Tuesday, May 29, 2007

என்ன தலைப்பு வைக்கப் போறீங்கடே?!

கவுஜை தொகுப்பு வெளியிடுவது எப்படி? - பாகம் 2


கவுஜைத் தொகுப்புக்கான முதல் கட்டத்துல தேர்ந்துட்டீங்க. இனி அடுத்த கட்டம். இருங்க இருங்க..இதுதான் எனக்குப் பிடிக்காது. அடுத்த கட்டம்னு சொன்ன உடனேயே கட்டம் கட்டி கவுஜை எழுத ஆரம்பிச்சட்டா எப்படி? கொஞ்சம் பொறுமையா இருங்க.

அதை விட முக்கியமானதா இன்னொண்ணு இருக்கு. அதுதான் அணிந்துரை எழுதி வாங்குறது. 'கவுஜையே எழுதலை. எப்படிய்யா அணிந்துரை வாங்குறது?'ன்னு குழப்பமா இருக்கா? இன்னும் ஹைதர் அலி காலம் தாண்டி மேலே வரவே இல்ல போலிருக்குது நீங்க. கவுஜை இருக்கோ இல்லியோ அணிந்துரை ரொம்ப முக்கியம்யா. கவுஜையே இல்லாம பொஸ்தவம் போட்டாக் கூட மக்கள் ஏத்துக்குவாங்க. அணிந்துரை இல்லேன்னா ஒத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் பால பாடம்.

அதனால முதல்ல அதை சரி பண்ணிடுங்க. அதை எழுதுறது உங்க நண்பரா இருந்தா நல்லது. அப்பத்தான் உங்களைப் பத்தி நாலு வார்த்தை நல்லதாச் சொல்லுவாரு. (வேற எவனும் சொல்ல மாட்டான்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்) ஏன்னா, நாளைக்கு அவருக்கும் இதே மாதிரி கோட்டிக்கார ஆசை வந்து கவுஜை பொஸ்தவம் போடுறாருன்னு வைங்க. அவருக்கு எவன் எழுதிக் கொடுப்பான்? அதனால, நமக்கு நாமேதான் இருக்கோம்னு ஆதுதல் சொல்லி அவர் கிட்ட அணிந்துரை வாங்கிடுங்க.

'சின்னப்பையனா இருக்கும்போதே ரொம்ப யோசனையா திரிவான். எல்லாரும் வானம் சிவப்பா இருக்குன்னு சொன்னா யாரு அந்த மை பாட்டிலை தட்டி விட்டதுன்னு அப்பவே சொல்லுவான். விளையும் பயிர் முளையிலேயே (விளங்காமப் போகும்னு) தெரியும்னு சொல்லுறதை இப்ப நாம் இந்த கவிதை புத்தகம் மூலமா பார்க்கலாம்' குற மாதிரி ஏதாவது நாலு பக்கத்துக்கு எழுதுனா போதும். அதுலேருந்து ஏதாவது நாலு வார்த்தையை எடுத்து 'வானத்தை வசப்படுத்தும் வசீகரப் பார்வைக்குச் சொந்தக்காரன்' அப்படின்னு ஒரு வார்த்தையை மட்டும் புடிச்சி தொங்கிக்கிட்டு அப்படியே அதை உங்க புகைப்படத்துக்குக் கீழே போட்டுடுங்க. உங்க படம் ஏற்கெனவே வானத்தை முறைச்சு பார்க்குற மாதிரி எடுத்து வச்சிருக்கீங்க. கீழே அப்படியே "'வானத்தை வசப்படுத்தும் வசீகரப் பார்வைக்குச் சொந்தக்காரன்' போட்டுடுங்க. சபாஷ்!! பின் பக்கத்து அட்டைக்கான வேலை முடிஞ்சிடுச்சு. ஒரு கவுஜை எப்படி ஆரம்பிக்குதோ எப்படி முடியுதோன்னு யாருக்கும் ஒரு எழவும் தெரியாது. ஆனா, ஒரு கவுஜை தொகுப்பு அதனோட பின்பக்கத்துலேருந்துதான் ஆரம்பிக்குதுன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க.

அணிந்துரைக்கு யாராவது பெரிய ஆளுதான் வேணும்னாலும் பிரச்னையேயில்லை. 'சோத்தைப் போட்டா கூரைக்கு மேல ஆயிரம் காக்கா'ன்னு ஊருல சொல்லுவாங்க. அதே மாதிரி 500 ருபாயிலிருந்து 5000 ரூபாய் வரைக்கும் செலவழிக்கத் தயாராயிருந்தா கவிதைக்கான குறுநில மன்னரோ, பேட்டை தாதாவோ அல்லது பேரரசோ அணிந்துரை எழுதித் தருவாங்க. அதையும் வேணும்னா செய்யலாம். சிலர் கிட்ட அணிந்துரை எழுதும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. 'இப்படித்தான் வெள்ளைக்காரனை விரட்ட நான் ஒரு கவிதை எழுதினேன்னு சொல்லி அவரோட கவிதையை மெல்லமா உங்க அணிந்துரையில் திணிக்குறதுக்குன்னு ஒரு கூட்டம் அலையும். அதுங்க கிட்ட மாட்டிக்காம இருக்குறது நல்லது. இல்லேன்னா நாப்பது பக்க பொஸ்தவுத்துல 30 பக்கம் அணிந்துரை எழுதி அதுல 28 பக்கத்துக்கு அவங்க கவிதையையே சிலாகிச்சு, "இப்படியெல்லாம் இருக்குற என் கவிதையோட கூறுகளை இந்தக் கவிஞனிடமும் காண்கிறேன்'னு கூறுகெட்டத்தனமா எதையாவது எழுதித் தருவாங்க. காசு கொடுத்து இப்படியொரு அவஸ்தை வேணுமான்னு முடிவு பண்ணிக்கோங்கய்யா. "எப்படியும் தண்டச்செலவு. எதுக்கு இதுவும்" னுதான் சுலப ஆலோசனையா உங்க நண்பர் கிட்ட அணிந்துரைன்னு சொன்னேன். காசு இருந்துதுன்னா யாரு கிட்ட வேணும்னா எழுதிக்கலாம்.அது ஒரு பிரச்னையே கிடையாது.

ஆக அணிந்துரை பின்பக்க அட்டைப்படம் எல்லாம் முடிச்சாச்சு. இனி முக்கியமான விசயம்.
பற்க்காதீங்கய்யா. கவுஜை எழுத இன்னும் நேரம் இருக்கு. முதல் பக்கம் என்ன செய்யணும்னு தீர்மானம் செய்ய வேணாமா?

இதுக்கு இணையத்துல இருந்து எதையாவது சுட்டு போட்டுக்கலாம் - கொஞ்சம் வண்ண மயமா இருந்தா நல்லது. காதல் கவுஜைன்னா ரெண்டு இதயத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலையில் விபத்துல மாட்டிக்கிட்ட லாரி மாதிரி கோர்த்து போடணும். சமூகக் கோபம் நெறஞ்ச கவிதைன்னா அதுக்கும் வழியிருக்கு. சிவப்பு அட்டை போட்டு நம்ம கேப்டனோ விழியைக் காட்டிடலாம். பின்நவீனத்துவ கவிதைன்னா ஏதாவதொரு கோட்டோவியம் - 'என்னய்யா சின்னப் புள்ளத்தனமா இருக்கு? கோட்டி ஓவியம் இல்ல' - போட்டுக்கலாம். இல்லேன்னா நவீன ஓவியம்னு எதையாவது யாருக்கும் வெளங்காத ஒண்ணு போட்டுக்கலாம். அதாவது உள்ளடக்கத்தை வெளியிலேயே அடக்கமா சொல்லிடணும் அட்டைப்படம் - உள்ள தொறந்து பாக்காதடான்னு.

அதெல்லாம் இருக்கட்டும். இனி தான் ரொம்ப முக்கியம்.
தலைப்பு. என்ன தலைப்பு வைக்கப் போறீங்கடே?

(நாளையோடு முடியலாம்)

21 comments:

ஜி said...

//பேரரசோ அணிந்துரை எழுதித் தருவாங்க.//

நீங்க 'அந்த'ப் பேரரசுவ சொல்லுதியளா?? அவரு அணிந்துரை எழுதுன கவுஜைய பொஸ்தகமா பொடுததுக்கு பேசாம அத அடக்கம் பண்ணிட்டு போயிடலாமே.....

நானும் ஒரு கவுஜைத் தொகுப்புப் போடலாம்னு இருக்கேன். கொஞ்சம் அணிந்துரை எழுதித் தர்றியளா??

லக்ஷ்மி said...

//(நாளையோடு முடியலாம்)// நம்புறோமுங்க அண்ணாச்சி. ஏன்னா நீங்க க்ளாஸ் முடிச்சப்புறமாத்தானே நான் கவிதை தொகுப்புக்கான வேலைய ஆரம்பிக்கணும். அத்தோட உங்க தனி மெயில் ஐடியும் கொடுத்துருங்க. ஏன்னா உங்களான்டையே அணிந்துரை வாங்கிக்கலாம்னு பாக்கறேன். அதுக்கான ரேட் விஷயமா நாம பேரம் பேசரதெல்லாம் ரகசியமா இருக்கணும் பாருங்க, அதுக்குத்தான் தனி மடல் முகவரி கேக்கறேன். :-)

முத்துகுமரன் said...

அணிந்துரைக்கு அனுப்பின புத்தகம் என்னாச்சு :-)

ALIF AHAMED said...

தலைப்பு. என்ன தலைப்பு வைக்கப் போறீங்கடே?
////


நாளையோடு முடியலாம் இன்னைக்கே படி..:)

Ayyanar Viswanath said...

அண்ணாச்சி
இந்த தொடருக்கான காரணம் எனக்கு விளங்கிடுச்சி ..நடுவரா போன இடத்தில படிக்க நேர்ந்த கவுஜகளோட பாதிப்பில இந்த மாதிரி ஒரு மேட்டர் தோணியிருக்கும்னு நெனைக்கிறேன் சரியா?:)

/அவரு அணிந்துரை எழுதுன கவுஜைய பொஸ்தகமா பொடுததுக்கு பேசாம அத அடக்கம் பண்ணிட்டு போயிடலாமே...../

சூப்பர் ஜி!! சத்தமா சிரிச்சிட்டேன்

நாகை சிவா said...

ஆஹா... என்னமோ சொல்லி இருக்கார்ப்பா.... அனுபவம் பேசுது....

Anonymous said...

அடுத்தவனுக்குக் குழிதோண்டனும்னா கும்பலா வருவீங்களே?

யய்யா ஜி, சும்மாவே நான் பேரரசு எதிரின்னு நாட்டுல பலமான வதந்தி. நீ வேற ராசா. கிளப்பி விட்டுடாதே!

லக்ஷ்மிஜி,
அணிந்துரை என் கிட்ட வாங்கி என்ன புண்ணியம்? நான் கவுஜை எழுதுறதா திட்டம் இருந்தாத்தானே உங்களுக்கு எழுதிக் கொடுப்பேன்?

யோவ் முத்து,

நீ மொதல்ல ஃபோடோ எடுத்துட்டு வாய்யா.

சாத்தான்குளத்தான்

Anonymous said...

அடுத்தவனுக்குக் குழிதோண்டனும்னா கும்பலா வருவீங்களே?

யய்யா ஜி, சும்மாவே நான் பேரரசு எதிரின்னு நாட்டுல பலமான வதந்தி. நீ வேற ராசா. கிளப்பி விட்டுடாதே!

லக்ஷ்மிஜி,
அணிந்துரை என் கிட்ட வாங்கி என்ன புண்ணியம்? நான் கவுஜை எழுதுறதா திட்டம் இருந்தாத்தானே உங்களுக்கு எழுதிக் கொடுப்பேன்?

யோவ் முத்து,

நீ மொதல்ல ஃபோடோ எடுத்துட்டு வாய்யா.

சாத்தான்குளத்தான்

நாகை சிவா said...

//என்ன தலைப்பு வைக்கப் போறீங்கடே?!" //

"தலைப்பில்லா கவிதை"

பெயரயே கவித்துவம் இருக்குல....

"மடத்தலைவனின் மடப்புக்கள்"

(படைப்புகளை மடப்பு ஆக்கிடுவோம்)

Anonymous said...

மின்னல்,

நாளைக்கு முடிச்சிடுவோம். மக்கள் நல்லா இருக்க்ணும்லா.

அய்யனார்,

உமக்காக ஒரு நீலிக்கவுஜை எழுதியிருக்கேன்.கவலையேபடாதீரும். ஜகல கலா கவுஞன் நான் :-)

நாகை சிவா,

அனுபவமா? கிழிஞ்சது போங்க. கவுஜை தொகுப்பு போட்டு மக்கள் நல்லா இருக்கட்டுமேன்னு நெனச்சேன்.

சாத்தான்குளத்தான்

நாகை சிவா said...

ஆனா அண்ணாச்சி, அந்த பின் அட்டை மேட்டரு ரொம்பவே உண்மை, அதை நம்பி ஏமாந்தவங்க பல பேர்.. அதில் நானும் ஒருத்தன். :-(

நாகை சிவா said...

//அனுபவமா? கிழிஞ்சது போங்க. கவுஜை தொகுப்பு போட்டு மக்கள் நல்லா இருக்கட்டுமேன்னு நெனச்சேன்.
//

தொகுப்பு போட்டவங்க சரி, அதை படிச்சவங்க... அவங்கள பத்தியும் சொல்லுங்கவே....

CVR said...

முகவும் சிரித்து ரசித்து படித்தேன்!!
வாழ்த்துக்கள்!! :-)

Ayyanar Viswanath said...

/உமக்காக ஒரு நீலிக்கவுஜை எழுதியிருக்கேன்.கவலையேபடாதீரும்/
அய்யோ அண்ணாச்சி! இன்னொன்னா ..விட்டுடுங்க! வலிக்குது!!:)

Sridhar V said...

ஆசிப் அண்ணாச்சி,

கவித தொகுப்புல இம்புட்டு மேட்டர் இருக்கா... இதெல்லாம் தெரியாம அதக் கண்டாலே காத தூரம் ஓடிட்டிருந்தேன் நான்.

இருங்க... இருங்க... ஒரு 10-15 தொகுப்ப படிச்சிட்டு வர்றேன்.

வரிக்கு வரி சிரிச்சேன் அண்ணாச்சி. இப்படிப்பட்ட பதிவுகள் படிச்சி ரொம்ப நாளாச்சி. ரொம்ப நன்றி.

இராம்/Raam said...

அண்ணாச்சி,

நானும் சும்மா கையை காலை வைச்சிட்டு இருக்காமே 7 - 8 கவிஜ எழுதிட்டேன், அதை பொஸ்தகமா போட்டுறலாமா?

இன்னிக்கு சாயங்காலம் ஓரு போட்டோகாரனை பிடிச்சு எங்க வீட்டு மொட்டமாடியிலே கழுத்து சுளுக்கினவன் மாதிரியும் கையிலே பேனா வைச்சிக்கிட்டு போட்டோ எடுத்துக்கிட்டேன்....

ஓகே தானே... :)

இராம்/Raam said...

//நானும் ஒரு கவுஜைத் தொகுப்புப் போடலாம்னு இருக்கேன். கொஞ்சம் அணிந்துரை எழுதித் தர்றியளா??//

ஜியா,

அண்ணாச்சி மாட்டேன்னு சொன்னாலும் நம்ம பின்நவினத்துவ புலி சாரி, அடர்கானகத்து புலி'கிட்டே அணிந்துரை எழுதி வாங்கிருவோம்......


அப்போதான் படிக்கிற யாருக்குமே ஒன்னும் புரியாது ......... ;)

ALIF AHAMED said...

அண்ணாச்சி நம்ம புரோஃபயில் போட்டோ பாருங்க ஓகேவா

ஹி ஹி

நாங்களும் கவுஜ போட்டுருக்கோம்..

அணிதுரைக்கு அய்யனார அடமானம் வைச்சாவது வாங்கியாறேன்

என்ன சொல்லுதியேள்...:)

Boston Bala said...

:))

ILA (a) இளா said...

பொஸ்தவம் போடுறதுல இவ்வளவு இருக்கா, ஆசிப்பு கலக்கிபுட்டீங்க போங்க.

கப்பி | Kappi said...

:))