Sunday, March 18, 2007

மாடு மேய்ப்பது எப்படி?

டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.

நம்ம தம்பி வறட்டி தட்டுவது எப்படின்னு விலாவாரியா ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருக்காரு. வறட்டி தட்ட சாணி வேணும். சாணி போட மாடு வேணும். மாடு சாணி போடனும்னா நாம அதுக்கு தீனி போடனும். அதனால இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு பார்ப்போம்.

மாடு மேய்க்கற விதம் நாம இருக்க இடத்தைப் பொறுத்து மாறும். மெட்ராஸ் மாதிரி பட்டனத்துல இருந்தா மாடு மேய்க்கறதை மறந்துடலாம். அந்த நேரத்துல ஜொள்ளுப்பாண்டி அண்ணன்கிட்ட டிப்ஸ் கேட்டு வாழ்க்கைல உருப்படற வழியைப் பார்க்கலாம். சிறு நகரமாகவோ கிராமமாகவோ இருந்தா மாடு மேய்க்க மேல ப்ரொசீட் பண்ணலாம்.

இப்ப மாட்டை நாம தேர்ந்தெடுக்கனும். பால் வியாபாரம் செய்யறதுன்னாலும் வறட்டி பிசினஸ் செய்யறதுனாலும் எருமை மாடு தான் பெஸ்ட். எருமை பால் தான் கொஞ்சம் கெட்டியா இருக்கும். பால்ல நிறைய தண்ணி கலக்கலாம். அதே நேரம் நிறைய சாணியும் போடும். பசு மாடுன்னா நம்மாள நிறைய தண்ணி கலக்க முடியாது. அவ்வளவுதான். வறட்டி பிசினஸ் அதே அளவுல தான் இருக்கும்.

இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு மெயின் டாபிக்குக்கு போகலாம். காலைல எழுந்ததும் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு உங்க வயித்துக்கும் கொஞ்சம் ஏதாவது காட்டிட்டு மாட்டை ஓட்டிட்டு கிளம்பனும். கிளம்பும்போது அத்தியாவசமான பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கனும். ஒரு செக்லிஸ்ட் வேணும்னா கூட தயார் பண்ணிக்குங்க. மாட்டைக் கட்ட கயிறு, அந்த கயித்தைக் கட்ட ஒரு குச்சி, கொறிக்கறதுக்கு எதுனா எடுத்துக்கலாம். அப்படி இல்லைனாலும் பிரச்சனை இல்ல. கடலை விதைச்சிருக்க புஞ்சை பக்கமா மேய்க்க போயிடலாம். நிலத்துக்கு சொந்தக்காரன் பார்க்காத நேரத்துல ஒரு கொத்து செடியைப் புடுங்கி மடியில கட்டிக்கிட்டா அன்னைக்கு கொறிக்க ஆச்சு. சாப்பாட்டுக்கு வீட்டுக்கு திரும்பி வரதுன்னா பிரச்சனை இல்ல. சாயங்காலம் வரைக்கும் மேய்க்கனும்னா சாப்பாடும் கொண்டுபோயிடனும்.

மாட்டை ஒரு தரிசு நிலத்துலயோ அறுவடை ஆகி முடிஞ்ச நிலத்துலயோ குச்சியை அடிச்சு கட்டி மேய விட்டுடனும். போட்டி நிறைய இருந்தா ஏரியா பிரிச்சுக்குங்க. அந்தளவு மட்டும் கயிறை விட்டு மாட்டைக் கட்டுங்க. ஏன்னா எந்த வேலை செஞ்சாலும் நாம கே.டி.குஞ்சுமோனா தான் இருக்கனும். மாட்டைக் கட்டும்போது பக்கத்துல முள்காடு எதுவும் இல்லாம பார்த்துக்கனும். இல்லனா மாடு உள்ள போய் சிக்கி நம்ம உயிரை வாங்கிடும். அதை வெளிய இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம கைகாலெல்லாம் அக்குபஞ்சர் ஆகிடும். அதே மாதிரி பக்கத்துல எவனாவது பயிர் வச்சிருந்தா அந்த பக்கம் நம்ம மாடு போகாம பார்த்துக்கனும். இல்லைனா பஞ்சாயத்து ஆகிடும். நமக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை. அதுல இது வேற எதுக்கு?

மாடு அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டு கிடக்கும். நாம அந்த கேப்புல நிறைய வேலை பார்க்கலாம். பம்ப் செட்ல படுத்து தூங்கிடலாம். அப்படி தூக்கம் வரலைனா மாட்டுக்கு வைக்க புல் புடுங்கலாம். ரெண்டு மூனு பேரா செட் சேர்ந்துட்டா மரத்தடில உட்கார்ந்துட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடலாம். ஓடிப்போன முருகேசன் சம்சாரத்தைப் பத்தி பேசலாம். கேப்டன் கட்சியைப் பத்தி பேசலாம். பஞ்சாயத்து தலைவர் ரோடு காண்டிராக்ட்ல பணம் அடிக்கறதைப் பத்தி பேசலாம். அமெரிக்க போன கோடிவீட்டு குப்புசாமியோட ரெண்டாவது புள்ளையைப் பத்தி பேசலாம். அடுத்த மாசம் மெட்ராஸ் போறதுக்கு இப்பவே ப்ளான் போடலாம். துரைசாமி கல்யாணத்துக்கு மொய் எவ்வளவு வைக்கலாம்னு கூடிப்பேசி முடிவு பண்ணலாம். இப்படி ஏதாவது பேசியோ தூங்கியோதான் பொழுதைக் கழிக்கனும்.

பொழுது சாய்ஞ்சதும் மாட்டை ஓட்டிக்கிட்டு வீட்டைப் பார்த்து நடக்கனும். வறட்டி பிசினஸ்ல நீங்க ரொம்ப சீரியசா இருந்தா ஒரு கூடைல நம்ம மாடு நிலத்துல போட்ட சாணியெல்லாம் அள்ளிட்டு வரலாம். மாட்டைக் கொட்டாயில கட்டிட்டு ஒரு குளியலைப் போட்டுட்டு மாட்டுக்கு தண்ணி காட்டனும். தவிடு புண்ணாக்கெல்லாம் போட்டா பால் நல்லா கறக்கும். மாட்டுக்கு தண்ணி காட்டினதும் அதுக்கு வைக்கோலோ புல்லோ போட்டுட்டு நம்ம கட்டையை சாய்க்க வேண்டியதுதான்.

இதே நீங்க ஒரு நகரத்துல இருந்தா கொஞ்சம் பிரச்சனை. மாடு மேய்க்க இடம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. ஊருக்கு வெளியே ஏதாவது ஏரிக்கரை பக்கம் போகனும். அங்கயும் பட்டா இல்லாத நிலத்துல பக்காவா பங்களா கட்டி வச்சிருப்பானுங்க. அவங்க தொல்லை தாங்காது. நம்ம மாட்டுக்கு அரிப்பெடுத்து அவங்க வீட்டு சுவத்துல உரசினா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுங்க. அதனால மாட்டை அந்த மாதிரி ஆளுங்க வீடு பக்கம் போகாம பார்த்துக்கனும்.

டவுண்ல இன்னொரு பிரச்சனை, நம்ம மாடு போஸ்டர், பேப்பர் எல்லாத்தையும் விரும்பி சாப்பிடும். ஆனா நாம விடக்கூடாது. பால் அளவு குறைஞ்சுடும். சாணியும் கம்மியா போயிடும். வறட்டி பிசினஸ் டவுன் ஆயிடும். அப்படியே போஸ்டரை சாப்பிட விட்டாலும் அரசியல் கட்சி போஸ்டரை சாப்பிட விடாதீங்க. ஜீரணம் ஆகாது.

டவுண்ல இன்னொரு பிரச்ச்னை டிராபிக். ரோட்டுல மாடு போகவே இடம் இருக்காது. பின்னாடி லாரி பஸ்காரன்லாம் வந்து ஹாரன் அடிச்சுட்டிருப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்காம நாம மாடு போற வேகத்துல போகட்டும்னு விட்டுடனும். உணர்ச்சிவசப்படக் கூடாது. பட்டாலும் பெரிய எஃபெக்ட் இருக்காது.

மாடு மேய்க்க அடிப்படையா இவ்வளவு தெரிஞ்சா போதும். மத்த விஷயமெல்லாம் போகப்போக அனுபவ அறிவுல கத்துக்கனும். நல்ல முறையில மாடு வளர்த்து பால் கறந்து கோ-ஆப்பரேடிவ் சொசைட்டில அதை வித்து, வறட்டி தட்டி பிசினஸை டெவலப் பண்ணி எல்லோரும் அண்ணாமலை படத்துல தலைவர் ரேஞ்சுக்கு வளர வாழ்த்துக்கள் :)

26 comments:

கதிர் said...

கப்பி கப்பி நீ பெருமையுள்ள கப்பி!

வெட்டிப்பயல் said...

கலக்கிட்டமா கப்பி...

//டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.
//
நீ நம் இனமடா...

Anonymous said...

:-))))))))))))))

கதிர் said...

இந்த பதிவினை எங்கள் அண்ணன் சீறி வரும் காளையான பேச்சியை பாட்டு பாடியே கரெக்ட் செய்த
கிராமராஜனுக்கு டெடிகேட் செய்கிறேன்.

இராம்/Raam said...

நட்சத்திரத்துக்கு எதிர்வினை பதிவு அளிந்த ஜாவா பாவலர் கப்பி நிலவர் வாழ்க!! வாழ்க!!!

கதிர் said...

//கடலை விதைச்சிருக்க புஞ்சை பக்கமா மேய்க்க போயிடலாம்//

அங்கே கொஞ்சி விளையாடும் கிராமத்து சிட்டுகளுடன் கடலை போட்டு பொழுதை கழிக்கலாம்.

Santhosh said...

என்னப்பா விக்கி பசங்க போட வேண்டியதை எல்லாம் சங்கத்துல போட்டுகிட்டு இருக்கிங்க.ஆனாலும் நல்ல மேட்டரு தான் கப்பி.

Anonymous said...

அப்படியே ஆணிபிடுங்காமல் சம்பளம் வாங்குவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க சாரே!

இலவசக்கொத்தனார் said...

எதுக்குத்தான் போட்டின்னு ஒரு விவஸ்தையே இல்லையா?

அது சரி உங்கப்பாரு உம்மைப் பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டின உடனே, இம்புட்டி ரிஸர்ச் பண்ணி, அதுக்கும் லாயக்கு இல்லைன்னு நீர் நிரூபிக்க எழுதின பிராஜக்ட் ரிபோர்ட்தானே இது? :))

ஆமா அது முழுமையான பதிவு அப்படின்னு சவுண்ட் விட்ட பெனாத்தலார் இங்க ஒண்ணுமே சொல்லலையே? நீர் என்ன குற்றம் செஞ்சீரு? இல்லை அவரு எதாவது அமௌண்ட் எதாவது குடுத்தாரா?

CVR said...

நல்லா இருக்கு கப்பி!!:-)

கப்பி | Kappi said...

//கப்பி கப்பி நீ பெருமையுள்ள கப்பி! //

:)))

//இந்த பதிவினை எங்கள் அண்ணன் சீறி வரும் காளையான பேச்சியை பாட்டு பாடியே கரெக்ட் செய்த
கிராமராஜனுக்கு டெடிகேட் செய்கிறேன்//

தாராளமா செய்யலாம் :))

கப்பி | Kappi said...

//கலக்கிட்டமா கப்பி...
//

டாங்க்ஸ் வெட்டி


//டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.

நீ நம் இனமடா... //

ஹி ஹி

கப்பி | Kappi said...

அனானி

//:-))))))))))))))
//

:)


இன்னொரு அனானி

//அப்படியே ஆணிபிடுங்காமல் சம்பளம் வாங்குவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க சாரே! //

அது தெரிஞ்சா சொல்ல மாட்டேனா :))

கப்பி | Kappi said...

//நட்சத்திரத்துக்கு எதிர்வினை பதிவு அளிந்த ஜாவா பாவலர் கப்பி நிலவர் வாழ்க!! வாழ்க!!! //

தம்பிக்கு எதிரி வெளிய எங்கேயும் இல்ல...

கப்பி | Kappi said...

//என்னப்பா விக்கி பசங்க போட வேண்டியதை எல்லாம் சங்கத்துல போட்டுகிட்டு இருக்கிங்க.ஆனாலும் நல்ல மேட்டரு தான் கப்பி.

//

எங்கே போட்டா என்ன? மேட்டர் தானே முக்கியம் தல :))

கப்பி | Kappi said...

//எதுக்குத்தான் போட்டின்னு ஒரு விவஸ்தையே இல்லையா?
//

கொத்ஸ்,
பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் தேர்ந்தெடுத்தா போட்டி போட முடியும் :))

//
அது சரி உங்கப்பாரு உம்மைப் பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு திட்டின உடனே, இம்புட்டி ரிஸர்ச் பண்ணி, அதுக்கும் லாயக்கு இல்லைன்னு நீர் நிரூபிக்க எழுதின பிராஜக்ட் ரிபோர்ட்தானே இது? :))
//

லாயக்கு இல்லையா? இப்படியெல்லாம் உண்மையை பப்ளிக்கா சொன்னா தலகிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணிடுவேன் :))


//
ஆமா அது முழுமையான பதிவு அப்படின்னு சவுண்ட் விட்ட பெனாத்தலார் இங்க ஒண்ணுமே சொல்லலையே? நீர் என்ன குற்றம் செஞ்சீரு? இல்லை அவரு எதாவது அமௌண்ட் எதாவது குடுத்தாரா?
//

அமெளண்ட் எதுவும் இன்னும் வரல..ஒருவேலை நான் இதுல ஏதாவது மேட்டரை விட்டிருப்பேன்..அதனால டென்சன் ஆகிட்டாரோ :)))

கப்பி | Kappi said...

//நல்லா இருக்கு கப்பி!!:-)//

வாங்க CVR! நன்றி :)

நாகை சிவா said...

////டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.
//
நீ நம் இனமடா... //

நம் இனத்தையே பெருமைப்பட வச்சுட்ட கப்பி....

கதிர் said...

நகரத்தில் உள்ள மாடுகள் வறட்டிக்கு ஏற்றவை இல்லன்னு கும்மிடிப்பூண்டி குப்புசாமி சொல்றாரே அது உண்மைங்களா கப்பி சார்??

ஏன்னா நகரத்து மாடுகள் சாணி போடும்போது லிக்விடாக(தண்ணி) போடும் என்று ஒரு பேச்சு உலாவருகிறதே! இதுக்கு என்ன சொல்றிங்க?

Syam said...

மாடு வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக..கப்பிக்கு பொன்னாடை போத்துகிறோம்...(இதுதான் சாக்குனு யாராவது ரெண்டு மொத்து மொத்திட்டு போய்டாதீங்கப்பு) :-)

நாகை சிவா said...

ஏன்ய்யா கப்பி, அப்படியே பால் கறப்பது எப்படினு ஒரு பதிவு போடு... அதையும் பார்த்து அறிவு வளத்துக்கட்டும் நம் மக்கள்.

கப்பி | Kappi said...

//நம் இனத்தையே பெருமைப்பட வச்சுட்ட கப்பி....
//

:)))

//ஏன்ய்யா கப்பி, அப்படியே பால் கறப்பது எப்படினு ஒரு பதிவு போடு... அதையும் பார்த்து அறிவு வளத்துக்கட்டும் நம் மக்கள்.
//

மாட்டு பாலெல்லாம் எதுக்கு?? புலிப்பால் கறப்பது எப்படின்னு நீங்களே ஒரு பதிவு போடுங்களேன் :)))

கப்பி | Kappi said...

//மாடு வளர்ப்போர் சங்கத்தின் சார்பாக..கப்பிக்கு பொன்னாடை போத்துகிறோம்...
//

நன்றி!! நன்றி!! நன்றி!! :))

//
(இதுதான் சாக்குனு யாராவது ரெண்டு மொத்து மொத்திட்டு போய்டாதீங்கப்பு) :-)
//

மக்களை மறக்கவிட மாட்டீங்களே :))

கப்பி | Kappi said...

//நகரத்தில் உள்ள மாடுகள் வறட்டிக்கு ஏற்றவை இல்லன்னு கும்மிடிப்பூண்டி குப்புசாமி சொல்றாரே அது உண்மைங்களா கப்பி சார்??

ஏன்னா நகரத்து மாடுகள் சாணி போடும்போது லிக்விடாக(தண்ணி) போடும் என்று ஒரு பேச்சு உலாவருகிறதே! இதுக்கு என்ன சொல்றிங்க?

//

யோவ்..மாடு மேய்க்கறதைப் பத்தி ஏதாவது டவுட் இருந்தா கேளு..வறட்டி எல்லாம் உம்ம ஏரியா..எனக்கென்ன தெரியும்? :))

Anonymous said...

தம்பிகளா, மாடு மேய்க்கிறதுன்னா விளையாட்டுன்னு நினைச்சுக்கிட்டியளாடா?

கப்பிப்பய எவ்வளவு சிரமப்பட்டுருப்பான் மாடு மேய்க்கிறதுக்கு.

எங்க வாத்தியார் தங்கராசை நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு, வாங்குறது வாங்குற டில்லி எருமையாப் பாத்து வாங்குடா அதுதான் நிறைய பால்கறக்கும்னு அடிக்கடித் திட்டுவாரு. இப்பப் பாருங்க, அந்தப் பய பெரிய பால் பண்ணை அதிபராயிட்டான்.

நல்லா படிச்ச நாங்கள்ளாம் இன்னும் ஆணி புடிங்கிக் கிட்டிருக்கோம்.

கப்பித் தம்பி, கைசவம் தொழில் இருக்குன்னு சொல்லுங்க.

கப்பி | Kappi said...

வாங்க அனானி அண்ணா,

//கப்பிப்பய எவ்வளவு சிரமப்பட்டுருப்பான் மாடு மேய்க்கிறதுக்கு. //

அப்படியா? எனக்கே தெரியாதே :))

//
எங்க வாத்தியார் தங்கராசை நீ மாடு மேய்க்கத்தாண்டா லாயக்கு, வாங்குறது வாங்குற டில்லி எருமையாப் பாத்து வாங்குடா அதுதான் நிறைய பால்கறக்கும்னு அடிக்கடித் திட்டுவாரு. இப்பப் பாருங்க, அந்தப் பய பெரிய பால் ப
பண்ணை அதிபராயிட்டான்.
//

வெட்டி கேட்டுக்குங்க...ஆசிரியர்கள் இப்படியும் தெய்வமா தான் இருக்காங்க :)))


//
நல்லா படிச்ச நாங்கள்ளாம் இன்னும் ஆணி புடிங்கிக் கிட்டிருக்கோம்.
//

அண்ணா, என்ன சைட்ல நல்லா படிச்சோம்னு ஏதேதோ சொல்றீங்க? ;))

//
கப்பித் தம்பி, கைசவம் தொழில் இருக்குன்னு சொல்லுங்க.
//

ஹி ஹி