Wednesday, August 29, 2007

சக் தே கோலிவுட்டு!!

சக் தே இந்தியாவில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 16 பெண்கள் கொண்ட அணியைத் தயார்படுத்தி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுக்கிறார். சத்யம் தியேட்டரில் சக் தே இந்தியா பார்த்துவிட்டு பிரபா ஒயின்ஸ் பார் பக்கம் ஒதுங்கும் சிம்பு, சந்தானம், சத்யன் கோ தமிழிலும் இப்படி ஒரு படம் எடுத்து படம்காட்ட வேண்டுமென டிஸ்கஷனில் இறங்குகிறது.

சத்யன்: ண்ணா இந்தில ஹாக்கிய வச்சு சக் தே இந்தியான்னு பட்டையக் கிளப்பறாங்க..இங்க சென்னை- 28ன்னு புதுப்பசங்க புளியைக் கரைக்கறாங்க..நாமளும் ஏதாவது பண்ணனும்ண்ணா

சந்தானம்: ஏதாவது பண்ணனும்னா கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ணுடா..வாங்கிக் கொடுத்த ஓசி சரக்குக்கு அவனை ஏத்திவிடறயா? அவன் விரலை நீட்டி பேச ஆரம்பிச்சா நமக்கு அடிச்ச சரக்கெல்லாம் இறங்கிடும்டா..சொன்னா கேளுடா

சிம்பு: கெட்டவன் கதையை மாத்தறோம்...ஏதாவது விளையாட்டை வச்சு படமெடுப்போம்..என்ன விளையாட்டுன்னு அப்புறம் முடிவு பண்ணலாம்..மொதல்ல நடிக்கறதுக்கு 20 பொண்ணுங்களைப் புடிப்போம்

சந்தானம்: டேய்..மொத ரவுண்டுக்கே இந்த எஃபெக்டா...அதுவும் இருபது பேர் எதுக்குடா?

சத்யன்: ண்ணா..சூப்பருங்கண்ணா..போன வாரம் எங்க ஏரியா கேபிள் டிவில புதுசா ஒரு காம்பியரர் அம்மணி வந்திருக்குண்ணா..அவங்களையும் கூப்பிட்டுக்கலாம்ண்ணா

சந்தானம்(சத்யனைப் பார்த்து): நீ ஏன் இப்ப ஓவரா ஃபீல் ஆவற? எப்படியும் உனக்கு சான்ஸ் கொடுப்பான்டா..

சிம்பு: மந்திரா பேடில இருந்து அந்த கேபிள் பொண்ணு வரை புடிக்கறோம். படத்துல இந்த சிம்பு அவார்ட் மேல அவார்டா வாங்குவான்

சந்தானம்: டேய்..அவார்ட் வாங்கறது இருக்கட்டும்..மொதல்ல சைட் டிஷ் வாங்குடா...எவ்வளவு நேரம் சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கறது?

சத்யன்: விஜய் கில்லில கபடி ஆடிட்டாரு..நாம என்ன விளையாடறதுண்ணா?

சந்தானம்: டேய் கில்லில அவர் ஆடினது பேர் கபடியா? லொள்ளு சபால சொட்டை மண்டையனே அதை விட நல்லா ஆடினான்டா..

எனும்போதே எஸ்.ஜே சூரியா என்ட்ரி ஆகிறார்.

எஸ்.ஜே: நானும் ஆட்டைக்கு வருவேன்..ஆங்க்...விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்க...ஆங்க்க்க்

சந்தானம்: சரக்குல பங்கு கேக்கதான் வந்தியோன்னு பார்த்தேன்..நல்லவேள..அப்படியே ஓரமா எதுனா கெஸ்ட் ரோல் பண்ணிக்கோ.

எஸ்.ஜே: எனக்கு ரெண்டு ஹீரோயின் கண்டிப்பா இருக்கனும்..ஆங்க்...மொதல்ல கேவலமா விளையாடி ஹீரோயின் கூட சண்டை போட்டு செகண்ட் ஆஃப்ல சூப்பரா விளையாடற மாதிரி கதையிருக்கனும்.ஆங்க்..நமீதா படத்துல உண்டா? ஆங்க...

சந்தானம்: டேய் எங்களைப் பார்த்தா பத்து செகண்ட்ல கான்செப்ட் யோசிச்சு காமெடி பண்ற மாதிரி இருக்குதா? டேய் நாங்க எவ்வளவு சீரியசா உருப்படியா விளையாட்டை வ்ச்சு ஒரு படம் எடுக்கலாம்னு டிஸ்கஷன்ல இருக்கோம்..நடுவுல உன் டிராக் ஓட்டறயா?

எஸ்.ஜே: நான் சின்ன வயசுலயே பக்கத்து வீட்டு பொண்ணுங்க கூட நொண்டி, பல்லாங்குழிலாம் விளையாடியிருக்கேன்..ஆங்க்..

சந்தானம்: நானகூட் பல பேர் காலை உடைச்சு நொண்டியாக்கியிருக்கேன்

எஸ்.ஜே: இப்ப நான் என்ன செய்ய சொல்லு? ஆங்க்க்க்

சந்தானம்: ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க? இது நாலு பேரு வந்துபோற இடம்...உன்னை இதுக்கு மேல பேச விட்டா அசிங்கமாயிடும்..அந்த கட்டிங் அடிச்சுட்டு பிளாட் ஆயிடு..இல்ல ஹாக்கி ஸ்டிக்க வச்சு நடுமண்டைல போட்ருவோம்

சிம்பு: (திடீரென குறுக்கில் புகுந்து) நாங்க எப்படிலாம் பழகனோம்..அப்படியே மிதக்கற மாதிரி இருந்துச்சு..விதி என் வாழ்க்கைல விளையாடிடு்ச்சு

என்றபடியே சந்தானத்தின் தோளில் சாய்ந்து பழக்க தோஷத்தில் கடித்து வைக்கிறார்.

சந்தானம்: டேய் கடிக்கறான்டா

சத்யன்: ண்ணா..எவ்வளவு சீரியசா ஃபீல் பண்றாரு..கடிக்கறாருன்னு சொல்றீங்களேன்ண்ணா

சந்தானம் : அதில்லடா கையைக் கடிக்கறான்டா

சத்யன்: மாசக்கடைசி ஆச்சுன்னா கையைக் கடிக்கறது வழக்கம் தானே..நமக்கு வேற ஓசில சரக்கு வாங்கித்தராரு

சந்தானம்: டேய் அவன் என் கையைக் கடிக்கறான்டா..நீ அவனுக்கு மேல கடிக்கறியே..அங்க யாருடா டிவின் டவர்ஸுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்ட மாதிரி ரெண்டு பேர் வர்றானுங்க

சிபியும் ( அட தளபதி இல்லீங்க..நம்ம சத்யராஜோட அண்ணன்..ச்சே மகன் சிபிராஜ்) 'ஜெயம்' ரவியும் வருகிறார்கள்.

சிபிராஜ்: நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..அனுபவஸ்தன் சொல்றேன் விளையாட்டெல்லாம் வச்சு படமெடுத்தா விளங்காமப் போயிரும்

சந்தானம்: ஆமா இவர வச்சு எடுத்தா மட்டும் கலெக்ஷன் கோடிகோடியா கல்லா கட்டும்...டேய் இவன் படத்தை விட எடுக்க போற படம் நல்லா ஓடிடும்னு பொறாமைல பேசறான்டா

சிபிராஜ்: பொறாமைலாம் இல்லீங்க..நான் கூட ஃபுட் பால் வச்சு எடுத்த படத்துல நடிச்சேன்..ஆனா படம் பத்து நாளைக்கு மேல ஓடல

சந்தானம்: அந்த பத்து நாள் கூட நிலாவுக்காகவும் பிரகாஷ் ராஜுக்காகவும் தான் ஓடுச்சு..உனக்காக இல்ல..இங்க இருவது பொண்ணுங்களைப் புடிச்சு கில்மாவா படமெடுக்க ப்ளான் போடறோம்..உங்கள மாதிரி பத்திருபது பனை மரங்க வந்து ஃபுட் பால் ஆடினா எவனுக்கு என்ன வந்துச்சு? எவன்டா அதுக்கு அம்பது ரூபா செலவு பண்ணி பார்ப்பான்?

சிபி: அது சூப்பர் ஸ்டோரிண்ணா..டைட்டில்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் எல்லாமே வித்தியாசமா எடுத்தோம்

சந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா? சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு

ரவி: அதை விடுங்க..நான் எம்.குமரன்ல பாக்சிங் விளையாடினேன், தாஸ படத்துல ஃபுட் பால் விளையாடினேன்..அதெல்லாம் கூட ஓடலைங்க

சந்தானம்: நீ நடிச்சு என்னவோ அந்த ரெண்டு படம் மட்டும்தான் ஓடலைங்கற மாதிரி சொல்ற?

ரவி(தழுதழுக்கும் குரலில்): அதெல்லாம் எங்க அண்ணனை கேட்டா தாங்க் தெரியும்..ஆனா நான் நல்லா ஆடுவேங்க..என்னை நம்புங்க

சந்தானம்: டேய் நான் கூடத்தான் டைட்டா சரக்கடிச்சுட்டு போதைல உன்னை விட சூப்பரா ஆடுவேன்..படம் ஓட இதெல்லாம் ஒரு காரணமாடா?

ரவி: விளையாட்ட வச்சு படமெடுக்கறதுக்கு பதில் மறுபடியும் அப்பாஸை கேப்டனா போட்டு சேப்பாக்கத்துல கிரிக்கெட் விளையாடலாம்ங்க..எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்

சந்தானம்: டேய் இங்க ஒழுங்கா காமெடி பண்ணாலே மக்கள் சிரிக்க மாட்டேங்கறாங்க..நீ வேற ஏன்டா நடுவுல புகுந்து இப்படி ராவடிக்கற?

சத்யன்:(இடையில் புகுந்து) இல்லீங்கண்ணா..மிக்ஸிங்கோட தான் அடிக்கறேன்

சந்தானம்: இப்ப நான் உன்னை அடிக்கறேன்டா

என சத்யனை அடிக்க வரும்போதே எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் கேமரா ஆங்கிள் காட்டியபடி வருகிறார்.

எஸ்.ஏ.எஸ்: தம்பிகளா கவலைப்படாதீங்க..உங்கள வச்சு நான் படமெடுக்கறேன். நீங்க எல்லாரும் ஹாக்கி ப்ளேயர்ஸ்..எல்லா மேட்ச்லயும் கிராமத்து பண்ணையாரான வில்லனோட சதியால தோத்துடறீங்க..செகண்ட் ஆஃப்ல விஜய் கெஸ்ட் ரோல்ல சப்ஸ்டியூட்டா ஆடி உங்கள ஜெயிக்க வைக்கறாரு

சந்தானம்: ஏன் சார்..ஆப்படிக்க புதுசா ஹுரோ யாரும் வரலையா? இவனுங்க டார்ச்சரே தாங்க முடியல..இப்ப நீங்க பேசின பேச்சுல ஏறின மப்பெல்லாம் போயிடுச்சு

சத்யன்: எங்கண்ணா போச்சு?

சந்தானம்: ஷேர் ஆட்டோ புடிச்சு டூமில்குப்பம் போயிடுச்சு..டேய் உன்னை மொதல்ல உதைக்கனும்டா

எஸ்.ஏ.எஸ்: எல்லாருக்கும் ஒரு ஹீரோயின் வச்சுக்கலாம்பா..அவங்களை அந்த பண்ணையார் ரேப் பண்ணிடுவான்..விஜய் வந்து சண்டை போட்டு உங்களை காப்பாத்துவான்

சந்தானம்: இப்ப எவன் சார் வந்து எங்களை காப்பாத்துவான்?

என்று அழ ஆரம்பிக்கிறார். அப்போது பெரும்புயல் அடிக்கிறது. டேபிளெல்லாம் பறக்கிறது..விளக்கெல்லாம் அணைந்து அணைந்து எரிகிறது..ஜன்னல் கதவுகள் படார் படாரென அடிக்கின்றன.

சத்யன்: ண்ணா.என்னண்ணா ஆச்சு பயமாயிருக்குங்ண்ணா

சந்தானம்: டேய் எத்தன படத்துல பார்த்திருக்கேன்..இப்படியெல்லாம் வந்தா வழக்கமா ஒன்னு ஹீரோ என்ட்ரியா இருக்கும்..இல்ல பேயோ பிசாசோ வரும்..இல்ல விநோத ஜந்து ஏதாவது வரும்..இப்ப என்ன வருதுன்னு தெரிலயேடா

"நான் ஆடாத விளையாட்டா!
எம்ஜியாருக்கே நான் காட்டினேன் டாட்டா!
நான் நிப்பேன்டா ஒண்டிக்கு ஒண்டி!
எவனாயிருந்தாலும் போட்டிக்கு ரண்டி!
நான் சிலம்பெடுத்தா சிம்பு!
என்கிட்ட வச்சுக்காத வம்பு!
சின்ன வயசுல ஆடியிருக்கேன் கில்லி!
எதிர்த்தவனை அடிப்பேன்டா சொல்லி!"

என குரல் கேட்கிறது.

சந்தானம்: டேய் நான் கடைசியா சொன்னதுதான் வந்துடுச்சு போல..பில்லுக்கு பணம் கேட்கறதுக்கு முன்ன அப்படியே எஸ்கேப்பாகி ஓடிருவோம் டா

என சத்யனை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மற்றவர்கள் அங்கேயே மட்டையாகிறார்கள்.

18 comments:

இராம்/Raam said...

கப்பி,

சூப்பரு.... ஓவ்வொரு வரியிலேயும் சிரிக்க வைச்சிட்டே ராசா!!!

கடைசியிலே கரடி எண்டரி டயலாக் சூப்பரு.... :)

PPattian said...

சூப்பரோ சூப்பர்..

:))))))))))))))

வயிறு வலிக்குதுங்க...

கதிர் said...

செம கலக்கல். :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கப்பி
கடைசி என்ட்ரி செம காமடிங்க!

//ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க//

எஸ்.ஜே.சூர்யா-வை எப்படி பார்ட் பை பார்ட் ரசிச்சிருக்கீங்க-ன்னு நல்லாவே தெரியுது!:-)

வெட்டிப்பயல் said...

கலக்கல் கப்பி...

//சந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா? சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு//

இது சூப்பரோ சூப்பர் :-)

Unknown said...

கப்பி எப்படிப்பா இதெல்லாம்
கலக்குறதுக்குன்னே யோசிப்பயோ

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கேப்பா சூப்பரு

Anonymous said...

Romba nalla irunthuchchu :-)

ஜொள்ளுப்பாண்டி said...

கப்பி கண்ணா சும்மா வளைச்சு வளைசு சிலம்பு சுத்தியிருக்கியே ராசா:))))))) சூப்பரப்பூ ....:)))))

Anonymous said...

அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்.

ILA (a) இளா said...

கடேசியா வந்த அந்த ஈரோ ஆருங்க? ஏன் இப்படி பேசறாரு?

அரை பிளேடு said...

எப்படி.. எப்படி... எப்படி.. இப்படியெல்லாம்...

:))))))))

Unknown said...

கப்பி கலக்கல் மா... பின்னிட்டே போ

Anonymous said...

excellent comedy..

Sandhanam dialogs supero super..

ப்ரசன்னா said...

sema kalakal. supero super

மங்களூர் சிவா said...

//கலக்கல் மா... பின்னிட்டே போ //

ரிபீட்டேய்...

மங்களூர் சிவா

Anonymous said...

எப்படிண்ணா இந்த கலக்கு கலக்கறீங்க? ரொம்பத்தான் எல்டலோரும் கலங்கி போயிட்ருப்பாங்க! விளையாடுங்கண்ணா...

சேகர்

நாகை சிவா said...

என் இனமடா நீ!

விடாம் லொள்ளு சபா பாக்குற அப்படிங்குறது கன்பார்ம் தெரியுது...

அசத்தல்....

அட்டகாசம் பண்ணி இருக்க போ!

வாசு said...

Superb, continue