Tuesday, July 25, 2006

தளபதியார் வாழ்த்துப்பா

இன்று சங்கத் தலைமை நிலையத்திற்கு லீவு சொல்லைவிட்டு பாண்டி பிக்னி பேபியோடு கோவா கிளம்பிவிட்டார். எனக்கும் சற்று அலுவல் அதிகம். அதனால் பெருந்தன்மையோடு நம் தலைமை நிலையம் வந்து அன்பின் பெருமக்களாம் சங்கத்தின் இளம் புயல்களாம் மின்னல், வெறும் பயல், கப்பி பய, நாகை சிவா, கிதாக்கா ஆகியோர் கடிதங்களுக்குப் பதில் எழுதும் வேலையில் ஈடுபட்டிடுந்தனர்.

அந்நிலையில் சங்கத்திற்கு வந்த ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு...
சங்கத்தின் முன்னோடிகளாம் நவீன உக்கிர புத்தனாம் எங்கள் தல கைப்புள்ள, வேளாண் தோழர் விவசாயியார், ஆற்றலின் பேரரசியார் பொன்ஸ் ஆகியோரின் ஆணையையும் புறந்தள்ளி இதோ உங்களுக்காக சங்கப் பலகையில் வாழும் வார்த்தை வள்ளல் எங்கள் தளபதியாரைப் பாராட்டி வந்த வாழ்த்துப்பா மடலை ஒட்டுகிறேன்.

முத்தமிழ் அரசே
முல்லை வேந்தே
நாமக்கல் மைந்தனே
நக்கலின் கொழுந்தனே
கண்ணாடிக் கலைஞனே
தமிழ்மணத்தின் நகைச்சுவையே

சங்கம் கண்ட மன்னா
சிபி என்ற கண்ணா
கலாய்த்தலுக்கு தனி இடமா?
அதில் எனக்கும் ஒரு இடமா?

சின்னம் கொடுத்த சிங்காரா!
உன்னை
நல்லவன் என்றே நான் நினைத்தேன்
பொல்லாப்பற்ற வல்லவன் என்றல்லோ மகிழ்ந்திருந்தேன்

அய்யகோ!!!!
என்னை கலாய்க்க ஒரு அணி
சொர்ணக்காவும் உம்மோடா இனி?

உசுபேற்ற-
ஒதுங்கி இருந்தவனை எல்லாம்
கடுப்பேற்ற
அவனை
சுடு அடுப்பேற்ற.....
வந்துவிட்டாய்....
வலைப்பூ கண்டுவிட்டாய்....

வா....வா....
வீறு கொண்டு வா....
வீச்சு பெற்றவனிடம்
நொறுபட வா....விழு...வாங்கும்
அடியில்
எழு.....மீண்டும்
எழு

ஓட்டுவது
உன் குலத்தொழிலாகட்டும்
கலாய்ப்பது
இனி குடும்பத் தொழிலாகட்டும்....


குறிப்பு: இந்த வாழ்த்துப்பாவை எழுதிய அன்பருக்கும் தலக் கைப்பு , வேளாண் தோழர் மற்றும் ஆற்றல்ரசி அக்கா ஆகியோரால் எதாவது மிரட்டல் வரலாம் என்பதால் பெயர் தவிர்க்க படுகிறது... எந்தச் சோதனை வந்தாலும் தளபதிக்காகப் போராடப் பல தொண்டர்கள் உள்ளார்கள் என்பதற்கு இந்த மடலே சாட்சி....
ஸ்அப்பப்பப்பப்பா... கயமை அது இதுன்னு பதிவு போட்ருக்காய்ங்க .. அப்புறம் நாங்க இப்படி எதாவது கிளப்பி விட வேண்டியதா இருக்கு...

58 comments:

பொன்ஸ்~~Poorna said...

//என்னை கலாய்க்க ஒரு அணி
சொர்ணக்காவும் உம்மோடா இனி?//
உண்மையை ரொம்ப நாள் இருட்டடிப்பு செய்ய முடியாது... இதை யாரு எழுதுவாங்கன்னு எனக்குத் தெரியாதா?!!
ஆட்டோ ரெடியாகிக் கொண்டிருக்கிறது.. அன்பர்கள் ஏதேனும்(ஆசிட், நாட்டு வெடிகுண்டு முதலான பொருட்கள்தான்.. ) அனுப்ப விழைந்தால், அனுப்பலாம்..

நாமக்கல் சிபி said...

வாழ்த்துப் பா வரைந்த அன்பருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொல்லும் அதே வேளையில்

//நக்கலின் கொழுந்தனே//

என்று எங்கள் அண்ணியார் கைப்பொண்ணு அவர்களை நக்கல் என்று கூறி நையாண்டி செய்த விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//ஆசிட், நாட்டு வெடிகுண்டு முதலான பொருட்கள்தான்.. //

இப்படித்தான் ஆசிட் பாட்டில்னு சொல்லி பீதியைக் கிளப்பிட்டு அல்வாப் பொட்டலங்கள்னு கடைசில பல்டி அடிச்சாரு ஒருத்தரு!

பொன்ஸ்~~Poorna said...

//இப்படித்தான் ஆசிட் பாட்டில்னு சொல்லி பீதியைக் கிளப்பிட்டு அல்வாப் பொட்டலங்கள்னு கடைசில பல்டி அடிச்சாரு ஒருத்தரு!//

நாங்க எல்லாம் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்..

சூட்டோடு சூடா பென்னுரிமை பத்தி பென்னையே பேட்டி கண்டோமே, அதை விடவா இது கஷ்டம் ?:)

பொன்ஸ்~~Poorna said...

தேவ்,
கயமைத்தனம்லாம் பழைய மேட்டர்.. அன்பர் சிவா கவனத்துக்குக் கொண்டு வந்த, மற்ற விளம்பரங்கள் எல்லாம் பார்க்கலியா? ;)

சந்தோஷ் aka Santhosh said...

வ.வா சங்கத்து சின்னத்தை எப்ப மாத்தினிங்க சொல்லவே இல்லை.. என்ன சிபி யார் யாருக்கோ சின்னம் ஒதுக்குற சங்கத்துக்கு ஒரு சின்னம் ஒதுக்க வேண்டியது தானே.

நாமக்கல் சிபி said...

//வ.வா சங்கத்து சின்னத்தை எப்ப மாத்தினிங்க சொல்லவே இல்லை..//

வ.வா. சங்கத்திற்கு எப்போதும் ஒரே சின்னம்தான். அச்சின்னத்தின் பாரம்பரிய உரிமை எங்கள் தலை கைப்பு அவர்களுக்கே உண்டு!

நாமக்கல் சிபி said...

கலாய்த்தலுக்கு ஆள் கிடைக்க வில்லை என்று கவலைப் பட்டேன்!

அட! நம்ம சந்தோஷ்! வாங்க வாங்க!

கப்பி பய said...

அதுசரி..தளபதிக்கு "துப்பறியும் சிபி-ன்னு பட்டம் கொடுத்தேன்..யாருமே கண்டுக்கல??

பொன்ஸ்~~Poorna said...

//தளபதிக்கு "துப்பறியும் சிபிஐ-ன்னு பட்டம் கொடுத்தேன்//

அப்படியா தள? !!, (தலவுக்கு ரைமிங்கா...)
சொல்லவே இல்லை?!! நீங்க தான் அந்த துப்பறியும் ...???

மின்னுது மின்னல் said...

//
சொல்லவே இல்லை?!! நீங்க தான் அந்த துப்பறியும் ...???
//

எங்கள் தளபதியையே கலாய்த்த பொன்ஸ் அவர்களின் செயலை கன்டிக்கிரேன்

இரண்டு புள்ளிக்கு மூன்று புள்ளி வைத்ததற்காக வன்மையாக கன்டிக்கிரேன்.::)))))

மின்னுது மின்னல் said...

தளபதியாரைப் பாராட்டி வந்த வாழ்த்துப்பா

முத்தமிழ் அரசே

முல்லை வேந்தே

சங்கம் கண்ட மன்னா

என்னா இது இல்ல என்னா இதுங்கிறேன்

தல எடத்துக்கு வர தளபதி ஆச பட மாட்டாரு
இப்படி எல்லாம் எழுதி தலயோட மொத்த ஆப்பையேல்லாம் தளபதியை வாங்க வைப்பது யாருடைய சதி எங்கே துப்பறியும் அந்த .. ?? :)

பொன்ஸ்~~Poorna said...

//இரண்டு புள்ளிக்கு மூன்று புள்ளி வைத்ததற்காக //

மின்னல்,
என்ன சொல்றீங்க? தமிழ்மணத்துல இப்போ துப்பறியும் ஆசாமிங்க பேரெல்லாம் மூணெழுத்துல தானே இருக்கு? அதான் அந்த மூணு புள்ளி..

ஜொள்ளுப்பாண்டி said...

அய்யா மக்கா என்னாம்மா நடக்குது? கோவா போயிருந்த் நேரத்தில கோவணத்தை உருவுன கதையாவுல்ல இருக்கு!! ஒன்னுமே புரியலப்பூ !! :))) ஆராச்சும் அருஞ்சொற்பொருள் சொல்லித்தாரக்கூடாதா எனக்கு !! :((

ILA(a)இளா said...

பொன்ஸ், ஆசிட், நாட்டு வெடி, எல்லாம் தயார் பண்ணியாச்சு, மாட்டுவண்டியில கட்டிகிட்டு நாமக்கல் நோக்கி வேகமா போய்கிட்டே இருக்கேன், சீக்கிரம் வந்துருங்க.

ILA(a)இளா said...

ஏம்ப்பா முதல்ல வெண்பா, இப்போ வாழ்த்துபா, எப்போப்பா இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டிட்டு கைப்பு கலாய்க்கப்போறீங்கபா?

ILA(a)இளா said...

அட எத்தனை "பா", அப்பப்பா

ILA(a)இளா said...

//சின்னத்தை எப்ப மாத்தினிங்க சொல்லவே இல்லை//
சந்தோஷ், சின்னத்தை எந்த காலத்திலும் மாத்த மாட்டோம், சங்கத்து சோத்தாங்கை பக்கத்துல பழைய ஆப்புகளுக்கு மேல கம்பீரமா இருக்கும் பாருங்க.

ILA(a)இளா said...

//அருஞ்சொற்பொருள் சொல்லித்தாரக்கூடாதா //
பாண்டி வந்து வரிசையில நில்லுங்க, நான் ஏற்கனவே வெண்பா, வாழ்த்துப்பா சொல்லித்தர சொல்லியிருக்கேன், அப்புறம் தான் அருஞ்.. எல்லாம்

ILA(a)இளா said...

//துப்பறியும் சிபிஐ//
இதெல்லாம் கொஞ்சம் அதிகம், மறுபரிசீலனை பண்ணுங்க

ILA(a)இளா said...

//தல எடத்துக்கு வர தளபதி ஆச பட மாட்டாரு //
ஆசப்பட்டாலும் முடியாது, அடிவாங்க ஒருத்தராலதான் முடியும்.

ILA(a)இளா said...

//பேரெல்லாம் மூணெழுத்துல தானே இருக்கு? அதான் அந்த மூணு புள்ளி//
அந்த பெரும்புள்ளி சொன்ன பெரிய புள்ளி நாமதானே.. கைப்பு கெலிச்சுட்டேய்யா

தேவ் | Dev said...

தம்பி மின்னல், கப்பி யார் எம்புட்டு அடிச்சாலும் ஆசிட் , கல், மொரட்டு அருவா எது வீசுனாலும்... அசந்து 'வாழ்த்துப்பா' எழுதுன அந்த அன்பர் பேரைப் பப்ளிக்ல்ல அள்ளி விட்டு அசிங்கப் படுத்தப் பிடாது சரியா...

இஸ்ரேல் போடுற ஏவுகணையை வாங்கிகிட்டு வழி இல்லாமா உள்ளுக்குள்ளே முனகுற லெபனான் மாதிரி வேணும்ன்னா முனங்கிக்கலாம் என்னா? தளபதி பாவம் இல்லியா

தேவ் | Dev said...

//கயமைத்தனம்லாம் பழைய மேட்டர்.. அன்பர் சிவா கவனத்துக்குக் கொண்டு வந்த, மற்ற விளம்பரங்கள் எல்லாம் பார்க்கலியா? ;) //

அக்கா இந்த மேட்டர் நல்லாயிருக்கே.. தல சங்கத்துல்ல இல்லன்னாலும் படம் காட்டி பரபரப்பு ஏற்படுத்தி எப்படியோ சங்கத்துக்கு விளம்பரம் தேடித் தந்துகிட்டுத் தான் இருக்கார்.

ஆமா அவரும் கேமரா வாங்கி இருக்காரு... நீங்களும் கேமரா வாங்கி இருக்கீங்க... பார்த்துக்கா கேமரா பேர ஊழல்ன்னு கிளப்பி விட்டுர போறாங்க...

தேவ் | Dev said...

//வாழ்த்துப் பா வரைந்த அன்பருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொல்லும் அதே வேளையில்//

என்னது ''கொல்லும்'' படியா
தளபதி என்னப் பேச்சு இது?
ஆத்தாடி..... அதான் வாழ்த்துப்பா எழுதுண சிங்கம் காட்டுக்குள்ளேயே பதுங்கி கிடக்குதா?

தேவ் | Dev said...

எனக்கு தெரிஞ்ச மூணெழுத்து 'கைப்பு'
அப்படின்னா அவரும் துப்புறாரா... ச்சே சாரி துப்பறியறரா?

தேவ் | Dev said...

//அண்ணியார் கைப்பொண்ணு அவர்களை நக்கல் என்று கூறி நையாண்டி செய்த விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

நானும் கண்ணடிக்கிறேன்.. சே கண்டிக்கிறேன்.

தேவ் | Dev said...

பாண்டி கோவா பயணம் எப்படி?

அதைப் பற்றி விரிவாய் பிறகு உன் பேட்டையில் வந்து விவாதிக்கிறேன்.. இருக்கட்டும்
தளப்திக்கு இப்படி ஒரு வாழ்த்துப்பா யார் எழுதி இருப்பா?
விசாரிச்ச வரைக்கும் விவரம் தெரியல்ல... ஒரு வேளை அவ்ரே எழுதி ... சேசே தள டீசண்ட் கை இப்படி அவரே அவரைக் கலாயத்து புகழ் தேட மாட்டாரே..

அப்புறம் யாரது....

யாராவது வந்து துப்பு துலக்குங்க... இது ஒட்டு மொத்த துப்பு சமுதாயத்திற்கே விடப் பட்டிருக்கும் அறை கூவல்..

ILA(a)இளா said...

//அறை கூவல்.. //
எந்த அறை, சமையல் அறையா?

ILA(a)இளா said...

//நானும் கண்ணடிக்கிறேன்.. சே கண்டிக்கிறேன். //
நானும்தான் கண்ணடிக்கிறேன், சே கண்டிக்கிறேன்

ILA(a)இளா said...

//இஸ்ரேல் போடுற ஏவுகணையை வாங்கிகிட்டு வழி இல்லாமா உள்ளுக்குள்ளே முனகுற லெபனான் மாதிரி வேணும்ன்னா முனங்கிக்கலாம் என்னா?//

அரசியல் பேசப்படும் இடம் இதுவல்ல, கண்டிக்கிறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். அதுவும் இது உலக அரசியல்

ILA(a)இளா said...

அதனால கண்டிக்கிறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உங்கள் நண்பன் said...

//அய்யகோ!!!!
என்னை கலாய்க்க ஒரு அணி
சொர்ணக்காவும் உம்மோடா இனி?//

ஸ்ஸ்.. இப்பவே கண்ணைக்கட்டுதே..


நமது "தலை"க்கு ஆதரவாக

சங்கத்திலிருந்து அறிக்கை-ஓர் எச்சரிக்கை

என்ற தலைப்பில் நான் ஓரு அறிக்கை விட்டிருந்தேன், அதையும் அப்படியே படித்துப் பார்க்கவும், படித்துவிட்டு உங்களின் ஆதரவை பின்னூட்டமாக இடவும், அதற்க்கான சுட்டி இதோ...
http://unkalnanban.blogspot.com/2006/07/blog-post_22.htmlஅன்புடன்...
சரவணன்.

நாகை சிவா said...

//அரசியல் பேசப்படும் இடம் இதுவல்ல, கண்டிக்கிறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். அதுவும் இது உலக அரசியல் //
யப்பா நானும் கண்டிக்கிறேன்யப்பா.

நாகை சிவா said...

//அன்பர்கள் ஏதேனும்(ஆசிட், நாட்டு வெடிகுண்டு முதலான பொருட்கள்தான்.. ) அனுப்ப விழைந்தால், அனுப்பலாம்.. //
ரெண்டு கண்ணி வெடி வேணுமுனா அனுப்புறேன். ஆமாம் அத வச்சி என்ன பண்ண போறீங்க. இத எழுதியவன் மேல் வீசவா, இல்ல இதை வெளியிட்டவன் மேல் வீசவா.

நாகை சிவா said...

//நாங்க எல்லாம் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்.. //
ஐய், சூப்பர் ஸ்டார் டயலாக்.

//அன்பர் சிவா கவனத்துக்குக் கொண்டு வந்த, மற்ற விளம்பரங்கள் எல்லாம் பார்க்கலியா? ;) //
கொஞ்சம் விளக்கமாக சொல்னா தெரிஞ்ச்ப்போம்ல

நாகை சிவா said...

//தம்பி மின்னல், கப்பி யார் எம்புட்டு அடிச்சாலும் ஆசிட் , கல், மொரட்டு அருவா எது வீசுனாலும்... அசந்து 'வாழ்த்துப்பா' எழுதுன அந்த அன்பர் பேரைப் பப்ளிக்ல்ல அள்ளி விட்டு அசிங்கப் படுத்தப் பிடாது சரியா...//
அப்ப எழுதுனது யாரு அவிங்களுக்கு தெரியுமா.
மக்கா புறப்படு, உண்மையை வெளிக் கொண்டு வருவோம்.

நாகை சிவா said...

//பார்த்துக்கா கேமரா பேர ஊழல்ன்னு கிளப்பி விட்டுர போறாங்க... //
தாங்க்ஸ்மா, நோட் பண்ணியாச்சு.

தேவ் | Dev said...

//ரெண்டு கண்ணி வெடி வேணுமுனா அனுப்புறேன். ஆமாம் அத வச்சி என்ன பண்ண போறீங்க. இத எழுதியவன் மேல் வீசவா, இல்ல இதை வெளியிட்டவன் மேல் வீசவா. //

ஏன் தம்பி சிவா...

வரலாறு தெரியாத வெகுளி பயலா இல்ல இருக்க...உன்னியப் பார்த்தா பாவமா இருக்க...
நான் தளபதி சிபி எல்லாம் கிரிக்கெட் வெளையாட பந்து கிடைக்கல்லன்னா அட்டோம் பாம்... ஹட்ரஜன் பாம்ன்னு பந்து சைஸ்ல்ல செய்ய சொல்லி ஈரோட்டு கிரவுண்ட்ல்ல தென்னை மட்டையைப் பேட்டாப் பிடிச்சு பாகிஸ்தான் பார்டருக்கு சிக்ஸ் அடிக்குர கூட்டம்...

கண்ணி வெடி வீசுறன்னு கிராபிக்ஸ் காட்டுற... நீ வீசும் போது மறக்காம திரியைக் கிள்ளிட்டு வீசு...

தேவ் | Dev said...

ஆங் சொல்ல மறந்துட்டோம்... இன்னிக்கோ நாளைக்கோ தளபதி சங்கத்துத் த்லைமை நிலையத்தைக் கைப்பற்றி பில்டிங்க் திண்ணையிலே கலாயத்தல் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க போறதா அறிவிச்சுருக்கார்... நீ வீணா வெடி குண்டு... கோலி குண்டுன்னு உருட்டி வெளையாடமா பாடம் படிச்சு நாலு பேத்தைக் கலாய்ச்சு காபி போடுர வேலையைப் பாரு

தேவ் | Dev said...

சங்கத்தின் ஒற்றர் படைத் தலைவர் நன்மனம் எங்கே?
சங்கத்தின் உளவு துறையை அவுட் சோர்சிங் செய்ய வேண்டியது தானா?

சங்கத்துக்கு தலபதி வாழ்த்துப்பா வந்து 24 மணி நேரம் ஆகி விட்டது இன்னும் எழுதியவனைக் கண்டுபிடிக்க வழியில்லை.... ஒற்றர் படையா இல்லை அது வெறும் ஒட்டடை படையா? விளக்கம் வேண்டும்

தேவ் | Dev said...

//மக்கா புறப்படு, உண்மையை வெளிக் கொண்டு வருவோம். //

யப்பா சாமீ இன்னும் எத்தனை நாளைக்குத் தான் புறப்ப்டு அகப்பாடுன்னு அள்ளி விடுவீங்க... கண்ணு சிவா.. பிர்ச்சனை இங்கிட்டு தான் நடக்குது.. நீ எங்கிட்டுப் புறப்படுற... நிப்பாட்டு உன் புறப்பாட்டை...

தேவ் | Dev said...

//அரசியல் பேசப்படும் இடம் இதுவல்ல, கண்டிக்கிறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். அதுவும் இது உலக அரசியல்//

யப்பா.. வேளாண் தோழா.... இதை எல்லாம் பாத்து நல்லா கண்ணடிங்க.. சீ கணடிங்க...ஆனா கியரண்டியாக் காரியத்துல்ல கேப் விட்டுரு... எழுதுனது ஆருன்னு கண்டுபிடிச்சு ஆவரதைப் பாருங்க....

ILA(a)இளா said...

//24 மணி நேரம் ஆகி விட்டது இன்னும் எழுதியவனைக் கண்டுபிடிக்க வழியில்லை//
தேவு, இது உன் வேலைன்னு 23ம் புலிகேசி சொன்னதா ஞாபகம். அப்படியே இருந்தாலும் நீங்க சீர்காழியில விழா சிறப்பிக்க இல்லே போயிருப்பீங்க.. எல்லாம் நீங்க குடிச்ச ஞானப்பால்தான் காரணமா?

ILA(a)இளா said...

//ரெண்டு கண்ணி வெடி வேணுமுனா அனுப்புறேன்//
இன்னும் இந்த கன்னி (கண்ணி) வெடிய விடுறதா இல்லையா சிவா?

நாகை சிவா said...

//வரலாறு தெரியாத வெகுளி பயலா இல்ல இருக்க...உன்னியப் பார்த்தா பாவமா இருக்க...
நான் தளபதி சிபி எல்லாம் கிரிக்கெட் வெளையாட பந்து கிடைக்கல்லன்னா அட்டோம் பாம்... ஹட்ரஜன் பாம்ன்னு//
சரி நான் வரலாறு அறியாதவனே இருக்கட்டும். உங்க கிரிகெட் ஆட்டத்தில் ஏதுக்கு தளபதி இழுக்குறீங்க. துணைக்கா.....

தளபதி, ஏதோ சூழ்ச்சி நடக்கின்றது. பார்த்து நடந்துக் கொள்ளவும்

நாகை சிவா said...

////ரெண்டு கண்ணி வெடி வேணுமுனா அனுப்புறேன்//
இன்னும் இந்த கன்னி (கண்ணி) வெடிய விடுறதா இல்லையா சிவா? //
ஸ்டாக் நிறைய இருக்கு. அதான்
:))))

நாகை சிவா said...

//கண்ணு சிவா.. பிர்ச்சனை இங்கிட்டு தான் நடக்குது.. நீ எங்கிட்டுப் புறப்படுற... நிப்பாட்டு உன் புறப்பாட்டை... //
சங்கத்தின் போர்வாள் தேவ்வின் வார்த்தைக்கு மதிப்பளித்து அமைதி அடைகின்றேன்.

கைப்புள்ள said...

கலாய்ப்பின் சிகரம், கோழிமுட்டைபுரத்தின் முடிசூடா வேந்தன், கொங்கு நாட்டை நொங்கு எடுக்கும் எங்கள் தங்கத் தளபதியார் சிப்பிப்பாறை சிபிவர்மன் வாழ்க வாழ்க!

தேவ் | Dev said...

//உங்க கிரிகெட் ஆட்டத்தில் ஏதுக்கு தளபதி இழுக்குறீங்க. துணைக்கா.....//

அட சிவா தம்பி இப்ப்டி அநியாயத்துக்கு நல்ல புள்ளயாத் திரியற நீயு...

எனக்கு துணை தளபதியா? அய்யோ தப்புப்பா.. நான் தளபதிக்கு துணையா சும்மா பாம் பொறுக்கி போட போவேன்...

நான் ஒரு ஒரு பாமா வீசுவேனா.. தளபதி அதைத் தென்னை மட்டையால பாகிஸ்தான் பார்டர் இருக்கும் திசைப் பாத்து அடிப்பார்... அய்யோ அய்யோ

தேவ் | Dev said...

பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக....
நம்ம அவுட் சோர்சிங் உளவுத் துறை சொல்லும் தகவல்

//கலாய்ப்பின் சிகரம், கோழிமுட்டைபுரத்தின் முடிசூடா வேந்தன், கொங்கு நாட்டை நொங்கு எடுக்கும் எங்கள் தங்கத் தளபதியார் சிப்பிப்பாறை சிபிவர்மன் வாழ்க வாழ்க! //

இது மெய் கைப்புள்ள பின்னூட்டம் இல்லையாம் வேறு யாரொ அவர் ஐடியைக் கைப்பற்றி அவர் பேர்ல்ல கமெண்ட் போடுராங்களாம்,

தளபதி ஆணையின் பேரில் கைப்பு கது செய்யப்பட்டு கலாய்த்தல் திண்ணை ஓரமாய் சங்கிலியில் பிணைக்கப் பட்டுள்ளாராம்... சிபியார் கைப்புவை இரவு முழுவதும் கதறக் கதற....ஸ்ப்ப்ப்ப்ப்பா...

(கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேன்)

சிபியார் கைப்புவை இரவு முழுவதும் கதறக் கதற கலாய்ச்சுதல கைப்பு இப்போ திண்ணையோரமா குத்துயிரும் குலையுயிருமாக் கிடக்கிறாராம்...காப்பாத்துங்க காப்பாத்துங்க....

கப்பி பய said...

//இதெல்லாம் கொஞ்சம் அதிகம், மறுபரிசீலனை பண்ணுங்க //

மனசாட்சி தொட்டு சொல்லு மக்கா..வாழ்த்துப்பாவில சொன்னது விடவா இது அதிகம்???

ஜொள்ளுப்பாண்டி said...

//கலாய்ப்பின் சிகரம், கோழிமுட்டைபுரத்தின் முடிசூடா வேந்தன், கொங்கு நாட்டை நொங்கு எடுக்கும் எங்கள் தங்கத் தளபதியார் சிப்பிப்பாறை சிபிவர்மன் வாழ்க வாழ்க! //

தங்கத்தளபதி சிங்கத்தளபதி சிங்கத்தமிழன் சிபிவர்மன் வாழ்க வாழ்க !! :)))) சரி சரி தளபதி இன்னும் எவ்ளோ பில்டப்புதான் கொட்டுக்கரது வந்து தலையக் காட்டத்தானே சொல்றோம் தலையெடுக்கவா சொல்றோம்?? சீக்கிரம் ஆவட்டும் !

ஜொள்ளுப்பாண்டி said...

//சிபியார் கைப்புவை இரவு முழுவதும் கதறக் கதற கலாய்ச்சுதல கைப்பு இப்போ திண்ணையோரமா குத்துயிரும் குலையுயிருமாக் கிடக்கிறாராம்...காப்பாத்துங்க காப்பாத்துங்க.... //

என்னா தலையை கதறக் கதறக் கலாய்த்ததில் மயக்கமாகிவிட்டாரா?? !! யாரங்கே சீக்கிரம் தலைக்கு மயக்கத்தை தெளிவியுங்கள் மீண்டும் கலாய்க்க வேண்டும் !!:))))

ஜொள்ளுப்பாண்டி said...

//இன்னும் இந்த கன்னி (கண்ணி) வெடிய விடுறதா இல்லையா சிவா? //

இளா அது வேற ஒன்னுமில்லே சிவா சொல்ற கன்னி வெடி யாருன்னு தெரியுமா? சிவா எப்படி வசதி நானே சொல்லிடட்டுமா இல்லை....;)))

Syam said...

என்னாது இது சிறுபிள்ள தனமால்ல இருக்கு...
தலய விட்டுட்டு தளபதிய கலாய்கரீங்க(நல்லாதேன் இருக்கு நடக்கட்டும் நடக்கட்டும்)...
தல ஆப்பு வாங்கி ரொம்ப நாள் ஆச்சுனு ரொம்ப வருத்ததுல இருக்காருங்கோவ்..... :-)

Syam said...

//சங்கத்தின் ஒற்றர் படைத் தலைவர் நன்மனம் எங்கே//

அவரு சித்தப்பா வீட்ல கிடா விருந்துக்கு போய்ருக்காரு...சுட சுட செய்தியோட ச்சே கறியோட வருவாரு... :-)

kekkE PikkuNi #25511630 said...

//கிதாக்கா ஆகியோர் கடிதங்களுக்குப் பதில் எழுதும்...
கிதாக்கா பக்கத்திலே உதா(ர்)க்கா நானும் சங்கப் பணியோடு சொர்ணக்கா போட்ட டீயை ஆற்றிக் கொண்டிருந்தேன். எனவே, கடிதம் எழுதியது யாரென்று ஐயமின்றி உளற என்னால் முடியும்.

பொன்ஸ்: //நாங்க எல்லாம் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம்..
பொன்ஸூ, அது மட்டுமா, செய்ததையும் சொல்லுவோம், செய்யாததையும் சொல்லுவோம் - அத விட்டுட்டீங்களே?