Wednesday, April 4, 2007

கங்குலிக்கு வாரிசு நம்ம நாட்டாமை

எல்லாரும் அடிச்சு, கிழிச்சு, தொவச்சு, தொங்கப்போட்ட இந்தியா கிரிக்"கெட்டு" மாதிரி இல்லிங்க இந்தப் பதிவு. நாட்டாமைய பத்தின ஒரு ஸ்பெஷல் ரிப்போட்டுங்க இது.

Maggi செய்யுற நேரமும், கங்குலி பேட்டிங் பண்ற நேரமும் ஒன்னு, கங்குலி பேட்டிங்க் பண்ண groundக்கு போகும்போது ஐஸ்கிரீமை வாங்கி வைய்யி, கறையருதுக்குள்ள வந்துருவாருன்னு எல்லாம் நக்கல் நையாண்டி பண்ணினா, நம்ம நாட்டாமை அதுக்கும் மேலைங்க.

நேத்து சரியா Tue- Apr 03, 11:43:00 PM IST க்கு சரித்திர பதிவு ஒன்ன போட்டாரு. சாப்பிட்டு வந்து, தமிழ்மணத்துல அந்தப்பதிவ தேடிப்பார்த்தா காணோம். அதுக்குள்ள அந்த பதிவு தமிழ்மணத்தை விட்டு போயிருச்சு. எப்படின்னு யோசிச்சு பார்த்தா அரை செஞ்சுரி அடிச்சுட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறாரு நம்ம ஊரு நாட்டாமை. ஏன் இப்படி? அதனால

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுநாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுநாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுநாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு
நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு


ஒரு echo effect போட்டு படிச்சுக்குங்க.

27 comments:

Anonymous said...

ஓப்பனிங் பேட்ஸ்மேனா நானே ஒரு சிங்கிள் ரன் எடுத்துக்குறேன். அப்புறம் யாரும் வந்து கிர்ர்ர், உர்ர்ர்ர், பர்ர்ர்ன்னு உருமக்கூடாது.

நாமக்கல் சிபியின் பி.ஏ said...

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

(அவரு கொஞ்சம் பிஸி)

ILA(a)இளா said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க சிபி. உங்களுக்கே ஆணி புடுங்குற வேலை இல்லை. அப்புறம் எதுக்கு பி.ஏ???

நாகை சிவா said...

//நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு//

இன்னும் தீர்ப்பே சொல்லடா(ங்க) வெண்ணெய் அப்படி யாரும் சொல்லுறதுக்கு முன்னாடி நானே உங்க கிட்ட இத சொல்லி உங்களை உசார்ப்படுத்துறேன் விவ்....

நாகை சிவா said...

வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான எங்க பாசத்துக்கும், அன்புக்கும் என்றும் உரிய விவ் இளாவை அவர்களை நான் "டா" போட்டு அழைத்து விட்டதாக சதிக்காரர்கள் வந்து சதி செய்யலாம். அதில் எள் அளவும் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

நாகை சிவா said...

கங்குலி போற போக்கில் கலாய்த்து விட்டு போன விவ் உங்களுக்கு ஒன்றை மட்டும் கூற கடமைப்பட்டு இருக்கிறேன், ஆசைப்பட்டு இருக்கிறேன், விருப்பட்டு இருக்கின்றேன். தயவு செய்து கொல்கத்தா பக்கம் போயிடாதீங்க....

நாகை சிவா said...

//ஓப்பனிங் பேட்ஸ்மேனா நானே ஒரு சிங்கிள் ரன் எடுத்துக்குறேன். அப்புறம் யாரும் வந்து கிர்ர்ர், உர்ர்ர்ர், பர்ர்ர்ன்னு உருமக்கூடாது. //

பெயர் சொல்லாத அனானி, அது என்ன சிங்கிள் ரன், நீரே தனியாக ஆடி சதம் கூட அடிக்கலாம். களத்தில் இறங்கு.... உன் தனித் திறமையை காட்டு.....

தேவ் | Dev said...

விவ் 'அவர்களை' சிவா நீ 'டா' போட்டு அழைக்க டா லர் பெற்றதாகவும் அதுவும் லாம் யாம் ஸ்யாமிடம் பெற்றதாகவும் சி.என்.என் ஐ.பி.என்ல்ல சொன்னாங்களே அது உண்மையில்லயா?

செந்தழல் ரவி said...

தாதா கங்குலிய கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடமாட்டீங்களே !!!!

இன்னைக்கு இந்திய கிரிக்கெட்டர்ஸ்லே இவர்தான் நிம்மதியா இருக்காரு...

நேத்து கொல்'கத்தாவுல ஒரு மீஜிக் பிரோகிராம் ஆர்கனைஸ் செய்தாரு தெரியுமா...

சேவாக்கையோ, தோ(கே)னையை போட்டிருந்தீங்கன்னா சரி...

ACE said...

சிங்ககூட்டத்துக்கு நடுவுல புலியோட உறுமல் பலமா இருக்கு..

நானும் ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன்..

ACE said...

//கங்குலி போற போக்கில் கலாய்த்து விட்டு போன விவ் உங்களுக்கு ஒன்றை மட்டும் கூற கடமைப்பட்டு இருக்கிறேன், ஆசைப்பட்டு இருக்கிறேன், விருப்பட்டு இருக்கின்றேன். தயவு செய்து கொல்கத்தா பக்கம் போயிடாதீங்க.... //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. கங்குலியோட நம்ம நாட்டாமைய கம்பேர் பண்ணி, கங்குலிக்கு பெருமை சேத்திருக்கைறார், இளா..

புலி என்ன சொல்ல வறீங்க..இந்த கம்பேர்னால, கங்குலிக்கு அவப்பேர்னு, நாட்டாமைய அவ மதிக்கிறீங்களா??

இல்ல இளா கொல்கத்தா போனா, அவருக்கு விழா எடுத்து பெருமைபபடுத்துவாங்கன்னு சொல்றீங்களா.. கொஞ்சம் தெளிவு படுத்துங்க

இவண்,
நாட்டாமை பெருமை படுத்துவோர் கழகம்

ILA(a)இளா said...

எப்படியோ, சேப்பல் செப்பல் மாட்டிக்கிட்டு அவுஸ்திரேலியா கிளம்பிட்டாரு. அங்கன போயி அவன் சரியா இல்லை, இவன் ஒழுங்கா இல்லைன்னு கதை சொல்ல போறாரு. நம்மாளுங்களும் அப்ப்டியெல்லாம் இல்லை, அந்தாளுக்கு இந்திய கிரிகெட்டு பத்தி என்னா தெரியும்னு சொல்லப்போறாங்க. ஆக மொத்தம்
நாட்டாமை இன்னிக்கு சேப்பலுக்கு சொன்ன தீர்ப்ப மாத்த வேணாம்.

ILA(a)இளா said...

கங்குலிக்கு கல்கத்தா புலின்னும் ஒரு பேர் இருக்கு. அத சொல்ல வேணாம்னுதான் இப்படி உறுமராரு நம்ம சங்கத்து புலி. இரண்டு புலிக்கு நடுவுல கம்பீரமா நம்ம நாட்டாமை, அட சூப்பரா இருக்காருப்பா லாயாமு.

ACE said...

காணவில்லை
~~~~~~~~~~~~~

பெயர் : "நாட்டாமை" ல்லாம்
உயரம் : 6 அடி
அடையாளம் : முகத்தை மறைக்கும் மீசையும், கழுத்தில், அவரை விட கனமான புலி நகமும் அணிந்திருப்பார்..

நேற்று, ஆப்புகளை வாங்க லாரி கொண்டு வருவதாந் கூறி விட்டு, ஆப்படிக்க காத்திருந்தவர்களுக்கு அல்வா கொடுத்து, காணாமல் போய் விட்டார்..

கண்டு பிடித்து தருவோருக்கு, அல்வாவும். அவர் வாங்கும் ஆப்பில் (apple இல்ல) பாதியும் பரிசளிக்கபடும்.

Syam said...

//நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு//

மாத்தி சொல்லு மாத்தி சொல்லுனா..என்ன பண்றது...சரி இவ்வளவு தூரம் எக்கோ எபக்ட்டோட கேட்டு இருக்கீங்க...உங்களுக்காக...:-)

பப்ர்தீ

Syam said...

//அடையாளம் : முகத்தை மறைக்கும் மீசையும், கழுத்தில், அவரை விட கனமான புலி நகமும் அணிந்திருப்பார்..//

என்ன ace சந்தனத்த விட்டுடீங்க...என்னமோ போங்க :-)

Syam said...

//அழைக்க டா லர் பெற்றதாகவும் அதுவும் லாம் யாம் ஸ்யாமிடம் பெற்றதாகவும் சி.என்.என் ஐ.பி.என்ல்ல சொன்னாங்களே அது உண்மையில்லயா//

சி.என்.என்.ஐ.பி.என் ல அவ்வளவு வேலை இல்லாம இருக்காங்களா? :-)

smiley said...

adutha game yaar recommendation la ganguly seruvar enru theriyalai parpom :)

Syam said...

//புலி என்ன சொல்ல வறீங்க..இந்த கம்பேர்னால, கங்குலிக்கு அவப்பேர்னு, நாட்டாமைய அவ மதிக்கிறீங்களா//

புலி சொல்லனா கூட...நீங்க சேத்துல போட்டு என்ன பொரட்டி எடுக்காம விடமாட்டீங்க போல இருக்கு :-)

நாகை சிவா said...

//விவ் 'அவர்களை' சிவா நீ 'டா' போட்டு அழைக்க டா லர் பெற்றதாகவும் அதுவும் லாம் யாம் ஸ்யாமிடம் பெற்றதாகவும் சி.என்.என் ஐ.பி.என்ல்ல சொன்னாங்களே அது உண்மையில்லயா? //

அதுல சொன்னது இருக்கட்டும், அது எப்படி உமக்கு புரிந்தது அதை சொல்லும் முதல்.....

நாகை சிவா said...

//சிங்ககூட்டத்துக்கு நடுவுல புலியோட உறுமல் பலமா இருக்கு.//

இந்த புலியும் அந்த சிங்கத்தில் ஒன்னு தானே!....

சிங்கத்தில் புலி எப்படினு நீங்களும் கேள்வி கேட்கப்பிடாது சொல்லிட்டேன்.

நாகை சிவா said...

//அவன் சரியா இல்லை, இவன் ஒழுங்கா இல்லைன்னு கதை சொல்ல போறாரு. நம்மாளுங்களும் அப்ப்டியெல்லாம் இல்லை, அந்தாளுக்கு இந்திய கிரிகெட்டு பத்தி என்னா தெரியும்னு சொல்லப்போறாங்க. //

ஏற்கனவே தான் ஆரம்பித்து விட்டார்களே.... இது எல்லாம் இல்லாட்டி பின்ன எப்படி?

நாகை சிவா said...

//மாத்தி சொல்லு மாத்தி சொல்லுனா..என்ன பண்றது...சரி இவ்வளவு தூரம் எக்கோ எபக்ட்டோட கேட்டு இருக்கீங்க...உங்களுக்காக...:-)

பப்ர்தீ //

உன்ன மாத்தி சொல்ல சொன்ன நீ திருப்பி சொல்லுற

தீப்பர், தீர்பப், தீபர்ப், பர்ப்தீ இது போல மாத்தி மாத்தி சொல்லனும்

புரியுதா!

Syam said...

//உன்ன மாத்தி சொல்ல சொன்ன நீ திருப்பி சொல்லுற

தீப்பர், தீர்பப், தீபர்ப், பர்ப்தீ இது போல மாத்தி மாத்தி சொல்லனும்

புரியுதா! //

அய்யா ராசா நீ ஆளு மட்டும் புலி இல்ல...இந்த ஸ்டேட்டிஸ்டிக்ஸூ...ஸ்டேட்டிஸ்டிக்ஸூ...ன்னு சொல்வாங்களே அதுலயும் சூர புலிதான்யா :-)

Syam said...

ஒரு கோட்டர போட்டுக்கறேன் :-)

மணி ப்ரகாஷ் said...

நாட்டாமையினை தாதாவோடு ஒப்பிட்டமைக்கு இளாவிற்கு வாழ்த்து..நாட்டாமை வாழ்க.....


தாதா கங்குலி வாழ்க...

உங்கள் நண்பன் said...

புலி! சத்தம் கொஞ்சம் ஓவரா இருக்குதே இன்னைக்கு !

ஆரம்பிச்சிடுவோமா இங்க!