனும் ஹும்
வேற வழி..:)

மின்னுது மின்னல் said...

பினாத்தல் சுரேஷ் சொன்னது...
சும்மா வானத்தைப்பார்த்தால் மட்டும் போதுமா?

பேனாவின் நுனியை வாயால் கடித்தபடி தென்மேற்கு திசையை நோக்கி அடிக்கண்ணால் நோக்கினால் வாஸ்து சாஸ்திரப்படி கவுஜர் என்று அழைக்கப்படும் பெரும்பேறு கிடைக்கும்.

இந்தத் தகவலை மடத்தலைவன் மறைத்தது ஏன்?
////

கவுஜை - அதை மெதுவா எழுதிக்கலாம்யா. அதுக்கும் முன்னாலே இன்னும் செய்ய வேண்டியிருக்கு நெறய..

(மீதி நாளைக்கு)

///


இன்னும் இருக்குனு சொல்லுறாங்கலே
அவசரபட்டா எப்படி..:)

அவ்வ்வ்வ்வ்வ்
அவ் அவ் அவ்வ்

நாமக்கல் சிபி said...

//கவுஜை - அதை மெதுவா எழுதிக்கலாம்யா. அதுக்கும் முன்னாலே இன்னும் செய்ய வேண்டியிருக்கு நெறய//

இதுதான் கவுஜப் பொஸ்தவம் போடறதுக்கான பால பாடமே!

இராம் said...

////கவுஜை - அதை மெதுவா எழுதிக்கலாம்யா. அதுக்கும் முன்னாலே இன்னும் செய்ய வேண்டியிருக்கு நெறய//

இதுதான் கவுஜப் பொஸ்தவம் போடறதுக்கான பால பாடமே!//


ரீப்பிட்டேய்யே.......... :)

ப்ரியன் said...

:))

வெட்டிப்பயல் said...

அண்ணாச்சி,
கைய கட்டிட்டு கேமராவை உத்து பார்த்தா அது எந்த ஸ்டேஜ்???

இல்லை அது எலக்கியவாதியாகற முயற்சியா?

நாகை சிவா said...

//அண்ணாச்சி,
கைய கட்டிட்டு கேமராவை உத்து பார்த்தா அது எந்த ஸ்டேஜ்???

இல்லை அது எலக்கியவாதியாகற முயற்சியா? //

என்னாது முயற்சியா... யோவ் வெட்டி அவரு தான் ஏற்கனவே எலக்கியவாதி ஆயிட்டாரே அப்பால என்ன....

நாகை சிவா said...

அப்புறம் அண்ணாச்சி, நீங்க சொன்ன எல்லா பயிற்சியையும் இப்பவே ஸ்டார்ட் பண்ணிடுறேன்.... ஸ்டார்ட் பண்ணினாலே பாதி கவுஞர் தானே நானு....

நாகை சிவா said...

தம்பி கதிர்...

நீ விட்டத்தை வெறித்து பார்க்கும் நிகழ்வும், கவிதை மழை பொழிவும் அண்ணாச்சியின் அறிவுரையை தொடர்ந்து தானா????

ஆசிப் மீரான் said...

கவுஜ காலத்தின் போக்கில் கவுஜையாக அமரும்.

தம்பி,
மூணு தொகுப்பா? நல்லா இருடே!!

மோகனா,
சொல்லிக் கொல்லு. நீ ஒருத்தன் தான் மிச்சம்.

மஞ்சூர்,
ஃபோட்டோ எடுத்தாச்சா? அடுத்த பதிவு போட்டாச்சு. மிச்சம் இருக்கும் இன்னமும்.

சாத்தான்குளத்தான்

ஆசிப் மீரான் said...

மின்னல்,

அதைக் கவுஜையாவே மடிச்சுப்போட்டதுதான் ஜூப்பர்.

பெனாத்த்ல்,
கவுஜைக்கான வாஸ்துவும் காலாவதியான கவுஞனும்'னு ஒரு பொஸ்தவம் எழுதலாம்னு இருக்கேன். அணிந்துரை இருக்கா?

சிபி அண்ணாச்சி,
வாங்கய்யா வாங்க. பால பாடம் இருக்கட்டும். பாலன் படத்தைப் போட்டுட்டு திரிஞ்சா எப்படி?

சாத்தான்குளத்தான்

ஆசிப் மீரான் said...

வெட்டி,

கையைக் கட்டிட்டு காமெராவை உத்துப் பார்த்தா, அவனுக்கு எவனோ ஆப்பு வச்சிருக்கான்னு அர்த்தம். என் படத்தைத்தானே சொல்லுதிய?

அது ஒரு 'டெமோ'வுக்காக. நான் அடக்கமான புள்ளைங்குறதால கையைக் கட்டியிருக்கேன். நம்ம தம்பி பாருங்க அது மாதிரி. நீங்க எப்படி வேணும்னா இருக்கலாம். வானத்தை முறைக்குறதுதான் முக்கியம்.

நாமஏற்கெனவே 'எளக்கியவாதி'தான்.
காக்கா கதை படிக்கலியா நீங்க?

நாகை சிவா,
சரியாச் சொன்னீங்க. வானத்தை மொறச்சு பார்த்தாலே நீங்க பாதி கவுஞர்தான்.

சாத்தான்குளத்தான்

Boston Bala said...

:)

வெட்டிப்பயல் said...

அண்ணாச்சி,
நான் கேட்டது நம்ம தம்பியை பத்தி.. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க ;)