Thursday, July 13, 2006

பரிணாம வளர்ச்சி

நான் ஏதோ எப்பவாவது ஒரு பதிவு போட்டுட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தேன், நம்மளை அட்லாஸ் வாலிபராக்கி வாரம் ஒரு பதிவு போடச்சொல்லிப் படுத்தறாங்க இந்தப் பசங்க. இதுல பதிவு எல்லாம் கலாய்க்கற பதிவா இருக்கணுமுன்னு கண்டிஷன் வேற. சரி என்னதான் எழுதலாமுன்னு மண்டையை உடைக்கும் போது நம்ம தெக்கி பதிவு கண்ணுல பட்டது. அவரு எதோ சீரியஸா அந்துமணி, அரைகுறை தூக்கம், பரிணாம வளர்ச்சின்னு எழுதியிருந்தாரு. அதெல்லாம் நமக்கு எங்க புரியுது. அந்த பதிவுல ஒரு பின்னூட்டம் ஒண்ணு போட்டு இருந்தாரு. அதுதான் நம்ம கவனத்தைக் கவர்ந்தது. அதாவது தேவைக்கு ஏத்தா மாதிரி புதிய அங்கங்கள் வளர வாய்ப்பு இருக்கு என்பதை அவரு இப்படி நகைச்சுவையா சொல்லியிருந்தாரு.

"காதோட சேர்ந்து இயற்கையாகவே இருக்கிற மாதிரி ஒரு செல்போன் வைக்க ஒரு "பை," ஹீம், அப்புறம் சாப்பிடமலேயே வேலை பார்ப்பதற்கு ஏற்ற உடம்பு... அல்லது வயித்துக்கு பக்கத்திலேயே அடுத்த வேளை சாப்பாட்டை சேமித்து வைத்துகொள்கிற "பை" :-))) ஹி...ஹி...ஹி... இப்படி எல்லாமே... "

இதை படிச்ச உடனே நமக்கு ஒரு பொறி. இந்த மாதிரி நம்ம மக்களுக்கு எல்லாம் ஒரு சான்ஸ் கிடைச்சா என்ன என்ன தேவைப்படும் அப்படின்னு ஒரு படம் ஓடிச்சு. இன்னைக்கு அதைத்தான் சொல்லப் போறேன்.

கைப்புள்ள : பாவம் மனுஷன் இந்த ஆப்பு வாங்கறத பாத்த நமக்கே பாவமாத்தான் இருக்கு. அதனால இவருக்கு காண்டாமிருகம் மாதிரி நல்ல தடியா ஒரு தோல்தான் வேணும். ஆனா அப்படி ஒரு தோல் கிடைச்சா அவர கலாய்க்கறவங்க பாட்ட நினைச்சா பாவமா இருக்கு.

குமரன் : இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் எண்ணிக்கையைப் பார்த்தா இவருக்கு ரெண்டு கைகள் போதாது. இவருக்கு இன்னுமொரு பத்து கை கிடைச்சா? நல்லாத்தான் இருக்கும். ஆனா இன்னும் பத்து கை இருக்கேன்னு மேலும் ஒரு நூறு வலைப்பூ ஆரம்பிச்சாருன்னா நம்ம கதி?

கால்கரியார் : இவருக்கு என்னன்னு எனக்கு நல்லா தெரியும். இவரு ஒரு மிருகம், பறவை விட்டு வைக்காம காலெல்லாம் கடிச்சு வைக்கறாரு. அதனால இவருக்கு சைடில் கோழிக்காலாய் வளரச் செய்தால் நாட்டில் இருக்கும் மிருகங்கள் எல்லாம் நம்மை வாழ்த்தும். ஆனா கோழிப்பண்ணைக்காரங்க, உணவு விடுதிக்காரங்க எல்லாம் நம்மை கடுப்படிப்பாங்களே.

பொன்ஸ் : இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு இருக்கிற நாலு கண்ணு போதாதே, இன்னும் ஒரு எட்டு கண்ணு குடுப்போமா? அப்போ வலைப்பூ, புஸ்தகமெல்லாம் இன்னும் நிறையா படிக்கலாம். இங்க என்ன பிராப்பளம்? இவங்க போயி தப்பு கண்டுபிடிக்காத பதிவிலெல்லாம் தப்புக் கண்டுபிடிப்பாங்க. அந்த வலைப்பதிவாளர்கள் நம்மளைத் திட்டுவாங்க.

ஜிரா : இவரு விழுந்து வாரரதுக்கு இவருக்கு ஒரு ரப்பர் பாடிதான் வேணும். ஆனா என்ன இவரை நார்மலா பிடிக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு ரப்பர் பாடி வேற கிடைச்சா எங்க போயி பிடிக்கறது?

துளசி டீச்சர் : இவங்களுக்கு உடம்பில் இதுக்கு மேல ஒண்ணும் வேண்டாம். ;) இவங்களுக்கு பிடிச்ச விஷயமோ பயணம். இவங்க எடுக்கற வரலாற்று பாடங்களுக்கு இவங்களுக்குத் தேவை டயம் ட்ராவல் சக்திதான். என்ன ஒரு மாச இந்தியா பயணத்துக்கு 36 பதிவுகள் போட்டாங்க. இவங்க போன நூற்றாண்டு போயிட்டு வந்தா.... தலை சுத்துதே....

நாமக்கல்லார் : இவரு பகலில்லெல்லாம் நார்மல் மனிதனாகவும், சூரியன் மறைந்த பின் ஆந்தை மாதிரி இரவு வாழ் உயிரினமாகவும் மாறினால் 24 மணி நேரமும் இணையத்தில் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கலாம். இவருக்கு கண்ணு வேற கரெக்ட்டா நல்ல பெருசா இருக்கு. ஆனா நினைத்துப் பார்த்தால் இப்பவே இப்படித்தானே இருக்கிறார்.

இயற்கை நேசி : இவரு இப்பவே இவ்வளவு விஷயம் சொல்லறாரு. இவருக்கு கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி கிடைச்சுதுனா வேற வேற மிருகங்களா மாறி இன்னும் சுவாரசியமான தகவல்கள் தருவாரு. ஆனா மறந்து போயி அந்த அமேஸான் தவளையா மாறினாருன்னா அழிஞ்சுல்ல போயிடுவாரு.

எஸ்.கே. : மேல இருக்கறவருக்கு கூடு விட்டுக் கூடு பாயறதுன்னா இவருக்கு க்ளோனிங். அப்போ இவரோட அழகான, அர்த்தமுள்ள பதிவுகள் எல்லாம் நமக்கு இரட்டிப்பா கிடைக்குமே. அதிகமா பின்னூட்டமும் போடுவார். என்ன, இவரு போயி சண்டை போடறவங்க இவரு ஒருத்தரையே சமாளிக்க முடியாம கஷ்டப்படறாங்க. அவங்க கோபம் நம்ம பக்கம் திரும்பும். அதான் பிராப்பளம்.

இப்படி ஒவ்வொருத்தருக்கும் யோசிக்கும் போது நாமே ஆனால்ன்னு நினைக்கறோமே, அதெல்லாம் நினைக்காமலா ஆண்டவன் குடுத்தது போதுமுன்னு இருந்திருப்பான். உலகம் இப்போ இருக்கற மாதிரியே நல்லாத்தான் இருக்கு. ஒண்ணும் மாற வேண்டாம். என்ன சொல்லறீங்க?

ரொம்ப சீரியஸ் முடிவாப் போச்சோ? சரி விடுங்க. உங்களுக்கு ஞாபகத்துக்கு வர வலைப்பதிவர்கள், அரசியல் வியாதிகள், சினிமா நட்சத்திரங்கள், இவங்களுக்கு எல்லாம் என்ன அங்கங்கள் /சக்திகள் வேணுமுன்னு அடிச்சு விளையாடுங்க.

569 comments:

1 – 200 of 569   Newer›   Newest»
இலவசக்கொத்தனார் said...

கைப்ஸ், கும்ஸ், கால்கரி சிவா, பொன்ஸ், ஜிரா, டீச்சர், தளபதி, இ.நேசி அண்ட் எஸ்.கே. - நீங்க யாரும் தப்பா நினைக்க மாட்டீங்கன்னு தெரியும் அதான் உங்களை வம்புக்கு இழுத்தேன்.

யாரு மனசாவது புண்பட்டா சாரி. சொல்லுங்க அதை எடுத்துடறேன். (ஆனா அப்புறம் unsportive behaviour அப்படின்னு தனிப்பதிவு போடுவேன். :D)

பாலசந்தர் கணேசன். said...

இலவச கொத்தனார் பதிவுன்னாலே ஒரு 200 பின்னூட்டம் வந்துரும். நான் இன்னைக்கு ஆரம்பிச்சு வைக்கிறேன்.(அப்படின்னு நினைக்கிறேன்)

பொன்ஸ்~~Poorna said...

ஜொ.பா: இவருக்கும் இன்னும் ரெண்டு கண்ணு கொடுத்தா, நல்லா கூர்ந்து கவனிச்சி ஆராய்ச்சி செஞ்சி பதிவெல்லாம் போடுவாரு.. என்ன ஆராய்ச்சின்னு என்னைக் கேட்காதீங்க.. எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர் தானே..

இலவசக்கொத்தனார் said...

வாங்க கணேசன். நாங்க தாயம் அப்படின்னு முத பின்னூட்டம் நாங்களே போட்டுக்குவோமில்ல. அதான் ராசி. அதனாலதான். :)

பொன்ஸ்~~Poorna said...

அருள் குமார்: இவர் கைல இருக்கிற டைப் ரைட்டரைக் கொஞ்சம் மாத்தி ரெண்டு முறை தட்டினா தான் ஒரு எழுத்து விழணும்.. அப்போ தான் இவரோட நாங்க போட்ட நாடகம் மாதிரி கதை எல்லாம் அடிக்கக் கஷ்டப்பட்டு சின்னதா அடிப்பாரு.. ;) அதே மாதிரி அருளுக்கு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங்கா கையோட கர்ச்சீப்பும் கொடுத்திரலாம்.. எதுக்குன்னு எல்லாருக்கும் தெரியும் ;)

பொன்ஸ்~~Poorna said...

கவிதா: இன்னும் ரெண்டு அணிலை இவங்க வீட்டுக்கு அனுப்பணும்.. ஒரு அணிலால இவங்களைச் சமாளிக்கவே முடியாம, பாவம் அனிதா ரொம்ப கஷ்டப் படுது..

இலவசக்கொத்தனார் said...

//ஜொ.பா: இவருக்கும் இன்னும் ரெண்டு கண்ணு கொடுத்தா, //

ஏங்க உங்களுக்கு நானு சும்மா எட்டு கண்ணு தரல? அது என்னங்க இவருக்கு மட்டும் கஞ்சத்தனமா ரெண்டே ரெண்டு? பாண்டி நீ பாக்குற வேலைக்கு (அட சிலேடை!) இன்னும் பத்து வெச்சுக்கோப்பா.

பொன்ஸ்~~Poorna said...

பினாத்தல் சுரேஷ்: இவருக்கு என்ன வேணும்னா, இந்த கம்ப்யூட்டர், இணையம் எதுவும் இல்லாம, இவர் மனசுல நினைச்ச உடனே பின்னூட்டம் நினைச்ச ப்ளாக்ல வந்து விழணும்..

பொன்ஸ்~~Poorna said...

நாகை சிவா: இவரு பாவம் கொத்ஸ்.. இவருக்கு ரெண்டு ஆன்டன்னா கண்ணுக்கு ஏற்பாடு பண்ணலாம்.. இருக்கிற ஊர்ல யாருமே இல்லாம, 'கன்னி'வெடி, குருவி பத்தி எல்லாம் பாட்டா பாடித் தள்றாரு.. ஜொ.பா. பார்த்து ரசிக்கிறதெல்லாம் சிவா கண்ணுக்கும் தெரியும்னு ஒரு டெக்னாலஜியோட ரெண்டு ஆன்டன்னா.. எப்படி?

பொன்ஸ்~~Poorna said...

சரி சரி.. எல்லாத்தையும் நானே சொல்லிட்டா மத்தவங்க என்ன சொல்வாங்க...அதுனால இப்போ ஜூட்.. நாளை வந்து பார்ப்பேன்.. யாரும் சொல்லலைன்னா, நானே நிறைய வச்சிருக்கேன்.. லிஸ்ட்..

இலவசக்கொத்தனார் said...

//. நாளை வந்து பார்ப்பேன்.. யாரும் சொல்லலைன்னா, நானே நிறைய வச்சிருக்கேன்.. லிஸ்ட்..//

இப்படித்தான் போன பதிவில் வந்து சரியான விளக்கம் எதுன்னு சொல்லறேன்னு சொல்லிட்டுப் போனீங்க. ஆனா ஆளு எஸ்.

இந்த தடவையாவது குடுத்த வாக்கைக் காப்பாத்துங்க. என்ன?

அருள் குமார் said...

இ. கொ.,

//இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் எண்ணிக்கையைப் பார்த்தா இவருக்கு ரெண்டு கைகள் போதாது.//

//இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் எண்ணிக்கையைப் பார்த்தா இவருக்கு ரெண்டு கைகள் போதாது.//

இந்த ரெண்டு மேட்டரையும் நானும் அடிக்கடி நினைச்சிருக்கேங்க!

//இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு இருக்கிற நாலு கண்ணு போதாதே, இன்னும் ஒரு எட்டு கண்ணு குடுப்போமா? //

இப்படி வஞ்சனையே இல்லாம எல்லா பதிவையும் படிக்கிற உங்களுக்கே...

//அப்போ தான் இவரோட நாங்க போட்ட நாடகம் மாதிரி கதை எல்லாம் அடிக்கக் கஷ்டப்பட்டு சின்னதா அடிப்பாரு.. ;) //

இப்படித் தோணுதுன்னா... ரொம்ப கஷ்டம் தாங்க :( இனிமே சின்ன பதிவா போட முயற்சி பன்றேன். ( நான் என்னங்க பண்றது... எழுதணும்னு உக்காந்தா அதுவா வருதுங்க!)

//அதே மாதிரி அருளுக்கு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங்கா கையோட கர்ச்சீப்பும் கொடுத்திரலாம்.. // இது ஓக்கே... வசதியாத்தான் இருக்கும் :))

அருள் குமார் said...

நம்ம பங்குக்கு குழலி:

இவருக்கு கேப்டன பிடிக்காதுன்னாலும், கேப்டன் மாதிரி புள்ளி விவரங்கள் தர்றதுல இவருக்கு நிகர் இவர் தான். அதனால, இவர் சேகரிக்கிற புள்ளி விவரங்களைச் சேமிக்க இவர் மூளைக்குப் பக்கத்துல இரு எக்ஸ்ட்ரா மெமரி டிவைஸ் ஒன்னு மூளை கூடவே கனெக்ட் பண்ணி இருந்தா வசதியா இருக்கும்! என்ன ஒன்னு, படிக்கிற நாமதான் அதெல்லாம் எங்க போய் ஸ்டோர் பண்றதுன்னு யோசிக்கனும் :)

அருள் குமார் said...

//இந்த ரெண்டு மேட்டரையும் நானும் அடிக்கடி நினைச்சிருக்கேங்க!//
மன்னிச்சுக்கோங்க... இதுல ரெண்டாவதா வந்திருக்க வேண்டிய மேட்டர் இங்க இருக்கு...

//இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு இருக்கிற நாலு கண்ணு போதாதே,//

பொதுவா மத்த software மக்கள் பண்ற மாதிரி copy and past லாம் பண்ணாம சொந்தமாவே code எழுதி பழகியாச்சா... அதான் இப்படி ;)

Unknown said...

ஒரு சிறு குறிப்பு..

வ.வா.சங்கத்தின் 50வது பதிவு இது. சங்கத்தின் 50வது பதிவினை எழுதிய இனிய நண்பர் இலவசக் கொத்தனாருக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்:)

G.Ragavan said...

வாங்கய்யா வாங்க...ரப்பரு ஒடம்பா...எனக்கா? ம்ம்ம்ம்ம்....

அப்படியே ரெண்டு றெக்கையும் இருந்தா வசதி. ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு எழும்பிப் பறக்கலாம் பாத்தீங்களா....

என்னைப் பிடிக்ககறது கஷ்டமா இருக்கா....சரி. இனிமே என்னைப் பிடிக்கலைன்னு சொல்லீருங்க. :-))))

ILA (a) இளா said...

50தாவது பதிவிட்ட கொத்தனாருக்கு சங்கம் சார்பாக எங்களுடைய நன்றி/வாழ்த்துக்கள்.

கவிதா | Kavitha said...

//இன்னும் ரெண்டு அணிலை இவங்க வீட்டுக்கு அனுப்பணும்.. ஒரு அணிலால இவங்களைச் சமாளிக்கவே முடியாம, பாவம் அனிதா ரொம்ப கஷ்டப் படுது..//

பொன்ஸ், என் நிலைமை நல்லா தெரிஞ்ச பிறகுமா..இப்படி சொல்றீங்க..

நன்மனம் said...

அணிலு என்னதான் சேட்டை பண்ணினாலும் அத அடிக்காதீங்க... அடிக்காதீங்கனு... சொன்னேன் கேட்டீங்களா! இருந்தாலும் ஒங்களுக்கு வசதியா மாத்தி மாத்தி அடிக்க தான் ரெண்டாவது அணில பரிந்திரைச்சிருக்காங்க பொன்ஸ்:-)

கவிதா | Kavitha said...

பாலா : ஒருத்தர் புதுசா blog க்கு வரக்கூடாது. அவங்களவிடாம துரத்தி , அவங்க பேஜ்க்கு என்னென்ன மாற்றம் செய்யனும்னு ஒலிபெருக்கி இல்லாமலேயே சவுண்டா சொல்லுவாரு. செய்யலனா விடமாட்டாரு. செய்துமுடிச்சா தான் தூங்கவே விடுவாரு. பக்கதுல இருக்கறவங்களுக்கு கூட கேட்காத அளவுக்கு பேசுவாரு.. குரல் அப்படி இருக்கும்.. நாமதான் போய் சவுண்ட இன்கிரீஸ் பண்ணனும். இவருக்கு குரல்வளம் ரொம்ப கம்மியா இருக்கறதால- ஒரு மைக் செட்டு இலவசமா கொடுக்கலாம்

கவிதா | Kavitha said...

கார்த்திக் : அமெரிக்காவில இவர கேட்காம யாரும் கார் ரேஸ்ஸுக்கு போறது இல்ல. அதுமாதிரியே இவருக்காக பயந்து அமெரிக்காவில Food Ball World Cup 2006 லீவு விட்டுடாங்க.. அப்புறம் அடிக்கடி அம்மன் சாமிக்கிட்ட வேண்டி தவம் இருப்பாரு. அதுல இங்கிலீஷ் அம்மன், இந்திய அம்மன்னு 2 விதமா வசதிக்கு தகுந்தாற்போன்று தவம் இருப்பாரு. இது எல்லாத்தையும் விட நம்ம பிள்ளைங்க எல்லாம் வயிறு எரியறமாதிரி “நானும் கவிதை’யும் னு கவிதை எல்லாம் படமா போட்டு தாக்குவாரு.. எங்க ஒவர் ஜொள்ளுன்னு நினைச்சிபோம்னு நடுவுல விவேகாநந்தர் ரை கொண்டுவந்துருவாரு.. இவருக்கு புதுசு புதுசா வர கவிதை எல்லாம் இமெயில அனுப்பி வச்சா தினமும் எல்லார் வயத்தெரிச்சலையும் கொட்டிக்குவாரு.

கவிதா | Kavitha said...

சிங்.செயகுமார்: அணில்குட்டி யாருன்னு கேட்டே கவிதா உயிர வாங்குவாரு.. இவருக்கு அந்நியன் படத்தை அடிக்கடி போட்டு காட்டி கொண்டே இருக்கனும். Short term memory loss இருக்கறதானல அணில் குட்டி எழுதறத எல்லாம் பிரிண்ட்டு எடுத்து வச்சி கொடுக்கலாம்...

கவிதா | Kavitha said...

ப்ரியன் : மென்கவிதை. கவிதை எழுதி எழுதி எல்லாரையும் தன் வசப்படுத்திடுவாரு. கவிதைய யாரும் படிக்கறது இல்லைன்னு வருத்தப்பட்டு தனியா பொதுவான விஷயங்கள எழுத ஆரம்பிச்சாரு, அடிக்கடி நல்லா இருக்கான்னு எல்லார்கிட்டேயும் செக் பண்ணிக்குவாரு. அதனால இவருக்கு என்னோட அணில்குட்டி மாதிரி ஒரு செக்ரட்டரி நியமிச்சா நல்லா இருக்கும்

கவிதா | Kavitha said...

சந்தோஷ் : என்ன சொல்றது.. இவரோட பக்கம் போனாவே சிரிப்பானியாத்தான் இருக்கு. சில சமயம் ஓவரா சவுண்டு விடுவாரு, சில சமயம் சிரிப்பா சிரிப்பாரு. சிரிக்கற மாதிரி எழுதிட்டு..யாரும் சிரிக்ககூடாது அழனும்பாரு. இன்னோரு விஷயம் எல்லாரும் மறந்த விஷயத்தை கிண்டி கிளரி எடுத்து இதுதாண்டா போலிஸ் ரேஞ்சுக்கு துப்புதுளக்குவாரு. அதனால் இவருக்கு ஒரு நல்ல பூதகண்ணாடியும், ஒரு டிஜிட்டல் கேமரா, அப்புறம் ஒரு பெரிய கயிறு (குற்றவாளிய பிடிச்சி கட்டத்தான்), ஒரு பொம்ம துப்பாக்கி, ஜேம்ஸ்பாண்டு 007 ட்ரஸ் & கார், கடைசியா ஒரு நீதி தேவதை பொம்மை... வச்சி பூஜ பண்ணத்தான்..:)

கவிதா | Kavitha said...

தரண் : எழுத்தல வேகமும், விவேகமும், விளையாட்டும் அதிகம். இந்திய கலாசாரத்தை பேசினாவே நக்கல், கிண்டல் தான். இந்திய பழக்கவழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் போக்க நினைப்பதும். குண்டான இந்திய பெண்களை பார்த்து ஓவரா சிரிக்கறதாலேயும், எப்பவுமே சிரிக்காத மாதிரி ஒரு லேகியம் செய்து கொடுக்கனும்.

பொன்ஸ்~~Poorna said...

கவிதா, formக்கு வந்துட்டீங்க... எந்த பாலான்னு தெளிவா சொல்லுங்க.. இங்க நிறைய பாலா.
க.பி.க தல பாலபாரதிக்கு சரியான பரிணாம வளர்ச்சியை வழிமொழிந்த கவிதாவுக்கு வாழ்த்துக்கள்..

பொன்ஸ்~~Poorna said...

//பொதுவா மத்த software மக்கள் பண்ற மாதிரி copy and paste லாம் பண்ணாம சொந்தமாவே code எழுதி பழகியாச்சா... //
அட அருள், நினைவுப் படுத்திட்டீங்க.. நம்ம மாதிரி சாப்ட்வேர் மக்களுக்கு ஒரு பக்கத்துல பிடிச்ச வார்த்தைகளை/வாக்கியங்களை மட்டும் நினைச்சாலே, அதெல்லாம் மொத்தமா காப்பியாகி, நினைக்கிற இடத்துல பேஸ்டும் ஆய்டணும்.. எப்படி?!! ;)

பை த பை, நீங்க உங்களைப் பத்தி சொல்லி இருக்கிறதுக்கு - இல்லாததைச் சொல்லி இருப்பதைப் பெறவைப்பதுக்கு ஒரு பொருள்கோள் படிச்ச நியாபமுங்க ;)

பொன்ஸ்~~Poorna said...

கவிதா, மத்ததெல்லாம் ஓகே.. சான்ஸ் கிடைச்சதும் மனசுல இருக்கிறதெல்லாம் கொட்டிட்டீங்க ;)

இந்த கார்த்திக்குச் சொன்னது தான் ரொம்ப சிம்பிளா இருக்கு.. இயற்கைய தொந்தரவு செய்யாம, நம்மளே மெயில் அனுப்பலாமே?!!

கார்த்திக்கோட பரிணாம வளர்ச்சியா, அவருக்கு மூளைக்குள்ள (??@!) ஒரு டைரி.. இதுல அவரோட கமிட்மென்ட்ஸ், என்னிக்கி எந்த அம்மனுக்கு பூஜை பண்ணணும், எந்தக் கவிதைய யாருக்குக் கொடுத்திருக்காரு.. மாதிரி டீடெய்ல்ஸ் எல்லாம் போட்டுவச்சிக்க வசதியா இருக்கும்..

கவிதா | Kavitha said...

//கார்த்திக்கோட பரிணாம வளர்ச்சியா, அவருக்கு மூளைக்குள்ள (??@!) ஒரு டைரி.. இதுல அவரோட கமிட்மென்ட்ஸ், என்னிக்கி எந்த அம்மனுக்கு பூஜை பண்ணணும், எந்தக் கவிதைய யாருக்குக் கொடுத்திருக்காரு.. மாதிரி டீடெய்ல்ஸ் எல்லாம் போட்டுவச்சிக்க வசதியா இருக்கும்.. //

கொடுத்துட்டா போச்சு.. நல்ல ஐடியாத்தான்.. கார்த்திக் இது போதுமா.. அம்மனுக்கு பூஜை பண்ண வேற ஏதும் தேவைபடுமா?!!

பொன்ஸ்~~Poorna said...

ராபினோட ரெண்டு மூணு பின்னூட்டம் இருந்தது.. அதெல்லாம் ஒரிஜினல் இல்லை.. எடுத்திட்டேன்

ALIF AHAMED said...

இலவசக்கொத்தனாருக்காக....

இ கோ பதிவெழுதிமுடிச்சதும் பின்னுட்டமிட இப்படி லிங்க் கொடுக்கலாம் ::::))))))))))

http://pinnuttam.blogspot.com/

உங்கள் பின்னுட்டங்களை இங்கே இட அது நூற்றுக்கனக்கில் வெளிவரும் :D

Dubukku said...

பின்னூட்ட நாயகன் கொத்ஸ் - இவருக்கு வர்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களை (மிச்ச பின்னூட்டமெல்லாம் அவரே எழுதின பதில்கள்) படிக்கிறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் அதனால பின்னூட்டம் வர வர முதல்ல ஒரு ஆட்டோ அக்னாலட்ஜ்மென்ட் பின்னூட்டம் அப்புறம் ஒரு ஒரிஜினல் பின்னூட்டம்ன்னு ஆட்டமேட்டிக்கா வருகிற மாதிரி ஒரு டெக்னாலஜி சக்தி இருந்தா ...நூத்துக்கணக்குல இருக்கிற பின்னூட்ட எண்ணிக்கை ஆயிரக்கணக்குல ஆகும்.
- காதில் புகை பொங்க டுபுக்கு

இலவசக்கொத்தனார் said...

// இன்னும் ரெண்டு அணிலை இவங்க வீட்டுக்கு அனுப்பணும்.. ஒரு அணிலால இவங்களைச் சமாளிக்கவே முடியாம, பாவம் அனிதா ரொம்ப கஷ்டப் படுது..//

ஏங்க பொன்ஸ்? இதுல பரிணாம வளர்ச்சி எங்க இருக்கு? உங்க தனிப்பட்ட விரோதத்துக்கு(!) எல்லாம் வடிகாலா நம்ம பதிவுயும் உங்க சங்க வலைப்பூவையும் உபயோகப் படுத்தலாமா? இதுவே இவங்க ஒரு அணிலா மாறணுமுன்னு போட்டா சரி.

ஹூம். நீங்க பண்ணறது சரியே இல்லை.

இலவசக்கொத்தனார் said...

//இப்படித் தோணுதுன்னா... ரொம்ப கஷ்டம் தாங்க :( இனிமே சின்ன பதிவா போட முயற்சி பன்றேன். ( நான் என்னங்க பண்றது... எழுதணும்னு உக்காந்தா அதுவா வருதுங்க!)//

பாத்தீங்களா? சந்தடி சாக்குல உங்க எழுத்தையும் விமர்சனம் பண்ணிட்டுப் போயிட்டாங்க. அதான் அவங்க ஸ்டைல். இப்போ அவங்களுக்கு நான் எழுதுனது புரிஞ்சுதா?

நல்லவேளை "எழுதணும்னு உக்காந்தா" இப்படிப் போட்டீங்க. முதல் வார்த்தை இல்லைன்னா மீனிங்கே மாறுது! :)

இலவசக்கொத்தனார் said...

//நம்ம பங்குக்கு குழலி://

இது நல்ல ஐடியாதான். யாராவது குழலிக்கு சொல்லி அனுப்புங்கப்பா. அவரு இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டாரு.

//படிக்கிற நாமதான் அதெல்லாம் எங்க போய் ஸ்டோர் பண்றதுன்னு யோசிக்கனும் :) //

படிக்கிற நாம ஏன் ஞாபகம் வெச்சுக்கணும்? எப்போ வேணாலும் காப்டன் படம் பாக்கலாமே, ச்சீ, குழலி பதிவுக்குப் போயி பாத்துக்கலாமே.

கவிதா | Kavitha said...

//உங்க தனிப்பட்ட விரோதத்துக்கு(!) எல்லாம் வடிகாலா நம்ம பதிவுயும் உங்க சங்க வலைப்பூவையும் உபயோகப் படுத்தலாமா? இதுவே இவங்க ஒரு அணிலா மாறணுமுன்னு போட்டா சரி//

கொத்ஸ், பொன்ஸ்ஸே தேவலாம் போல இருக்கு, நீங்க என்ன அணிலா மாத்திட்டுதான் மறுவேல பார்பீங்க போல..

இலவசக்கொத்தனார் said...

//பொதுவா மத்த software மக்கள் பண்ற மாதிரி copy and past லாம் பண்ணாம சொந்தமாவே code எழுதி பழகியாச்சா... அதான் இப்படி ;) //

நேத்துதான் சிபிக்கு தனியா ஒரு விஷயம் சொன்னேன். உங்களுக்கும் அதான் சொல்லணும். விரைவில் எதிர் பாருங்கள்!

இலவசக்கொத்தனார் said...

//ஒரு சிறு குறிப்பு..

வ.வா.சங்கத்தின் 50வது பதிவு இது. சங்கத்தின் 50வது பதிவினை எழுதிய இனிய நண்பர் இலவசக் கொத்தனாருக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்:) //

அடடா, இதை நோட் பண்ணலையே. சங்கத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

இதத்தான் யோகம் சொல்லுவாங்களோ!
மக்களே எத சொல்லுறேன் புரியுதா...
நம்ம தேவ், இளா, தல, பாண்டி, பொன்ஸ், சிபி எல்லாம் மாஞ்சி மாஞ்சி 48 பதிவு எழுதானாங்க. நம்ம இ.கொ. வந்து இரண்டு பதிவு தான் போட்டு 50 ஆக்கி, அதுக்குகான பெயரையும் தட்டு போயிட்டார்.
கொத்ஸ், நல்ல யோகக்காரர் தான்யா நீ.

பினாத்தல் சுரேஷ் said...

கொத்தப்பா! என்னை ஏன் விட்டாய்.. நான் என்ன unsportive என்று நினைத்தனையோ.. தங்கை பொன்ஸ் மட்டும் இல்லாவிடில் தமிழ்கூறு நல்லுலகம் என்னை மறந்தன்றோ போயிருக்கும்!!!

பொன்ஸ்.. எப்படி கரெக்டா புடிச்சீங்க! எனக்கு நிஜமாவே தேவையான ஒரு சக்திதான் அது.. ஏற்பாடு செய்பவர்களுக்கு ஆயிரம் கற்காசுகள் இனாம்!

இலவசக்கொத்தனார் said...

//அப்படியே ரெண்டு றெக்கையும் இருந்தா வசதி. ஜிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வுன்னு எழும்பிப் பறக்கலாம் பாத்தீங்களா....//

முதலில் அதான் நினைச்சேன். அப்புறம் அந்த ஹைட்டிலிருந்து விழுந்தால் என்ன ஆகறதுன்னுதான்....

//என்னைப் பிடிக்ககறது கஷ்டமா இருக்கா....சரி. இனிமே என்னைப் பிடிக்கலைன்னு சொல்லீருங்க. :-))))//

உங்களைப் படிக்கலைன்னு வேணா சொல்லுவோம் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா?

இலவசக்கொத்தனார் said...

//50தாவது பதிவிட்ட கொத்தனாருக்கு சங்கம் சார்பாக எங்களுடைய நன்றி/வாழ்த்துக்கள். //

நன்றி. வாழ்த்துக்கள் உங்களுக்கும்தான்.

இலவசக்கொத்தனார் said...

//அணிலு என்னதான் சேட்டை பண்ணினாலும் அத அடிக்காதீங்க... அடிக்காதீங்கனு... சொன்னேன் கேட்டீங்களா! இருந்தாலும் ஒங்களுக்கு வசதியா மாத்தி மாத்தி அடிக்க தான் ரெண்டாவது அணில பரிந்திரைச்சிருக்காங்க பொன்ஸ்:-) //

ஆனா அது பரிணாம வளர்ச்சி இல்லையே. அது சரி, உங்க லிஸ்ட் எங்க நன்மனம்?

பினாத்தல் சுரேஷ் said...

நானும் ஒண்ணு சொல்றேன்.

பல பதிவர்கள்

மிளகாய் ஸ்விட்ச் ஒன்று அதிகமாகத் தேவை. காலையிலிருந்து எந்தப்பதிவைப் பார்த்தும் காரசாரமாகத் திட்டும் அளவிற்கு கோபம் வராவிடில், இந்த ஸ்விட்சை அமுக்கினால் "மானே, தேனே, பொன்மானே" எல்லாம் போட்டு ஒரு பின்னூட்டம் தயாராகிவிடும்:-))

இலவசக்கொத்தனார் said...

கவிதாக்கா,

வந்தீங்க. ஒரு சிக்ஸர் அடிச்சீங்க. ஆனா ஆறுல ஒண்ணு கூட பரிணாம வளர்ச்சி இல்லையே. கொஞ்சம் மாத்திப் போடுங்க பார்க்கலாம்.

இதுக்குத்தான் பொன்ஸ் வழி போகாதீங்கன்னு சொல்லறது...

Unknown said...

கொத்ஸ் கொத்ஸ்

இப்படி பின்னூட்டத்திலே பின்னு பின்னுன்னு பின்னி பெடல் எடுக்குற உங்களுக்குப் பின்னூட்டம் இன்னும் அதிகமாகி அதுனால் பின்னால் பரிணாம வளர்ச்சி அடைஞசா அய்யோ நீங்க டொனால்ட் டக் மாதிரி ஆயிடுவீங்களாம்

இது நான் சொல்லல்ல சங்கத்துல்ல புதுசாச் சேந்த சின்னப் பய ஒருத்தன் சொல்லுறான். நான் அவனை மன்றம் பெயர் சொல்லி மிரட்டிட்டு தான் வந்துறுக்கேன்...

இலவசக்கொத்தனார் said...

வாம்மா மின்னல்.

//உங்கள் பின்னுட்டங்களை இங்கே இட அது நூற்றுக்கனக்கில் வெளிவரும் :D //

ஏன் இந்த பதிவிலே வந்தா என்ன?

பொன்ஸ்~~Poorna said...

தேவுக்கு கைல ஒரு டிவி ஸ்க்ரீன்.. வேணுங்கிறப்போ தலைவர் படம் பார்க்க வசதியா.. எப்படி?

ஆகா.. ரஜினி பேரைச் சொன்னதும், ரீசன்டா ஒரு வலைபதிவர் ரசிகர்களைப் பத்தி வருத்தப் பட்டது நினைவு வருது.. அந்தப் பதிவருக்கு ஒரு எக்ஸ்ரே கண்ணு வளர்ந்தா வசதியா இருக்கும்.. யார் யாருக்கு மூளை இருக்கு, யார் யாருக்கு இல்லைன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்சிக்குவாரு..

இலவசக்கொத்தனார் said...

//நூத்துக்கணக்குல இருக்கிற பின்னூட்ட எண்ணிக்கை ஆயிரக்கணக்குல ஆகும்.
- காதில் புகை பொங்க டுபுக்கு //

நல்ல ஐடியாவா இருக்கே. இதுக்கே நம்ம மக்கள் உன் பக்கம் லோட் ஆகலையின்னு திட்டறாங்க.

சரி. உடம்பில் ஒரு புதிய பாகமோ அல்லது ஒரு புதிய சக்தியோ கேட்டால் எல்லாருமே ஏன் இப்படி ஒரு புதிய கருவியே சொல்லறீங்க?

பழூர் கார்த்தி said...

வ.வா சங்கம் பல்கிப் பெருக வாழ்த்துக்கள் !!!

****

நானும் இந்த சங்கத்துல சேந்துக்குறேன்னு பின்னூட்டம் போட்டேனே.. பதில் என்னாச்சுப்பா ??
எதுனா ரூல்ஸ் இருந்தா சொல்லுங்க / பூந்து கீசிடறேன், கீசி :-))

இலவசக்கொத்தனார் said...

//அதுக்குகான பெயரையும் தட்டு போயிட்டார். கொத்ஸ், நல்ல யோகக்காரர் தான்யா நீ. //

அடடா, இந்த யோகமெல்லாம் சம்பளப் பேரம் பேசும் போது ஒதுங்கிப் போகுதே!

இருந்தாலும் நமக்கு இந்த யோகம் அடிச்சதுக்கு காரணமா இருந்த எல்லாருக்கும் நன்றி.

அப்படியே இந்த பதிவுக்கான 50ஆவது பின்னூட்டமும் நானே போடற மாதிரி சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு பாருங்க. இதுக்கும் அந்த ராசிதான் காரணமா?

Unknown said...

கொத்ஸ் 51வது பின்னூட்டம் தான் நீங்க.. கணக்குப் படிச்சவரு கணக்குப் பண்ணுறதுல்ல தவறாலாமா?

Unknown said...

வாங்க லேசி பாய் ( சோம்பேறி பையன்) அவர்களே.. உங்கள் பின்னூட்டம் வந்தது.. சங்கத்தில் பரிசீலனையில் உள்ளது... அப்புறம் கண்டுக்கல்லன்னு சொன்னா எப்படி.. நீங்கப் போர பதிவுக்கெல்லாம் உங்கப் பின்னாலேயே ஒருத்தர் வந்து குசும்பா நோட்டம் பாக்குறாரே அவரைக் கவனிச்சிங்களா.... அவர் உங்களைப் பத்தி சஙகத்துத் தலைமை நிலையத்துக்கு அவர்லி பேசிஸ்ல்ல ரிப்போர்ட்டைப் புறாக் கால்ல கட்டி விட்டுட்டுத் அனுப்பிகிட்டு இல்ல இருக்கார்:)

Unknown said...

ம்ம்ம் அப்புறம் கொத்ஸ்

சொல்ல மறந்துட்டேன் உங்களுக்கு பின் மண்டையிலே ஒரு பரிணாம வளர்ச்சி நடக்கப் போவுது...

ஆமா யார் உங்கப் பதிவுல்ல பின்னூட்டம் போட்டாலும் பின் மண்டையிலே ஒரு முடி நட்டுகிட்டு நிக்கும்.. அப்படி எத்தனை முடி நட்டுகிட்டு நிக்குதோ அத்தனைப் பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்கன்னு அர்த்தம்.. ஆனா நடு மண்டையிலே ஒத்த முடி நின்னா உஷாராயிடுங்க ஏன்னா அது நம்ம நயந்தாரா நாயகர் நக்கல் அடிக்க நாமக்கல் ஹவேஸ்ல்ல லாரி புடிச்சுக் கிளம்பிட்டார்ன்னு அர்த்தம்ண்ணா:)

Unknown said...

உள்ளங்கையிலே டிவியா? அக்காவோவ் பொன் ஸ் அக்கா என்னப் பிரச்சனைன்னாலும் பரவாயில்லை லண்டன் போய் விவரமானவங்களை வச்சு பேசித் தீத்துக்கலாம் ஆனா இப்படி கையிலே டிவி காதுல்ல ரேடியா எல்லாம் வேணாம்...

இலவசமா டிவி கொடுக்குற கும்பல் இருக்கற கையைக் கட் பண்ணிட்டுப் போயிட்டா அப்புறம் தேவர்மகன்ல்ல நம்ம கைப்பு கசின் பிரதர் எசக்கி பேசுற பேஜாரான டயலாக் தான் நானும் பேசனும்.. அதுக்கு நான் ஆள் இல்ல சாமி.

Unknown said...

அப்புறம் கையிடுக்கிலே கடலைச் செடி முளைக்கிற மாதிரி ஒரு வித்தை ஜொ.பாண்டிக்கு கிடைக்கணும்.. அந்த வித்தையை எங்க சங்கத்தின் வேளாண் தமிழன் விவசாயியார் அவனுக்கு கொடுக்கணும்.. அப்போத் தான் பாண்டி தம்பி சிந்து டீச்சர் மாதிரி ஆளுங்களைப் பார்த்த அந்தச் செடியிலிருந்து கடலைப் பறிச்சுக் கொடுக்கவும் ஆணழகன் போட்டிக்கு அழைப்பு வந்தா அந்தக் கடலையைப் புழிஞ்சு எண்ணெய் எடுக்கவும் வசதியா இருக்கும்ல்லா:)

குழலி / Kuzhali said...

//இவருக்கு கேப்டன பிடிக்காதுன்னாலும்,
//
ஆகா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்கோ....அஞ்சா நெஞ்சன், மதுரை சிங்கம் கேப்டன் வாழ்க....யாரப்பு இது கேப்டனை பற்றி பேசுறது, ஸ்..ஸ்... கேப்டன் ஸ்ரீரங்கத்துல போட்ட போடுள பார்த்திபனை பார்த்த வடிவேலு மாதிரி அடங்கி ஒடுங்கி கெடக்குறேன், சும்மா உசுப்பேத்திக்குனு, இப்பிடியே உசுப்பி உசுப்பிதான் ஒடம்பு ரணகளமா இருக்கு...ஆவ்....
//கேப்டன் மாதிரி புள்ளி விவரங்கள் தர்றதுல இவருக்கு நிகர் இவர் தான்.
//
அஃகா அஃகா....கூகுளாண்டவரே துணை...

////நம்ம பங்குக்கு குழலி://

இது நல்ல ஐடியாதான். யாராவது குழலிக்கு சொல்லி அனுப்புங்கப்பா. அவரு இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டாரு.
//
வந்துட்டேன்..... வரக்கூடாதென்றெல்லாம் இல்லிங்கோ அப்போப்போ வந்துபோறது தாங்கோ....

நன்றி

Unknown said...

வாங்க குழலி,

கொத்ஸ் இப்போவாது தெரிஞ்சுக்கங்க குழலி அண்ணனும் நம்மளை மாதிரி ஒரு வருத்தப் படாத வாலிபர் தான்னு...

குழலி அன்ணே இங்கிட்டு வந்தாலே இப்படித் தான் உசுப்பேத்தி விடுவாயங்க.. நீங்க பயப்படவே கூடாது.. நம்ம கைப்புவைப் பாருங்க.. கொஞ்சம் கூடப் பயபடவே மாட்டாரு...

முதல் வருகைக்கும் தருகைக்கும் நன்றி

பொன்ஸ்~~Poorna said...

கொத்ஸ்,
உங்களை அட்லாஸ் வாலிபரா போட்டாலும் போட்டோம்.. சங்கத்துக்குப் புகழ் கூடிகிட்டே இருக்கு..

வராதவங்க எல்லாம் வராங்க!!!

பேசாம, சங்கத்தோட பரிணாம வளர்ச்சியா உங்களையும் சங்கத்தின் நிரந்தர அட்லாஸ் வாலிபர் ஆக்கிடலாம்னு கைப்புவுக்கு கோரிக்கை வைக்கிறேன். :))

அருள் குமார் said...

//மதுரை சிங்கம் கேப்டன் வாழ்க//
அய்யா குழலி, இனி அதை விருதை சிங்கம்னு மாத்திக்க :)

குழலி / Kuzhali said...

//கொத்ஸ் இப்போவாது தெரிஞ்சுக்கங்க குழலி அண்ணனும் நம்மளை மாதிரி ஒரு வருத்தப் படாத வாலிபர் தான்னு...//
என்னது அண்ணனா என்னாதிது சின்னபுள்ள தனமா!!! எத்தனை பேரு இது மாதிரி கெளம்பிருக்கிங்க.... ஆமா எனக்கு வயசு ரொம்ப கம்மி அது...

ILA (a) இளா said...

தேவு கண்ணா ஒரே பின்னூட்டத்தில எத்தனபேர தான் இழுத்து பேசுவீங்க? எங்கனயா கத்துகிட்ட இத? சொல்லி குடுய்யா.

//அவர்லி பேசிஸ்ல்ல ரிப்போர்ட்டைப் புறாக் கால்ல கட்டி விட்டுட்டுத் அனுப்பிகிட்டு இல்ல இருக்கார்:) //
எப்பா வேற ஏதாவது மூலமா அனுப்ப சொல்லுப்பா, புறாக்கறி தல'க்கு சலிச்சு போச்சாம்.

ILA (a) இளா said...

//இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு
இருக்கிற நாலு கண்ணு போதாதே, இன்னும் ஒரு எட்டு கண்ணு குடுப்போமா?//
பொன்ஸ் அக்காவுக்கு ரெண்டு கண்ணே 8 கண்ணு மாதிரிதான் இருக்கும், அப்புறம் எதுக்கு கொத்ஸ் இன்னும்.

ILA (a) இளா said...

அவசர செய்தி:
கைப்பு இப்போ மும்பையில இருக்கார்.

இயற்கை நேசி|Oruni said...

அஹா, நல்ல வரமாத்தான் யோசிச்சு கேட்டுருக்கீரு, ஆனா எமர்ஜென்சிக்கு கிடைக்காது போலவே...

//ஆனா மறந்து போயி அந்த அமேஸான் தவளையா மாறினாருன்னா அழிஞ்சுல்ல போயிடுவாரு.//

ஆனாலும் இப்படி ஒரு வேண்டுதலா... அமேஸான் காட்டுக்கு என்ன அனுப்பி Endanger listலெ போட...

திரும்ப வாரவே..

நாகை சிவா said...

// காதில் புகை பொங்க டுபுக்கு //
இப்படி எல்லாம் பேசப்பிடாது.
அவரு எப்படி பின்னூட்டம் வாங்குறாருனு உங்களுக்கு இன்னுமா புரியல......நல்ல ஆளுயா நீர். இதப்படிங்க முதல

"அப்புறம் unsportive behaviour அப்படின்னு தனிப்பதிவு போடுவேன். :D)"

இப்படி நேராவே மிரட்டுனா யாரு தான் பயப்பட மாட்டாங்க....

நாகை சிவா said...

//பொன்ஸ் said...
ஜொ.பா: இவருக்கும் இன்னும் ரெண்டு கண்ணு கொடுத்தா, நல்லா கூர்ந்து கவனிச்சி ஆராய்ச்சி செஞ்சி பதிவெல்லாம் போடுவாரு..//
தப்பா சொல்லிட்டீங்க பொன்ஸ், நம்ம பாண்டி அண்ணனுக்கு வாயில் இருந்து வழியுற ஜொள்ளு எல்லாம் ஒரு குழாய் மூலமாக ஒரு இடத்தில் சேமிக்கிற மாதிரி ஒரு பை கிடைத்தால் நல்லா இருக்கும். அது மட்டும் கிடைத்து விட்டால் உலகிலே மிக அதிகமாக ஜொள்ளு விட்டவர் என்ற கின்னஸ் சாதனையை அடைந்து விடுவார்.

நாகை சிவா said...

//இருக்கிற ஊர்ல யாருமே இல்லாம,//
ஆஹா, பொன்ஸ் மறுபடியும் தப்பா சொல்லிட்டீங்களே! நம்ம எல்லாம் பல நாட்டு பொம்னாட்டிகளை ஒரே இடத்தில் பாக்குற ஆளு. நமக்கு இது வேணாம். வேற எதாவது கொஞ்சம் பெட்டர் யோசிங்களேன்

நாகை சிவா said...

//கொத்ஸ் 51வது பின்னூட்டம் தான் நீங்க.. கணக்குப் படிச்சவரு கணக்குப் பண்ணுறதுல்ல தவறாலாமா? //
தேவு மன்னிச்சுகோமா, கணக்கு படித்தவரே தப்பு பண்ணும் போது நீ எம்மாத்திரம் நினைச்சு உன் மேல சந்தேகப்பட்டு நானே எண்ணி பாத்தேன். சரியா தான் சொல்லி இருக்க. அது சரி, நீ யாரு விட்டு எண்ண சொன்னே?

நாகை சிவா said...

//பதில் என்னாச்சுப்பா ??
எதுனா ரூல்ஸ் இருந்தா சொல்லுங்க / பூந்து கீசிடறேன், கீசி :-)) //
நீ இப்படியே பேசிகிட்டு இருந்தா உன்னும் வேலக்கு ஆவாது. அப்பால தனியா வந்து என்ன இல்லாட்டி நம்ம இளா போயி பாரு. கொடுக்க வேண்டிய கொடுத்துட்டேனு வச்சுக்க, உடனே மெம்பர்சிப் கார்ட வாங்கிடலாம். அது தெரியமா, இங்கன வந்து ப்பளிக்க கூவிக்கிட்டு இருக்க.

கால்கரி சிவா said...

இப்பதான்யா பசுபையன்களின் திருவிழாவே ஆபிஸ்லே கொண்டாடினோம்.

அங்கெ சாப்பிட்ட அய்ட்டங்கள் பன்றிப் பட்டை, பன்றிக் கறியால் ஆன சூடு நாய்கள், மாட்டு வால் சூப், பறவை போட்டதில் பண்ணிண தோசை

வந்து பார்த்த என்னையும் ஒரு ஆளா மதிச்சி மிருக மரத்தை தந்ததிற்கு என் மனமார்ந்த நன்றி ஐயா.

கோழிக் கால் மரம், தவளைக் கால் கொடி, ஆட்டுதலை செடி ஆஹா அருமை இதெல்லாம் செடியிலேதான் வளரபோவுது என்னு சொல்லி எங்க வீட்டுகாரம்மவே சாப்பிட வைச்சுடுவேன். அப்படியே அடுத்த விசிட் நிங்க வரும்போது உங்களுக்கும் மாசாலா பண்ணி போடுவேன் வாங்கயா.. வாங்க...

நாமக்கல் சிபி said...

////நம்ம பங்குக்கு குழலி://

இது நல்ல ஐடியாதான். யாராவது குழலிக்கு சொல்லி அனுப்புங்கப்பா. அவரு இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டாரு.
//

இதுதான் பின்னூட்டம் வாங்கற வழியா??? ;)
அது எப்படிங்க எப்படியும் சென்சுரி போடனும்னு முடிவு பண்ணிதான் பதிவு போடறீங்களா?

பொன்ஸ்~~Poorna said...

வெபை,
செஞ்சுரி எல்லாம் பழைய டார்கெட்.. இலவசமா எழுதிகிட்டு இருந்த காலத்துல செஞ்சுரி.. இப்போ தான் அட்லாஸா எழுதுறாரே.. குறைஞ்ச பட்சம் டபுள் செஞ்சுரி தான் ;)

கால்கரி சிவா said...

இலவசக்கொத்தனருக்கும் சிலந்திமனிதனுக்கு வர பசை மாதிரி சிமெண்ட், சுண்ணாம்பு இதெல்லாம் கணுக்கையில் ஊறி வரணும். அப்பதானே அவருக்கு கட்டுபடியாகும்

பெருசு said...

ஒரு மாசமா ஐயாம் ஆப் தி எஸ்கேப்பு.

சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில்
ஐம்பதாவது பதிவு போட்ட கொத்ஸூக்கு
வால்(ழ்)த்துக்கள்.

எல்லாறையும் முக்கி முனைந்து கலாய்ச்சதாலே

மூன்று முக்கு முனைவர். ச"கலா"கலா புளி(லி)க்கொத்து என்ற

பட்டத்தையும் இலவசமாகவே பறக்கவிடுகிறேன்.

டீலுக்கு வரவங்க வரலாம்.

குமரன் (Kumaran) said...

வெட்டிப்பையல். உங்களுக்கு உண்மையாகவே 'அதிக பின்னூட்டங்கள் பெறுவது எப்படி'ன்னு தெரியணும்ன்னா இந்தப் பதிவைப் போய் பாருங்க.

http://koodal1.blogspot.com/2006/02/140.html

குமரன் (Kumaran) said...

எல்லாத் தெய்வங்களுக்கும் நான்கு கைகள்
என் ஐ முருகனுக்கோ பன்னிரு கைகள்
பாணாசுரனுக்கோ ஆயிரம் கைகள்
கார்த்தவீரியார்ச்சுனனுக்கும் ஆயிரம் கரங்கள்

இலங்கை வேந்தனுக்கு பத்துத் தலைகள்
எத்தனை கைகள் இராவணனுக்கு?

இரண்டு கைகள் போதுமைய்யா.
பத்து கைகள் வர நான் தெய்வமும் இல்லை அசுர அரக்கனும் இல்லை.

குமரன் (Kumaran) said...

//இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் //

மேய்க்கிறதுக்கென்ன வலைப்பூக்கள் ஆடா மாடா? என்னவே சொல்றீரு? ஒன்னும் பிடிபட மாட்டேங்குதே?

குமரன் (Kumaran) said...

இரண்டு கைகள் = 20 பூக்கள்
பத்து கைகள் = 100 பூக்கள்

கணக்குல புலின்னு காமிச்சுட்டீங்க கொத்ஸ்.

பத்து கைகள் வந்தா 100 பூக்கள் தொடங்கத் தான் செய்வேன். அதுவும் ஆன்மிகப்பூக்களா? வேணாம்ன்னு வேண்டிக்கங்க. :-)

குமரன் (Kumaran) said...

கால்கரி அண்ணா. ரொம்பத் தான் உங்களை கால் கறி சாப்பிடுறவர்ன்னு கலாய்க்கிறார் கொத்ஸ். அவர் முன்னாடி நிறைய கோழிக்கால் சாப்புட்டீங்களோ? நல்ல வேளை அவர் வர்றப்ப நான் எஸ்கேப். இல்லாட்டி எனக்கும் ஒரு கோழிப்பண்ணை வச்சுக் கொடுத்திருப்பார் போல இருக்கு.

குமரன் (Kumaran) said...

என்ன கொத்ஸ்? சொல் ஒரு சொல் பக்கமே வர்றதில்லையா? வர வர ரகரத்துக்கும் றகரத்துக்குமா உங்களுக்கு வேறுபாடு தெரியல? சிவா அண்ணா கால்கரி சிவா. கால் கறி சிவா இல்லை.

பாத்துவே. எழுத்துப்பிழைங்கற பேருல ஒரு தமிழாசிரியர் புதுசா தமிழ்மணம் பக்கம் வந்திருக்காராம். பொன்ஸே பரவாயில்லைன்னு மக்கள் பேசிக்கிறாங்க.

குமரன் (Kumaran) said...

ஜிரா அழகா சினிமா ஹீரோ கணக்கா (மாதவன் கணக்கா) இருக்காரு. என் 3 வயசுப் பொண்ணுல இருந்து ஜிராவோட வேலைப்பாக்குற பொண்ணுங்க வரைக்கும் எத்தனை பேரு அவரை மாதவன் மாதிரி இருக்கீங்கன்னு சொல்லியிருக்காங்க. அவரைப் போயி ரப்பர் உடம்பு வேணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே? இது சரியா? முறையா? நீதியா? நியாயமா?

குமரன் (Kumaran) said...

கைப்புள்ளக்கு ஏற்கனவே காண்டாமிருகம் தோல் தானே? இல்லையா? தப்பா நினைச்சுக்கிட்டிருக்கேனா? ஒன்னும் புரியலை. 'நீங்க ரொம்ப நல்லவருங்க'ன்னு சொல்லி அனுப்பிச்சேன். இன்னும் ஆளைக் காணோம்.

குமரன் (Kumaran) said...

நாலு கண்ணோ எட்டுக் கண்ணோ எதுவானாலும் பொன்ஸுக்கு வரட்டும் ஆனா மூனு கண்ணு மட்டும் வேணாம். ஏற்கனவே தப்பு மட்டும் தான் சொல்றாங்க. முக்கண்ணியாயிட்டா நெத்திக்கண்ணைத் தொறந்துருவாங்க. அவங்களே 'நெற்றிக் கண்ணைத் திறந்தே சொல்வேன். குற்றம் குற்றமே'ன்னு வேற வசனம் பேசுவாங்க. வேணாம்பா.

குமரன் (Kumaran) said...

ஆந்தையார் தூங்கப் போயிட்டாரா? ஆளைக் காணோம்? ஒருவேளை ஜூ.வி.க்காக ராத்திரி ரவுண்ட் அப் போயிருக்காரோ?

குமரன் (Kumaran) said...

அதானே! ஒரு எஸ்.கே.வுக்கே அவங்கவங்க 'ஒரு பக்கம் திருப்புகழ். ஒரு பக்கம் விஷம்'ங்கறாங்க. ரெண்டு எஸ்.கே வந்தா அம்புட்டுத் தான்.

குமரன் (Kumaran) said...

சரி வாத்யாரே. அப்பாலக்கா வர்றேன்.

பொன்ஸ்~~Poorna said...

//. பொன்ஸே பரவாயில்லைன்னு மக்கள் பேசிக்கிறாங்க.
//
ம்ம்ம்ம்ம்ம்ம்

குமரன் (Kumaran) said...

\\//. பொன்ஸே பரவாயில்லைன்னு மக்கள் பேசிக்கிறாங்க.
//
ம்ம்ம்ம்ம்ம்ம்

\\

பொன்ஸு. உருமுறீங்களா? அழறீங்களா? ஒன்னும் புரியலையே?

குமரன் (Kumaran) said...

50 Better than Ever.

வெளியே: உண்மை. உண்மை. முழுக்க முழுக்க உண்மை. வாழ்த்துகள் கொத்ஸ். வாழ்த்துகள் வ.வா.சவினரே.

மனசுக்குள்: ஆமாம். பெட்டர் தான் எவர் ஆ இது? சரியாப் போச்சு. அப்ப இவிங்க பதிவுங்க எல்லாம் இதை விட டுபாக்கூர் பதிவாத் தேன் இருந்திருக்குமோ? சும்மா நம்ம பேர வச்சிக்கிட்டு கலாய்க்கத் தேன் தெரியுது. வேற ஒன்னும் தெரியலை இந்த பய புள்ளைக்களுக்கு. என்ன்ன்ன்னா பாசக்காஆஆர பயலுவ.

- கைப்புள்ள

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸு. உருமுறீங்களா? அழறீங்களா? ஒன்னும் புரியலையே? //
குமரன், பொன்ஸு தான் எழுத்துப் பிழைன்னு பேசாத வரைக்கும், அது சும்மா ம் தான் ;)

[பேசிட்டா புதுப் பதிவு போட்ருவோம்ல -
ஒரு சிறிய அறிவிப்பு இல்லைன்னா, எழுத்துப் பிழை அவர்களுக்கு... !! ;)

பதிவு போட மேட்டர் கிடைக்காம யோசிக்கிறதுக்கு இது ஈஸி.. ]

குமரன் (Kumaran) said...

கைப்புள்ள சொன்னதை வழிமொழிகிறேன். ஒரு பகுதி மட்டும்.

இந்த ஐம்பதாவது பதிவை விட இதற்கு முன் வந்த 48 பதிவுகள் மிக மிக நன்றாக இருந்தன. யப்பா. சீரியஸாத் தான் சொல்றேன். நம்ப மாட்டேன்னா எப்படி? கொத்ஸ். என்ன நான் சொல்றது? செரி தானே?

குமரன் (Kumaran) said...

ஒரு சிறிய அறிவிப்பா? அப்படின்னா? யாராச்சும் அப்படி ஒரு பதிவு போட்டாங்களா என்னா? இருந்தா சுட்டி குடுங்க பொன்ஸ்.

'எழுத்துப் பிழை அவர்களின் கவனத்திற்கு' தான் சரியான தலைப்பு. இப்ப எல்லாம் சரியா கவனிக்கிறதில்லையோ? :-)

பதிவு எழுத மேட்டர் தானே? நம்மகிட்ட கேளுங்க சொல்றேன். :-)

குமரன் (Kumaran) said...

//கொத்ஸ். என்ன நான் சொல்றது? செரி தானே?
//

மனசுக்குள்: இல்லைன்னு சொல்லிடுவாரா என்ன? அப்படி சொல்லிட்டா unsportive behaviour அப்படின்னு தனிப்பதிவு போட்டுட மாட்டோம்? இல்லாட்டி இருக்கவே இருக்கு இன்னொரு தலைப்பு 'இலவசக் கொத்தனார் என்ன சொல்கிறார்?'

பொன்ஸ்~~Poorna said...

//இப்ப எல்லாம் சரியா கவனிக்கிறதில்லையோ? :-)//
அப்படி இல்லை குமரன், ஒரே மாதிரி தலைப்பு வச்சா அப்புறம் நம்ம தனித் தன்மை என்ன ஆகிறது?!! ;)

//பதிவு எழுத மேட்டர் தானே? நம்மகிட்ட கேளுங்க சொல்றேன். :-) //
கரெக்டு.. உங்க கிட்ட தான் கேட்கணும்.. பதிவுகளின் நாயகர்.. சரி, சொல் ஒரு சொல்லைக் கொஞ்ச காலமா கிடப்புல போட்டுட்டீங்க? ஔக்கு அப்புறம் எதுவும் எழுதலை... ?

குமரன் (Kumaran) said...

கொஞ்ச காலமாவா? என்ன பொன்ஸ்? போன வாரம் தானே 'ஒளவியம்' எழுதுனேன்?

இந்த வாரம் இராகவன் வாரம். அவர் எழுதணும்.

நீங்களும் வந்து ஒரு மூனு வாரத்துக்கு ஒருக்கா ஒரு பதிவு 'சொல் ஒரு சொல்'ல போட்டா என்ன?

பொன்ஸ்~~Poorna said...

குமரன்,
உறுதி கொடுக்கத் தெரியலை... வேணா ஒரு பதிவு எழுதித் தரேன், நீங்க யாராவது வலையேத்துங்க.. என்னை உறுப்பினராச் சேர்க்கிறதெல்லாம் ஒத்துவருமான்னு தெரியலை.. :)

குமரன் (Kumaran) said...

ஆகா. எங்கள் பாக்கியம். ஜிமெயிலுக்கு அனுப்புங்க. இடுகையை இட்டுவிடலாம்.

பொன்ஸ்~~Poorna said...

விட்டுப் போன ரெண்டு பேருக்கு பரிணாம வளர்ச்சி போட்டு இந்த முறை நூறு நான் அடிக்கப் போறேன்..

வெ.வா ஜீவாவுக்கு ஒரு அலாரம் கடிகாரம் அட்டாச்மென்ட்.. ஒரு ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை அது தமிழ்மணம், தமிழ்மணம்னு சொல்லணும்.. அப்போ தான் வெ.வா இப்படி ஒரு இடம் இருக்கிறது நினைவு வந்து பதிவு போடுவாரு..

பொன்ஸ்~~Poorna said...

ரமணிக்கு இப்போ உடனடித் தேவை ஒரு இன்டெர்ப்ரெட்டர்.. அதாங்க, மொழிமாற்றி.. இப்போதைக்கு ஸ்பானிஷ் - ஆங்கிலம், அப்புறம் போகப் போக வேற மொழியெல்லாம் எடுத்துக்கலாம். ..

அதான் இணையத்துலயே ட்ரான்ஸ்லேட்டர் இருக்குங்கறீங்களா, அது சரி.. ரமணி நிஜமாவே ஒரு சிலந்தி தான்.. வலைல அவருக்குத் தேவையான எல்லாமே கிடைச்சிடுது!! :)

நாமக்கல் சிபி said...

குமரன்,
அதுல எல்லாம் நமக்கு விருப்பம் இல்ல. சும்மா கொத்தனார கலாய்க்கலாம்னுதான்.

கொத்ஸ்,
நான் சொல்லி கொஞ்ச நேரத்துலயே 100கு போயிட்டீங்க!!!

பெருசு said...

கொத்ஸைக் காணவில்லை

கொத்ஸைக் காண வில்லை(token)வாங்கணுமா

கால்கரி சிவா said...

யப்பா குமரா உங்க ரன் ரேட்டு பயங்கரமா இருக்கு.

நீங்களும் கோழி தின்னியா? அப்ப எப்போ கால்கரிக்கு வரீங்க.

அவருக்கு பெக், லெக் அண்ட் எக் சாப்பிட ஆசைதான் ஆனா லெக்கை விட்டுத்து பெக் அண்ட் எக் மட்டும் சாப்ட்றார். அவருக்கு வேணா ஒரு பீர் கிணறும் ஒரு முட்டை மரமும் தந்திரலாம்

இலவசக்கொத்தனார் said...

அட இன்னைக்குப் பகல் பூராவும் ஆபீஸில் வேலை. வர முடியலை. அதுக்குள்ள இங்க இவ்வளவு கலாட்டாவா? என்னன்னு பாக்கறேன்!

இலவசக்கொத்தனார் said...

//கொத்தப்பா! என்னை ஏன் விட்டாய்.. நான் என்ன unsportive என்று நினைத்தனையோ//

பெனாத்தலாரே, உம்மை மறப்பேனா? அல்லது நான் என்ன காகிதத்தில் எழுதுகிறேனா உம்மை மற பேனா எனச் சொல்ல?

//நான் என்ன unsportive என்று நினைத்தனையோ.. //

un sportiveness emakku theriyadha? :D

ஒரு சிலரை நான் அங்கே சொல்ல முடிந்தது சொன்னேன். ஆனால் உமக்கு என் இதயத்தில் அல்லவா இடம் தந்துள்ளேன்.

உம்மைப் பற்றி பேச ஒரு கூட்டமே வருமெனத் தெரிந்ததால்தானே உம்மை அங்கு விட்டு இங்கு பிடித்தேன்.

//எனக்கு நிஜமாவே தேவையான ஒரு சக்திதான் அது.. ஏற்பாடு செய்பவர்களுக்கு ஆயிரம் கற்காசுகள் இனாம்! //

உம்ம ஊர் பக்கத்தில் சாத்தனுக்குத்தான் கல்லு. உமக்கு இந்த பவர் வேண்டுமென்றால் எங்கு போக வேண்டுமென தெரிந்ததா? :)

இலவசக்கொத்தனார் said...

//பல பதிவர்கள்

மிளகாய் ஸ்விட்ச் ஒன்று அதிகமாகத் தேவை. காலையிலிருந்து எந்தப்பதிவைப் பார்த்தும் காரசாரமாகத் திட்டும் அளவிற்கு கோபம் வராவிடில், இந்த ஸ்விட்சை அமுக்கினால் "மானே, தேனே, பொன்மானே" எல்லாம் போட்டு ஒரு பின்னூட்டம் தயாராகிவிடும்:-)) //

பல பதிவர்களுக்கு சொல்லிட்டீங்க. ஆனா சில பதிவர்கள் இந்த ஸ்விட்ச் இல்லாமலேயே இவ்வளவு காரமா இருக்காங்களே. அவங்களுக்கு என்ன? :D

இலவசக்கொத்தனார் said...

//அய்யோ நீங்க டொனால்ட் டக் மாதிரி ஆயிடுவீங்களாம்//

ஏன் இப்படி புரியலையே. அப்படியே வாத்துன்னு சொன்னாலும் அந்த குடும்பத்தில் ஸ்க்ரூஜ்ன்னு ஒருத்தர் இருக்காறே. அவரா சொல்லக் கூடாதா? கொஞ்சம் சொத்தாவது தேறும்.

இலவசக்கொத்தனார் said...

//தேவுக்கு கைல ஒரு டிவி ஸ்க்ரீன்.. வேணுங்கிறப்போ தலைவர் படம் பார்க்க வசதியா.. எப்படி?//

அட அசந்து மறந்து அதுல சிவாஜி ஸ்டில்ஸ் வந்தா ராம்கிக்கு கோவம் வந்து எதாவது செஞ்சுடப் போறாரு. பாத்து தேவு, உனக்கு ஆப்பு வெக்கறாங்கடியோ...

//ஆகா.. ரஜினி பேரைச் சொன்னதும், ரீசன்டா ஒரு வலைபதிவர் ரசிகர்களைப் பத்தி வருத்தப் பட்டது நினைவு வருது.. அந்தப் பதிவருக்கு ஒரு எக்ஸ்ரே கண்ணு வளர்ந்தா வசதியா இருக்கும்.. யார் யாருக்கு மூளை இருக்கு, யார் யாருக்கு இல்லைன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்சிக்குவாரு.. //

எக்ஸ்ரே கண்ணு இருந்தா ஸ்கேன் பண்ணுவாரா? இது என்ன டெக்னிக்? அது போகட்டும். குதிரைக்கு தண்ணி காட்டத்தான் முடியும். குடிக்கறதும் குடிக்காததும் நம்ம கையுலயா இருக்கு?

பொன்ஸ்: இரண்டு பின்னூட்டங்களாய் போட வேண்டியதை ஒரே பின்னூட்டமாய் போட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

//பூந்து கீசிடறேன், கீசி :-)) //

சோ.பை.

இப்படி அப்ளிகேஷன் மட்டும் போட்டாப் போதாது. சான்ஸ் கிடைக்காத போதே உருவாக்கிக் கலாய்க்கணும். சான்ஸ் குடுத்தாக் கூட சும்மாப் போனா எப்படிச் சேத்துக்குவாங்க?

இதுல என்னாத்த கீசப் போறீங்களோ தெரியலை!

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் 51வது பின்னூட்டம் தான் நீங்க.. கணக்குப் படிச்சவரு கணக்குப் பண்ணுறதுல்ல தவறாலாமா?//

என் பதிவா இருந்தா நான் பார்த்துப் பார்த்து ரிலீஸ் பண்ணுவேன். இங்க ஆளாளுக்கு நாட்டாமை. அதான் கன்பியூஷன். அதனால என்ன, 200ஓ 250ஓ நாம போட்டா போச்சு. :)

இலவசக்கொத்தனார் said...

//சொல்ல மறந்துட்டேன் உங்களுக்கு பின் மண்டையிலே ஒரு பரிணாம வளர்ச்சி நடக்கப் போவுது...
//

இதத்தான்யா எதிர்பார்த்தேன்.

//ஆமா யார் உங்கப் பதிவுல்ல பின்னூட்டம் போட்டாலும் பின் மண்டையிலே ஒரு முடி நட்டுகிட்டு நிக்கும்.. அப்படி எத்தனை முடி நட்டுகிட்டு நிக்குதோ அத்தனைப் பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்கன்னு அர்த்தம்..//

நல்லவேளை தலைக்கு மேல சொன்னீங்க. நிம்மதியா உக்காந்து பின்னூட்டத்தைப் படிக்கலாம். பயமா இருக்கய்யா உங்களோட. ஒரே ஒரு விஷயம். நமக்கு வர பின்னூட்டம் அளவுக்கு மண்டையில் முடி இல்லையே. என்ன பண்ண?

//ஆனா நடு மண்டையிலே ஒத்த முடி நின்னா உஷாராயிடுங்க ஏன்னா அது நம்ம நயந்தாரா நாயகர் நக்கல் அடிக்க நாமக்கல் ஹவேஸ்ல்ல லாரி புடிச்சுக் கிளம்பிட்டார்ன்னு அர்த்தம்ண்ணா:)//

என்னடா இந்த ஆளைக் காணுமேன்னு நினைச்சேன். நடு மண்டையில் சொட்டை இருக்கறதுதான் காரணமா?

இலவசக்கொத்தனார் said...

//அக்கா என்னப் பிரச்சனைன்னாலும் பரவாயில்லை லண்டன் போய் விவரமானவங்களை வச்சு பேசித் தீத்துக்கலாம் //

என்னதான் அக்கா தம்பின்னாலும் லண்டனுக்கெல்லான் தனியாப் போங்கப்பா....

//நம்ம கைப்பு கசின் பிரதர் எசக்கி பேசுற பேஜாரான டயலாக் தான் நானும் பேசனும்//

அவரு கூடத்தனியாத்தேன் போனாரு, உங்களுக்கு என்ன கேடு? :D

இலவசக்கொத்தனார் said...

//அப்போத் தான் பாண்டி தம்பி சிந்து டீச்சர் மாதிரி ஆளுங்களைப் பார்த்த அந்தச் செடியிலிருந்து கடலைப் பறிச்சுக் கொடுக்கவும் ஆணழகன் போட்டிக்கு அழைப்பு வந்தா அந்தக் கடலையைப் புழிஞ்சு எண்ணெய் எடுக்கவும் வசதியா இருக்கும்ல்லா:) //

நல்ல ஐடியாத்தேன்.

கடலை மண்ணுக்கு கீழ விளையற சமாச்சாரம். கையிடுக்குன்றது பாண்டி தலைக்கு கீழதான் இருக்கு. இப்போ என்ன சொல்ல வறீங்க தேவு? சரியாப் புரியலையே!

இலவசக்கொத்தனார் said...

//பார்த்திபனை பார்த்த வடிவேலு மாதிரி அடங்கி ஒடுங்கி கெடக்குறேன்//

நீங்க ஒடுங்கிக் கிடக்குறீங்களா? என்னது இது?

//வந்துட்டேன்..... வரக்கூடாதென்றெல்லாம் இல்லிங்கோ அப்போப்போ வந்துபோறது தாங்கோ....//

வந்துட்டுப் போனா நாங்க எப்படி தெரிஞ்சுக்கிறது? அதுக்கு பாரம்பரியமா என்ன செய்யணுமோ அதை அடுத்த முறையிலிருந்து சரியா செய்யுங்க என்ன?

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ் இப்போவாது தெரிஞ்சுக்கங்க குழலி அண்ணனும் நம்மளை மாதிரி ஒரு வருத்தப் படாத வாலிபர் தான்னு...//

அவரு ஒரு வருத்தப் படாத வாலிபர்ன்னா அவருக்கு பல வருத்தம் இருக்குன்னு அர்த்தமா? தேர்தல் முடிவு வந்த பின்னாடி அட்லீஸ்ட் ஒரு வருத்தம் இருக்கறதுதான் எல்லாருக்கும் தெரியுமே. வேற என்ன இருக்கு? :-D

இலவசக்கொத்தனார் said...

//பேசாம, சங்கத்தோட பரிணாம வளர்ச்சியா உங்களையும் சங்கத்தின் நிரந்தர அட்லாஸ் வாலிபர் ஆக்கிடலாம்னு கைப்புவுக்கு கோரிக்கை வைக்கிறேன். :)) //

இப்போ இப்படி கோரிக்கை வைப்பீங்க. நாளைக்கு நாந்தான் தலைன்னு அவருக்கு ஆப்பு வைப்பீங்க. எதுக்கு இதெல்லாம்?

நம்ம கட்சியில வாலிபர்கள் அணி அப்படின்னு சங்கத்தை சங்கமிச்சுரலாம். அப்புறம் கைப்பு ஒரு 60 வயசு வரை வாலிபர் அணித் தலைமையா இருக்கலாம். என்ன சொல்லறீங்க?

துளசி கோபால் said...

50 வது பதிவுக்கு வாழ்த்து(க்)கள்.

கொத்ஸ்: இவருக்கு பரிணாம வளர்ச்சியிலே இருக்கற (???) மூளைக்குப் பக்கத்தில் இன்னொரு மூளை
முளைச்சுரும். இரட்டைமண்டை போலன்னு வச்சுக்கலாம். அந்த ஸ்பெஷல் மூளைக்கு ஸ்பெஷலா ஒரு வேலை.
ஜஸ்ட் நம்பர்கள் எண்ணுவது மட்டும். வலை உலகில் யாருக்குப் பின்னூட்டம் வந்தாலும் அது எத்தனையாவதுன்னு
கரெக்ட்டா எண்ணி சொல்லிரும். 50, 75, 100 ன்னு வரப்போறதுலே அந்த முக்கிய ( மைல் கல்லா?) பின்னுட்டம்
நம்ம கொத்ஸ்க்காக இதுவே அனுப்பிரும்:-))))))

( மறக்காம சிரிப்பான்களைப் போட்டுருக்கேன்)

இலவசக்கொத்தனார் said...

அய்யா குழலி, இனி அதை விருதை சிங்கம்னு மாத்திக்க :) //

விருதையை விருதாய்ப் பெற்ற விருதைச் சிங்கம் வாழ்க.

சரியா இருக்கா?

இலவசக்கொத்தனார் said...

//என்னது அண்ணனா என்னாதிது சின்னபுள்ள தனமா!!! எத்தனை பேரு இது மாதிரி கெளம்பிருக்கிங்க.... ஆமா எனக்கு வயசு ரொம்ப கம்மி அது... //

அண்ணா, அது வயசுக்காக இல்லண்ணா. நாங்க எல்லாருக்கும் குடுக்கற மரியாதைண்ணா அது? யாரு எங்க ஆப்பு வப்பீங்கன்னு தெரியலையா? அதான் ஒரு சேஃப்டிக்கு எல்லாருக்குமே அண்ணா பிரமோஷன். அதாங்கண்ணா விஷயங்கண்ணா. புரிஞ்சுதாங்கண்ணா?

இலவசக்கொத்தனார் said...

//எப்பா வேற ஏதாவது மூலமா அனுப்ப சொல்லுப்பா, புறாக்கறி தல'க்கு சலிச்சு போச்சாம். //

மறந்தும் கால்கரியார் கிட்ட குடுத்து அனுப்பாதீங்க. அப்புறம் இரு கால் கறியாளர்களுக்கு உள்ள சண்டை வரப் போகுது!

இலவசக்கொத்தனார் said...

//பொன்ஸ் அக்காவுக்கு ரெண்டு கண்ணே 8 கண்ணு மாதிரிதான் இருக்கும், அப்புறம் எதுக்கு கொத்ஸ் இன்னும்.//

அட என்ன இளா நீங்க. அதைத்தானே அந்த ஆனால் போட்டு சொல்லியிருக்கேன். விவரமா சொல்லணுமுன்னா, ரெண்டே எட்டு மாதிரி இருக்கே, இன்னும் எட்டு கிடைச்சா எப்படி இருக்கும்?

இலவசக்கொத்தனார் said...

//அவசர செய்தி:
கைப்பு இப்போ மும்பையில இருக்கார். //

ஏன் மும்பை சென்றார் என்பதற்கு சரியான விளக்கமில்லை. ஆளையும் காணவில்லை. யாராவது அந்த மாதுங்கா பி-12 ஸ்டேஷன் போயி பாருங்கப்பா.

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ்: இரண்டு பின்னூட்டங்களாய் போட வேண்டியதை ஒரே பின்னூட்டமாய் போட்டதை வன்மையாய் கண்டிக்கிறேன்.
//

கொத்ஸு.. இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்துட்டு ஒருத்தர் தனிப் பதிவே போட்டுட்டாரு.. நீங்க என்னடான்னா, சாவகாசமா கண்டிக்கிறீங்க!!!

இலவசக்கொத்தனார் said...

//ஆனாலும் இப்படி ஒரு வேண்டுதலா... அமேஸான் காட்டுக்கு என்ன அனுப்பி Endanger listலெ போட...//

அட என்ன நேசி இப்படி சொல்லிட்டீங்க?அதனாலதானே அதை ஆனாலுக்கு அப்புறம் சொல்லி இருக்கேன். இதுக்கு எல்லாம் கோவப்பட்டு பதிவெல்லாம் போட மாட்டேன்னு அழுகுண்ணி ஆட்டமெல்லாம் ஆடாதீங்க என்ன?

//திரும்ப வாரவே.. //

வாங்க. வாங்க. காத்துக்கிட்டு இருப்பேன்.

இலவசக்கொத்தனார் said...

//இப்படி எல்லாம் பேசப்பிடாது.
அவரு எப்படி பின்னூட்டம் வாங்குறாருனு உங்களுக்கு இன்னுமா புரியல//

குமரன் சுட்டி குடுத்து இருக்காரு பாருங்க. அங்க போயி பாருங்க.

//இப்படி நேராவே மிரட்டுனா யாரு தான் பயப்பட மாட்டாங்க.... //

என்ன மிரட்டி என்ன பயன்? கூப்பிட்டதுல பாதி பேர் வரலை பாருங்க. :(

இலவசக்கொத்தனார் said...

//தப்பா சொல்லிட்டீங்க பொன்ஸ், நம்ம பாண்டி அண்ணனுக்கு வாயில் இருந்து வழியுற ஜொள்ளு எல்லாம் ஒரு குழாய் மூலமாக ஒரு இடத்தில் சேமிக்கிற மாதிரி ஒரு பை கிடைத்தால் நல்லா இருக்கும்.//

சிவாண்ணா, இதுல என்ன தப்பா இருக்கு? அவங்க பங்குக்கு கண்ணு, உங்க பங்குக்கு பைப்புன்னு குடுங்க. ரெண்டு கண்ணால பாக்கறத விட நாலு கண்ணால பாத்தா சீக்கிரம் ரெகார்ட் ஜொள்ளு விட மாட்டாரு....

இலவசக்கொத்தனார் said...

//வரும்போது உங்களுக்கும் மாசாலா பண்ணி போடுவேன் வாங்கயா.. வாங்க... //

யோவ் கால்கறி (இனி நீர் இப்படியே கூப்பிடப்படுவீர்)

என்னய்யா இது? உங்களுக்கும் மசாலா பண்ணிப்போடுவேனென்றால் எனக்கு தருவீரா அல்லது எனக்கும் மசாலாப் போட்டு நீர் என்னை காலில்லாமல் செய்வீரா? பயமா இருக்கே.

யப்பா கண்ணுங்களா யாரு போனாலும் சைவ வெள்ளியாப் பாத்துப் போங்கப்பா....

இலவசக்கொத்தனார் said...

//இதுதான் பின்னூட்டம் வாங்கற வழியா??? ;)
அது எப்படிங்க எப்படியும் சென்சுரி போடனும்னு முடிவு பண்ணிதான் பதிவு போடறீங்களா? //

பார்க்க பொன்ஸ் பின்னூட்டம்.

பார்க்க கும்ஸ் பின்னூட்டம்.

இலவசக்கொத்தனார் said...

//குறைஞ்ச பட்சம் டபுள் செஞ்சுரி தான் ;) //

இதான் டார்கெட்டா? எல்லாரும் சரின்னு சொன்னா அடிக்கலாம். என்ன சொல்லறீங்க? :)

இலவசக்கொத்தனார் said...

//இலவசக்கொத்தனருக்கும் சிலந்திமனிதனுக்கு வர பசை மாதிரி சிமெண்ட், சுண்ணாம்பு இதெல்லாம் கணுக்கையில் ஊறி வரணும். அப்பதானே அவருக்கு கட்டுபடியாகும் //

ஏம்ப்பா நாம என்ன வீடா கட்டறோம்? நம்ம தொழிலுக்கு என்னன்னு டீச்சர் சொல்லறாங்க பாரு!

இலவசக்கொத்தனார் said...

ஒரு மாசமா ஐயாம் ஆப் தி எஸ்கேப்பு.//

சங்கத்துக்கு மட்டுமில்லை. வெண்பா கிளாசுக்கும்தான்.

சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில்ஐம்பதாவது பதிவு போட்ட கொத்ஸூக்கு வால்(ழ்)த்துக்கள்.//

சங்கத்தின் தற்போதைய இளைஞரணித் தலைவருக்கு என் நன்றிகள்.

//எல்லாறையும் முக்கி முனைந்து கலாய்ச்சதாலே மூன்று முக்கு முனைவர். ச"கலா"கலா புளி(லி)க்கொத்து என்ற பட்டத்தையும் இலவசமாகவே பறக்கவிடுகிறேன்.

டீலுக்கு வரவங்க வரலாம்.//

ஆக மொத்தம் நம்ம கழுத்தை அறுக்கறதுன்னு முடிவே பண்ணிட்டீங்க. நல்லா இருங்கடா சாமி.

இலவசக்கொத்தனார் said...

//இந்தப் பதிவைப் போய் பாருங்க. //

கும்ஸ், உம்ம பதிவில் நான் போட்ட பின்னூட்டம்.

கும்ஸ்,

என்ன இருந்தாலும் பழைய பதிவுக்கு உயிர் கொடுக்க உங்களை விட்டா ஆள் கிடையாது. கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. 140க்கு கட்டாயம் 140 வரும்.

:)

இலவசக்கொத்தனார் said...

//இரண்டு கைகள் போதுமைய்யா.
பத்து கைகள் வர நான் தெய்வமும் இல்லை அசுர அரக்கனும் இல்லை.//

அப்படின்னா நீங்க ஆரிய வந்தேறியா? உமக்கு தலையில் கொம்பு முளைச்சிருக்கா? ஐயா அடிக்க வராதீங்க சும்மா தமாசு. :)))

அதான் வேற காரணத்துக்காக வேண்டாமுன்னு சொல்லியாச்சே.

இலவசக்கொத்தனார் said...

//மேய்க்கிறதுக்கென்ன வலைப்பூக்கள் ஆடா மாடா? என்னவே சொல்றீரு? ஒன்னும் பிடிபட மாட்டேங்குதே? //

அதாவது மேய்ப்பர் அப்படின்னு இயேசுவை சொல்வாங்க. அப்படின்னா என்ன? அவரு நம்மளை எல்லாம் அரவணத்து நம்மளை நல்ல படியா பாத்துப்பாருன்னுதானே அர்த்தம்.

அத மாதிரி நீங்களும் உங்க வலைப்பூக்களை நல்லா பாத்துக்கறதுனால நீங்க மேய்ப்பர். நீங்க செய்யற வேலை மேய்க்கிறது.

(அப்பாடா, எதையோ சொல்லி தப்பிச்சாச்சு. இனிமே இந்த மாதிரி ஒரு பேச்சுக்கு சொன்னா, அதையெல்லாம் இப்படி நோண்டப்பிடாது என்ன.)

இலவசக்கொத்தனார் said...

//கணக்குல புலின்னு காமிச்சுட்டீங்க கொத்ஸ். //

நீங்க இங்க இப்படி சொல்லறீங்க. ஆனா தேவு வந்து புலி என்ன புல்லைத் திங்குதுன்னு நக்கலா கேட்கிறாரு. நான் என்ன பண்ண?

//பத்து கைகள் வந்தா 100 பூக்கள் தொடங்கத் தான் செய்வேன். அதுவும் ஆன்மிகப்பூக்களா? வேணாம்ன்னு வேண்டிக்கங்க. :-)//

ஏங்க சாமி? நீங்க எழுதுனா நாங்க படிக்கிறோம். எதுக்கு வேண்டாமுன்னு சொல்லறீங்க? (இவ்வளவு பின்னூட்டம் போட்டிருக்கீங்க. இந்த முதுகு சொறியல் கூட செய்யலைன்னா எப்படி)

இலவசக்கொத்தனார் said...

//நல்ல வேளை அவர் வர்றப்ப நான் எஸ்கேப். இல்லாட்டி எனக்கும் ஒரு கோழிப்பண்ணை வச்சுக் கொடுத்திருப்பார் போல இருக்கு. //

இப்போதைக்கு இந்த மாதிரி எஸ்கேப் பார்டியா இருக்கற உமக்கு உள்ளங்கையிலேர்ந்து திருநவேலி அல்வா வரவைக்கத்தான் ஏற்பாடு பண்ணனும்.

இலவசக்கொத்தனார் said...

//அவரைப் போயி ரப்பர் உடம்பு வேணும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே? இது சரியா? முறையா? நீதியா? நியாயமா? //

ஏங்க அந்த காலத்தில் ரப்பர் உடம்பா இருந்த பிரபுதேவாவிற்கு இல்லாத ரசிகைகளா இந்த மேடிக்கு? (சரியா படிங்க மேடி. மோடி இல்லை)

இலவசக்கொத்தனார் said...

//இன்னும் ஆளைக் காணோம். //

அதானே. விருந்தாளியை வீட்டில் உட்கார வச்சுட்டு எங்கய்யா போனே?

ரவி said...

சும்மா...ஒரு ஊட்டம்...அவ்வ்வ்வ்வ்வ்

இலவசக்கொத்தனார் said...

//என்ன கொத்ஸ்? சொல் ஒரு சொல் பக்கமே வர்றதில்லையா? //

அங்க நீங்க பின்னூட்டத்துக்காகவே பதிவு போடறீங்களாமே. எனக்கு அதெல்லாம் பிடிக்காதா அதான் வரலை!

//வர வர ரகரத்துக்கும் றகரத்துக்குமா உங்களுக்கு வேறுபாடு தெரியல? சிவா அண்ணா கால்கரி சிவா. கால் கறி சிவா இல்லை. //

ஏங்க சிவா, கால் கறி வறவறன்னா இருக்கு? இவரு என்னமோ தகரத்துல ஆணியை தேச்சா மாதிரி சவுண்டு விடறாரு?

//பாத்துவே. எழுத்துப்பிழைங்கற பேருல ஒரு தமிழாசிரியர் புதுசா தமிழ்மணம் பக்கம் வந்திருக்காராம். பொன்ஸே பரவாயில்லைன்னு மக்கள் பேசிக்கிறாங்க.//

அவருக்கு கை விரலுக்கு பதிலா பிரம்பா வர மாதிரி ஒரு வரம் குடுக்கலாமா? :)

இலவசக்கொத்தனார் said...

//அவங்களே 'நெற்றிக் கண்ணைத் திறந்தே சொல்வேன். குற்றம் குற்றமே'ன்னு வேற வசனம் பேசுவாங்க. வேணாம்பா. //

அய்யய்யோ. வேணாம்பா. அதுக்குதான் சேஃபா இருக்கற நாலு கண்ணுன்னு பேச ஆரம்பிச்சதே....

இலவசக்கொத்தனார் said...

//ஒருவேளை ஜூ.வி.க்காக ராத்திரி ரவுண்ட் அப் போயிருக்காரோ? //

ரவுண்ட் அப்பா? இல்லை வெறும் ஆஃபா? தெரியலையே. யப்பா, இந்த சாக்குல உன்னை வச்சு யாராவது தேன்கூடு போட்டிக்கு கதை எழுதப் போறாங்கப்பா. சீக்கிரம் வந்து சேரர வழியைப் பாரு....

இலவசக்கொத்தனார் said...

// ரெண்டு எஸ்.கே வந்தா அம்புட்டுத் தான். //

அரோகரா. அரோகரா. :)

இலவசக்கொத்தனார் said...

//சரி வாத்யாரே. அப்பாலக்கா வர்றேன். //

சரி மாணவா. அப்பாலிகா வா!

ILA (a) இளா said...

அட்டெண்டன்ஸ் போட்டாச்சு, இல்லீங்களா செ. ரவி

இலவசக்கொத்தனார் said...

////. பொன்ஸே பரவாயில்லைன்னு மக்கள் பேசிக்கிறாங்க.
//
ம்ம்ம்ம்ம்ம்ம் //

ஓஓஓஓஓஓஓ

(பொன்ஸ். ஏன்னு புரியுதுதானே!) :)

இலவசக்கொத்தனார் said...

//பொன்ஸு. உருமுறீங்களா? அழறீங்களா? ஒன்னும் புரியலையே? //

நல்லா கேளுங்க கும்ஸ். நாங்களெல்லாம் கேட்டு வெறுத்துப் போயிட்டோம். உங்களுக்காவது அதுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க.

இலவசக்கொத்தனார் said...

//- கைப்புள்ள //

உம்ம அடிவயத்து வெப்பம் இவரு பேருல வருதா கும்ஸ்?

இலவசக்கொத்தனார் said...

//பதிவு போட மேட்டர் கிடைக்காம யோசிக்கிறதுக்கு இது ஈஸி.. ] //

எப்படி பதில் சொல்லத் தெரியலைன்னா ம்ம்ம்ம்ம் அப்படின்னு சவுண்டு விட்டு சிலவங்க ஓட்டறாங்களே. அந்த மாதிரி ஈஸியா?

இலவசக்கொத்தனார் said...

// நம்ப மாட்டேன்னா எப்படி? கொத்ஸ். என்ன நான் சொல்றது? செரி தானே? //

அதான் சொல்லிட்டேனே. இப்படியெல்லாம்தான் உங்க அடி வயிறு வெப்பம் தணிஞ்சு கூலாகும்னா எனக்கு ஓக்கேதான்> :)

150!! (தேவு, இதுவாவது சரியா எண்ணினேனா?)

இலவசக்கொத்தனார் said...

//ஒரு சிறிய அறிவிப்பா? அப்படின்னா? யாராச்சும் அப்படி ஒரு பதிவு போட்டாங்களா என்னா? இருந்தா சுட்டி குடுங்க பொன்ஸ். //

இப்படி வம்புக்கு அலையாதீங்க கும்ஸ். உங்க வயசுக்கு இதெல்லாம் நல்லாவா இருக்கு. :)

//'எழுத்துப் பிழை அவர்களின் கவனத்திற்கு' தான் சரியான தலைப்பு. இப்ப எல்லாம் சரியா கவனிக்கிறதில்லையோ? :-)//

உங்களுக்கெல்லாம் சாட்டையடியா ஒரு பதிவு வேற வந்துதே. இன்னுமா திருந்தலை? சரியான ஆரியக் கூட்டமா இருக்கீங்களே. :)

//பதிவு எழுத மேட்டர் தானே? நம்மகிட்ட கேளுங்க சொல்றேன். :-) //

சொல்லுவாரு. சொல்லுவாரு. அடுத்தவங்க பதிவுல வந்த பின்னூட்டத்தை எடுத்து நாம எப்படி 140 பின்னூட்டம் வாங்கறதுன்னு. சரிதானே குமரன்? :)

இலவசக்கொத்தனார் said...

//மனசுக்குள்: இல்லைன்னு சொல்லிடுவாரா என்ன? அப்படி சொல்லிட்டா unsportive behaviour அப்படின்னு தனிப்பதிவு போட்டுட மாட்டோம்? இல்லாட்டி இருக்கவே இருக்கு இன்னொரு தலைப்பு 'இலவசக் கொத்தனார் என்ன சொல்கிறார்?' //

அதென்ன மனசுக்குள்? சும்மா வெளியவே சொல்லுங்க.

அப்புறம் நீங்க சொன்னது எல்லாம் இல்லைன்னா இருக்கவே இருக்கு - " இலவசக் கொத்தனாருக்கு மூளை இருக்கா?" :D

இலவசக்கொத்தனார் said...

//அப்படி இல்லை குமரன், ஒரே மாதிரி தலைப்பு வச்சா அப்புறம் நம்ம தனித் தன்மை என்ன ஆகிறது?!! ;)//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

//கரெக்டு.. உங்க கிட்ட தான் கேட்கணும்.. பதிவுகளின் நாயகர்.. சரி, சொல் ஒரு சொல்லைக் கொஞ்ச காலமா கிடப்புல போட்டுட்டீங்க? ஔக்கு அப்புறம் எதுவும் எழுதலை... ?//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

குமரன் (Kumaran) said...

சே. இம்புட்டு நேரம் காத்திருந்தது வேஸ்ட். யை கால்கரின்னு சொன்னா என்ன கால்கறின்னு சொன்னா என்னன்னு கேப்பீங்கன்னு பாத்தேனே. சரியா 'எண்ணிப்' பாக்குறதில்லையோ?

இராகவன் வந்தாருன்னா சொல்லுவார் பாருங்க - எத்தனை தடவை சொல்றது கொத்ஸ்? பின்னூட்டங்களை எண்ணிப் பாக்காதீங்க. ஒரு தடவைக்கு பல தடவை படிச்சுப் பாத்து எண்ணிப் பாத்து எழுதுங்கன்னு.

அப்பாடா. கொத்ஸ் மேல இருந்த ஒளவியம் எல்லாம் தீர்ந்தப்பா. கைப்புள்ள & இராகவன் - நன்றிகள். :-)

இலவசக்கொத்தனார் said...

//நீங்களும் வந்து ஒரு மூனு வாரத்துக்கு ஒருக்கா ஒரு பதிவு 'சொல் ஒரு சொல்'ல போட்டா என்ன? //

சரியா சொல்லுங்க கும்ஸ். அப்புறம் அவங்க அங்க வந்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!
அப்படின்னு ஒரு வார்த்தையை சொல்லி வைக்கப் போறாங்க. :D

இலவசக்கொத்தனார் said...

//வேணா ஒரு பதிவு எழுதித் தரேன், நீங்க யாராவது வலையேத்துங்க.. //

ஐயா சாமிங்களா! எதாவது பண்ணி இந்த அம்மனை மலையேத்துங்க. நாடு தாங்கதுடா!

இலவசக்கொத்தனார் said...

//ஆகா. எங்கள் பாக்கியம். //

ஆமாம் ஆமாம் எங்க பாக்கியம்! ( கும்ஸ், பாக்கியம் யாரு சொல்லவே இல்லையே. போட்டோ எதனா இருந்தா தனிமடலில் அனுப்புங்க..)

இலவசக்கொத்தனார் said...

//விட்டுப் போன ரெண்டு பேருக்கு பரிணாம வளர்ச்சி போட்டு இந்த முறை நூறு நான் அடிக்கப் போறேன்..

வெ.வா ஜீவாவுக்கு ஒரு அலாரம் கடிகாரம் அட்டாச்மென்ட்.. ஒரு ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை அது தமிழ்மணம், தமிழ்மணம்னு சொல்லணும்.. அப்போ தான் வெ.வா இப்படி ஒரு இடம் இருக்கிறது நினைவு வந்து பதிவு போடுவாரு.. //

ஆமாம் இது அவருக்கு கட்டாயம் வேணும். ஆனா அது வெண்பா விளையாட்டுன்னு அடிக்கணும். இல்லைன்னா அவரு சும்மா கவிஜ எழுதி குடுத்துட்டு போயிடுவாரு.

பொன்ஸ், ஆமா இந்த கருவியை அவருக்கு குடுக்கணுமுன்னா பரிணாம வளர்ச்சி எங்க வந்தது?

VSK said...

அட, நேத்துத்தானே வந்திச்சுன்னு வந்து பாத்தா, 150ஐ நெருங்குது!
தலை சுத்துது![ஒரு தலைதான்!]

பின்ன்றீங்களே சாமி!

சரி, இத்தனை பேரை கலாய்க்கிறீங்களே!
உங்களை என்னவாக்கறது?

பதிவு போட்டாலே பல நூறு பின்னூட்டம்!
ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் ஒருகை என
பல நூறு கை கொடுத்து
ஒவ்வொரு கையிலும் ஒரு செங்கல்லையும் கொடுத்து
பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும்
ஆளுக்கு ஒரு வீடு இலவசமாய்க் கட்டித்தரும்
சீர்மிகு கொத்தனாராக ஆகக் கடவது!

[முந்தைய பதிவையும் வெவரமா இணைச்சிருக்கேன்!]

இலவசக்கொத்தனார் said...

//ரமணி நிஜமாவே ஒரு சிலந்தி தான்.. வலைல அவருக்குத் தேவையான எல்லாமே கிடைச்சிடுது!! :) //

ஏன் அவரு ஒரு மீனவனா இருக்கக் கூடாதா? என்ன சொல்லறீங்க அன்னியரே?

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
நான் சொல்லி கொஞ்ச நேரத்துலயே 100கு போயிட்டீங்க!!! //

ஆமாங்க வெ.ப. 100 வந்து இப்போ 160 வரை வந்தாச்சு. எல்லாம் உங்க ராசிதான். சந்தோஷம்தானே?

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸைக் காண வில்லை(token)வாங்கணுமா //

நீங்க எல்லாம் வில்லை வாங்கணும். யாரு கிட்டயிருந்துன்னு தெரியுமா? அந்த போலி ராபின் ஹூட் கிட்ட இருந்து. அவரு கையில் வில்லை வச்சுக்கிட்டு பண்ணற அக்குறும்பு தாங்கலைப்பா. :)

இலவசக்கொத்தனார் said...

//அவருக்கு வேணா ஒரு பீர் கிணறும் ஒரு முட்டை மரமும் தந்திரலாம் //

தாங்க. அந்த முட்டை மரத்தில் மட்டும் வெறும் வெள்ளைக்கரு வரா மாதிரி பாத்துக்குங்க.மஞ்சளில் கொலஸ்ட்ரால் அதிகமாமே.

இலவசக்கொத்தனார் said...

//ஸ்பெஷல் மூளைக்கு ஸ்பெஷலா ஒரு வேலை.
ஜஸ்ட் நம்பர்கள் எண்ணுவது மட்டும். வலை உலகில் யாருக்குப் பின்னூட்டம் வந்தாலும் அது எத்தனையாவதுன்னு
கரெக்ட்டா எண்ணி சொல்லிரும். 50, 75, 100 ன்னு வரப்போறதுலே அந்த முக்கிய ( மைல் கல்லா?) பின்னுட்டம்
நம்ம கொத்ஸ்க்காக இதுவே அனுப்பிரும்:-))))))
//

இப்போ இருக்கிற மூளை பண்ணற வேலைதானே. இதுல என்ன ஸ்பெஷல்? இருக்கட்டும். புது மூளை என்ன பண்ணப் போகுது? சரியாச் சொல்லுங்க. :)

இலவசக்கொத்தனார் said...

//சும்மா...ஒரு ஊட்டம்...அவ்வ்வ்வ்வ்வ் //

ரவி, இதுக்கே அழுதா எப்படி? நீங்க பண்ணற சில வேலைகளுக்கு நாங்க எப்படி அழணும்? :)

இலவசக்கொத்தனார் said...

//அட்டெண்டன்ஸ் போட்டாச்சு, இல்லீங்களா செ. ரவி //

பதிவெல்லாம் படிக்கறேன்னு காட்டிக்கறீங்க. அதானே இளா? :)

இலவசக்கொத்தனார் said...

//அப்பாடா. கொத்ஸ் மேல இருந்த ஒளவியம் எல்லாம் தீர்ந்தப்பா. கைப்புள்ள & இராகவன் - நன்றிகள். :-) //

எண்ணி எண்ணி எந்தன் மனம் பஞ்சர் போல் ஆனதே.....

இனி புது கணக்கு தொடங்கலாமா கும்ஸ்? :)

இலவசக்கொத்தனார் said...

//சீர்மிகு கொத்தனாராக ஆகக் கடவது!
//

எஸ்.கே. எத்தனை நாளா என்னை மாட்டி விடணமுன்னு பிளான் போட்டீங்க. இப்படி எல்லாம் போட்டா நம்ம மகளிர் அணி வந்து வரதட்சணை கேஸ் போட்டு நம்மளை உள்ள தள்ளும் அதுக்கப்புறம் நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம் அதானே உங்க பிளான்?

நடக்காதய்யா நடக்காது! :)

இலவசக்கொத்தனார் said...

எல்லாருக்கும் பதில் சொல்லியாச்சாப்பா? யாராவது கொஞ்சம் சரி பார்த்து சொல்லுங்க. அப்புறம் நம்ம பாலசந்தர் கணேசன் வந்து எண்ணும் போது நம்ம பின்னூட்டம் சரி பாதியாவது இல்லன்னா கோவிச்சுக்கப் போறாரு! :D

ILA (a) இளா said...

கைப்பு மும்பையில இருக்கார்ன்னு சொன்னத்துக்கு யாரும் ஒரு யூகம்கூட பண்ணலியே, என்னா உலகம்ப்பா இது?

ப்ரியன் said...

பதிவை சீக்கிரம் படிச்சுட்டேனுங்க.ஆனா இந்த பின்னூட்டம் இல்லே பின்னூட்டம் அது படிக்கையிலே தானுங்க தலைசுத்தி தொபுக்கடீர்னு விழுந்துட்டேன்.பின்னே என்னங்க படிக்க படிக்க அநுமார் வால் போல நீண்டுகிட்டே போகுது.

ப்ரியன் said...

/*அதனால இவருக்கு என்னோட அணில்குட்டி மாதிரி ஒரு செக்ரட்டரி நியமிச்சா நல்லா இருக்கும்*/

ச்சே அணில்குட்டி மாதிரியா?...அனிதாகுட்டி அகிலாகுட்டி னு யாரையாவது செகரட்டரி வெச்சுகலாம்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன் கவிதா ;) (Hindu Opportunities லா விளம்பரம் கொடுக்கலாம் னு கூட எண்ணம்)

இலவசக்கொத்தனார் said...

//கைப்பு மும்பையில இருக்கார்ன்னு சொன்னத்துக்கு யாரும் ஒரு யூகம்கூட பண்ணலியே, என்னா உலகம்ப்பா இது?//

ஏம்ப்பா இளா, சரியாப் படிக்காம இப்படி அபாண்டமா பழி சுமத்துறயேப்பா. பாரு நான் எழுதினத.

////அவசர செய்தி:
கைப்பு இப்போ மும்பையில இருக்கார். //

ஏன் மும்பை சென்றார் என்பதற்கு சரியான விளக்கமில்லை. ஆளையும் காணவில்லை. யாராவது அந்த மாதுங்கா பி-12 ஸ்டேஷன் போயி பாருங்கப்பா. //

இலவசக்கொத்தனார் said...

//பதிவை சீக்கிரம் படிச்சுட்டேனுங்க.ஆனா இந்த பின்னூட்டம் இல்லே பின்னூட்டம் அது படிக்கையிலே தானுங்க தலைசுத்தி தொபுக்கடீர்னு விழுந்துட்டேன். //

ப்ரியன், இப்படி கண்ணுல தண்ணி வர வெச்சுட்டயேப்பா...நான் பதிவு போட்டா எல்லாரும் அதைப் படிக்காம நேரா பின்னூட்டம் போட ஆரம்பிக்கறாங்கன்னு நான் ஆழ்ந்த மனவருத்தத்தில் இருக்கும் போது, இப்படி ஒரு அறிக்கை விட்டு என் ஆழ் மனக் கவலையெல்லாம் துடைச்செறிந்த உனக்கு நான் என்ன கை மாறு செய்வேனோ, தெரியலையே. எனக்கு தெரியலையேப்பா, தெரியலையே. (அந்த ஸ்டைலில் படித்துக் கொள்ளவும்.)

லக்கிலுக் said...

இதுவரை நடந்த பின்னூட்ட ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் இந்தப் பதிவில் நடந்தேறியிருக்கிறது. மொத்தப் பின்னூட்டமான 174ல் 78 பின்னூட்டத்தை பதிவாளரே போட்டு சாதனை படைத்திருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு http://blogcommentsvigilance.blogspot.com/2006/07/blog-post_115288046448556180.html

Karthik Jayanth said...

கவிதா,

ரொம்ப நன்றிங்க (கமென்ட் போட்டதுக்கும், அதை வந்து சொன்னதுக்கும்).

கொதஸ் ,

மன்னிச்சிகோங்க.. இருக்குற மத்த கமென்ட் எல்லாம் படிக்குறதுன்னா கடைல ஒரு 2 நாள் லீவ் போட்டாத்தான் ஆகும் போல ;-)

VSK said...

துப்பு துலக்கவா மும்பைல இருக்காரு???

CBI கூப்பிட்டாங்களா, இல்லை, இவரே கேப்டன் ரேஞ்சுக்கு தானே போயிட்டாரா?

ILA (a) இளா said...

தல என்னைக்குமே தானே போய்தான் வாங்கி பழக்கம். அப்படித்தான் இப்பவும்

கால்கரி சிவா said...

என்ன இது ரொம்ப கேவலமா இருக்கே. காலையில வந்து பார்த்தா கொத்தனார் தமிழ் பதிவின் மேல் இல்லையே.

சே..உங்களுக்கு இந்த நிலையா..

அதுக்குதான் கிரவுண்ட்லே நின்னு ஆடணும். அடிக்கடி ஆபிஸிற்க்கு போககூடாது

நாமக்கல் சிபி said...

//ஆமாங்க வெ.ப. 100 வந்து இப்போ 160 வரை வந்தாச்சு. எல்லாம் உங்க ராசிதான். சந்தோஷம்தானே?
//
மிக்க மகிழ்ச்சி...

இதுவரை அதிக பின்னூட்டம் பெற்ற பதிவு எதுப்பா? அண்ணன் கொத்ஸ் அந்த சாதனையை மிக விரைவில் உடைத்தெறிவார். சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

//இதுவரை அதிக பின்னூட்டம் பெற்ற பதிவு எதுப்பா? அண்ணன் கொத்ஸ் அந்த சாதனையை மிக விரைவில் உடைத்தெறிவார். சாதனை புரிய என் வாழ்த்துக்கள். //
அப்ப அவர் சாதனை தான் முறியடிக்க வேண்டும்.

வெட்டி!(யோவ் பெர மாத்துய்யா முதல, யாரு வெட்டினு அடிக்கடி குழம்பி போறேன்)
நம்ம கொத்ஸ், லாரா மாதிரி, அவர் சாதனைய யாருச்சும் முறியடித்தால் அந்த சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை புரிந்து விடுவார்.
இவர் சாதனையை முறியடிக்க இனிமேல் யாராச்சும் புதுசா ____________ தான் வரனும்.

கால்கரி சிவா said...

என்னப்பா கொத்ஸ் ஆளெங்கே... கொஞ்ச நேரத்திலே நான் மாடுபிடிக்க திருவிழாக்கு போறேன். அப்புறம் திங்கட்கிழமை தான்.

குமரன் (Kumaran) said...

//இவர் சாதனையை முறியடிக்க இனிமேல் யாராச்சும் புதுசா ____________ தான் வரனும்.
//

உண்மையைச் சொல்வேன். நல்லதைச் சொல்வேன். வேறொன்றும் தெரியாது...

ALIF AHAMED said...

//
மன்னிச்சிகோங்க.. இருக்குற மத்த கமென்ட் எல்லாம் படிக்குறதுன்னா கடைல ஒரு 2 நாள் லீவ் போட்டாத்தான் ஆகும் போல ;-)
//

2 நாள் லீவ் போட்டு வந்து பாத்தால் அதபடிக்க 5 நாள் லீவ் போடனுமே....எப்ப வருவீங்க ...?????

::))

நாமக்கல் சிபி said...

//வெட்டி!(யோவ் பெர மாத்துய்யா முதல, யாரு வெட்டினு அடிக்கடி குழம்பி போறேன்)
//
வெட்டியா கேள்விக் கேக்கறவனுக்கு பதில் சொன்னா சொல்றவங்களும் வெட்டி தானே :-))

//
நம்ம கொத்ஸ், லாரா மாதிரி, அவர் சாதனைய யாருச்சும் முறியடித்தால் அந்த சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை புரிந்து விடுவார்.
//
எனக்கு என்னொமோ கொத்ஸ் சாதனையை யாருமே முறியடிக்க முடியாதுனு தான் தோனுது ;)

இலவசக்கொத்தனார் said...

//கொதஸ் ,

மன்னிச்சிகோங்க.. இருக்குற மத்த கமென்ட் எல்லாம் படிக்குறதுன்னா கடைல ஒரு 2 நாள் லீவ் போட்டாத்தான் ஆகும் போல ;-) //

பேராசிரியரே, நீங்க போற ரூட் சரியில்லை. சங்க கடமைகளை விட்டு விட்டு வேறு வேலை பார்ப்பதை சங்கம் அனுமதிக்காதென்பதை தாங்கள் உணரவில்லையா?

வாரயிறுது வருதுல்ல. வேஸ்ட் பண்ணாம படியுங்க.

இலவசக்கொத்தனார் said...

//துப்பு துலக்கவா மும்பைல இருக்காரு???//

அவரு பல்லே சரியா துலக்க மாட்டாரு, இதுல எந்த துப்பை போயி துலக்கப் போறாரு?

//CBI கூப்பிட்டாங்களா, இல்லை, இவரே கேப்டன் ரேஞ்சுக்கு தானே போயிட்டாரா? //

போகும்போது நம்ம குழலியை கூட்டிக்கிட்டு போனா புள்ளிவிபரம் அள்ளி வீச உபயோகமா இருந்திருக்குமே....

இலவசக்கொத்தனார் said...

//தல என்னைக்குமே தானே போய்தான் வாங்கி பழக்கம். அப்படித்தான் இப்பவும் //

தல என்ன ட்ராபிக் போலீஸா? போயி போயி வாங்கிக்கறதுக்கு.

(மேலதிக விபரங்களுக்கு குமரனின் சொல் ஒரு சொல் சென்று பார்க்கவும்)

இலவசக்கொத்தனார் said...

//என்ன இது ரொம்ப கேவலமா இருக்கே. காலையில வந்து பார்த்தா கொத்தனார் தமிழ் பதிவின் மேல் இல்லையே. //

தமிழ் மண முகப்புன்னு சொல்லணும் கால். (அவர தலன்னு கூப்பிட்ட உங்கள காலுன்னு கூப்பிட்டா தப்பா?)

//சே..உங்களுக்கு இந்த நிலையா..//

இருந்தா திட்டுங்க.இல்லைன்னா பரிதாபப்படுங்க.

//அதுக்குதான் கிரவுண்ட்லே நின்னு ஆடணும். அடிக்கடி ஆபிஸிற்க்கு போககூடாது //

சங்கத்துல பேசி சம்பளம் தரச் சொல்லுங்க. அதான் உங்க பின்னூட்டம் போட்ட உடனே மேல வந்திடுச்சே..

இலவசக்கொத்தனார் said...

//இதுவரை அதிக பின்னூட்டம் பெற்ற பதிவு எதுப்பா? அண்ணன் கொத்ஸ் அந்த சாதனையை மிக விரைவில் உடைத்தெறிவார். //

மத்தவங்கள பத்தி தெரியாது வெ.பை. ஆனா நமக்கு வந்ததுல (சரி சரி, நானும் போட்டுக் கிட்டதுல) அதிகமுன்னு இந்த பதிவுக்கு 404 பின்னூட்டம் வந்தது.

//சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.//

வெறும் வாழ்த்துப் போதாது. டார்கெட் குடுப்பேன் அதை அச்சீவ் பண்ணனும். ஓக்கேவா?

குமரன் (Kumaran) said...

//மேலதிக விபரங்களுக்கு குமரனின் சொல் ஒரு சொல் சென்று பார்க்கவும்//

திருதிருதிருதிரு

(ஒன்னும் புரியாம முழிக்கிறேனுங்க.)

இலவசக்கொத்தனார் said...

//இவர் சாதனையை முறியடிக்க இனிமேல் யாராச்சும் புதுசா ____________ தான் வரனும். //

இந்த மாதிரி எல்லாம் ஓப்பனா விடாதப்பா. விஷயம் என்னன்னு சொல்லிடு. இல்லைன்னா யாராவது தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டு (குமரன், இங்க பொருள் பண்ணிக்கிட்டுன்னா சரியா வரலையே?) 'நாகை சிவாவின் கவனத்துக்கு'ன்னு பதிவு போடப் போறாங்க.

இலவசக்கொத்தனார் said...

//என்னப்பா கொத்ஸ் ஆளெங்கே... கொஞ்ச நேரத்திலே நான் மாடுபிடிக்க திருவிழாக்கு போறேன். அப்புறம் திங்கட்கிழமை தான். //

வந்துட்டேன். நீங்க திருவிழாவுக்குப் போங்க. குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிடுங்க. கொடராட்டினமெல்லாம் ஏறுங்க. அந்த மாடு பிடிக்கற வேலையெல்லாம் மட்டும் அடுத்தவங்க பாத்துக்கட்டும். என்னா?

ஒரேடியா திங்கக்கிழமை வரை வராம இருக்காதீங்க. அப்புறம் பேராசிரியர் மாதிரி லீவு போட வேண்டியதாப் போகுது.

இலவசக்கொத்தனார் said...

//உண்மையைச் சொல்வேன். நல்லதைச் சொல்வேன். வேறொன்றும் தெரியாது... //

பாட்டை பாடிட்டு சொல்ல வந்ததை சொல்லாம போனா எப்படி?

இலவசக்கொத்தனார் said...

//2 நாள் லீவ் போட்டு வந்து பாத்தால் அதபடிக்க 5 நாள் லீவ் போடனுமே....எப்ப வருவீங்க ...????? //

சரியா பிடிச்சீங்க மின்னல். இந்த ரேட்டுல போனா உங்களுக்கு சீக்கிரமே ஒரு பட்டம் கிடைக்கும். நல்லா களப்பணி செய்யுங்க. வாழ்த்துக்கள்.

ALIF AHAMED said...

195

196

197

198

199

200

200 கரெட்டா போட்டனா ???

இலவசக்கொத்தனார் said...

//வெட்டியா கேள்விக் கேக்கறவனுக்கு பதில் சொன்னா சொல்றவங்களும் வெட்டி தானே :-))//

இந்த மாதிரி வெட்டி வெட்டி ஒட்டறது கஷ்டமா இருக்கப்பா. வேற வழி கண்டுபிடிக்கணும்! :)

//எனக்கு என்னொமோ கொத்ஸ் சாதனையை யாருமே முறியடிக்க முடியாதுனு தான் தோனுது ;) //

அப்படி எல்லாம் சொல்லக் கூடாது வெ.பை. சாதனைகள் எல்லாம் முறியடிக்கப் படவேண்டியவையே. நம்மளை மாதிரி பதிவெல்லாம் பார்த்துப் பயப்படாத கெட்டித் தோலுள்ள வாலிபர்கள் வருவார்கள். வரணும். சரியா?

இலவசக்கொத்தனார் said...

//திருதிருதிருதிரு

(ஒன்னும் புரியாம முழிக்கிறேனுங்க.) //

என்ன கும்ஸ் இப்படி சொல்லறீங்க? உங்க "ஒளவியம்: பொறாமை" பதிவுல இயல்வது கரவேல் பற்றி பேசும் போது நம்ம ட்ராபிக் கான்ஸ்டபிள் பத்திப் பேசுனோமே. மறந்து போச்சா?

சுட்டி குடுத்து செஞ்ச இலவச விளம்பரத்துக்கு நன்றி எல்லாம் கிடையாதா?

ALIF AHAMED said...

/
/
சரியா பிடிச்சீங்க மின்னல். இந்த ரேட்டுல போனா உங்களுக்கு சீக்கிரமே ஒரு பட்டம் கிடைக்கும். நல்லா களப்பணி செய்யுங்க.
/
/
உள்குத்து இல்லையே??

ALIF AHAMED said...

//வாழ்த்துக்கள்.//

என் கடமையை தானே செஞ்சேன்

(பட்டம் கிடைக்குமா .....ம்.........பாப்போம்)

«Oldest ‹Older   1 – 200 of 569   Newer› Newest»