Friday, April 27, 2007

என்ன பொழப்பு இது...

திடீர்னு வேலை வந்துருச்சு...என்னாது நமக்கே ஆணியா அப்படின்னு யோசிச்சிட்டு இருந்த நேரம் பாத்து எங்க டீம்ல வெக்கேசன்ல போன வெள்ளைக்காரி லவ்வர் கூட சண்டை போட்டுட்டு பாதில வந்துட்டா,சரி இதுதான் சமயம் அவ கைல ஆணி புடுங்கற மிசின ஒப்படைச்சுட வேண்டியதுதான்னு மூஞ்சி முள் எலி மாதிரி இருந்தாலும் யூ லுக் கார்ஜியஸ்,கழுதைஸ் அது இதுனு சொல்லி ஆணி புடுங்கர மிசின அவ கைல கொடுத்துடோம்ல...நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...

அமெரிக்கால நம்ம மக்கள் வசிக்கறது பத்தி நிறையபேரு எழுதி இருக்காங்க...நிறைய பேருக்கு இந்த வாழ்க்கை புடிச்சு இருக்கு....நிறைய பேருக்கு புடிக்கல...அது பத்தி எல்லாம் ஆராச்சி பண்றதுக்கு நமக்கு அறிவு இல்ல....எனக்கு இங்க புடிக்கல பல காரணம் இருந்தாலும் சிலத சொல்றேன்...உங்களுக்கும் ஏதாவது இருந்தா சொல்லுங்க....

1.இந்த போலீசு தொல்லை....நம்ம ஊர்ல கண்டக்டர் டிக்கட் குடுத்திட்டு காசு வாங்குவாங்க...அந்த வேலைய இங்க போலீசுகாரன் பண்றான்...
2.வெளியூர் போகும் போது ஒரு அவுசர ஆத்திரத்துக்கு ஓரமா நிறுத்தி ஒன் பாத்ரூம் போனா பைன் போடுறாய்ங்க...
3.நினைச்சா ஒரு நாயர் கடைக்கோ,அஞ்சப்பர்க்கோ போக முடியுதா..
4.வாரக்கடைசில பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணா...என்ன வெறுப்பு ஏத்தறதுக்கு சொல்றானுங்களா இல்ல உண்மைலயே பண்றாங்கன்னு தெரியல...எல்லோரும் ஒன்னு சேந்து மட்டன்,சிக்கன் ல எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் வெச்சு சாப்பிட்டு இருக்கோம்னு சொல்றானுக...எது எப்படியோ எல்லோரும் நல்லா சாப்பிட்டு ஒரு ஒருத்தனும் குறைஞ்சது ஒரு டன் வெயிட் இருக்கானுக...
ஏன்னா இவனுகள நம்ப முடியாது...படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....

எங்க பக்கத்து வீட்ல ஊருக்கு போய் இருக்காங்க...பசங்களுக்கு அங்க கிராமத்துல இருந்த ஆடு,மாடு எல்லாம் பார்த்து புடிச்சு போய்ருச்சு...இங்க வந்த அப்புறம் அந்த பையன் சொல்லி இருக்கான்...dad you guys are too lucky, you played with cows and buffalows all the time while you grew up...அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு.....பாவம் அந்த பையனுக்கு தெரியல அது cows and buffalows கூட play பண்றது இல்ல, அதுக்கு பேரு மாடு மேய்க்கறதுனு.....

எங்க தெருல இன்னொரு வீடு பங்களாதேசி...அந்த அம்மா இன்னொரு வீட்டுக்கு போய்...கிரீம் கிதர் ஹே..கிரீம் கிதர் ஹே...னு கேட்டு இருக்கு...அந்த வீட்டுகாரங்களும் body cream னு நினைச்சு...இது கூடவா வந்து ஓசி கேப்பானு நினைச்சிட்டு...எடுத்து குடுத்து இருக்காங்க...அந்த அம்மா அத வாங்காம..மறுபடியும் கிரீம் கிதர் ஹேனு பாட ஆரம்பிச்சு இருக்கு...அப்புறம் தான் தெரிஞ்சுது..இந்த வீட்டு பையன் பேரு பிரேம் அததான் அந்த அம்மா கிரீம் கீரீம் னு சொல்லி இருக்கு....

எப்படியோ வெள்ளக்காரி புண்ணியத்துல ஒரு போஸ்ட்டு தேத்தியாச்சு...மறக்காம ஆப்படிச்சிட்டு போங்க....

118 comments:

KK said...

pharsht comment potukuren ejamaan :)

வெட்டிப்பயல் said...

me 2 :-)

Priya said...

3rd ??

Priya said...

nattamai, appalika varen..

Arunkumar said...

வண்டிய ஓரங்கட்டி சாவிய கூட எடுத்துக்கத் தெரியல, இவனுங்கெல்லாம்
என்ன போலிஸோ

//
சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....
//
ROTFL :)
காலேஜ்ல பக்கத்து டிபார்ட்மெண்டோட technical symposiumக்கு எல்லாம் காசு
வாங்கினது தான் ஞாபவம் வர்து :)

//
அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky
//
எல்லா வீட்லயும் இப்பிடித்தானா தல?
//வெக்கேசன்ல போன வெள்ளைக்காரி லவ்வர் கூட சண்டை போட்டுட்டு பாதில வந்துட்டா
//
இங்க லீவுல போனவன் வரவே இல்ல.. போன எடத்துல இன்னொன்ன தேத்திட்டான் போல :)

Anonymous said...

attendance naats :-)

-porkodi

Dreamzz said...

3?

Dreamzz said...

//நல்லா சாப்பிட்டு ஒரு ஒருத்தனும் குறைஞ்சது ஒரு டன் வெயிட் இருக்கானுக...
//
nalla soneenga :)

Dreamzz said...

//யூ லுக் கார்ஜியஸ்,கழுதைஸ் அது இதுனு சொல்லி ஆணி புடுங்கர மிசின அவ கைல கொடுத்துடோம்ல//
ROFL! nalla idea!

.:: மை ஃபிரண்ட் ::. said...

உங்களுக்கு ஆப்பு வைக்கலாம்ன்னு வந்தா நீங்க வெள்ளகாரிக்கு ஆப்பு வைச்சிறுக்கீங்களே...

நாகை சிவா said...

me 3 :-)

என்ன பொழப்புய்யா இது....

I M NOT ACE :) :) said...

படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....

I M NOT ACE :) :) said...

//படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....
//

ROTFL :) :)

I M NOT ACE :) :) said...

//அது cows and buffalows கூட play பண்றது இல்ல, அதுக்கு பேரு மாடு மேய்க்கறதுனு.....//

Nattamai full formala irukeegna polirukku.. LOL :) :)

நாகை சிவா said...

//"என்ன பொழப்பு இது..." //

சரியா சொன்ன பங்கு, இந்த நாறப் பொழப்புக்கு நெஞ்சல சந்தனத்த தடவிக்கிட்டு பண்ணையம் பாத்து போயிடலாம் வார நாட்களில் நைட் படுக்கும் போது தோணும், காலையில் எழுந்தா ஆஹா ஆபிஸ் இன்னிக்கும் லேட் ஆயிடும் போல இருக்கேனு ஒரு பரபரப்பு வந்து நைட் நினைவு நைட் கனவாகவே போயிடுது.

SathyaPriyan said...

//படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....
//
என்னாதிது வாங்குனவங்கன்னு third person லே சொல்லிகிட்டு?????????? வாங்குனோம்னு first person லே சொல்லறது.......

ROTFL :-)

மு.கார்த்திகேயன் said...

ஆப்படிக்கிறதுக்கு சொல்லிய கொடுக்கணும்..
அதுவும் நாட்டமைக்குன்னா, பின்னால திரும்பி பாருங்க ஊரே திரண்டு கிடக்கு

மு.கார்த்திகேயன் said...

எப்படியோ வெற்றிகரமா ஒரு மாசத்து அட்லாஸ் வாலிபர் பதவியை நல்லா ஓட்டிட்டீங்க நாட்டாமை..

அதுக்காக உங்களை வாலிபர்னு எல்லாம் சொல்லமுடியாதுன்னு நம்ம மக்கள் சொல்றாங்க நாட்டாமை

Priya said...

//எங்க டீம்ல வெக்கேசன்ல போன வெள்ளைக்காரி லவ்வர் கூட சண்டை போட்டுட்டு பாதில வந்துட்டா//

உண்மைய சொல்லுங்க அவளா போனாளா? நீங்க ஆணி அதிகமாயிடுச்சேனு, ஏதாவது பண்ணி கிளப்பி விட்டிங்களா?

Priya said...

//என்ன வெறுப்பு ஏத்தறதுக்கு சொல்றானுங்களா இல்ல உண்மைலயே பண்றாங்கன்னு தெரியல...எல்லோரும் ஒன்னு சேந்து மட்டன்,சிக்கன் ல எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் வெச்சு சாப்பிட்டு இருக்கோம்னு சொல்றானுக...//

இதே தான். என் ஃப்ரெண்ட்ஸூம் எப்ப கேட்டாலும் அந்த ஹோட்டலுக்கு போனோம், இந்த ஹோட்டலுக்கு போனோம்னு சொல்றாங்க. வீட்ல என்னனா அவங்க கல்யாணத்துக்கு போனோம், இவங்க ரிஸப்ஷனுக்கு போனோம்னு நல்லா சாப்டுட்டு வந்துடறாங்க.

Priya said...

//அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு.....//

ROFTL :)

Priya said...

//படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....//

சான்ஸே இல்ல. ஐடியா குடுத்தது நீங்க தானே?

Priya said...

//Dreamzz said...
3? //

// நாகை சிவா said...
me 3 :-)//

எனக்கு மட்டும் தான் 1,2,3 ஒழுங்கா எண்ண தெரியுது.

மின்னுது மின்னல் said...

Priya said...
//Dreamzz said...
3? //

// நாகை சிவா said...
me 3 :-)//

எனக்கு மட்டும் தான் 1,2,3 ஒழுங்கா எண்ண தெரியுது.

//
24 ??

மணி ப்ரகாஷ் said...

ippathaikku present.appala varen

aiiiiiiiiiii fridayyyyyyyyyyyyyyy veetkavathu povammmmmmmmmmmmmmmmmm

கீதா சாம்பசிவம் said...

attendance mattum. appuram vanthu padikkiren. rombave perisa irukku. :D

KK said...

//அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு.....//

Vara aangalukku oru mariyathaiye illama pochu... namakku oru bharathi varamaatara??

KK said...

//படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....
//

Ithellam munnadiye thonama poche.... naan book vanganumnu illa kaasu vaangi iruken :)

மணி ப்ரகாஷ் said...

//வாரக்கடைசில பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணா...என்ன வெறுப்பு ஏத்தறதுக்கு சொல்றானுங்களா இல்ல உண்மைலயே பண்றாங்கன்னு தெரியல...எல்லோரும் ஒன்னு சேந்து மட்டன்,சிக்கன் ல எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் வெச்சு சாப்பிட்டு இருக்கோம்னு சொல்றானுக...எது எப்படியோ எல்லோரும் நல்லா சாப்பிட்டு ஒரு ஒருத்தனும் குறைஞ்சது ஒரு டன் வெயிட் இருக்கானுக//

ஆமாம் நாட்டாமை .,,, நான் போன் பன்னினா, இன்னிக்கு இவனோட டீரிட்டா சோ அஞ்சப்பர்ல இருக்கோம்,இன்னைக்கு அவன் முனுசாமில இருக்கோம்னு நம்ம வயித்தில நெருப்ப அள்ளி கொட்டுரானுங்க..

அதனாலதான் சும்மாகாச்சிக்கும் அவங்க போன் பண்ணும்போது டேய் நான் கொஞ்சம் பிஸிடா Grill chikken pannikitu irukken, Ittaliyan style la try panromnu oru உதார் விட்டு கிட்டு இருக்கேன்,,,

ஹி.ஹீ...

மின்னுது மின்னல் said...

//
என்ன பொழப்பு இது...
//நீங்க நொம்ப நல்லவரு...

(உண்மையை ஒத்துக்கிட்டத்துக்கு...:) )

Mahesh said...

Naataamai...Sangathula urupinar card kudupeengala?

Syam said...

//pharsht comment potukuren ejamaan //

KK, உங்க பாசத்துக்கு நான் அடிமை...
:-)

//me 2//

என்ன வெட்டி இம்புட்டு ஷார்ட்டா முடிச்சிட்டீங்க :-)

//3rd ?? //

நீங்களேதான் priya :-)

Syam said...

//வண்டிய ஓரங்கட்டி சாவிய கூட எடுத்துக்கத் தெரியல, இவனுங்கெல்லாம்
என்ன போலிஸோ//

arun, அந்த டெக்னாலஜி தெரிஞ்சு இருந்தா தான் இவனுக எங்கயோ போய் இருப்பாங்களே...

//காலேஜ்ல பக்கத்து டிபார்ட்மெண்டோட technical symposiumக்கு //

நீங்களும் பெரிய டகால்டி பண்ணி இருக்கீங்க...:-)

Syam said...

//attendance naats :-)

-porkodi //

கொடி, அப்படின்னா?...:-)

Syam said...

//ROFL! nalla idea! //

dreamzz, என்ன பன்றது நமக்கும் வயிறு இருக்கு இல்ல...:-)

Syam said...

//உங்களுக்கு ஆப்பு வைக்கலாம்ன்னு வந்தா நீங்க வெள்ளகாரிக்கு ஆப்பு வைச்சிறுக்கீங்களே... //

மை பிரண்ட், யக்கா உங்க ஆப்புக்கு ஈடு இனை உண்டா :-)

Syam said...

//me 3 :-)

என்ன பொழப்புய்யா இது....//

பங்கு என்னமோ நாமலும் பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்...ஒரு நெத்திலி ஃபிரை உண்டா, இல்ல நமக்கு எல்லாம தேவை படுற பிரைன் பிரை தான் கிடைக்குமா...:-)

Syam said...

//Nattamai full formala irukeegna polirukku.. LOL :) :) //

வாங்க I am not ACE...என்னமோ ஓடிட்டு இருக்கு...ஆமா என்ன திடீர்னு பேர மாத்திட்டீங்க...என்ன கொடுமை இது ஐ ஏம் நாட் ஏஸ் :-)

Syam said...

//இந்த நாறப் பொழப்புக்கு நெஞ்சல சந்தனத்த தடவிக்கிட்டு பண்ணையம் பாத்து போயிடலாம் வார நாட்களில் நைட் படுக்கும் போது தோணும்//

பங்கு, நான் ஊர்ல சொல்லி சந்தனம் வாங்கி வைக்க சொல்லிட்டேன் எப்பவேனாலும் கிளம்ப ரெடியா :-)

Syam said...

//என்னாதிது வாங்குனவங்கன்னு third person லே சொல்லிகிட்டு??????????//

sathya, நீங்க சொல்றது சரிதான்...ஆனா எங்க அப்பா ஆப்பு அடிச்சுடுவார்...அதுனால அவருக்கு தெரியாத WINDOWS,UNIX, JAVA வாங்கறதுக்கு நான் காசு வாங்கினேன்
:-)

Syam said...

//அதுவும் நாட்டமைக்குன்னா, பின்னால திரும்பி பாருங்க ஊரே திரண்டு கிடக்கு //

தல, அம்புட்டும் பாசம்...

//அதுக்காக உங்களை வாலிபர்னு எல்லாம் சொல்லமுடியாதுன்னு நம்ம மக்கள் சொல்றாங்க நாட்டாமை//

நான் எப்போ வாலிபர்னு சொல்ல சொன்னேன்...அதுக்கு எல்லாம் இன்னும் நிறைய வருசம் இருக்கு :-)

Syam said...

//நீங்க ஆணி அதிகமாயிடுச்சேனு, ஏதாவது பண்ணி கிளப்பி விட்டிங்களா?//

Priya, என்னங்க இப்படி கேக்கறீங்க...ஆணி அதிமானா நான் எதுக்கு அவள அனுப்பறேன்...

//என் ஃப்ரெண்ட்ஸூம் எப்ப கேட்டாலும் அந்த ஹோட்டலுக்கு போனோம், இந்த ஹோட்டலுக்கு போனோம்னு சொல்றாங்க//

அவங்களுக்கு எல்லா 24 ஹவர்ஸ் வயித்து வலி வரனும்...

//சான்ஸே இல்ல. ஐடியா குடுத்தது நீங்க தானே? //

ஆமானு சொன்னா வேற யார் கிட்டயாவது கத விடுனு சொல்வீங்க...இல்லனு சொன்னா நம்ப மாட்டீங்க...:-)

Syam said...

//24 ?? //

மின்னல், கணக்குல சூர புலியா இருப்பீங்க போல இருக்கு...

//நீங்க நொம்ப நல்லவரு...

(உண்மையை ஒத்துக்கிட்டத்துக்கு...:) ) //

அப்போ நீங்க ஒத்துக்கலயா :-)

dubukudisciple said...

enna pozhapu idhu.. keteengale..enna kodumai idunu kekama...appuram saravanan blog ulagatha vite poi iruparu

dubukudisciple said...

திடீர்னு வேலை வந்துருச்சு...என்னாது நமக்கே ஆணியா அப்படின்னு யோசிச்சிட்டு //
nattamai..aaniya?? kadapara illa kuduthu irunthaga pudungarthuku...adhu aniya eppadi marichu?

dubukudisciple said...

வேண்டியதுதான்னு மூஞ்சி முள் எலி மாதிரி இருந்தாலும் யூ லுக் கார்ஜியஸ்,கழுதைஸ் அது இதுனு சொல்லி ஆணி புடுங்கர மிசின அவ கைல கொடுத்துடோம்ல///
adu dhaane.. evanda eppada emaaruvannu naama thaan kathukitu irukome..porupa oppadaikarthuku

dubukudisciple said...

ஆராச்சி பண்றதுக்கு நமக்கு அறிவு இல்ல///
naatmai aaraichi pannrathuku thaane arivu illa..my friendukite sollunga.. G3 kite solli panni tharuvaanga

dubukudisciple said...

இந்த போலீசு தொல்லை....நம்ம ஊர்ல கண்டக்டர் டிக்கட் குடுத்திட்டு காசு வாங்குவாங்க...அந்த வேலைய இங்க போலீசுகாரன் பண்றான்////
oru samayam andha police karan munnadi conductor velai thaan parthutu irunthano ennavo??

dubukudisciple said...

வெளியூர் போகும் போது ஒரு அவுசர ஆத்திரத்துக்கு ஓரமா நிறுத்தி ஒன் பாத்ரூம் போனா பைன் போடுறாய்ங்க///
seri natamai inime two bathroom try panni parunga

dubukudisciple said...

நினைச்சா ஒரு நாயர் கடைக்கோ,அஞ்சப்பர்க்கோ போக முடியுதா////
ei yarupa ange..namma natamai varutha padarar illa..nama sangathula solli idu ellam open panna sollu

dubukudisciple said...

seri natamai iniki kummi ivalavu thaa...micham ellam monday..ROTFL Post

Sree's Views said...

hello Naatamai..
neenga sollaradhu nembaa correeet :P
oru Anjappar illadhja ooru oru ooraa? enatha KFC irundhu enna use..avan enna tangri kababaa poda poraan? dhanda kabab dhaaney podaporaan :)

Sree's Views said...

en sister ellam orey polambal dhaan..oru malli poo vechikka mudiyudhaannu azhuvaachi...India vandha thalaila oru nandhavanam vechikittu irupaanga :)

appuram innum naraiya polambals...murungakka frozen..chicken atta maari irukku..nalla sweets kidaikaadhu etc.

Sree's Views said...

so unga office vellai eli mooja paathu 'gorgeous' nnu soneengala :P
poi sonnalum porundha sollanum Naataamai :P
appuram weekend enna pannareenga?

நாகை சிவா said...

////Dreamzz said...
3? //

// நாகை சிவா said...
me 3 :-)//

எனக்கு மட்டும் தான் 1,2,3 ஒழுங்கா எண்ண தெரியுது. //

என்னங்க பண்ணுறது ப்ரியா. கணக்கு சரியா வந்து இருந்தா தான் நாம எங்கயோ போய் இருப்போமே!.....

நாகை சிவா said...

//பங்கு என்னமோ நாமலும் பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்...ஒரு நெத்திலி ஃபிரை உண்டா, இல்ல நமக்கு எல்லாம தேவை படுற பிரைன் பிரை தான் கிடைக்குமா...:-) //

யோவ் அதை எல்லாம் ஞாபகப்படுத்தா சொல்லிட்டேன், நானே ஒரு மாதிரி மனசையும், நாக்கையும் தயார் பண்ணி பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்கேன். புரியுதா....

நேத்து வீட்டுக்கு போன் பண்ணினா, விரால் மீன் பொறிக்குறேன் என மம்ஸ் உசுப்பேத்துறாங்க, இப்ப நீ....

நல்லா இருங்கய்யா, நல்லாவே இருங்க.

நாகை சிவா said...

//பங்கு, நான் ஊர்ல சொல்லி சந்தனம் வாங்கி வைக்க சொல்லிட்டேன் எப்பவேனாலும் கிளம்ப ரெடியா :-) //

ஒகே தான் ஒரு பண்ணையும் ரெடி பண்ணு! இரண்டு பேரும் சேர்ந்து கிளம்பிடலாம்.

Syam said...

//attendance mattum. appuram vanthu padikkiren. rombave perisa irukku. :D //

தலைவியே வாங்க வாங்க மெதுவா வாங்க...:-)

Padmapriya said...

//மூஞ்சி முள் எலி மாதிரி இருந்தாலும் யூ லுக் கார்ஜியஸ்,கழுதைஸ் அது இதுனு சொல்லி //
ROTFL :)

Padmapriya said...

//நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...// chance ye illa :)

Padmapriya said...

//இவனுகள நம்ப முடியாது...படிக்கற (மாதிரி நடிக்கற) காலத்துலயே வீட்டுல பொய் சொல்லி சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....//
innoru ROTFL :)

Syam said...

//Vara aangalukku oru mariyathaiye illama pochu... namakku oru bharathi varamaatara?? //

KK, சரியா சொன்னீங்க...நமக்கு எல்லாம் எப்போதான் விடிவு காலம் பிறக்குமோ....

//Ithellam munnadiye thonama poche.... naan book vanganumnu illa kaasu vaangi iruken//

காசு வாங்கனும் அதுதான் முக்கியம்...எப்படி வாங்குனா என்ன :-)

Syam said...

// நான் போன் பன்னினா, இன்னிக்கு இவனோட டீரிட்டா சோ அஞ்சப்பர்ல இருக்கோம்,இன்னைக்கு அவன் முனுசாமில இருக்கோம்னு நம்ம வயித்தில நெருப்ப அள்ளி கொட்டுரானுங்க..//

அனியாயம் பண்றாய்ங்க...

//கொஞ்சம் பிஸிடா Grill chikken pannikitu irukken, Ittaliyan style la try panromnu oru உதார் விட்டு கிட்டு இருக்கேன்,,,//

நானும் அப்படித்தான் ஊர ஏமாத்திட்டு இருந்தேன் மணி, அதயும் ஒரு நாதாரி வந்து பார்த்திட்டு போய்...இப்போ அதுக்கும் மவுசு இல்லாம போச்சு :-)

Syam said...

//Naataamai...Sangathula urupinar card kudupeengala? //

மகேஷ், உங்களுக்கு இல்லாததா...ரேசன் கார்டே குடுத்துட்டா போச்சு :-)

கோபிநாத் said...

\\வாரக்கடைசில பிரண்ட்ஸ்க்கு போன் பண்ணா...என்ன வெறுப்பு ஏத்தறதுக்கு சொல்றானுங்களா இல்ல உண்மைலயே பண்றாங்கன்னு தெரியல...எல்லோரும் ஒன்னு சேந்து மட்டன்,சிக்கன் ல எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் வெச்சு சாப்பிட்டு இருக்கோம்னு சொல்றானுக...எது எப்படியோ எல்லோரும் நல்லா சாப்பிட்டு ஒரு ஒருத்தனும் குறைஞ்சது ஒரு டன் வெயிட் இருக்கானுக...\\

அட....இதுகூட பரவாயில்ல நாட்டமை....அவன்.... அவன் கல்யாணம்ன்னு சொல்லி...... சீக்கிரம் வந்து சாப்பிட்டு போன்னு கும்மி அடிக்கிறானுங்க ;(

இராம் said...

ஹய்யா நாந்தான் பர்ஸ்ட்
ன்னு சொல்லமுடியலை..... ஸோ நாந்தான் 66'ன்னு சொல்லிக்கிறேன்.....

ஹிஹி

Bharani said...

//நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்//....annathe...unga policya appadiye follow panren :)

Bharani said...

//எனக்கு இங்க புடிக்கல //....ennakum anga pudikala...

Bharani said...

//நினைச்சா ஒரு நாயர் கடைக்கோ,அஞ்சப்பர்க்கோ போக முடியுதா//....idhu dhaan first reason ennaku....veeta vutu veliya erangina suthi makkala paarthutu...anga ennadana....veeta suthi ellam verichodi kedaku....enna kodumai ace idhu :(

Bharani said...

//சைன் தீட்டா(sin theta), காஸ் தீட்டா (cos theta) வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான//...LOL...appa innaki enga teacher practicals vaangitu vara sonnangappanu kaasu vaanginavanga enga pasanga :)

Bharani said...

//dad you guys are too lucky, you played with cows and buffalows all the time while you grew up...அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு///...aha....kalyanam katikaradhunaal vara kooduthal designations idhellam :)

Bharani said...

//பிரேம் அததான் அந்த அம்மா கிரீம் கீரீம் னு சொல்லி இருக்கு....//....atleast karim-a kream-nu sonna kooda iru artham iruku...adhu eppadi prem-a....enna kodumai....

Bharani said...

//எப்படியோ வெள்ளக்காரி புண்ணியத்துல ஒரு போஸ்ட்டு தேத்தியாச்சு...மறக்காம ஆப்படிச்சிட்டு போங்க//.....eppadi annathe...atlas vaalibar aanadhula irundhu asaraama post podareenga.....avvvvv....

balar said...

நாட்டாமை நீங்க சொன்ன நாலும் ரொம்ப உண்மை...)

.:: மை ஃபிரண்ட் ::. said...

3 குவாட்டர்..

ஒன்னு நாட்ஸ்க்கு..
இன்னொன்னு வெட்ஸ்க்கு..
கடைசி புல்ஸ்க்கு...

தம்பிக்கு வேணாம்.. :-D

மின்னுது மின்னல் said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
3 குவாட்டர்..

ஒன்னு நாட்ஸ்க்கு..
இன்னொன்னு வெட்ஸ்க்கு..
கடைசி புல்ஸ்க்கு...

தம்பிக்கு வேணாம்.. :-D
///


பாசகார பயல்வோ உட்டுட்டு சாப்பிட மாட்டானுவோ.....

மின்னுது மின்னல் said...

அடபாவிங்களா இப்பதானேடா உங்கள பத்தி நல்ல கருத்து சொன்னேன் அதுக்குள்ள பாட்டில empty பண்ணிட்டிங்களா...::)))

மின்னுது மின்னல் said...

//
என்ன பொழப்பு இது... (75) :
கமலேஷ் கண்ணன்
//


அப்படினு அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்ல காட்டுதே என்ன சங்கத்துக்கே ஆப்பா???


ஒரு ஆளுக்கு ஆப்பு வைக்கவே கண்ன கட்டும் இப்ப மொத்தமாவா...???


:)

மின்னுது மின்னல் said...

//
தம்பிக்கு வேணாம்.. :-D
//


ஆமாம் ஆமாம் ஏற்கனவே ஸ்டெடியா இருக்குறாரு தம்பி...:)

மின்னுது மின்னல் said...

//
3 குவாட்டர்..

ஒன்னு நாட்ஸ்க்கு..
இன்னொன்னு வெட்ஸ்க்கு..
கடைசி புல்ஸ்க்கு...
//


ஆமா மூனு மூனுனா இது எத்துனாவது மூனு...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்

புலி மூடிய தொறந்தாலே கவுந்துற கேஸு.....

புலியோட குவாட்டரரையும் சேர்த்து குடிச்சு புலியோட மானத்த காத்த புண்ணியவான் யாரு...???

My days(Gops) said...

//நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...
//

angaiumaaaaa.... brother, idhuvum tamilan's jpecial thaaan pola...

My days(Gops) said...

//நிறைய பேருக்கு இந்த வாழ்க்கை புடிச்சு இருக்கு....நிறைய பேருக்கு புடிக்கல//

btw, indha question bachelors ka illa family man ka?

My days(Gops) said...

//அவுசர ஆத்திரத்துக்கு ஓரமா நிறுத்தி ஒன் பாத்ரூம் போனா பைன் போடுறாய்ங்க...
//

brother adhuku ellam anga idam irrukudhaa?


//நினைச்சா ஒரு நாயர் கடைக்கோ//
avvvvv....brother my kannula same neeeer cuming..........

My days(Gops) said...

//வாங்கனும்னு காசு வாங்குனவங்கதான....//

anga eppadi? orey kuttai thaaaney? illa different swimming pool a?

My days(Gops) said...

//இன்னொரு வீடு பங்களாதேசி...//

adra adra.....angaium undungala.......

//அந்த அம்மா கிரீம் கீரீம் னு சொல்லி இருக்கு....//
lol....avanga kooooda pesuna comedy a irukumey brother?????

Sasiprabha said...

Anna... Ennavo ponga... Enna vittuttu ellaarum koodi kummi adikkireenga.. Inga enakku ore stomach burning.. Engirundhaalum elloru inbamaai varutha padaama comment adiche vaalunga.. HHHHHHHHHHHHMMMMMMMMMMMMMMM... Perumoochu dhaan varuhdu...

Karthik B.S. said...

thala chancey illa! :))

Syam said...

//nattamai..aaniya?? kadapara illa kuduthu irunthaga pudungarthuku...adhu aniya eppadi marichu//

Dr.DD,

அவங்க விட்டாலும் நீங்க போட்டு குடுத்துருவீங்க போல இருக்கு....

//evanda eppada emaaruvannu naama thaan kathukitu irukome..porupa oppadaikarthuku //

நம்ம எல்லாம் யாரு....

//seri natamai inime two bathroom try panni parunga //

எப்படியோ என்ன ஜெயில்ல களி சாப்பிட வைக்கனும்னு முடிவோட இருக்கீங்க....:-)

Syam said...

//enatha KFC irundhu enna use..avan enna tangri kababaa poda poraan? dhanda kabab dhaaney podaporaan //

sree,
LOL...தண்டா kabab சூப்பர்...

//oru malli poo vechikka mudiyudhaannu azhuvaachi...//

பாருங்க அவங்க அவங்களூக்கு அவங்க அவங்க கவலை...

//poi sonnalum porundha sollanum Naataamai //

பொருந்த பொய் சொன்னா வேலை நடக்குமா....

//appuram weekend enna pannareenga? //

வழக்கம் போல பாத்ரூம் cleaning தான் :-)

Syam said...

//விரால் மீன் பொறிக்குறேன் என மம்ஸ் உசுப்பேத்துறாங்க//

பங்கு, இத எல்லாம் கேட்டுட்டு இதுக்கு மேல உசுரோட இருக்கனுமானு தோனுது :-)

Syam said...

//ஒகே தான் ஒரு பண்ணையும் ரெடி பண்ணு! இரண்டு பேரும் சேர்ந்து கிளம்பிடலாம்//

பங்கு,
அது எல்லாம் ரெடியா இருக்கு...எப்போனு சொல்லு ரெடி ஜூட் தான் :-)

Syam said...

padmapriya, நல்லா சிரிச்சீங்களா ரொம்ப டாங்கீஸ் :-)

Sree's Views said...

Naatamai..en blog la neenga potta commentaa neengaley delete pannidunga..enakku thaniya oru commenta delete panna theriyaadhu
:(
full post dhaan delete panna theriyum :(

Sree's Views said...

93

Sree's Views said...

oh indha meter freeze la irukka ?
ok ok

ராஜி said...

//அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு//

ROFL :)

சந்தோஷ் aka Santhosh said...

நாட்டாமை கலக்கல். அட என்ன கொடுமையே 96ல நிறுத்தி இருக்காங்க. சரி இன்னிக்கு நம்ம 100 அடிப்போம்.

சந்தோஷ் aka Santhosh said...

98 யப்பா ஒரு வழியா 98 அடிச்சாச்சி இன்னும் ரெண்டு ரன் தான் அடிக்கோணும்.

சந்தோஷ் aka Santhosh said...

99 இன்னும் ஒண்ணே ஒண்ணு தான்.

சந்தோஷ் aka Santhosh said...

100 யப்பா ஒரு வழியா முடிச்சாச்சி. சரி வரட்டா.

Jeevan said...

Intha kalathula pasangalukkum mirugankalukkum ulla thodarbu kurajiketta varuthu… Madu meaikerathu vevalo superrana vishayam… but I miss them now:D Nice writing syam!

Anonymous said...

hehehe ithellam over a theriyalaiya/ enga veedla innikku chikn..yum yumm

உங்கள் நண்பன் said...

இன்னைக்கு இங்கேயா?

Usha said...

ayyo enaku kozhapputhu, neenga endha site-la irukeenga? valibar-nu per iruku, neenga en irukeenga?

Anonymous said...

:-) no comments :-) :-)

Syam said...

//அட....இதுகூட பரவாயில்ல நாட்டமை....அவன்.... அவன் கல்யாணம்ன்னு சொல்லி...... சீக்கிரம் வந்து சாப்பிட்டு போன்னு கும்மி அடிக்கிறானுங்க ;( //

கோபி,

அவன் அவன் சொ.செ.சூ னு தெரியாம சிரிச்சிட்டு இருக்காங்க...நீங்க கவல படாதீங்க :-)

Syam said...

//ஸோ நாந்தான் 66'ன்னு சொல்லிக்கிறேன்.....
//

ராயலு, நீங்க கணக்குல சூரப்புலி போல :-)

Syam said...

//annathe...unga policya appadiye follow panren//

bharani,
நல்ல பாலிசி நூறு வருசம் ஆரோக்யமா வாழலாம்....

//ennakum anga pudikala... //

நல்லவங்கள ஆண்டவன் கை விடமாட்டான்னு தலைவர் சும்மாவா சொன்னாரு...பாருங்க நீங்க எஸ்கேப்பு...

//practicals vaangitu vara sonnangappanu kaasu vaanginavanga enga pasanga//

சும்மா பூந்து வெளயாடி இருக்காங்க....
:-)

Syam said...

//நாட்டாமை நீங்க சொன்ன நாலும் ரொம்ப உண்மை...)//

bala,
வாங்க வாங்க....நீங்களும் அனுபவிச்சு இருப்பீங்க போல இருக்கு :-)

Syam said...

//3 குவாட்டர்..

ஒன்னு நாட்ஸ்க்கு..
இன்னொன்னு வெட்ஸ்க்கு..
கடைசி புல்ஸ்க்கு...

தம்பிக்கு வேணாம்.. :-D

//

மை பிரண்ட்,

தம்பி மேல ஏன் இந்த கொல வெறி
:-)

Syam said...

//அடபாவிங்களா இப்பதானேடா உங்கள பத்தி நல்ல கருத்து சொன்னேன் அதுக்குள்ள பாட்டில empty பண்ணிட்டிங்களா...::))) //

மின்னல்,

அந்த ஒரு விசயத்துல மட்டும் லேட் பண்ண கூடாது...

//புலியோட குவாட்டரரையும் சேர்த்து குடிச்சு புலியோட மானத்த காத்த புண்ணியவான் யாரு...??? //

அந்த புண்ணியவான தான் நானும் தேடிட்டு இருக்கேன்....:-)

dakaltiz said...

hey syam...romba naal apalika...un site a partha...VaVa sangam nu potruke...ella sema comedy ya iruku ya... magana kalaasuraya nee...

ராஜி said...

//நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...//

Super policy Naatamai...

Karthik B.S. said...

thala appadiye konjam sondha veetayum (adhaan unga blog'ayum) konjam gavikardhu! :)

Kittu said...

அதுக்கு அவனோட அம்மா சொல்லி இருக்காங்க உங்க அப்பாவும் ஒரு buffalow தாண்டா so you are also lucky னு.....பாவம் அந்த பையனுக்கு தெரியல அது cows and buffalows கூட play பண்றது இல்ல, அதுக்கு பேரு மாடு மேய்க்கறதுனு.....


ROTFL :)

//இந்த வீட்டு பையன் பேரு பிரேம் அததான் அந்த அம்மா கிரீம் கீரீம் னு சொல்லி இருக்கு....

Prem, Kreem rendum totally different words. 'Prem' koodava solla therila andha ammavukku.


//நம்ம எல்லாம் பந்திக்கு முந்து...ஆணி புடுங்க 10 ஸ்டெப்ஸ் பேக் அப்படிங்கற பாலிசில வாழுறோம்...

nalla policy,nadathunga nadathunga.

Kittu said...

//நம்ம ஊர்ல கண்டக்டர் டிக்கட் குடுத்திட்டு காசு வாங்குவாங்க...


namma kettula vaanguvom andha ticketai.
inga namma kekaamaleyye tharaanunga.

adhula oru vasadhi ! namma oor ticketkku udane kaasu tharanum, inga time kodukaraanunga :)
-K mami

Deepa said...

Innumey unga blog la posts kedayadha? Ingadhaana?

Karthik B.S. said...

Syam, en neenga unga blog'ah update panna maatingreenga? Idhai naan vanmaiyai kandikiren!

Seekiram unga blog'la oru pudhu post edhirpaakum ungal rasigan! :)