Tuesday, March 27, 2007

ஜொள்ளு கோச்சிங் சென்டர்
அன்னிக்கு ஒரு நாள் அப்படியேக்கா நம்ம மெயில செக் பண்ணிகிட்டு இருந்தப்போ நம்ம சங்கத்து சிங்கம் ஒன்னு சோகமான ஸ்டேடஸ் மெசேஜ் போட்டுகிட்டு ஒக்காந்து இருந்துச்சு. இது என்னடா சங்கத்து சிங்கத்துக வந்த சோதனைன்னு கேட்டா அட பாண்டி இதுக்கு தானே காத்துக்கிட்டு இருந்தேன்னு பூத்து பூத்துன்னு ஒரே ஒப்பாரி !! என்னாடா இது வம்பா போச்சுன்னு வா ராசா வா ன்னு லேசா ஆன்லைன்லயே கொஞ்சம் மப்பேத்திவிட்டு கேட்டா “ பாண்டி ஆபீசுல ஆணி புடுங்கற வேலை சும்மா பின்னி பெடலெடுக்குது. எப்படா வீட்டுக்கு திரும்ப வருவோம்னு இருக்கு. சரி இப்படி ஓயாம கொள்ளாம திரிஞ்சுகிட்டு இருக்கமே அப்பபோ ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பேச்சுத்துணைக்குன்னு ஏதாசும் பொண்ணுககிட்ட பேசலாம்னு போனா உடனே அல்லாருமே ஸ்டேடஸ் மெசேஜ்லயே என்கேஜ்டு மெசேஜ் போட்டுகிட்டு சல்லைய கொடுக்குதுங்க! என்ன பண்றதுன்னே தெரியலை?! என்னடா இது வாழ்க்கை !! வாழ்க்கைல கடலை திங்காம இருந்துடலாம் ஆனா கடலைபோடாம இருந்தா என்ன ஆவறது? நாளைக்கு என்னை என் பேரப்புள்ளைக கேட்டா ஒரே அவமானமா போய்டுமே ன்னு ஒரே அழுவாச்சி !!!

அட இது நம்ம சிங்கத்துக்கு மட்டுமா சோதனை அல்லாருக்கும் தானே!! இதுக்கொரு முடிவு கட்டியாகனும்னு களத்திலே குதிச்சிடோம்ல? . அட எது எதுகெல்லாமே கோச்சிங்க சென்ட்டர் வச்சுருக்காங்க நாம ஏன் பிகர் கிட்டே ஜொள்ளு.விட நம்ம சிங்கங்களுக்கு ஒரு ரிகரஸ் கோச்சிங் வச்சா என்னானு ரோசணை பண்ணி இதோ வச்சுடம்லே?? இதோ அந்த கோச்சிங் சென்டர்ல ருந்து Live telecast !

சங்கத்து வாசல்ல கே கொள்ளேன்னு ஒரே கூட்டம் என்னாடான்னு விலகிட்டு பார்த்தா அட நம்ம கோச்சிங்க சென்ட்டர்ல சேருரதுக்குதான் அவ்ளோ கூட்டம்.

கைப்பூ : அப்பூ பாண்டி சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வா. நீ கோச்சிங்க கொடுக்கறேன்னு மின்னாடியே தகவல் கெடச்சுடுச்சு அதான் வெள்ளனவே எந்திரிச்சு மொதோ ஆளா வந்து பர்ஸ்ட் பெஞ்சிலயே துண்டைப்போட்டுட்டம்ல?

ராயல் : பாண்டி தலயாச்சும் காலைல தான் வந்துச்சு ஆனா நான் நேத்தே வந்து மொதோ பெஞ்ச்லே குந்திகினு இருக்கேன்.

வெட்டி: ஹிஹிஹிஹிஹி பாண்டி என்னிக்கு நீ கோச்சிங் சென்டர் போர்ட்டை எடுத்து மாட்டுனயோ அன்னில இருந்தே பர்கர் புளிசாதம்னு வந்து செட்டில் ஆயிட்டோம்ல??

ஜொள்ளு: அஹா மக்களே இவ்ளோ ஆதரவா என்னோட கோச்சிங்குக்கு?? சரி சரி மொதல்ல அல்லாரும் என்னென்ன பண்ணுனீங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்?.

கைப்பு: பாண்டி நானு போற வர்ற பொண்ணுங்க என்ன பேசறாங்கன்னு பின்னாடி திரும்பிகூட பார்காம ரொம்ப டீசண்டா கவனிச்சுகிட்டு வாறேன். சரி பாதியிலே பேசிக்கிட்டு இருக்கறப்போ நாம பேசுனா டீசண்டா இருக்காதுன்னு நெனச்சுகிட்டு அவங்க பேசி முடிக்கட்டும் நாம ஆரம்பிக்கலாம்னு காத்துகிட்டு இருந்து பேச்சு சத்தம் நின்னவுடனே திரும்பி பார்த்தா அவங்க எஸ்கேப் ஆகி இருக்காங்க! நானும் பல டயலாக்கு எல்லாம் ரெடி பண்ணனதுக்கப்புறம் இப்படி ஆனா என்ன பண்ணுவேன் ( ஒரு ஒப்பாரி ) பேசறதுக்கு என்னவெல்லாமோ கற்பனை பண்ணி வச்சுகிட்டு வந்து படத்தை ரிலீஸ் பண்னலாம்னு வர்றப்போ ஆடியன்சே இல்லைனா எப்படி இருக்கும் ??

ஜொ.பாண்டி: no no no crying ஒகே!! தல நீங்க பண்ணுன மொதோ தப்பு பொண்ணுங்க பேசுனா நிறுத்துவாங்கண்னு நெனச்சது. ரெண்டாவது தப்பு நீங்க பொண்ணுங்க பேச்ச நிறுத்துவாங்க நாம பேசலாம்னு காத்துகிட்டு இருந்தது. அப்படி இருந்தா தாத்தா ஆக வேண்டியது தான். மூணாவது தப்பு இந்த டீசண்டா இருக்கறேன்னு ஒதுங்கி நின்னுகிட்டு இருந்தா நீங்க பார்க்க பார்க்கவே அவனவன் அள்ளிகிட்டு போய்ட்டே இருப்பானுக. ஓகே ?? நெக்ஸ்ட் யாரு ??

ராயல்: பாண்டி நானும் ஆர்குட்டு சாட்டுன்னு போய் மொதோ ஓவரிலேயே சிக்ஸர் அடிச்சு சூப்பரான ஓபனிங் கொடுக்கரேன். ஆனா நான் புடுச்சதை firewall எல்லாம் போட்டு காபந்து பண்ணுலாம்னு பார்த்தா என்னோட firewall எல்லாத்தையும் பேத்துகிட்டு கண்டவனும் என்னோடதை களவாடிகிட்டு போய்டுறானுகோ?? இப்படி எத்தனைய மிஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா??

பாண்டி: ஒகே ஓகே கவலை வேணாம் ராமு. நீ ஆர்குட்டு சாட்டுன்னு போய் தேத்தறது இருக்கட்டும் அப்பபோ உன்னைப்பத்தியும் லேசா ‘பிட்’டைப் போட்டீயா? உன் firewall லை ஒருத்தன் பேத்துகிட்டு இருக்குற வரை என்ன பண்ணுணே? ஏதோ ஒரு அந்நியன் வர்றான் அப்படீன்னாலே நீ உடனே ஒரு ரெட் அலர்ட் செட் பண்ண வேணாமா? அவன் என்ன எழுதறான் அதுக்கு உன் ஆளு என்ன சொல்லுதுன்னு அப்படியே 24hrs மானிடர் பண்ணிகிட்டே இருக்கனும். அதான் சிக்ஸர் அடிச்சாசில்லேன்னு மப்பை போட்டுகிட்டு ஒக்கார்துகிட்டு இருந்தா சிங்கிள் சிங்கிளாவே ரன் எடுத்து ஸ்டெம்பை பேத்தெடுத்துகிட்டு ஓடிறுவானுங்க ஜாக்கிரதை தெர்தா??

வெட்டி: பாண்டி இந்தியாவிலே இருக்குற வரைக்கும் கேபினுக்கு வெளியே எட்டிப்பார்த்தா எட்டடி பாயத் தோணுற மாதிரி கலர் கலரா இருக்கும். சரி பாரின் போக சொல்லறானுகளே கேபினுக்கு வெளியே ஒரே கவுனு மயமா இருக்கும்ன்னு நம்ம்ம்ம்பி சரின்னு ஒத்துகிட்டு வந்தா கவுனு பார்ட்டி எல்லாம் கவுனு பாட்டியால்ல இருக்கு !! நானும் காதல் கதை அது இதுன்னு பண்டல் பண்டலா எழுதி தள்ளுரேன். ஆனா என்னைய தள்ளிகிட்டு போறதுக்கு எதுவும் சிக்கலையே என்ன பண்ணுவேன்??


பாண்டி: அட கவலைய வுடு பாலாஜி ! காதல் கதை எழுதறது சரி. அதுல நீ எழுதுற டயலாகை எல்லாம் யாரு கிட்டவாச்சும் சொல்லி பார்த்தியா ??

வெட்டி: ஓஓஓ அப்பவே சொல்லி பார்த்தனே என் ரூம்மேட் கார்த்திகிட்டே!

பாண்டி: கிழிஞ்சது போ !! கார்த்தி கிட்டே சொல்லி என்ன ஆக போகுது? சின்னபுள்ள தனமால்ல இருக்கு !! யோவ் பாலாஜி கார்த்திகிடே சொன்ன நேரதுக்கு கார்த்திகா கிட்டே சொல்லி காட்ட வேண்டியது தானே ?

வெட்டி: அய்யோ யாரு அது கார்த்திகா ?

பாண்டி: ம்ம் ஹூம். பாலாஜிக்கு கொஞ்சம் ICU கோச்சிங் தான் கொடுக்கனும் . பாலாஜிய அப்படியே அள்ளிகிட்டு நம்ம பேட்டை ICU கோச்சிங் சென்ட்டருக்கு போங்கப்பூ !!

கைப்பூ: டேய் பாண்டி பாலாஜிக்கு மட்டும் ஏதோ ஸ்பெசல் கோசிங் கொடுக்கறேனு சொன்னியே என்னையும் அப்படியே அள்ளிகிட்டு போய் கோச்சிங்க் கொடுறா பண்டிக்கண்ணு !!

ராயல்: யேய் பாண்டி எனக்கொரு தீர்வசொல்லு இல்லே இப்பவே இங்கயே நான் தீக்குளிச்சுருவேன் !!

ஜொ.பாண்டி: அட கொக்க மக்க !! என்ன இது இம்ப்பூட்டு வேகம்?? இதே வேகத்தை அங்க கட்டி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்? சரி சரி அல்லாரும்க்கு மொதல்ல கொஞ்சம் வார்மப் பண்ணணும் . என்னோட பின்னாடியே நகர்வல வாங்க போலாம்! அப்படியே வர்றப்போ சும்மா வரக்கூடாது ! அப்படியே நம்மளைப்ப பத்தி அருமை பெருமையெல்லாம் பாடிகிட்டே வரணும் சரியா ??

வெட்டி: அட நாறப்பயலே. எங்கள வச்சு ஏதோ தேத்தப்பாக்குறே போல இருக்கே. இதுக்குதான் இம்பூட்டு நேரம் எங்களை வச்சு மொக்கை பொட்டுகிட்டு இருந்தியா ?? தல இவனே வுட்ட இப்படியே நம்மளை வச்சு பொங்கலைப் பொங்கி தின்னுட்டு ஏப்பம் வுட்டுட்டு போய்கிட்டே இருப்பான். டேய் பொளங்கடா பாண்டிய !!

அலறிக்கொண்டே அனைவரும் துரத்த பாண்டி எஸ்கேப் !

12 comments:

தேவ் | Dev said...

சேட்டிங் சேட்டைப் பண்ணிகிட்டு இருந்த சின்னப்பையனை டேட்டிங்ன்னு ஆசைக் காட்டி டேமெஜ் பண்ணப் பாக்குறீயா பாண்டி? ..ம்ம் ந்டக்கட்டும்

தேவ் | Dev said...

ம்ம் தல ஏன் இப்படி .. உன் இமேஜ்க்கு இந்த் ரொமான் ஸ் எல்லாம் ஒத்து வராது.. எதோ கட்டத்துரை தங்கச்சி கையால கரண்டி அடி வாங்குனதுல்ல திருந்துவேன்னு நினைச்சேன்... ம்ம்ஹூம் மொட்ட வெயில்ல நடு மண்டையிலே மொளகாத் தேய்ச்சு விடப் போறாங்க....பாரு

தம்பி said...

அந்த சோகமான ஸ்டேட்டஸ் மெஸ்ஸேஜிக்கு சொந்தக்கார சிங்கம் எதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுங்களா ஜொள்ளு சார்?

தம்பி said...

//ேச்சுத்துணைக்குன்னு ஏதாசும் பொண்ணுககிட்ட பேசலாம்னு போனா உடனே அல்லாருமே ஸ்டேடஸ் மெசேஜ்லயே என்கேஜ்டு மெசேஜ் போட்டுகிட்டு சல்லைய கொடுக்குதுங்க!//

யோவ் ஜொள்ளு என்கேஜ்டா இருந்தாலும் சும்மாவா இருக்கற நீயி. அங்கயும் போயி மொக்கைய போடறதுனாலதான் நீ உள்ள வரும்போதே நாலு பேரு எகிறி குதிச்சி ஓடறாங்க.

தம்பி said...

என்னலே இது ஆச்சரியமா இருக்கு. பதிவ போட்ட நேரத்துக்கு சங்கத்து சிங்கங்கள் ஆளுக்கொரு கமெண்ட் போட்ட்ருந்தாவே 10 பக்கமா வந்திருக்குமே. ஒரு வேளை நிஜமாவே ஆணி புடுங்க போயிட்டாங்களா....

நிலவரம் கலவரம் ஆகறதுக்குல்ல கும்மிய இங்க அடிங்க ராசாக்களா

சந்தோஷ் aka Santhosh said...

எலேய் பாண்டி நீ நல்லவன்னு நெனைச்சேனே இப்படி பண்ணிட்டியேடா நீயீ. //தல நீங்க பண்ணுன மொதோ தப்பு பொண்ணுங்க பேசுனா நிறுத்துவாங்கண்னு நெனச்சது.//
பாண்டி இப்பவே ஒரு நல்ல ஆஸ்பத்திரி பேரா சொல்லு நாளைப்போல மாதர் சங்கம் பின்னி பெடல் எடுத்தா சேர்க்க சரியா இருக்கும்.

Syam said...

ஏப்பு கோச்சிங் செண்டர் வெச்சத எனக்கு எல்லாம் சொல்லவே இல்ல...நாளைக்கு கடை தொறக்கறதுக்கு முன்னாடி அங்கன இருப்பேன் :-)

வெட்டிப்பயல் said...

//அன்னிக்கு ஒரு நாள் அப்படியேக்கா நம்ம மெயில செக் பண்ணிகிட்டு இருந்தப்போ நம்ம சங்கத்து சிங்கம் ஒன்னு சோகமான ஸ்டேடஸ் மெசேஜ் போட்டுகிட்டு ஒக்காந்து இருந்துச்சு. இது என்னடா சங்கத்து சிங்கத்துக வந்த சோதனைன்னு கேட்டா அட பாண்டி இதுக்கு தானே காத்துக்கிட்டு இருந்தேன்னு பூத்து பூத்துன்னு ஒரே ஒப்பாரி !!//

பாண்டி, உன்கிட்டயுமா???

எங்கிட்டயும் அப்படித்தான் ஒரே ஃபீலிங்ஸ்

வெட்டிப்பயல் said...

//என்னடா இது வாழ்க்கை !! வாழ்க்கைல கடலை திங்காம இருந்துடலாம் ஆனா கடலைபோடாம இருந்தா என்ன ஆவறது? நாளைக்கு என்னை என் பேரப்புள்ளைக கேட்டா ஒரே அவமானமா போய்டுமே ன்னு ஒரே அழுவாச்சி !!!//

தம்பி என்கிட்ட சொன்ன டயலாக் மாதிரி இருக்கே...

வெட்டிப்பயல் said...

//
கைப்பூ : அப்பூ பாண்டி சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வா. நீ கோச்சிங்க கொடுக்கறேன்னு மின்னாடியே தகவல் கெடச்சுடுச்சு அதான் வெள்ளனவே எந்திரிச்சு மொதோ ஆளா வந்து பர்ஸ்ட் பெஞ்சிலயே துண்டைப்போட்டுட்டம்ல?//

தல,
இது உனக்கு தேவையா???

இரு இளைஞன் இளைஞி கையப்பிடிக்கத்தான் செய்வானு பேசிய உன் வீரம் எங்கே???

வெட்டிப்பயல் said...

//
பாண்டி: ம்ம் ஹூம். பாலாஜிக்கு கொஞ்சம் ICU கோச்சிங் தான் கொடுக்கனும் . பாலாஜிய அப்படியே அள்ளிகிட்டு நம்ம பேட்டை ICU கோச்சிங் சென்ட்டருக்கு போங்கப்பூ !!//

அது என்னுமோ உண்மை தான் :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

ஏப்பு கோச்சிங் செண்டர் வெச்சத எனக்கு எல்லாம் சொல்லவே இல்ல...நாளைக்கு கடை தொறக்கறதுக்கு முன்னாடி அங்கன இருப்பேன் :-) //

நாட்டாமை,
நீங்க எல்லாம் இந்த டுட்டோரியலுக்கு Principalஆ இருக்க வேண்டியவரு...