Thursday, May 3, 2007

கல்யாணக்களை (C&P)

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சுங்க. அது என்னா கல்யாணக் களை கல்யாணக் களைன்னு சொல்லுறாய்ங்களே அப்பிடின்னா என்னான்னு, நாலஞ்சு பெருசுகளை கூப்பிட்டுக் கேட்டுப் பார்த்தேன். ஒன்னு எனக்கு ஆப்பு வக்கிற கணக்கா சரிப்பா உங்கப்பன்க்கிட்டே சொல்லி சிக்கிரம் கால்கட்டு போடச் சொல்லுறேன்னு சொன்னுச்சு. அட கெரகத்தே நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிற வேணாமின்னு தெரியமா கேட்டுட்டேன்னு சொல்லி ஓடியாத்திட்டேன். அப்புறம் நம்ம பட்டிக்காட்டு பெருசுக்கிட்டே கேட்டேன். அவரு அதுக்கு ஒரு புது விளக்கவுரை கொடுத்தாரு, என்னானா

"நல்லா விளைஞ்சு கிடைக்கிற வயக்காட்டுலே தேவையில்லமே இருக்கிற செடி,பதறுகளை தான் நாங்கெல்லாம் களைன்னு சொல்லுவோம், ஆனா கல்யாணக் களை'ன்னா உன்னைமாதிரி இளந்தாரி பயலுவெல்லாம் ஒனத்துக்கும் உதவாத களையா மாறிப்போயிடக் கூடாதுன்னு தாப்பா அப்பிடி சொல்லுறது"

அடபாவிங்களா ஒரு ஆளும் உருப்படியான விளக்கம் கொடுக்கமாட்டிங்களா, அப்பிடியே கொடுத்தாலும் நமக்கேதாய்யா ரிப்பிட்டுன்னு வருது. சரி என்னா பண்ணுறது சுயமாவே சிந்திச்சு நம்மகூடவே திரிஞ்ச நாலுப் பயப்புள்ளகளை கவனிச்சிப் பார்த்ததில்லே சின்ன க்ளு கிடைச்சது.

என்னோட கொலிக் ஒருத்தன் எப்பவும் சாயம் போன கலருலே ஒரு சட்டை அப்புறம் பேகிபேரல் பேண்ட்ன்னு தினமும் ஆபிஸ்க்கு வருவான். என்னாய்யா நீ எவ்வளவு பெரிய ஆளூ, நல்லா நாலு டிரெஸ் எடுத்து அதே போட்டுக்கிட்டு வரக்கூடாதா'ன்னா கேட்டா இந்த சட்டை என்னோட மொதல் செமஸ்டருலே எடுத்தது... இந்த பேண்ட்சர்ட் நான் +2 பாஸ் பண்ணினதுக்காக எங்க மாமா எடுத்து கொடுத்ததுன்னு லெக்சர் குடுப்பான்.அந்த லெக்சருக்கே பயந்தே எதுவுமே கேட்குறதில்லே. ஆனா இப்போ பயப்புள்ள கலரு கலரா டிரெஸ் போட்டுக்கிட்டு வர்றான். கூலிங்கிளாஸ், புது கேமரா செல்போன் வித் ஃப்ளுடூத்'ன்னு ஹைடெக்கா வேறே மாறிபோயிட்டான், சும்மாயிருக்க மாட்டாமே என்னாப்பா தீடீரென்னு மாறீட்டேன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமாம் என்னோட வுட்பீ'யோட கட்டளைங்கறான். இந்த மொபைல் அவங்க வாங்கி கொடுத்தது, அதிலே ஆட்இன் கார்டு போட்டு பேசிக்கிட்டு இருக்கோமில்லேன்னு உலகத்துக்கு தேவையான செய்தியே வேற சொன்னான்.

அடபாவி ஒரு செங்கல்கல்லு சைஸ் செல்'லே தூக்கிட்டு வெயிட்டான பார்ட்டியா இருந்தியே! என்னா ஆச்சுடா மக்கா உனக்கு??
பேசுங்கடா நல்லா பேசுங்க! செல்லுலே பேசியே செவிட்டு பயலா போயித் தொலைங்கடா...!

இன்னொரு பயப்புள்ள இவனும் என்கூடதான் குப்பை கொட்டுறான். இவனோட பேரே கல்லுளிமங்கன்னு வச்சிருக்கலாமின்னு நினைக்கத்தோணும். ஒரு முக்கியமான விஷயத்துக்குகூட வாயே தொறக்கமாட்டான். எதானச்சிம் ஒன்னுகேட்டா "ஓ இஸிட்" "ஓகே" இவ்வளவுதான் பதில்லுன்னு சொல்லி மெதுவா காத்தோட உளறுவான். ஆனா என்னா ரசாயான மாற்றம் நடத்துச்சோன்னு தெரியலே இப்போ பயப்புள்ளே நான்ஸ்டாப்'ஆ பேச ஆரம்பிச்சிட்டான். ஒருநாளு சாப்பிடறே நேரத்திலே எப்பிடி இருக்கு இந்த லைப்புன்னு கேட்டுத்தொலைச்சேன். பேசினான் பார்க்கணும் அய்யோ சாமி அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். ஓரமா கிடைக்கிற தீட்டின ஆப்புலே நாமே தேடிப் போயி உட்கார்த்தே கதையா பே..பே...ன்னு முழிச்சிக்கிட்டு சோத்தே தின்னேன்.

எங்கூரு பய ஒருத்தன் எப்பவுமே தேமே'ன்னு தான் திரிவான். நல்லநாளு பொல்லநாளுன்னு பார்த்தாலும் மொகத்திலே யாருக்கிட்டேயோ ரெண்டு அடிவாங்கின மாதிரியே திரிஞ்சுக்கிட்டுதான் இருப்பான். இப்போ போனவாரம் ஊருக்குப் போனப்போ ஒரு சாவுவீட்டிலே பார்த்தேன். அவன் பாட்டுக்கு எல்லாத்துக்கிட்டெயும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தான். அடபாவி கல்யாணவீட்டிக்கு வந்தா கூட சிரிக்க மாட்டான் ஆனா இங்கே எழவு வீட்டிலே வந்து எல்லா பயலெயும் லந்து விட்டு சிரிக்கிறானே'ன்னு அவனே தனியா கூப்பிட்டு போயி என்னாடா ராசா என்னா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுதாண்டா கல்யாணம் காட்சின்னு சொல்லுறது'ன்னு பதில் சொன்னான். சரிதான் நமக்கெல்லாம் அதப்பத்தி என்னா தெரியப் போகுதுன்னு செவனேன்னு வந்திட்டேன்.

டிஸ்கி #1:-

இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

கல்யாணக் களை'ன்னா கிழ்கண்டவைகள் தான் :-

1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!

டிஸ்கி #2:-

தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன் :)

14 comments:

அபி அப்பா said...

//1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே//

ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு மேலே எல்லாமே ஒத்து போவுதுசார் இப்பவும்.ஹையா ஜாலி:-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி செகண்டூ?

CVR said...

ஆஹா!!
தல!! உங்களுக்கு கல்யாணம் முடிவாகும் போது மறக்காம இந்த பதிவை மீள் பதிவு செய்யனும்!! :P

பொன்ஸ்~~Poorna said...

//தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கு எந்த சம்பந்தமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன்//
டிஸ்கி தான்யா பெஸ்டு.. :))

இராம் said...

//ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு மேலே எல்லாமே ஒத்து போவுதுசார் இப்பவும்.ஹையா ஜாலி:-))///

ஏனுங்க தொல்ஸ் சார்,

ஒங்க தங்கமணிக்கு இதெய்யலாம் சொல்லவா சார்.....? :)

இராம் said...

தங்கச்சிக்கா ஒங்க இடத்தை இன்னிக்கு அபிஅப்பா பிடிச்சிட்டார்...

காதல் ஆராய்ச்சியாளர்,

இது ஏற்கெனவே நம்ம பிளாக்'லே போட்டதுதாங்க :)

//டிஸ்கி தான்யா பெஸ்டு.. :))//

பொன்ஸ்க்கோவ்,

மாஞ்சு மாஞ்சு ஆராய்ச்சி பண்ணி போஸ்ட் போட்டா அதுமட்டுந்தான் பெஸ்டு சொல்லிறீங்களே? :)

Sree's Views said...
This comment has been removed by a blog administrator.
Syam said...

ராயலு தலய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...(இல்லனு மட்டும் சொல்லிறாதீங்க) :-)

தருமி said...

//நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!//

அப்ப, எப்ப நீங்க அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிக்கப்போறீங்க??

இராம் said...

//ராயலு தலய வெச்சு காமெடி கீமெடி ஏதும் பண்ணலயே...(இல்லனு மட்டும் சொல்லிறாதீங்க) :-)///

12B,

அதெப்பிடி இல்லைன்னு சொல்லுவேன் :))

//அப்ப, எப்ப நீங்க அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிக்கப்போறீங்க??//

தருமி ஐயா,

என்னத்த சொல்ல? அது சீக்கிரமே நடந்துருமின்னு தான் இப்போ பயமா இருக்கு :(

கப்பி பய said...

//தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன் :)//

அட்ரா சக்கை அட்ரா சக்கை :))

நாமக்கல் சிபி said...

//ராம் சார் ராம் சார்! தேங்ஸ் ராம்சார்! என்னக்கு மேலே எல்லாமே ஒத்து போவுதுசார் இப்பவும்.ஹையா ஜாலி//


அபி அப்பா!
ம். அபிகிட்ட உங்களைப் பத்து போட்டுக்குடுத்தர வேண்டியதுதன்!

இலவசக்கொத்தனார் said...

களை கண்ட தலை வாழ்க!!

குசும்பன் said...

அட நம்ம பய புள்ளைங்க சும்மா பக்கத்து வீட்டு புள்ளை லுக்கு விட்டாலே மேறகண்ட எல்லா விசயத்தையும் செய்யுறானுவோ!!!!

கல்யாண களை அதயும் தாண்டி பயங்கரமானது...