Thursday, April 26, 2007

புட்சுக்கோ, ஒரு வயசு கொயந்தை பரிசு குடுக்குது

இந்தா இவிங்க எல்லாம் சேந்து சேட்டைப் பண்ணி, லந்தடிச்சு, நக்கலடிச்சு, நையாண்டி பண்ணி, கோமாளித் தனம் பண்ணி, கூத்துக் கட்டி, கொலவெறியிலே தலயைக் கலாய்ச்சு, கொண்டாட்டம் மட்டும் கொலதெய்வம்ன்னு கிளம்பி ஒரு வருசம் ஆவுதாம்... யார் இவிங்க? பெரிய வி.ஐ.பி ரேஞ்சாப்பா இவிங்க? அட மக்கா இவிங்க ரொம்ப நல்லவங்கய்யா....

தலைக்கு மேல ஆணி அந்தரத்துல்ல தொங்கும் ஆனாலும் பாருங்க கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்த்து வெறிச்சு வெறிச்சு சிரிப்பாய்ங்க...வாழ்க்கையிலே ரைட், லெப்ட், ஸ்டெரெயிட்ன்னு அஞ்சு அடிக்கு அம்பது ஆப்புன்னு வாங்கி ஒரு தினுசாப் பொழப்பு ஓடும்.. ஆனாலும் மக்கா இவிங்களுக்கு லொள்ளுக்கும் லோலயத்தனத்துக்கும் குறைவிருக்காது....

சொந்தமெல்லாம் எங்கோ இருக்க அந்த நினைப்பை அப்படியே கொஞ்சம் அங்கிட்டு ஹேங்கர்ல்ல மாட்டிட்டு இங்கிட்டு இவிங்களை மாதிரி கும்மு கும்முன்னு கும்பி அடிக்க யாராலும் முடியாது...

இவிங்க இவிங்க இவிங்கன்னு இந்த முழக்கு முழக்குறீயளே யார்ன்னு சொல்லுங்க....

அடேய் இவிங்களுக்கு கோவமே வராது....(ஏன் வந்தா உன் வீட்டு அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைக்கணுமா சொல்லு? )

கண்டபடி ஓட்டுறாங்க.... சும்மா இருக்காங்க.... (ஆர்.டி.ஓல்ல கேளு லைசன்செஸ் கொடுக்குறவன் அங்கேத் தானே இருக்காங்க.. )

எதுக்கு எடுத்தாலும் ஏகத் தாளமா? (அடுத்த வாரம் வா ஆதி தாளம் பழகி வைக்கிறேன்) . இவிங்க பேச்சுக்கு சாம்பிள்

வருத்தமா விலை என்ன?
கவலையா கிலோ எம்புட்டு?
பிரச்சனையா பில்லைக் கொடு பாப்போம்...
வலியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..


இது தாங்க இவிங்க...
அட இவிங்க எல்லாம் தாம்ப்பா... உங்க ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒளிந்தும் ஒளியாமலும் வலம் வரும் வருத்தப் படாத வாலிபன் பசங்க....கவலையைக் காத்தாடியா காத்துல்ல விட்டு கையை வீசிகிட்டுப் போறவங்க...

ஏன் அப்படி ...
ஏன்னா இவிங்களுக்கு வாலிப வயசாம்.. சொல்லுதாவா.... போதுமா இவிங்க புராணம்... அவிங்க வையப் போறாக... அவிங்க யார்... அவிங்களாப் போட்டின்னு சொன்னதும் சும்மா ரவுண்ட் கட்டி ரைட் போட்டவீங்க...
போட்டி வச்சாப் போதாது முடிவைச் சொல்லு.. ப்ரைசைக் கொடு நாங்கப் பொழப்பைப் பாக்கப் போவோம்ல்ல.. நீங்கச் சொல்லுறது நல்லாவே கேக்குது...

இதுவரைக்கும் உங்களை எல்லாம் பாத்து யாராவது பைசாப் பெறாத பதிவு போடுற வேலையைச் செய்யறன்னு கேட்டிருக்கலாம்.. ஆனா இனி கேக்க முடியாதுல்ல..

போட்டில்ல கலந்துகிட்ட எல்லாம் வீரர்களுக்கும் சூரர்களுக்கு வீரரிகளுக்கும் சூரரிகளுக்கும் எங்க சங்கம் சார்பா பெரிய சல்யூட்ப்பா....
போட்டின்னா வந்தா எல்லாரும் சிங்கம் தான்..கெலிச்சவங்க மட்டும் இல்ல.. மத்த எல்லாருமே சங்க மக்கள்ஸ் இதயங்களின் நேத்து முந்தா நேத்து இன்னிக்கு டூமாரோ டே ஆப்டர் டூமாரோ பார் எவர் அங்கம் தான் அதுல்ல நோ டவுட்ஸ்.


எல்லா பிட்டும் போட்டாச்சு இப்போ தான் மெகா பிட்டு.... பரிசு தொகை மொதல்ல 1000 ரூபா தான் சொல்லியிருந்தோம்... ஆனா பாருங்க வந்த பதிவுகள் எண்ணிக்கை எங்களையும் எண்ண வச்சுருச்சு ஆமாப்பா எக்ஸ்ட்ரா இரண்டு சேத்துக்க வச்சுருச்சு... 1002 இல்ல.. 3000 ஆயிரம் ரூபா...
படிக்க படிக்க சிரிப்பு... அப்படி இருக்க பதிவுன்னு பார்த்தா 105க்கும் கொடுக்கணும்.. 3000/105 கணக்குல்ல சங்கப் புள்ளங்க எல்லாரும் ரொம்ப வீக் சோ... கூட்டிக் கழிச்சு.. அப்படி இப்படின்னு பொட்டியைத் தட்டி இந்த மூவாயிரத்தை 6 பேருக்கு சமமா கொடுக்கலாம்ன்னு ஆல் சிங்கம்ஸ் அன்ட்ர்ஸ்டாண்டிங்ல்ல வந்துச்சுங்கோ...


அது படி ஆறு பேரைத் தேர்ந்தெடுத்தோம்... அவிங்க தான் இவிங்க..


** அருண்குமார் - துரத்து
** சிவிஆர் - நான் மாமாவிடம் மாட்டிக் கொண்ட கதை
** ஷைலஜா - காரிகையர் சங்க ஆண்டு விழா
** ஜெயஸ்ரீரி - As I am Suffering from...
** அபி அப்பா - ராதா "குரங்கு ராதா"வாகிய கதை!!

** கண்மணி - திருவாளர் திருமதி ரங்கமணி


இதோட முடிஞ்சு போச்சா, இன்மேதான் மெயின் ரீலு.


மை ஃபிரண்ட்
புச்சா வந்து அல்லாரும் எழுதறாங்கோ, கலக்கறாங்கோ, ஆனா எங்களை எல்லாம் மலேசியா கூட்டிகினு போயி சோக்கா ஃபிலிம் காட்டி கண்ல தார தாரயா தண்ணி வர வெச்சிருச்சுபா.ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் . எங்க சங்கத்து சிங்கம் அத்தனை பேரு மன்ஸையும் ஒரேடியா கொண்டுகினு போன மை ஃபிரண்டுக்கு ப்ரைஸ் குடுத்தா ஆச்சா, ஆஹாங். அதால புச்சா வந்தாலும் புதுமையா வந்த ஃபிரண்டுக்கு 2007-காமெடி கிவீன்ங்கிற பட்டம் குடுத்து சந்தோசப் பட்டுக்கிறோம்பாடுபுக்கு அண்ணாத்த...
உங்களைப் பாத்து விசில் விட்ட கூட்டத்துக்குச் சத்தியச் சோதனையா? உனக்கு நாங்க மார்க் போட முடியுமா சொல்லு? அப்புறம் ஒய் திஸ் சோதனை... ஒட்டு மொத்த ப்ரசும் உன்க்கேன்னு நாங்க சொல்லோ 'நமக்கெல்லாம் இன்னாத்துக்குப்பா பிரைஸு, புச்சா வர்ர பசங்களுக்கு குடுங்கப்பா"ன்னு சொல்லி எங்க எல்லார் கண்ணுலையும் தண்ணீ வர வெச்சுட்டியேபா.. அதனால என்னா எங்ககிட்ட மனசு இருக்கே குடுக்க... புச்சா எய்துருவங்களுக்கு பரிசும் .. உனக்கு எங்க சார்பா பட்டமும் கொடுக்குறோம் வாங்கிக்கணும்.. ப்ரைஸ் வாங்குறவங்களை வந்து நீங்கத் தான் வாய்த்தணும் அவங்க வளரணும்... ரைட்டா. அதால டுபுக்கு-தி திங்க் டாங்குக்கு இந்த வருஷ 2007-சிரிப்பானந்தா பட்டம் குட்த்து பெருமை படுத்தறோம். அல்லாரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்க பார்ப்போம்

கெலிச்சவங்க எல்லாருக்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிச்சுக்குறேன்.. அப்பால பரிசு பெற்றவர்கள் நம்ம பாசக்கார சிங்கம் ராயலை மெயில் மூலம் அணுகி உங்கள் விவரங்களைத் தெரிவித்து பரிசு கூப்பன்களை வாங்கிக்கங்க... ராயலில் மெயில் ஐடி..raam.tamil@ gmail.comகெலிச்சவங்க கெலிச்சவங்கச் சொல்லுற ஆறு பேர் பரிசு கெலிச்சுக்குறீங்க... மத்த மக்கள் எல்லாரும் எல்லோருடைய அன்பு நெஞ்சங்களையும் கெலிச்சுக்குறீங்க...ஓ,கே. மக்கா இன்னொரு முக்கியமான மேட்டர் அடக் கையக் கொடுங்க மக்கா..... தேங்க்ஸ் ... இந்த ஒரு வார்த்தைச் சொல்ல ஒரு வருசம் ஆயிருச்சுங்க....ஆமாமுங்கோ டு டே சங்கம் பர்த் டே அன்ட் சங்கம் 200வது பதிவுங்கோ... தேங்க்யூ மக்கா..

55 comments:

வேதா said...

வெற்றி பெற்ற ஆறு பேருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்:)

சந்தோஷ் aka Santhosh said...

வாழ்த்துக்கள் மக்கள்ஸ், காமெடி ராணி மற்றும் ராஜா உங்களுக்கு வாழ்த்துக்கள்.

மனதின் ஓசை said...

வெற்றி பெற்றவர்களுக்கும் சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

ஹேப்பி பர்த் டே சங்கம் அண்ட் சங்கம்ஸ் 200 போஸ்ட்...!!!

பரிசு பெற்றவங்களுக்கு வாழ்த்துக்கள் !!

கீப் கோயிங் கை(ப்)ஸ் !!!!!!!

.:: மை ஃபிரண்ட் ::. said...

:">

வாழ்த்துக்கள் சிரிப்பானந்தா மற்றும் இதர வெற்றியாளர்கள் அருண் பையா, CVR, ஷைலஜா, ஜெயஸ்ரீ, எங்கள் அஞ்சா நெஞ்சம் அபி அப்பா, பாசக்கார கண்மணியக்கா.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

சிங்கங்கள் சொன்ன பாதிரி 105 போஸ்ட் எழுதிய அனைவரும் கெலிச்சவர்கள்தான்.

சிங்கங்களா.. இந்த மலேசியா குச்சி பாப்பாவின் கண் கலங்க வச்சிட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்.. நீங்க ரொம்ம்ம்பப நல்ல்வைங்க..

aparnaa said...

congrats to the prize winners and title winners!!
And Happy bday to the sangam!!

வேதா said...

ஹை நாந்தான் முதலா?:)(பின்னூட்டத்தை சொல்றேன்)முதல் வருட நிறைவு பதிவு,200வது பதிவு இதுல முதல் பின்னூட்டத்திற்கு எதுவும் பரிசு கிடையாதா?:)

.:: மை ஃபிரண்ட் ::. said...

சங்கத்தும் அப்பி பர்த்துடே!!!!

பார்ட்டி இல்லையா??? ;-)

SurveySan said...

கலக்கலு!

நாகை சிவா said...

வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சிங்கங்களா.. இந்த மலேசியா குச்சி பாப்பாவின் கண் கலங்க வச்சிட்டீங்களே... அவ்வ்வ்வ்வ்வ்.. நீங்க ரொம்ம்ம்பப நல்ல்வைங்க.. //

குச்சி இல்லைங்கோ! அது குட்டி.. :-P

ambi said...

வெற்றி பெற்ற ஆறு பேருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்:)

வாழ்த்துக்கள் சிரிப்பானந்தா!

கண்மணி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இந்த அக்கா கெலிச்சதுல வார்த்தை வரல்ல[பாவி மக்கா சிங்கங்களே காமெடி புடிச்சி குடுத்தீங்களே போனாப் போவுது புச்சா வந்த அக்கான்னு குடுத்தீங்களா?]
எனி ஹவ் டாங்க்ஸ் பா.எல்லோருக்கும் அல்வா [மாமிகிட்ட சொல்லி] ரெடி பண்ணிடுறேன்.வாழ்க உங்க பணி.ரொட்டீன் பதிவு போடுதல்,படித்தலில் மாறுபட்டு நீங்க செய்ற சேட்டை [போட்டிகள்] நல்லாவேயிருக்கு.எல்லாம் ஒரு ரென்ரெஷ்மேன்ட் தானே.வாழ்க வளமுடன்.
ஹாப்பி பர்த் டே டூ சங்கம்

கோபிநாத் said...

அருண்குமார் - வாழ்த்துக்கள்
சிவிஆர் - வாழ்த்துக்கள்
ஷைலஜா - வாழ்த்துக்கள்
ஜெயசிரி - வாழ்த்துக்கள்
அபி அப்பா - வாழ்த்துக்கள்
கண்மணி - வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

மை ஃபிரண்ட் - வாழ்த்துக்கள் தோழி ;)

கோபிநாத் said...

\\டுபுக்கு அண்ணாத்த...\\

வாழ்த்துக்கள் அண்ணாத்த ;)))

nagai.s.balamurali said...

"வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!"

முத்துலெட்சுமி said...

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
200 பதிவுக்கு வாழ்த்துக்கள்.
சங்கத்துக்கு மெனி மெனி ஹாப்பி ரிடன்ஸ்....

இலவசக்கொத்தனார் said...

//கீப் கோயிங் கை(ப்)ஸ் !!!!!!!//

குட் ஒன் ரவி!

Dubukku said...

வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! இப்படி ஒரு போட்டியை நடத்தி காமிடியை ஊக்குவிக்கும் சங்கத்துக்கு சிங்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! சங்கத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! ஹேப்பி பர்த் டே...ஆமா கேக்கெல்லாம் உண்டா...

வீட்டுல தங்கமணி கிட்ட காட்டி "ஃபேனப் போடு, காப்பியக் கொண்டா..அப்பிடியே இந்தக் காலக் கொஞ்சம் அமுக்கிவிடு....அடடாடா என்னா கூட்டம் என்னா கூட்டம்...என்ன மாலை...என்ன மரியாதை...ஒருத்தர் டுபுக்கு உன்கெல்லாம் ப்ரைஸ் ஒரு கேடான்னு- மேடைல புகழ...தட்டினான் தட்டினான் தட்டினான்....பாரு கைய...அடங்கவே ஆறு மணி நேரமாச்சு...இவன் தொல்லை தாங்க முடியலை எதாச்சும் குடுத்தனுப்பங்கப்பான்னு...இன்னொருத்தர் என்ன கவுரவிக்க..மாலை மரியாதை..இருக்கட்டும் இருக்கட்டும்ன்னு நான் சாம்பிளுக்கு ஒன்னு அதையும் வாங்கிட்டு வந்திருக்கேன்னு"ன்னு கல்யாணப் பரிசு தங்கவேலு மாதிரி பந்தாவுடலாம்ன்னு பார்த்தா..

ஆசிரமம் வைக்கனும்ன்னு என்னோட ஆசையை புரிந்துகொண்டு...பிரைஸ் குடுக்காம அதுக்கேத்த மாதிரி டைட்டில் குடுத்து சர்ப்ரைஸ் குடுத்திருக்கீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....கண்ணுல தண்ணி நிக்கிதைய்யா.... சங்கம் குடுத்து எத்தன ஆப்பு வாங்கியிருக்கேன்...இந்த மரியாதைய வேணாம்ன்னு சொல்வேனா? நன்றி நன்றி நன்றி. சரி சரி லிங்கம் எடுக்கறதுக்கு லிங்குசாமி கிட்ட ட்யூஷன் சேர்ந்திருக்கேன்...நேரமாச்சு..வரேன்..

Dubukku said...

நமக்க்கு வாழ்த்து சொன்னவங்களுக்கெல்லாம் ரொம்ப டேங்க்ஸ்பா... :))

Sridhar Venkat said...

வாழ்த்துக்கள் சிங்கங்களே!

எத்தனையோ பதிவு குழுக்கள் இருந்தாலும், எனக்கு அறிமுகமான முதல் குழு வவா சங்கம்தான். முதலில் படித்த பொழுது எப்படி குதூகலப் பட்டேனோ அதே போல்தான் ஒரு வருடம் கழித்தும் இருக்கிறது.

மற்ற குழுக்களுக்கு வரவேற்பு எப்படியோ... வவா சங்கத்திற்கு தொடங்கியதிலிருந்து பிரமாண்டமான வரவேற்பும், அதே அளவில் எதிர்ப்பும் இருந்தது. தடை பல தாண்டி இன்று ஒரு வயது குழந்தையாக வளர்ந்து நிற்கிறது.

உங்கள் எல்லா முயற்சிகளிலும் ஒரு தனித்துவம், கற்பனை வளம் அதில் அடிச்சரடாக நகைச்சுவை என்று பின்னிக் கொண்டிருக்கிறீர்கள்.

மென்மேலும் பல ஆப்புகளும், ஆப்புரேசல்களும் பெற்று பெரும் இயக்கமாக வளர வாழ்த்துக்கள்.

பரிசு பெற்ற நன்பர்களுக்கும், சிறப்பு பட்டங்கள் பெற்ற சிரிப்பு ராணிக்கும், சிரிப்பானந்தா-விற்கும் வாழ்த்துக்கள்.

பரிசு / பட்டம் பெற்றவர்களுக்கு 'பதக்கம்' உண்டல்லவா? அப்புறம் என்ன 'பட்டைய' கிளப்பிற வேண்டிதான?

ஷைலஜா said...

ஹாப்பி பர்த் டே பேபி! உனக்கு நாங்க பரிசு தரணும்! கொயந்த எங்களுக்குத் தருது! வாழ்க்கைல மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணங்கள்னு சிலதை சொல்வாங்க இல்ல அதுல இதுவும் ஒண்ணு!நன்றி வவாச நண்பர்களே!
ஷைலஜா

இராம் said...

வாழ்த்துக்கள் தெரிவித்த வேதா, சந்தோஷ்,ஹமிது,செந்தழல்ரவி,மைஃபிரண்ட்,அபர்ணா,அம்பி,கோபி,முத்துலெட்சுமி,பாலமுரளி,ஸ்ரீதர், அனைவருக்கும் நன்றிகள் பல...

உங்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமே இல்லை :)

கொத்ஸ்,

நாங்க ஏத்திவிட்டு தான் பார்ப்போம், நீங்க செவனேனு இருந்தா ஒகே... ஆனா எங்களுக்கு ஏத்தமாதிரி ஆப்போ ஆப்புன்னு வைச்சிங்க, அதுதான் நாங்க இப்பிடி வைச்சிட்டோம்.... ஹி ஹி

SathyaPriyan said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Arunkumar said...

ஆகா நம்ம பேரும் லிஸ்ட்லயா? அவ்வ்வ்வ்வ்வ்வ் :-)

ரொம்ப சந்தோஷமா இருக்குங்கோ.. நீங்க என்னோட நாள செஞ்சிட்டீங்க...
(You made my day..hehe)

Arunkumar said...

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

105 பதிவுகளையும் படித்து தேர்வு
செய்த சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களையும் சொல்லிக்குறேன்.

Arunkumar said...

டாட்
செமிகோலன்
செமிகோலன்
மை ஃபிரண்ட்
செமிகோலன்
செமிகோலன்
டாட்
அலயஸ்
காமடி அரசி
அலயஸ்
பின்னூட்டப் புயல்
அலயஸ்
மலேசிய மங்கைக்கு வாழ்த்துக்கள் :)

Arunkumar said...

ஹேப்பி பர்த் டே டு சங்கம்.
சங்கத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
(எதுக்கு நான் இப்போ மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி பேசுறேன்.. )

Arunkumar said...

டுபுக்கு அண்ணே, வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)

Arunkumar said...

நமக்கு வாழ்த்து கூறிய எல்லா மக்கள்ஸுக்கும் நன்றி நன்றி நன்றி

சங்கம்,
டங்கா டுங்கா தவுட்டுக்காரி-க்கு வெய்ட்டிங் :)

அபி அப்பா said...

வந்துட்டேன் சிங்கங்களா!

மிக்க நன்றி! மிக்க நன்றி!! மிக்க நன்றி!!!

வெற்றி பெற்ற என் குருநாதர் டுபுக்கர், தங்கச்சி மைபிரண்ட், அருண்,சிவிஆர், ஷைலஜா, ஜெயஸ்ரீ, தங்கச்சி கண்மணி எல்லாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!

மேலும் கலந்து கிட்ட அத்தினி பேரும் ஜெயிச்சவங்க தான். ஏன்னா நான் அந்த 105ம் படிச்சேன். எல்லாம் சூப்பர் நகைச்சுவைகள்.

இதுல குறிப்பா பாராட்டப்பட வேண்டியவர்கள் சங்கத்து சிங்கங்கள் நாகை சிவா,இராம், தேவ்,இளா மற்றும் மத்த சிங்கங்கள்...105 படிக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும்.(ஏன்னா நான் படிச்சேன்) அதுல தேர்ந்தெடுக்கும் பெரிய பொருப்பும் சேந்துச்சுன்னா...உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்!!

உங்களின் இந்த ஊக்கம் எங்களை மீண்டும் எழுத தூண்டும்!

மிக்க நன்றி!!

CVR said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஊக்கம் அளித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் வா.வா.சங்கத்துக்கும் என் உளம் கனிந்த நன்றி.

உங்கள் நண்பன் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பிறந்தநாளுக்கும், 200 வது பதிவிற்கும் சேர்த்து ஒரு ஸ்பெசல் வாழ்த்துக்கள் டு நம்ப சங்கம்!

அபி அப்பா! இன்னைக்காவது இங்கு மட்டன் கிடைக்குமா?

அன்புடன்...
சரவணன்.

golmaalgopal said...

vavaa sangathukku en vaazhthukkal...

super six'kkum vaazhthukkal... :))

ROTFL posts... :))

Syam said...

அருண்குமார், சிவிஆர், ஷைலஜா,
ஜெயசிரி, அபி அப்பா, கண்மணி அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!

Syam said...

காமெடி கிவீன் பட்டம் வென்ற மைபிரண்ட் க்கு வாழ்த்துக்கள்!!!

Syam said...

டுபுக்கு அண்ணாத்த அருண் சொன்ன மாதிரி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)

Syam said...

ஹேப்பி பர்த்டே டூ சங்கம்....வாழ்த்துக்கள் சிங்கங்களே :-)

ஷைலஜா said...

இங்கே எங்களை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி.(அருண்,உங்க ப்ளாகுல பதிலிட்டால் அது போவதில்லை கவனிங்க)
ஷைலஜா

உங்கள் நண்பன் said...

சரி 40 ஆச்சு! வாருங்கள் ஆரம்பிப்போம்!

மு.கார்த்திகேயன் said...

வெற்றி பெற்ற ஆறு பேருக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்:)

இம்சை அரசி said...

வெற்றி பெற்ற எல்லாருக்கும் வாழ்த்துக்கள்ப்பா!!! :)))

Happy Birthday to Sangam n Singams!!! :)))

200வது போஸ்ட்டுக்கும் வாழ்த்துக்கள் :)))

(அப்பாடி! வாழ்த்து சொல்லி களைச்சுப் போயிட்டேன். ட்ரீட் எப்போ???)

மு.கார்த்திகேயன் said...

முதலாண்டு பிறந்தநாள் கொண்டாடும் சங்கதிற்கு வாழ்த்துக்கள்

உங்கள் நண்பன் said...

இம்சை அக்கா அதெல்லாம் "வழக்கம்போல்" பார்க்இன் ஹோட்டலுக்கு எதிர்ப்புறம் இருக்கும் கரும்பு ஜீஸ் கடைல தான்! மறக்காம வந்திடுங்க!

வெட்டிப்பயல் said...

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் + நன்றி!!!

Boston Bala said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மணி ப்ரகாஷ் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்
..
அதுல ஸ்பெசல் வாழ்த்து
"துரத்து அருணுக்கு"

மணி ப்ரகாஷ் said...

happy b'day to sangam

மின்னுது மின்னல் said...

வெற்றி பெற்றவர்களுக்கும் சங்கத்துக்கும் வாழ்த்துக்கள்.

மின்னுது மின்னல் said...

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்
வாழ்த்துக்கள்

வாழ்த்து சொல்லிகொண்டு இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்+நன்றி..:)

balar said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

சங்கத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

Syam said...

//அதுல ஸ்பெசல் வாழ்த்து
"துரத்து அருணுக்கு" //

மணி அந்த துரத்துக்கு காரணமே நீங்க தான :-)

Jayashree Govindarajan said...

வாவ்! இப்பத்தான் மக்களே படிக்கறேன். எனக்கே எனக்கா? நானே மாமியார் வர டென்ஷன்ல :( கடைசி நேரத்துல 12 மணிக்கு இன்னும் 1 மணி நேரம் இருக்கும்போது வேகமா தட்டிக் கொட்டி உள்ள தள்ளினது. பரிசெல்லாம் கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. வவா சங்கம், நம்பளையும் கண்டுகிட்டதுக்கு தாங்கஸ்! அப்ரசண்டிகளை கண்டுக்கச் சொன்ன டுபுக்கு சார், தி கிரேட்.

வெற்றி பெற்ற பங்குபெற்ற மத்தவங்களுக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

Wish you Happy Birthday.

Congrats to all winners.

-Mani,
Singai