Thursday, March 15, 2007

ஏலேய் கழுகு ராஸ்கோலு...

கடும் கடுப்புடன் கைப்புள்ள சங்கத்து திண்ணையில் ஏறி நின்று எட்டப் பார்த்துக் கொண்டிருந்தார்..

ஒரு பயலைக் காணும்.. அம்புட்டு பயலும் பாண்டி பொறந்த நாளுக்கு பீரும் கறி சோறும் தின்னுபுட்டு சேறும் சக்தியுமா எங்கிட்டுப் படுத்துக் கிடக்கானவளோ... என் கைப்பொண்ணு என்னைக் கைவிட்ட நாள்ங்கற ஒரே காரணத்துக்காக நேத்து தான் விருந்துக்குப் போகல்ல.. தலயாச்சே ஒத்த கிளாஸ்ல்ல ஒரு நாலு மடக்கு.. ஒரு நாலு லெக் பீசு.ன்னு பார்சலாவது போட்டு அனுப்பியிருக்கலாம்..

விளக்குமாத்துக் கூட்டத்துக்குத் தலயா வாழுறதை விட எங்கனயாவது பெருக்குமாறா வாழ்ந்து இருக்க இடத்தைச் சுத்தம் பண்ணலாம்ய்யா...

"ஏலேய் தேவ்.. இங்கண வா.. "

நான் பம்மி கைகட்டி நிக்க...தல என்னைச் சுத்தி வந்து பாத்தார்.

"நேத்து பலமான சரக்கோ... நல்ல தீனியா... தொண்டைக் குழி வரைக்கும் தின்னுருப்பப் போலிருக்கு. வாயைத் திறந்தா ஏப்பம் வந்துரும்ன்னு வாய்க்கு ஜீப் வச்சா மாதிரியே நிக்குற... நல்லாயில்ல.."

நான் எதுவும் பேசவில்லை...தலையைக் குனிஞ்சுகிட்டேன்..

"ஏன்டா..எனக்கு சங்கம் வைக்க சப்பான்ல்ல சாக்கிசான் மச்சினிச்சி வந்தப்போ வேணாம்ன்னு சொன்னேன்... அமெரிக்காவில்ல மைக்கேல் ஜாக்சன் கேர்ள் பிரண்ட் கேட்டப்போ நோன்னு சொன்னேன்.. லண்டன்ல்ல பாப் பாடுமே அந்தப் பிள்ள.. ஆங் பேர் கூட பட்டாணி பியர்ஸ்...

"தல அது பிரிட்டனி ஸ்பீயர்ஸ்"

"எதோ ஒண்ணு.. வருத்தமாப் பேசிகிட்டு இருக்கேன் திருத்தமாச் சொல்லுர நீயு.. மொகத்துல்லயே குத்திப் புடுவேன்... அந்தப் பிள்ளயப் பெத்த ஆன்ட்டி வந்து சங்கம் வைக்கிறேன்ன்னு ஸ்மைல் விட்டப்போக் கூட நான் சிலிப் ஆகல்லயே.. உனக்குத் தானே அந்த வாய்ப்பைக் கொடுத்தேன்.. இப்படி எனக்குத் துரோகம் பண்ணிட்டு வந்து நிக்குறீயே நல்லாயிருக்கா?"

"நான் என்ன தல பண்ணேன்...."

"பேசாதே நீ பெயிண்ட் அடிச்சு விட்ருவேன் உனக்கு.. ஆமாச் சொல்லு கத்தி பாத்திறுக்கீயா நீயு..."

"உங்களுக்கு தேவைப்பட்டா நறுக்க சங்கம் செலவுல்ல வாங்குனோமே அது தானே?"

"என்னது என்னிய நறுக்கவா? இது வேறவா?"

"அய்யோ தல ஆப்பிள்.. கொய்யான்னு உங்களுக்குத் தேவைப்பட்டா பழ்ம நறுக்கன்னு சொல்ல வந்தேன்.."

"சொல்ல வந்தாச் சொல்லணும்ய்யா வென்று... சொல்லாமா இருந்தா என்ன அர்த்தம்.. ஆமா கத்தியேப் பழம் நறுக்கப் பாத்து இருக்க நீயு... போருக்கு போயிருக்கீயா நீயு.."

"இல்ல தல"

" அப்புறம் உனக்கு போர்வாள்ன்னு பேரு வேற... எப்படி வந்துச்சு அந்தப் பெயர்?"

"எல்லாம் நீங்களும் சங்கமும் கொடுத்தது தல"

"வார்ததையிலே வெல்வேட் ஷாம்பூ வழிஞ்சாப் போதாது... மனசுல்ல இருக்கணும்.. மனசுல்ல இருக்கணும்ய்யா"

"இப்போ என்னத் தல ஆச்சி.. ஏன் இவ்வளவு டென்சன்...?"

"ப்ங்சனுக்கு என்னியக் கூப்பிட்டாங்களாய்டா.. டென்சன்னு மட்டும் சொல்லுங்கடா.. நேத்து அம்புட்டு பயலும் குடியும் கூத்துமா இருந்து இருக்கீய,....ஊரைச் சுத்திப் பாக்க வந்த வெளிநாட்டுப் புள்ளக இடுப்பைப் புடிச்சுகிட்டு டான் ஸ் எல்லாம் ஆடியிருக்கீங்க... என்னையக் கூப்பிடணும்ன்னு தோண்ல்ல உஙக்ளுக்கு" தலக் கண் கலங்க ஆரம்பித்தது..

" தல அப்படி டான் ஸ் எல்லாம் எதுவும் நடக்கல்ல... நம்ம பயல்வ ஆளுக்கு ஒரு பக்கம் ஆபிஸ்ல்ல ஆணி புடுங்குனதுல்லயே குவார்ட்டரை ஒரே கல்புல்ல குப்புற கவுத்த மாதிரி கவுந்து தான் விருந்துக்கே வந்தாயங்க... இதுல்ல டான் ஸ் எல்லாம் டூ மச்.. "

"பேப்பர்ல்ல போட்டோவோட போட்டிருக்கானேப்பா.. நம்ம டவுசர் பாண்டி சொன்னானே"

"டவுசர் பாண்டி நேத்து நாலு ரவுண்ட் பிரியாணி தின்னுப்புட்டு இன்னும் கொஞ்சம் பிரியாணி போடுங்கய்யான்னு பண்ண அலம்பல் தாங்கமா.. நம்ம ராயல் பிரியா ஆணி தானேடா வேணும்ன்னு அவன் உக்கார இடத்திலே நாலு ஆணியை எடுத்து வச்சுட்டான்.. பின்னாலே பாதிக்கப்பட்ட டவுசர் பாண்டி.. உங்க கிட்டத் தப்பா வத்தி வச்சிருக்கான்ய்யா"

"பாண்டி பொறந்த நாளுக்கு உன் கச்சேரியிலே பெரிய வெளம்பரம் எல்லாம் வச்சியே என பொறந்த நாள் என்னிக்குன்னு உனக்குத் தெரியுமாடா..பாண்டி பிகரை இன்ட்ரோ பண்ணுவான் பிக் அப் ஆயிரலாம்ன்னு கணக்குப் போட்டுத் தான் நீ இப்படி செஞசு இருக்கீயாம்... இளா குறுஞ்செயதி அனுப்பி உன் குட்டை உடைச்சுட்டார்ல்லே..."

"ஆகா பாசத்துல்ல பண்ண பலகாரத்தை இப்படி பரிகாசம் பண்ணலாமா தல... நம்ம புலிக்குட்டி பொறந்த நாளுக்குக் கூடத் தான் நான் வெளம்ப்ரம் வச்சேன் அதையும் விவகாரம் ஆக்கிருவீங்கப் போலிருக்கே"

"அந்தச் சண்டாளனைப் பத்தி பேசாதே.. அவனைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்..சூடான்னுக்கு போனப் பொறவு அவன் பிரெயின் குடோன் தப்பா வேலைச் செய்யுது..."

"தல அவன் நம்ம பய தல.. ஏன் இந்தக் கொலவெறி.."

"பேசாதே... அவன் பண்ணக் காரியத்துக்கு அவனை..."

"அப்படி என்னப் பண்ணான் தல....நாகையின் அடுத்த ச.ம.உ நான் தான் சொல்லிட்டானா? அது சும்மா அவிங்க ஊர் சின்னப் புள்ளகலைக் க்ரெக்ட பண்ண அவன் போடுற பிட் அதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு.. விடு தல..."

" ம்ஹூம் நீங்க ஒரு பயலும் சரியில்ல... அவன் அவன் தனக்குத் தானே சுய வெளம்பரம் செஞ்சுகிட்டு திரியுறீங்க.... "

"சங்கத்தைப் பத்தி அந்த கழுகு எழுதுனதுல்ல டென்சன் ஆகிட்டாங்களா தல..."

ஒரு வழியாத் தலயின் கோவத்துக்கான காரணத்தை நான் கண்டுபிடிக்க...தல மெல்ல கனைத்தார்..

"முன்னாடி சாம்புன்னு ஒரு குரூப் கிசுகிசுப் போட்டாயங்க.. அவிங்களும் சங்கம் பத்தி எழுதுனாயங்க பொறுத்துகிட்டேன்.. இப்போ இந்த கழுகும் கன்னாபின்னான்னு எழுதுது.. என்னாலே பொறுக்க முடியாது.. சங்கத்துப் பயலுக நீங்க எதாவது செய்வீங்கன்னு நான் சும்மா இருந்தா நீங்க என்னன்னா பிரச்சனையை விட்டுட்டு அவனுக்குப் பொறந்த நாள்.. இவனுக்கு கல்யாண நாள்... டெவிலுக்கு ஷோக் காட்டுறோம்ன்னு சல்லித் தனமாத் திரியுறீங்க.. அதான் நானே களத்துல்ல இறங்கிறதா முடிவு பண்ணிட்டேன்...."

" சொல்லுங்க தல என்னப் பண்ணனும்..."மொத்த சங்கமும் தல முன்னால் தீடிரென ஆஜராகி கைக் கட்டி நின்னோம்.

சங்கத் திண்ணையில் ஏறி நின்ன தல.. வானத்தைப் பார்த்தார்.. அங்கே சிறிசும் பெருசுமா வட்டமிட்ட கழுகை கைத் தட்டிக் கூப்பிட்டார். அவை தலயைக் கண்டு கொள்ளாமல் தன் ரவுண்ட்ஸில் கவனமாக் இருக்க தலக்கு அசிங்கமாப் போனது.. அதை அவர் வெளியே காட்டாமல் ( எப்போக் காடியிருக்கார்)

ம்ம்ம்.. நல்லாக் கேளுங்க...
ஏ! கழுகு ராஸ்கோல் உனக்கும் தான்...
உன் பதிவுல்ல என்னையப் பத்தியும் கிசு கிசு வரணும்..

நான் அகமதாபாளையத்துல்ல ரெண்டு சேட்டு வீட்டு புள்ளகளை உஷார் பண்ணி செட்டில் ஆயிட்டேன்..

இல்ல இந்த நமீதா புள்ளக்கு அகமதாபாளையம் பக்கத்து ஊர் தானமே.. அந்தப் புள்ளக்கும் எனக்கும் லவ்ஸ்..

சிம்புவைப் பிரிஞ்ச நயந்தாரா இப்போ என் ஓதட்டைக் கடிச்சு போஸ் கொடுக்கணும்ன்னு அடம் பிடிக்குது இப்படி எது வேணுமோ எழுது... ஆனா எழுதணூம்...
"

"இந்தக் கிசுகிசுல்ல பேர் வரமா ஒரு பய மதிக்கமாடேன்கிறான்..."ஒரு விதக் கெத்துடன் எங்களைப் பாக்க....

"இதெல்லாம் ஒரு பொழப்பான்னு " நாங்க அவருக்கு லுக் விட

வழக்கமானப் பாணியில் வழி விடு வழி விடு தலக்கு நிறைய வேலை இருக்கு.. பேக்கு மாதிரி பராக்கு பாக்காமப் போய் வாங்குற சம்பளத்துக்கும் போனஸ்க்கு ஒழுங்கா ஆணி புடுங்குடா அப்ரசெட்டுக்களான்னு கிளம்பி போயிட்டார்...

15 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

Dev, a usual.. கலக்கியிருக்கீங்க..

சமீபத்துல நடந்த எல்லாவற்றையும் அழகாய் கோர்த்துருக்கீங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

கடைசியா கழுகுக்கு கைப்புள்ள விட்ட கோரிக்கை.. தாப் தக்கரு..

:-))))

நாகை சிவா said...

தேவ், எல்லாம் சொன்னீங்க அந்த அண்ணா சாலை கட் அவுட் மேட்டர விட்டுடீங்களே!!!!
:-((((

தல தான் என் வளர்ச்சிய கண்டு பொங்குறார்னா, நீங்களுமா????

மனதின் ஓசை said...

தேவு,
கலக்கல் பதிவு..

//விளக்குமாத்துக் கூட்டத்துக்குத் தலயா வாழுறதை விட எங்கனயாவது பெருக்குமாறா வாழ்ந்து இருக்க இடத்தைச் சுத்தம் பண்ணலாம்ய்யா...//

தல பாணியில சொ.செ.சூ வா?

//"உங்களுக்கு தேவைப்பட்டா நறுக்க சங்கம் செலவுல்ல வாங்குனோமே அது தானே?"

"என்னது என்னிய நறுக்கவா? இது வேறவா?"//
:-))))

//போருக்கு போயிருக்கீயா நீயு.."

"இல்ல தல"

" அப்புறம் உனக்கு போர்வாள்ன்னு பேரு வேற... எப்படி வந்துச்சு அந்தப் பெயர்?"
//

யோசிக்க வேண்டொய கேள்வி..

நாகை சிவா said...

//ஒரு வழியாத் தலயின் கோவத்துக்கான காரணத்தை நான் கண்டுபிடிக்க...தல மெல்ல கனைத்தார்..//

இது கோபமா? இல்ல நம்மளை விட சின்ன பசங்க எல்லாம் வளர்ச்சி அடையுறாங்க என்ற ஆதங்கமா?

தல, உன்க்கூட இருக்குறவங்களை பற்றியாச்சும் கிசுகிசு வருதே என்று ஆனந்தப்படு இப்படி பொறாமை படாதே!!!

செந்தழல் ரவி said...

அதான, தலை புள்ளியில நாலு உள்குத்து வைக்கறவறாச்சே...சும்மா சொல்லுவாரா :)))))))))

மனதின் ஓசை said...

//சிம்புவைப் பிரிஞ்ச நயந்தாரா இப்போ என் ஓதட்டைக் கடிச்சு போஸ் கொடுக்கணும்ன்னு அடம் பிடிக்குது இப்படி எது வேணுமோ எழுது... ஆனா எழுதணூம்... "//

இதெல்லாம் ரொம்பவே ஓவர்
சிபி எங்கெய்யா?

நாகை சிவா said...

//எனக்கு சங்கம் வைக்க சப்பான்ல்ல சாக்கிசான் மச்சினிச்சி வந்தப்போ வேணாம்ன்னு சொன்னேன்... அமெரிக்காவில்ல மைக்கேல் ஜாக்சன் கேர்ள் பிரண்ட் கேட்டப்போ நோன்னு சொன்னேன்.. லண்டன்ல்ல பாப் பாடுமே அந்தப் பிள்ள.. ஆங் பேர் கூட பட்டாணி பியர்ஸ்...//

இதை எல்லாம் கேட்ப்பாரே கிடையாதா????

என்ன தல கலர் கலரா ரீல் வுடுற!!!

ஒருத்தன் தனியா மாட்டினா நீ குறுக்கு சந்துல விட்டு கும்மி அடிப்பக்குறது சரியா தான் இருக்கு!

நாகை சிவா said...

//நாகையின் அடுத்த ச.ம.உ நான் தான் சொல்லிட்டானா? அது சும்மா அவிங்க ஊர் சின்னப் புள்ளகலைக் க்ரெக்ட பண்ண அவன் போடுற பிட் அதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு.. விடு தல..."//

இத தான் மாங்கா அடிக்க எடுத்து போற கல்லில் மிஞ்சியது வைத்து நெல்லிக்காய் அடிப்பதா?

நல்லா இரும்மய்யா, நல்லா இரும். என்ன ஊர் பக்கம் ஒதுங்க விடக் கூடாதுனு நீர் கங்கனம் கட்டி அலைவது உறுதியாடுச்சு....

இராம் said...

//ம்ம்ம்.. நல்லாக் கேளுங்க...
ஏ! கழுகு ராஸ்கோல் உனக்கும் தான்...
உன் பதிவுல்ல என்னையப் பத்தியும் கிசு கிசு வரணும்..

நான் அகமதாபாளையத்துல்ல ரெண்டு சேட்டு வீட்டு புள்ளகளை உஷார் பண்ணி செட்டில் ஆயிட்டேன்..

இல்ல இந்த நமீதா புள்ளக்கு அகமதாபாளையம் பக்கத்து ஊர் தானமே.. அந்தப் புள்ளக்கும் எனக்கும் லவ்ஸ்..

சிம்புவைப் பிரிஞ்ச நயந்தாரா இப்போ என் ஓதட்டைக் கடிச்சு போஸ் கொடுக்கணும்ன்னு அடம் பிடிக்குது இப்படி எது வேணுமோ எழுது... ஆனா எழுதணூம்...//

தல,

கழுகு என்ன சினிமா பத்திரிக்கையிலே கிசுகிசு எழுதுறாருன்னு பார்த்தியா? அவரு பெரிய வீரரு,சூரரு, நம்மைளை மாதிரி ஏப்பை சாப்பைகளை வச்சுதான் கிச்சுகிச்சு காமெடி பண்ணுவாரு....

ஆனா ஒன்னு நாமே நம்மளை தேடி படிக்க வர்றவங்களை சிரிக்க வைக்க என்னனோமோ பண்ணுறோம், அந்தாளு நம்மளையே சிரிக்கவைச்சிராரு :)

இம்சை அரசி said...

கலக்கல் அண்ணா... :)))

கப்பி பய said...

சூப்பருங்ண்ணா :)))

தம்பி said...

இது தலக்கு வந்த ஆசை மாதிரி தெரியலயே..

வதந்திகளை கண்டு அலறிப்புடைத்து ஓடும் கூட்டத்துக்கு நடுவில் வதந்திகளுக்கு வந்தனம் கூறி வரவேற்கும் தல யின் வீரத்தை(??)
கண்டு வெதும்பி நிற்கிறது கழுகுக்கூட்டம்.

ரைமிங்கா வருதுன்னு எழுதுனதுங்க கழுகார் சார். மனசுல ஏதும் வெச்சிக்க கூடாது.

ஜொள்ளுப்பாண்டி said...

// கழுகு ராஸ்கோல் உனக்கும் தான்...
உன் பதிவுல்ல என்னையப் பத்தியும் கிசு கிசு வரணும்..//

:))))))) தல கவலைய வுடு தல . கிசு கிசு தானே வரணும்? பேசாமா ஜூனியர் கழுகை களம் இறக்கி கண்ணாபின்னான்னு வதந்திய பரப்பிபுடலாம் !!:))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

அட கழுகு எங்க 'தல' யும் பெரிய ரவுடின்னு ஊருக்குள்ல ஆகிபோச்சு. ஏதாசும் கிஸ் கிஸ் சுன்னு கிசு கிசு எழுதினாதானே நாளைக்கு 'தல' தலை நிமிந்து நடக்க முடியும் ?? :)))))))))