Friday, July 7, 2006

வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர்

என்னடா ரெண்டு நாளா வ.வா.ச ஆளுங்க ஒவ்வொருத்தரா வந்து மாறி மாறி பில்டப்பு குடுத்துக்குட்டு இருக்காங்க...எதுக்கு இது என்னாத்துக்கு இதுன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பீங்க. அதொன்னுமில்லீங்க...இப்ப நீங்க இருக்குறீங்க...நீங்க சொல்ற ஒவ்வொரு விசயத்துக்கும் செய்யற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நாலு பேரு மாத்தி மாத்தி ஆப்பு வச்சிட்டே இருக்காங்கன்னு வையுங்க(அட! சும்மா ஒரு பேச்சுக்கு தாங்க). நீங்க என்ன நெனப்பீங்க? கொஞ்சம் நேரம் இந்த ஆப்பையெல்லாம் வேற யாராச்சும் வாங்கிக்க மாட்டாங்களா...நமக்கும் பாத்து ரசிக்க வாய்ப்பு கெடக்காதான்னு யோசிப்பீங்க...சரி தானே? அட! அதே மாதிரி தாங்க நாங்களும் யோசிச்சோம்.


தேமேன்னு தன் வழியில போயிட்டு இருக்குற ஒருத்தரை விருந்தினர், கெஸ்ட்டு அது இதுன்னு ஆசை வார்த்தை காட்டி பசப்பி கூட்டியாந்து, உங்க முன்னாடி வுட்டுடறது...அவரு சொல்றதுக்கெல்லாம் உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீங்க கலாய்க்கிறது...அதப் பாத்து நாங்க ஆனந்தப் படறது. இது தான் எங்க திட்டம்(ஒரு நாலஞ்சு மோரைக்கட்டையையே திரும்பவும் திரும்பவும் பாத்துட்டு இருந்தா உங்களுக்கும் போர் அடிக்கும் இல்லியா?...அதுக்குத் தான் இந்த ஸ்பெசல் ஏற்பாடு). இந்தத் திட்டத்தை ஒவ்வொரு மாசமும் நடைமுறை படுத்தலாம்னு இருக்குறோம். ஒவ்வொரு மாசமும் ஒரு புது வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர் வருவாரு...சரி வர்றவரு என்ன பண்ணுவாரு? அந்த மாசத்து வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபரா இருக்குறவரு, அந்த மாசம் முழுசும் வாரத்துல ஒரு நாளு, எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி காமெடி, நையாண்டி, நக்கல், லொள்ளு இதெல்லாம் பண்ணுவாரு...இதெல்லாம் இவரு பண்ணாலும் சங்கத்துப் பக்கம் வர்ற நீங்க என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்(அதுக்குத் தானே இம்புட்டு பில்டப்பு எல்லாம் குடுத்து இருக்கோம்!). அதுக்கப்புறம் நீங்க ஆச்சு அவரு ஆச்சு.

எல்லாம் சரி தானுங்கோ...யாருங்கோ அந்த இந்த மாசத்து வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபரு...நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்சவரு தானுங்கோ...

...அவரு அறுசுவைத் தமிழன், வெண்பா வேங்கை, புரோட்டா பாவலரு, நம்ம கொத்தனாரு தானுங்கோ!
(வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர் - பேர் காரணம் கண்டுபிடிச்சு சொல்லுங்க பாப்போம் சாமிங்களா!)

24 comments:

நன்மனம் said...

அவரு சின்ன வயசா இருக்க சொல்ல வீட்டாண்ட இருக்கற நெலத்துல கடல போட.... சீ.... கடல பிடுங்க கடப்பாறைய எடுத்துக்கினு போயிருக்காரு அத பாத்த அங்க இருந்த வாலிப அம்மணிகள் இவற பாத்து தோடா.... இளமை கொத்தனாரு வந்திட்டாருனு செல்லம்மா.... சொல்ல அதே பேரா ஆகி.... நாளாக நாளாக திரிஞ்சி.... இலவச கொத்தனாராகிடுச்சு....


ஸ்ஸ்ஸ்.... அப்பா..... நம்மாளாள ஆனது....

மனதின் ஓசை said...

கெளம்பிட்டங்கைய்யா....கெளம்பிட்டங்கைய்யா....

செங்கமலம் said...

வருத்தப்படாத 'at lose' வாலிபர் aa

கைப்புள்ள said...

//இவற பாத்து தோடா.... இளமை கொத்தனாரு வந்திட்டாருனு செல்லம்மா.... சொல்ல அதே பேரா ஆகி.... நாளாக நாளாக திரிஞ்சி.... இலவச கொத்தனாராகிடுச்சு....
//

கொத்ஸ்! நன்மனம் எதோ சொல்றாரு...உண்மை தானா?
:)

கைப்புள்ள said...

//கெளம்பிட்டங்கைய்யா....கெளம்பிட்டங்கைய்யா//

இன்னும் நம்ம அறுசுவைத் தமிழன் ஜோடா குடிச்சி முடிக்கலை...அவரு குடிச்சு முடிச்சதும் மேள தாள ஆட்டத்தோட வெரல் வித்தை காட்டிக்கிட்டே கிளம்புவாரு பாருங்க.

Udhayakumar said...

//வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர் //

"கைப்புள்ள: எம்மேல யாரும் கை வைச்சதில்லை.

கட்டதுரை: அடப்பாவி, போன வாரம்தாந்த ச்ந்தயில் சில்லு மூக்கு உடையர வரைக்கும் அடிச்சம்..

கைப்புள்ள: அது போன வாரம்."

அதாவது, கைப்பு மாதிரி வாங்கீட்டே இருந்தாலும் முதுகில பாரம் இருக்கற மாதிரி காட்டிக் கொள்ளவே கூடாது. அதானே????

இராம் said...

அட அப்பே எனக்கு தெரியுமிலே பேரு காரணம்... அது இன்னானா ஓசிலே யாரு யாரு கொத்தப்போடறங்கலோ அவங்க எல்லாம் ஓசி கொத்து ஓசி கொத்துனு எங்கூருல கூப்பிடுவோம்.இவரு கொஞ்சம் மரியாதை கணக்கா வேணுமினு கொத்தனார் வெச்சுக்கிட்டாப்பலே.அப்புறம் தமிழ்ப்பற்று ஹை'கிறதுனலா ஓசியை இலவசம்னு வெச்சிக்கிட்டார்,இவரு ஒரு தமிழுபுரவலரு வேறயா சொல்லவேண்டியதில்லை.
இப்படித்தான் அந்த ஒசிகொத்து இலவசகொத்தனாரனாது.அப்புட்டுத்தான் இதுக்கு மேலே ஒன்னும் சொல்லிக்கிறதுப்பிலா இல்லை.....
:-))))

கைப்புள்ள said...

நன்மனம் "இலவசக்கொத்தனார்" பெயர் காரணம் யூகிச்சு சொல்லிருக்காரு. நாங்க கேட்டது "அட்லாஸ் வாலிபர்" இந்த பதத்தோட பேர் காரணம் - எங்க சொல்லுங்க பாப்போம்!

மின்னுது மின்னல் said...

####
"வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர்"
###


கொத்தனாரை வேல்டு புல்லா சுத்தி சுத்தி ஆப்படிக்க போறங்களா ???

கண்டுபிடிச்சுட்டேனா தல ?

Udhayakumar said...

என்னடா, எல்லொரும் "இலவசக்கொத்தனார்" பெயர் காரணம் சொல்லிட்டிருக்காங்க... நாம முந்திட்டமோன்னு குறுகுறுன்னு இருந்தது.

கைப்பு, அவ்வ்வ்வ்வ்வ்வ்....காப்பாத்திட்ட ராசா...

கீதா சாம்பசிவம் said...

சின்ன வயசிலே ஹெர்குலிஸ் சைக்கிள் இடைவிடாமல் 24 மணி நேரம் ஓட்டினாரா?

Udhayakumar said...

தமிழ் மணத்துல பொன்ஸ் யானை ஓடாம நிக்குது. உங்க சங்கத்து சின்னம் ஆப்பு தொலைஞ்சு போச்சா???
இல்லை, புதரகத்துல அரிசி வடிக்கறவங்களோட சதியா???

எதோ என்னால முடிஞ்சது, அம்புட்டுதேன் , வருட்டா....

பொன்ஸ்~~Poorna said...

உலகத்து ஆப்பை எல்லாம் தன் தலையில் சுமக்கும் எங்கள் அண்ணன் கைப்புவுக்கு உதவியாக வந்ததால்.. இந்த வார அட்லாஸ் வாலிபர் கொத்தனார்!!! சரியா தல?

கொத்ஸ், வருக வருக.. நல்லதா நாலு வெண்பா, ரெண்டு சமையற்குறிப்பு போட்டுத் தாக்குங்க..

இந்தவாரம் நீங்க போய்ட்டு வந்த பயணக் குறிப்பெல்லாம் வேணாம் கொத்ஸு.. உங்க கிட்ட அந்த வார்த்தையைச் சொல்லவே பயமா இருக்கு எனக்கு ;)

மின்னுது மின்னல் said...

ஆமா எங்க இ. கொ. சோடா குடிச்சி முடிக்கலயா ??


பின்னுட்ட திலகத்துக்கே இப்படி பின்னாடி..........ஆப்பா சும்மா பூசிமெழுகிட மாட்டாரு :)

ILA(a)இளா said...

மின்னலு, சங்கத்து பாஷையில புல்லான்னா ஃபுல்ன்னுதான் அர்த்தம் (குவார்ட்டர், ஹாஃப், ஃபுல்). அப்பு நீங்க சொல்றது எத?

மின்னுது மின்னல் said...

$$
ILA(a)இளா said......
சங்கத்து பாஷையில புல்லான்னா ஃபுல்ன்னுதான் அர்த்தம் (குவார்ட்டர், ஹாஃப், ஃபுல்). அப்பு நீங்க சொல்றது எத?
$$

$$
கைப்புள்ள said...

இன்னும் நம்ம அறுசுவைத் தமிழன் ஜோடா குடிச்சி முடிக்கலை...
$$

தல என்னா மீனிங்குல சொன்னாரோ அதேதான் ::))

ஜொள்ளுப்பாண்டி said...

//பொன்ஸ் said...
நல்லதா நாலு வெண்பா, ரெண்டு சமையற்குறிப்பு போட்டுத் தாக்குங்க..//

ஆஹா கெளம்பிட்டாங்கய்யா கெளபிட்டாங்க ! இதென்ன கலாட்டா?? பொன்ஸக்காவுக்கு ஆதரவா வெண்பாவா????????????? மக்கா அல்லாரும் ரெடியா இருக்கப்பூ சொல்லிபுட்டேன் !!

கொத்ஸ் என்னாபாது சவுண்டக் காணோம் !!

அட்லாஸ்னா இனாபா?? ஆராச்சும் மூளக்காரவுக சொல்லுங்கப்பூ !

லதா said...

அடிக்கிற ஆப்புல ஒன்னுமே பேசவே முடியாத (at a loss) வாலிபராக இருப்பாரா ?

இலவசக்கொத்தனார் said...

அடடா, என்ன வரவேற்பு. என்ன வரவேற்பு. அடுத்தவன் அடி வாங்கறத பார்க்கறதுக்கு இவ்வளவு ஆசையா?

சரி. இ.கொ. வாக்கு குடுத்துட்டான். அதனால வந்து நிக்கறேன். வேணுங்கற அளவுக்கு அடியுங்கப்பா!

அந்த பேரு - அது அட் லாஸ் அப்படின்னு இருக்கே. போகும் போது கை காலெல்லாம் இருக்குமா இல்லை ஐயாம் அட் லாஸ்-ஆ?

ILA(a)இளா said...

http://www.hindu.com/yw/2005/11/18/stories/2005111800200200.htm

கைப்புள்ள said...

//அதாவது, கைப்பு மாதிரி வாங்கீட்டே இருந்தாலும் முதுகில பாரம் இருக்கற மாதிரி காட்டிக் கொள்ளவே கூடாது. அதானே????
//

ரொம்ப சரி! உதயகுமார் கையைக் குடுங்க...உங்களுக்குத் தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ். வ.வா.ச.வுல உங்க எதிர்காலம் பிரகாசமா இருக்குது.

கைப்புள்ள said...

//உலகத்து ஆப்பை எல்லாம் தன் தலையில் சுமக்கும் எங்கள் அண்ணன் கைப்புவுக்கு உதவியாக வந்ததால்.. இந்த வார அட்லாஸ் வாலிபர் கொத்தனார்!!! சரியா தல?//

தங்கமே...சங்கத்தின் 'குலவிளக்கே'! அண்ணாச்சிங்க சொல்லிக் குடுத்த மாதிரியே கரெக்டா வந்து ஒப்பிச்சிட்டியே...சமத்து.

கைப்புள்ள said...

//அப்புறம் தமிழ்ப்பற்று ஹை'கிறதுனலா ஓசியை இலவசம்னு வெச்சிக்கிட்டார்,இவரு ஒரு தமிழுபுரவலரு வேறயா சொல்லவேண்டியதில்லை.
இப்படித்தான் அந்த ஒசிகொத்து இலவசகொத்தனாரனாது.அப்புட்டுத்தான் இதுக்கு மேலே ஒன்னும் சொல்லிக்கிறதுப்பிலா இல்லை..... //

கொத்து! ராமோட கேள்விக்கு ஒரு ரிப்ளை பார்சல்.

கைப்புள்ள said...

//கொத்தனாரை வேல்டு புல்லா சுத்தி சுத்தி ஆப்படிக்க போறங்களா ???

கண்டுபிடிச்சுட்டேனா தல ?//

வாய்யா மின்னலு!
அது தான் நம்ம பளான்னு....பாப்போம்.