Friday, March 30, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - போர்வாள் தேவ்

மக்களே போன வாரம் கிரிக்கெட் மேட்ச்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால டெவில் ஷோக்கு லீவ் விட்டாச்சு... ஏண்டா தோத்தீங்கனு நம்ம திராவிட்கிட்ட கேட்டா நீங்க எங்களுக்காக டெவில் ஷோ போடாம விட்டு கொடுத்ததை பார்த்து மனசு வலிச்சுது அதனால இலங்கைகிட்ட நாங்க விட்டு கொடுத்துட்டோம்னு சொல்றான்.

தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லுது பாருங்க... சரி அத அடுத்த டெவில் ஷோல பார்ப்போம். இப்ப நம்ம நட்சத்திர பதிவர், என்னுடைய சிஷ்யன் கைப்புள்ளய கலாய்க்கற சங்கத்தின் சிங்கம் தேவ் வந்துருக்காரு...

க: "வா தேவு... அது என்ன உன் ப்ளாகுக்கு பேரு சென்னை கச்சேரி? உனக்கு பாட்டு பாட தெரியுமா மேன்??? சொல்லு..."

தேவ்: "அது ஒண்ணுமில்லைங்க கவுண்ட்ஸ்... நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல தான். நான் முன்னாடி தங்கிருந்த வீட்டு கக்கூஸ்ல தாழ்ப்பாள் கிடையாது... சரினு தினமும் நம்ம கச்சேரி தான். இப்ப புது வீடு வந்தாச்சி. என்ன இருந்தாலும் பழச மறக்ககூடாதுனு என் வலைப்பதிவுக்கு சென்னை கச்சேரினு பேர் வெச்சிட்டேன்!"

க: "அட தேவ் மண்டையா... இதுக்குள்ள இத்தன ரகசியத்தை மறைச்சி வெச்சிருக்கியா நீயி... ஆமாம் நீ என்ன வேலை பாக்கற?"

தேவ்: "நான் சாப்ட்வேர் பீல்ட்ல இருக்கேன்.."

க: "டேய் யாருக்கிட்ட டக்கால்ட்டி விடற??? நீ சென்னைல ஏதோ சாய் சாந்தி தியேட்டர்ல ரீல் ஓட்ற வேலை பாக்கறதா கேள்வி பட்டேன்..."

தேவ்: "இது அநியாயம்... அக்கிரமம்..."

க: "டேய் ஓவர் சவுண்ட் விடாத... அப்பறம் கச்சேரில பாட முடியாம போயிடும்...! ஏன்டா அந்த லீ படத்த உலகத்துல பார்த்த ஒரே ஆள் நீயாதாண்டா இருப்ப?? சரி படம் எப்படினு சத்தியராஜுக்கு போன் பண்ணா, "மாம்ஸ் விஜய் டீ.வில டப்பிங் பண்ணி போட்டிருந்தான். என்னமா சண்டை போடறான் அந்த லீ பய. நம்மல மாதிரி யூத்க்கு பிடிச்ச மாதிரி பறந்து பறந்து சண்டை போடறான் மாம்ஸ். என்ன இருந்தாலும் சைனிஸ் படம் சைனிஸ் படம்தான்" அப்படினு ப்ரூஸ் லீ, ஜெட் லீ படத்த பத்தி பேசறான். அவன் மகன் நடிச்ச அவனே பார்க்க மாட்றான். அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப??."

தேவ்: "மக்கள் பாவம் கஷ்டப்பட கூடாதேனு அந்த கஷ்டத்த நான் ஏத்துக்கிட்டேன்... எங்க தல கைப்ஸ் இந்த மாதிரி பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கார்...!"

க: "வாடீ வா... இத்தன நாள் தான் அவன் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு இருந்தே? உனக்குனு எழுத சொல்லி ஒரு வாரம் கொடுத்த அதையும் என்னனா அவுட் சோர்ஸ் பண்ணிட்டு இருக்க...??

தேவ்: "நான் அவுங்களுக்குள்ள இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்துட்டு இருக்கேன்...!!"

க:"இந்த டகால்டி எல்லாம் இங்க வேண்டான்டி... முதல்ல உன் திறமைய வெளிய கொண்டா? அப்பறம் அடுத்தவங்க திறமைய வெளிய கொண்டு வரலாம்!!"

தேவ்: "நான் ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டேனு உங்களுக்கு பொறாமை..."

க: "மக்களே!!! இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆள் இல்லை... இவர் ஸ்டாராயிட்டாராம் உடனே நாலு பேர கேள்வி கேட்டு ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டாறாம். என்னுமோ ஸ்டார் டீவி ரிப்போர்ட்டர் கணக்கா பேசிட்டு இருக்கான் பாருங்க... அப்பறம் அது என்னடா பக்கம் 78, பக்கம் 102னு உன் இஷ்டத்துக்கு பேர் வெச்சிருக்க?"

தேவ்: "அதுவா... என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். அப்ப எல்லாம் தினமும் அவ வீட்டு முன்னாடி தான் சைக்கிள் எடுத்துட்டு சுத்திட்டு இருப்பேன். அதெல்லாம் ஒரு பொற்காலம்..."

க: "ஏண்டா அது பொற்காலம் மாதிரியா இருக்கு? அது ஒரு கனாக்காலம் ரேஞ்சுக்கு இருக்கேடா... அதனால தான் அதுல உன் கதை, கவுஜ எல்லாம் எழுதி பிலிம் காட்டறயா?"

தேவ்: "ஆமாம்னா... நான் அது அவளுக்காக எழுத நினைத்த கவிதைகள்... ஆனா எதுவும் கொடுக்க முடியாமலே போச்சு!!"

க: "ஓ நோ!!! உனக்குள்ள இவ்வளவு சோகம் இருக்கா??? ஆமாம் உனக்கும் இந்த சாம்பு, இரவுக்கழுகு குழுவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா பதிவுளையும் அவுங்கள பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்க?"

தேவ்: "கவுண்ட்ஸ்... அப்படியெல்லாம் இல்லை, இந்த புலிய பத்தி எல்லாம் கிசு கிசு எழுதி பெரிய ஆள் ஆக்கறாங்க. அப்படியே நம்மலையுல் எழுதினா பெரிய ஸ்டாராயிடலாம் இல்லை.. அதான் பாக்கறேன்!"

க: "இந்த சினிமாகாரவங்க தான் இப்படி கெட்டு போயிருக்காங்கனா... நீங்களுமா??? சரி தேவு.. இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடி போயிடு... அது என்ன போர் வாள்??? நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???"

தேவ்: "ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்... அது அப்படியே போர் வாளாயிடுச்சி.. இத மட்டும் வெளிய சொல்லிடாதீங்கண்ணா... நான் பெரிய லெவல்ல பில்ட் அப் கொடுத்து வெச்சிருக்கேன்..."

சொல்லிவிட்டு அடுத்த பேட்டி எடுக்க ஓடிவிடுகிறார் போர் வாள்!!!

36 comments:

இராம் said...

ஹைய்யா நாந்தான் ஃபர்ஸ்ட்....


தங்கச்சிக்கா பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

தம்பிக்காக இந்த தங்கச்சிக்கா விட்டு கொடுத்துட்டேன்..

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கூடா வாங்கிட்டு வந்தேன்.. இந்தா... :-D

சென்ஷி said...

//இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடி போயிடு... அது என்ன போர் வாள்??? நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???

தேவ் : ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்... அது அப்படியே போர் வாளாயிடுச்சி..//

இனிமே எங்க ஓடுறது :))

சென்ஷி

CHOLA said...

வெட்டி போர்வாள் தேவ் HITLAR அப்ரேசல is good

மனதின் ஓசை said...

நான் செகண்டூ..

மனதின் ஓசை said...

//அதுவா... என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். //

:-)) அடப்பாவி..இதான் காரணமா?

அந்த பிகர் பேரு ரஞ்சணிதானே?

மனதின் ஓசை said...

//ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்... அது அப்படியே போர் வாளாயிடுச்சி..//
:-)))))))

உங்கள் நண்பன் said...

//. நான் முன்னாடி தங்கிருந்த வீட்டு கக்கூஸ்ல தாழ்ப்பாள் கிடையாது... சரினு தினமும் நம்ம கச்சேரி தான்.//

தேவு உன் கச்சேரியின் தாழ்பாளுக்குப் பின்னால இவ்வளவு கதை இருக்கா?

//அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப??."
///

இது டாப்பு!

//நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???"//

எங்களின் சிற்பி(நன்றி மை ஃபிரண்ட்),சங்கத்துச் சிங்கம் தேவுவை அவமானப் படுத்தும்விதத்தில் "வெட்டி"த்தனமாக கேள்விகேட்ட பாலாஜியை கண்ணடித்து வழக்கம்போல் டீ - குடிக்கும் போராட்டம்!

அன்புடன்...
சரவணன்.

இம்சை அரசி said...

யாருப்பா அது எங்கண்ணனுக்கு டெவில் ஷோ போட்டது???

எலேய் எங்க அந்த அருவா?

தீட்டிட்டு வாங்கப்பு... :@

இராம் said...

//யாருப்பா அது எங்கண்ணனுக்கு டெவில் ஷோ போட்டது???

எலேய் எங்க அந்த அருவா?

தீட்டிட்டு வாங்கப்பு... :@///

இம்சை,

ஏன் எல்லாப்பேரும் இளநீர் வெட்டி கொடுக்க போறீங்களா????? :)

இம்சை அரசி said...

// ஏன் எல்லாப்பேரும் இளநீர் வெட்டி கொடுக்க போறீங்களா????? :)
//

தம்பி நீ ரொம்ப சின்ன புள்ளய்யா...
மணல்ல வீடு கட்டி விளயாடற உனக்கு இதெல்லாம் புரியாது. உனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரேன். சமத்தா இருக்கணும். சரியா?

இலவசக்கொத்தனார் said...

ஹிட்லரைப் பத்தி கவுண்டர் கேள்வி கேட்காததேன்?

கவுண்டருக்குக் கைப்புள்ளை சீடனா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அதற்குள் அடுத்த செட் கேள்விகளை யோசித்து வைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

குச்சி மிட்டாய் தெரியும் அது என்னங்க குருவி ரொட்டி?

Syam said...

//இவர் ஸ்டாராயிட்டாராம் உடனே நாலு பேர கேள்வி கேட்டு ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டாறாம். என்னுமோ ஸ்டார் டீவி ரிப்போர்ட்டர் கணக்கா பேசிட்டு இருக்கான் பாருங்க... அப்பறம் அது என்னடா பக்கம் 78, பக்கம் 102னு உன் இஷ்டத்துக்கு பேர் வெச்சிருக்க//

ROTFL...என்ன கவுண்டரே எங்க போர்வாள இப்படி போட்டு கலாசி இருக்கீங்க :-)

Syam said...

//அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப//

கவுண்ஸ்...எங்க போர்வாள் ஒரு சினிமா கலைஞன வளர்க்க ட்ரை பண்றார்..அத நீங்க பிளாக்ல டிக்கட் விக்கர ரேஞ்ச்சுக்கு சொல்றீங்களே :-)

Syam said...

//குச்சி மிட்டாய் தெரியும் அது என்னங்க குருவி ரொட்டி//

நானும் குருவி வெடி தான் கேள்வி பட்டு இருக்கேன் :-)

Syam said...

//அந்த பிகர் பேரு ரஞ்சணிதானே? //

அதுவும் தெரிஞ்சு போச்சா :-)

Syam said...

//"வெட்டி"த்தனமாக கேள்விகேட்ட பாலாஜியை கண்ணடித்து வழக்கம்போல் டீ - குடிக்கும் போராட்டம்!//

போராட்டத்துல கலந்துகிட்டா...மாசால் வடையும் வாங்கி தருவீங்களா...:-)

Syam said...

//ஏன் எல்லாப்பேரும் இளநீர் வெட்டி கொடுக்க போறீங்களா?????//

தங்கச்சி அப்படி கிப்படி இருந்தா தெளிவா சொல்லிடுங்க...நான் வரும் போதே இளநி ல மிக்ஸ் பண்ண கோட்டர் வாங்கிட்டு வந்துடறேன் :-)

தம்பி said...

ஏலே வெட்டி,

அடுத்தவன கலாய்க்கறதுன்னா மொத ஆளா நிப்பியே நீ!

மணிகண்டன் said...

போர்வாளை இப்படி துருப்பிடிச்ச வாளா ஆக்கிட்டிங்களே வெட்டி :)

நாகை சிவா said...

//ஏலே வெட்டி,

அடுத்தவன கலாய்க்கறதுன்னா மொத ஆளா நிப்பியே நீ! //

வந்துட்டுரார் புத்தி சொல்ல.... போய்ய்யா போ....

நாகை சிவா said...

// அப்படியெல்லாம் இல்லை, இந்த புலிய பத்தி எல்லாம் கிசு கிசு எழுதி பெரிய ஆள் ஆக்கறாங்க. //

இன்னமுமா இந்த கொல வெறி....

கோபிநாத் said...

\\தம்பி said...
ஏலே வெட்டி,

அடுத்தவன கலாய்க்கறதுன்னா மொத ஆளா நிப்பியே நீ!\\

அடுத்தவன் கிட்ட அடிவாங்குறதுக்குன்னே முத ஆளா இருக்கியே நீ ;-)

கோபிநாத் said...

\\சொல்லிவிட்டு அடுத்த பேட்டி எடுக்க ஓடிவிடுகிறார் போர் வாள்!!!\\

போர்வாளை இப்படி ஒட வச்சிட்டியே கவுண்டரே ;-)))

இம்சை அரசி said...

// தங்கச்சி அப்படி கிப்படி இருந்தா தெளிவா சொல்லிடுங்க...நான் வரும் போதே இளநி ல மிக்ஸ் பண்ண கோட்டர் வாங்கிட்டு வந்துடறேன் :-)
//

தங்கச்சிக்கிட்ட பேசற பேச்சா இது??? :@

இன்னும் மத்துக்கட்டைல வாங்குனதே சரியாவுல. அடுத்து பூரிக்கட்டைக்கு ரெடியா? காப்பாத்த நான் வர மாட்டேன்பா...

இம்சை அரசி said...

// கோபிநாத் said...
\\தம்பி said...
ஏலே வெட்டி,

அடுத்தவன கலாய்க்கறதுன்னா மொத ஆளா நிப்பியே நீ!\\

அடுத்தவன் கிட்ட அடிவாங்குறதுக்குன்னே முத ஆளா இருக்கியே நீ ;-)
//

ஹி... ஹி...

ரிப்பீட்டே...

தம்பி said...

இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் ஏம்பா எல்லாரும் எம்மேல கொலவெறில சுத்திகிட்டு இருக்கிங்க.

ஏம்மா இம்சை அரசி.

எம்மேல உனக்கு என்னம்மா அம்புட்டு கோவம்????? அதுவும் ரிப்பீட்டு கேக்குற அளவுக்கு???

இராம் said...

//தங்கச்சிக்கிட்ட பேசற பேச்சா இது??? :@//


இம்சையக்கோவ்,

ஏன் ஏன்... அவரு பேசுனதிலே என்ன தப்பு இருக்கு??? நமக்கு ஒன்னு வேணுமின்னா கேட்டு வாங்கிக்கலாமின்னு பெரியவங்களே சொல்லிருக்காங்க.... அந்த வகையிலே எங்களுக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கி விரும்பி சாப்பிட்டுக்கிறோம்...

12B,

Next time இந்தியா வர்ற்போ அந்த பாகார்டியை வாங்கிட்டு வாங்க... அதுக்கும் இங்கே கிடைக்கிறதுக்கும் என்ன வித்தியாசமின்னு பார்க்கனும் ஹி ஹி

//இன்னும் மத்துக்கட்டைல வாங்குனதே சரியாவுல. அடுத்து பூரிக்கட்டைக்கு ரெடியா? காப்பாத்த நான் வர மாட்டேன்பா...//


என்னமோ எப்பவோ விழுறமாதிரி பேசுறீங்க....??? இதெல்லாம் அடி அடின்னு வாங்கி இரும்பா போன ஒடம்பு தாயி.....

அடிக்கெல்லாம் அசருவோமா நாங்க???

இராம் said...

//இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் ஏம்பா எல்லாரும் எம்மேல கொலவெறில சுத்திகிட்டு இருக்கிங்க.//

கதிரு நீ வேற அழகா இருக்கேலே... அதுதாம்லே எல்லாரும் ஒம்மேலே பொறமை பட்டு இப்பிடியெல்லாம் பண்ணுறாங்க :)


//ஏம்மா இம்சை அரசி.

எம்மேல உனக்கு என்னம்மா அம்புட்டு கோவம்????? அதுவும் ரிப்பீட்டு கேக்குற அளவுக்கு???///

எனக்குன்னு அவங்க வாங்கிட்டு வந்த குச்சிமிட்டாயும். குருவி ரொட்டியையும் நீ எடுத்து தின்னுட்டேலே?? அதுக்கு தாமேலே அவக கோவப்படுறாங்க :)

நாகை சிவா said...

//இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் ஏம்பா எல்லாரும் எம்மேல கொலவெறில சுத்திகிட்டு இருக்கிங்க.//

கொடுத்த வாக்கை காப்பாற்ற தெரியாத நீ எல்லாம்.... உன்னய எல்லாம்.....

Syam said...

//என்னமோ எப்பவோ விழுறமாதிரி பேசுறீங்க....??? இதெல்லாம் அடி அடின்னு வாங்கி இரும்பா போன ஒடம்பு தாயி.....

அடிக்கெல்லாம் அசருவோமா நாங்க//

அதான நம்ம தல எவ்வளோ ட்ரெயினிங் குடுத்து இருக்கார்....:-)

தம்பி said...

//கொடுத்த வாக்கை காப்பாற்ற தெரியாத நீ எல்லாம்.... உன்னய எல்லாம்.....//

நான் எப்ப வாக்கு குடுத்தேன். சரி அப்படியே குடுத்திருந்தாலும் அத ஏன்லே குருட்டுத்தனமா நம்பிகிட்டு இருக்க?

உன்னய எல்லாம்_______
சரி ஓடி போ.

நாகை சிவா said...

//நான் எப்ப வாக்கு குடுத்தேன்.//

வெட்டி கேட்டுக்கோ... இவனுக்கு போய் நீ பரிதாபப்பட்டியே... :-((

// சரி அப்படியே குடுத்திருந்தாலும் அத ஏன்லே குருட்டுத்தனமா நம்பிகிட்டு இருக்க? //

இதற்கு காலம் பதில் சொல்லும்.

ஜொள்ளுப்பாண்டி said...

//அதுவா... என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். அப்ப எல்லாம் தினமும் அவ வீட்டு முன்னாடி தான் சைக்கிள் எடுத்துட்டு சுத்திட்டு இருப்பேன். அதெல்லாம் ஒரு பொற்காலம்..."//

தேவு நெசாமட்த்தேன் சொல்லுறியாவே?? :))))))) அட அட அட அது ஒரு கனாகாலமா??;)))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//தேவ்: "ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்... அது அப்படியே போர் வாளாயிடுச்சி.. இத மட்டும் வெளிய சொல்லிடாதீங்கண்ணா... நான் பெரிய லெவல்ல பில்ட் அப் கொடுத்து வெச்சிருக்கேன்..."//

:)))))))))))))))))))) அடக்கூத்தே !! தேவு பயபுள்ள இந்த ரேஞ்சுக்கு ஓட்டி இருகானே !! வேற வழியே இல்லை சீக்கிரம் சரவணா ஸ்ட்டோர்ஸில் சகாய விலையில ஏதாசும் வாள் கெடைகுதான்னு பாக்குறேன் சரியா ?? :))))))))))))