Tuesday, August 14, 2007

டெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போலிகள்! - 3

வெட்டி வேரு வாசம், வெட்டிப் பயல் மோசம் ன்னு பாடல் பேக்கிரவுண்டில் ஒலிக்க...வெட்டியை நோக்கி வீறுநடை போட்டார் கவுண்டர். சற்றே திரும்பிப் பார்க்க, சிபியை அங்கே காணோம்! ஆளு எஸ்கேப்பு! கவுண்டர் இதுக்கெல்லாம் கலங்குறவரா என்ன?
அங்கே போயி பார்த்தால்...அம்ச தூளிகா மஞ்சத்தில் வெட்டி...
கன்னியர் புடை சூழ...forbidden appleஐச் சுவைத்துக் கொண்டு இருக்கிறார்! அதைப் பார்த்து ஜெர்க்கான கவுண்டர், கண் சிவக்கிறார்!
முந்தைய பாகங்கள் இங்கே!
Part 1
Part 2

கவுண்டர்: டேய், நரகலோகத்துல என்னாடா இது நாராசம்?
வெட்டி: நரகத்துல உன்னை விட பெரிய பாவி யாரும் இல்லை...அதனால யாருக்கும் பயப்படாதே!
அதே மாதிரி உன்னை விட சின்ன பாவி யாரும் இல்லை...அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!
- அதே நா ப்ளாக்கு ஸ்லோகன்னு - நான் ஓட்டறது மாருதி வேகன்னு - நூ ரா கண்ணு!

கவுண்டர்: டேய் டயலாக்கு வாயா. எம தூதர்கள் கிட்ட சொன்னேன் வையி - உன் டயலாக்கு வாயி எல்லாம், டங்கு வாயி ஆயிடும் ஜாக்கிரதை!
அது சரி, நீ எப்படியும் இங்க வர வேண்டிய ஆளு தான்! அதுல டவுட்டு லேது!
ஆனா நீ எப்படிடீ ஆன்மிகப் பதிவு பசங்களோடு வந்து சேர்ந்த?
வெட்டி: ஓ அத கேக்கறீங்களா, மிஸ்டர் ஜீ!

கவுண்டர்: டேய்...இன்னா சொன்ன நீ?
வெட்டி: மிஸ்டர் ஜீ...ஏன் மரியாதையா தானே கூப்பிட்டேன்?.
கவுண்டர்: ஓ அப்படியா, மிஸ்டர் வி?
டேய், டேய். நம்மள வச்சி பதிவு போட்டுக்குனு நம்பளுக்கே நெக்கலா?
டெவில் ஷோ-ன்னு ஆரம்பிச்சு அளப்பற பண்ண இல்ல?. அதான் டெவிலுங்க இருக்குற இடத்துக்கே கரெக்டா வந்து சேந்துருக்க!

வெட்டி: கோச்சிக்காதீங்க கவுண்டரே! என்னைப் போல ஒரு பக்திமானை நீங்க பாத்துருக்கவே முடியாது.
கவுண்டர்: ஆமா இவரு அப்படியே துள்ளி துள்ளி ஓடற பக்திமானு...அன்னிக்கி இட ஒதுக்கீடு உண்ணாவிரதப் போராட்டத்துல, இருபது இட்லி துன்னுட்டு, அந்தமான் ஜெயில்ல இருந்தவன் தானடா நீயி? அந்தமான்-ல இருந்தவன்லாம் பக்திமான், சக்திமான் ரேஞ்சுக்கு பேசறாங்களடா சாமீ!


வெட்டி: நான் கர்ணன்-கண்ணன்-ன்னு பதிவு போட்டவன். கங்கைக்குப் புருஷன் சிவனா-சந்துனுவா-ன்னு பதிவு போட்டவன். சுப்ரபாதத்துக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டவன். அதுனால கொஞ்சம், பாத்து பாத்து, பாத்து பேசண்டி.
கவுண்டர்: ஆமா...பேசண்டி, பாசந்தின்னு, ஆனா ஊனா தெலுங்குல எதுக்குடா பிட்டு போடுற? அவ்ளோ தைரியம் இருந்தா தெலுங்குமணத்துல போயி எழுத வேண்டியது தானே! எதுக்குடா இங்க எழுதி இவனுங்க உயிர எடுக்குற?
சுப்ரபாதத்துக்கு பின்னூட்டம் போட்டானாம்!
டேய் ஒனக்கு குளுருதுன்னா ஒங்க வூட்டுல தீக்காஞ்சிக்கோ? எதுக்குடா சுப்ரபாதப் பதிவ போயி பத்த வச்ச?

வெட்டி: ஹிஹி...சுப்ரபாதம் சூடானா தானே, வெண்பொங்கல் சூடா கெடைக்கும் அதான்!
கவுண்டர்: அடப்பாவி...ஒனக்கு எதுக்குடா கங்கைக்குப் புருஷன் யாரு-ன்னு ஆராய்ச்சி எல்லாம்?
அதுவும் இவரு நாலே நாலு வரியில பதிவு போடுவாராம்! அதுக்கு நாப்பது பேரு, நானூறு பின்னூட்டம் போட்டு மண்டைய ஒடச்சிக்குவாங்களாம்! நான்சென்ஸ்! ஏண்டா டேய்,
அவனவன் தெலுங்கு கங்காவுல தண்ணி வரலைன்னு, அழுவறான்.
நீ என்னாடான்னா கங்காவுக்கு புருஷன் வரலைன்னு பதிவு போட்டுக்கினு இருக்க. நெல்லிக்கா மண்டையா, நொங்கிடுவேன் நொங்கி!

வெட்டி: அப்படி எல்லாம் பேசாதீங்கண்ணே! பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது!
கவுண்டர்: மவனே!
பதிவ படிச்சாலும் அனுபவிக்கணும்,
ஒன் கால ஒடிச்சாலும் அனுபவிக்கணும்...
இப்ப நீ அனுபவி, ஆராயாத இன்னா? Guards, இவன அண்டாவுல போடுங்க!
(Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் "பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள்)

கவுண்டர்: அடச்சீ...வாய மூடுங்கடி...பாவா பாவான்னு சொன்னீங்க பேத்துடவேன்...பாவீ பாவீ ன்னு சொல்லுங்க!
(பெண்கள் எல்லாரும் வெட்டியைப் பாவீ பாவீ-ன்னு கைதட்டிக் அழைக்க, வெட்டி நொந்து போகிறார். அன்று கரிக்கைச் சோழியைக் கரியாக்கியவர், இன்று அவரே கரிக்கை வெட்டி ஆகிறார்...கரிந்து போன அண்டாவில்)

கவுண்டர்: டேய், நீ ஒரு ஃபேமஸ் கண்ணன் பாட்டு போட்டியாமே! எங்கே, அதைப் பக்தியோடு பாடு! இந்த அண்டா ஜில்லுன்னு ஆகுதா பார்ப்போம்!
வெட்டி: கண்ணா - இதோ உன் பாட்டு! நீ - வந்து அருள் காட்டு!
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி. அவனைச் சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
யே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு!
யே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு!
கவுண்டர்:
Guards, இவன இதே அண்டாவுல அப்படியே திருப்பிப் போட்டு வாங்குங்க! (வெட்டியைப் பார்த்து)...டேய்...பரவை முனீம்மா ஒனக்கு பரவை நாச்சியாரா?
இப்ப பாடுறீ...கண்ணன் பாட்டை! நான் பாக்குறேன் நீ படுற பாட்டை!

சேவகர்கள் இரண்டு பேர் ஓடோடி வருகிறார்கள்...கவுண்டரிடம் ஒரு ஓலை கொடுக்கிறார்கள். படித்துப் பார்த்த கவுண்டர்...
ச்சே...இந்த இந்திரன் பயலுக்கு வேற வேலையே இல்ல போல! எதுக்கு இப்ப நம்மள கூப்புடறான்?...கத்திரிக்கா மண்டையன்! ஜி-டாக்ல வர்றத வுட்டுபுட்டு...இவன நேரா வேற போயி பாக்கணுமாம்!
ஃபோன்ல பேசணும்னாலே நாம ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி ஃபோகஸ் பன்ணி பேச வேண்டியிருக்கும்...இதுல நேர்ல வேறயா? ச்சீ....சாட்டிங்-க்ல வாடா பேட்டிங் தலையா!


இந்திரன்: வருக கவுண்டரே!
செந்தில்: நலந் தானா? நலந் தானா? நரகத்தில், உடலும் உள்ளமும் நலந் தானா அண்ணே?
கவுண்டர்: டேய், திரும்பி வந்தேன்னு வையி, உன்னைத் தில்லானா வாசிச்சுடுவேன். பொத்திக்கினு உக்காரு. நீங்க சொல்லுங்க ஆபிசர். எதுக்கு அவசரமா கூப்டீங்க? எனி அர்ஜண்ட் ப்ராப்ளம்?
இந்திரன்: ஆமாம் கவுண்டரே...இன்னிக்கு உங்களுக்கு ஆப்புரைசல்.
கவுண்டர்: அப்பிடீன்னா என்ன ஆபிசர்?...

இந்திரன்: மேலதிகாரியான நான், உங்களுக்கு எது புடிச்சிருக்கு எது புடிக்கலைன்னு அன்பா விசாரிச்சிட்டு, எது புடிக்கலையோ, அதையே அன்பாக ஆப்படி்ச்சிக் கொடுத்துடுவேன். அதுவே புதிய மேனேஜ்மெண்ட் டெக்னிக்!
கவுண்டர்: ஓ, நல்ல சிஸ்டம். இப்ப அதுக்கு நான் என்னா செய்யணும்?
இந்திரன்: உங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப் போகிறோம்! உங்களுக்கு எந்த இடம் பிடித்துள்ளதோ அங்கு வேலை செய்யலாம்! சொல்லுங்க, சொர்க்கத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க, நரகத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க! எங்க வேலை பார்க்க பிடிச்சிருக்கு?

கவுண்டர்: (மனசுக்குள்ளேயே...சொர்க்கத்துல வேலை பார்த்தா ஒரே லாபம் இந்தக் குஜால் பிகருங்க தான்...ஆனா அதுக்காக இந்த வாழைப்பழ வாயன் கிட்ட எல்லாம் விகடகவியா வேலை பாக்க நம்மால முடியாது.
அங்கேன்னா, அப்பாவி ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் இருக்கானுங்க! வாயில்லாப் பூச்சிங்க! பிரிச்ச மேய அதான் நமக்குச் சரியான இடம்...நம்ம வாழ்வே நம்ம வாயி தானே!)

ஆபிசர்...நான் நரகத்துல இப்ப பாக்குற வேலயே பாத்துக்கறேன் ஆபிசர்! ஐ லைக் இட் வெரி மச்சி ஆபிசர்!
இந்திரன்: ஓ...அப்படியா! சரி இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், இதில் கையெழுத்து போட்டு விட்டு, உங்கள் விருப்பம் போல் போய் வாங்க! ஆல் தி பெஸ்ட்!
(கவுண்டர் கையெழுத்து போட்டு விட்டு, நரகலோகம் செல் நம்பர் 420க்குத் திரும்புகிறார்)

நரகலோகம் செல் நம்பர் 420யே இருண்டு கிடக்கிறது! ஆல் அண்டாஸ் ஆஃப் ஆயிக் கிடக்குது!
ஆன்மீகப் பதிவன் ஒருத்தனையும் காணோம்!
ஜெர்க் ஆகிறார் கவுண்டர்!

கவுண்டர்: Guards...எங்கடா இங்க இருந்த பாவிப் பசங்க? நான் கொஞ்ச நேரம் அந்தாண்ட போயிட்டு வரதுக்குள்ள பதிவு போடப் போயிட்டானுங்களா? இல்ல எங்காச்சும் கும்மி அடிக்கப் போயிட்டானுங்களா?
எங்கடா அந்த ஜீரா ஜோரா, கேயாரஸ்ஸு டவுன்பஸ்ஸூ எல்லாரும்?
(சேவகர்கள் எல்லாம் கவுண்டரைப் பரிதாபமா பாக்குறாங்க!)
என்னங்கடா இஞ்சி துன்ன இளிச்ச வாயனுங்க கணக்கா லுக்கு வுடறீங்க? வேர் ஆர் தீஸ் பக்கர்ஸ்? டெல் மீ மேன்...டெல் மீ....

சேவகர்கள்: அவிங்க எல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் இல்லீங்கண்ணே!
கவுண்டர்: பின்னே கோன்மீகப் பதிவருங்களா?

சேவகர்கள்: இல்லீங்கண்ணே...அவங்க எல்லாரும் போலி!
கவுண்டர்:
வாட்! போலியா? அப்படீன்னா...?

சேவகர்கள்: என்னங்கண்ணே....நீங்க தமிழ்மணம் படிக்கறதே இல்லையா? போலி-ன்னா இன்னான்னு தெரியாம இப்படி அப்பாவியா இருக்குறீங்களே!
அவிங்க எல்லாரும் போலிப் பதிவருங்கண்ணே! போலிப் பதிவருங்க!
கவுண்டர்: (இடிந்து போய்) டேய்...என்ன தாண்டா நடக்குது இங்க? புரியிறா மாதிரி சொல்லித் தொலைங்கடா, சொரக்காத் தலையனுங்களா!

சேவகர்கள்: அண்ணே...ஒங்களப் பாத்தாப் பாவமா இருக்குண்ணே!
ஒங்க லொள்ளைத் தாங்க முடியாம, நடிகருங்க நடிகைங்க டைரக்டருங்க எல்லாரும் பாற்கடலுக்குப் போயி கன்ணபிரான் கிட்ட மொறையிட்டாங்க!
கவுண்டர்: அதான் எல்லாச் சினிமாவுலயும் பாக்குறது தானே! நாலு பாட்ட பாடுவானுங்க...அவரு நான் பாத்துக்கறேன்னு சொன்னதும் அந்தாண்ட ஓடுவானுங்க! அப்பறம் என்னடா ஆச்சு?

சேவகர்கள்: என்ன தான் லொள்ளு பண்ணாலும், ஒங்களுக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தியா இருக்கா! அதான் ஒங்கள நேரடியா போட்டுத் தாக்காம, ஒங்களையே ஒப்புக்க வச்சி, ஒங்க கையாலயே எழுதி வாங்கிட்டாய்ங்க!
நீங்களும் போலிப் பதிவருங்க-ன்னு தெரியாம, ஏதோ எல்லாரயும் டபாய்க்கிற குஷியில, இங்கயே இருந்துக்கறேன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டீங்கண்ணே!
கொஞ்சம் யோசிக்கக் கூடாதாண்ணே?...ஆன்மீகப் பதிவருங்க எல்லாம் எப்படிண்ணே நரகத்துக்கு வருவாய்ங்க?

கவுண்டர்: அடங் கொக்கா மக்கா! டோட்டல் ஃபிராடு பண்ணி இருக்கானுங்களே! அத்தனையும் போலியா?
டேய், டேய், எனக்குத் துன்னுற போளி தாண்டா தெரியும்! இது என்னாடா இது போலி, ஜாலின்னு, காலி பண்ணுறீங்க?
சேவகர்கள்: எல்லாமே மாயை-ன்ணே, மாயை!
போலியே மாயை! மாயையே போலி!
பாற்கடல்-ல போட்ட திட்டம்-ன்ணே திட்டம்!
பக்தர்களைக் காக்கவும் சொக்தர்களை பேக்கவும் போலியாய் இறங்கி வருவேன்-னு டயலாக் எல்லாம் நீங்க கேட்டதில்லையாண்ணே?

கவுண்டர்: இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தவன் எவன்டா? அந்த பேரிக்காத் தலையன் செந்திலா?
சேவகர்கள்: ஐயோ, அவுரு நல்லவருண்ணே! கடைசியா நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க பாருங்க, ஒரு தில்லாலங்கடி தாங்கு!

கவுண்டர்: ஆமாம், ஏதோ வெட்டிப்பயல், குட்டிப்பயல்-ன்னு பேரைச் சொன்னானுங்களே!
சேவகர்கள்: அவரே தான்! அவரே தான்!
அவரு தான் நாரதர்-ண்ணே! நாரதரோட அவதாரம் தான் இந்த வெட்டிபயல் என்கிற பதிவரு! அவரு போட்ட மாஸ்டர் பிளான்-ல தாண்ணே நீங்க மாட்டிக்கிட்டீய்ங்க!
ஏதோ ஒங்கள வச்சி டெவில் ஷோ நடத்தறேன்னு, டெவில் ஷோ நடத்தறேன்னு நல்லா வசூல் பண்ணாரு! நீங்களும் ஏதோ அவுரு, ஒங்க புகழைப் பறப்பறதா நெனச்சிக்கீட்டங்க! கடைசில இப்படி ஆயிட்டீங்களேண்ணே!

கவுண்டர்: வெட்டின்னு வெட்டின்னு இப்பிடி வெட்டிப்புட்டானே...கடங்காரன்!
இதுக்கு குட்டி குட்டின்னு நானு சொர்க்கத்துலேயே இருந்திருப்பேனே!
அடேய் வெட்டி, புட்டி, குட்டி, சட்டி, ரொட்டி....

இடி மேல் இடியாக இறங்கிய கவுண்டர், இடி தாங்கியாகத் தரையில் உட்கார்ந்து புலம்ப....
பேக்கிரவுண்டில் பாடல் ஒலிக்கிறது....
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வெட்டியே வகுத்தடடா! - கவுண்டா!
வருவதை எதிர்கொள்ளடா
!
ட்டொங் டொங் டொய்ங்க்.....ட்டொங் டொங் டொய்ங்க்.....
சுபம்!!!

42 comments:

கோவி.கண்ணன் said...

//கவுண்டர்: (மனசுக்குள்ளேயே...சொர்கத்துல வேலை பார்த்தா ஒரே லாபம் இந்தக் குஜால் பிகருங்க தான்...ஆனா அதுக்காக இந்த வாழைப்பழ வாயன் கிட்ட எல்லாம் விகடகவியா வேலை பாக்க நம்மால முடியாது.
அங்கேன்னா, அப்பாவி ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் இருக்கானுங்க! வாயில்லாப் பூச்சிங்க! பிரிச்ச மேய அதான் நமக்குச் சரியான இடம்...நம்ம வாழ்வே நம்ம வாயி தானே!)//

கே ஆர் எஸ் முன்றாவதும் முழுநீள சிரிப்பாக இருக்கிறது !

பாராட்டுக்கள் !

நகைச்சுவையில் கலகலக்க வச்சிட்டிங்க !

ramachandranusha said...

சூப்பர் :))))))))))))))))))))))))))))))))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வெட்டிகரமான...சாரி
வெட்டி-காரமான...சாரி
வெற்றிகரமான 200ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள் வெட்டி!

CVR said...

சூப்பரு!!!
அண்ணாத்த!!!
காலை காட்டுங்க!!! :-)


நான் இது வரை படித்த டெவில் ஷோக்கலிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த தொடர் தான்!!!!! :-)

வாழ்த்துக்கள்!! :-)

VSK said...

எழுத்து ஏழு ஊரைக் கலகலக்க வைத்தது;
இருப்பதிலேயே பெஸ்ட் டெவில்ஷோ;
அருமையான நகைச்சுவை

என்பதெல்லாம் ஒருபுரம் இருக்கட்டும், ரவி!

[அவை அத்தனையும் உண்மையே!]ஆனால், இதற்காகத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் இருக்கு பாருங்க, அதான் இதுல சூப்பரோ சூப்பர்!

கொஞ்சம் தவறினாலும் ஓவராய் போய்விடக் கூடிய அபாயமான நடையைப் புரிந்து, பொறுத்து, மகிழக்கூடிய நண்பர்களை நீங்கள் கையாண்டவிதம் பாராட்டத் தக்கது!

'வெட்டி' என்கிற பாலஜியை மிக முக்கியமான துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது திறமையின் உச்சம்.

வாழ்த்துகள்!
:)))))))))

துளசி கோபால் said...

//Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம்
"பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க,
கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள்//

ஹைய்யோ.............. சிரிச்சுச் சிரிச்சு இப்போ..................

ரொம்ப ரசித்தேன்ப்பா.

சூப்பர்:-))))))))))))))))))))))))))

கப்பி பய said...

:))))

மதுரையம்பதி said...

அருமைன்னு சொன்னா அது ரொம்ப குறைவான பாராட்டு, ஆனா வேற என்ன சொல்லரதுன்னு தெரியல்லை....

இந்த மூன்று பதிவுகளும், முழுநீள நகைச்சுவை ரத்தினங்கள்....
வாழ்க நீ எம்மான்....

மதுரையம்பதி said...

நீங்கதான் எனக்கு முதலில் ஈ-கலப்பையை அனுப்பியவர் என்று நினைக்கிறேன். அதற்கும் எனது நன்றிகள்...

மெளலி...

mgnithi said...

kalakkal post.. Comedy super... Innaikku thaan naan moonu partum padichen.. Great one... Unga comedy timing romba super...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கோவி.கண்ணன் said...
கே ஆர் எஸ் முன்றாவதும் முழுநீள சிரிப்பாக இருக்கிறது !
பாராட்டுக்கள் !
நகைச்சுவையில் கலகலக்க வச்சிட்டிங்க !
//

நன்றி GK. எல்லாம் போலி மயம்! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// ramachandranusha said...
சூப்பர் :))))))))))))))))))))))))))))))))
//

நன்றி உஷாக்கா...இம்மாம் பெரீய்ய்ய்ய் சிரிப்பா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//CVR said...
சூப்பரு!!!
அண்ணாத்த!!!
காலை காட்டுங்க!!! :-)//

வாங்க CVR. இந்தாங்க காட்டிட்டேன்!
காலைக் கட் பண்ணவா? :-)

//நான் இது வரை படித்த டெவில் ஷோக்கலிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த தொடர் தான்!!!!! :-)//

நன்றி...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//VSK said...
ஆனால், இதற்காகத் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் இருக்கு பாருங்க, அதான் இதுல சூப்பரோ சூப்பர்!//

நன்றி SK!

//கொஞ்சம் தவறினாலும் ஓவராய் போய்விடக் கூடிய அபாயமான நடையைப் புரிந்து, பொறுத்து, மகிழக்கூடிய நண்பர்களை நீங்கள் கையாண்டவிதம் பாராட்டத் தக்கது!//

இங்கு தான் கொஞ்சம் டேஞ்சர் ஏரியா...அதுவும் மெல்லிய மனம் கொண்ட நம்ம ஆன்மீகப் பதிவு நண்பர்கள்! எப்படியோ...யாரும் நோகாமல் எல்லாரும் சிரித்தோம்! :-))

நா.கண்ணன் said...

கண்ணபிரான்: நல்ல தொழில் கைவசமிருக்கு. பேசாம திரைப்பட வசனகர்த்தாவாகிவிடலாம். கிரேசி மோகன் ரேஞ்சிலே இருக்கீங்க! கடைசியிலே பகவத்கீதையும் ஒரு வாரு வாரிட்டீரே! ஆண்டவனுக்கே அல்வா கொடுப்பது என்பது இதுதானா!

கீதா சாம்பசிவம் said...

சீக்கிரம் முடிச்சுட்டீங்களோ? அருமைன்னு ஒரு வார்த்தை பத்தாது. வெட்டி நல்லாவே "வெட்டி" விட்டார், கவுண்டரை! நல்லா உபயொகிச்சு இருக்கீங்க அனைவரையும்.! அருமையான எளிமையான அழகுத் தமிழ்! :))))))))))))))

வெட்டிப்பயல் said...

நீங்க இனிமே ஆன்மீக பதிவே எழுத வேண்டாம். இங்க வந்து நகைச்சுவை பதிவே எழுதுங்க போதும். அவ்வளவு அருமை...

டெவில் ஷோக்கே உங்களால பெருமை வந்துடுச்சு...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//துளசி கோபால் said...
"பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க,
ஹைய்யோ.............. சிரிச்சுச் சிரிச்சு இப்போ..................
ரொம்ப ரசித்தேன்ப்பா.
சூப்பர்:-))))))))))))))))))))))))))//

Dank U Teacher!!!
எனக்கு ரொம்ப நாளாய் ஒரு சந்தேகம்!

பாவா - என்றால் என்ன டீச்சர்?
மாமாவுக்குத் தெலுங்கில் பாவாவா?
இல்லை...
புருஷனைப் பாவா-ன்னு கூப்பிடுவாங்களா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கப்பி பய said...
:))))//

கப்பி வராரு, சிரிக்கிறாரு, போறாரு...
நம்ம கிட்ட பேசவே மாட்டேன்ங்கிறாரு!
பாலாஜி - நூக்கு தெலிசா? கப்பி யார் கூட பேசுவாரு? :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மதுரையம்பதி said...
இந்த மூன்று பதிவுகளும், முழுநீள நகைச்சுவை ரத்தினங்கள்....
வாழ்க நீ எம்மான்....//

நன்றி மெளலி சார்!

//நீங்கதான் எனக்கு முதலில் ஈ-கலப்பையை அனுப்பியவர் என்று நினைக்கிறேன். அதற்கும் எனது நன்றிகள்...//

வெட்டி, ஒங்களத் தான் சொல்றாரு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//mgnithi said...
kalakkal post.. Comedy super... Innaikku thaan naan moonu partum padichen.. Great one... Unga comedy timing romba super...//

நன்றி mgnithi!
அடுத்து என்ன கொடுக்கலாம்-னு யோசிச்சிட்டு இருக்கேன்! ஒரு மாசம் முழுதும் வவாச-ல எழுதணுமாமே! :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
கண்ணபிரான்: நல்ல தொழில் கைவசமிருக்கு. பேசாம திரைப்பட வசனகர்த்தாவாகிவிடலாம். கிரேசி மோகன் ரேஞ்சிலே இருக்கீங்க!//

அச்சச்சோ...தொழிலையே மாத்தறீங்களே கண்ணன் சார்!
நமக்கு என்னிக்குமே பெருமாள் பேட்டை தான் ஒத்து வரும்! :-))

//கடைசியிலே பகவத்கீதையும் ஒரு வாரு வாரிட்டீரே! ஆண்டவனுக்கே அல்வா கொடுப்பது என்பது இதுதானா!//

பக்தர்களைக் காக்கவும் சொக்தர்களை பேக்கவும் டயலாக்கைச் சொல்றீங்களா சார்? அது ச்ச்சும்மானா...

ஆண்டவனுக்கு அல்வா-வா?
பெருமாளே! அவனே அல்வா போல் நாக்கில் கரைபவன்! அவனுக்கே அல்வா-வா? சிவசிவ!! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
சீக்கிரம் முடிச்சுட்டீங்களோ?//

இல்லீங்க, கீதாம்மா...
இதுக்கு மேல இழுத்தா சுவாரஸ்யம் கொறைஞ்சிடும்!

//வெட்டி நல்லாவே "வெட்டி" விட்டார், கவுண்டரை! நல்லா உபயொகிச்சு இருக்கீங்க அனைவரையும்.!//

நன்றி கீதாம்மா...இன்னும் நிறைய பதிவரைச் சேர்த்து இருக்கலாம்...

//அருமையான எளிமையான அழகுத் தமிழ்! :))))))))))))))//

இந்த கிண்டல் தானே வேணாங்கிறது!
ராமானுசரைப் பற்றித் தேன் தமிழில் எழுதி விட்டு, இது என்னடா மண்டையா மண்டையா-ன்னு தமிழ்? - அப்பிடின்னு தானே கேக்குறீங்க? :-)

வெட்டிப்பயல் said...

//
பாவா - என்றால் என்ன டீச்சர்?
மாமாவுக்குத் தெலுங்கில் பாவாவா?
இல்லை...
புருஷனைப் பாவா-ன்னு கூப்பிடுவாங்களா?//

அக்கா வீட்டுக்காரர்கூட பாவா தான்... மாமானு கூட வெச்சிக்கலாம். ஆனா எல்லா மாமாவையும் பாவானு கூப்பிட மாட்டோம்...

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//கப்பி பய said...
:))))//

கப்பி வராரு, சிரிக்கிறாரு, போறாரு...
நம்ம கிட்ட பேசவே மாட்டேன்ங்கிறாரு!
பாலாஜி - நூக்கு தெலிசா? கப்பி யார் கூட பேசுவாரு? :-))) //

அவர் படிச்சிட்டாருனு அடையாளமாம்...

வெட்டிப்பயல் said...

////நீங்கதான் எனக்கு முதலில் ஈ-கலப்பையை அனுப்பியவர் என்று நினைக்கிறேன். அதற்கும் எனது நன்றிகள்...//

வெட்டி, ஒங்களத் தான் சொல்றாரு!//

ஆஹா... நான் நிறைய பேருக்கு அனுப்பியிருக்கேன். அதனால நிஜமா நியாபகம் இல்லை. எல்லா புகழும் பாபாவிற்கே

இராம் said...

சூப்பரு... :)

இலவசக்கொத்தனார் said...

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
நீங்க இனிமே ஆன்மீக பதிவே எழுத வேண்டாம்//

ஏங்க பாலாஜி...அம்புட்டு மோசமா எழுதறேனா? இல்ல நீங்க மாதவிக்கு வந்துடலாம்-னு பாக்குறீங்களா? :-)

//டெவில் ஷோக்கே உங்களால பெருமை வந்துடுச்சு...//

இது தானே வேணாங்கிறது!
ஹலோ Balaji-200, இது என்ன உ.குத்து? :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஆனா எல்லா மாமாவையும் பாவானு கூப்பிட மாட்டோம்...//

அப்ப போலீஸ் "மாமா"வைத் தெலுங்குல எப்பிடிக் கூப்படறீங்க...அமெரிக்காவுல?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இராம் said...
சூப்பரு... :)//

//இலவசக்கொத்தனார் said...
:))//

அட என்னப்பா இது
நம்ம பொழைப்பு சிரிப்பாச் சிரிக்கிறாய்ங்க?
கப்பி சிரிக்காரு, ராயலு சிரிக்காரு, கொத்தனாரு சிரிக்காரு...

யாரும் பேஸ்மாட்டேன்-ங்கிறாங்களேப்பா! :-))

ILA(a)இளா said...

வெட்டிகரமான பதிவு

குமரன் (Kumaran) said...

ஆகா. எதை விட எதை சொல்ல? எல்லாமே நல்லா இருக்கே; நல்லா இருக்கே.

அங்கங்கே 'Subtle'ஆவும் இருக்கு 'NotSoSubtle'ஆவும் இருக்கு. :-)

வெட்டி, உங்க வீட்டுல இந்த இடுகையைப் படிக்க மாட்டாங்கல்ல?! படிச்சாங்கன்னா சீக்கிரம் கல்யாணம் தான். :-) என்ன? அதுக்காகவே அவங்களைப் படிக்கச் சொல்லப் போறீங்களா? ரொம்ப நல்லது! :)

வெட்டிப்பயல் said...

//
வெட்டி, உங்க வீட்டுல இந்த இடுகையைப் படிக்க மாட்டாங்கல்ல?! படிச்சாங்கன்னா சீக்கிரம் கல்யாணம் தான். :-) என்ன? அதுக்காகவே அவங்களைப் படிக்கச் சொல்லப் போறீங்களா? ரொம்ப நல்லது! :)//

எங்க வீட்ல ப்ளாக் படிக்க தெரியாது... இதுவரைக்கும் நான் எழுதனதுல ஒரு 4-5 ப்ரிண்ட் அவுட் எடுத்து படிச்சிருக்காங்க. அவ்வளவுதான் :-))

இல்லைனா இங்க எல்லாரையும் மரியாதை இல்லாம பேசறதுக்கும், ஓட்றதுக்கும் எனக்கு ஆப்பு தான் :-)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
நீங்க இனிமே ஆன்மீக பதிவே எழுத வேண்டாம்//

ஏங்க பாலாஜி...அம்புட்டு மோசமா எழுதறேனா? இல்ல நீங்க மாதவிக்கு வந்துடலாம்-னு பாக்குறீங்களா? :-)
//
மாதவிக்கும் வரல, கண்ணகிக்கும் வரல... வேணும்னா இலியானா இல்லைனா அனுஷ்கா பந்தல் ஆரம்பிங்க.... நான் பார்த்துக்கறேன்...

//

//டெவில் ஷோக்கே உங்களால பெருமை வந்துடுச்சு...//

இது தானே வேணாங்கிறது!
ஹலோ Balaji-200, இது என்ன உ.குத்து? :-))) ////
உ.குத்துனா என்ன?
நானும் VCR மாதிரி அப்பாவிதான் ;)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஆனா எல்லா மாமாவையும் பாவானு கூப்பிட மாட்டோம்...//

அப்ப போலீஸ் "மாமா"வைத் தெலுங்குல எப்பிடிக் கூப்படறீங்க...அமெரிக்காவுல? //

அமெரிக்கால இருக்கற போலிஸ் மாமாவை நான் ஏன் தெலுகுல கூப்பிடப்போறேன்???

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ILA(a)இளா said...
வெட்டிகரமான பதிவு//

வெட்டி-காரமான பதிவு? :-)
நன்றி இளா!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// குமரன் (Kumaran) said...
ஆகா. எதை விட எதை சொல்ல? எல்லாமே நல்லா இருக்கே; நல்லா இருக்கே.//

Dank u Dank u...குமரன்!

//படிச்சாங்கன்னா சீக்கிரம் கல்யாணம் தான். :-)
என்ன? அதுக்காகவே அவங்களைப் படிக்கச் சொல்லப் போறீங்களா? ரொம்ப நல்லது! :)//

குமரன்...உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்க வேண்டும்! வாய் நிறைய சர்க்கரை தருகிறேன்! :-))))
மாதவிப்பந்தலில் சர்க்கரைப்பந்தல் போடுகிறேன்! :-))))

G.Ragavan said...

சூப்பர். சூப்பர். பிரமாதம்.

அம்சதூளிகா மஞ்சம்னா என்னன்னு தெரியாம இருந்துச்சு. அம்சமா தூளா பொண்ணுங்க சுத்தியிருக்குற மஞ்சந்தான் அம்சதூளிகா மஞ்சம்னு வெட்டிப்பயல் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்.

// Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் "பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள் //

இப்பிடி இந்தப் பொண்ணுங்கள்ளாம் பாவா பாவான்னு சொல்லும் போது...எனக்கு ரகசியபோலீஸ் சின்னப்பாப்பு சில்க் ஸ்மிதா நினைவுக்கு வராங்க. ம்ம்ம்...அவங்க கண்டிப்பா சொர்க்கத்துலதான் இருப்பாங்க.

meena said...

அருமை :))))))

மூன்று பாகமும் படித்தேன். சிரிப்பை நிறுத்த முடியவில்லை

ஒரு கலக்கு கலக்கிட்டீங்க ரவி!

இன்னொரு எல்லே எஸ்!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//G.Ragavan said...
சூப்பர். சூப்பர். பிரமாதம்.//

ஜிரா
நன்றி.நன்றி.நன்றி.

//அம்சதூளிகா மஞ்சம்னா...அம்சமா தூளா பொண்ணுங்க சுத்தியிருக்குற மஞ்சந்தான் அம்சதூளிகா மஞ்சம்னு வெட்டிப்பயல் கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிட்டேன்//

ஆகா...அம்சா+தூளா=வெட்டி
அப்படியா பாலாஜி?

//Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் "பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள் //

//இப்பிடி இந்தப் பொண்ணுங்கள்ளாம் பாவா பாவான்னு சொல்லும் போது...எனக்கு ரகசியபோலீஸ் சின்னப் பாப்பு சில்க் ஸ்மிதா நினைவுக்கு வராங்க. ம்ம்ம்...அவங்க கண்டிப்பா சொர்க்கத்துலதான் இருப்பாங்க//

அட, நம்ம ஜிராவுக்கு சின்ன பாப்பு ஞாபகம் வந்துடுச்சா? ஹூம்! அப்பிடின்னா இன்னிக்கு தலைவர் ஏதோ ஒரு மூடில் தான் இருக்காரு போல :-)

சரி ஜிரா...
அது எப்பிடி அம்புட்டு உறுதியாச் சொல்லுறீங்க சில்க் சொர்க்கத்துல தான் இருப்பாங்க-ன்னு?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//meena said...
அருமை :))))))
மூன்று பாகமும் படித்தேன். சிரிப்பை நிறுத்த முடியவில்லை
ஒரு கலக்கு கலக்கிட்டீங்க ரவி!//

நன்றி மீனா.
இப்பவாச்சும் நிறுத்திட்டீங்க-ல்ல; சிரிப்பை? :-)))