Tuesday, July 4, 2006

இரண்டு மகிழ்ச்சியான செய்திகள்சங்கத்துல இன்னிக்கு ரெண்டு ஸ்பெஷல் நியூஸ்!


செய்தி 1:

இத்தினி நாளா கேள்வி கேப்பாரு இல்லாம இஷ்டத்துக்கு பேச்சுலரா சுத்திட்டிருந்த நம்ம சங்கத்து உறுப்பினர் துபாய் ராசா இனிமே பேச்சு இலரா ஆகப் போறாராம். அவரே அழைப்பிதழையும் அனுப்பியிருக்கார். சங்கத்து சார்பா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

செய்தி 2:


சங்கத்தின் போர்வாள், கைப்புள்ளையின் கை என்றெல்லாம் அழைக்கப்படும்
நம்ம சென்னைக் கச்சேரிக்காரர் தேவ் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அட! ஆமாங்க! நேத்து காலையில கோவை வந்துட்ட அவரு சாயங்கலாமா நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புனாருங்க! ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகி இருக்கிறாருங்கோவ்.சங்கத்து உறுப்பினர்கள் சார்பா அவருக்கும் வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தம்பி பாண்டி அவர்கள் இரண்டு சந்தோஷ சங்கதிகளுக்காகவும் சேர்த்து உடனடியாக ஒரு பெரிய அளவுல பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யணும்னு தலை கைப்புள்ளை ஃபேக்ஸ் அனுப்பி இருக்காரு!

அப்புறம் என்ன! கொண்டாடிட வேண்டியதுதான!

30 comments:

நன்மனம் said...

ராஜாவிற்க்கு வாழ்த்துக்கள்.

தேவு, வாழ்த்துக்கள்

அனுசுயா said...

வாழ்த்துக்கள் தேவ் மற்றும் துபாய்ராஜா.

கானா பிரபா said...

ராஜாவுக்கு வாழ்த்து போன் மூலம் சொல்லியாச்சு, தேவ் இற்கு வாழ்த்துக்கள்

மனதின் ஓசை said...

சந்தோஷமான செய்திகள்... தேவுக்கும் ராஜாவுக்கும் வாழ்த்துக்கள்..
தேவுக்கு கிடைத்த பதவியுயர்வு ராஜாவுக்கும் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள்.:-)

துளசி கோபால் said...

தேவு,

அப்பா ஆயாச்சா?

வாழ்த்து(க்)கள்.

குழந்தைக்கு எங்கள் ஆசிகள்.

நல்லா இருக்கட்டும்.

செந்தழல் ரவி said...

தேவ் / து.ரா இருவருக்கும் வாழ்த்துக்கள்...

இளவஞ்சி said...

துபாய் ராசாவுக்கு வாழ்த்து சொல்லியாச்சு!

தேவ்,

உங்கள் வீட்டு புத்தம்புதிய குட்டிதேவதைக்கு என் Warm Welcome!

குடும்பத்தாருக்கு என் வாழ்த்துக்கள்! :)

கைப்புள்ள said...

மணவிழா காணும் வளைகுடா வட்ட தலைவர் துபாய் ராஜாவிற்கும், தந்தையாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும் போர்வாள் தேவிற்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

பாண்டி! பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடு. அப்படியே திக்கெட்டும் வவாசாவின் வரலாற்றில் மகிழ்ச்சியான இம்மாதத்தைக் கொண்டாட மேளம் கொட்டட்டும்.

பொன்ஸ்~~Poorna said...

துபாய் ராசா,.. நீ தூள் கிளப்புப்பா.. :)

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இளம் பெண்சிங்கமாம் எங்கள் தங்கப் போர்வாள் தேவின் அன்புச் செல்வியை பூமிக்கும் சங்கத்துக்கும் வருக வருக என்று வரவேற்கிறேன்.

சொஜ்ஜி said...

தேவ் அண்ணாச்சி.. புது வரவுக்கு இந்தப் பழைய வரவின் நல் வாழ்த்துக்கள்..

ILA(a)இளா said...

ஆஹா, இன்னும் ஒரு வாழ்த்து நம்ம வயலுல இருக்கு பாருங்க
விவசாயி

ILA(a)இளா said...

துபாய் ராஜா வாழ்த்துக்கள், கல்யாணம் ஆனவுடன் சஙகத்த மறந்துடாதீங்க.

G.Ragavan said...

துபாய் ராஜாவிற்கும் தேவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மணியன் said...

மணவாழ்வின் முதற்படியில் அடியெடுத்து வைத்திருக்கும் துபாய் இராசாவிற்கும் இரண்டாம் அடி எடுத்து வைத்திருக்கும் தேவ் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் !
ஆமாம், படத்தில் என்ன சிம்பாலிசம் ?

மணியன் said...

மணவாழ்வின் முதற்படியில் அடியெடுத்து வைத்திருக்கும் துபாய் இராசாவிற்கும் இரண்டாம் அடி எடுத்து வைத்திருக்கும் தேவ் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் !
ஆமாம், படத்தில் என்ன சிம்பாலிசம் ?

நாகை சிவா said...

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மின்னுது மின்னல் said...

தேவுக்கும் ராஜாவுக்கும் வாழ்த்துக்கள்..

ஜொள்ளுப்பாண்டி said...

வார்ரே வா ! கச்சேரி களை கட்டிருச்சு! யனை மேல இனி குட்டி அரசியார் அடிக்கடி ஊர்கோலம் போவாருல்ல!!

துபாய் ராசா சங்கத்தங்கமே!
வளைகுடா காளை இனி வளைக் கைகளில் கூடப்போகுதே !! ( கவித கவித ) கெட்டிமேளம் கெட்டி மேளம் !! வாழ்த்துக்கள் !!

paarvai said...

ராஜாவுக்கும்,தேவுக்கும் வாழ்த்துக்கள். குழந்தையின் பெயர் என்னவாம்? யானைக்குட்டி படம் பார்த்ததும் ;யாருக்கோ குழந்தை என்று, நினைச்சேன்.
யோகன் பாரிஸ்

SK said...

ராஜா, தேவ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
பொறுப்புகள் கூடும் நேரத்தில்
பன்னிருகையன் அருளட்டும்!

பொன்ஸ்~~Poorna said...

யோகன்,
இப்படி வேற இருக்கா..

நமக்கு இன்னும் அதுக்கெல்லாம் நாளிருக்குங்க.. இது சும்மா இப்போ பிறந்த யானைன்னு கிடைச்சிது போட்டுட்டேன்.. நீங்க சொல்றதைப் பார்த்தா, மாத்திர வேண்டியது தான் :)

குமரன் (Kumaran) said...

ராஜா, தேவ் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

paarvai said...

தயவு செய்து படத்தை எடுக்க வேண்டாம். மிக அருமையான படம்; இப்படமே பாதிச் சேதி சொல்லுது.
யோகன் பாரிஸ்

பொன்ஸ்~~Poorna said...

யோகன், உங்களுக்காக படத்தை அப்படியே விட்டுவிட்டேன்.. :)

இன்னோரு படம் எங்க பார்ட்டி மூடுக்காக :)

கைப்புள்ள said...

//இது சும்மா இப்போ பிறந்த யானைன்னு கிடைச்சிது போட்டுட்டேன்.. //

ஓ! இது உங்க வேலை தானா? யானை படம் பாத்ததுமே நெனச்சேன்.
:)

கீதா சாம்பசிவம் said...

ராஜா, தேவ் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஏற்கெனவே ஒரு பதிவு வந்து வாழ்த்துச்சொல்லி இருந்தேனே அது என்ன ஆச்சு?

தேவ் | Dev said...

வாழ்த்திய அனைத்து அன்பு இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவ் | Dev said...

நம்ம தெக்கத்தி சீமை ராஜாவுக்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்

(துபாய்) ராஜா said...

திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய அன்பர்கள்,கைபேசியில் அழைத்து வாழ்த்திட்ட நண்பர்கள், இணையம் மூலம் மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த
அன்பார்ந்த'தமிழ்மணம்' வலைபதிவு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!.

(துபாய்) ராஜா said...

நமது வ.வா.சங்க போர்வாள் தேவுச்செல்லத்தின் சின்ன செல்லம், சீனித்தங்கத்திற்கு மனமார்ந்த அன்பு
வாழ்த்துக்கள்.