Thursday, April 19, 2007

உலகக் கோப்பை 2011


இந்திய கிரிக்கெட் அணியை தண்டிக்கவும் தமிழ் சினிமா நடிகர்களை தண்டிக்கவும் நமது வ.வா சங்கத்திடம் மனு குவிந்தது.
எமது தீர்ப்பு "இனி தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் ஆடுங்கள், கிரிக்கெட் வீரர்கள் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே!"

முதல் பகுதி:

இதில் தமிழ் வீரர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள். அதன் நேரடி வர்ணணை முதல் பகுதியில் வெளிவரும். இரண்டாம் பகுதியில் கிரிக்கெட் வீரர்கள் நடிக்கும் தமிழ் படங்கள் திரையிடப்படும்.


அப்போ ஆட்டத்தை ஆரம்பிப்போமா?


பேட்டிங் ஆர்டர்:

சிம்பு
தனுஷ்
S.J. சூர்யா
விஜய் (Vice Captain)
அஜித்(விஜயகாந்த் .............. அதாவது Captain)
பிரகாஷ்ராஜ்
கார்த்திக்
நமீதா(Fast Bowler)
பாக்கியராஜ்
வடிவேல் சிங்
ராஜ்கிரண் (கடைசியில் அழுபவர்)

Substitues (அல்லகை's): T.R. & விஜயகாந்த்
Coach: கவுண்டமணி
Manager: செந்தில்



Toss:
டாஸ் போட ரிக்கி பாண்டிங்கும், Referreeயும் ரொம்ப நேரமாக காத்திருக்கிறார்கள். கடுப்பாகி போன பாண்டிங், நேராக இந்திய Dressing Room நோக்கி விரைகிறார்.

"Captain, Captain, Indian Captain, please வாங்க" என்று கூக்குரலிடுகிறார், பாண்டிங்.
அப்பொழுது, சலங்கை சப்தம் கேக்கிறது. "இன்னிசை அளபெடையே" என்று பாட்டும் ஒலிக்கிறது.
பாண்டிங் குரல் கேட்டதும் சப்தம் திடுக்கென்று நின்றது. ஒய்யாரமாக சலங்கையுடன் நடந்து வருகிறார் அஜித்.

"பாண்டிங்! இனிமேல் என்னை 'தல'ன்னு கூப்பிடுங்க, ஏன்னா, இந்திய கிரிக்கெட் உலகத்துல இது புது சகாப்தம்......கெட்டதுக்கும் நல்லதுக்கும் நடக்கிற யுத்தம்." 10 செகண்ட் மெளனத்திற்கு பின் 'அது' என்று சத்தமாக கர்ஜிக்கிறார்.

பாண்டிங்கிற்கு விளையாடமலேயே வேர்க்கிறது. "தல! வாங்க Toss போட போகலாம். ஆனால், அதுக்கு முன்னாடி சலங்கையை கழட்டிட்டு வாங்க" என்கிறார். இதற்கு அஜித் மறுத்து வேகமாக தலையாட்ட அங்கே வருகிறார், Vice Captain, விஜய், அஜித்திற்கு சப்போர்ட்டாக.

நிறுத்துங்க Ponting (பூவே உனக்காக background music ஒலிக்கிறது)

"காதலுங்கிறது கால்ல கட்டியிறுக்கிற சலங்கை மாதிரிதான். கட்டறவங்க கட்டி ஆட்டம் போட்டா ஆட்டம் நின்ன பிறகும் சத்தம் கேட்கும்.....
நான் கிரிக்கெட் ஆட்டத்தை சொன்னேன்" என்று பிதற்றுகிறார் விஜய். அஜித்தும் விஜயும் கைத்தட்டிக் கொள்கிறார்கள்.

Ricky Ponting தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார். "யோவ், light போக போகுதய்யா" என்று கதறுகிறார்.

"ஒரு நிமிஷம் Ponting, நான் இப்போ வர்றேன்" என்று escape ஆகிறார் அஜீத். நேராக canteenல் அமர்ந்திருக்கும் coach கவுண்டமணியிடம் "Tossன்னா என்ன?" என்கிறார். அப்போது கவுண்டமணி அதிர்ச்சி தாங்காமல் குடித்துக் கொண்டிருந்த teaயை எதிரில் அமர்ந்துக் கொண்டிருந்த T.R. முகத்தில் துப்பி விடுகிறார்.

அஜீத்தை பார்த்து "என்ன கண்ணா சொன்ன". அஜீத் "Tossனா என்ன?" என்கிறார். கவுண்டர் "எங்க இன்னொருக்கா சொல்லு", அஜித் "Toss, Toss, Toss" என்று கத்துகிறார். கவுண்டர் தலை குணிந்து "இதென்ன சோதனை!, Tossன்னா என்ன அப்படிங்கிறத கூடவா coach சொல்லி தரணும். கடவுளே இது எனக்கு தேவையா?"

Tea முகத்தை துடைத்துக்கொண்டு T.R. பேச ஆரம்பிக்கிறார்.

அஜீத், இந்த Teamற்கு நீ Bossu

அதனால் நீ போடனும் Tossu

1 ரூபாய் coinஅ மேல வீசு!

Ponting சொல்றபடி வீழ்ந்தா நம்ம closeu

எப்படி இருந்தாலும் நம்ப all out for no lossu.....(ஏய் டண்டணக்கா டணுக்ணக்கா என்று இடத்தை விட்டு நகர்கிறார் T.R.)

Toss என்றால் என்னவென்று சரிவர புரியாமல் groundற்கு போகிறார் அஜித்..........இனி ஆட்டம் இனிதே தொடரும் - கமலேஷ் கண்ணன்.

17 comments:

ILA (a) இளா said...

வெல்க கிரிக்கெட்டு, வெல்க எங்க தல.
வணக்கம் கமலேஷ்

Syam said...

கலக்கல் கமலேஷ்....அடிச்சு ஆடுங்க....அத்த்த்த்த்துதுதுது :-)

கதிர் said...

நல்லா இருக்கே!

யாருப்பா அது கமலேஷ் கண்ணன்
ஒரு அறிமுகம் தரப்பாடாதோ???

Santhosh said...

//யாருப்பா அது கமலேஷ் கண்ணன்
ஒரு அறிமுகம் தரப்பாடாதோ???//
அது தானே? யாருன்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா.

Unknown said...

வாப்பா கமலேசா, வந்த ஓடனே யாரு நீன்னு எல்லாரையும் கேக்க வச்சுட்டே.... ம்ம் நீ சொல்லுறீயா இல்ல நான் சொல்லவா?

வெல்கம் டூ சங்கம் மாப்பி...:-)

K7Rajesh said...

aahaa aahhaa....arrammbijittikkla.... uttganrunthu yosipangaaloo.... kamlesh super... rromba ....rromba nalla irruku... neegalavathu world cup win panugga

மனதின் ஓசை said...

:-)

//ம்ம் நீ சொல்லுறீயா இல்ல நான் சொல்லவா?
//

கமலேஷ்... நீங்களே சொல்லிடுங்க.. அதான் உங்களுக்கு நல்லது :-)

இராம்/Raam said...

வெல்கம் டூ சங்கம் கமலேஷ்.....

Saral Saroja said...

வணக்கம், நான் யார் என்று கேட்ட நண்பர்களுக்கு ஒரு quick அறிமுகம்.

பிறந்து வளர்ந்தது: சென்னை

பிடித்தது: தங்க துகள் ராஜாக்கள் ( அதாங்க Gold Flake Kings)

சங்கத்துக்குள் எப்படி?
'தல' தேவ் அவர்களின் பரிந்துரையால்.

படித்ததில் பிடித்தது: வண்ணத்திரை மற்றும் சினிக்கூத்து.

படித்ததில் மடித்தது: சரோஜா தேவியின் புத்தகங்கள் (பத்து வருஷமாச்சுங்க).

தற்போதைய வாசம்: வெள்ளையன் என்னை தயவு செய்து வெளியேறு என்கிறான்.

இப்படிக்கு,
கமலேஷ் கண்ணன்.

Saral Saroja said...

வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

Syam said...

//பிடித்தது: தங்க துகள் ராஜாக்கள் ( அதாங்க Gold Flake Kings)

சங்கத்துக்குள் எப்படி?
'தல' தேவ் அவர்களின் பரிந்துரையால்.

படித்ததில் பிடித்தது: வண்ணத்திரை மற்றும் சினிக்கூத்து.

படித்ததில் மடித்தது: சரோஜா தேவியின் புத்தகங்கள் (பத்து வருஷமாச்சுங்க).

தற்போதைய வாசம்: வெள்ளையன் என்னை தயவு செய்து வெளியேறு என்கிறான்.
//

அப்புடியே நம்ம இனம்னு காட்டிட்டீங்க....வாழ்த்துக்கள் :-)

Anonymous said...

ஹிஹி மிகுதி எப்போ?? கமலேஸ் யார்/?

Syam said...

//ஹிஹி மிகுதி எப்போ?? கமலேஸ் யார்/? //

தூயா, மீதி வந்துட்டே இருக்குங்க...கமலேஷ் தான் மேல பயோ டேட்டா குடுத்து இருக்காரே பாக்கலயா நீங்க :-)

ulagam sutrum valibi said...

singangala ipathan oru pathivai muki muki pooten.pooti date tie konjam maatha maatigala
thank u

நாகை சிவா said...

வருக வருக!

நாகை சிவா said...

//அப்புடியே நம்ம இனம்னு காட்டிட்டீங்க....வாழ்த்துக்கள் :-) //

ரீப்பிட்டு.....

Unknown said...

மக்காஸ் கமலு நம்ம ஆளு.. இனி அவருக்கும் நீங்க லோடு லோடா ஆப்பை அள்ளிக் கொடுக்கலாம்.. சிரிச்சிகிட்டே வாங்குவார்... அவரும் நம்ம தல மாதிரி ரொம்ப நல்லவ்ருங்கோ... ஸ்டார்ட் மீசிக்