Thursday, April 19, 2007

டெவில் ஷோ - ராயல் ராம்

மக்களே அடுத்து ஒரு சினிமா பிரபலத்த தான் டெவில் ஷோல கூப்பிடலாம்னு இருந்தோம். தல கூட ரெடியாயிட்டேனு சொன்னாரு. அப்பதான் நம்ம போர்வாள்கிட்ட இருந்து ஒரு போன் நம்ம ராயலுக்கு இன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலையானு? சரினு வாழ்த்து சொல்லலாம்னு போன் பண்ணா எனக்கு டெவில் ஷோ போடலைனா நான் பேச மாட்டேனு ஃபீல் பண்ணிட்டாரு. சரினு, அப்படியே டெவில் ஷோக்கு அப்படியே ரெடியாகியாச்சு. இப்ப எல்லாம் நிகழ்ச்சிக்கு போவோம்

கவுண்டர்: "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்"

ராயல்: "மிக்க நன்றி கவுண்ட்ஸ். ஆனா எம் பேர இப்ப வெறும் ராம் இல்லை. "ராயல்" ராம். கெஸட்ல கூட மாத்தியாச்சி."

கவுண்டர்: "அது என்ன ராயலு. நீ என்ன மைசூர் மகாராஜா பேமிலியா இல்லை இங்கிலாந்து எலிசபத் ஃபேமிலியா?"

ராயல்: "நோ நோ நோ நோ. எலி எல்லாம் எங்க வீட்ல இல்லை. எல்லாத்தையும் தம்பி பிடிச்சிட்டு போயி மஞ்சுளாக்கு கொடுத்துட்டான். என் சொந்த ஊர் மதுரை. அதனால பாண்டிய வம்சமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்"

கவுண்டர்: "ஏன்டா, பாண்டியன் படத்த தியேட்டர்ல பாக்க காசு இல்லாம சன் டீவில பாத்தவன் நீ? நீ ராயல் ஃபேமிலியா? ஏன்டா உனக்கு இந்த ஓவர் பில்டப்। "

ராயல்: "அது இல்லைங்க கவுண்ட்ஸ். ராயல்னு சொன்னா ஒரு ரிச் இருக்குமேனு தான். அதுவுமில்லாம எனக்கு ரிச்சி ரிச்னா ரொம்ப பிடிக்கும் அதான்."

கவுண்டர்: "அது எவன்டா அந்த ரிச்சி ரிச்?"

ராயல்: "ப்ளாக்ல என் ஃப்ரோபைல் போட்டோல இருக்கான் இல்ல.அவன் தான் ரிச்சி ரிச். நான் கூட ஏன் போட்டோ மாத்தினேனு ஒரு பதிவு போட்டேனே. நியாபகமில்லை."

கவுண்டர்: "ஓ! நீ ஏதோ ஒரு பொண்ணுக்கூப்பிட்டு ஃபோரம் போனப்ப இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்து ப்ரோபஸ் பண்ணி, கடைசியா மூணு பேரும் சேர்ந்து மொத்தனாங்கனு போட்டியே அதா? அது எப்படிடா உனக்கு மட்டும் இத்தன ஃபிகர் மாட்டுது?"

ராயல்: "அது நம்ம எழுத்து திறமைய பாத்துதான்."

கவுண்டர்: "டேய்! யாகூ சேட்ல நீ பண்ண அலும்பதான் உங்க போர்வாள் புட்டு புட்டு வெச்சிட்டாரே. இன்னுமும் ஏன்டா உனக்கு இந்த பில்டப்பு."

ராயல்: "ஹி ஹி ஹி..."

கவுண்டர்: "ஆமா அப்பறம் எதுக்கு அமெரிக்கால இருந்து வரவன எல்லாம் கலாய்ச்ச?"

ராயல்: "ஓ அதுவா? கப்பி வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேன். அவன் வாங்கிட்டு வரல. அதனால தான். ஹி ஹி ஹி"

கவுண்டர்: "ஏன்டா அந்த ஒன்றையனா சாக்லேட்டுக்கு நீ இவ்வளவு அலும்பு பண்ணிருக்க.ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?"

ராயல்: "இந்த உண்மையெல்லாம் உங்களுக்கு யாருங்கண்ணா சொன்னா?"

கவுண்டர்: "நீ உங்க ஊர்ல சொல்லிருக்க விஷயமெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெளிய வர ஆரம்பிடுச்சி கண்ணா... அப்பறம் எதுக்குடா ஆனா ஊனா ஃபீலிங் ஆகிடற?"

ராயல்: "ஓ! அதுவா??? சின்ன வயசுல இருந்தே யாராவது எதுனா சொன்னா இப்படி ஃபீல் ஆகற மாதிரி ஆக்ட் விடுவேன். உடனே சாக்லேட் வாங்கி கொடுத்துடுவாங்க."

கவுண்ட்ஸ்: "இந்த சாக்லேட் பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும் போல இருக்கே. ஆமா குஷி படம் பார்த்துட்டு வரும் போது பேய் துரத்துச்சி, நாய் கடிச்சினு எல்லாம் போட்டிருந்தியே அது என்ன மேட்டரு?"

ராயல்: "அது ஒண்ணுமில்லைங்க... என் கூட வந்த என் ஃபிரெண்டுக்கும் எனக்கும் ஓட்ட பந்தயம் வெச்சோம்। அப்ப ஓடும் போது நாய் கடிச்சிடுச்சி. "

கவுண்ட்ஸ்: "டேய் எவண்டா ராத்திரி ஒரு மணிக்கு ஓட்ட பந்தியம் வைப்பான்? இதுக்கு தான் ஆன்லைன் ஆவிகள், ஆவி அம்மணி எல்லாத்தையும் பகைச்சிக்க கூடாதுனு சொன்னது. ஏதோ உன் நல்ல நேரம் நாய் உன்னைய விட்டுவெச்சிடுச்சி..."

ராயல்: "ஆமாங்க கவுண்ட்ஸ். சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்..."

கவுண்ட்ஸ்: "சரி பொறந்த நாளா இருக்கேனு நானும் உன்னை மன்னிச்சி விடறேன். இந்தா சாக்லேட்டு."

சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)

17 comments:

MyFriend said...

பிறந்த நாளன்று வி.ஐ.பி ஆன ராயலுக்கு வாழ்த்துக்களும் பராட்டுக்களும்..:)

MyFriend said...

நீங்க கலாச்சதில் இனி மஞ்ச முடி தலையன் எங்கே போக போறாரோ!!!

மனதின் ஓசை said...

me firstuuuuuuuu..

கோபிநாத் said...

பாலாஜி.....ராமுவை நல்லாவே ஓட வச்சிருக்க ;-)))

கோபிநாத் said...

\\சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)\\

ஓடினான்....ஓடினான்........ பிகர்களை தேடி ஓடிக்கிட்டே இருக்கான்.

களவாணி said...

தொடக்க ரன் என்னோடது.... (எனக்கே சந்தேகமா இருக்கு)

இப்போதான் படிக்க போரேன்

களவாணி said...

இன்னைக்கு பொறந்த கொழந்த... அதப் போய் இப்படி கலாய்க்கிறாரே கவுண்ட்ஸ். வெட்டி இதையெல்லாம் கேட்கப் படாதா?

கலக்கிட்டீங்க வெட்டி? :-)))))

Ayyanar Viswanath said...

போதும்....விட்டுடுங்க....

:)

அபி அப்பா said...

ராம்:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போதும் உட்டுடுங்க நா போறேன்

கவுண்டர்: இருடி கிடேசன் பார்க் கவுண்டவுன் ஸ்டார் ...இன்னும் 40 நிமிஷம்...அதையும் வாங்கிகிட்ட்டு போயிடு

ராம்:அவ்வ்வ்வ்

இலவசக்கொத்தனார் said...

நல்ல பிறந்தநாள் பரிசுதான்!

இம்சை அரசி said...

// சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்...
//

:)))))

Syam said...

ஏதோ இத்தன பிஸிலயும் ராயலு பேட்டி குடுக்க வந்தாரே :-)

Sree's Views said...

//"டேய்! யாகூ சேட்ல நீ பண்ண அலும்பதான் உங்க போர்வாள் புட்டு புட்டு வெச்சிட்டாரே//
Romba curious aa irukku..enna vishayamnga ? :)

Sree's Views said...

//ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?"//
Nijamaava ?rotfl :))

Santhosh said...

//"ஏன்டா அந்த ஒன்றையனா சாக்லேட்டுக்கு நீ இவ்வளவு அலும்பு பண்ணிருக்க.ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?"//

இது இப்ப நடந்த மேட்டர் இல்லப்பா காலேஜ் படிக்கும் பொழுது முட்டாய் வாங்க சொன்ன பொய் இது. :))

// சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்...
//
இது தான் ஒரு வயசுப் புள்ளைக்கு அழகு. என்ன ராயலு(இம்முட்டு நடந்த பிறகும் நீ அந்த பட்டத்தை வெச்சிகிட்டு இருக்கியா என்ன?)

இராம்/Raam said...

வெட்டிக்காரு,

என்மேலே ஏனிந்த கொலைவெறி??? கவுண்டர்'கிட்டே மாட்டிவிட்டு முழி பிதுங்க வைச்சிட்டியே பாவி :(

//ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?"//

அப்பிடி சொல்லிதான் ஊருக்குள்ளே பந்தாவா திரிஞ்சுட்டு இருக்கேன்... ஹி ஹி

//சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)//

ஆமாம் ஆபிசிலே இருக்கிற எல்லாத்துக்கும் கொடுத்தேன்.... :)

Syam said...

//Romba curious aa irukku..enna vishayamnga ? :)//

Sree, இங்க போய் பாருங்க...நம்ம ராயலோட அருமை பெருமை எல்லாம் தெரியும் :-)

http://chennaicutchery.blogspot.com/2007/04/blog-post_17.html