Monday, May 7, 2007

உலகக்கோப்பை 2011 - பகுதி 3







முன்கதை சுருக்:


முதல் பந்திலேயே சிம்புவும் தணுஷும் out ஆகி விட, Team India மானத்தை காப்பாற்றுவதற்காக அடுத்து ஆட வேண்டிய S.J.Suryahவை ஓரமாக உட்கார வைத்து விட்டு அஜித்தும் விஜய்யும் களம் இறங்க முடிவெடுக்கிறார்கள்.

இனி...............


S.J.Suryahவிற்கு தனக்கு Batting தராததால் மனநிலை பாதிக்கப்படுகிறது. Dressing Roomல் Bore அடித்ததால், செவுத்தில் இருக்கும் பல்லியை பார்த்து, "சின்னதா எறும்பு இருக்கிறதா? ............பெருசா ஆணி இருக்கிறதா?............." என்று பல்லிக்கு class எடுக்க பல்லிக்கு mood வந்து பெண் பல்லியை நோக்கி பாய்கிறது.

S.J.Suryah நேராக T.R.இடம் வந்து, "Sir, என் அடுத்த படத்திற்கு concept புடிச்சிட்டேன்!. Heroவும் Heroineவும் காதலிக்க முடியாததால் night ஆனால் ஒரு ஊசி பல்லி ஆகி காதலிக்கிறார்கள். படத்திற்கு பேரு B.F. ஆமாம்! Balli Friend அப்படிங்கிறதோட சுருக்கம்தான் அது. ஒரு பாட்டு எழுதுங்க, A.R.Rahmanஐ போய் பார்த்திட்டு வந்திடறேன் " என்கிறார்.

அதற்கு T.R.
"அடியே லில்லி
நாமதான் பல்லி
படுக்காத தள்ளி
உன் கண்ணத்தை கிள்ளி
சொல்வேன் நீ சில்லி (Silly)
டும் டும் டும் யக்கா டும் டும் டும்"
என்று தலையை சிலுப்புகிறார்.

S.J.Suryah பாட்டை notes எடுத்து, A.R.Rahmanஐ பாக்கப்போகிறேன் என்று பைக்கில் பறக்கிறார். அதே சமயம், செவுத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த பல்லிகள் balance தவறி T.R.இன் தலையில் விழுந்து தாடியில் புகுந்துக்கொள்கின்றன.T.R., "நீங்க என் தாடிக்குள்ளயே தனிக்குடித்தனம் நடத்தலாம் பல்லி தங்கச்சி" என்று பல்லியிடம் அழுகிறார்.

ஒரு வழியாக எல்லா extra fittingsயும் அணிந்து அஜித்தும் விஜய்யும் களம் இறங்குகிறார்கள். Creaseல் இருக்கும் பவுடரை விபூதி போல் பூசிக் கொள்கிறார் விஜய். அஜித் cricket helmet அணிய மாட்டேன் motor bike helmetதான் அணிவேன் என்று umpireஇடம் அடம் செய்து, அதை மாட்டிக் கொள்கிறார்.

பந்து வீச வருகிறார் McGrath. அப்போது விஜய் தலையருகே சில bubbles உருவாகி ஒரு சின்ன flashbackற்கு செல்கிறார்.


Dressing roomல் coach கவுண்டமணி high decibelல் "நா....... அங்கு போய் சிம்பு மாதிரி batஐ தூக்கி அவுட் ஆகிடாதீங்கண்ணா! எப்படி screenல் எந்த scene அப்படின்னாலும் ஒரே மாதிரி நிக்கிறீங்களோ அதே மாதிரி நில்லுங்கண்ணா" என்று சொன்னது ஞாபகம் வருகிறது.

கவுண்டர் சொன்னதை போலவே பந்து வரும்போது விஜய் நகராமல் அப்படியே நிற்க McGrath பந்து batஐ தொட்டு boundary நோக்கி பறந்து score six ஆனது.

இதை சற்றும் எதிர்ப்பாக்காத கூட்டம், விஜய்க்கு standing ovation தருகிறது. அவர்கள் உட்காருவதற்குள் மழை கொட்டுகிறது.Umpire மழைக்காக match called off என்று சைகைக் காண்பிக்கிறார்.

இதை தவறாக புரிந்துக்கொண்ட ஆஸ்திரேலிய அணி தாங்கள்தான் ஜெய்த்துவிட்டோம் என்று stumpஐ பிடிங்கிக் கொண்டு போக தலயின் கண்கள் சிவக்கிறது..............தொடர்ந்து ஆடுவோம்ல.


பிகு: Photoவிற்கும் Postற்கும் சம்பந்தம் இல்லை

9 comments:

ALIF AHAMED said...

ச்சீ....


:)

ALIF AHAMED said...

முதல் பந்திலேயே சிம்புவும் தணுஷும் out ஆகி விட,
///

அது எப்படி ??



முதல் பந்தில் சிம்பு ரெண்டாவது பந்தில் தணுஷ்னு சொல்லுங்க...::))

ALIF AHAMED said...

McGrath பந்து batஐ தொட்டு boundary நோக்கி பறந்து score six ஆனது.
//

மூன்றாவது அம்பயர் ராமுகிட்ட கேட்காம நீங்காலா எப்படி six கொடுக்கலாம்...

ALIF AHAMED said...

டும் டும் டும் யக்கா டும் டும் டும்"
என்று தலையை சிலுப்புகிறார்.

///


இது தல கைப்புக்கு தானே...:)

ALIF AHAMED said...

இட்லி அடுப்புல இருக்கு

வந்துடுறேன்.......:)


(ஹும் காலாகாலத்திலே நடந்திருந்தா...)

Anonymous said...

What happnd to all the Va Vaa's?

Syam said...

//முதல் பந்தில் சிம்பு ரெண்டாவது பந்தில் தணுஷ்னு சொல்லுங்க//

ரெண்டு பேரு கிரீஸ விட்டு வெளில வந்து டயலாக் பேசிட்டு இருந்தா...சும்மா விடுவாய்ங்களா...:-)

ஆனந்த் said...

நம டிம் members யாரு?

Saral Saroja said...

@anand

Team members mudhal paguthyil pattiyal idappatulladhu