Tuesday, May 22, 2007

அம்புட்டு பேரும் பிஸியோ பிஸி!

என்னடா இது ஒரு வாரம் இந்த பசங்க எந்த பதிவும் போடாமா எஸ்கேப் ஆயிட்டானுங்க என்று நீங்கள் எல்லாம் கேட்பது நியாயம் தான். இது போல இப்படி அம்போனு விட்டுட்டு போக கூடாது தான், ஆயிரம் ஆணிகள் வந்து குவிந்த போதிலும் அதை எல்லாம் இடக்கையால் தடுத்துக் கொண்டே வலது கையால் டைப்பியே மொக்கை பதிவு போட்டு கொண்டு இருந்த நாங்கள் தற்பொழுது பதிவு போட விடாமல் செய்தது என்ன? அன்பு, பண்பு, பாசம், விசுவாசம். ஆமாங்க எங்களின் ஒரே அண்ணனும், சங்கத்தின் நிரந்திர தலைவருமான தல கைப்புள்ளையின் விக்கெட் விழும் விழாவிற்கான ஏற்பாட்டில் நாங்க எல்லாம் பிஸி. அதான் இந்த பக்கம் வர முடியவில்லை. இப்ப கூட யாருக்கும் தெரியாம வந்து தான் விழாவை பத்தி ஒரு அப்டேட் பதிவு போட தான் ஒரு எட்டு எட்டி பார்த்தேன்...



நம்ம சங்கத்து சிங்கங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக்கிட்டு அதில் பிஸியா இருக்காங்க.

கண்ணாலம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதால் அதை நல்லப்படியா அறுவடை செய்யும் பொருப்பை நம்ம விவசாயி இளா எடுத்துக்கிட்டார். அறுவடைக்கு தேவையான பொருட்களை வாங்க அவரு ஜுட்.

இது வரை கச்சேரியை பெயரில் மட்டும் வைத்துக் கொண்டு இருந்து தேவ், நம்ம தலய விட வேறு எந்த நல்லவனும் தனக்கு கிடைக்க மாட்டேன் என்று உறுதியா நம்பி இந்த விழாவுக்கு நான் கச்சேரி பண்ணி தீருவேன் என்று முடிவு எடுத்து தினமும் கூவத்தில் நின்று சாசனம் பண்ணிக்கிட்டு இருக்கார்.

நம்ம வெட்டி, தலையின் உத்தரவுப்படி உலகத்தில் இருக்கும் அத்தனை தலைவர்களுக்கும் பத்திரிக்கையை நம் தலையின் சார்பாக நேரில் வைக்க உலகப்பயணம் மேற்க்கொண்டு உள்ளார்.

பாண்டி பய, சரக்கு வாங்க பாண்டிச்சேரிக்கு போயிட்டான். அங்க தான் டாக்ஸ் கிடையாதாம், அதனால் விலை மலிவாக இருக்கும் என்று அவன் ஜுட். (சரக்குனா - மளிகை)

கப்பி, சிவகாசி போய்கிட்டு இருக்கான், விழாவுல வாண வேடிக்கை தான் ஹைலைட்டே, லயன்ஸ் கம்பெனி இந்த விழாவை முன்னிட்டு புது புது வகையான வாண வேடிக்கைகளை அறிமுகப்படுத்துறாங்க, அதை பார்வையிட தான் அவன் போய் இருக்கான்.

சிபி, சங்கத்தின் அம்புட்டு சனங்களுக்கு புது சொக்கா எடுக்க சூரத் போய் இருக்கார். நமீதா தற்சமயம் சூரத்தில் இருந்தாலும் சிபி அவர் கடைக்கு போக மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து விட்டு தான் பிளைட்டே ஏறினார். (நயனை தவிர வேற நடிகைகளை நினைக்க மாட்டாராம், நமீதாவை பார்த்தால் சிலிப்பாக சான்ஸ் இருப்பதால் இந்த பிராமிஸாம்)

ராம், மதுரையின் சுற்று வட்டாரங்களில் அதிரடி சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய் கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் போன்ற ஆட்டங்களின் தலைச்சிறந்த ஆட்டக்காரர்களை தேர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கிறார். திண்டுக்கல் தப்பு, தஞ்சையில் இருந்து தவில், திருவாரூரில் இருந்து நாதஸ்வரம் போன்ற இன்னபிற எல்லாத்தையும் புடிச்சுடு வர பொறுப்பை அவரு ஏற்று இருக்கார்.

வழக்கம் போல் தேவ் சொதப்புவார் என்ற சந்தேகத்துக்கு இடம் இல்லாம் தெரிந்த காரணத்தால் தம்பி கதிர் டிரம்ஸ் சிவமணியை ராசாவுடன் சேர்ந்து வாசிக்க சென்னைக்கு தள்ளிட்டு வர முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

உலகின் பல மூலைகளில் இருந்து வரும் விருந்தினர்களை தங்க வைக்கும் ஏற்பாடுகளை நம்ம காமேஷ் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

நான் என்ன பண்ணுறேன் என்று கேட்குறீங்களா, அறுசுவை நம்ம இன்சார்ஜ், செட்டிநாடு ஸ்டைல் ஆரம்பிச்சு மெக்ஸிகன் ஸ்டைல் வரைக்கும் எல்லா வகையான டிஷ்ம் உண்டு. அறுசுவை அரசர், அரசிகளை எல்லாம் கொண்டு வந்து இறக்கியாச்சு. மெனுவும் ரெடி பண்ணியாச்சு. நாளைக்கு ட்ரையல் பாக்குறோம், இதுக்காவே நம்ம நாட்ஸ் வரார். நமக்கும் ஒரு எலியை தேடி அலைய வேண்டிய வேலை மிச்சம்னு சும்மா இருக்கோம்.

சரி அப்பரசண்டிகள் எல்லாம் பிஸியா இருக்கீங்க, உங்க தல என்ன பண்ணுறார் என்று கேட்குறீங்களா... அழகன் படத்தில் வர மம்முட்டி மாதிரி போன்ல தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கார். விடிய விடிய சங்கீத ..... அய்யோ தல அடிக்காதீங்க தல... வலிக்குது.... வேணாம்..... நான் ஏதும் சொல்லல....

14 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருங்கடே!!

Udhayakumar said...

கைப்பு அண்ணனை சந்திக்கு இழுத்து அவர் செல்போன் பில்லை கேப்பீங்க போல...

சிபியார் சிலிப்பாகாமல் இருக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதாக கேள்வி.

மங்கை said...

//அழகன் படத்தில் வர மம்முட்டி மாதிரி போன்ல தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கார். விடிய விடிய சங்கீத ..... அய்யோ தல அடிக்காதீங்க தல... வலிக்குது.... வேணாம்..... நான் ஏதும் சொல்லல.... ///

தலைவலியும் காய்ச்சலும் அவங்கவங்களுக்கு வந்தாதான தெரியும்..:-))...

நாமக்கல் சிபி said...

//(நயனை தவிர வேற நடிகைகளை நினைக்க மாட்டாராம், நமீதாவை பார்த்தால் சிலிப்பாக சான்ஸ் இருப்பதால் இந்த பிராமிஸாம்)
//

அதுவும் சரிதான்!

:)

நாமக்கல் சிபி said...

//நல்லா இருங்கடே!! //

சாத்தான்குளத்து பாஷையில் வாழ்த்திய அன்பு உள்ளத்திற்கு சங்கத்தினர் அனைவரின் சார்பாகவும் நன்றி கொத்ஸ்!

நாமக்கல் சிபி said...

//கைப்பு அண்ணனை சந்திக்கு இழுத்து அவர் செல்போன் பில்லை கேப்பீங்க போல...//

கேக்காம என்ன உதய்! இது நாள் வரை சங்கத்து காசுலதான தல ஃபோன்ல பேசிகிட்டிருக்காரு!

நாமக்கல் சிபி said...

எனக்காக சவுண்டாக சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளும் உதய்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

நாகை சிவா said...

//தலைவலியும் காய்ச்சலும் அவங்கவங்களுக்கு வந்தாதான தெரியும்..:-))... //

தலைவலி, காய்ச்சல் எல்லாம் எங்களுக்கும் வந்து இருக்கு... ஆனா இது இன்னும் வரலையே... வரலையே.... :-))))))

dubukudisciple said...

aha!!
kaipukku kannalama??
seri thaan...
nadakatum vaazhthukal

Syam said...

பங்காளி சாப்பாடு உன்னோட்ட இன்சார்ஜ்சா முதல்லா ஊறுகாய ரெடி பண்ண சொல்லு :-)

Syam said...

//கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய் கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் போன்ற ஆட்டங்களின் தலைச்சிறந்த ஆட்டக்காரர்களை தேர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கிறார். திண்டுக்கல் தப்பு, தஞ்சையில் இருந்து தவில், திருவாரூரில் இருந்து நாதஸ்வரம் //

கள்ளக்குறிச்சி ராஸ் வறாரா :-)

நாகை சிவா said...

//பங்காளி சாப்பாடு உன்னோட்ட இன்சார்ஜ்சா முதல்லா ஊறுகாய ரெடி பண்ண சொல்லு :-) //

அது இல்லாமலா பங்கு, அதான் மெயினே.... மத்தது எல்லாம் சைட் தானே....

நாகை சிவா said...

//கள்ளக்குறிச்சி ராஸ் வறாரா :-) //

இது வரைக்கும் கூப்பிடல, நீயே கேட்ட பிறகு மறுக்க முடியுமா... உடனே ஆள் அனுப்பி அள்ளிட்டு வர சொல்லுறேன்...

Anonymous said...

நாமக்கல் சிபி சொன்னது...

//கைப்பு அண்ணனை சந்திக்கு இழுத்து அவர் செல்போன் பில்லை கேப்பீங்க போல...//

கேக்காம என்ன உதய்! இது நாள் வரை சங்கத்து காசுலதான தல ஃபோன்ல பேசிகிட்டிருக்காரு!
Wed May 23, 07:55:00 AM IST//



மக்கா .. கணக்கு கேட்டு சங்கத்தை உடைக்க போறீங்களா... நல்லா இருங்கடே