Thursday, August 16, 2007

சிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMER

விவாஜி உருவான கதையை உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்... விவாஜி படத்துல்ல பாடல்கள் பட்டயக் கிளப்ப போறது உறுதி.. ஏன்னா படத்துல்ல பாட்டு எழுதப் போறது நம்ம கன்னாபின்னா கவிசாம்ராட் சிபி அவர்கள்.. சிபியார் ரெண்டு பாட்டு எழுதுறார்.. மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களிடமும், கவிதாயினி விமர்சன வித்தகி காயத்ரி அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. இது தவிர சின்னத் தல ராமும் மதுரை தேனி மெயின் ரோட்டுல்ல ஒரு புளிய மரத்தடியிலே நின்டுகிட்டே ஒரு முக்கிய பாடலுக்கான வரிகளை யோசிச்சிட்டு இருக்கார்ங்கறதையும் சொல்லிடுறேன்...

கவிஞர்கள் எல்லாம் கதைக் கேக்க கிளம்பி வந்தாங்க... போன தடவை விட்ட இடத்திலே இருந்து அவங்க கிட்டக் கதையைச் சொன்னேன்.. நீங்களும் கேளுங்க.. வெட்டிகாரு கிட்ட சவால் விட்டுட்டு வெளியே வர்ற சிவாஜி கிட்ட அவர் கம்பெனி சீனியர்ஸ் ஒரு முக்கியமான புரொஜக்ட் தர்றாங்க... அதுக்கு ரொம்ப முக்கியமான ரெக்ரூட்மெண்ட் அசைன்மென்ட் விவாஜி மற்றும் சிபி கிட்டக் கொடுக்குறாங்க

ரெக்ரூண்ட்மெண்டுக்கு உலக அளவில் இருந்து பெண்கள் கூட்டம் குவிகிறது.. க்யூ கட்டி நிற்கிறார்கள்... விவாஜி அவங்களை எல்லாம் பாத்து மலைச்சு நிக்குறார்...
ஹேய் விவ் வி லவ் யூ என்று பல குரல்கள் கேட்கின்றன...

"யோவ் அனானி.. இங்கே என்னய்யா நடக்குது?"

"விவாஜி நீ ஸ்டார்ட் பண்ணப் போற ஆன் லைன் அக்ரி கல்சுர் புராஜக்ட்க்கு ஆல் கல்சுர் கேர்ஸ் ஆன் லைன்ல்ல நிக்குறாங்க நீ ஓ,கே சொல்லுற பொண்ணுக்கு ஓடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணிட்டாப் போச்சி.. கமான் சூஸ் த கேண்டிடேட்."

"எஸ் விவாஜி.. உங்க அக்ரிகல்சுர் புரொஜக்ட் சொன்ன ஓடனே.. சும்மா அப்ளிகேஷன் ஸ் குவிஞ்சுப் போச்சு... என்னச் சொல்லுறீங்க" கோவியார் சொல்ல

"உங்க சாய்ஸ் விவாஜி" அப்படின்னு பெனத்தாலாரும் சொல்ல

"அய்யா..இது அக்ரி கல்சுர் புரொஜ்கட்.. எனக்கு வேண்டிய கல்சுர் டமில் கல்சுர்..சுத்தமானத் தமிழ்ல்ல கடலைப் போடத் தெரிஞ்சப் பொண்ணு... எஸ்.எம்.எஸ், மெயில், சேட்டிங்ன்னு எல்லாத்துல்லயும் தமிழ் தட்டும் பெண்"

"தமிழ் தட்டும் பெண்...ம்ம்ம்.... தல பாலா.... கேக்குதா விவாஜி விடுற சவுண்ட்... நீ தான் வந்து பதில் சொல்லணும் இதுக்கு" சிபி கிடைச்சக் கேப்பில் கிடா வெட்டுகிறார்,

இங்கே ஒரு பாட்டு வேணும் அப்படின்னு சிபி கிட்டச் சொல்லுறேன்.. அவர் நோட் பண்ணிக்குறார்.அடுத்தாப்புல்ல... நம்ம விவாஜி தன் கடலைச் சேவையை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு கூற வழி தேடுகிறார்.. தமிழ் பதிவு வளர்ச்சி குறித்த விசயம் என்பதால் பேராசிரியர் தருமி அய்யாவைப் பார்த்துப் பேசும் படி அனுப்பி வைக்கிறார்கள்.. விவாஜியின் அதி ஆர்வமான புராஜக்ட் பற்றி கேட்டறியும் தருமி அய்யாவும் தன்னுடைய மாணவனைப் பார்த்து மேற்கொண்டு பேசும் படி விவாஜியிடம் சொல்லுகிறார்...மாணவனும் மாலையில் மதுரை தல்லாகுளம் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் படி சொல்லுகிறான் அங்கே அனைத்தையும் தெளிய தெளியப் பேசலாம் என்று சொல்லி அனுப்புகிறான்.

"ம்ம்ம் நீங்க பாரின்ல்ல இருந்து தானே வர்றீங்க... வரும் போது உங்க கூட வெள்ளைக்கார பிகர் எதாவது வந்து இருக்குமே....சாயங்காலம் வரும் போது முடிஞ்சா"

"டேய் இதெல்லாம் ஓவர்..." அப்படின்னு சிபி பொங்கும் போது

"இல்லைண்ணே அந்தப் பிகர் மெயில் ஐடி.. சேட் ஐடி அப்படி எதாவது கொண்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்"

"ஏனுங்க ஆபிசர் இப்போ உள்ளூர் பிகர் கூட எல்லாம் நீங்க கடலைப் போடறதை நிறுத்திட்டீங்களா"

"இல்லைண்ணே.. உள்ளூர்ல்ல ஒருத்தியும் சேட் எல்லாம் பண்ணுறதில்லைண்ணே... எல்.கே.ஜியிலே சேட்டிங் எல்லாம் முடிஞ்சுப் போயிருதுண்ணே.. என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப் போயிறாளுங்கண்ணே.."

அந்த மாணவர் யார்ன்னு உங்களுக்கெல்லாம் சொல்லணுமா என்ன? ஆங் அவரே தான் இவரு...சாயங்காலம் ஜிகர்தண்டாவை கலக்கி குடித்து விட்டு.. கொத்து பரோட்டாவுக்குச் சொல்லிவிட்டு

"விவாஜி சார்.. உங்கப் பதிவு மூலமா கடலைப் போடுற புராஜக்ட அவ்வளவு லேசான விசயம் இல்ல...புதுசா பதிவு போடணும்.. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணணும்.. சுமார் 720 லைன் கோடு எழுதணும்... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணனும்.. 300 விட்ஜிட் வைக்கணும்... 200 லிங்க் கொடுக்கணும்... 100 இடத்துல்ல டேக் பண்ணனும்.. 10 திரட்டியிலே சேர்க்கணும்... 5 சங்கத்துல்ல சேர்க்கணும்.. கும்மி அடிக்கணும்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கணும்... இதுக்கெல்லாம் மொத்தமா ஏற்பாடு பண்ணனும்.. "

"சின்னத் தல சார் நீங்க தான் அதுக்கெல்லாம் எப்படியாவது ஏற்பாடு பண்ணணும் சார்?"

"பண்ணிரலாம்.. இந்தப் பதிவு மூலமா எவ்வளவு கடலை போடலாம்ன்னும் இருக்கீங்க...?"

"ஒரு நாலாயிரம் கடலை"

"அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நாப்பது கடலையை எனக்குக் கொடுத்துருங்க... உங்க வேலையை நான் முடிச்சுத் தந்துடுறேன்"

"உனக்கு எதுக்கு நான் கடலைத் தரணும்... நான் என்ன வங்கக் கடலை விலைக்கு வாங்கவா உன் பர்மிஷன் கேட்டேன்... ஏழைத் தமிழ் மக்கள் கடலைப் போடுறதுக்கய்யா...." விவாஜி பொங்கி எழுகிறார்.

"அண்ணே நீங்க ப்ரீயா கடலைப் போடுங்கண்ணே... போடச் சொல்லிக் கொடுங்கண்ணே.. நான் எல்லாம் இப்படி உங்க தயவுல்ல போட்டாத் தான்னே உண்டு..."

"அனானி.. அவன் கிட்ட கொடுத்த அந்த பாரின் பிகர் மெயில் ஐடியைத் திருப்பி வாங்குப்பா"

"இந்தாங்கண்ணே.. நீங்களே வச்சுக்கங்க... நான் ஆல் ரெடி அவங்களுக்கு என் லேப் டாப்புல்ல இருந்து ஏ.எஸ்.எல் ப்ளீஸ் அனுப்பிட்டேனே..."

"அட கண்றாவியே... இம்புட்டு வறண்ட தேசமாடா நீயு... போடா" என்று புறப்படுகிறார் விவாஜி.."

அடுத்து விவாஜி ஒவ்வொரு இடமாக அலைகிறார்..

"உங்களுக்கு தமிழ் டைப்பிங் தெரியுமா?"

"உங்க ப்ரவுசர் தமிழ் பாண்ட் சப்போர்ட் பண்ணாது போலிருக்கே"
"உங்க இன்டநெட் கனெக்ஷ்ன் சரியில்ல"

"உங்க கீ போர்ட்ல்ல கீ எல்லாம் சரி இல்ல"

"உங்களுக்கு HTML தெரியுமா? எதுக்கும் ஒரு கோர்ஸ் போயிருங்க..."

"உங்க பிளாக் டெம்ளெட் சரியாத் தெரியல்லயே"

"உங்க டெம்ளெட் இந்த விஜிட் எல்லாம் சப்போர்ட் பண்ணாது..எப்படி சேர்த்தீங்க?"

"ம்ம்ம் இந்தப் பதிவைத் திரட்டியிலே சேர்க்க நீங்க இந்தக் கோட் சேர்க்கணுமே"

விவாஜி ஒரு பதிவு இடுவதில் இருக்கும் மொத்தக் குழப்பங்களையும் கண்டு வெதும்பி நொந்து நூலாகி மறுபடியும் தல்லாக்குளம் பஸ் ஸ்டாண்டுக்கே வருகிறார்...

அங்கு மீண்டு நம்ம மாணவன் விவாஜியைச் சந்திக்கிறார்...விவாஜி செலவில் அங்கு போண்டாக்களும் இடலி வடைகளும் பரிமாறப் படுகிறது...அவர் செலவில் செமக் கட்டு கட்டும் வ.வா.சங்கம் சார்ந்த பதிவர்கள்... விவாஜிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து பதிவு போட உதவி செய்கின்றனர்...

ஒரு பதிவு போட இவ்வளவு பாடு படணுமா? யோசிக்கிறார் விவாஜி...


அவருக்குப் பின்னால் வேளாண் தமிழன் விவாஜி ஆன் லைன் கடலை கல்வி மையம்.காம் மெல்ல கிராபிக்ஸ்ல் உதயமாகிறது...


விவாஜியின் பதிவு உதயம் ஆகும் செய்தி புலி மூலம் வெட்டியை எட்டுகிறது..
ஆனா இதுப் பத்தி எல்லாம் கவலைப் படாமல் நம்ம விவாஜி தன்னுடைய புராஜக்ட் ரெக்ரூமெண்ட் விசயமா பெங்க்ளூர் காலேஜ்க்கு பயணமாப் போறார்....


விவாஜியின் கதை இன்னும் வரும்....

8 comments:

வெங்கட்ராமன் said...

***************************
விவாஜி சார்.. உங்கப் பதிவு மூலமா கடலைப் போடுற புராஜக்ட அவ்வளவு லேசான விசயம் இல்ல...புதுசா பதிவு போடணும்.. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணணும்.. சுமார் 720 லைன் கோடு எழுதணும்... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணனும்.. 300 விட்ஜிட் வைக்கணும்... 200 லிங்க் கொடுக்கணும்... 100 இடத்துல்ல டேக் பண்ணனும்.. 10 திரட்டியிலே சேர்க்கணும்... 5 சங்கத்துல்ல சேர்க்கணும்.. கும்மி அடிக்கணும்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கணும்... இதுக்கெல்லாம் மொத்தமா ஏற்பாடு பண்ணனும்.. "
***************************

வாய்ப்பே இல்ல. . . .
தல செம ரெகளையா போயிகிட்டு இருக்கு.

ஞாயித்துக்கிழமை சிவாஜி 4வது தடவையா போகப்போறேன். . . . .

ஒவ்வொரு சீன் பார்க்கும் போதும் விவாஜி ஞாபகம் தான் வரப் போகுது. . . .

அடுத்த பதிவுக்கு வெயிட்டிங். . . .

ILA (a) இளா said...

//என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப் போயிறாளுங்கண்ணே.."//
அல்டிமேட்.

Anonymous said...

//மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களிடமும், கவிதாயினி விமர்சன வித்தகி காயத்ரி அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. ///

அவ்ளோதானா இன்னும் இருக்கா?

CVR said...

சூப்பரு!!!!
கலக்குங்க!!! :-D

இராம்/Raam said...

அட்டகாசம்..... :)))

G.Ragavan said...

ஹா ஹா ஹா..கலக்கல். கலக்கல்.

அது சரி..நான் எழுதுன "ஜொள்ளே கடலைவண்ணா" என்ற சங்கப் பாடலை...ஆடியோ சிடியில் மட்டும் போட்டுட்டு படத்துல வெட்டீட்டீங்களே! :(

A Simple Man said...

//ஒரு நாலாயிரம் கடலை"
"அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நாப்பது கடலையை எனக்குக் கொடுத்துருங்க...///

கணக்குல கரெக்டா இருக்கணும்..4000 ல‌ 2% 80 க‌ட‌லை :-))

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம், திடீருனு எப்படி காமெடிலே பிச்சு உதற ஆரம்பிச்சுட்டீங்க? வேதாளம் புகுந்திடுச்சோ? :P