Thursday, March 15, 2007

கவுண்டர் Devil Show - ஜொள்ளுப்பாண்டிகவுண்டர்:- "ஏண்டா கோமுட்டி தலையா சும்மா ஒன்னையே மிதிக்கிறதுக்கு பதிலா சங்கத்திலே திரியறய்வங்களுக்கு ஆப்பு அடிக்கலாமின்னு வந்தா ஒரு பயலுகளையும் காணோம், எல்லா பேரும் வீராசாமியண்ணே நடத்துற அரட்டை அரங்கத்தை வேடிக்கை பார்க்க போயிருப்பாங்களோ?"

கோமுட்டி தலையன்:- "அண்ணே அந்தளவுக்கெல்லாம் அவங்களுக்கு சத்து பத்தாதுண்ணே, லேசா யாராவது சவுண்ட் விட்டாலே பயந்து பம்மிருவாய்ங்கே? வீராசாமிண்ணே பத்தாயிரம் வாட்ஸ்'லே அவரு மட்டுமே மைக் பிடிச்சிட்டு பேசுறாரு, இவிய்ங்கே அந்த சவுண்ட்'க்கே விழுந்துருவானுக...! அண்ணே அங்கே பாருங்கண்ணே! சங்கத்து குடிசையை பார்த்து ஒருத்தன் வாறான், அதிலே பேக்கிரவுண்ட் மிசிக்கெல்லாம் கேட்கிது, அனேகமா ஜொள்ளாதான் இருக்கும், நான் கிளம்புறேன்"

க: "ஏலே கரிச்சட்டி மண்டையா, அவன் வந்ததும் நீ ஏண்டா ஓடுறே? சங்கத்து பயலுகளுக்கு இவனுக்கு ஏதோ இருக்கு? தூரத்திலே ஒருத்தன் தொப்பின்னு சொல்லிட்டு என்னத்தயோ கவுத்துட்டு வாறான், வாடா, வாடா??"

ஜொள்ளு: "அண்ணே என்னாண்ணே நான் உள்ளே வர்றப்போ பெரிய பெரிய அடைமொழியெல்லாம் சொல்லி வரவேற்கன்னு கோமுட்டியண்ணே'கிட்டே சொல்லிருந்தேனே?"

க:"அதானே பார்த்தேன், அதுதான் ஒன்னை பார்த்ததும் கோமுட்டி மண்டையன் ஓடிட்டானா? ஏண்டா அரைடவுசர் மண்டையா? இந்த அட்டு விளம்பரமெல்லாம் தேவைதானா ஒனக்கு?"

ஜொ:"இந்த காலத்திலே பூக்கடைக்கும் வெளம்பரம் வேணுமிண்ணே"

க:"ஒன்னோட மொகரகட்டைக்கு பழமொழி வேறயா? ஒன்னோட மண்டையிலே கவுத்து போட்டுருக்க அந்த கூடையை எடுக்கமாட்டியா நீ?"

ஜொ: "என்னோட அழகை பார்த்து நீங்க மயங்கி விழுந்துட்டா அப்புறம் என்ன பண்ணுறது?"

க: "அப்போ நீ நம்ம கோமுட்டி தலையன் மாதிரி அழகா தான் இருப்பே? முஞ்சியே காட்டுறேன்னு சொல்லி என்னை பயமுருந்திராதே?? ஊரெல்லாம் ஒன்னையே தேடி கடைசியிலே பொம்பளை பிள்ளைக காலேஜ் பக்கமா கூட திரிஞ்சிட்டு இருந்தோம்? நீ இங்கிட்டு வந்திருக்கே?"

ஜொ: "அண்ணே எல்லா நேரமும் முழுநேர வேலையே பார்த்துட்டு இருக்கமுடியுமா? கொஞ்சம் சேஞ்சு வேணுமில்லே அதுதான் காத்து வாங்கலாமின்னு சங்கம் பக்கம் வந்தேன்"

க:"ஆமாம் இவரு பெரிய நெத்தி வேர்வை நெலத்திலே விழறமாதிரி உழைச்சிட்டாரு? சேஞ்ச் வேணுமாம் சேஞ்ச்? பெர்முடாஸ் மண்டையா? ஏண்டா ஜொள்ளுப்பாண்டி'ன்னு பேரு வைச்சிக்கிட்டே?"

ஜொ: "அண்ணே! அது நானா வைச்சிக்கிட்டே பேரு இல்லிங்கண்ணா? அது மக்களா எனக்கு கொடுத்த பட்டமிண்ணா? அது நான் செய்யும் சமுதாயபணிக்கு மக்களா கொடுத்த வெகுமதியா நினைச்சு ஏத்துக்கிட்டேன்"

க:" ஆமாம் இவரு பெரிய சமுதாயகாவலரு? டேய் கூடைமண்டையா! நீ பண்ணுறது சேவையாடா? வார்த்தையை கேட்டா ஜீரணிக்கிறமாதிரி பேசுங்கடா"

ஜொ: "கிரேட் இன்சல்ட்! அண்ணே வேற கேள்வி கேளுங்கண்ணே?"

க:" ஏண்டா மண்டையா ஃபீல்'ஆ பண்ணுறே? பாவம்'டா அந்த ஃபீல், அதை விட்டுறா? ஆராய்ச்சியெல்லாம் பண்ணுறேன்னு சொல்லிட்டு நாலஞ்சு கட்டுரையெல்லாம் போட்டுருக்கீயே? அதை சப்மிட் பண்ணி லண்டன் யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டமா வாங்கப்போறே?"

ஜொ:"அண்ணே என்ன இப்பிடி கேட்டுபிட்டியேளே? நான் ஆராய்ச்சி பண்ணி போட்டதுக்கு மக்களே எனக்கு டாக்டரு பட்டம் குடுத்துட்டாங்க.. எதுக்கு லண்டன் யுனிவர்சிட்டியெல்லாம்? நான் வரைஞ்ச கட்டை சில குறிப்புங்கிறே பதிவுக்காக அமெரிக்கன் யூனிவர்சிட்டியிலே கெளரவடாக்டர் பட்டம் குடுக்கவந்தாங்க! நாந்தான் ஓவரு விளம்பரமெல்லாம் ஒடம்புக்கு ஆவாதுன்னு வேணாமின்னு சொல்லிட்டேன்!"

க: "அடேய் தண்ணிக்குள்ளே முக்கியெடுத்த பஞ்சுமிட்டாயி மண்டையா! பொய் சொன்னாலும் பொருந்துறமாதிரி சொல்லு? அது என்னாடா எல்லா பித்தளைகாரங்களுக்கு வாறத சந்தேகம் ஒனக்கு எப்பிடி வந்துச்சு, அதிலே எதுக்காவது உருப்படியா பதில் கிடைச்சதா?"

ஜொ: "அண்ணே! அது கோடிக்கணக்கான ஆம்பிளைச் சிங்கங்கள் மனசிலே இருந்துச்சு, அதை நான் எல்லாருக்கும் பொதுவா இருந்து கேள்விகணைகளை தொடுத்து பார்த்தேன்?"

க:"அடேய் கிபோர்ட் மண்டையா? கிணத்துக்குள்ளே கல்லை தூக்கிப்போட்டுந்தேன்னா ஒரு சொட்டு தண்ணியாவது ஒன்னோட முஞ்சிலே தெரிச்சிருக்கும், ஆனா நீ கேட்ட கேள்விக்கு ஒன்னாவது விடை கிடைச்சதா? அதுக்கு பதிலா ஒன்னாருவா ஆமவடையை வாங்கி தின்னுட்டு போயிருக்கலாமில்லே நீ?

ஜொ: "அண்ணே அதுக்கு நானெல்லாம் அசந்தேனா? ஆபாசத்துக்கும் கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசத்தை பத்தி ஆராய்ச்சிப் பண்ணினதுக்காக இந்தியாவிலே இருக்கிற யூனிவர்சிட்டியிலே டாக்டரு பட்டம் குடுக்கவந்தாங்க! வழக்கம்போலே நாந்தான் வேணாமின்னு சொல்லிட்டேன்!"

க: அடேயே போதுமிடா, அத்து தொங்குதுடா, விட்டுறுடா அந்த இத்து போன ரீல்சுத்துற வேலையே! ஏண்டா ஆட்டுக்கல் மண்டையா அஞ்சரைக்குள்ளே வண்டின்னு ஒன்னு எழுதுனேயே? அந்த தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருந்துச்சா'ன்னு சொல்லு, ஏண்டா இப்பிடியெல்லாம் கலவரமா தலைப்பை போட்டு படிக்க ஓடிவர வைச்சிட்டு ஏமாத்திறீங்க?

ஜொ:"அண்ணே! நான் படத்தோட கதையே சொல்லிருந்தை விட நான் படம் பார்க்க போன கதைதானே நல்லா இருத்துச்சு, இம்புட்டு ஞாபகமா வச்சு எப்பிடிண்ணே கேள்வியெல்லாம் கேட்கிறீங்க? ஒங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்கிதுண்ணே?

க: "ஏண்டா அதை தேடி படிச்சு நீ எங்கயோ அடி வாங்கினதை எழுதி வைச்சிருந்தை பார்த்ததும் ஒன்னையே நேரா பார்த்தா தூக்கி போட்டு பந்தாடலமின்னுதான் இருந்தேன்..? ஆனா நீ போட்ட நாட்டுக்கட்டை ஆராய்ச்சி கட்டுரை நல்லா இருத்துச்சுடா ஜொள்ளுமண்டையா? ஆனா எப்பிடிரா நாளைக்கோ நாளைன்னக்கோ வேணுமின்னு நினைச்சு கூட பார்க்கமே ஜொள்ளு விட்டுக்கிட்டே இருக்கே?"

ஜொ: "அண்ணே இதைதான் ஜொள்ளானந்தா ஜொள்ளு விடறவன் எல்லாம் கெட்டவனும் இல்லை ஜொள்ளு விடாதவன் எல்லாம் நல்லவனும் இல்லை'ன்னு ஜொள்ளீருக்காரு, அவரு ஜொள்ளுரையை பின்பற்றுபவன் நானு "

க:"பின்பற்றுபவன்,ஊக்குபற்றுவன்னு ஏதாவது உளறுனே அப்பிடியே வந்து காதை கடிச்சிபிடுவேன், ஏண்டா வேகாத முட்டை மண்டையா? அடிபட்டு உங்கப்பா ஆஸ்பத்திரில படுத்து கெடந்தாருன்னு சொன்ன, அந்த நேரத்துலகூட நர்ச சைட் அடிக்கறயே நீயெல்லாம் என்னாதாண்டா நினைச்சிட்டு இருக்கே?

ஜொ:"அண்ணே ஒரு கடமைவீரனுக்கு அவனோட கடமைதானே முக்கியம்! எந்தவொரு நெருக்கடியிலும் தன்னோட கடமையிலிருந்தும் கடுகளவு கூட தடம் மாறக்கூடாதுன்னு பெரியவங்க சொல்ல கேட்டுருக்கேண்ணே? அதுதான்"

க: "இஞ்சி இடுப்புன்னா என்னான்னு தெரிஞ்சு என்னந்தான் பண்ணப்போறே நீயி? ஏதோ பாட்டு எழுதன ஆளு ஒரு எதுகைமோனைக்கு எழுதினா அதை வைச்சி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு திரியுறே? ஏண்டா குட்டிச்சுவரா போனவனே , குட்டி குட்டி'ன்னு நூறு மொறை சொல்லிட்டு நாய்க்குட்டிய சொன்னேன்னு பசப்பினலே, உண்மைலயே நாய்க்குட்டியதான் சொன்னியா?"

ஜொ: "அண்ணே! அது நாயி இல்லிங்கண்ணா! பூனைங்கண்ணா!"

க:"ஆமாம் ரொம்பமுக்கியம், ஒன்னையெல்லாம் ஒரேநேரத்திலே எல்லாம் பேட்டியெடுக்க முடியாது போலே? இப்போ மணி நாலாக போவுது! இந்நேரம் காலேஜ்'லாம் விட்டு கிளியா வெளியா பறக்க ஆரம்பிச்சிருக்கும், போயி ஒன்னோட கடமையை ஆற்றிட்டு வா? நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு டீக்கடையிலே ஆத்துறமாதிரி ஒன்ன ஆத்துறேன் அப்புறமா?"

கவுண்டர் பிரேக் விட்டதும் பாண்டி வில்லிருந்து புறப்படும் அம்பென தன் களப்பணியாற்ற கிளம்புகிறார்......

17 comments:

தம்பி said...

//அடேய் தண்ணிக்குள்ளே முக்கியெடுத்த பஞ்சுமிட்டாயி மண்டையா!//

செம காமெடி! தண்ணிக்குள்ள பஞ்சுமிட்டாய விட்டா என்ன ஆவும்??

மணிகண்டன் said...

//தண்ணிக்குள்ள பஞ்சுமிட்டாய விட்டா என்ன ஆவும்??
//

அதத்தான் இராம் பதிவுலயே சொல்லிட்டாரே தம்பி. ஜொள்ளுப்பாண்டி முகம் மாதிரி ஆகும்.

ஜி said...

எங்கள் அண்ணன் ஜொள்ளுப் பாண்டிக்கு தமிழகக் கவர்ச்சிப் புயல் நமிதாவோ, இல்லை, அண்ணன் ஆராய்ச்சி செய்த இஞ்சி இடுப்பழகி இலியானாவையோ வைத்து டெவிச் ஷோ நடத்தியிருக்க வேண்டும். இப்படி கவுண்டரை வைத்து கலாய்த்ததை நான் கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்....

ஜி said...

அண்ணன் பாண்டியை சீண்டிய கவுண்டரின் பழைய போஸ்டர்களில் சானியை எறிந்த கல்லூரி மாணவிகள்

-- வாங்கிவிட்டீர்களா சந்தனம் ???

தேவ் | Dev said...

கவுண்டருக்கே என்கவுண்டர் வைப்பான்ல்ல நம்ம தம்பி பாண்டி

பிரேக் விட வச்சு டீ ஆத்த அனுப்பியிருக்கோம்ல்ல..

ஜொள்ளுப்பாண்டி said...

அட ராமு கொஞ்சம் அசந்துட்டேன் கொண்டு வந்து நம்மளை கவுண்டர் கிட்டே மாட்ட வுட்டுடீங்களே !! :))))))))))

//ஆமாம் இவரு பெரிய சமுதாயகாவலரு? டேய் கூடைமண்டையா! நீ பண்ணுறது சேவையாடா? வார்த்தையை கேட்டா ஜீரணிக்கிறமாதிரி பேசுங்கடா"//

:))))))))))))))))))))))) ஹயோ சிரிச்சு சிரிச்சு வயிரே புண்ணாயிபொச்சு ராம்.:)))))

இராம் said...

//செம காமெடி! தண்ணிக்குள்ள பஞ்சுமிட்டாய விட்டா என்ன ஆவும்?? //

வாப்பா நட்சத்திரம், மொதபோணியா வந்துருக்கே? நம்ம கவுண்டர் சொல்லி கூப்பிடுற பேரையெல்லாம் நினைச்சு அப்புறமா அனுபிச்சு சிரிக்கணும்... இந்தமாதிரியெல்லாம் சின்னப்புள்ளதனமா ஆராயப்பிடாது :)

இராம் said...

//அதத்தான் இராம் பதிவுலயே சொல்லிட்டாரே தம்பி. ஜொள்ளுப்பாண்டி முகம் மாதிரி ஆகும். //

அடடா வாங்க ஒலக கோப்பை பதிவுலக வர்ணையாளரே... கரெக்டான பாயிண்டே கச்சிதமா கவ்விட்டிங்க போங்க :))

இராம் said...

//எங்கள் அண்ணன் ஜொள்ளுப் பாண்டிக்கு தமிழகக் கவர்ச்சிப் புயல் நமிதாவோ, இல்லை, அண்ணன் ஆராய்ச்சி செய்த இஞ்சி இடுப்பழகி இலியானாவையோ வைத்து டெவிச் ஷோ நடத்தியிருக்க வேண்டும். //

ஜியீ,

வாலே, ஒனக்கே இது நியாயமா படுதா'ன்னு சொல்லு, இந்நேரம் அவங்களெல்லாம் வந்திருந்தா நம்ம பாண்டியண்ணே ஒரு கேள்விக்கு பதில் சொல்லமே ஜொள்ளாறு விட்டுக்கிட்டே இருந்துருப்பாரு, நம்ம கவுண்டர் வந்ததுனாலே தான் இங்கே கொஞ்சமாவது ரத்த ஆறு ஓடிக்கிட்டு இருக்கு :)

//இப்படி கவுண்டரை வைத்து கலாய்த்ததை நான் கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்....//

வேணுமின்னா உண்ணாவிரதம் இரு :)

ஜொள்ளுப்பாண்டி said...

// ஜி - Z said...
எங்கள் அண்ணன் ஜொள்ளுப் பாண்டிக்கு தமிழகக் கவர்ச்சிப் புயல் நமிதாவோ, இல்லை, அண்ணன் ஆராய்ச்சி செய்த இஞ்சி இடுப்பழகி இலியானாவையோ வைத்து டெவிச் ஷோ நடத்தியிருக்க வேண்டும். இப்படி கவுண்டரை வைத்து கலாய்த்ததை நான் கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.... //

வாங்க ஜி நீங்க ஒருத்தராவது என்னோட ஆசைய புரிஞ்சுகிடீங்களே !! ராமு நமீதா ரிடயர்ட் ஆய்டாங்க போனா போகுது நம்ம இலியனாவ வச்சு ஒரு ஷோ நடத்திடுவோமா ??:)))))))))))))))))
அஞ்சா நெஞ்சன் ஜி வாழ்க !! ;))))) சைட்ல 'பிட்'டை போட்டேன் பார்தீங்களா ஜி :))))))

ஜொள்ளுப்பாண்டி said...

// ஜி - Z said...
அண்ணன் பாண்டியை சீண்டிய கவுண்டரின் பழைய போஸ்டர்களில் சானியை எறிந்த கல்லூரி மாணவிகள்

-- வாங்கிவிட்டீர்களா சந்தனம் ??? //

ஜிஜிஜிஜிஜிஜிஜிஜி :)))))))))))))

இராம் said...

//கவுண்டருக்கே என்கவுண்டர் வைப்பான்ல்ல நம்ம தம்பி பாண்டி//

போர்வாளு,

என்னா இது? கவுண்டர் எதுக்கும் துணிஞ்சுதானே நம்ம சங்கத்துக்கு பேட்டியெடுக்க வந்திருக்காரு.... :) அவரை போய் மறுபடியும் பயமுருந்தாதீங்க :)

துர்கா|thurgah said...

ஜொள்ஸ் உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்.எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு ஜொள்ளு விடறதுல pHD கொடுத்து உங்கள dr ஜொள்ளுப்பாண்டி ஆக்கிய கதை எல்லாம் வெளியே வர வில்லையே !!!

துர்கா|thurgah said...

ஜொள்ஸ் தொப்பியை கழட்டிவிட்டால் பொண்ணுங்க எல்லாம் பின்னால் ஓடி வரும் என்ற பயம் தானே?

ஜொள்ளுப்பாண்டி said...

// துர்கா said...
ஜொள்ஸ் தொப்பியை கழட்டிவிட்டால் பொண்ணுங்க எல்லாம் பின்னால் ஓடி வரும் என்ற பயம் தானே? //

துர்கா அப்படியெல்லாம் நான் மன்மதன் இல்லீங்க !! தொப்பிய கழட்டினா பொண்ணுங்க ஓடி வர மாட்டாங்க ஓடி போய்டுவாங்க :))))))))))))))))))

இராம் said...

//அட ராமு கொஞ்சம் அசந்துட்டேன் கொண்டு வந்து நம்மளை கவுண்டர் கிட்டே மாட்ட வுட்டுடீங்களே !! :))))))))))///

கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கனுமில்லே பாண்டிண்ணே :)

//வாங்க ஜி நீங்க ஒருத்தராவது என்னோட ஆசைய புரிஞ்சுகிடீங்களே !! ராமு நமீதா ரிடயர்ட் ஆய்டாங்க போனா போகுது நம்ம இலியனாவ வச்சு ஒரு ஷோ நடத்திடுவோமா ??:)))))))))))))))))//

அந்த டெவில் ஷோ நடத்துறதுக்கும் நம்ம கவுண்டரு ரெடியா தான் இருக்காரு.. ஹி ஹி

Syam said...

ROTFL...செமயா கலாச்சு இருக்கீங்க..:-)