Friday, August 31, 2007

வ.வா.சங்கத்துக்குப் போட்டியா ச.சா.சங்கம்!

தங்கங்களே! நாளைய தலைவர்களே!
தங்கங்களே! சங்கத்துச் சிங்கங்களே!
அட்லாஸ் மாசம் இன்னியோட முடியுது! உத்தரவு வாங்கிக்கறேன்!

எனக்கு பள்ளிக் கூடத்துலேயே அட்லாஸ்-ன்னா பயம்!
எங்கேயோ ரோமாபுரியில் இருக்குற ஒரு குக்கிராமத்தை, அட்லாஸ்ல எந்தப் பக்கத்துக்குப் போயித் தேடிக் கண்டுபுடிக்கறதுன்னு ஒரு பயம் வந்துடும்!
வீட்டில் என்றால் பையத் தேடிக்கலாம்! ஆனாப் பள்ளியில் இந்த ஷீலா மிஸ் இருந்தாங்க பாருங்க!
ச்சே...ரொம்ப மோசம்! ஒத்தை மல்லிப்பூ வச்சிக்கிட்டு ரொம்ப அழகா வருவாங்க. கொஞ்சம் கொஞ்சம் சிம்ரன் லுக்!

அவங்க எப்பமே என்னையத் தான் வகுப்பில் பதில் சொல்லச் சொல்லுவாங்க! அதுவும் போர்டில் தொங்கும் ஒரு பெரிய அட்லாஸ் மேப்பில் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லுவாய்ங்க!
க்ளாஸ் பொண்ணுங்க முன்னாடி போர்டுக்குப் போயித் தேடணும்!
சில சமயம் டக்குன்னு ஊரு அகப்படாது! மேப்பில் தடவு தடவுன்னு தடவறது பார்த்து, ஆல் கேர்ள்ஸ் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாய்ங்க! அய்யோடா சாமீ! :-)

ஆனா இந்த வ.வா.ச அட்லாஸ்-ல அந்த மாதிரிப் ப்ரச்சினை எல்லாம் எதுவும் இல்லப்பா! ஜூப்பரா இருந்திச்சு! :-))
மாதவிப் பந்தல் பதிவெல்லாம் அரை மணி, ஒரு மணியில் எழுதிடலாம்!
இது போல் வாய் விட்டுச் சிரிக்கும் பதிவு எழுதத் தானுங்கண்ணா பெண்டு கழன்டிடுச்சு! :-))
நீங்க எல்லாம் எப்படித் தான் அசால்டா வெளுத்து வாங்கறீங்களோ!
சரி பிஸ்துங்க, நம்ம சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம்! - நன்றி! நன்றி!

ஒங்க அன்புக்கும் ஆதரவுக்கும் வெறுமனே "நன்றி"-ன்னு மட்டும் சொல்லிட்டுப் போக முடியுமா? அதான் என்னால முடிஞ்ச ஒரு கைங்கர்யம்!
ஒரு போட்டிச் சங்கம்! தொடங்கியாச்சு!
ச.சா.சங்கம்! - ஆன்மீகப் பதிவர்களுக்கு 0.33% ரிசர்வேசன் உண்டு! :-)

சங்கத்தின் முதல் உறுப்பினர், நீதிபதி பாஸ்டன் பாலாஜி! (snapjudge ப்பா) !
இவர் ஒரு ஆண்மீகப் புயல்! ஆண்மீகத் தல! எப்படின்னு கேக்கறீங்களா?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பத்தி என்னமா ஒரு போஸ்ட் போட்டாரு! அவரை முதல் உறுப்பினராக அடைவதில் சங்கம் பெருமை கொள்கிறது!

சங்கத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்,
கொள்கை பரப்புச் செயலாளர் (பெண்கள் மட்டுமே!),
மற்றும் மாவட்டம், வட்டம் - எல்லாப் பதவிகளும் நிரப்பப் படாமல் உள்ளது! பின்னூட்டத்தில் விண்ணப்பம் செய்யுங்கள்! உடனே சிங்கிள் விண்டோவில் வழங்கப்படும்!
சங்கத்தின் நிரந்தர முதல்வர் பதவிக்கு மட்டும் யாரும் விண்ணப்பம் செய்ய வேண்டாம்! அது எங்கள் ஜிரா அண்ணனுக்கு மட்டுமே! மட்டுமே!! மட்டுமே!!!


எல்லாம் சரி...அது என்னடா அது ச.சா.சங்கம்?
சபலப்"படாத" சாமியார்கள் சங்கம்! ச்ச்சே....இல்லை இல்லை!!

சபலப்படும் சாமியார்கள் சங்கம்!
ச.சா.ச! வாழ்க! வாழ்க!!


எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும்!!!40 comments:

வெட்டிப்பயல் said...

சங்கத்தில் வந்து பட்டையை கிளப்பியதற்கு எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்...

இந்த மாசம் படு சூப்பரா போச்சு...

வல்லிசிம்ஹன் said...

VaazhthukkaL Ravi.

sa.saa.sa isaiyodu vaazhavum vaazththukkaL.:))

ILA(a)இளா said...

ரொம்ப நன்றிங்க KRS, காவியடிச்சு எங்களை மாத்திருவீங்களோன்னு பயந்துட்டோம். நல்லபடியா ஆகலை.

வல்லிசிம்ஹன் said...

sa.saa.sa vila saamiyaaraap ponappuRam seraNumaa.:))

மதுரையம்பதி said...

கடந்த 8 மாதங்களில் மிக அருமையான வா.வா.சங்க பதிவுகளை தந்த அட்லாஸ் வாலிபர், எங்கள் தங்கம் ஆ.சி. சித்தரே...நன்றி.

வாழ்க ஆ.சி. சித்தர்.. வளர்க ஆ.சி. சித்தர் புகழ்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
சங்கத்தில் வந்து பட்டையை கிளப்பியதற்கு எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்...
இந்த மாசம் படு சூப்பரா போச்சு...//

தெய்வமே!
நன்றி கலந்த வணக்கமா? வணக்கத்துல எதுக்கு நன்றியைக் கலந்து கலப்படம் பண்ணறீங்க? :-))

நான் தாங்க ஒங்களுக்குச் சொல்லணும் - நன்றி, வணக்கம் ரெண்டுமே!! டா டா பை பை, பாலாஜி அண்ணா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
VaazhthukkaL Ravi.
sa.saa.sa isaiyodu vaazhavum vaazththukkaL.:)) //

நன்றி வல்லியம்மா!
இசையோடு வாழ சசாச-வில் உங்க இசைக் கச்சேரி தான் ஏற்பாடு செய்யப் போறோம்!

//sa.saa.sa vila saamiyaaraap ponappuRam seraNumaa.:)) //

கிடையவே கிடையாது!
சாமியரா எல்லாம் போயிடக் கூடாதே-னு நினைக்கறவங்க எல்லாமே சேரலாம்! சேரணும்! :-))
மெம்பர்ஷிப் ரெப்ரசன்டேட்டிவ் ஆக ஜெனிலியாவும், இலியானாவும், பாவனாவும், அனுக்ஷாவும் வளைய வருவாங்க!
ஃபார்ம் ஃபில் பண்ணிக் கொடுத்துடுங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ILA(a)இளா said...
ரொம்ப நன்றிங்க KRS, காவியடிச்சு எங்களை மாத்திருவீங்களோன்னு பயந்துட்டோம். நல்லபடியா ஆகலை//

நன்றி தல!
காவிய ஒங்களுக்குத் தனியா அடிக்கலாம்! கவலைய வுடுங்க!
தலைவர் கைப்புவின் அருளாசியோடு காவி என்னா, வேப்பிலை கூட அடிக்கலாமே! :-)))

இலவசக்கொத்தனார் said...

//இவர் ஒரு ஆண்மீகப் புயல்! ஆண்மீகத் தல! //

ஆண் புயல், ஆண் தல அப்படின்னு சொல்லி பாபாவை யாரு கிட்ட போட்டுக் குடுக்கறீங்கன்னு தெரியும். அவரு மேல உமக்கு என்னய்யா அப்படி ஆத்திரம்?

அடுத்த பட்டறையில் நாம எல்லாம் காவி டீஷர்ட் போட்டுக்கிட்டு பட்டையைக் கிளப்பிடுவோமா?

CVR said...

உங்களுக்கு ஏத்த சங்கம் தான் அண்ணா!!
உங்களையும் சேத்து மத்த பதிவர்களையும் சங்கம் போட்டு கெடுக்கறீங்களா??
:-P

ILA(a)இளா said...

//மங்களம் உண்டாகட்டும்!!//
எஸ் வி சேகர் நாடகம்தான் ஞாபகத்துக்கு வருது

Boston Bala said...

'தினகப்ஸா' ஸ்கூப் நியூஸ்:

சஞ்சலப்படும் சனங்கள் சங்கள் இளைஞரணித் தலைவராக இருந்தவர் 'ச(ம்)சா(ர).ச.' என்று போட்டி சங்கம் ஆரம்பித்தார்

Boston Bala said...

---எப்படின்னு கேக்கறீங்களா?---

அமெரிக்காவில் வண்டியோட்டற சைடில் இருக்கும் (அதிகம் பார்வையிடப்பட்ட) மேட்டர்களை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு வரக்கூடாது...

அவதூறு வாழக்காய் இட்டுடுவேன்னு பயமுறுத்திக்கறேன்

G.Ragavan said...

சசா சங்கமா? என்னைய ஏய்யா சாமியார் ஆக்கப் பாக்கீரு? கள்ளியிலும் பால் எழுதுறவனுக்குஞ் சாமியார் மடத்துக்கும் என்னய்யா தொடர்பு?

எல்லாரும் ஒங்கள ரொம்பப் பாராட்டுறாங்க. நானும் பாராட்டலைன்னா...ஏதோ பொறாமைல பாராட்டாம இருக்கேன்னு உண்மையப் பேசுவாங்க. அதுக்காகவாவது பாராட்டுறேன். நல்லாருந்துச்சு ஒங்க அட்டுலாசு மாதம். மொத்தத்துல at loss வாலிபரா இல்லாம atlas மாத வாலிபரா(!) இருந்து கலக்கீருக்கீங்க. பாராட்டுகள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
கடந்த 8 மாதங்களில் மிக அருமையான வா.வா.சங்க பதிவுகளை தந்த அட்லாஸ் வாலிபர், எங்கள் தங்கம் ஆ.சி. சித்தரே...//

மெளலி சார், நன்றி.
என்ன சொல்றீங்க? கடந்த எட்டு மாசமா வவாச பதிவுகளைத் தந்தேனா? ஒரு மாசம் தாங்க அட்லாஸ் எல்லாம்!

எட்டு மாசம்னா, அப்பறம் போலி-ன்னு யாராச்சும் கிளப்பி விடப் போறாங்க! ஆன்மிகப் போலின்னு டெவில் ஷோ போட்டதுக்கு அடியேனுக்கு இந்தத் தண்டனையா? :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
//இவர் ஒரு ஆண்மீகப் புயல்! ஆண்மீகத் தல! //

ஆண் புயல், ஆண் தல அப்படின்னு சொல்லி பாபாவை யாரு கிட்ட போட்டுக் குடுக்கறீங்கன்னு தெரியும். அவரு மேல உமக்கு என்னய்யா அப்படி ஆத்திரம்?//

அய்யகோ சாமீ...
ஒரு னகரம் ணகரமாயிடுச்சு! ஸ்பெள்ளிங்கு மிஷ்டேக்கு!:-))
அதுக்காக இப்படியா?

பாபா மேல் எனக்கென்ன ஆத்திரம்? அவரின் திறத்தைக் கண்டு, "ஆ, திறம்" என்று தான் சொல்லியிருக்கேன்! :-)))

//அடுத்த பட்டறையில் நாம எல்லாம் காவி டீஷர்ட் போட்டுக்கிட்டு பட்டையைக் கிளப்பிடுவோமா?//

சூப்பர் ஐடியா!
காவிகள் கட்டிய பாவிகள்-ன்னு தலைப்பும் வச்சிடலாம்! :-)

சரி...காவி டீ சர்ட்டுக்கு மேட்சிங்கா என்னா கலர் ஜீன்ஸ் கொத்தனாரே? பச்சையா? :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// CVR said...
உங்களுக்கு ஏத்த சங்கம் தான் அண்ணா!!//

எத வச்சி சொல்றீங்க மச்சி? :-)

//உங்களையும் சேத்து மத்த பதிவர்களையும் சங்கம் போட்டு கெடுக்கறீங்களா??//

கொ.ப.செ வா பாவனாவை தேர்ந்தெடுத்தா, இதே CVR ஓடியாந்து, ச.சா. சங்கத்தை வாழ்த்துவாரு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// ILA(a)இளா said...
//மங்களம் உண்டாகட்டும்!!//
எஸ் வி சேகர் நாடகம்தான் ஞாபகத்துக்கு வருது//

ஹிஹி!
உண்டாகட்டும்! உண்டாகட்டும்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Boston Bala said...
'தினகப்ஸா' ஸ்கூப் நியூஸ்:

சஞ்சலப்படும் சனங்கள் சங்கள் இளைஞரணித் தலைவராக இருந்தவர் 'ச(ம்)சா(ர).ச.' என்று போட்டி சங்கம் ஆரம்பித்தார்//

ஆகா
இது தான் Read Between the Words (RBW) என்பதா?
யப்ப்பா சாமீ...

'ச(ம்)சா(ர).ச." = சம்சாரச் சங்கம்!
நல்லா இருக்குங்க நீதியரசர் பாபா அவர்களே! நல்லா இருக்கு! நல்லா இருங்க! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Boston Bala said...
---எப்படின்னு கேக்கறீங்களா?---
அமெரிக்காவில் வண்டியோட்டற சைடில் இருக்கும் (அதிகம் பார்வையிடப்பட்ட) மேட்டர்களை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு வரக்கூடாது...//

ஹூம்!
வண்டி ஓட்டற சைடைப் பாத்து முடிவுக்கு வரல பாபா!
வண்டி ஓட்டற சைட்டைப் பாத்து தான் முடிவுக்கு வந்தோம்! :-)))

//அவதூறு வாழக்காய் இட்டுடுவேன்னு பயமுறுத்திக்கறேன்//

ஆகா, இது வேறயா?
நமக்கு வாழக்கா-னாலே புடிக்காது! வாழை இலை தான் புடிக்கும்! :-))
வாழக்கா, வாழக்கா, வாழ்க அக்கா! வாழ்க அக்கா!

கீதா சாம்பசிவம் said...

தலைவின்னா வரேன், நீங்க ரெடிமேடா தலைமைப் பதவிக்கு ஆளை வச்சாச்சே, அதனாலே யோசிக்கணும். :P

மதுரையம்பதி said...

நான் சொல்ல வந்தது, 8 மாதங்களில் கடந்த 1 மாதம் நான் மிகவும் இரசித்த பதிவுகளை நீங்க தந்திங்க அப்படிங்கறதுதான்......

ramachandranusha(உஷா) said...

வல்லி.கீதா! வயசானாலும் இபப்டி அறியா புள்ளைகளா இருக்கீங்களே :-( எதுக்கு வம்பு நாம தனியா ஒரு சங்கம் ஆரம்பிச்சிடுவோம்:-))))

கண்ணப்பிரான் சூப்பர் வாரம். இவ்வளவு நகைச்சுவையாய் எழுதுவீங்கன்னு நான் எதிர்ப்பாக்கவே இல்லை. அப்ப அப்ப
மாதவி பந்தலிலும் இப்படி எழுதி, ஞாபகமாய் இது ஆன்மீக பதிவு இல்லைன்னு போர்ட் போட்டுடுங்க. அப்பத்தான் நாங்க வர
செளகரியமாய் இருக்கும் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
சசா சங்கமா? என்னைய ஏய்யா சாமியார் ஆக்கப் பாக்கீரு?//

யோவ்...சபலப் படும் சாமி தானே நீரு! கொட்டற மழையில் நீங்க நனைஞ்சிக்கிட்டே பைக் ஓட்டும் குறிப்பு என்னான்னு அதான் எனக்குத் தெரியுமே உம்மைப் பத்தி! :-))

//கள்ளியிலும் பால் எழுதுறவனுக்குஞ் சாமியார் மடத்துக்கும் என்னய்யா தொடர்பு?//

நிறையவே தொடர்பு இருக்கு ஜிரா!
கள்ளியிலும் பால் இருக்கா மாதிரி,
சந்நியாசியிலும் சம்சாரம் இருக்கு!

//எல்லாரும் ஒங்கள ரொம்பப் பாராட்டுறாங்க. நானும் பாராட்டலைன்னா...ஏதோ பொறாமைல பாராட்டாம இருக்கேன்னு உண்மையப் பேசுவாங்க.//

ஹிஹி! நீங்க என்னைப் பாத்து பொறாமைப் படறது உண்மையா?
இது எப்படி இருக்குன்னா முத்தமிழ் குழந்தையின் மழலைப் பேத்தலைப் பாத்து...மழலையே உன் மேல் பொறாமை-ன்னு சொல்லுறாப் போல இருக்கு! :-))

//அதுக்காகவாவது பாராட்டுறேன். நல்லாருந்துச்சு ஒங்க அட்டுலாசு மாதம். மொத்தத்துல at loss வாலிபரா இல்லாம atlas மாத வாலிபரா(!) இருந்து கலக்கீருக்கீங்க. பாராட்டுகள்.//

ஹைய்யோ! ஜிரா வாயால இப்படி ஒரு பாராட்டா!
ஆஆஆ...ஆத்தா நான் பாஸாயிட்டேன்! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
தலைவின்னா வரேன், நீங்க ரெடிமேடா தலைமைப் பதவிக்கு ஆளை வச்சாச்சே, அதனாலே யோசிக்கணும். :P//

கீதாம்மா...நீங்க கொ.ப.செ வா வாங்களேன்!
அது தான் தலைமைப் பதவிக்கு பெர்பெக்ட் ரூட்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
நான் சொல்ல வந்தது, 8 மாதங்களில் கடந்த 1 மாதம் நான் மிகவும் இரசித்த பதிவுகளை நீங்க தந்திங்க அப்படிங்கறதுதான்......//

ஓகோ...நீங்க அப்படி வரீங்களா மெளலி சார்! அப்படின்னா, இனிமே மாதவியிலும் நகைச்சுவை கலந்து நகைச்சு வைக்கலாம்! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ramachandranusha(உஷா) said...
வல்லி.கீதா! வயசானாலும் இபப்டி அறியா புள்ளைகளா இருக்கீங்களே :-( எதுக்கு வம்பு நாம தனியா ஒரு சங்கம் ஆரம்பிச்சிடுவோம்:-))))//

அந்தச் சங்கம் பேர் என்னவோ!

//கண்ணப்பிரான் சூப்பர் வாரம். இவ்வளவு நகைச்சுவையாய் எழுதுவீங்கன்னு நான் எதிர்ப்பாக்கவே இல்லை//

நன்றி உஷாக்கா!

//அப்ப அப்ப மாதவி பந்தலிலும் இப்படி எழுதி, ஞாபகமாய் இது ஆன்மீக பதிவு இல்லைன்னு போர்ட் போட்டுடுங்க. அப்பத்தான் நாங்க வர
செளகரியமாய் இருக்கும் :-)//

போர்டு தானே! மாட்டிட்டாப் போச்சு!
இங்கு அக்மார்க் ஆன்மீகம் கலவாத எண்ணெயில் மட்டுமே தோசை சுடப்படும்-னு போர்டு தயார் பண்ணச் சொல்லிடறேன்! :-))

நா.கண்ணன் said...

சசாச..கககா..மமமா..பதநி..இப்படி ஒரு ஸ்வர ஸ்தானத்திலே சங்கம் ஆரம்பிக்கப் போறீங்க! சூப்பர் ஐடியா! ஏன்னா? சபலம் இல்லாத மனுஷ-மனுஷியே இல்லை. கட்டு/ஒட்டு கூட வேண்டாம் இப்ப எல்லாம் எம்படுதான். ஈசியா நடத்தலாம். மூலையிலே ஒரு இடத்தைப் போடும்!

கப்பி பய said...

பட்டையக் கிளப்பிட்டீங்க KRS :))

நன்றி ஆ.சி.சி! :)))

வல்லிசிம்ஹன் said...

உஷா, ஏற்கனவே அறுபது சங்கம், நாம தான் சீஃப்.
அதுக்கப்புறமென்ன சங்கம்னாலும் நான் ரெடி.
:)))
உபயோகமான பதிவு,மொக்கைப் பத்ஹிவு இவைகளுக்குக் கூட சங்கம்ம் வரப் போறதாம்::))))

நாகை சிவா said...

கே.ஆர்.எஸ்...

ரகளையான மாதமாக அமைத்து கொடுத்தற்கு ரொம்ப நன்றிங்க....

நல்லா சிரிச்சோம்....

இது போல நீங்க தொடர்ந்து காமெடி பதிவுகள் எழுதனும் என்பது எங்கள் வேண்டுகோள்....

dubukudisciple said...

hi krs...
supera irunthathu ungaludaiya ella padivum .. nalla nagaichuvai..
seri seri naan serugiren ungaludaiya sangathil.. sa sa sangam

Anonymous said...

hi enaachi... puyal adikirathaa

enna ennavo thittankgal

seyalpadukal...

best of luck ungkal muyarchikku

கைப்புள்ள said...

இந்த மாசம் முழுசும் கலக்கி சிறப்பான நகைச்சுவையான பதிவுகளைத் தந்ததுக்கு நன்றி ச.சாமியாரே!
:)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
சசாச..கககா..மமமா..பதநி..இப்படி ஒரு ஸ்வர ஸ்தானத்திலே சங்கம் ஆரம்பிக்கப் போறீங்க! சூப்பர் ஐடியா!//

ஆகா...இதுவும் நல்லாத் தான் இருக்கு கண்ணன் சார்! சங்கீத சங்கம்னும் சொல்லிக்கிடலாம்!

//மூலையிலே ஒரு இடத்தைப் போடும்!//

ஆகா...மூலையில் தான் உங்களுக்கு ஒரு இடமா? நீங்க தான் மெயின் ஸ்டேஜ்!
ஈசான முலையில் தான் உங்களுக்கு இடம்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கப்பி பய said...
பட்டையக் கிளப்பிட்டீங்க KRS :))
நன்றி ஆ.சி.சி! :)))//

நன்றி கப்பி!
தேவ் தந்த இந்த ஆசிசி பேரோட ஒட்டிக்கும் போல இருக்கே! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாகை சிவா said...
கே.ஆர்.எஸ்...
ரகளையான மாதமாக அமைத்து கொடுத்தற்கு ரொம்ப நன்றிங்க....
நல்லா சிரிச்சோம்....//

நன்றி புலியாரே!
எல்லாரும் சிரித்து இன்புற்று இருப்பது தான் ஹாஸ்ய யோகம் என்று கீதையில் கூட வருகிறது!

//இது போல நீங்க தொடர்ந்து காமெடி பதிவுகள் எழுதனும் என்பது எங்கள் வேண்டுகோள்....//

நிச்சயம் செய்கிறேன்!
என்னால் இப்படிக் கூட எழுத முடியும்-னு யோசிக்க வைத்த சங்கத்துக்கு தான் என் நன்றி!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//dubukudisciple said...
hi krs...
supera irunthathu ungaludaiya ella padivum .. nalla nagaichuvai..//

நன்றி சுதாக்கா!

//seri seri naan serugiren ungaludaiya sangathil.. sa sa sangam//

சூப்பரு! களை கட்டி விடும்னு சொல்லுங்க!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//
Anonymous said...
hi enaachi... puyal adikirathaa
enna ennavo thittankgal
seyalpadukal...
best of luck ungkal muyarchikku //

என்னங்க சொல்றீங்க? சுத்தமாப் புரியலை!
வாழ்த்துக்கு நன்றி! ச்சா சங்கம் எல்லாம் ஒன்னுமில்ல, சும்மானாங்காட்டியும் ஜாலிப் பதிவு! அவ்ளோ தான்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கைப்புள்ள said...
இந்த மாசம் முழுசும் கலக்கி சிறப்பான நகைச்சுவையான பதிவுகளைத் தந்ததுக்கு நன்றி ச.சாமியாரே!
:)//

தல,
"நான் சாமியார் அல்ல"!
அட ரஜினி படம் மாதிரி தலைப்பா இருக்கே!

சங்கத்தில் பதிய அளித்த வாய்ப்புக்கு நன்றி தல! எனக்கும் நல்லா ஜாலியாவே போச்சு! :-)))