Friday, March 9, 2007

சங்கம் டெக்குனாலஜீஸ்

சங்கம் டெக்னாலஜீஸ் திண்ணையில் உட்கார்ந்து ஆணி அடிக்கும் சுத்தியில் ஈ அடித்துக்கொண்டிருக்கிறார் தல. மற்ற சங்கத்து சிங்கங்கள் தல செலவில் ஆளுக்கு ஐந்து அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது போர்வாள் தேவ் "தல..டெண்டர் வாங்கிட்டோம்" என கத்தியபடியே வரப்பில் ஓடி வருகிறார். மற்ற சங்கத்து சிங்கங்கள் தூக்கம் கலைந்து எழுந்துவருகிறார்கள்.

"தல, வெள்ளைக்காரன் ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நமக்கு கொடுத்துட்டான். நாம உடனே வேலையை ஆரம்பிக்கனும்" என மூச்சு வாங்கியபடியே ஹை டெசிபலில் அலறுகிறார்.

"என் வயித்துல பாலை வார்த்த ராசா! அப்ரண்டீஸ்களா இம்புட்டு நாள் ரெஸ்ட் எடுத்தது போதும். வேலையை ஆரம்பிங்கப்பு" என சவுண்ட் விட்டு எல்லோரையும் உள்ளே அனுப்புகிறார் கைப்பு.

சாப்ட்வேரைப் பற்றி ஒன்றும் தெரியாத தல போர்வாளை தனியே கூப்பிட்டு "ராசா, எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எல்லாப் பயலுகளுக்கும் தெரியும். ஆனாலும் இன்னும் மெயின்டெயின் பண்ணிட்டிருக்கேன். நீ தான் இந்த ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நல்ல படியா முடிச்சுக்குடுக்கனும்" என கெஞ்சியபடி பின்னால் செல்கிறார்.

"தல நம்ம அப்பரண்டீசுங்க எல்லாம் ஒன்னா ஒழுங்கா வேலை பார்க்கனும்னா அவங்களுக்குள்ள ஒரு டீப் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும். அதனால எல்லாரையும் கிரிக்கெட் வெளாட கூட்டிட்டுப் போறேன். அங்க போய் பேசி எல்லாம் ஒன்னா மண்ணா ஆனதும் வேலையைப் பார்க்கலாம்."

இதைக் கேட்டதும் சிங்கங்கள் சந்தோஷமாக மீண்டும் சங்க திண்ணைக்கே வருகிறார்கள்.

"அடப்பாவி மக்கா! வேலையை ஆரம்பிங்கடான்னா வெளாடப் போறோம்னு கெளம்பிட்டீங்களா? அதெல்லாம் இன்னைக்கு கிடையாது. எல்லாப்பயலுகளும் உள்ளே போங்க" என மீண்டும் உள்ளே அனுப்புகிறார். சிங்கங்கள் பொட்டி தட்டுவது போல் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு பொட்டியில் இளாவும் தளபதி சிபியும் விண்டோஸ் பெயிண்ட்டை திறந்து வைத்துக்கொண்டு அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளை வரைந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் பி.பி எகிற அவர்களிடம் வரும் கைப்பு 'ஒரு மாசத்துல எல்லா வேலையும் முடிக்கிறோம்னு தேவு தம்பி வாக்கு குடுத்துட்டு வந்திருக்கு. ஆக்ரோஷமா வேலை பார்க்க வேண்டிய நீங்க ரெண்டு பேரும் விளையாடிட்டிருக்கீங்க. என்ன இது?" என கண்கள் சிவக்கிறார்.

உடனே தளபதி 'தல! இது கலாய்த்தல் திணை. அதுல இப்படி தான் கோடு அடிக்கனும். கீழே பாரு. சின்ன ஃபாண்ட்ல இது சும்மா லுல்லலாய்க்குன்னு எழுதியிருக்கேன்' என விவரிக்கிறார்.

"சாமி, உங்க கலாய்த்தலை நிப்பாட்டிக்குங்க. நேரத்துல ஆணி புடுங்கலைன்னா மொத்த ஆப்பும் எனக்குத்தான். வேலையைப் பாருங்கய்யா" என்றபடி திரும்புகிறார். அப்போதுதான் இராயல் உள்ளே வருகிறார்.

தன் மொத்த கோபத்தையும் தன் கண்களில் காட்டி "எங்கே போயிட்டு வர்ற?" என தலை கேட்க,

"இண்டர்வெல் போனேன் தல" என அப்பாவியாய் சொல்கிறார் இராம்.

"இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள இண்டர்வெல்லா? சரி அதை விடு. இன்னைக்கு என்ன வேலை பார்க்க போற?"

"மைக்ரோசாப்ட் ஆபிஸ்ல வேலை பார்க்க போறேன் தல"

"ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?"

"ஐயோ தல, ஆபிஸ்ன்றது ஒரு சாஃப்ட்வேர் பேரு. உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஒரு மூலைல போய் உட்காரு. இல்ல நடக்கறதே வேற" என கத்திவிட்டு சீட்டுக்கு சென்று சீட்டாட ஆரம்பிக்கிறார்.

"இங்கிபிங்கி பாங்கி தல ஆஸ் தி டாங்கி" என பின்கட்டிலிருந்து சவுண்ட் வருகிறது.

அங்கே இளையதளபதி வெட்டி சீரியசாக ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

"அங்கே என்னடான்னா ஒருத்தன் கிரிக்கெட் விளையாடனும்னுட்டு இருக்கான். இங்க நீ இங்கிபிங்கி பாங்கி போடற. என்னங்கடா நடக்குது இங்க?"

"தல, டிஸ்டர்ப் பண்ணாத. நான் இந்த சாப்ட்வேரை டெஸ்ட் பண்றேன். இங்கிபிங்கி போட்டு அந்த டெஸ்ட் பாசாயிடுச்சா இல்ல பெயிலான்னு முடிவு பண்ணுவேன்" என எக்ஸ்ப்ளெயின் செய்கிறார் வெட்டி.

"அடப்பாவிகளா, இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவீங்களா? நான் கூட ஏதோ பெரிய டெக்குனிக்கு இருக்குன்னு நினைச்சனேடா..இதான் உங்க டெக்குனிக்கா?"

பக்கத்து சீட்டில் ஜொள்ஸ் செல்போனில் ஹஸ்கி வாய்ஸில் காலை பஸ்ஸில் கரெக்ட் பண்ன பிகரைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்.

"வேலை நேரத்துல என்னய்யா போனு?"

"வெள்ளைக்காரன் கூட தான் தல பேசிட்டிருக்கேன். அவனுக்கு எந்த மாதிரி ஆணியெல்லாம் புடுங்கனும்னு கேட்டுட்டிருக்கேன்" என பொய்மூட்டையய அவிழ்க்கிறார் பாண்டி.

"என்னமோ சொல்ற. நானும் நம்பறேன். சரி சூடான்ல ஒரு அப்பரண்டீசு உட்கார்ந்திருக்கானே. என்ன செய்யறான்? அவனுக்கு ஒரு போனைப் போடு" என்றதும் புலிக்கு டயல் செய்கிறார் பாண்டி. அது தவறுதலாக ஒரு அஜால்குஜால் நம்பருக்கு செல்கிறது. "ஹேய் ஸ்வீட்டி, எப்படி இருக்க?" என கொஞ்சல் குரலில் மறுமுனையில் ஒரு பெண். "ச்சே ராங்க் டைம்ல கரெக்ட் நம்பர்" என புலம்பியபடி தல பார்ப்பதுக்கு முன் கட் செய்கிறார் பாண்டி. அதற்குள் தலயின் செங்கல்போன் காட்டுக்கத்து கத்த அதை அலம்பலாக எடுக்கிறார் தல. மறுமுனையில் சிவா.

"தல இங்கன நிலமை ரொம்ப மோசமாயிருக்கு. விலைவாசி ஏறிடுச்சு. எனக்கு சம்பளத்தைக் கூட்டிக்கொடு" என்று சண்டை போடுகிறார் புலி.

"அடப்பாவி இன்னும் வேலையே பார்க்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள சம்பள உயர்வா? ராஸ்கோல். அடுத்த வாரம் பொதுக்குழு கூட்டும்போது முடிவு பண்ணிக்கலாம். போனை வை" என்று அணைக்கிறார் கைப்ஸ்.

அருகிலுள்ள பொட்டியில் மற்ற வலையுலகத்து சங்க மக்கள் அனைவரும் ரவியின் தேடுஜாப்ஸ் வலைப்பக்கத்தை மேய்ந்துகொண்டிருக்கின்றனர். "அட அநியாய அப்ரண்டீசுகளா, சங்கத்து ஆபிஸ்லயே வந்து அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போடறீங்களா" என நொந்து நூடுல்ஸ் ஆகிறார் தல.

அப்போது "ஐயோ என்னை விட்ருங்க! என்னால இதுக்கு மேல ஆணி புடுங்க முடியாது. இந்த ஆப்பே இன்னும் ஆறு மாசத்துக்கு காணும். சங்கத்து பணியை ஆத்தனும். இல்லன்னா தல என்னைக் கடிக்கும். என்னை விட்ருங்க. விட்ருங்க" என யாரையோ பார்த்து கத்தியபடியே சங்கத்தை நோக்கி ஓடி வருகிறான் கப்பி.

ஒரு பொறியில் இருந்து எஸ்கேப்பாகி இன்னொரு பொறியில் சிக்குவது போல் ஆப்பை தயாராக வைத்திருக்கும் சங்க மக்கள்ஸைப் பார்த்ததும் மயங்கிவிழுகிறான் கப்பி. அவனைப் பிடிக்க சிங்கங்கள் ஓடி வர "இன்று விடுமுறை" என சங்கம் டெக்னாலஜிஸ் வாசலில் போர்ட் மாட்டுகிறார் ராயல்.

29 comments:

தேவ் | Dev said...

//"ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?" //

ராம் உன் டேமேஜரும் இதையேத் தான் ஓங்கிட்டச் சொல்லுதார் போலிருக்கு :-)

வெட்டிப்பயல் said...

கப்பிமா,
போஸ்ட் அருமை...

இருந்தாலும் உன் ஜாவா புலமைய பத்தி போஸ்ட்ல கொஞ்சம் சொல்லியிருக்கலாம் :-)

ஜொள்ளுப்பாண்டி said...

//"ஹேய் ஸ்வீட்டி, எப்படி இருக்க?" என கொஞ்சல் குரலில் மறுமுனையில் ஒரு பெண். "ச்சே ராங்க் டைம்ல கரெக்ட் நம்பர்" என புலம்பியபடி தல பார்ப்பதுக்கு முன் கட் செய்கிறார் பாண்டி. //

ஹேய் கப்பிமேன் என்னா இது இப்படி நம்மளை குனிய வச்சு குமுறி எடுத்துருக்கீங்க ??:))))))))))))))


ஆனாலுல் தலய இப்படி ஓட்டி இருக்கீங்கலே !!:)))))))))) தல இதுக்காகவே நாம உங்களோட சாப்ட்வேர் புலமைய நிரூபிக்கறோம். சொல்லுங்க தல சாப்ட்வேர் சொல்லித்தறதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு மிஸ்ஸுயம்மா இருக்காக !! ;)))))))

வெட்டிப்பயல் said...

//
ஆனாலுல் தலய இப்படி ஓட்டி இருக்கீங்கலே !!:)))))))))) தல இதுக்காகவே நாம உங்களோட சாப்ட்வேர் புலமைய நிரூபிக்கறோம். சொல்லுங்க தல சாப்ட்வேர் சொல்லித்தறதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு மிஸ்ஸுயம்மா இருக்காக !! ;)))))))//

இது என்ன சின்ன புள்ள தனமா கேட்டுக்கிட்டு... நம்ம தலக்கு சொல்லி தர நான் ஒரு ஆளே ரெட்டி பண்ணிட்டேன்...

அடுத்த போஸ்ட்ல பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

இலவசக்கொத்தனார் said...

அப்ரசண்டிகளா என அருமையாக கூப்பிடும் தலையை அப்ரெண்டிஸ் என கூப்பிட வைத்த கப்பி ஒழிக!!

பாலராஜன்கீதா said...

//வெட்டிப்பயல் said...

நான் ஒரு ஆளே ***ரெட்டி*** பண்ணிட்டேன்...//

அதற்காகத்தான் அந்த மொழிப் படங்களை அதிகம் பார்க்கக்கூடாதுன்னு சொன்னாங்க :-)

நாகை சிவா said...

//"அடப்பாவிகளா, இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவீங்களா? நான் கூட ஏதோ பெரிய டெக்குனிக்கு இருக்குன்னு நினைச்சனேடா..இதான் உங்க டெக்குனிக்கா?"//

அடப்பாவிகளா! இப்படி தான் நம்ம தேவ் பண்ணிக்கிட்டு இருக்காரா???????

நாகை சிவா said...

//நான் ஒரு ஆளே ***ரெட்டி*** பண்ணிட்டேன்...//

அதற்காகத்தான் அந்த மொழிப் படங்களை அதிகம் பார்க்கக்கூடாதுன்னு சொன்னாங்க :-) //

உஷார் வெட்டி உஷார்! எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க....

நாகை சிவா said...

//ஒரு பொறியில் இருந்து எஸ்கேப்பாகி இன்னொரு பொறியில் சிக்குவது போல் ஆப்பை தயாராக வைத்திருக்கும் சங்க மக்கள்ஸைப் பார்த்ததும் மயங்கிவிழுகிறான் கப்பி. //

சங்கம் தன் கடமையை செய்து தானே ஆக வேண்டும். கெட் ரெடி கப்பி!!!

நாகை சிவா said...

//அப்ர"சண்டி"களா என அருமையாக கூப்பிடும் தலையை அப்ரெண்டிஸ் என கூப்பிட வைத்த கப்பி ஒழிக!! //

நாங்க சண்டித்தனம் பண்ணுவதை இப்படி எல்லாம் பொதுவில் சொல்வதை வன்மையாக கண்டிக்க நினைத்தாலும், கூறியது கொத்துஸ் என்ற காரணத்தால் மென்மையாக கண்டிக்கின்றோம்.

நாகை சிவா said...

//சொல்லுங்க தல சாப்ட்வேர் சொல்லித்தறதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு மிஸ்ஸுயம்மா இருக்காக !! ;))))))) //

கடமை வீரன்னடா நீர்.... காரியத்தில் கண்ணா இருக்கீயே!!!!

ஜி said...

அடப்பாவி வெட்டி... இங்கி பிங்கி போட்டுத்தான் நீ டெஸ்ட் பண்ணுவியா?? நீ அனுப்புன சாஃப்ட்வேர்ல பெரிய பூச்சி இருக்கும்போதே நெனச்சேன்... ;)))))

Syam said...

//பொறியில் சிக்குவது போல் ஆப்பை தயாராக வைத்திருக்கும் சங்க மக்கள்ஸைப் பார்த்ததும் மயங்கிவிழுகிறான் கப்பி//

இப்புடி எல்லாம் நடிச்சா விட்டுறுவோமா...தல இந்த மாதிரி எத்தன போஸ் குடுத்து இருப்பாரு :-)

Syam said...

//ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?"
//

ROTFL...கலக்கிட்டீங்க கப்பி :-)

Syam said...

//வெட்டிப்பயல் said...

நான் ஒரு ஆளே ***ரெட்டி*** பண்ணிட்டேன்...//

ஆகா வெட்டி....நீங்க ரெட்டியாதான் ச்சே ரெடியாதான் இருக்கீங்க போல :-)

Syam said...

//இங்கி பிங்கி போட்டுத்தான் நீ டெஸ்ட் பண்ணுவியா?? நீ அனுப்புன சாஃப்ட்வேர்ல பெரிய பூச்சி இருக்கும்போதே நெனச்சேன்...//

பூச்சி இருக்குனு சந்தோச படுங்க....வழக்கமா யானை தான் இருக்கும் :-)

தம்பி said...

எலேய் கப்பி என்னலே இன்வைசிபிள் மோட்ல பதிவு போட்டுட்டு ஓடிப்போயிடறான்னு தல பிராது குடுக்கறாரு உன்னய பத்தி.

இன்னுமா ரெஸ்ட் எடுக்கற நீயி..

தம்பி said...

எங்கள் அண்ணன், அடுத்த தல ராயலை ஸ்பெசலாக கலாய்த்ததற்காக
எனது நன்றீயினை இங்கு பதிவு செய்கிறேன். :))

கப்பி பய said...

//ராம் உன் டேமேஜரும் இதையேத் தான் ஓங்கிட்டச் சொல்லுதார் போலிருக்கு :-) //

தேவ், ராம் அண்ணாச்சி டேமேஜர் இதுக்கும் மேல..ராமை எல்லா ஆணியும் புடுங்க சொல்லிட்டு அதுக்கப்புறம் "நீ புடுங்கினது எல்லாமே தேவையில்லாத ஆணி"ன்னு துரத்திவிட்ருவாரு :))

கப்பி பய said...

//உன் ஜாவா புலமைய பத்தி போஸ்ட்ல கொஞ்சம் சொல்லியிருக்கலாம் //

வெட்டி,

நானே எதுக்கு ஆப்பை ரெடி பண்ணனும் :))

கப்பி பய said...

//ஹேய் கப்பிமேன் என்னா இது இப்படி நம்மளை குனிய வச்சு குமுறி எடுத்துருக்கீங்க ??:))))))))))))))
//

குமுறி எடுக்கவே தானே இத்தனை ஸ்மைலி :))

//சாப்ட்வேர் சொல்லித்தறதுக்கு நமக்கு தெரிஞ்ச ஒரு மிஸ்ஸுயம்மா இருக்காக !! ;)))))))
//

நானும் நானும் :))

கப்பி பய said...

//அப்ரசண்டிகளா என அருமையாக கூப்பிடும் தலையை அப்ரெண்டிஸ் என கூப்பிட வைத்த கப்பி ஒழிக!!
//

அப்ரசண்டிங்க அப்பின அப்புல தலக்கு மண்டை கலங்கி அப்ரெண்டிஸ்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாரு :))

கப்பி பய said...

பாலராஜன்,

//அதற்காகத்தான் அந்த மொழிப் படங்களை அதிகம் பார்க்கக்கூடாதுன்னு சொன்னாங்க :-)
//

:)))))))


வெட்டி,
அடுத்த போஸ்ட்ல அந்த ரெட்டி மிஸ்ஸியம்மா போட்டோவோட போடுங்க :))

கப்பி பய said...

//சங்கம் தன் கடமையை செய்து தானே ஆக வேண்டும். கெட் ரெடி கப்பி!!!
//

ரெடி ஆகித்தேன் வந்திருக்கேன் :))

கப்பி பய said...

//அடப்பாவி வெட்டி... இங்கி பிங்கி போட்டுத்தான் நீ டெஸ்ட் பண்ணுவியா?? நீ அனுப்புன சாஃப்ட்வேர்ல பெரிய பூச்சி இருக்கும்போதே நெனச்சேன்... ;)))))
//

ஜி,

பூச்சி வந்தது அவர் இங்கிபிங்கி போட்டதால இல்ல..நாம அந்த பூச்சியை உள்ள வச்சு அனுப்பினதால :)))

கப்பி பய said...

நாட்ஸ்,

//இப்புடி எல்லாம் நடிச்சா விட்டுறுவோமா...தல இந்த மாதிரி எத்தன போஸ் குடுத்து இருப்பாரு :-)
//
அவர்கிட்ட கத்துக்கிட்டது தானே..அப்படியும் விடமாட்டேங்கறீங்களே ;))


//ROTFL...கலக்கிட்டீங்க கப்பி :-)
//

நன்றி நாட்ஸ் :))

இராம் said...

கப்பி,

போஸ்ட் கலக்கலா இருக்குப்பா... :)

//"மைக்ரோசாப்ட் ஆபிஸ்ல வேலை பார்க்க போறேன் தல"

"ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?"//

ROFL....

FYI... எனக்கு ஓப்பன் ஆபிஸ்தான் பிடிக்கும்... நாங்கெல்லாம் FSF கோஷ்டிக.... :)

//எங்கள் அண்ணன், அடுத்த தல ராயலை ஸ்பெசலாக கலாய்த்ததற்காக
எனது நன்றீயினை இங்கு பதிவு செய்கிறேன். :)) //

அடபாவி தம்பி.. இங்கே மறுபடியும் ஆரம்பிச்சாச்சா??? நல்லா இருங்கய்யா
:(

கப்பி பய said...

//எலேய் கப்பி என்னலே இன்வைசிபிள் மோட்ல பதிவு போட்டுட்டு ஓடிப்போயிடறான்னு தல பிராது குடுக்கறாரு உன்னய பத்தி.

இன்னுமா ரெஸ்ட் எடுக்கற நீயி..
//

எடுத்த ரெஸ்டுக்கெல்லாம் சேர்த்துவச்சு ஆப்படிக்கறாங்கண்ணே :((

//எங்கள் அண்ணன், அடுத்த தல ராயலை ஸ்பெசலாக கலாய்த்ததற்காக
எனது நன்றீயினை இங்கு பதிவு செய்கிறேன். :))
//

நீங்க ஸ்பெசலா கவனிக்க சொல்லித்தானே செஞ்சேன்..இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி கேக்கறீங்க? ;))
Sat Mar 10, 12:16:00 AM IST
//

கப்பி பய said...

//FYI... எனக்கு ஓப்பன் ஆபிஸ்தான் பிடிக்கும்... நாங்கெல்லாம் FSF கோஷ்டிக.... :)
//

ஓப்பன் ஆபிஸா? அப்ப முக்குச்சந்துல தெருவுல உக்காந்துதான் வேலை பார்ப்பீங்களா?? இதுவும் ஒரு பொழப்பு :))