Wednesday, April 11, 2007

க்ரேக் கைப்புள்ள - SCOOP NEWS

கடந்த மாதம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் விளையாட வெஸ்ட் இன்டீஸ் போறோம்ன்னு இதே சங்கத்தைச் சேர்ந்த மக்கள் கிளம்பியதும் அதன் பின் அவர்கள் அலட்டலாகப் பேட்டிக் கொடுத்ததும்.. சிறப்பு பயிற்சி என்று கும்மாளம் அடித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும்..

விளையாடச் சென்ற அணி... என்னவானது என்று விசாரிக்க நம் பதிவுலக சிறப்பு புலனாய்வு குழு முயற்சிகள் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன...

கிரிக்கெட் விளையாடச் சென்ற இடத்தில் அணியின் மூத்த வீரர்கள் நடந்துக் கொண்ட முறை குறித்து பயிற்சியாளர் க்ரேக் கைப்புள்ள அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள் அமுக்கப் பட்டுள்ளன...

அந்த எஸ்.எம்.எஸ்களில் அப்படி என்ன இருந்தது...அதையும் பாருங்க...

"மந்திராப் பேடியை தனக்கு துணைப் பயிற்சியாளராய் கேட்டுத் தான் கதறியும் செவி மடுக்காத பதிவுலகக் கிரிக்கெட் போர்ட் பற்றி மனம் வெதும்பியுள்ளார் கைப்பு..
வெக்கத்தை விட்டு தன் சம்பளத்தில் முக்கால் பகுதியை மந்திரா பேடிக்கு விட்டுத் தருவதாய் கூறியும் போர்ட் அதை ஏற்க மறுத்து பினாத்தும் நபரை சிறப்பு பயிற்சியாளராய் நியமித்துத் தன்னைச் சிறுமைப் படுத்தியதாய் கைப்புக் கண்கலங்கி உள்ளார்"

காலைத்தோறும் தன் கையால் நாலு வீதித் தள்ளி இருந்த மாட்டுப் பண்ணைக்குச் சென்று தானே கறந்து வீரர்களுக்கு ஊட்டச் சத்து வழங்க வைத்திருந்த பசும் பாலின் க்ரீமி லேயரை கேப்டன் என்ற ஆணவத்தில் கொத்தனார் எடுத்துக் குடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விட்ட நிகழ்வுகளை ரிங் டோனாக நண்பர்களுக்கு பார்வர்ட் செய்துள்ளார் க்ரேக் கைப்புள்ள..

விளக்கு வைத்தப் பின் விளையாட மாட்டோம் என்று அடம் பிடித்த சீனியர் பிளேயர்களும்... கடும் வெயிலில் ஆடினால் காம்ப்ளெக்ஷ்ன் கருத்து விடும்.. அவ்வளவாக விளம்பரங்கள் வராது என்று அடம் பிடித்த இளம் வீரர்கள் என அல்லல் கதைகளை இ மெயிலை இறைத்துள்ளார் கோச் கைப்புள்ள..

'சுமா'ராக தான் பயிற்சி செய்வேன்.. சு(ம்)மா சு(ம்)மா எல்லாம் பயிற்சி செய்ய முடியாது... நீ சு(ம்)மா சு(ம்)மா என்னை மிரட்டுனே என் ஆறு கோடி ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என பல்டி அடித்த வெ(ற்)றி வீரர் கொடுத்த டார்ச்சர் என அவர் டைரியின் கண்ணீர் பக்கங்களூம் நம் கையில் சிக்கி உள்ளன...

மேட்ச் பிராக்டீஸ் பார்க்க வந்த இளம் ரசிகைகளின் யாகூ/ஜி-மெயில் ஐடி வாங்கி கடலை சாகுபடி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த மீனாட்சி நகரின் வீரர் தன் லாப்டாப் புடுங்கி வைத்து அசிங்கப்படுத்திய நிகழ்வையும் பதிவாகப் போட்டுள்ளார்..

இன்னும் ரகசியங்கள் நிறைய உள்ளன...

உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையிலும் மக்களுக்கு உண்மைச் சொல்லக் கடமைப் பட்டு சங்கத்தின் போர்வாள் ஐடியைக் கைப்பற்றி இந்தப் பதிவை அவ்ர்கள் சங்கத்திலேயே வெளியிடுகிறோம்...

பதிவுலக மக்களே எங்கள் உயிரை இந்த சங்கத்துச் சிங்கங்கள் பிராண்டாமல் பாதுகாத்து கொடுங்கள்...

இவ்வளவு விசயங்களை விசும்பிய க்ரேக் கைப்பு இப்போ எங்கே? அதையும் தைரியமா உங்களுக்குச் சொல்லுறோம்.. கீழேப் போங்க.. படத்தைப் பாருங்க....

இந்தப் படத்தில் கீழ் நோக்கிப் பாய்வது யாருன்னு நான் உங்களுக்குச் சொல்லணுமா....

தள்ளி விடுறவங்களை உங்களுக்கு அடையாளம் தெரியுதா?

இதற்குப் பின்னால் பெரும் சதி இருக்கும் போல் உள்ளது..

முன்னணி கிரிக்கெட் பதிவர்களான மணிகண்டன், பாஸ்ட் பவுலர், அவந்திகா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி பற்றி எதுவும் சொல்லாதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது....

பதிவுலகம் க்ரேக் கைப்புள்ளயை மறந்து விட்டதா என்ன?

40 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

இங்கேயும் நான்தான் ஃபர்ஸ்ட்டா? :-P

ஜி said...

ulaga koppaiyil India ani thothathukku kaaranam Cheppel, Kaipulla aal maaraattamthaan kaaranamnu ulavu thurai vattaarangal sollikiraangale. athu unmaiyaa??

.:: மை ஃபிரண்ட் ::. said...

விளையாடாமலே இவ்வளவு புரளியா?

அப்போ விளையாடியிருந்தா?????????

கைபுள்ளதான் பாவம்.. ஹீஹீஹீ

அபி அப்பா said...

பாஸ்ட் பவுலருக்கு செய்தி சொல்லியாச்சு, பாஸ்டா ஓடி வர்ரார். வந்து விளக்கம் கொடுப்பார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்:-))

அபி அப்பா said...

கைபுள்ள ஷில்பாஷெட்டிய ஜோடி கேட்பதாக ஒரு தகவல்:-))

நாகை சிவா said...

இவை எல்லாம் கட்டதுரை ஆட்களின் சதி. சங்கத்தின் பெயரை கெடுக்க எங்கள் தல கைப்பூவை ஒரு பகடி ஆக்கி விட்டார்கள.

நாகை சிவா said...

//ulaga koppaiyil India ani thothathukku kaaranam Cheppel, Kaipulla aal maaraattamthaan kaaranamnu ulavu thurai vattaarangal sollikiraangale. athu unmaiyaa?? //

ஆள் மாறாட்டம் நடந்து இருந்தால் இந்தியா ஜெயித்து இருக்கும்ய்யா ஜெயித்து இருக்கும்..... அது நடக்காம போனாதால் தான் இவ்வளவு அசிங்கமும்.

நாகை சிவா said...

தேவ்,

இந்த சதிக்கு நீங்களும் உடந்தையா?

உங்கள் ஐ.டி எப்படி அவர்களுக்கு கிடைத்தது.....

நாகை சிவா said...

//பினாத்தும் நபரை சிறப்பு பயிற்சியாளராய் நியமித்துத் தன்னைச் சிறுமைப் படுத்தியதாய் கைப்புக் கண்கலங்கி உள்ளார்"//

இது சற்றே உண்மையான செய்தி... நாங்கள் கூட ரொம்பவே வலியுறுத்தி கேட்டோம். அட மந்திரா இல்லாட்டிக் கூட பரவாயில்லை ஒரு நமீதா, பாவனா கூட ஒகே சொன்னோம். ஆனால் கேப்டனின் சொந்த கட்சியை சேர்ந்தவர் என்ற ஒரு காரணத்துக்காக எப்பவும் பெனாத்துவரை துணைப் பயிற்சியாளராக அனுப்பி எங்கள் கைப்பூவை பெனாத்த வைத்து விட்டார்கள். :-((((

நாகை சிவா said...

//கைபுள்ள ஷில்பாஷெட்டிய ஜோடி கேட்பதாக ஒரு தகவல்:-)) //

அவர் வட இந்தியாவில் பணி புரிவதால் இப்படி ஒரு புரளி கிளம்பி உள்ளது. ஆனால் அதில் உண்மை இல்லை. அவர் என்றுமே நமீதா பக்தர் தான்.

நாகை சிவா said...

//'சுமா'ராக தான் பயிற்சி செய்வேன்.. சு(ம்)மா சு(ம்)மா எல்லாம் பயிற்சி செய்ய முடியாது... நீ சு(ம்)மா சு(ம்)மா என்னை மிரட்டுனே என் ஆறு கோடி ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என பல்டி அடித்த வெ(ற்)றி வீரர் கொடுத்த டார்ச்சர் //

இது வெட்டியை பழி வாங்க வேண்டும் என்று நோக்கில் எழுதப்பட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அவரே சு(ம்)மா னு இருக்காரு, அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க.....

தம்பி said...

பாவம்யா நம்ம கைப்ஸ், எங்கனயோ ஊர் பேர் தெரியாத இடத்துல கஸ்டபட்டு ஆணிபுடுங்கிட்டு இருக்கு. அதப்போய் நிமிண்டி பாக்கறிங்களே.

தம்பி said...

யோவ் புலி!

எங்கய்யா போன? பதிவுலகத்த விட்டு விலகிட்டதா பேசிக்கறாங்க, நீ என்னடான்னா ரீஎண்ட்ரி குடுக்கற?

நல்லா இருலே.

உகாண்டா சுற்றுப்பயணத்த பத்தி சொல்லு.

Syam said...

//மந்திராப் பேடியை தனக்கு துணைப் பயிற்சியாளராய் கேட்டுத் தான் கதறியும் செவி மடுக்காத பதிவுலகக் கிரிக்கெட் போர்ட் பற்றி மனம் வெதும்பியுள்ளார் கைப்பு..
//

ரொம்ப சரி....என்ன கொஞ்சம் கூட ரசனையே இல்லாதா பதிவுலக கிரிக்கெட் போர்டு :-)

Syam said...

//ஆள் மாறாட்டம் நடந்து இருந்தால் இந்தியா ஜெயித்து இருக்கும்ய்யா ஜெயித்து இருக்கும்..... அது நடக்காம போனாதால் தான் இவ்வளவு அசிங்கமும்//

சரியா சொன்ன பங்கு....நம்ம டீம் ப்ளேயர்ஸ்ல பாதி பேர ஆஸ்திரேலியா டீம்கும்,பாதி பேர சவுத் ஆப்ரிக்கா டீம் கும் மாத்தி அங்க இருந்து ஆள் மாராட்டம் பண்ணி இருந்தா...கைப்பு டீம் பட்டய கிளப்பிட்டு வந்து இருக்காது :-)

Syam said...

//இது வெட்டியை பழி வாங்க வேண்டும் என்று நோக்கில் எழுதப்பட்டு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அவரே சு(ம்)மா னு இருக்காரு, அவரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க.....//

பங்கு நீ வெந்த புண்ணுல குண்டு வெக்கர...அவரே பாவம் சு(ம்)மா இருக்காரு...:-)

Syam said...

//உகாண்டா சுற்றுப்பயணத்த பத்தி சொல்லு. //

இது வேறயா...சொல்ல்ல்ல்ல்ல்ல்வே இல்ல :-)

இராம் said...

//மேட்ச் பிராக்டீஸ் பார்க்க வந்த இளம் ரசிகைகளின் யாகூ/ஜி-மெயில் ஐடி வாங்கி கடலை சாகுபடி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த மீனாட்சி நகரின் வீரர் தன் லாப்டாப் புடுங்கி வைத்து அசிங்கப்படுத்திய நிகழ்வையும் பதிவாகப் போட்டுள்ளார்..//

அடபாவிகளா,

தோத்து போயிட்டோமேன்னு நாப்பாட்டுக்கு செவன்னேன்னு வந்தேன்... ஆனா ரசிகை அதுஇதுன்னு ஏய்யா வெடிகுண்டு வைக்கிறீங்க...

என்னோட சிஸ்டத்திலே பிராப்ளம் ஆகி அந்த ஐடியெல்லாம் டெலிட் ஆகிறுச்சு, If you don't mind அதெல்லாம் திரும்ப கிடைக்க வைக்கமுடியுமா... :))

பினாத்தல் சுரேஷ் said...

கைப்புள்ளயின் மர்மமான தலைமறவு, மற்றும் உலகக்கோப்பை படுதோல்வியைத் தொடர்ந்து வலைக்கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்த மறுபரிசீலனை சீர்திருத்தங்கள்:

1. உழைப்புக்கேற்ற ஊதியம் - 100 ஹிட் பெறும் பதிவுக்கு 10 பின்னூட்டங்கள், 200 ஹிட் பெறும் பதிவுக்கு 200 பின்னூட்டங்கள் என வழிநெறி செய்யப்படும். ஹிட்டே பெறாமல், தொடர்ந்து ஆட்டத்தில் இருக்கவேண்டும் என நினைக்கும் பல ப்ளேயர்களுக்கு இது மூலம் மணி கட்டப்படும்.

2. ப்ளேயர்கள் தமது வலைப்பூவில் 2க்கு மேல் விளம்பரம் வைக்கக்கூடாது. ஒரு பதிவருக்கு இரு இடங்களுக்கு மேல் விளம்பரம் இருக்கக்கூடாது.

3. எல்லா பதிவர்களும் வாரம் ஒரு பதிவு இட்டு தத்தம் பதிவுத் தகுதியை நிரூபித்தால்தான் ஆட்டையில் சேர்த்து, கொல்லப்படுவார்கள்.

4. கும்மிடிப்பூண்டி அண்டர் 19 உடனான அடுத்த தொடருக்கு மேலாளராக கச்சேரியாரே நியமிக்கப்படுகிறார்.

5. க்ரேக் கைப்புள்ள உடல்நலம் தேறி திரும்ப வரும் பட்சத்தில், அடுத்த தொடருக்கு (ஊரப்பாக்கம் ஊராட்சி அண்டர்17) அவர் கோச்சாக நியமிக்கப்படுவார்.

6. கேப்டன் பதவியிலிருந்து இறக்கப்படும் கொத்தனார், பின்னூட்ட கோச்சாக நியமிக்கப்படுகிறார்.

7. பினாத்தலார் உப்புமா கோச்சாக தொடர்வார்.

இன்னும் பல கோச்சுகள் தேவைப்படுவதால், அவரவர் தத்தம் திறமைகளைக் காட்டி, கோச் பதவியை அள்ளிச் செல்லலாம்.

ஒ-ம்

BCCI
(Blog Cricket Control International)

நாகை சிவா said...

//எங்கய்யா போன? பதிவுலகத்த விட்டு விலகிட்டதா பேசிக்கறாங்க, நீ என்னடான்னா ரீஎண்ட்ரி குடுக்கற?//

அப்படி யார் பேசினா அத சொல்லு முதல.... நீனா ஏதாச்சும் ஒன்ன கிளப்பி விடு....

//உகாண்டா சுற்றுப்பயணத்த பத்தி சொல்லு. //

எங்க போனேன் என்று தெரிந்து கொண்டே கேட்டுகுறியே உன்னை என்ன பண்ணுறது சொல்லு....

//நல்லா இருலே. //

சரிங்க ஆபிசர்....

நாகை சிவா said...

//ரொம்ப சரி....என்ன கொஞ்சம் கூட ரசனையே இல்லாதா பதிவுலக கிரிக்கெட் போர்டு :-) //

நயன், கெளதமி, நமீதா, பாவனா இது எல்லாம் போட்டு இருந்தா நல்லா ரசிக்கம்படி இருந்து இருக்கும் என்ன சொல்லுற பங்கு....

Syam said...

//நயன், கெளதமி, நமீதா, பாவனா இது எல்லாம் போட்டு இருந்தா நல்லா ரசிக்கம்படி இருந்து இருக்கும் என்ன சொல்லுற பங்கு.... //

என் இனமடா நீ :-)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

தேவ்,

இந்த சதிக்கு நீங்களும் உடந்தையா?

உங்கள் ஐ.டி எப்படி அவர்களுக்கு கிடைத்தது..... //

இந்த சதிக்கு அவர் உடந்தை இல்ல... அவர் தான் தலைவர் :-))

வெட்டிப்பயல் said...

நாட்ஸ்,
நீங்க கூடமா இந்த பழி பாவத்த நம்பறீங்க??? ஓ நோ!!!

வெட்டிப்பயல் said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...

இங்கேயும் நான்தான் ஃபர்ஸ்ட்டா? :-P //

யாராவது இவுங்கள அடக்க மாட்டீங்களா???

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

யோவ் புலி!

எங்கய்யா போன? பதிவுலகத்த விட்டு விலகிட்டதா பேசிக்கறாங்க, நீ என்னடான்னா ரீஎண்ட்ரி குடுக்கற?//

யார் பேசினாங்க??? எங்க பேசினாங்க? எப்ப பேசினாங்க???

எலேய் உனக்கு ஆப்பு அடிக்கிறாங்கனு புரளி கிளப்பறியா நீயி...

வலையுலக நாரதா... அடங்க மாட்டங்கற... உனக்கு இருக்கு

வெட்டிப்பயல் said...

//Syam said...

//நயன், கெளதமி, நமீதா, பாவனா இது எல்லாம் போட்டு இருந்தா நல்லா ரசிக்கம்படி இருந்து இருக்கும் என்ன சொல்லுற பங்கு.... //

என் இனமடா நீ :-) //

புலி/நாட்ஸ்,
என்ன கௌதமியெல்லாம் லிஸ்ட்ல சேர்த்துக்கிட்டு... அவுங்க எல்லாம் ப்ளாக் & வைட் காலம்...

இலியானா, ஜெனிலியா, அனுஷ்கா இவர்கள்தான் அடுத்த கோச்...

Dreamzz said...

LOL

nalla comedya thaan irukku!

Dreamzz said...

//'சுமா'ராக தான் பயிற்சி செய்வேன்.. சு(ம்)மா சு(ம்)மா எல்லாம் பயிற்சி செய்ய முடியாது... நீ சு(ம்)மா சு(ம்)மா என்னை மிரட்டுனே என் ஆறு கோடி ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என பல்டி அடித்த வெ(ற்)றி வீரர் கொடுத்த டார்ச்சர் என //

adra adra! juper!

இலவசக்கொத்தனார் said...

உலகக்கோப்பையைத் தோத்த டிராவிட்டே கேப்டனாகத் தொடரும் பொழுது என்னைப் பதவி இறக்க நினைப்பதற்கு என் பெயர்தான் காரணம் என்பதுதானே உண்மை.

பெயர் தமிழில் இருந்தால் வரிவிலக்கு, பெயரில் திராவிடமாக இல்லை என்றால் பதவி இறக்கம். ஆனால் என்ன ஆனாலும் பயிற்சியாளரான தன் பதவி மட்டும் நிச்சயம். இந்த வலையுலக கிரிக்கெட் அரசியல் இப்படி கீழ்தரமாக இருக்கிறதை நினைத்தால் என் நெஞ்சம் பதபதைக்கிறது.

இப்படிப்பட்ட கருத்துக்களின் மூலம் பயிற்சியாளரின் பூனைக்குட்டி வெளியே வருகிறதே. இதனை ஒட்டி அடுத்த ஞாயிறு அவர் அவர் நேரத்தில் இரவு 2 மணி முதல் 4 மணி வரை தமிழ்மணத்திற்கு வராமல், பின்னூட்டம் இடாமல் பந்த் நடத்துவோம்.

தமிழ்மணமே ஸ்தம்பித்துப் போகும் இந்த பந்தினால் சுமூக நீதி கிடைக்கப் போராடுவோம்.

Syam said...

//நாட்ஸ்,
நீங்க கூடமா இந்த பழி பாவத்த நம்பறீங்க??? ஓ நோ!!!//

வெட்டி, என்ன பன்றது நாலு பேரு நச்சுனு சொல்லும் போது...நம்மவும் முடியல நம்பாமயும் இருக்க முடியல :-)

Syam said...

//இலியானா, ஜெனிலியா, அனுஷ்கா இவர்கள்தான் அடுத்த கோச்... //

இதுவும் சரி....நான் ரெடி...ட்ரெயினிங்க் எடுக்கறதுக்கு :-)

கைப்புள்ள said...

நல்ல காலம்டா சாமிங்களா...க்ரெக் கைப்புள்ளயோட விட்டீங்க...பாப் கைப்புள்ள ஆக்கலை...அது வரைக்கும் சந்தோஷம்...மந்திரா மேட்டர் இங்கேயும் அவுட் ஆயிடுச்சா? அட பாவிங்களா.
:(

தேவ் | Dev said...

//இந்த சதிக்கு நீங்களும் உடந்தையா?

உங்கள் ஐ.டி எப்படி அவர்களுக்கு கிடைத்தது..... //

இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என் நீதி கேட்டு நெடும்பயணம் போவதாய் நீ அறிவித்திருந்தால் நான் நெகிழ்ந்திருப்பேன்.. என் மேலேயே சந்தேகப்பட்டு விட்டாயே.. சென்ற மாதம் என் செல் போன் திருடுப் போனதை நாடறியும்... அது இந்தச் சதியின் முதல் கட்டம் என்பதை நானறியாமல் போனேனே...

தேவ் | Dev said...

//தேவ்,

இந்த சதிக்கு நீங்களும் உடந்தையா?

உங்கள் ஐ.டி எப்படி அவர்களுக்கு கிடைத்தது..... //

இந்த சதிக்கு அவர் உடந்தை இல்ல... அவர் தான் தலைவர் :-))//

ஏம்ப்பா இப்படி சு(ம்)மா பொங்குறே...நான் என்னிக்குமே தலக்கு தொண்டன் தான்ப்பா... IN THE PAST17 months of my sangam life no boday has questioned my attitude it hurts... :)))
:(((

தேவ் | Dev said...

அந்த லாஸ்ட் இங்கிலீஷ் டயலாக்க்கு சச்சின் அண்ணனுக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன்.

தேவ் | Dev said...

//நல்ல காலம்டா சாமிங்களா...க்ரெக் கைப்புள்ளயோட விட்டீங்க...பாப் கைப்புள்ள ஆக்கலை...அது வரைக்கும் சந்தோஷம்...மந்திரா மேட்டர் இங்கேயும் அவுட் ஆயிடுச்சா? அட பாவிங்களா.
:( //


உன் சவுண்ட்டைக் காணும்ன்ன ஓடனே லைட்டா டவுட் ஆனேன்.. அதுவும் இந்தப் போட்டோப் பார்த்தவுடனே ஸ்ட்ராங்கவே டவுட் ஆனேன்.. நீ பாப் கைப்புள்ளயா ஆயிட்டியோன்னு,, பட் காட் இஸ் கிரேட்.... தல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

உங்கள் நண்பன் said...

//பதிவுலகம் க்ரேக் கைப்புள்ளயை மறந்து விட்டதா என்ன? //

தேவு! தலைய மறக்கமுடியுமா? பாவம் எங்க இருக்குதோ எப்படி இருக்குதோ!

////'சுமா'ராக தான் பயிற்சி செய்வேன்.. சு(ம்)மா சு(ம்)மா எல்லாம் பயிற்சி செய்ய முடியாது... நீ சு(ம்)மா சு(ம்)மா என்னை மிரட்டுனே//

வெட்டித்தனமா கொல்டிப் பதிவு எழுதினா இதுதான் கதி!

//என்னோட சிஸ்டத்திலே பிராப்ளம் ஆகி அந்த ஐடியெல்லாம் டெலிட் ஆகிறுச்சு, If you don't mind அதெல்லாம் திரும்ப கிடைக்க வைக்கமுடியுமா... :))
//

ராயலு! இத்தனை பிரச்சனையிலும் உனக்கு கிளுகிளுப்புக் கேட்குது!

அன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

//இது குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என் நீதி கேட்டு நெடும்பயணம் போவதாய் நீ அறிவித்திருந்தால் நான் நெகிழ்ந்திருப்பேன்.. என் மேலேயே சந்தேகப்பட்டு விட்டாயே.. சென்ற மாதம் என் செல் போன் திருடுப் போனதை நாடறியும்... அது இந்தச் சதியின் முதல் கட்டம் என்பதை நானறியாமல் போனேனே... //

அந்த செல்போன் திருட்டை கண்டித்து தான் உகாண்டா வரை நான் நெடும்பயணம் மேற்கொண்டேன், இருந்தாலும் இதில் உங்கள் சூழ்ச்சி இருப்பதற்கு நீங்கள் விடும் ஒவர் சவுண்டே சாட்சியாக இருக்கிறது.

Anonymous said...

poogapa senior,senior inu field la vara udame sathi nadakuthu,en chinamani en nalamaiya pathu uthavikaram neeti euku.athu uga field (aani podukara)illa udane catch pudika.
ulagamsutrumvalibi