நான் ஏதோ எப்பவாவது ஒரு பதிவு போட்டுட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தேன், நம்மளை அட்லாஸ் வாலிபராக்கி வாரம் ஒரு பதிவு போடச்சொல்லிப் படுத்தறாங்க இந்தப் பசங்க. இதுல பதிவு எல்லாம் கலாய்க்கற பதிவா இருக்கணுமுன்னு கண்டிஷன் வேற. சரி என்னதான் எழுதலாமுன்னு மண்டையை உடைக்கும் போது நம்ம தெக்கி பதிவு கண்ணுல பட்டது. அவரு எதோ சீரியஸா அந்துமணி, அரைகுறை தூக்கம், பரிணாம வளர்ச்சின்னு எழுதியிருந்தாரு. அதெல்லாம் நமக்கு எங்க புரியுது. அந்த பதிவுல ஒரு பின்னூட்டம் ஒண்ணு போட்டு இருந்தாரு. அதுதான் நம்ம கவனத்தைக் கவர்ந்தது. அதாவது தேவைக்கு ஏத்தா மாதிரி புதிய அங்கங்கள் வளர வாய்ப்பு இருக்கு என்பதை அவரு இப்படி நகைச்சுவையா சொல்லியிருந்தாரு.
"காதோட சேர்ந்து இயற்கையாகவே இருக்கிற மாதிரி ஒரு செல்போன் வைக்க ஒரு "பை," ஹீம், அப்புறம் சாப்பிடமலேயே வேலை பார்ப்பதற்கு ஏற்ற உடம்பு... அல்லது வயித்துக்கு பக்கத்திலேயே அடுத்த வேளை சாப்பாட்டை சேமித்து வைத்துகொள்கிற "பை" :-))) ஹி...ஹி...ஹி... இப்படி எல்லாமே... "
இதை படிச்ச உடனே நமக்கு ஒரு பொறி. இந்த மாதிரி நம்ம மக்களுக்கு எல்லாம் ஒரு சான்ஸ் கிடைச்சா என்ன என்ன தேவைப்படும் அப்படின்னு ஒரு படம் ஓடிச்சு. இன்னைக்கு அதைத்தான் சொல்லப் போறேன்.
கைப்புள்ள : பாவம் மனுஷன் இந்த ஆப்பு வாங்கறத பாத்த நமக்கே பாவமாத்தான் இருக்கு. அதனால இவருக்கு காண்டாமிருகம் மாதிரி நல்ல தடியா ஒரு தோல்தான் வேணும். ஆனா அப்படி ஒரு தோல் கிடைச்சா அவர கலாய்க்கறவங்க பாட்ட நினைச்சா பாவமா இருக்கு.
குமரன் : இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் எண்ணிக்கையைப் பார்த்தா இவருக்கு ரெண்டு கைகள் போதாது. இவருக்கு இன்னுமொரு பத்து கை கிடைச்சா? நல்லாத்தான் இருக்கும். ஆனா இன்னும் பத்து கை இருக்கேன்னு மேலும் ஒரு நூறு வலைப்பூ ஆரம்பிச்சாருன்னா நம்ம கதி?
கால்கரியார் : இவருக்கு என்னன்னு எனக்கு நல்லா தெரியும். இவரு ஒரு மிருகம், பறவை விட்டு வைக்காம காலெல்லாம் கடிச்சு வைக்கறாரு. அதனால இவருக்கு சைடில் கோழிக்காலாய் வளரச் செய்தால் நாட்டில் இருக்கும் மிருகங்கள் எல்லாம் நம்மை வாழ்த்தும். ஆனா கோழிப்பண்ணைக்காரங்க, உணவு விடுதிக்காரங்க எல்லாம் நம்மை கடுப்படிப்பாங்களே.
பொன்ஸ் : இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு இருக்கிற நாலு கண்ணு போதாதே, இன்னும் ஒரு எட்டு கண்ணு குடுப்போமா? அப்போ வலைப்பூ, புஸ்தகமெல்லாம் இன்னும் நிறையா படிக்கலாம். இங்க என்ன பிராப்பளம்? இவங்க போயி தப்பு கண்டுபிடிக்காத பதிவிலெல்லாம் தப்புக் கண்டுபிடிப்பாங்க. அந்த வலைப்பதிவாளர்கள் நம்மளைத் திட்டுவாங்க.
ஜிரா : இவரு விழுந்து வாரரதுக்கு இவருக்கு ஒரு ரப்பர் பாடிதான் வேணும். ஆனா என்ன இவரை நார்மலா பிடிக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு ரப்பர் பாடி வேற கிடைச்சா எங்க போயி பிடிக்கறது?
துளசி டீச்சர் : இவங்களுக்கு உடம்பில் இதுக்கு மேல ஒண்ணும் வேண்டாம். ;) இவங்களுக்கு பிடிச்ச விஷயமோ பயணம். இவங்க எடுக்கற வரலாற்று பாடங்களுக்கு இவங்களுக்குத் தேவை டயம் ட்ராவல் சக்திதான். என்ன ஒரு மாச இந்தியா பயணத்துக்கு 36 பதிவுகள் போட்டாங்க. இவங்க போன நூற்றாண்டு போயிட்டு வந்தா.... தலை சுத்துதே....
நாமக்கல்லார் : இவரு பகலில்லெல்லாம் நார்மல் மனிதனாகவும், சூரியன் மறைந்த பின் ஆந்தை மாதிரி இரவு வாழ் உயிரினமாகவும் மாறினால் 24 மணி நேரமும் இணையத்தில் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கலாம். இவருக்கு கண்ணு வேற கரெக்ட்டா நல்ல பெருசா இருக்கு. ஆனா நினைத்துப் பார்த்தால் இப்பவே இப்படித்தானே இருக்கிறார்.
இயற்கை நேசி : இவரு இப்பவே இவ்வளவு விஷயம் சொல்லறாரு. இவருக்கு கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி கிடைச்சுதுனா வேற வேற மிருகங்களா மாறி இன்னும் சுவாரசியமான தகவல்கள் தருவாரு. ஆனா மறந்து போயி அந்த அமேஸான் தவளையா மாறினாருன்னா அழிஞ்சுல்ல போயிடுவாரு.
எஸ்.கே. : மேல இருக்கறவருக்கு கூடு விட்டுக் கூடு பாயறதுன்னா இவருக்கு க்ளோனிங். அப்போ இவரோட அழகான, அர்த்தமுள்ள பதிவுகள் எல்லாம் நமக்கு இரட்டிப்பா கிடைக்குமே. அதிகமா பின்னூட்டமும் போடுவார். என்ன, இவரு போயி சண்டை போடறவங்க இவரு ஒருத்தரையே சமாளிக்க முடியாம கஷ்டப்படறாங்க. அவங்க கோபம் நம்ம பக்கம் திரும்பும். அதான் பிராப்பளம்.
இப்படி ஒவ்வொருத்தருக்கும் யோசிக்கும் போது நாமே ஆனால்ன்னு நினைக்கறோமே, அதெல்லாம் நினைக்காமலா ஆண்டவன் குடுத்தது போதுமுன்னு இருந்திருப்பான். உலகம் இப்போ இருக்கற மாதிரியே நல்லாத்தான் இருக்கு. ஒண்ணும் மாற வேண்டாம். என்ன சொல்லறீங்க?
ரொம்ப சீரியஸ் முடிவாப் போச்சோ? சரி விடுங்க. உங்களுக்கு ஞாபகத்துக்கு வர வலைப்பதிவர்கள், அரசியல் வியாதிகள், சினிமா நட்சத்திரங்கள், இவங்களுக்கு எல்லாம் என்ன அங்கங்கள் /சக்திகள் வேணுமுன்னு அடிச்சு விளையாடுங்க.
569 comments:
«Oldest ‹Older 201 – 400 of 569 Newer› Newest»200 நான் தான் போட்டேன்
சரியா எண்ணி எதாவது பரிசு...........??
அப்பா 200ஐ பார்த்துட்டேன் வர்ட்டா
//தப்பா அர்த்தம் பண்ணிக்கிட்டு (குமரன், இங்க பொருள் பண்ணிக்கிட்டுன்னா சரியா வரலையே?) //
சரியா வருதே கொத்ஸ்.
'தப்பா பொருள் பண்ணிக்கிட்டு'....
சரியாப் படலையா? இப்படி சொல்லிட்டுப் போங்க...
'தப்பாப் புரிஞ்சுக்கிட்டு...'
ஓகேவா?
//செஞ்சுரி எல்லாம் பழைய டார்கெட்.. இலவசமா எழுதிகிட்டு இருந்த காலத்துல செஞ்சுரி.. இப்போ தான் அட்லாஸா எழுதுறாரே.. குறைஞ்ச பட்சம் டபுள் செஞ்சுரி தான் //
பொன்ஸ் அவர்களிம் தீர்க்கதரிசணம் பலித்துவிட்டது.
//
வெறும் வாழ்த்துப் போதாது. டார்கெட் குடுப்பேன் அதை அச்சீவ் பண்ணனும். ஓக்கேவா?
//
உங்க அளவுக்கு எல்லாம் நம்மளால முடியாது. வேணுமுன்னா சங்கத்து உறுப்பினர்கள் யாரவது பண்ணலாம் :-)
//உங்க "ஒளவியம்: பொறாமை" பதிவுல இயல்வது கரவேல் பற்றி பேசும் போது நம்ம ட்ராபிக் கான்ஸ்டபிள் பத்திப் பேசுனோமே. மறந்து போச்சா?
//
மினுக். மினுக். மினுக். பளீர்.
இப்பப் புரியுது.
விளம்பரத்துக்கு நன்றி. ஆனா யாரும் அந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியலையே.
//200 கரெட்டா போட்டனா ??? //
கரெக்ட்டா போட்டீங்க. என்னைத் தவிர எல்லாருக்கும் நல்ல எண்ணத் தெரியும் போல இருக்கு. எனக்கும் நல்ல எண்ண வர வழி குடு முருகா!
//பொன்ஸ் அவர்களின் தீர்க்கதரிசனம் பளித்துவிட்டது :-))
//
பையல்ஜி. எழுத்துப்பிழையார் இந்தப் பக்கம் வர்ற மாதிரி தெரியலை. அதான் அவருக்குப் பதிலா நானு. :-)
பளித்துவிட்டது - பலித்துவிட்டது.
//உள்குத்து இல்லையே?? ///
சங்கப் பலகையில் உள்குத்து எல்லாம் கிடையதாமே. பொன்ஸ் சொன்னாங்க. அதனால இதுல உள்குத்து ஒண்ணும் இல்லைன்னு வெச்சிக்கலாம்.
கொத்ஸு... இந்தப் பதிவுக்கு ஒரு சூப்பர் தலைப்பு குடுத்தீங்க. எத்தனை பேரு 'பரிணாம வளர்ச்சி'ன்னு சீரியஸ் தலைப்பைப் பாத்துட்டு 'ஆகா. 200 பின்னூட்டங்களா. அப்டி என்ன தான் டிஸ்கஸ் பண்றாய்ங்க'ன்னு பாக்க உள்ள வந்துட்டு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுனாய்ங்களோ? :-) எல்லாம் அந்த கைப்புள்ளக்கே வெளிச்சம்.
//என் கடமையை தானே செஞ்சேன்
(பட்டம் கிடைக்குமா .....ம்.........பாப்போம்) //
இந்த பாருங்க. கடமையை செய்யும் போது பலனை எதிர்பார்க்காமல் செய்யணும். ஆனா செய்யறதுக்கு முன்னாடியும் செஞ்ச பின்னாடியும் எண்ணிப்பார்த்தா தப்பில்லை. :)
உள்குத்து கெட்ட வார்த்தைன்னு கோவி. கண்ணன் ஐயா சொல்லியிருக்காரு. அதனால இனிமே எல்லாரும் உகுன்னு சொல்லுங்க.
//எண்ணிப்பார்த்தா தப்பில்லை//
விரல்விட்டு எண்ணிப்பாக்குற அளவுக்குக் குடுப்பீங்களா இல்லை டின் கட்டி விட்றுவீங்களா? தெளிவாச் சொல்லிடுங்க. பாவம் மின்னலுக்குத் தெரியல.
//200 நான் தான் போட்டேன்
சரியா எண்ணி எதாவது பரிசு...........?? //
என்னாது? பரிசா? இத்தினி வருசம் காலேஜுக்கு போயி படிச்சயே பரிசா குடுத்தாங்க? பட்டம்தானே? அதேத்தான் இங்கயும்.
தீவிரக் களப்பணியாற்றும் மின்னலுக்கு நம்ம ர.ம. சார்ப்பாக "சின்னச் செயல் தலைவி" என்ற பட்டம் வழங்கப்படுகிறது.
(மின்னல், அது சின்ன செயல்தலைவி, அதாவது ஜூனியர் செயல் தலைவின்னு படிக்கணும். நீங்க எதாவது மாத்தி படிச்சுட்டு உள்குத்துன்னு வந்து அழப்போறீங்க.)
//அப்பா 200ஐ பார்த்துட்டேன் வர்ட்டா //
200 கண்ட கால்கரியார் வாழ்க! :D
//'தப்பாப் புரிஞ்சுக்கிட்டு...'
ஓகேவா? //
கும்ஸ், இது ஓக்கே. இனி நம் மன்றத்தினர் அனைவரும் இதையே பாவிக்க ஆணை ஒன்றையும் விரைவில் வெளியிடுகிறேன்.
//பொன்ஸ் அவர்களிம் தீர்க்கதரிசணம் பலித்துவிட்டது.//
நாலு கண்ணு இருக்கறவங்களுக்கு தீர்க்கதரிசனம் இல்லாமலேயா போகும்?
//உங்க அளவுக்கு எல்லாம் நம்மளால முடியாது. வேணுமுன்னா சங்கத்து உறுப்பினர்கள் யாரவது பண்ணலாம்//
அடடா. டார்கெட்டை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே (குமரன், பாவிச்சாச்சு!) அது என்னன்னா நீங்க நம்ம பதிவில் போட வேண்டிய டார்கெட்.
10 பேரு ஆளுக்கு 10 போட்டா 100, அதுவே 20 ஆளுக்கு 20 போட்டா 400. (தத்துவதுக்கு நன்றி - அன்னியன் திரைப்படம்)
//ஆனா யாரும் அந்தப் பக்கம் வந்த மாதிரி தெரியலையே. //
யாருமே வரமலையா 56 பின்னூட்டம்? எல்லாமே நீங்களே உங்க ஒரிஜினல் மற்றும் மற்ற பெயர்களில் போட்டுக்கிட்டீங்களா? பார்த்து. பதிவு வரப்போகுது. :)
//பளித்துவிட்டது - பலித்துவிட்டது. //
அவர் புளித்துவிட்டது என சொல்ல வரவில்லை என்பது உமக்கு எப்படித் தெரியும்?
// எல்லாம் அந்த கைப்புள்ளக்கே வெளிச்சம். //
அதெல்லாம் சரி, வந்தவங்களில் ஒரு சிலராவது ஜோதியில் ஐக்கியமாகி இருக்க மாட்டாங்க.
அத விடுங்க. இப்போ இவரையே வெளிச்சம் போட்டுத் தேடற நிலமையில் இருக்காறே... என்ன பண்ணறது?
//பையல்ஜி. எழுத்துப்பிழையார் இந்தப் பக்கம் வர்ற மாதிரி தெரியலை. அதான் அவருக்குப் பதிலா நானு. :-)
பளித்துவிட்டது - பலித்துவிட்டது//
குமரன்,
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே மாத்திட்டேன் :-))
//உள்குத்து கெட்ட வார்த்தைன்னு கோவி. கண்ணன் ஐயா சொல்லியிருக்காரு. அதனால இனிமே எல்லாரும் உகுன்னு சொல்லுங்க. //
மன்றத்தினர் அனைவரும் கோவியாரின் கட்டளைக்கும், குமரனின் வழிகாட்டுதலுக்கும் அடிபணிந்து இனி 'அந்த' வார்த்தைக்குப் பதிலாக உகு எனவே கூறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
//விரல்விட்டு எண்ணிப்பாக்குற அளவுக்குக் குடுப்பீங்களா இல்லை டின் கட்டி விட்றுவீங்களா? தெளிவாச் சொல்லிடுங்க. பாவம் மின்னலுக்குத் தெரியல. //
விரல் விட்டு எண்ணற அளவுக்கு நாம என்ன வெட்டியா? (வெ.பை. உங்களைச் சொல்லலை.) யாராவது வேலை வெட்டி இல்லாதவங்க வந்து எண்ணிச் சொல்லுவாங்க. அது வரை பொறுமையா இருங்க.
டின் எல்லாம் இவங்களுக்கு இப்போ இல்லை. முதலில் தல வரட்டும் அதுக்கு அப்புறம்தான் மத்தவங்க.
//10 பேரு ஆளுக்கு 10 போட்டா 100, அதுவே 20 ஆளுக்கு 20 போட்டா 400.//
ஆஹா!!! அருமையான விளக்கம்!!!
இன்னும் சொல்லப் போனால்,
10 பேரு ஆளுக்கு 10 போட்டா 100, அதுக்கு நம்ம பதில் சொன்னா 200...
10 பேரு ஆளுக்கு 20 போட்டா 200
அதுக்கு நம்ம பதில் சொன்னா 400 :-))
//குமரன்,
நீங்க சொல்றதுக்கு முன்னாடியே மாத்திட்டேன் :-)) //
அடடடடா, என்னா சுறுசுறுப்பு, என்னா சிரிப்பு. நல்லாத்தான் செய்யறீங்க அப்பூ!
//அவர் புளித்துவிட்டது என சொல்ல வரவில்லை என்பது உமக்கு எப்படித் தெரியும்?
//
:-))
//இன்னும் சொல்லப் போனால்,
10 பேரு ஆளுக்கு 10 போட்டா 100, அதுக்கு நம்ம பதில் சொன்னா 200...
10 பேரு ஆளுக்கு 20 போட்டா 200
அதுக்கு நம்ம பதில் சொன்னா 400 :-)) //
தப்பா சொல்லறீங்களே. 174ல் 78 பின்னூட்டத்தை பதிவாளரே போட்டதா நமக்கு கணக்கு வந்திருக்கு. அதன்படி பார்த்தா நீங்க தப்பா சொல்லறீங்களே!
:-D
////அவர் புளித்துவிட்டது என சொல்ல வரவில்லை என்பது உமக்கு எப்படித் தெரியும்?
//
:-)) //
சிரிங்கப்பூ சிரிங்க. நல்லா சிரிங்க. தமிழ்மணத்துல எதோ சூடாமே? (சிவா, சூடான் இல்லைய்யா சூடாம். அவசரத்துல தப்பு தப்பா படிச்சிட்டு நீர் அடிக்கிற லொள்ளு தாங்கலை) இங்க வந்தா இப்படி கொஞ்சம் சிரிச்சு அந்த சூட்டை எல்லாம் ஆத்திக்கிட்டு போங்க. :)
//நம்ம கொத்ஸ், லாரா மாதிரி, அவர் சாதனைய யாருச்சும் முறியடித்தால் அந்த சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை புரிந்து விடுவார்.
//
இதையும் தீர்க்கதரிசணம் ஆக்கிடுவீங்கனு தோணுது ;)
டார்கெட் - 404னு பேர் வெச்சிடுவோம் :-)
வெ.பை,
நான் பாதிக்கு பாதி போடும் போதே பதிவெல்லாம் வருது. நீங்க ஒரு பாதிக்கு ஆள் சேருங்க. மீதியை நான் கவனிச்சுக்கறேன். டார்கெட் 404 என்ன 420யே வேணும்னாலும் போடலாம். :)
உகு,வெகு எல்லாம் சரிங்க,
தகு,முகு,பிகு பத்தி கேள்விப்பட்டீங்களா
//தகு,முகு,பிகு பத்தி கேள்விப்பட்டீங்களா //
முதல் இரண்டு தெரியலை. ஆனா இந்த கடைசி நல்லாத் தெரியும். நம்ம பொன்ஸ் எப்போது பண்ணறதுதானே! :)
தகு- தன்குத்து - தன்னைத்தானெ குத்திக் கொள்(ல்)பவர்.
முகு- முன்குத்து - நேரடியா குத்துபவர்.
பிகு- பின்குத்து - பின்னால் (ஊசியால் இல்லை) குத்துபவர்.
ஆரம்பிச்சிட்டாங்கப்பா தகு வெகு மிகு என ஷார்ட் ஹாண்ட்லே பேச வாலிபர் சங்கத்திலே என்னே மாதிரி அப்புசாமி தாத்தாவும் இருக்கமில்லே
புரியறமாதிரி பேசுங்கப்பா
//உகு,வெகு,தகு,முகு,பிகு//
ஆகுதே மிகுவாய் சாகுமுன் நானிதை சரியாய் அறிவேனோ?
//முதல் இரண்டு தெரியலை.//
தகு- தன்குத்து - தன்னைத்தானெ குத்திக் கொள்(ல்)பவர்.
முகு- முன்குத்து - நேரடியா குத்துபவர்.
//ஆனா இந்த கடைசி நல்லாத் தெரியும்.
நம்ம பொன்ஸ் எப்போது பண்ணறதுதானே//
பிகு- பின்குத்து - பின்னால் (ஊசியால் இல்லை) குத்துபவர்.
ஐயகோ சகோதரி , இப்படி ஆகி போச்சே.
//புரியறமாதிரி பேசுங்கப்பா //
அக்காங்ப்பா! இல்லின்னா மட்டும் நீ பேசுறது புரியுதான்னு கேட்டியானா மட்டும் எனக்கு படா கோவம் வரும். சொல்லிட்டேன்.
//பிகு- பின்குத்து - பின்னால் (ஊசியால் இல்லை) குத்துபவர்.
ஐயகோ சகோதரி , இப்படி ஆகி போச்சே. ///
யோவ் என்ன இப்படிப் போட்டு வாங்கற. அது, நான் இது ஷார்ஹேண்ட்ன்னு தெரியறதுக்கு முன்னாடி அவங்க பிகு பண்ணிப்பாங்க என்ற அர்த்தத்தில் (ஐயோ!ஐயோ)பொருளில் சொன்னது.
பொன்ஸ், நீ இதெல்லாம் கண்டுக்காத போம்மே.
//ஐயகோ சகோதரி , இப்படி ஆகி போச்சே.//
யானை இப்ப வந்து குதிக்கும் பாருங்க.
ஆனா ஆகட்டும். உணர்ச்சி வசப்பட்டு புணர்ச்சி விதிய மறந்துட்டியே பெருசுன்னு.
இப்படி ஆகி+போச்சே = ஆகிப்போச்சே
எவ்வளவு சொல்லிக்குடுத்தாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
யானையைப் புணர்ச்சி விதி பெருசா (அதான் பெருசுக்குத் தெரியலையே, அப்புறம் என்ன?) இல்லை பின்குத்து பெருசான்னு கேட்டா, அது உங்களைத்தான் துரத்தும்.
நான் தப்பிச்சேன். அப்பாடா!
//எவ்வளவு சொல்லிக்குடுத்தாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
//ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//
இப்ப அர்த்தம் தெரியுதா கும்ஸ்.
//இப்ப அர்த்தம் தெரியுதா கும்ஸ். //
அவருக்குப் புரியுதோ இல்லையோ எனக்கு நல்லாப் புரியுதுங்கோஓஓஓஓஓஓஓஓ!
(இது பொன்ஸுக்குப் புரியும்.)
// டார்கெட் 404 என்ன 420யே வேணும்னாலும் போடலாம். :) //
கொத்ஸ், அது என்ன 420???
இதுல எதுவும் உகு, வெகு, தகு, முகு, பிகு இல்லையே??? :)
ஆகா, நான் 200 தான வரும்னு சொன்னேன். கொத்தனார் 242 தொட்டுட்டாரே. பார்த்துக்கிட்டு இருக்கும் போதே பின்னூட்டம் கூடுதே. எவ்வளவு பின்னூட்டம் கொடுத்தாலும் பதில் சொல்றாருய்யா. இவர் ரொம்ப நல்லவரா இருக்காருப்பா.
//கொத்ஸ், அது என்ன 420???
இதுல எதுவும் உகு, வெகு, தகு, முகு, பிகு இல்லையே??? :) //
420 தெரியாதா? தெரிஞ்சவங்க யாராவது சொல்லட்டும்.....
//ஆகா, நான் 200 தான வரும்னு சொன்னேன். கொத்தனார் 242 தொட்டுட்டாரே. பார்த்துக்கிட்டு இருக்கும் போதே பின்னூட்டம் கூடுதே. எவ்வளவு பின்னூட்டம் கொடுத்தாலும் பதில் சொல்றாருய்யா. இவர் ரொம்ப நல்லவரா இருக்காருப்பா. //
கணேசன், எல்லாம் உங்க ராசிதான். இனிமே எல்லாப் பதிவுக்கும் வந்து இரண்டாவது பின்னூட்டம் போடணும். இது என் உத்தரவு. :)
//420 தெரியாதா? தெரிஞ்சவங்க யாராவது சொல்லட்டும்..... //
420 தெரியாமலா??? அதை ஏனுங்க உங்க(பதிவு)ளுக்கு டார்கெட்டா வைக்கறிங்க???
அட என்னங்க வெ.பை.
அதான் பின்னூட்ட கயமைத்தனம் அப்படின்னு எல்லாம் சொல்லறாங்களே. அதான் இந்த நம்பர் பொருத்தமா இருந்தது. அதனாலதான்,.....
இவ்வளவு பின்னூட்டங்களை எப்படிப் படிக்கிறது?
எப்போ படிக்கிரது!
பாராட்டுகள்!
250??!
இவ்வளவு பின்னூட்டங்களை எப்படிப் படிக்கிறது?
எப்போ படிக்கிரது!
பாராட்டுகள்!
250??!
பதிவுகளில் சிக்கி சின்னாப் பின்னமாகிக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பின்னூட்டம் என்னும் அரு மருந்துக் கொடுத்து காத்து வரும் எங்கள் அ.உ.பி.சூ.இ.இ.அ.த அண்ணன் கொத்ஸ்க்கு இந்தப் பின்னூட்ட மாலையை தமிழக பின்னூட்ட நாயகன் கொத்ஸ் ரசிகர் மன்றம் பின்னூட்ட எண் 444498781 சார்பாக அணிவிக்கிறோம்.
பதிவுகளின் பரிணாம வளர்ச்சி பின்னூட்டங்கள் தான் என்பதை அன்றே கண்டறிந்து தமிழ் கூறும் நல்லுகத்திற்கு சொன்ன எங்கள் அ.உ.பி.சூ.இ.இ.அ.த அண்ணன் கொத்ஸ்க்கு இந்தப் பின்னூட்ட மாலையை பாண்டி சீமை பின்னூட்டச் செம்மல் கொத்ஸ் ரசிகர் மன்றம் பின்னூட்ட எண் 446598781 சார்பாக அணிவிக்கிறோம்.
நிலா அக்கா... இவங்க நடத்துற நிலாச் சாரல் பரிணாம வளர்ச்சி கண்டி ஒரு நிலா மழை, நிலா புயல் , நிலா சுனாமின்னு வாசக உலகத்தைத் தாக்கலாம்.
நம்ம ப.ம.க தலைவருக்கு விதவிதமா முகமுடி மாற்றும் சக்தி கிடைச்சா நல்லா இருக்கும். பிரொபைல்ல ஒரே முகமுடி படம் பாத்து போரடிக்குதுண்ணா
நம்ம ஜோசப் சார் டைரி எழுதும் பழக்கம் இருந்தா அந்த டைரி பக்கம் அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்துப் பதிவுலகப் பக்கமா மாறிடணும்... அவருக்குக் கதை எழுதுற டைம் மிச்சமாகும்... சோ அவர் எப்ப வேணுமோ அப்ப அப்ப டைரி எழுதலாம் அது அப்படி அப்படியே அவர் என்னுலகத்திலே போய் உக்காந்துக்கும் எப்படி?
வரப்பு விவசாயின்னு சொல்லிகிட்டு கையிலே கம்ப்யூட்டர் தூக்கிட்டுத் திரியுற பாசமிகு மாப்பூ வேளாண் தமிழனுக்கு தமிழ் நாடு வேளாண் பல்கலைக் கழகம் வரப்புல்ல விதைக்க கவிதை விதையும் அட ஆமாங்க விவசாயி லேப் டாப்ல்ல கீ தட்டுனா விதை வரப்புல்ல விழணும்.. அப்படியே பிரொப்பைல்ல இருக்க டிராக்டரைத் தட்டி விட்டா உழவு நடக்கணும் அப்புறம் கவிதை அப்படியேப் பூத்துக் குலுங்கணும் எப்படி?
நம்ம கலாயத்தல் சித்தன் சிபிக்கு எங்கிட்டாவது யாராவது அப்பிராணி பதிவுப் போட்டா.. உடனே டி.வி ஆன்ட்டனா கணக்கா ரெண்டு கொம்பு முளைக்கும் கலாய்க்க வா.. கலாய்க்க வா..ன்னு சவுண்ட் கேக்கும் அப்படி ஒரு வளர்ச்சி தளபதிக்குக் கிடைச்சா செம தூள்
நம்ம நவீன் பிரகாஷ் அப்படின்னு ஒரு கவிஞர் இருக்காரே ...
அவர் கவிதைன்னா நமக்கு ரொம்ப இஷ்ட்டம்.. அவருக்குப் பாருங்க தாவணி போட்ட புள்ளங்கப் படம்ன்னா அவ்வளவு இஷ்ட்டம். தாவணி போட்டா போட்டு அவர் போடுற கவிதை எல்லாம் நம்ம மனசை அள்ளிட்டுப் போகும் அதுன்னால நெட்ல்ல தாவணி போட்ட படம் இருக்க சைட் பக்கம் எல்லாம் நவீனோடு கவிதையும் முளைச்சா அது பரிணாம வளர்ச்சி இல்லையா
//இவ்வளவு பின்னூட்டங்களை எப்படிப் படிக்கிறது?
எப்போ படிக்கிரது!
பாராட்டுகள்!
250??!//
எஸ்.கே, நீங்கதான் 250. நாந்தான் 420! :)
எப்போ படிக்கறதுன்னு தள்ளிப்போட்டுக் கிட்டு இருந்தீங்கன்னா முடிக்க வேண்டிய காரியம் பெருசாயிக்கிட்டே இருக்கும். அதனால சீக்கிரம் படியுங்க. :)
//பதிவுகளில் சிக்கி சின்னாப் பின்னமாகிக் கொண்டிருந்த தமிழ் மக்களைப் பின்னூட்டம் என்னும் அரு மருந்துக் கொடுத்து//
சூடு தணிக்க சூப்பர் பின்னூட்டம். வலைப்பதிவர்கள் அனைவரும் அணுக வேண்டிய முகவரி - அப்படின்னு நம்ம பதிவு சுட்டியைப் போட்டு எல்லா இடத்திலேயும் போஸ்டர் ஒட்டலாமா?
தேவு ஆக வேண்டியதைக் கவனிப்பா.
// பாண்டி சீமை பின்னூட்டச் செம்மல் கொத்ஸ் ரசிகர் மன்றம் //
தம்பி, பாண்டிச்சீமை. சரியா போடுங்க. இல்லைன்னா யானை வந்து தம்மு தும்முன்னு குதிக்கப் போகுது.
இவ்வளவு பெரிய பொதுக்கூட்டதுக்கு ரெண்டே ரெண்டு மாலையா? என்ன ஆவது? :-X
//நிலா அக்கா... இவங்க நடத்துற நிலாச் சாரல் பரிணாம வளர்ச்சி கண்டி ஒரு நிலா மழை, நிலா புயல் , நிலா சுனாமின்னு வாசக உலகத்தைத் தாக்கலாம். //
முத முறையா ஒரு வலைப்பதிவாளரப் பத்திப் பேசாம ஒரு வலைப்பக்கத்தைப் பத்திப் பேசி நீ என்னைக்குமே வித்தியாசமான ஆளுன்னு நிரூபிச்சுட்டைய்யா.
அது சரி, இந்த பூகம்பம், சுனாமியெல்லாம் வலையுலகம் தாங்குமா?
//நம்ம ப.ம.க தலைவருக்கு விதவிதமா முகமுடி மாற்றும் சக்தி கிடைச்சா நல்லா இருக்கும். பிரொபைல்ல ஒரே முகமுடி படம் பாத்து போரடிக்குதுண்ணா //
தலைவருக்கே வளர்ச்சியா? நல்லா இருக்குப்பா.
தலைவர் முகமூடியை மாத்துங்கன்னு சொன்னா, அவரை மாத்த சொல்லறீங்களா? இல்லை அவரையே மாத்தச் சொல்லறீங்களா? :)
//நம்ம ஜோசப் சார் டைரி எழுதும் பழக்கம் இருந்தா அந்த டைரி பக்கம் அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்துப் பதிவுலகப் பக்கமா மாறிடணும்... //
மீண்டும் ஒரு வித்தியாசமான சிந்தனை. தேவு தம்பி, உன்னைப் பார்த்தா உடம்பு அப்படியே புல்லரிக்குதுப்பா.
டி.பி.ஆர். உங்க கருத்தென்ன? இல்லை இப்போவே எதாவது ஆன்லை ஜெர்னல்தான் எழுதறீங்களா?
//அப்புறம் கவிதை அப்படியேப் பூத்துக் குலுங்கணும் எப்படி? //
ஆஹா. சருக்கிட்டயே தம்பி. அண்ணன் எனக்கு கவிதை என்றால் அலர்ஜி எனத் தெரியாதா? ஹச்சூ. ஹச்சூ.
அவரு பூத்துக் குலுங்கணுமின்னு எதிர்பார்க்கறது கவிதை இல்லைப்பா. கவிதை வெறும் வழிதான் இலக்கு வேற.புரியலைன்னா பாண்டியக் கேளு.
// அப்படி ஒரு வளர்ச்சி தளபதிக்குக் கிடைச்சா செம தூள் //
இப்பவே இதெல்லாம் இருக்காமே. ஆனா கடந்த ரெண்டு மூணு நாளா பேட்டரி காலின்னு கேள்வி.
//நெட்ல்ல தாவணி போட்ட படம் இருக்க சைட் பக்கம் எல்லாம் நவீனோடு கவிதையும் முளைச்சா அது பரிணாம வளர்ச்சி இல்லையா //
என்ன சொன்னாலும் கேட்காம என்ன விளையாட்டு இது? ஹச்சூ! ஹச்சூ!
இரு உன்னை வந்து கவனிச்சுக்கிறேன். ஹச்சூ! ஹச்சூ!
பந்து வீச ஆளே இல்ல.
இது hurt retire ஆகப்போகுது.
ம்ஹூம்..300 தாண்டாது.
//பந்து வீச ஆளே இல்ல.
இது hurt retire ஆகப்போகுது.
ம்ஹூம்..300 தாண்டாது. //
பந்து போட வேண்டிய நீயே ஒரு பக்கமா உக்காந்து காமெண்டரி சொல்லிக்கிட்டு இருக்கே. அப்புறம் நான் என்ன செய்யறது? அடுத்த பதிவு ரெடி ஆகற வரை இப்படியே 1,2 எடுத்து ஓட்ட வேண்டியதுதான்.
//பந்து வீச ஆளே இல்ல.
இது hurt retire ஆகப்போகுது.
ம்ஹூம்..300 தாண்டாது. //
பெருசு, விட்டுவோமா, நாளைக்கு இரண்டு ஷிசிட்டுனு கொத்துஸ்க்கு வாக்கு கொடுத்தாச்சு.
இப்ப இருக்குற நேரத்த வச்சி கொஞ்சம் ஒவர் டைம் பாக்குறேன்
//வெட்டியா கேள்விக் கேக்கறவனுக்கு பதில் சொன்னா சொல்றவங்களும் வெட்டி தானே :-))//
பாத்தியா வெட்டி, உன் சந்தேகத்த தீர்க்கலாம் பாத்த, நம்மளையும் வெட்டினு சொல்லிட்ட. பரவாயில்ல விடு., உண்மைய தானே சொல்லி இருக்க. :)))
//மொத்தப் பின்னூட்டமான 174ல் 78 பின்னூட்டத்தை பதிவாளரே போட்டு சாதனை படைத்திருக்கிறார்.//
கொத்தஸ், என்னா இது, என்னா இதுனு கேட்டேன். இப்படி போன எப்படி நம்ம டார்கெட்டை அடைவது. 174ல் 78க்கு தான் பதில் சொல்லி இருக்கிங்க. பாக்கி 18 ட அநியாமா கோட்டை விட்டுடீங்களே.
//கொஞ்ச நேரத்திலே நான் மாடுபிடிக்க திருவிழாக்கு போறேன். அப்புறம் திங்கட்கிழமை தான். //
ஆஹா, நம்ம கால்கரி அண்ணன், நம் மண்ணின் பெருமையை கால்கரியில் நிறுவும் திருநாளா இன்று.
சங்கத்தின் சார்பாகவும், இந்த தம்பியின் சார்பாகவும் வாழ்த்துக்கள் கால்கரியாரே!
அப்புறம் ஒரு முக்கியமான மேட்டரு, பாட்டு பாடி மாட்ட அடக்குற ஐடியா இருந்தா தமிழ் பாட்ட பாடா, அந்த மாடு எந்த நாட்டில் வந்து இருக்குனு பாத்து அந்த மொழியில் பாடி அசத்துங்க......
மாடு முட்ட வந்தாலும் நெஞ்சை காட்டி மறத் தமிழன் என்று நிருபியுங்கள். முதுகில் விழுப்புண் விழக் கூடாது அதான் முக்கியம்
//பந்து வீச ஆளே இல்ல.
இது hurt retire ஆகப்போகுது.
ம்ஹூம்..300 தாண்டாது. //
நான் இன்னும் வரவே இல்லை. அதுக்குள்ள யாரு இப்படி ஒரு முடிவெடுத்தது?
//சூரியன் மறைந்த பின் ஆந்தை மாதிரி இரவு வாழ் உயிரினமாகவும் மாறினால் 24 மணி நேரமும் இணையத்தில் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கலாம்//
அப்போ நாமக்கல்லார்ங்கற பேரை ஆந்தையார்னு மாத்திடப்போறாங்க!
பாலசந்திரன் கணேசன்: முதல்ல இவரு போட்டுகிட்டிருந்த பதிவெல்லாம் பார்த்தா சில சமயம் பதிவு போட்டிருக்காரா இல்லை அது பின்னூட்டமான்னு ஒரு சந்தேகம் வரும்.
அப்படியே போயிகிட்டிருந்தா ஒரே ஒரு ஸ்மைலியை போட்டுட்டு ஒரு பதிவுன்னு சொன்னாலும் சொல்லுவாருங்க!
(இனிய நண்பர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்)
வ.வா.சங்கத்தின் 50 பதிவை வழங்கிச் சிறப்பித்த கொத்தனாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.
//ஆனா நடு மண்டையிலே ஒத்த முடி நின்னா உஷாராயிடுங்க //
கொத்தனாரே! அப்படித்தான் நிக்குதா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!
//இவர் சாதனையை முறியடிக்க இனிமேல் யாராச்சும் புதுசா ____________ தான் வரனும். //
//இந்த மாதிரி எல்லாம் ஓப்பனா விடாதப்பா. விஷயம் என்னன்னு சொல்லிடு.//
ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு பதிவு ஆரம்பிச்சு தான் வரணும்.
//நான் இன்னும் வரவே இல்லை. அதுக்குள்ள யாரு இப்படி ஒரு முடிவெடுத்தது? //
வாங்க தளபதி, வாங்க
இரண்டு பெயரும் சேர்ந்து அடிச்சு ஆடுவோம் வாங்க.
//சிவா, சூடான் இல்லைய்யா சூடாம். அவசரத்துல தப்பு தப்பா படிச்சிட்டு நீர் அடிக்கிற லொள்ளு தாங்கலை)//
நானும் முதல தப்பா சூடான் நினைச்சிட்டு சூடாயிட்டேன் அப்பறம் சூடா ஒரு டீய குடிச்சுட்டு கூல் ஆயிட்டேன்.
அது சரி, தப்பு தப்பா படிச்சிட்டு நான் எப்ப லொள்ளு பண்ணினேன். இது புது கதையால இருக்கு.
//முதல்ல இவரு போட்டுகிட்டிருந்த பதிவெல்லாம் பார்த்தா சில சமயம் பதிவு போட்டிருக்காரா இல்லை அது பின்னூட்டமான்னு ஒரு சந்தேகம் வரும்.//
தளபதியாரே இப்ப போயி பாருங்க, மிக நீளமான பதிவை போட்டு உள்ளார். (நீளம் அவரை பொருத்த வரை மீக நீளம்)
//தளபதியாரே இப்ப போயி பாருங்க, மிக நீளமான பதிவை போட்டு உள்ளார்//
அதைப் பார்த்துட்டுதான வந்தோம்!
//174ல் 78க்கு தான் பதில் சொல்லி இருக்கிங்க. பாக்கி 18 ட அநியாமா கோட்டை விட்டுடீங்களே.
//
கொத்தனார் 174க்கும் பதில் சொல்வார்.
அவசரப் படாதீங்க நாகையாரே!
என்ன கொத்தனாரே நான் சொல்றது சரிதான?
உங்களை நம்பி பந்தயம் கட்டுறேன்.
என்ன நாகையாரே நான் ரெடி? அப்போ நீங்க?
சங்கத்து பசங்க அடங்க மாட்டீங்க போலிருக்கே!
எனிவே 50 அடிச்சாச்சா?
வாழ்த்துக்கள்!
//நான் இன்னும் வரவே இல்லை. அதுக்குள்ள யாரு இப்படி ஒரு முடிவெடுத்தது?
//
இவரு எப்பவுமே 49/99/149/199/249/299/349/399 டைம்ல வந்து என்னவோ 100 அடிக்கற பேட்ஸ்மேன் மாதிரி ஒரு போஸ் வேற கொடுப்பாரு!
அட! அதென்ன கொத்தனார் இந்த சங்கத்துல!
என்னய்யா ஆச்சு உமக்கு?
//கொத்தனார் 174க்கும் பதில் சொல்வார்.
அவசரப் படாதீங்க நாகையாரே! //
பின்னே! கொத்தனாரா கொக்கா?
(ஏதோ நம்மளால முடிஞ்சது)
//நம்ம கலாயத்தல் சித்தன் சிபிக்கு எங்கிட்டாவது யாராவது அப்பிராணி பதிவுப் போட்டா.. உடனே டி.வி ஆன்ட்டனா கணக்கா ரெண்டு கொம்பு முளைக்கும் கலாய்க்க வா.. கலாய்க்க வா..ன்னு சவுண்ட் கேக்கும் அப்படி ஒரு வளர்ச்சி தளபதிக்குக் கிடைச்சா செம தூள் //
:)
அப்படி கலாய்க்கப் போயிதான் மூணு நாளா உங்க தளபதிக்கு செம அடியாமே!
//பாத்தியா வெட்டி, உன் சந்தேகத்த தீர்க்கலாம் பாத்த, நம்மளையும் வெட்டினு சொல்லிட்ட. பரவாயில்ல விடு., உண்மைய தானே சொல்லி இருக்க. //
என்ன! நாகையாரே நம்மளையா சொல்றீங்க?
//பந்து வீச ஆளே இல்ல.
இது hurt retire ஆகப்போகுது.
ம்ஹூம்..300 தாண்டாது.//
அது எப்படி விட்டுடுவோமா???
இன்னிங்ஸ் இன்னும் போயிட்டுதான் இருக்கு.
/
/
அப்படி கலாய்க்கப் போயிதான் மூணு நாளா உங்க தளபதிக்கு செம அடியாமே!
/
எங்களுக்காவது அடியாவது தளபதி சிங்கமுல___________:)
என்ன பேச்சியிது சின்னபுள்ளதனமா
//அப்படி கலாய்க்கப் போயிதான் மூணு நாளா உங்க தளபதிக்கு செம அடியாமே! //
வந்துட்டார்யா பச்சைக் குதிரைக்காரர்!
சங்கத்து ஆளுகளுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா உடனே கொண்டாட்டமா கிளம்பீருவாரே!
"பரிணாம வளர்ச்சினு தலைப்பு கொடுத்துட்டு அதபத்தி பேசலனா எப்படி ?
//எங்களுக்காவது அடியாவது தளபதி சிங்கமுல___________:)
//
மின்னல்,
நன்றி சொல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
(ஆமா அதென்ன ஒரு பெரிய டேஷ்! ஏதுக் காமெடி கீமெடி இல்லையே?)
//எனிவே 50 அடிச்சாச்சா?
வாழ்த்துக்கள்!
//
அப்பப்போ நல்ல பயலாத்தான் இருக்கே! இருந்தாலும் உம்மைப் பார்த்தால் தலைக்கு கொஞ்சம் அலர்ஜிதான்.
////நம்ம கலாயத்தல் சித்தன் சிபிக்கு எங்கிட்டாவது யாராவது அப்பிராணி பதிவுப் போட்டா.. உடனே டி.வி ஆன்ட்டனா கணக்கா ரெண்டு கொம்பு முளைக்கும் கலாய்க்க வா.. கலாய்க்க வா..ன்னு சவுண்ட் கேக்கும் அப்படி ஒரு வளர்ச்சி தளபதிக்குக் கிடைச்சா செம தூள் //
இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அங்கங்கே போயி ரெண்டு கமெண்டு போட்டு வெச்சி அப்புறமா வாங்கிக் கட்டிக்கறதும் எனக்குத்தான தெரியும்.
"பரிணாம வளர்ச்சி"யில் நம்ம நாமக்கல்லாருக்கு வயிதுல ரெண்டு மூனு பையி வந்து அதுல டெய்லி 10,000 முட்டை உற்பத்தி ஆச்சினா ஒரு பண்ணையே வச்சி பெரிய பிசினஸ் பன்னலாம் ::))))))))))
"வெ பை" 300 இப்ப ஒகே வா
//சிரிங்கப்பூ சிரிங்க. நல்லா சிரிங்க. //
நல்லா சிரிங்க! உங்களையெல்லாம் நல்லா சிரிக்க வைக்கத்தான் ஒரு சாமியார் கிளம்பியிருக்காராமே?
எப்படியோ 300 அடிச்சிட்டோம்ல!
அப்ப நாந்தான் 301ஆ?
//அப்ப நாந்தான் 301ஆ? //
299
ஏன் இப்படி அவசரபடுரீங்க நாங்க இருக்கமுல 300 போட...::::)
//பரிணாம வளர்ச்சி"யில் நம்ம நாமக்கல்லாருக்கு வயிதுல ரெண்டு மூனு பையி வந்து அதுல டெய்லி 10,000 முட்டை உற்பத்தி ஆச்சினா ஒரு பண்ணையே வச்சி பெரிய பிசினஸ் பன்னலாம் //
எவனாவது தங்க முட்டைன்னு நினைச்சு என்னை அறுத்தறப் போறான்? :((((((((
//வெ பை" 300 இப்ப ஒகே வா//
மின்னல்,
டார்கெட் 420யாச்சே!!! பாக்கலையா?
//
எவனாவது தங்க முட்டைன்னு நினைச்சு என்னை அறுத்தறப் போறான்? :
//
சங்கத்துல உள்ள எங்க ஆளு மேல கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கு??
(எலே பார்த்திபா அறுத்து பாருல ::))))
//சங்கத்துல உள்ள எங்க ஆளு மேல கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கு??
(எலே பார்த்திபா அறுத்து பாருல ::))))
//
தம்பி மின்னல்,
தலை இல்லை என்பதற்காக தளைக்கெல்லாம் டைவர்ட் செய்யக் கூடாது.
அட்லாஸ் வாலிபரை எதுக்கு கூப்பிட்டிருக்கோம்?
//டார்கெட் 420யாச்சே!!! //
ஆயிரம் பின்னூட்டம் பெற்ற அபூர்வ சிகாமணி என்ற பட்டத்தை வழங்கலாம் என்று நான் எண்ணி இருந்தேன்.
நீங்க என்னடான்னா? 420 ஆ?
வேதனை வேதனை!
//
அட்லாஸ் வாலிபரை எதுக்கு கூப்பிட்டிருக்கோம்?
//
யாருமே ஒன்னும் செய்யல இதுவரைக்கும்....
ம்ம்.......
பாக்கலாம் 1000 வருமுல அப்பயாவது இ கோ வை எதாவது செய்யனும்..
//நீங்க என்னடான்னா? 420 ஆ? //
தளபதியாரே!!! இது நான் வெச்ச டார்கெட் இல்ல..
கொத்ஸ் வெச்ச டார்கெட்.
அதுக்கு தகுந்த மாதிரி எதாவது பட்டம் கொடுங்க :-))
//கொத்ஸ் வெச்ச டார்கெட்//
அட! அவரு தன்னடக்கத்தோட அப்படித்தான் சொல்வாரு! நாம அப்படியே விட்டு விடுவதாவது?
//யாருமே ஒன்னும் செய்யல இதுவரைக்கும்....
//
அதான் நாம வந்துட்டம்ல!
300 (வது) பின்னுட்டம் இட்ட தளபதி வாழ்க !!!!!!!!
//300 (வது) பின்னுட்டம் இட்ட தளபதி வாழ்க !!!!!!!! //
சங்கத்தில் பதிவெழுதி என்னை 300 வது பின்னூட்டம் இட வைத்த கொத்தனார் வாழ்க!
(ஆரம்பிச்சிட்டம்ல)
இ.கொ. வுக்கு இரண்டு பரிணாம வளர்ச்சி:
இலவசக் கொத்தனார்: (1) இவர் யாரையாவது பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைத்தவுடன் அவர்கள் வந்து தாமே பின்னூட்டம் இடுவார்கள். அவர்கள் இட்டால் தானே இவர் இன்னும் கொத்த முடியும். (2) யாரும் பின்னூட்டம் இட்டவுடனே, "வேலை இருந்தது, அதனால் பிஸி" என்று சொல்ல தேவையில்லாமல், தானாகவே, இ.கொ. வின் கண்ணுக்குள் புதிய பின்னூட்ட வரிகள் ஓடும் (இ.கொ. வின் மானேஜருக்கு தமிழ் படிக்க தெரிந்தால் இன்னும் நல்லது:-)
//பெருசு, விட்டுவோமா, நாளைக்கு இரண்டு ஷிசிட்டுனு கொத்துஸ்க்கு வாக்கு கொடுத்தாச்சு.
இப்ப இருக்குற நேரத்த வச்சி கொஞ்சம் ஒவர் டைம் பாக்குறேன் //
சிவா, நீங்க பாத்த ஓவட்டைமிலேயே 300 வந்தாச்சு. நாளைக்கு ரெகுலர் ஷிப்ட்டில் எங்க போயி நிக்குதுன்னு பார்க்கலாம். :)
//பாத்தியா வெட்டி, உன் சந்தேகத்த தீர்க்கலாம் பாத்த, நம்மளையும் வெட்டினு சொல்லிட்ட. பரவாயில்ல விடு., உண்மைய தானே சொல்லி இருக்க. :))) //
வெட்டி கேட்ட கேள்விக்கு வெட்டி பதில் நீங்க தந்தீங்க. இதுதான் வெட்டிப் பேச்சா? இத அப்படியே எக்ஸ்டெண்ட் பண்ணி மரம் வெட்டியா ஆகாம இருந்தா சரி. :)
//174ல் 78க்கு தான் பதில் சொல்லி இருக்கிங்க. பாக்கி 18 ட அநியாமா கோட்டை விட்டுடீங்களே. //
இதென்ன கணக்கு? புரியலையே. கொஞ்சம் சொல்லுங்கப்பா.....
//மாடு முட்ட வந்தாலும் நெஞ்சை காட்டி மறத் தமிழன் என்று நிருபியுங்கள். முதுகில் விழுப்புண் விழக் கூடாது அதான் முக்கியம் //
சிவா டு சிவா. இதுல நடுவில நான் என்ன சொல்லறது?
என்ன ஆச்சுன்னு கரெக்ட்டா பதிவு போடுங்கப்பா.
//நான் இன்னும் வரவே இல்லை. அதுக்குள்ள யாரு இப்படி ஒரு முடிவெடுத்தது? //
வந்துட்டாருப்பா சங்அத்தின் கும்ப்ளே. இனி ஆட்டம் எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்.
//அப்போ நாமக்கல்லார்ங்கற பேரை ஆந்தையார்னு மாத்திடப்போறாங்க! //
மாத்திடலாம். சங்கத் தளபதி ஆந்தையார் வாழ்க.
//மாத்திடலாம். சங்கத் தளபதி ஆந்தையார் வாழ்க.//\\
தளபதி நம்மளுக்கும் சின்னம் ரெடி ஆயிடிச்சி போல.. கலாய்த்தல் தளத்துல எப்ப சின்னத்தை போட போறீங்க..
//நெட்ல்ல தாவணி போட்ட படம் இருக்க சைட் பக்கம் எல்லாம் நவீனோடு கவிதையும் முளைச்சா அது பரிணாம வளர்ச்சி இல்லையா //
நல்ல வளர்ச்சிதான் தேவ்!:))
என்னங்க தேவ் நானும் என் கவிதையும் ஏதோ ஒரு மூலையில் அமைதியா இருக்கோம் ! என்னையப் போய் வம்புக்கு இழுக்கறீங்களே!! :))
ilavasa koththanar posted 133 comments
//300 (வது) பின்னுட்டம் இட்ட தளபதி வாழ்க !!!!!!!! //
சங்கத்தில் பதிவெழுதி என்னை 300 வது பின்னூட்டம் இட வைத்த கொத்தனார் வாழ்க! //
வாழ்க! வாழ்க!
சங்கத்தின் சிங்கங்கள் வாழ்க!
( நாங்களும் ஆரம்பிச்சிட்டம்ல)
//இவரு எப்பவுமே 49/99/149/199/249/299/349/399 டைம்ல வந்து என்னவோ 100 அடிக்கற பேட்ஸ்மேன் மாதிரி ஒரு போஸ் வேற கொடுப்பாரு!//
பாத்தி அதுக்கும் ஒரு கெத்து வேணுமுல, உன்னால முடியுமா, ஒரு ரன் எடுத்துட்டு இப்படி ஒரு போஸ் கொடுக்க. ?
//சங்கத்து பசங்க அடங்க மாட்டீங்க போலிருக்கே//
ஹே... இப்ப தான் ஆட்டத்தே ஆரம்பிச்சு இருக்கோம், அதுக்குள்ள அடங்க சொன்னா எப்படி.
அப்படி ஒரமா நின்று வேடிக்கை பாருய்யா என் வென்று.
அப்படியும் கேட்காம நடுவுல வந்தால் கில்லி உன்ன கிள்ளாம போகாது.
////174ல் 78க்கு தான் பதில் சொல்லி இருக்கிங்க. பாக்கி 18 ட அநியாமா கோட்டை விட்டுடீங்களே. //
இதென்ன கணக்கு? புரியலையே. கொஞ்சம் சொல்லுங்கப்பா.....//
நீங்க 174ல் 78க்கு பின்னூட்டம் இட்டதாக ஒரு நல்லவரு கணக்கு எடுத்து சொல்லி இருக்காரு.
நம்ம கணக்குப்படி
78 x 2 = 156 பின்னூட்டம் தான் இருக்கனும்.
174 - 156 = 18. அப்ப நீங்க இந்த 18க்கு பதில் சொல்ல. அது ஏன்?
//சிவா டு சிவா. இதுல நடுவில நான் என்ன சொல்லறது?
என்ன ஆச்சுன்னு கரெக்ட்டா பதிவு போடுங்கப்பா.//
என்கிட்ட போன்ல ஆலோசனை கேட்க்கும் போது, மாட்ட புடிச்சுட்டு வந்து வெற்றிகரமாக பதிவ போடுங்க சொல்லி இருக்கேன். போடுவார்.
//மாத்திடலாம். சங்கத் தளபதி ஆந்தையார் வாழ்க.//
சங்கத் தளபதி ஆந்தையார் வாழ்க வாழ்க
//அப்படியே போயிகிட்டிருந்தா ஒரே ஒரு ஸ்மைலியை போட்டுட்டு ஒரு பதிவுன்னு சொன்னாலும் சொல்லுவாருங்க!//
ஏன் சிபி, அவரு ஒரு பிரேக் எடுத்துக்கிட்டு வந்த பின் இதெல்லாம் பண்ணறது இல்லையே. இன்னும் அவரைக் கலாய்ச்சுகிட்டு.
ஆனா உங்க ஐடியா நல்லா இருக்கே. ஒரு நாள் செய்வோம்!
//வ.வா.சங்கத்தின் 50 பதிவை வழங்கிச் சிறப்பித்த கொத்தனாருக்கு வாழ்த்துக்களும் நன்றியும். //
நன்றி.
இப்படித் தனித் தனியா நன்றி சொல்ல வைக்கறீங்களே. போலீஸ் வரப்போறாங்க.:)
//கொத்தனாரே! அப்படித்தான் நிக்குதா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்க! //
ஆண்டவந்தான் அந்த இடத்தைத் தரிசாப் போட்டுட்டானே. அங்க பார்த்தா என் மூஞ்சிதான் தெரியுது. :)
//ஒரு கூட்டத்தை சேர்த்துக்கிட்டு பதிவு ஆரம்பிச்சு தான் வரணும். //
என்ன சிவா,இப்படி ஐடியாவெல்லாம் பப்ளிக்கா சொல்லிக்கிட்டு. ஏற்கனெவே இங்க கூட்டமெல்லாம் சேர்த்துட்டாங்க. அவங்க போட்டியா வந்தா நாமெல்லாம் என்ன பண்ணறது?
//என்னங்க தேவ் நானும் என் கவிதையும் ஏதோ ஒரு மூலையில் அமைதியா இருக்கோம் ! என்னையப் போய் வம்புக்கு இழுக்கறீங்களே! :))//
பங்காளி சந்தோஷ், கார்த்திக், இங்க பாருங்கப்பா, நானும் என் கவிதையும் சொல்லுறாரு. நம்ம கவிதையானு சீக்கிரம் போயி பாருங்கப்பா.
கண்ண இமைக்க விட மாட்டேங்குறாங்களே!!! சீக்கிரம் வந்து நல்ல செய்திய சொல்லி என் வயித்துல பால வாருக்கப்பா
//வாங்க தளபதி, வாங்க
இரண்டு பெயரும் சேர்ந்து அடிச்சு ஆடுவோம் வாங்க. //
இது சரி. இப்போ போன கமெண்ட் பத்தி இருந்த கவலை இல்லை. நீங்க இருக்கீங்க, நம்ம் ஆந்தை இருக்காரு, தம்பி தேவு இருக்காரு. நமக்கென்ன கவலை?
//அது சரி, தப்பு தப்பா படிச்சிட்டு நான் எப்ப லொள்ளு பண்ணினேன். இது புது கதையால இருக்கு. //
அப்படி எல்லாம் நடக்கும்ன்னு ஒரு யூகம்தாம்பா! முதல் தடவை தப்பாத்தானே படிச்சீங்க?
//ilavasa koththanar posted 133 comments//
யப்பா மகேந்! இருப்பா அந்த 18 பின்னூட்டம் பிரச்சனையே இன்னும் முடியல.
நீ சொல்வதை வைத்து பாத்தால்
133 x 2 = 266
331 - 266 = 65 கோவிந்தாவா....
கொத்துஸ், கவனிக்கவும்.....
//தளபதியாரே இப்ப போயி பாருங்க, மிக நீளமான பதிவை போட்டு உள்ளார். (நீளம் அவரை பொருத்த வரை மீக நீளம்) //
சிவா, நம்ம பதிவுல வந்து பின்னூட்டம் போட ஆரம்பிச்சுட்டாருன்னுதான் நாம அவரை நாம சப்போர்ட் பண்ணறோமாமே. ஊரில் பேசிக்கறாங்க. அதெல்லாம் இல்லை. நாம நடுநிலமைவியாதின்னு ஒரு அறிக்கை விடுமப்பா.
//அப்படி எல்லாம் நடக்கும்ன்னு ஒரு யூகம்தாம்பா! //
இதுக்கு பெயர் தான் போட்டு வாங்குறது. நல்லா இருங்க சாமி, நல்லாவே இருங்க
:))))
//அதைப் பார்த்துட்டுதான வந்தோம்! //
(தல ஸ்டைலில் படிக்கவும்)
என்னாது? பாத்துட்ட்டு வந்தீங்களா? என்னாப்பா இது? போனோம் பாத்தோம் வந்தோமுன்னு இருக்க நாமெல்லாம் என்ன இளிச்ச வாயங்களா? கடமயச் செய்யுங்கப்பா.....
//ஒரு ரன் எடுத்துட்டு இப்படி ஒரு போஸ் கொடுக்க//
பார்த்திக்கு சவால் விடுற சாக்குல நம்மளை சொல்றீங்களா (ஒரு ரன் எடுத்துட்டு போஸ் கொடுப்பேன்னு)
நாகையாரே?
//கொத்தனார் 174க்கும் பதில் சொல்வார்.
அவசரப் படாதீங்க நாகையாரே!
என்ன கொத்தனாரே நான் சொல்றது சரிதான?
உங்களை நம்பி பந்தயம் கட்டுறேன்.
என்ன நாகையாரே நான் ரெடி? அப்போ நீங்க? //
வீடு தேடி வந்து பேசறவங்களுக்குப் பதில் சொல்லாமலேயாப் போவோம்? சொல்லுவோம். இதுக்கெல்லாமா பந்தயம்?
//சங்கத்து பசங்க அடங்க மாட்டீங்க போலிருக்கே!
எனிவே 50 அடிச்சாச்சா?
வாழ்த்துக்கள்! //
அதுக்குத்தானே நம்மள எல்லாம் கூப்பிடறாங்க! :)
//இவரு எப்பவுமே 49/99/149/199/249/299/349/399 டைம்ல வந்து என்னவோ 100 அடிக்கற பேட்ஸ்மேன் மாதிரி ஒரு போஸ் வேற கொடுப்பாரு! //
சரி சரி. கொஞ்சம் அடங்குங்க. ஏற்கனவே அவங்க 48 போட்டாங்களாம், நாம வந்து ஒரு ரெண்டு பதிவு போட்டுட்டு போஸ் குடுக்கறோமுன்னு பேசறாங்க. நீங்க வேற ஏத்தி விட்டுக்கிட்டு.
//அந்தப் பதிவருக்கு ஒரு எக்ஸ்ரே கண்ணு வளர்ந்தா வசதியா இருக்கும்.. யார் யாருக்கு மூளை இருக்கு, யார் யாருக்கு இல்லைன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்சிக்குவாரு.. //
//அட! அதென்ன கொத்தனார் இந்த சங்கத்துல!
என்னய்யா ஆச்சு உமக்கு? //
பார்த்தி, மேல நம்ம பினாத்தலாருக்கு சொன்ன பதில்தான் உமக்கும். படியிங்கப்பா.
//பின்னே! கொத்தனாரா கொக்கா?
(ஏதோ நம்மளால முடிஞ்சது)
//
ஏம்பா, ஏற்கனவே அங்க ஒருத்தர் கொக்கு, காடை, கவுதாரின்னு காத்துக் கிட்டு இருக்காரு. நம்ம காலையும் கடிக்கப் போறாரு. சும்மா அடங்கப்பா.
//அப்படி கலாய்க்கப் போயிதான் மூணு நாளா உங்க தளபதிக்கு செம அடியாமே! //
பார்த்தி, அது வேற மேட்டரு. அடுத்தப் பதிவில் சொல்லறேன். ;)
//என்ன! நாகையாரே நம்மளையா சொல்றீங்க?//
ஆமாம். ஆமாம். உங்களையுந்தான் சொல்லறாரு. :D
(வந்து பதில் சொன்னா ஒரு 10 ஆச்சு!)
//நம்ம காலையும் கடிக்கப் போறாரு. சும்மா அடங்கப்பா.//
அவருக்கு லெக் பீஸ்னா ரொம்ப பிடிக்குமாம்.
//அது எப்படி விட்டுடுவோமா???
இன்னிங்ஸ் இன்னும் போயிட்டுதான் இருக்கு. //
தாங்கஸ், வெ.பை. இந்த இன்னிங்கஸ் போயிக்கிட்டே இருக்க பந்து போடும் எல்லாருக்குமே நன்றிதான். (போலீஸ், போலீஸ் - எல்லாம் ஓடுங்க)
//எங்களுக்காவது அடியாவது தளபதி சிங்கமுல___________:)
என்ன பேச்சியிது சின்னபுள்ளதனமா //
அதானே அடிக்கு முன்னாடியே வெள்ளைக் கொடிக்கு வேலை வந்திருமே. அப்புறம் எங்க அடி? சரிதானே?
//வந்துட்டார்யா பச்சைக் குதிரைக்காரர்!
சங்கத்து ஆளுகளுக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா உடனே கொண்டாட்டமா கிளம்பீருவாரே! //
இப்போ என்ன? அவரு நல்லத்தனமாத்தானே சொல்லியிருக்காரு.
//"பரிணாம வளர்ச்சினு தலைப்பு கொடுத்துட்டு அதபத்தி பேசலனா எப்படி ? //
பேசுங்க. பேசுங்க. அதப் பத்திப் பேசலைன்னுதானே நம்ம அழுகையே. ஔஊஊஊஊஊ (ஏங்க இது அழுகை மாதிரியே இல்லை. ஊளை மாதிரி இருக்கு. அவ்வ்வ்வ்வ்ன்னே வெச்சுக்கலாமா? கும்ஸ், ப்ளீஸ் தயவு பண்ணுங்களேன். )
// நாம நடுநிலமைவியாதின்னு ஒரு அறிக்கை விடுமப்பா. //
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் எங்கள் பதிவில் வந்து பின்னூட்டம் இடும் ஒரே காரணத்துக்காக நாங்க யாரையும் எப்பவும் தூக்கி விடவோ, சப்போட்டு பண்ணவோ மாட்டோம். நாங்கள் எல்லாம் எப்பவுமே நடுநிலமைவியாதிகள் தான். நம்மளை பற்றி இது போன்ற வதந்திகளை பரப்புவது அந்நிய நாட்டின் சதி வேலையாக இருக்கும் என்று சந்தேகப்படுகின்றோம். உண்மை தெரியும் வரை சங்கத்து சிங்கங்கள் எல்லாம் அமைதியா இருக்கும்படி அண்ணன் கொத்துஸின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
//அதானே அடிக்கு முன்னாடியே வெள்ளைக் கொடிக்கு வேலை வந்திருமே. அப்புறம் எங்க அடி? சரிதானே?
//
வெள்ளைக் கொடியேந்தி வெள்ளை மனசோட எங்க தலை போடும் குத்தாட்டம் பார்த்திருக்கீங்களா கொத்தனாரே!
அப்படியே எதிரிக்கும் மனசு நெகிழ்ந்து போயி குழந்தை மனசோட அவங்களும் குத்தாட்டத்துல ஐக்கியமாயிடுவாங்க!
(இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து கோச்சிங்க் கொடுத்தது நம்ம போர்வாள்தான்)
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........
(ஆமா அதென்ன ஒரு பெரிய டேஷ்! ஏதுக் காமெடி கீமெடி இல்லையே?) //
ஆந்தை, முதலில் ஒழுங்க அழக் கத்துக்கோ. அதுக்கு வேற தனிப்போலீஸு வருதாம்.
அதுல காமெடி இல்லாம இருக்குமா?
//அப்பப்போ நல்ல பயலாத்தான் இருக்கே! இருந்தாலும் உம்மைப் பார்த்தால் தலைக்கு கொஞ்சம் அலர்ஜிதான். //
நான் சொல்லறேனில்ல. அவரு நல்லவரு, வல்லவரு. என்ன தலயப் பார்த்தா மட்டும் கொம்பு வளருது...
//இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி அங்கங்கே போயி ரெண்டு கமெண்டு போட்டு வெச்சி அப்புறமா வாங்கிக் கட்டிக்கறதும் எனக்குத்தான தெரியும்.
//
சொன்னாத்தானே எங்களுக்கு தெரியும். அதெல்லாம் வந்து இங்க பின்னூட்டத்திலேயே சொல்லுங்க பார்க்கலாம்.
//"பரிணாம வளர்ச்சி"யில் நம்ம நாமக்கல்லாருக்கு வயிதுல ரெண்டு மூனு பையி வந்து அதுல டெய்லி 10,000 முட்டை உற்பத்தி ஆச்சினா ஒரு பண்ணையே வச்சி பெரிய பிசினஸ் பன்னலாம் ::)))))))))) //
ஆனா பறவைக் காய்ச்சல் வந்தா இவரைப் போட்டு இல்ல தள்ளணும்?? வேணாப்பா. அவரு பாவம்.
//"வெ பை" 300 இப்ப ஒகே வா //
மின்னல், ரிவைஸ்ட் டார்கெட் பாக்கலையா?
//நல்லா சிரிங்க! உங்களையெல்லாம் நல்லா சிரிக்க வைக்கத்தான் ஒரு சாமியார் கிளம்பியிருக்காராமே? //
சாமியாருன்னா பின்னாடியே போலிஸ் வேற வரும். அதுவும் சிரிக்க வைக்கத்தானா?
சொன்ன மாதீயே வந்து கலக்குறீங்களே, சிபியாரே!
'இவரு வந்குட்டாருல்ல; இனிமே கலக்கல்தான்!'
ஆயிரம் ஆயிரும்!
//எப்படியோ 300 அடிச்சிட்டோம்ல!
அப்ப நாந்தான் 301ஆ? //
அது எண்ணற ஆளு இன்னும் வரலை. ஆனா நீர்தான் 420. அதை நானே சொல்லுவேன்!
//ஏன் இப்படி அவசரபடுரீங்க நாங்க இருக்கமுல 300 போட...::::) //
முன் நூறு போட்ட இருவர் இருக்க முன்னூறு போட நீங்கள் இருக்க நானூறுக்கா நான் அஞ்சப்போகிறேன்..
//பார்த்திக்கு சவால் விடுற சாக்குல நம்மளை சொல்றீங்களா (ஒரு ரன் எடுத்துட்டு போஸ் கொடுப்பேன்னு)
நாகையாரே? //
தளபதி!
ஒரு நல்லவனை பாத்து இப்படி அநியாயமாக சந்தேப்படாதீர்கள், அவ்வளவு தான் சொல்வேன்.
//ஆனா பறவைக் காய்ச்சல் வந்தா இவரைப் போட்டு இல்ல தள்ளணும்?? வேணாப்பா. அவரு பாவம். //
இதுக்கு என்ன சொல்ல போறீங்க. உங்கள போட்டுத் தள்ளுறதுக்கே இங்க பிளான் போடுறாங்க...
//எவனாவது தங்க முட்டைன்னு நினைச்சு என்னை அறுத்தறப் போறான்? :(((((((( //
தங்க முட்டை போடற வாத்தை (ஆந்தையை?) யாராவது அறுப்பாங்களா?
//மின்னல்,
டார்கெட் 420யாச்சே!!! பாக்கலையா? //
தற்போதைய டார்கெட் எனச் சொல்லாத தளபதியை மென்மையாக கண்டிக்கிறேன்.
//சங்கத்துல உள்ள எங்க ஆளு மேல கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கு??
(எலே பார்த்திபா அறுத்து பாருல ::)))) //
பிளான் போடறாங்கப்பா. என்ன போலீஸ் இதை எல்லாம் வந்து பாக்காம....
//அட்லாஸ் வாலிபரை எதுக்கு கூப்பிட்டிருக்கோம்? //
நாங்க எடுத்துக் குடுக்க மட்டும்தான். வாங்கிக்கிறது எல்லாம் சங்க மெம்பர்ஸ் வேலை...
//அது எண்ணற ஆளு இன்னும் வரலை. ஆனா நீர்தான் 420. அதை நானே சொல்லுவேன்! //
போலிஸ்க்கா, போலிஸ்க்கா 420யை கண்டுப்பிடிச்சாச்சு. வந்து அள்ளிகுனு போங்க.
:))))
//நீங்க என்னடான்னா? 420 ஆ?
வேதனை வேதனை! //
மீண்டும் சொல்கிறேன். அது தற்போதைய டார்கெட். அடுத்த டார்கெட் விரைவில் வரும்.
//பாக்கலாம் 1000 வருமுல அப்பயாவது இ கோ வை எதாவது செய்யனும்.. //
என்னாது? இ.கோவிற்கு எதாவது செய்யணுமா? இல்லை இ.கோவையேவா? மேல ஆந்தைக்கு சொன்னதை கொஞ்சம் படியுங்கப்பா...
//அதுக்கு தகுந்த மாதிரி எதாவது பட்டம் கொடுங்க :-)) //
வெ.பை. பட்டமெல்லாம் கடைசியில் பாத்துக்கலாம். இப்போதைக்கு கவனம் டார்கெட் மேலதான் இருக்கணும்.
//அட! அவரு தன்னடக்கத்தோட அப்படித்தான் சொல்வாரு! நாம அப்படியே விட்டு விடுவதாவது? //
தளபதி முழிச்சுக்கிட்டாரு டோய்!!
//அதான் நாம வந்துட்டம்ல! //
ஒரு செஷன் மட்டும் வந்தா போதுமா? நம்ம சிவாவைப் பாருங்க. என்ன கடமையுணர்ச்சி.
சிவா, ஒரு பட்டம் வாங்கிக்குமய்யா.
சங்கத்தின் சிங்கம்புலி சிவா வாழ்க!!
//300 (வது) பின்னுட்டம் இட்ட தளபதி வாழ்க !!!!!!!! //
300 (வது) பின்னுட்டம் இட்ட தளபதி வாழ்க என வாழ்த்திய மின்னல் வாழ்க!!
//சங்கத்தில் பதிவெழுதி என்னை 300 வது பின்னூட்டம் இட வைத்த கொத்தனார் வாழ்க! //
சங்கத்தில் பதிவெழுதி என்னை 300 வது பின்னூட்டம் இட வைத்த கொத்தனார் வாழ்க! என வாழ்த்த வழி செய்த சங்கத்தின் தலை கைப்பு வாழ்க!!
//(ஆரம்பிச்சிட்டம்ல) //
கண்டினியூ பண்ணறோமில்ல!
//இ.கொ. வுக்கு இரண்டு பரிணாம வளர்ச்சி://
இது ரொம்ப வேணுமய்யா, கெ.பி. எதனா வழி கண்டுபிடியுங்க.
எங்க மேனேஜருக்கு தமிழ் தெரியாது.
//தளபதி நம்மளுக்கும் சின்னம் ரெடி ஆயிடிச்சி போல.. கலாய்த்தல் தளத்துல எப்ப சின்னத்தை போட போறீங்க.. //
அவரு ஆந்தை சின்னத்தில் போட்டியா? அப்போ சங்க சின்னமான ஆப்பில் அவரு போட்டியிடலையா? அப்போ அவரு போட்டி சங்கமா?
//என்னையப் போய் வம்புக்கு இழுக்கறீங்களே!! :)) //
வம்புக்கு இழுக்கறீங்களேன்னு கேட்டுட்டு இவ்வளவு அமைதியா ஒரு பின்னூட்டம் போட்டா எப்படி? பதிலுக்கு பதில் குடுங்கண்ணா!
//ilavasa koththanar posted 133 comments//
இப்போ பாருங்க.
இல்லை. இல்லை இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து பாருங்க!
//வாழ்க! வாழ்க!
சங்கத்தின் சிங்கங்கள் வாழ்க!
( நாங்களும் ஆரம்பிச்சிட்டம்ல)
//
நான் எப்படி பதில் சொன்னேன் பாருங்க. இப்படி கண்டினுயூ பண்ண முடியாத மாதிரியா ஆரம்பிக்கறது? :)
//பாத்தி அதுக்கும் ஒரு கெத்து வேணுமுல, உன்னால முடியுமா, ஒரு ரன் எடுத்துட்டு இப்படி ஒரு போஸ் கொடுக்க. ? //
இல்லை 48 பதிவு ஆன உடனே ஒரு ரெண்டு ரன் அடிச்சிட்டுதான் போஸ் குடுக்க முடியுமா?
//அப்படி ஒரமா நின்று வேடிக்கை பாருய்யா என் வென்று.//
அய்யய்யோ சிங்கம்புலி! சொதப்பறையேய்யா. நல்லா சொன்னாலும், தப்பா சொன்னாலும் ஆட்டத்துக்கு வரணும். அப்போத்தான் கவுண்ட் ஏறும். யாரையுமே ஓரமா நின்னு வேடிக்கைப் பார்க்கச் சொல்லக் கூடாது.
புரியுதா?
//அப்ப நீங்க இந்த 18க்கு பதில் சொல்ல. அது ஏன்? //
தப்புத்தேன் தப்புத்தேன். இந்த மாதிரி யாராவது எண்ணிப் பார்த்து சொன்னாத்தானே தெரியுது. இப்போ சரி பண்ணிடலாம்.
//பார்த்திக்கு சவால் விடுற சாக்குல நம்மளை சொல்றீங்களா (ஒரு ரன் எடுத்துட்டு போஸ் கொடுப்பேன்னு)
நாகையாரே? //
தப்பில்லை தளபதி. அதெல்லாம் ஒரு கலை. இங்க யாருக்கும் புரியாது. நீங்க இதெல்லாம் மனசுல போட்டுக்காம எல்லா 49, 999, 149, 199, 249, 299... என சரியா வாங்க.
//சிவா, ஒரு பட்டம் வாங்கிக்குமய்யா.
சங்கத்தின் சிங்கம்புலி சிவா வாழ்க!!//
எனக்கு மேலும் ஒரு பட்டம் அளித்து சிறப்பித்த இ.கொ. வாழ்க வாழ்க என்று சொல்ல வயது இல்லாத காரணத்தால் வணங்கி,வணங்கி மகிழ்கின்றேன்.
//அவருக்கு லெக் பீஸ்னா ரொம்ப பிடிக்குமாம்.//
அதுக்குத்தானே சொன்னது....
//(இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து கோச்சிங்க் கொடுத்தது நம்ம போர்வாள்தான்) //
இ.அ.இ.பு இன்னும் வரலையே. கட்டாயம் பாக்கணும்.
நான் அனுப்பும் பின்னூட்டங்கள் எல்லாம் வரல. போலிஸ்க்கிட்ட மாட்டிக்குச்சா. யப்பா யாராச்சும் வந்து ஜாமீன் கொடுத்து மீட்டுக்கிட்டு வாங்கப்பா.
எதிரிகளுக்கு, பகிரங்க எச்சரிக்கை விடுகின்றேன். என் பின்னூட்டங்களை தடுத்து விட்டால் சங்க களப் பணியில் தொய்வு ஏற்படும் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். யாரு இல்லா விட்டாலும் சங்க களப் பணி நடந்தே தீரும். தனி ஆளாக இருந்து கொத்துஸ் இதை நடத்திய தீருவார்.
//என்கிட்ட போன்ல ஆலோசனை கேட்க்கும் போது, மாட்ட புடிச்சுட்டு வந்து வெற்றிகரமாக பதிவ போடுங்க சொல்லி இருக்கேன். போடுவார். /
போட்டா போடட்டும். நாம போயி நம்ம கடமையை செய்வோம் சரிதானே.
ஆஹா, வந்துருச்சு, வந்துருச்சு, எல்லா பின்னூட்டமும் வந்துருச்சு.
ரீலிஸ் பண்ணுன புண்ணியவான் நல்லா இருங்கப்பா
:))))))
////அந்தப் பதிவருக்கு ஒரு எக்ஸ்ரே கண்ணு வளர்ந்தா வசதியா இருக்கும்.. யார் யாருக்கு மூளை இருக்கு, யார் யாருக்கு இல்லைன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிச்சிக்குவாரு.. //
மகேந்த் ஏதாவது சொல்லு, நாங்க சொன்னது நீ திருப்பி சொன்னா என்ன அர்த்தம், ஏதாச்சும் சொல்லிட்டு போங்க.
அப்படியே கொத்துஸ், இதுவரைக்கும் எத்தனை பின்னூட்டம் போட்டு இருக்காருனு கொஞ்சம் எண்ணி சொல்லிட்டு போங்களேன். நாங்க எல்லாம் கணக்குல கொஞ்சம் வீக. அதான்....
தளபதியாரே, கொத்துஸ்
யாரு 400வது பின்னூட்டம் போடுவது. கூட்டுத் தொகை 4 நமக்கு கொஞ்சம் வொர்க அவுட் ஆகும். அதனால் நானே முயற்சி பண்ணுறேன்.
//இங்க யாருக்கும் புரியாது. நீங்க இதெல்லாம் மனசுல போட்டுக்காம எல்லா 49, 999, 149, 199, 249, 299... என சரியா வாங்க. //
சரிதான். 299க்கு அவர் வந்தார்.
399க்கு நான் தான். யாரும் சின்னபுள்ள மாதிரி அடம் பண்ணாம இந்த சின்னபுள்ளைக்கு இடம் கொடுத்து ஒதுங்கி போகனும், என்ன?
//நான் எப்படி பதில் சொன்னேன் பாருங்க. இப்படி கண்டினுயூ பண்ண முடியாத மாதிரியா ஆரம்பிக்கறது? //
மன்னிச்சுங்க கொத்துஸ், நான் இன்னும் இதுல அப்ரண்டிஸ் தான். உங்கள இப்ப தான பாலோ பண்ண ஆரம்பித்து இருக்கேன். போக போக அப்படியே பிக்கப் பண்ணிக்குறேன்
//சொன்ன மாதீயே வந்து கலக்குறீங்களே, சிபியாரே!
'இவரு வந்குட்டாருல்ல; இனிமே கலக்கல்தான்!'
ஆயிரம் ஆயிரும்! //
சும்மா இருங்க எஸ்.கே., இதுக்கே டபுள் ஷிப்ட் போட வேண்டியது இருக்கு. ஆயிரமா... கண்ண கட்டுதே.....
//அப்போத்தான் கவுண்ட் ஏறும். யாரையுமே ஓரமா நின்னு வேடிக்கைப் பார்க்கச் சொல்லக் கூடாது.
புரியுதா? //
புரியுதுங்க, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கூவிட்டேன்.
யப்பா, பார்த்தி அது எல்லாம் மனசுல வச்சுக்காம வந்து நீயும் கொஞ்சம் பந்து வீசுப்பா. முடியல நம்மளா
யப்பா, இதோட, 400 ஆச்சுனு நினைக்கிறேன்.
இன்னைக்கு டூட்டி முடிந்தது. மிச்சத்த நாளைக்கு வந்து கண்டியூ பண்ண வேண்டியது தான்.
தல, எங்கன இருக்க, இந்த தம்பியின் கடமை உணர்ச்சிய பாத்தில. எல்லாம் உனக்காக தான்.....
Post a Comment