"நேயர்களே வணக்கம். வர வர கிரிக்கெட் ஆட்டமும் சூதாட்டம் போல மாறிட்டு வருது. இந்த சூதாட்டத்தை சட்டரீதியா செஞ்சிடலாம்னு சிலர் சொல்றாங்க. அது இன்னும் மோசமாப் போயிடும்னு சிலர் சொல்றாங்க. இந்த 'மேட்ச் ஃபிக்ஸிங்' கலாட்டாவால பெரிய பெரிய பிரச்னைகளெல்லாம் வருதுங்குறாங்க. அதனால இன்னைக்கு நம்ம 'மேட்ச் ஃபிக்ஸிங்' பத்தி ஒரு எக்ஸ்பர்ட் கிட்ட கேக்கப் போறோம். வணக்கம் சார்"
"வணக்கம்"
"இந்த மேட்ச் ஃபிக்ஸிங் பத்தி என்ன நெனைக்குறீங்க?"
"ரொம்ப காலமா நடக்குற விசயம்தான்"
"அப்படியா?"
"ஆமா. இதெல்லாம் ரொம்ப காலமாவே நடந்துட்டுதான் இருக்கு. இப்பதான் டி.வி, ரேடியோன்னு வந்ததுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் பிரபலமாயிட்டிருக்கு"
"அப்படியா சொல்றீங்க?
"ஆமா. இதுக்குன்னு ஒரு வரலாறே இருக்குங்க. முன்னால ரொம்ப ரகசியமாத்தான் எல்லாம் நடந்துச்சு. இப்ப டெக்னாலஜி வளந்துடுச்சு பாருங்க.அதனால இப்ப இது பப்ளிக்கா ஆயிடுச்சு"
"இதை சட்டப்படி செஞ்சுட்டா தப்பில்லேன்னு சொல்றாங்களே? அது பத்தி என்ன நெனைக்குறீங்க?"
"அட! சட்டப்படிதான் இது நடக்கணும்ங்க"
"அப்போ நீங்க சட்டப்படி செஞ்சுட்டா தப்பில்லங்கறீங்க?"
"அப்படி என்ன பெரிய பாவமா செய்யுறோம்? சிலர் கொஞ்ச்ம தயங்குறாங்க. ஆனா நான் சொல்றேன். தைர்யமா செய்யலாங்க ஒரு பிரச்னையும் இல்ல "
"அப்ப இது புண்ணியமான விசயம்னா நெனைக்குறீங்க?"
"பாவ புண்ணியத்தை விடுங்கய்யா. இதனால எத்தனை பேருக்கு பொழப்பு நடக்குது. எத்தனை குடும்பங்கள் வாழுது. அதை யோசிச்சு பாருங்க"
"நீங்க பேசுறதைப் பார்த்தா மேட்ச் ஃபிக்ஸிங் தப்பேயில்லன்னு சொல்ற மாதிரில்லா இருக்கு?"
"என்ன தப்புன்னு கேக்குறேன்? நல்லா மேட்ச் ஆகணும்னா சந்தர்ப்ப சூழ்நிலை எல்லாம் பார்த்து ஒழுங்கா ஃபிக்ஸ் பண்ணனும்."
"நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்களே மேட்ச் ஃபிக்ஸிங் புரோக்கர் மாதிரி பேசுறீங்க?'
"ஆமா. நானே ஏகப்பட்ட மேட்ச் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். அதனால என்ன?"
"அப்ப அனுபவசாலின்னு சொல்லுங்க"
"ஆமா. இதுல அனுபவம் ரொம்ப முக்கியம்,.ஏன்னா ஃபிக்ஸ் பண்ணும்போது கொஞ்சம் தவறுனாலும் எல்லாம் கோவிந்தாவாகிடும். அதனால முன் அனுபவம் இந்தத் தொழிலுக்கு ரொம்ப முக்கியம்"
"என்ன சார் கொஞ்சம் கூட பயமேயில்லாம இவ்வளவு தைரியமா இதச் சொல்றீங்க?"
"ஏன் இதுல பயப்பட என்ன இருக்கு?"
"என்ன சார் நீங்க? மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்னையால பாப் வூல்மர் கொலையே நடந்திருக்கு. நீங்க என்னடான்னா...??"
"இதப் பாருங்க. சில சமயம் எதிர்பாராத விதமா அப்படி நடக்குறதும் உண்டு. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?"
"என்ன இது அடாவடித்தனமா இருக்கு? பண்றதையும் பண்ணிட்டு இப்படிப் பேச வேற செய்றீங்க?"
'ஏன் சார் மேட்ச் ஃபிக்ஸிங் அவ்வளவு பெரிய பாவமா?"
"இந்தக் கேள்வியை என் கிட்டயே கேக்குறீங்களா?"
"சார். ஜோக்குக்காக வேணும்னா மேட்ச் ஃபிக்ஸிங் பண்றதை கிண்டல் பண்ணலாம்.ஆனா இது வாழ்க்கை பிரச்னை சார்"
"வாழ்க்கை பிரச்னையா? யாருக்கு?"
"வேற யாருக்கு. ஃபிக்ஸ் பண்ற எங்களுக்குத்தான்"
"ஏன்?? ஏன்?? வேற ஏதாவது நல்லதா தொழில் செஞ்சு பிழைக்கலாமே?"
"ஏன் இந்தத் தொழிலுக்கு என்ன குறைச்சல்?"
"அப்ப வருமானத்துக்காக என்ன வேணும்னா செய்யலாமா?"
"அப்படி என்னத்த சார் செய்யுறோம்? நீங்கதான் அப்பலேருந்து என்னமோ நாங்க பெரிய கிரிமினல் குத்தம் செஞ்ச மாதிரியே பேசிக்கிட்டிருக்கீங்க?"
"அப்ப நீங்க செய்யுறது கிரிமினல் குத்தம் இல்லையா?"
"ஏன் சார்? ஒரு பொண்ணை ஒரு பையனுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்குறது அவ்வளவு பெரிய குத்தமா?"
"என்ன சார் சொல்றீங்க?"
"ஆமா சார். நாங்க மேட்ச் ஃபிக்ஸ் பண்றோம்னு அதத்தான சொல்லிக்கிட்டிருந்தேன்"
"அடப்பாவி நீ கல்யாண புரோக்கரா?"
"ஆமா சார். இங்கிலீஸ்ல மேட்ச் ஃபிக்ஸிங்னுதான சொல்லுவாங்க. உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதா?"
17 comments:
:)
Arambathulaye Ninaichen!
Sariya poidichu!
திருந்தவே மாட்டீரா?
பட்டைய கிளப்பிட்டீரு....
;))
சென்ஷி
நல்ல தமாஷ். நான் ஏதோ அஸாருதீன் மாதிரி யாரோன்னு நெனச்சேன்.
கலக்கல் போஸ்ட் அண்ணாச்சி...
அப்படியே நம்ம ராயல் அண்ணனுக்கு ஃபிக்ஸ் பண்ண சொன்னீங்கனா நல்லா இருக்கும் ;)
நல்லா கெளப்பறீங்க சாமி பீதிய...:-)
//அப்படியே நம்ம ராயல் அண்ணனுக்கு ஃபிக்ஸ் பண்ண சொன்னீங்கனா நல்லா இருக்கும்//
என்ன வெட்டி, சைடு இலைக்கு சாம்பார் கேக்கர மாதிரி இருக்கு :-)
ஏதோ சூடான விவாதம்ன்னு நெனச்சு வந்தா நக்கல் போஸ்ட் ஆக்கிட்டீங்களே. நல்லா இருந்துச்சு, விகடனுக்கு அனுபிச்சு இருக்கலாமே?
//அப்படியே நம்ம ராயல் அண்ணனுக்கு ஃபிக்ஸ் பண்ண சொன்னீங்கனா நல்லா இருக்கும் //
//என்ன வெட்டி, சைடு இலைக்கு சாம்பார் கேக்கர மாதிரி இருக்கு :-) //
Repeaatttttuuuuuuu!!
வாங்க வாலிபரே ரொம்ப நன்னாருக்கு
அண்ணாச்சி,
கலக்கல் போஸ்ட்.... :)
////அப்படியே நம்ம ராயல் அண்ணனுக்கு ஃபிக்ஸ் பண்ண சொன்னீங்கனா நல்லா இருக்கும்//
என்ன வெட்டி, சைடு இலைக்கு சாம்பார் கேக்கர மாதிரி இருக்கு :-)//
அதே அதே..... :))
கலக்கல் பதிவு..:)
(:-) konjam padikum bodhe nenachen ippadi thaan edhavadhu irukumnu.
naanum guess pannitenu solla varala....
naan andha expert, stadium la irukira light fixing'a thaaan solluraarnu think panniten.... :)
நம்ம அண்ணாச்சிக்கு ரொம்ப தான் குசும்பு.....
நன்றி மக்களே!!
ரொம்ப சின்ன விசயம்க்றதால நெறய பேரால யூகிக்க முடிஞ்சிருக்கலாம். இருந்தாலும் எழுதிட்டேன்.
இன்னைக்கு மனைவி ஜாக்கிரதை என்று ஒரு பதிவு போட நெனச்சேன். ஜிமெயில் சொதப்புது:-(
சாத்தான்குளத்தான்
கிடாயில் விடுவதில் பயப்பட என்ன இருக்கு?
Post a Comment