Monday, July 31, 2006

தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல்

'மரணம்' என்ற தலைப்பில் நான் எழுதாத காவியத்திற்கு தேன்கூடு வாக்கெடுப்பில் மூன்றே முக்கால் ஓட்டுக்கள் விழுந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எழுதப்படாத என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த ஒண்ணே முக்கால் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (பின்ன, மீதி ரெண்டு ஓட்டும் நானே இல்ல போட்டுக்கிட்டேன்!). இதே தருணத்தில் இப்போட்டியை நடத்தும் தேன்கூடு குழுவினருக்கும், தமிழோவியக் குழுவினருக்கும், இப்படைப்பை எழுதாமலிருக்கத் தூண்டுகோலாக இருந்த வ.வா.சங்க நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த போட்டியில் கலந்து கொல்லாதது எனக்கு மிக நல்லதொரு அனுபவமாய் இருந்தது. இன்னும் அதிக வாக்குள் வாங்க எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது என்ற உண்மையை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது, மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டும் என்ற விழிப்பு எனக்கு கிடைத்தது.

எழுதப்படாத எத்தனையோ படைப்புகள் இருக்க, எனக்கு ஓட்டிட்டு (அட ஓட்டு போட்டுன்னு சொல்ல வந்தேன். ஓட்டறது பத்தி இல்லை) சிறப்பித்த இந்த நண்பர்களின் அபரிதமான ஊக்குவிப்பால் அடுத்த முறை ஒரே ஒரு படைப்புடன் நிறுத்தாமல் கதை, கவிதை, கட்டுரை என பலவற்றையும் எழுதாமல் இருப்பேன் என கூறிக் கொள்கிறேன். இந்த நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்களேயானால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல ஏதுவாக இருக்கும்.

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்றவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

டிஸ்கிக்கள்

1) இப்படி ஒரு நன்றி பதிவு போட்ட எஸ்.கேயும், போட்டிக்கு போகமலே ஆறுதல் பரிசு அடிக்கப் பார்க்கும் இட்லிவடையும் ஆளுக்கு 70 -80 பின்னூட்டம் வாங்குவதைப் பார்த்த புகைச்சலில் இந்த பதிவு எழுதப்படவில்லை.

2) எனது பதிவு எண்ணிக்கை ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை.

3) இந்த பதிவில் வாழ்த்துக்கள், நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி என்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் அதற்கு நான் காரணம் இல்லை. போலீஸ்கார் எல்லாம் இதற்கு முன்மாதிரியாக இருக்கும் அந்தப் பதிவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4) வாத்தியார் 'மரணம்'ன்னு தலைப்பு குடுத்தாலும் குடுத்தார் 80 பேரு கதையும் கவிதையுமா எழுதித் தள்ளிட்டாங்க. போதாததுக்கு ஆளுக்கு ஒரு நன்றி பதிவு வேற. தமிழ்மண முகப்பு பூர இந்த நன்றி அறிவிப்பா இருக்கா, மாதாமாதம் இப்படி ஒரு படலம் நடக்கப் போகுதேன்னு ஒரு பயம். அதனால சும்மா ஒரு கலாய்த்தல். அவ்வளவுதான். அதுவும் இதுக்கு நேயர் விருப்பம் வேற. :)

5) இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றிப் பதிவு. சங்கத்திற்கு, வந்து படிச்சவங்களுக்கு, செய்ய வேண்டியதை சரியா செஞ்சவங்களுக்கு, எல்லாருக்கும் நம்ம நன்றி.

641 comments:

1 – 200 of 641   Newer›   Newest»
இலவசக்கொத்தனார் said...

படிச்சா பயமா இருக்கே. ரொம்ப அடி வாங்கப் போறேனோ?

செல்வன் said...

இப்படி அனானி பின்னூட்டம் அனுமதி மறுப்பு பண்ணிருக்கீங்களே?ஜோதிபிரபா எல்லாம் எப்படி வந்து பின்னூட்டம் போடுவதாம்?

நன்மனம் said...

அட்லஸ் மாதத்தில், பின்னூட்ட உலகை சுமந்து சரியாமல் பாத்துக்கொண்ட கொத்ஸ்க்கு ஒரு "ஓ"

:-)

செல்வன் said...

நீங்க பின்னூட்டம் போடுவதற்கு முன்பே மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துட்டோம்ல.

பிளாக்கர் இங்க சொதப்பாதா?எனக்கு அப்படி தோணலையே:)

செல்வன் said...

நீங்க பின்னூட்டம் போடுவதற்கு முன்பே மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துட்டோம்ல.

பிளாக்கர் இங்க சொதப்பாதா?எனக்கு அப்படி தோணலையே:)

செல்வன் said...

நீங்க பின்னூட்டம் போடுவதற்கு முன்பே மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துட்டோம்ல.

பிளாக்கர் இங்க சொதப்பாதா?எனக்கு அப்படி தோணலையே:)

இலவசக்கொத்தனார் said...

என்ன இது தமிழ்மணத்துல வரமாட்டேங்குதே. சங்கத்துல சொதப்பிட்டாங்களா?

இலவசக்கொத்தனார் said...

//இப்படி அனானி பின்னூட்டம் அனுமதி மறுப்பு பண்ணிருக்கீங்களே?ஜோதிபிரபா எல்லாம் எப்படி வந்து பின்னூட்டம் போடுவதாம்? //

சங்கத்தினரின் கயமைத்தனத்துக்கு மேலும் ஒரு உதாரணம்.

இலவசக்கொத்தனார் said...

//நீங்க பின்னூட்டம் போடுவதற்கு முன்பே மோப்பம் பிடித்துக்கொண்டு வந்துட்டோம்ல.//

ஏம்பா தமிழ்மணத்துல காணுமே. அந்த மணமில்லாம எப்படி மோப்பம் பிடிக்கிறது? :((


//பிளாக்கர் இங்க சொதப்பாதா?எனக்கு அப்படி தோணலையே:) //

என்னவோ போங்க.

செல்வன் said...

நண்பர் எஸ்.கெவின் பதிவை கிண்டல் செய்த கொத்தனாரை கண்டிக்கிறேன்.அவர் 18 ஓட்டு வாங்கியது உங்களுக்கு பொறாமையாக இருக்கிறது என நினைக்கிரேன்

இப்படிக்கு

ஜோதிபிரபா
எஸ்.கேயார் ரசிகர் மன்றம்,
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
எடிசன்
நியூயார்க்

இலவசக்கொத்தனார் said...

//அட்லஸ் மாதத்தில், பின்னூட்ட உலகை சுமந்து சரியாமல் பாத்துக்கொண்ட கொத்ஸ்க்கு ஒரு "ஓ"//

எல்லாம் உங்களை மாதிரி நல்லமனசுக்காரங்களோட அன்பும் ஆதரவும்தான். :)

செல்வன் said...

நண்பர் எஸ்.கெவின் பதிவை கிண்டல் செய்த கொத்தனாரை கண்டிக்கிறேன்.அவர் 18 ஓட்டு வாங்கியது உங்களுக்கு பொறாமையாக இருக்கிறது என நினைக்கிரேன்

இப்படிக்கு

ஜோதிபிரபா
எஸ்.கேயார் ரசிகர் மன்றம்,
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி
எடிசன்
நியூயார்க்

செல்வன் said...

//ஏம்பா தமிழ்மணத்துல காணுமே. அந்த மணமில்லாம எப்படி மோப்பம் பிடிக்கிறது? :((//

நான் நேரடியா வவாசங்கம் பதிவுக்கு வந்தேன்.தமிழ்மணம் மூலமா வரலை.

ஏன் இன்னும் தமிழ்மணத்தில் வரலை?கயமைத்தனத்தின் காரணமா பதிவை தூக்கிட்டங்களா?வவாசங்க வலைப்பூவுக்கு உங்களால் நேர்ந்த கதியை பார்த்தீர்களா?

இலவசக்கொத்தனார் said...

//நண்பர் எஸ்.கெவின் பதிவை கிண்டல் செய்த கொத்தனாரை கண்டிக்கிறேன்.அவர் 18 ஓட்டு வாங்கியது உங்களுக்கு பொறாமையாக இருக்கிறது என நினைக்கிரேன்//


முதல்ல 14ன்னாரு. அப்புறம் அவர் போட்டதையும் சேர்த்து 15ன்னாரு. இப்போ என்ன 18?

சரி அப்படியே இருந்தாலும் எழுதன கவிதைக்கு 18 வரது பெருசா? இல்லை எழுதாத காவியத்திற்கு மூணே முக்கால் வரது பெருசா?

செல்வன் said...

அட்லாஸ் வாலிபர் பொறுப்பை திறம்பட ஏற்றதற்கு நன்றி.

இலவசக்கொத்தனார் said...

//எடிசன்
நியூயார்க் //

எடிசன் வந்து நியூஜெர்ஸிப்பா. $ எல்லாம் போட்டுக்கற இதுல எல்லாம் சொதப்பினா எப்படி?

செல்வன் said...

தேன்கூட்டை திட்டியதற்கு கண்டனம்

செல்வன் said...

நியூயார்க்கில் எடிசன் தெருன்னு வெச்சுகலாம்பா.நியூயார்க் கடல் மாதிரி.அங்கெ எடிசன் பொலவாட்ன்னு ஏதோ ஒண்ணு இல்லாமயா போகும்?:)

இலவசக்கொத்தனார் said...

//கயமைத்தனத்தின் காரணமா பதிவை தூக்கிட்டங்களா?வவாசங்க வலைப்பூவுக்கு உங்களால் நேர்ந்த கதியை பார்த்தீர்களா? //

இந்த ஒரு பதிவை விட்டு இருக்கலாம். அடுத்த பதிவு நானா எழுதப் போறேன்....

இலவசக்கொத்தனார் said...

//அட்லாஸ் வாலிபர் பொறுப்பை திறம்பட ஏற்றதற்கு நன்றி. //

நன்றிக்கு நன்றி.

(எஸ்.கே. - "ஆரம்பிச்சுட்டாங்கய்யா.)

இலவசக்கொத்தனார் said...

//தேன்கூட்டை திட்டியதற்கு கண்டனம் //

நான் எங்கப்பா திட்டினேன்? இப்படி அபாண்டமா சொல்லறீங்களே....

செல்வன் said...

/முதல்ல 14ன்னாரு. அப்புறம் அவர் போட்டதையும் சேர்த்து 15ன்னாரு. இப்போ என்ன 18?

சரி அப்படியே இருந்தாலும் எழுதன கவிதைக்கு 18 வரது பெருசா? இல்லை எழுதாத காவியத்திற்கு மூணே முக்கால் வரது பெருசா? /

அடுத்த தேர்தலில் அவர் வாங்கப்போகும் ஓட்டு 18.அதை சொன்னேன்.(அ8 தான்னான்னு சண்டைக்கு வரப்போறார்:)))

நீங்க எங்க மூணே முக்கால் ஓட்டு வாங்கினீங்க?எனக்கு சந்தேகமா இருக்கு.எங்க ஓட்டு சீட்டை காட்டுங்க பாக்கலாம்

இலவசக்கொத்தனார் said...

//நியூயார்க்கில் எடிசன் தெருன்னு வெச்சுகலாம்பா.//

சரி. வெச்சுக்கலாம்.


//நியூயார்க் கடல் மாதிரி.அங்கெ எடிசன் பொலவாட்ன்னு ஏதோ ஒண்ணு இல்லாமயா போகும்?:)//

இருந்தாதான் சொல்லணுமா என்ன? இல்லைன்னாலும் நம்ம வெச்சுக்கலாம். (இப்போதைக்கு நீங்க ஒருத்தர்தான் கஷ்டமர். உம்மையும் விட்ட என் கதி..)

செல்வன் said...

//நன்றிக்கு நன்றி. //

எஸ்.கே ஸ்டைலில் இதற்கு பதில்

நன்றிக்கு நன்றியை
திறம்பட உரைத்த
கொத்தனாரின் நெஞ்சம்
நிகழ் நன்றியுணர்வை
நானும் இங்கே செப்பிடுவேன்

பொன்னெழில் எடிசன் நகரில்
பூத்து குலுங்கும் பருவப்பாவாய்
நீயும் அதை கேட்டிடுவாய்

இலவசமாய் டீவி,வீடியோ
என கட்சிகள் முழங்க
இலவசமாய் கொத்தனாரையே தரும்
எம் இலவச கொத்தனாரை போற்றிட
நம் நாவும் தயங்காதோ

:))))

இலவசக்கொத்தனார் said...

//அடுத்த தேர்தலில் அவர் வாங்கப்போகும் ஓட்டு 18.அதை சொன்னேன்.(அ8 தான்னான்னு சண்டைக்கு வரப்போறார்:)))//

அதுல அவரே போட்டுக்கிறது எத்தனை? அதையும் சொல்லுங்க.

//நீங்க எங்க மூணே முக்கால் ஓட்டு வாங்கினீங்க?எனக்கு சந்தேகமா இருக்கு.எங்க ஓட்டு சீட்டை காட்டுங்க பாக்கலாம்//

இதெல்லாம் கேட்கப்பிடாது. என்னாது இது சிறுபிள்ளத்தனமா..... இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்.

செல்வன் said...

என்னங்க நிஜமாவே தமிழ்மணத்திலும் வரலை,சமீபத்தில் மறுமொழியிடப்பட்ட இடுகைகளிலும் வரலை.

இந்த பதிவில் கருவிப்பட்டையே தெரியலை.சரியா நிறுவலையா,இல்லை டெம்ப்ளேட் மாற்ரம் செய்தப்போ சொதப்பிடுச்சா?கருவிப்பட்டையை சரிபார்க்கவும்

இலவசக்கொத்தனார் said...

செல்வரே,

எங்கயோ போயிட்டீங்க. ஹாஹாஹா.

:-D

இலவசக்கொத்தனார் said...

செல்வன்,

நானும் பார்த்தேன். இது சங்கதில் இருக்கும் சில கொயப்பல்ஸின் திட்டமிட்ட சதி.

செல்வன் said...

அதுல அவரே போட்டுக்கிறது எத்தனை? அதையும் சொல்லுங்க./

எஸ்.கேவை போய் இப்படி சந்தேகப்பட்டுடீங்களே?எனக்கு மனசு ரொம்ப வேதனையா இருக்கு.அவர் ஓட்டு எத்தனை இருந்தாலும் அத்தனையும் கேப்டனுக்குத்தான்னு சொல்லிருக்கார்.:)

இலவசக்கொத்தனார் said...

//அவர் ஓட்டு எத்தனை இருந்தாலும் அத்தனையும் கேப்டனுக்குத்தான்னு சொல்லிருக்கார்.:)//

என்னது? நடிகர் சங்கம், சட்டசபை எல்லாம் தாண்டி இப்போ கேப்டன் தமிழ்மணம், தேன்கூடுன்னு எல்லாம் வேற வர ஆரம்பிச்சுட்டாரா? கிழிஞ்சுது போ.

செல்வன் said...

//நானும் பார்த்தேன். இது சங்கதில் இருக்கும் சில கொயப்பல்ஸின் திட்டமிட்ட சதி//

சதியை முறியடித்து சாதனை படைக்க டெம்ப்ளேட்டை சரிசெய்யவும்.நேரமானால் பதிவு திரட்டபடாமலே போய் 1000 வராமலே போகலாம்

செல்வன் said...

//என்னது? நடிகர் சங்கம், சட்டசபை எல்லாம் தாண்டி இப்போ கேப்டன் தமிழ்மணம், தேன்கூடுன்னு எல்லாம் வேற வர ஆரம்பிச்சுட்டாரா? கிழிஞ்சுது போ.//

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுபோல் தமிழ் இருக்கும் இடமெல்லாம் எங்கள் கேப்டன் இருக்கும் இடம் என்கிறார் எஸ்.கே:))

கால்கரி சிவா said...

பின்னூட்ட கயமை ஆரம்பித்துவிட்டது என கும்பல் பொறாமையில் கூவிக் கொண்டிருக்கும் வேளையில் மேலும் ஒன்றா.

அவர்களுக்கு ஒரு சோடா அல்லது ஜிகர்தண்டா வாங்கிதந்துவிட்டு பதிவுகளை இடவும்

செல்வன் said...

பதிவு முகப்பில் வந்துடுச்சு.பின்னூட்டங்கள் இன்னும் வரலை.

இலவசக்கொத்தனார் said...

//சதியை முறியடித்து சாதனை படைக்க டெம்ப்ளேட்டை சரிசெய்யவும்.நேரமானால் பதிவு திரட்டபடாமலே போய் 1000 வராமலே போகலாம் //

அப்படி ஒரு ரெக்கார்ட் பண்ணலாமா? அட என்ன இப்படி பி.பி.ப.ஓ?

செல்வன் said...

கால்கரி சிவா

நீங்கள் இன்னும் தூங்கவில்லையா?மணி 9.30 ஆச்சே.இன்னும் ஜிகர்தண்டா ந்யாபகமா?:))

இலவசக்கொத்தனார் said...

//குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுபோல் தமிழ் இருக்கும் இடமெல்லாம் எங்கள் கேப்டன் இருக்கும் இடம் என்கிறார் எஸ்.கே:))//

எங்க அவரைக் காணும்? இத கேப்டன் சொன்னா தமிள் அப்படின்னுதானே சொல்லுவார்?

இலவசக்கொத்தனார் said...

//அவர்களுக்கு ஒரு சோடா அல்லது ஜிகர்தண்டா வாங்கிதந்துவிட்டு பதிவுகளை இடவும் //

அட கால்கரியாரே, ஜிகர்தண்டா எல்லாம் உம்ம டிபார்ட்மெண்ட், நீரே பாத்துக்கும்.

செல்வன் said...

1000 எல்லாம் ஜுஜிபிங்க.

நீங்க புகுந்து விளையாடுங்க.என்ன கயமைத்தனம் பண்ணியாவது 1000 நாங்கள் கொண்டு வந்துடமாட்டோமா?

செல்வன் said...

எங்க அவரைக் காணும்? இத கேப்டன் சொன்னா தமிள் அப்படின்னுதானே சொல்லுவார்? //

எஸ்.கே எங்கிருக்கிறீர்கள்?கேப்டனை கிண்டல் செய்கிறார் கொத்தனார்.வந்து விசாரியும்:)

செல்வன் said...
This comment has been removed by a blog administrator.
கோவி.கண்ணன் said...

//2) எனது பதிவு எண்ணிக்கை ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை.//

இதெல்லாம் நாங்கள் சொல்லனும் :)

இலவசக்கொத்தனார் said...

//நீங்கள் இன்னும் தூங்கவில்லையா?மணி 9.30 ஆச்சே.இன்னும் ஜிகர்தண்டா ந்யாபகமா?:)) //

இப்படின்னு நீங்க படிக்கறேன் பேர்வழின்னு 11:30 மணிக்கு என்னய்யா செய்யறீரு?

இலவசக்கொத்தனார் said...

//அவனவன் அடிச்ச அடியில் அந்தப் பின்னூட்டக் கயமை டீமையே காணோம்.. எதுக்கு இப்போ இத்தனை பெரிய ரியாக்ஷன்னே புரியலை.. ம்ம்ம்ம்.. :))) //

யாரு அடிச்சா? எப்ப அடிச்சாங்க? எனக்கு தகவலே இல்லையே? ரியாக்ஷன் அவங்களுக்கா? இல்லையே. சரியா படிங்கக்கா.

இலவசக்கொத்தனார் said...

//நீங்க புகுந்து விளையாடுங்க.என்ன கயமைத்தனம் பண்ணியாவது 1000 நாங்கள் கொண்டு வந்துடமாட்டோமா? //

என்ன செஞ்சாலும் போலூஸ், அடச்சே, போலீஸ் கிட்ட மாட்டிக்காம பண்ணுங்க. ஓக்கே?

இலவசக்கொத்தனார் said...

//எஸ்.கே எங்கிருக்கிறீர்கள்?கேப்டனை கிண்டல் செய்கிறார் கொத்தனார்.வந்து விசாரியும்:) //

வீக் ஸ்பாட்டில் தட்டியாச்சு. அப்பவும் ஆளைக் காணுமே....

இலவசக்கொத்தனார் said...
This comment has been removed by a blog administrator.
செல்வன் said...

தலை

பதிவு டூல் பார் இன்னும் தெரியலை.பின்னூட்டங்களும் திரட்டப்படலை.

இலவசக்கொத்தனார் said...

//இதெல்லாம் நாங்கள் சொல்லனும் :) //

வாங்க கோவியாரே. நீங்க எல்லாம் சொல்ல மாட்டீங்கன்னு தெரிஞ்ச விஷயத்தைதானே நானே டிஸ்கியா போட்டு இருக்கேன். அப்பவும் குடைஞ்சுக்கிட்டு. கொஞ்சம் கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் செல்வம். இந்த டெம்பிளேட் மாத்துன மும்முரத்தில் இதை விட்டுட்டாங்க. சங்க சிங்கங்கள் வந்து சரி பண்ணிடுவாங்க.

50 வந்தாச்சு. நீங்கதான். வாழ்த்துக்கள்!

Thekkikattan said...

//(இப்போதைக்கு நீங்க ஒருத்தர்தான் கஷ்டமர். உம்மையும் விட்ட என் கதி..) //

இது நல்லாருக்கு, வும்மா நெலமை இப்பிடி ஆகிப்பூச்சே இலவசம்... :-)))) சிங்கில் கஷ்டமர வச்சு நூறு அடிக்கணுமின்ன அது இப்படிப்பா...

செல்வன் said...

இன்னும் எத்தனை 50,எத்தனை நூறு வர இருக்கு.50க்கெல்லாமா நன்றி சொல்வது?இருங்க...1000 ரொம்ப கிட்டதான் இருக்கு:)))

ILA(a)இளா said...

//நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி//
நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி,நன்றிக்கு நன்றிக்கு நன்றிக்கு நன்றி

செல்வன் said...

சரி...12 மணியாச்சு...காலையில் பள்ளிக்கு போகணும்.

நாளை 500 எட்டிடுவோம்

Sivabalan said...

இகொ,

சாபிட்டுவிட்டு வந்தரேன்...

கொஞ்சம் பண்னுங்க..

Sivabalan said...

இகொ

சாபிட்டுவிட்டு வந்தரேன்...

கொஞ்சம் Wait பண்னுங்க..

இலவசக்கொத்தனார் said...

//இது நல்லாருக்கு, வும்மா நெலமை இப்பிடி ஆகிப்பூச்சே இலவசம்... :-)))) சிங்கில் கஷ்டமர வச்சு நூறு அடிக்கணுமின்ன அது இப்படிப்பா... //

100 என்னா? நம்ம டாலர் மாதிரி ஒரு பார்ட்டி கிடைச்சா 500ஏ அடிப்போமில்ல...

ILA(a)இளா said...

டெம்ப்ளேட் சரி பண்ணியாச்சுங்க. குளிச்சாமோ, பல் விளக்கினோமோ இல்லாயோ, இத சரி பண்றத சரியா பண்ணிட்டோம்

இலவசக்கொத்தனார் said...

//இன்னும் எத்தனை 50,எத்தனை நூறு வர இருக்கு.50க்கெல்லாமா நன்றி சொல்வது?இருங்க...1000 ரொம்ப கிட்டதான் இருக்கு:))) //

ஆமாம் ஆமாம். ஒரு மணி நேரத்தில் 50ன்னா ஒரு நாளுக்குள்ளாகவே நடக்கும்.

ஆனாலும் படிப்படியா போகணும், ஒவ்வொரு படிக்கும் நன்றி சொல்லணும். சரிதானே எஸ்.கே?

இலவசக்கொத்தனார் said...

//நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி,நன்றிக்கு நன்றிக்கு நன்றிக்கு நன்றி //

யப்பா ராசா, இளா.வந்துட்டையா? முதல்ல இந்த பதிவு தமிழ்மணத்துல வர வழியை பாரப்பா....

இலவசக்கொத்தனார் said...

//சரி...12 மணியாச்சு...காலையில் பள்ளிக்கு போகணும்.

நாளை 500 எட்டிடுவோம் //

11:45 ஆவுது! சரி போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்குப் பார்க்கலாம்.

ILA(a)இளா said...

சிவபாலன் சாப்பிட்டு வந்து சொல்லுங்க, தமிழ்மணத்துல சங்கம் பதிவு வருதான்னு இல்லைன்னாக்கா மக்கள் எனக்கு பின்க்-ஸ்லிப் தந்துருவாங்க.

இலவசக்கொத்தனார் said...

//இகொ,

சாபிட்டுவிட்டு வந்தரேன்...

கொஞ்சம் பண்னுங்க.. //

என்னா பண்ணணும்? சாப்பாட்டையா? வேணும்னா நம்ம ஸ்பெஷாலிட்டி கொத்து பரோட்டா பண்ணித்தரேன்.

இலவசக்கொத்தனார் said...

//இகொ

சாபிட்டுவிட்டு வந்தரேன்...

கொஞ்சம் Wait பண்னுங்க.. //

ஓஹோ! வெயிட் பண்ணச் சொன்னீங்களா? சரி இருக்கேன். நிதானமா சாப்பிட்டு தெம்பா வாங்க.

இலவசக்கொத்தனார் said...

//டெம்ப்ளேட் சரி பண்ணியாச்சுங்க. குளிச்சாமோ, பல் விளக்கினோமோ இல்லாயோ, இத சரி பண்றத சரியா பண்ணிட்டோம் //

தமிழ்மணத்துல வருதா? பாத்தீங்களா? நல்லா இருப்பீங்க சாமி..

'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியில் வர மாதிரி தெரியலையே. கொஞ்சம் நல்லா பாத்து சொல்லுங்க....

ILA(a)இளா said...

கொத்ஸ், மொதல்ல அததாங்க பார்த்தேன். நம்ம சங்க தளபதி பல் கூட விளக்காமா சிறு-தகவல்(அதாங்க SMS) அனுபிச்சுட்டாரு. பின்னூட்டம் தான் இன்னும் வரலை.
பதிவு தமிழ்மண முகப்புல வந்த பிறகுதான் காப்பியே உள்ள இறங்கிச்சு.

இலவசக்கொத்தனார் said...

//சிவபாலன் சாப்பிட்டு வந்து சொல்லுங்க, தமிழ்மணத்துல சங்கம் பதிவு வருதான்னு இல்லைன்னாக்கா மக்கள் எனக்கு பின்க்-ஸ்லிப் தந்துருவாங்க. //

இளா, நீங்க வந்து கை வைக்கறதுக்கு முன்னாடியே 'அண்மையில் எழுதப்பட்டவை' பகுதியில் வந்தாச்சு, இப்போ வர வேண்டியது அடுத்த பகுதியில் - 'அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்'

ஜொள்ளுப்பாண்டி said...

பாரம் சுமந்த அட்லாஸ் கொத்ஸுக்கு ரொம்ப டேங்ஸ் !! :))

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், மொதல்ல அததாங்க பார்த்தேன். நம்ம சங்க தளபதி பல் கூட விளக்காமா சிறு-தகவல்(அதாங்க SMS) அனுபிச்சுட்டாரு. பின்னூட்டம் தான் இன்னும் வரலை.
பதிவு தமிழ்மண முகப்புல வந்த பிறகுதான் காப்பியே உள்ள இறங்கிச்சு. //

நல்லா சுட சுட காப்பிய இறக்கிட்டு அந்த வேலையையும் பாருங்க.

ILA(a)இளா said...

அதையும் ஒரு கை பார்த்துருவோம்ங்க கொத்ஸ். அப்படியே அப்படியே ஒரு மாசமா அட்லாஸ் வாலிபரா திறம்பட பதவி வகிச்சதுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போட்டுகிறேங்க.

ILA(a)இளா said...

விடிய காலை 3:30AM க்கு வெளியிட்ட என்னுடைய பதிவே இப்போதாங்க மறுமொழியாக்கப்பட்ட இடுகையில வருது, கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்.

இலவசக்கொத்தனார் said...

//அதையும் ஒரு கை பார்த்துருவோம்ங்க கொத்ஸ். அப்படியே அப்படியே ஒரு மாசமா அட்லாஸ் வாலிபரா திறம்பட பதவி வகிச்சதுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போட்டுகிறேங்க. //

இந்த பதிவு கான்செப்ட் படி நன்றிக்கு நன்றி. அப்போ ஓவிற்கு ஓவா? சரி, போட்டுடறேன்.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

இலவசக்கொத்தனார் said...

//விடிய காலை 3:30AM க்கு வெளியிட்ட என்னுடைய பதிவே இப்போதாங்க மறுமொழியாக்கப்பட்ட இடுகையில வருது, கொஞ்சம் பொறுத்து பார்ப்போம். //

பொறுத்தது போதும் பொங்கி எழு என்பவர்கள் மத்தியில் பொறுத்துத்தான் பார்ப்போமே என்று ஒரு குரலா? சரி. பொறுக்குகிறேன். ச்சீ. பொறுக்கிறேன்.

கைப்புள்ள said...

//5) இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றிப் பதிவு. சங்கத்திற்கு, வந்து படிச்சவங்களுக்கு, செய்ய வேண்டியதை சரியா செஞ்சவங்களுக்கு, எல்லாருக்கும் நம்ம நன்றி//

இதுக்குப் பேரு உங்க ஊருல 'டிஸ்கி'யா??????!!!!!

கைப்புள்ள said...

கொத்ஸ்!
நீங்க சொன்ன மாதிரியே நம்ம பின்னூட்ட ஸ்கோர் தமிழ்மணத்துல தெரியாம, போலிஸ்கார் கண்ணுல படாத படிக்கு பண்ணியாச்சு. இப்ப ஓகே தானே? என்ன ஒன்னு கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு. நீங்க அடுத்த வாட்டி அட்லாஸ் வாலிபரா சங்கத்துப் பக்கம் வரும் போது இப்பிடி நடக்காம பாத்துக்கறோம்.

இலவசக்கொத்தனார் said...

//இதுக்குப் பேரு உங்க ஊருல 'டிஸ்கி'யா??????!!!!!//

இதுக்கு அப்புறம் தனியா நன்றி சொல்லி பதிவு போட முடியும்? அதான் கிடைச்ச கேப்பில....ஹிஹி...

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்!
நீங்க சொன்ன மாதிரியே நம்ம பின்னூட்ட ஸ்கோர் தமிழ்மணத்துல தெரியாம, போலிஸ்கார் கண்ணுல படாத படிக்கு பண்ணியாச்சு. //

இப்படி பதிவையே தெரியாம பண்ணிட்டு, இது என்ன கீ.வி.மீ.ம.ஒ. ன்னு கதை? கொஞ்சம் கூட நல்லா இல்லை. ஆமா.

////இப்ப ஓகே தானே? என்ன ஒன்னு கொஞ்சம் லேட் ஆகிப் போச்சு. நீங்க அடுத்த வாட்டி அட்லாஸ் வாலிபரா சங்கத்துப் பக்கம் வரும் போது இப்பிடி நடக்காம பாத்துக்கறோம். //

அடுத்த வாட்டியா? ஏம்பா, இன்னும் எத்தனை பேரு இருக்காங்க? எல்லாருக்கும் இட ஒதுக்கீடு பண்ணி குடுங்கப்பா..

ILA(a)இளா said...

ஏதோ பிரச்சினை... நம்ம சங்கம் தமிழ்மண பின்னூட்ட இடத்துலையே வராம தில்லாலங்கடி காட்டுதே.

ILA(a)இளா said...

//இது என்ன கீ.வி.மீ.ம.ஒ. ன்னு கதை? //
இது என்னாங்கய்யா புது கதை?

கைப்புள்ள said...

//என்ன இது தமிழ்மணத்துல வரமாட்டேங்குதே. சங்கத்துல சொதப்பிட்டாங்களா?//

நடிப்பு கடவுளே! நீவிர் வாழ்க! வளர்க நிம் கொற்றம்!!!

கைப்புள்ள said...

//அடுத்த வாட்டியா? ஏம்பா, இன்னும் எத்தனை பேரு இருக்காங்க? எல்லாருக்கும் இட ஒதுக்கீடு பண்ணி குடுங்கப்பா...//

போங்க கொத்ஸ்! ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தான் பேராசை...அடுத்த வாட்டின்னா என்ன அடுத்த மாசமேவா? என்னிக்காச்சும் ஒரு நாள் அட்லாஸ் மாமாவாவோ, அட்லாஸ் பெரியப்பாவாவோ, அட்லாஸ் தாத்தாவாவோ வர மாட்டீங்களா? அதைச் சொல்ல வந்தேன்.
:)

SK said...

நாலு பதிவுல பாதி என் தலையை உருட்டி!

அதுக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டாம்யா!

அட் லீஸ்ட், கலாய்க்காவாவது இருக்கலாமல்!

அதுதான் சரின்னு வுட்டாலும்,
பின்னூட்டத்திலியும் போட்டு இந்தத் தாக்கு தாக்குருங்கிளீயே ஐயா....

நா உங்களுக்கு என்னய்யா
பண்ணினேன்.

நன்றி சொன்னது ஒரு தப்பாய்யா!

மதிச்சு பின்னூட்டம் போட்டவங்களை மதிச்சது ஒரு தப்பாய்யா!

சுத்த சிறுபிள்ளைத்தனமா இருக்குய்யா உங்க போக்கு!

இதுல நன்றி மறவா செல்வன் வேற!
கூட ஒத்து ஊதிக்கிட்டு!

நல்லா இருங்க சாமி....... நல்ல்ல்ல்லாஇருங்க!
அவ்வ்வ்வ்வ்வ்...........

Prabu Raja said...

இவங்க ரவுசுக்கு அளவே இல்லாம போய்ட்டிருக்கே!

நாகை சிவா said...

கொத்துஸ், நான் வருவதுக்கு முன்பே 84 ஆச்சா.
சரி, அடிச்சு ஆடலாம் என்று பார்த்தால், இளா வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்து விட்டார். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.

நாகை சிவா said...

சங்கத்தின் இந்த மாத அட்லாஸ் வாலிபராக இருந்து சங்கத்தை சிறப்பித்ததுக்கு நன்றி நன்றி நன்றி பல கோடி.

நாகை சிவா said...

கொத்துஸ், உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தாங்கஸ். நன்றி பதிவு போட்ட சங்கத்து சிங்கங்களை கண்டுக்காமல் எஸ்.கே.வையும் இட்லி வடையையும் மட்டும் கவனித்து கலாய்த்தீர்கள் பாருங்க. அங்க தாங்க நீங்க நிக்கிறிங்க.

ஆனாலும் நம்ம எஸ்.கே. வந்து, நீங்க மட்டும் 500 பின்னூட்டம் வாங்கலாம். நான் கேவலம் ஒரு 70-80 பின்னூட்டம் வாங்க கூடாதா என்று கேட்பார் என்று பார்த்தேன். ஹுக்கும் கேட்கல....

நாகை சிவா said...

//டிஸ்கிக்கள் //
1, எங்க நைனா புதருக்குள் இல்லை.

2, நம்பிட்டோம்

3, ஆம், நீங்களும் காரணம் இல்லை. அது போல நாங்களும் காரணம் இல்லை.

4, யாருங்க அந்த நோயர்? ;)

5, நன்றி. நன்றி. நன்றி......

ILA(a)இளா said...

//அங்க தாங்க நீங்க நிக்கிறிங்க//
நின்னுகிட்டே இப்படின்னா உக்காந்து ஆர அமற யோசிச்சு பதிவு போட்டா, ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தல சுத்துது..

ILA(a)இளா said...

//கொஞ்சம் யோசனையா இருக்கு. //
அட யோசனை பண்ணிபுட்டு இத்தனை பின்னூட்டமா? புரிஞ்சி போச்சுய்யா புரிஞ்சி போச்சுய்யா

ILA(a)இளா said...

//ரொம்ப அடி வாங்கப் போறேனோ//
இந்த ஒரு மாசம் வாங்கின அடிய விடவா இப்போ விழுந்துறப்போகுது?

ILA(a)இளா said...

ஐயோ ஐயோ ஏந்தான் இப்படி நடக்குதோ தெரியல.... :(

ILA(a)இளா said...

கொத்ஸ், பின்னூட்ட கயமைத்தனம் வாக்கு முடிவு போட்டாச்சே, பார்த்தீங்களா? சங்கம் வலது பக்கமா இருக்கு.. பார்த்துக்குங்க மக்களே இதுக்கு எல்லாம் நாங்க பொறுப்பு இல்ல

ILA(a)இளா said...

அப்பாடா தமிழ்மணத்துல சங்கம் பின்னூட்ட பகுதியில் வந்துருச்சு. ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அப்பப்ப்பாஆ

துளசி கோபால் said...

இவ்வளவு சொன்னவர் இந்த 'அட்லாஸ்' என்னன்னு 'அட்லாஸ்ட்'டா சொல்லி இருக்கலாம்லெ? அட்லீஸ்ட்....

மனதின் ஓசை said...

??

மனதின் ஓசை said...

இதை வெளியிடுங்க.. பின்னாடியே வந்து delete பன்னிடறேன்... count ஏரிடும்..என்ன நாஞ்சொல்லுறது?

மனதின் ஓசை said...

இதை வெளியிடுங்க.. பின்னாடியே வந்து delete பன்னிடறேன்... count ஏரிடும்..என்ன நாஞ்சொல்லுறது?

மனதின் ஓசை said...

இதை வெளியிடுங்க.. பின்னாடியே வந்து delete பன்னிடறேன்... count ஏரிடும்..என்ன நாஞ்சொல்லுறது?

மனதின் ஓசை said...

இதை வெளியிடுங்க.. பின்னாடியே வந்து delete பன்னிடறேன்... count ஏரிடும்..என்ன நாஞ்சொல்லுறது?

மனதின் ஓசை said...

100 ஆச்சா?

தேவ் | Dev said...

//இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. //

தலைவா நாம என்னிக்குப் பதிவோட ஆட்டத்தை முடிச்சுருக்கோம்... வரலாற்றில் இந்த வாக்கியம் உங்கள் வாக்குச் சறுக்குலை அல்லவா சொல்லும்...

இன்னிக்குத் தான் பின்னூட்ட ஆட்டமே ஸ்டார்ட் ஆகி இருக்கு அதுக்குள்ளே முடிஞ்சுப் போச்சு பேசிக்கிட்டு... சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு

தேவ் | Dev said...

இந்தப் பின்னூட்டம் மூலம் பேரன்பு கொண்டு தேன் கூடு அமைப்பாளர்களிடம் நாம் வேண்டி கேட்டுக் கொள்வ்து என்னவென்றால் பதிவுகளுக்காக்ப் போட்டி நடத்துவதுப் போல் பின்னூட்டங்களுக்காக ஒரு போட்டி நடத்தி அதில் நிரந்தர வெற்றியாளராய் எங்கள் தலைவர் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் அறுசுவைத் தமிழ்ன் பின்னூட்டப் புயல் இலவ்சக் கொத்தனாரை அறிவிக்க வேண்டுமென மகா தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
தேவ்
பின்னூட்டப் புயல் இ.கொ. தலைமை நற்பணி மன்றம்
இந்தியா.

தேவ் | Dev said...

ஆமா. தலைவரே.. இந்த எஸ்.கேவுக்கு உங்களுக்கும் என்னப் பிரச்சனை?

இல்ல அவரைத் தாக்கி எதுனாச்சும் போஸ்ட்டர் போடுனுமா... இல்ல அவர் பின்னூட்டப் பொட்டி ப்யூஸ் பிடுங்கி விடணுமா? இல்லன்னா அவரை த் திட்டி நம்ம ஊரு கேபிள் டி.வி.யிலே ஆங்கிலத்துல்ல பேட்டி கொடுக்கணுமா? சொல்லுத் தலைவா...

மன்ற பணி செய்ய உங்கள் ரசிகர்கள் நானூத்து நாப்பதே முக்கால் லட்சம் ரசிகர்க்ளும் துடித்துப் போய் உள்ளனர்.

அப்புறம் நீங்கக் கொடுக்கிற மால் பொறுத்து டீ குடிக்கிற போராட்டம், விளக்குமாரு வீசும் போராட்ட்ம் எனவும் தூள் கிளப்பலாம்... என்னச் சொல்லுறீங்க?

மகேந்திரன்.பெ said...

இப்பின்னூட்டம் பதிவு சார்ந்தது இல்லன்னாலும் உங்களுக்கு ஒரு சேதி இருக்கு நம்ம சிவபாலன் அவர்கள் ஆரம்பிச்சு வச்ச நூலகம் தொடர தொடர்ந்து தொடர எத்தன தொடர்? யாராவது நாலுபேர (இதென்னா கணக்கு?) கூப்புடுனுமாம் நீங்களும் உங்கள்ட்ட இருக்கிர புத்தகம் பத்தி எழுதிடுங்கய்யா புண்ணியமா போகும் இல்லன்னா அப்றமா குவாட்டர் கோவிந்தன் பின்னூட்டம் போட்டோ இல்ல மப்புல முழு பதிவும் போட்டோ உங்கள தாக்கி பேச ஆரம்பிப்பார் ஆமா சொல்லிட்டேன் :)
உங்களுக்கு நான் விடுத்த அழைப்பு இங்கே இருக்கு
http://paarima.blogspot.com/2006/07/blog-post_31.html

சிவபாலன் எல்லாருக்கும் விட்ட அழைப்பு இங்க இருக்கு
http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_28.html

ILA(a)இளா said...

//நானூத்து நாப்பதே முக்கால் லட்சம் ரசிகர்க்ளும்//
கணக்குல ஒன்னு குறையுதே.

ILA(a)இளா said...

//விளக்குமாரு வீசும் போராட்ட்ம் எனவும் தூள் கிளப்பலாம்//
ஒத்துகிறேன், நீ ஒரு ...பையன் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

//ஏதோ பிரச்சினை... நம்ம சங்கம் தமிழ்மண பின்னூட்ட இடத்துலையே வராம தில்லாலங்கடி காட்டுதே. //

அட என்ன இது 10 பின்னூட்டத்துக்கு ஒரு தடவை இதையே சொல்லிக்கிட்டு....

கப்பி பய said...

பின்னூட்ட வளர்ச்சிக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்யும்
'அட்லாஸ் வாலிபர்',
'அட்லாண்டிக் கண்ட அண்ணா',
'பின்னூட்ட பிஸ்தா',
'இலவச இமயம்'
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
இலவசக்கொத்தனார் வால்க..வால்க..வால்க...

இலவசக்கொத்தனார் said...

////இது என்ன கீ.வி.மீ.ம.ஒ. ன்னு கதை? //
இது என்னாங்கய்யா புது கதை?//

அட என்னா பசங்கடா நீங்க. எல்லாத்தையும் விவரமா சொல்லணும் போல இருக்கு.

கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு

இப்போ புரியுதா?

இலவசக்கொத்தனார் said...

////என்ன இது தமிழ்மணத்துல வரமாட்டேங்குதே. சங்கத்துல சொதப்பிட்டாங்களா?//

நடிப்பு கடவுளே! நீவிர் வாழ்க! வளர்க நிம் கொற்றம்!!!//

அட என்னது இது? உண்மையை உண்மையா சொன்னா நடிப்பு கடவுளா? ஏன் சொல்ல மாட்டீங்க. அடுத்தது சிலை வைப்பீங்க. ஆட்சி மாறி லாரி வந்தா, என் மண்டை இல்ல உடையும். போங்கப்பா, போயி வேற வேலை இருந்தா பாருங்க.

தேவ் | Dev said...

//ஒத்துகிறேன், நீ ஒரு ...பையன் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன். //


வேளாண் தோழரே உங்கள் நக்கல் நல்லா இல்ல.. இது எங்கள் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் பதிவு..
சோ நீங்க அவரை மட்டுமே புகழவோ இகழவோ செய்யலாம்... ரூல் புக்கைப் படிச்சுட்டு வந்து ஆட்டம் போடணும் புரியுதா ...?

இலவசக்கொத்தனார் said...

//போங்க கொத்ஸ்! ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தான் பேராசை...அடுத்த வாட்டின்னா என்ன அடுத்த மாசமேவா? என்னிக்காச்சும் ஒரு நாள் அட்லாஸ் மாமாவாவோ, அட்லாஸ் பெரியப்பாவாவோ, அட்லாஸ் தாத்தாவாவோ வர மாட்டீங்களா? அதைச் சொல்ல வந்தேன்.
:)//

ஓ! அப்படி சொல்லறீங்களா. அப்பவும் என் அக்கா பையனோ, என் தம்பி பொண்ணோ, அல்லது என் பேரனோ பேத்தியோதானே எழுதணும்? அப்போ நான் ஓக்கே. :D

ILA(a)இளா said...

//ஆட்சி மாறி லாரி வந்தா//
ஆட்டோதானே வரும், உருட்டுகட்டை, ஆசிட் எல்லாம்தான் கேள்விபட்டு இருக்கோம். இப்போ லாரியா?

இலவசக்கொத்தனார் said...

//நல்லா இருங்க சாமி....... நல்ல்ல்ல்லாஇருங்க!
அவ்வ்வ்வ்வ்வ்...........//

ஆஹா! நல்லா காமெடி பண்ணறீங்க சாமி. வர வர எனக்கு நீங்க வெறும் எஸ்.கே வா அல்லது என்.எஸ்.கே வான்னு சந்தேகமே வருது. :D

தேவ் | Dev said...

செல்வன் பயமுறுத்துன லெவலைப் பார்த்தா எப்படியும் தலைவரைப் பொழுது சாய்றதுக்குள்ளே முகம் வேற கைகால வேறன்னு பொளந்துப் பில்லர் கட்டி வைப்பாய்ங்கன்னு நம்பி ரசிகர் மன்ற நிதியில்ல நாலே முக்கால் டஜன் ஆப்பிளும் ஒண்ணெ முக்கால் கிலோ திராட்சையும்... துபாய்ல்ல இரண்டே முக்கால் டன் பேரீச்சம் பழமும் வாங்கி வச்சுட்டுக் காத்துக் கிடந்தா ஒரு பய அவரைச் சீண்ட மாட்டேன்கிறானே.. சரி அம்புட்டையும் எதாவது ஜுஸ் கடைக்குக் கொடுத்து ஒரு விலை வாங்கிற வேண்டியது தான்...

இலவசக்கொத்தனார் said...

//இவங்க ரவுசுக்கு அளவே இல்லாம போய்ட்டிருக்கே!//

வாங்க பிரபு. ஆமாம் நீங்க சொல்லறது சரி. இவனுங்க ரவுசு தாங்க முடியைஅ. இப்பவும் பாருங்க. நான் ஒரு பதிவு போட்டா பதிலுக்கு போட்டி பதிவு போடறாங்க, இந்த சங்கப் பசங்க. நல்ல வேளை நீங்களாவது கேட்டீங்களே.

(ஆமாம், நீங்களும் இதைத்தானே தட்டிக் கேட்டீங்க?)

ILA(a)இளா said...

////இது என்ன கீ.வி.மீ.ம.ஒ. ன்னு கதை? //
//கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு //

ஆஹா, கொத்ஸ் மண்டூகங்களுக்கு நல்லாவே தனிப்பயிற்சி தராருப்பா. கண்டிப்பா அவர் போய்தான் ஆகனுமா? நான் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கே.

தேவ் | Dev said...

சரி இனியும் சும்மா இருக்கக் கூடாது...

எஸ்.கேவிற்கு இருப்பதாகச் செல்வன் புரூடா விட்ட ரசிகர் மன்ற கண்மணிகள் யாராவ்து இருந்தால்... வீரமுள்ள ரசிகர் யாராவது மெய்யாங்காட்டியும் இருந்தா...எங்கே வந்து எங்க பின்னூட்டப் புயல் மேல வந்து கை வைங்கப் பார்க்கலாம்....

(ஸ்ப்ப்பா முடிஞ்ச அள்வுக்கு ஏத்தி விட்டு அழ்குப் பார்த்தாச்சு)

இலவசக்கொத்தனார் said...

//கொத்துஸ், நான் வருவதுக்கு முன்பே 84 ஆச்சா.
சரி, அடிச்சு ஆடலாம் என்று பார்த்தால், இளா வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்து விட்டார். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.//

அதுல என்ன ரோசனை? விட்டுத்தள்ளுங்க. இதுக்கெல்லாம் நம்ம கிட்ட ரெடி மேட் பதில் இருக்கில்ல.

1) போலி வாக்குகள் எல்லாம் எடுத்து விட்டால் நாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைவது நிச்சயம் என அனைவரும் அறிவர்....

2) சரி. பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவிக்க முன் வந்தனர். ஆனால் நம் வழக்கம் என்ன? சிறுபான்மையினர் நலம் எந்த விதத்திலும் கெடாமல் இருக்க வேண்டுமல்லவா? ஆகவே, அவர்களின் நலத்தை கவனத்தில் கொண்டு இந்த பின்னூட்ட கயமைத்தனம் மீண்டும் தொடரும் என அறுதியிட்டு உறுதி கூறுகிறோம்.....

இப்படி எதாவது சொல்லிக்கலாம் விடுங்க.

தேவ் | Dev said...

//பின்னூட்ட வளர்ச்சிக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்யும்
'அட்லாஸ் வாலிபர்', 'அட்லாண்டிக் கண்ட அண்ணா',
'பின்னூட்ட பிஸ்தா',
'இலவச இமயம்'
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
இலவசக்கொத்தனார் வால்க..வால்க..வால்க...
//

கொத்ஸ்ண்ணா.. வாங்குனக் காசுக்கு மேல கூவுறாரு கப்பி... இதுக்கு நான் பொறுப்பு இல்ல.. டக்குன்னு செல் போனை ஆப் பண்ணி வைங்க.. ராத்திரி யாராவது புஷ் கட்சிகாராயங்க நாராசமாத் திட்டி திருப்பாச்சி நீட்டப் போறாயங்க... ஆமா

இலவசக்கொத்தனார் said...

//சங்கத்தின் இந்த மாத அட்லாஸ் வாலிபராக இருந்து சங்கத்தை சிறப்பித்ததுக்கு நன்றி நன்றி நன்றி பல கோடி.//

ஆனா ஒண்ணுபா. இதெல்லாம் சரியா சொல்லிடறாங்க. மரியாதை தெரிஞ்ச பசங்க.

நன்றிக்கு நன்றி.

நாகை சிவா said...

//எஸ்.கேவிற்கு இருப்பதாகச் செல்வன் புரூடா விட்ட ரசிகர் மன்ற கண்மணிகள் யாராவ்து இருந்தால்... வீரமுள்ள ரசிகர் யாராவது மெய்யாங்காட்டியும் இருந்தா...எங்கே வந்து எங்க பின்னூட்டப் புயல் மேல வந்து கை வைங்கப் பார்க்கலாம்....//
தேவ், வேணாம் இத்தோட நிறுத்திக்கோ. என்ன தான் இருந்தாலும் எஸ்.கே., நம்ம சங்கத்தின் நிரந்திர அவை புலவர். உன்ன வாழ்த்தி அவர் கவுஜ சொல்லவில்லை என்று காழ்ப்புணர்ச்சி காரணமாக நீ கொத்துஸ்க்கு ஒத்து ஊதுவது சரியில்லை. எஸ். கே. சார்பாக நம்ம இளா அவர்களை உன்னை வன்மையாக கண்டிக்கும்படி வேண்டுகிறேன்.
பின்னூட்ட புயல் மேல் கை வைக்கும் வேலையை நம்ம தல கைப்பூ பார்த்துக் கொள்ளவார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேவ் | Dev said...

// போலி வாக்குகள் எல்லாம் எடுத்து விட்டால் நாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைவது நிச்சயம் என அனைவரும் அறிவர்....//

DNN நியூஸ்ல்ல இதையேத் தான்ண்ணா சொன்னாங்க...

DNN - DUBAKOOR NEWS NETWORK.

யப்பா இளா அப்படின்னா? இப்படின்னா? நீர் கேள்வி குடையறதுக்கு முன்னாடியே என்னன்னு சொல்லியாச்சு.

நாளைக்குப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் பேட்டி அதுல்ல வருது கேட்கத் தவறாதீர்கள்

இலவசக்கொத்தனார் said...

//கொத்துஸ், உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் தாங்கஸ். நன்றி பதிவு போட்ட சங்கத்து சிங்கங்களை கண்டுக்காமல் எஸ்.கே.வையும் இட்லி வடையையும் மட்டும் கவனித்து கலாய்த்தீர்கள் பாருங்க. அங்க தாங்க நீங்க நிக்கிறிங்க.//


சங்கத்துல யாரு போட்டா? நம்ம சிங்கம்புலி நம்ம ஸ்டைலில் ஒண்ணு போட்டாரு. அது பரவாயில்லை. அப்புறம் அந்த தளபதி இங்க எல்லாம் வராம அப்ஸ்காண்ட் ஆனாலும் கட்டாயத்தின் பேரில் ஒரு பதிவு போட்டதா சொன்னாங்க. அவர்தான் இங்க வராம போனதுனால சங்க உறுப்பினராவே இருக்கக் கூடாதுன்னு தீர்மானம் போட்டுட்டீங்க. அதனால அவரும் இல்லை. வேற யாருப்பா?

//ஆனாலும் நம்ம எஸ்.கே. வந்து, நீங்க மட்டும் 500 பின்னூட்டம் வாங்கலாம். நான் கேவலம் ஒரு 70-80 பின்னூட்டம் வாங்க கூடாதா என்று கேட்பார் என்று பார்த்தேன். ஹுக்கும் கேட்கல....//

ஒரு பின்னூட்டம்னாலும் ஒரு பின்னூட்டம். அதைப் போயி கேவலம் அப்படி இப்படின்னு சொன்னா எனக்கு கோவம் வரும் ஆமாம்.

தேவ் | Dev said...

//தேவ், வேணாம் இத்தோட நிறுத்திக்கோ. என்ன தான் இருந்தாலும் எஸ்.கே., நம்ம சங்கத்தின் நிரந்திர அவை புலவர். உன்ன வாழ்த்தி அவர் கவுஜ சொல்லவில்லை என்று காழ்ப்புணர்ச்சி காரணமாக நீ கொத்துஸ்க்கு ஒத்து ஊதுவது சரியில்லை.//

இதைப் படிச்சு நான் பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்.. உனக்கு வைக்க கண்ணி வெடிக்குக் கூட ஆர்டர் கொடுத்துட்டேன்.

//பின்னூட்ட புயல் மேல் கை வைக்கும் வேலையை நம்ம தல கைப்பூ பார்த்துக் கொள்ளவார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். //

ஆனா இதைப் படிச்சதும் பொங்குன பீர்ல்ல குளிச்சுக் குப்புறப் படுத்த மாதிரி குளுந்துப் போயிட்டேன். நீ கொள்கை குலக் கொழுந்துடா புலி

ILA(a)இளா said...

//எங்கே வந்து எங்க பின்னூட்டப் புயல் மேல வந்து கை வைங்கப் பார்க்கலாம்....//
எத்தனை பின்னூட்டம் வேணும்?

இலவசக்கொத்தனார் said...

////டிஸ்கிக்கள் //
1, எங்க நைனா புதருக்குள் இல்லை.

2, நம்பிட்டோம்

3, ஆம், நீங்களும் காரணம் இல்லை. அது போல நாங்களும் காரணம் இல்லை.

4, யாருங்க அந்த நோயர்? ;)

5, நன்றி. நன்றி. நன்றி......//


1. சொன்னா சரி.
2. நம்பியதற்கு நன்றி.
3. அதான் காரணமுன்னு வேற ஒருத்தரை கை காமிச்சாச்சே.
4. நம்ம என்.எஸ்.கே தான்!
5. நன்றிக்கு நன்றி. நன்றிக்கு நன்றி. நன்றிக்கு நன்றி.

இலவசக்கொத்தனார் said...

//நின்னுகிட்டே இப்படின்னா உக்காந்து ஆர அமற யோசிச்சு பதிவு போட்டா, ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தல சுத்துது..//

நிக்கறது, உட்காரரது பத்திப் பேசினா தலை சுத்துதா? அப்படி ஓரமாய் போயி படுத்துக்க என்ன?

தேவ் | Dev said...

//எங்க பின்னூட்டப் புயல் மேல வந்து கை வைங்கப் பார்க்கலாம்....//

என்னாது இது யாரையும் காணும்.. செல்வன் சும்மா வெளையாண்டுட்டுப் போயிருக்கார்... பின்னூட்டப் புயலை அவ்வளவுச் சீக்கிரம் அடிச்சுற முடியுமா என்ன? நான் நீங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?

இலவசக்கொத்தனார் said...

//அட யோசனை பண்ணிபுட்டு இத்தனை பின்னூட்டமா? புரிஞ்சி போச்சுய்யா புரிஞ்சி போச்சுய்யா//

இளா, விளக்கமா சொல்லுங்க. என்ன புரிஞ்சுது? எப்பவுமே தப்பான பொருள்தானே தோணும். இதுவும் அப்படியான்னு பார்த்திடலாம்.

நாகை சிவா said...

//கொத்ஸ்ண்ணா.. வாங்குனக் காசுக்கு மேல கூவுறாரு கப்பி... இதுக்கு நான் பொறுப்பு இல்ல.. //
இதே டவுட் தான் தேவ், நீ எவ்வளவு பேசுன. பேசுனப்ப சரியா சொன்னியா, பணம் இந்திய ரூபாயில் தான் என்று, கப்பி பாட்டுக்கு டாலர் என்று தவறாக நினைத்து கூவி இருக்க போறாரு. கப்பி அப்படி ஏதும் இருந்தால் நாங்க பொறுப்பு இல்லை. சொல்லிட்டோம்.

இலவசக்கொத்தனார் said...

//இந்த ஒரு மாசம் வாங்கின அடிய விடவா இப்போ விழுந்துறப்போகுது?//

இது வரை அங்க இங்க டைவர்ட் பண்ணி விட்டு காலத்தை ஓட்டியாச்சு, அதான் கடைசிப் பதிவில் மாட்ட மனசு வரலை!

போங்க தம்பி, இதையெல்லாம் கேட்டுக்கிட்டு.

ILA(a)இளா said...

// நீ கொள்கை குலக் கொழுந்துடா புலி //
என் இனம்டா இனி

இலவசக்கொத்தனார் said...

//ஐயோ ஐயோ ஏந்தான் இப்படி நடக்குதோ தெரியல.... :(//

இது என்ன? ஓ! அந்த மறுமொழி மேட்டரா? அதுக்குள்ளவா அடுத்த 10 பின்னூட்டம் வந்திருச்சு. சும்மா சொல்லக் கூடாதைய்யா. சரியா வந்துடற. வெரி குட்.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ், பின்னூட்ட கயமைத்தனம் வாக்கு முடிவு போட்டாச்சே, பார்த்தீங்களா? சங்கம் வலது பக்கமா இருக்கு.. பார்த்துக்குங்க மக்களே இதுக்கு எல்லாம் நாங்க பொறுப்பு இல்ல//

மேல நம்ம சிங்கம்புலிக்கு சொன்னதைப் பாருங்க. அதான் உங்களுக்கும்.

தேர்தல் முடிஞ்சாச்சா. அத அப்படியே விட்டுட்டு போயிகிட்டே இருக்கணும். இப்படி எல்லாம் கிண்டி கிளறுனா நல்லாவா இருக்கு?

ILA(a)இளா said...

//ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ் தல சுத்துது.//
எங்க தல சுத்துதுங்க கொத்ஸ், அதாவது எங்க அருமை அண்ணன் தலை கைப்பு சுத்துறாருன்னு சொன்னேன்(இப்படியும் கூட சமாளிக்கலாம்)

இலவசக்கொத்தனார் said...

//அப்பாடா தமிழ்மணத்துல சங்கம் பின்னூட்ட பகுதியில் வந்துருச்சு. ஷ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அப்பப்ப்பாஆ//

அப்பாடா. சரி இனி தொழிலை ஆரம்பிக்கலாமா?

(செஞ்சது எல்லாத்தையும் விட்டுட்டு பழைய டெம்பிளேடுக்கே போயாச்சு, இதுல என்னமோ பக் கண்டுபிடிச்சு பிக்ஸ் போட்டா மாதிரி அலுத்துக்கறது மட்டும் குறைச்சலே இல்லை. )

இலவசக்கொத்தனார் said...

//இவ்வளவு சொன்னவர் இந்த 'அட்லாஸ்' என்னன்னு 'அட்லாஸ்ட்'டா சொல்லி இருக்கலாம்லெ? அட்லீஸ்ட்....//

யாரைக் கேட்கறீங்க? அது அந்த சங்க ஆளுங்க சொன்னது. அவங்களையே கேளுங்க.

இவ்வளவு சொன்னவர் இந்த பதிவு பத்தி என்னவான்னா ஒரு வார்த்தையாவது 'அட்லீஸ்'டா சொல்லி இருக்கலாம்லெ? அட்லாஸ்ட்....

:-D

இலவசக்கொத்தனார் said...

//??//

!!

ILA(a)இளா said...

//சரியா வந்துடற. வெரி குட். //
கைப்பு மட்டும்தான் சரியா லேட்டா வருவார், நாங்கெல்லாம் சரியா வருவோம்.

ILA(a)இளா said...

//இளா, விளக்கமா சொல்லுங்க//
இதெல்லாம் சொல்லிதான் தெரியனுமா சொல்லுங்க.

இலவசக்கொத்தனார் said...

//இதை வெளியிடுங்க.. பின்னாடியே வந்து delete பன்னிடறேன்... count ஏரிடும்..என்ன நாஞ்சொல்லுறது?//

டிலீட் எல்லாம் பண்ணாதீங்க. ஏற்கனவே பதில் போட்டாச்சு.

இலவசக்கொத்தனார் said...

//இதை வெளியிடுங்க.. பின்னாடியே வந்து delete பன்னிடறேன்... count ஏரிடும்..என்ன நாஞ்சொல்லுறது?//

மீண்டும் பிளாக்கர் சொதப்பலா? இது மட்டும் சரியா நடக்குதப்பா.

ILA(a)இளா said...

//சரியா வந்துடற. வெரி குட். //
நீங்க அனுபிச்ச பின்னூட்டங்கள் ஃபார் டம்மீஸ் புத்தகம் படிச்ச பிறகு வந்த யானை தான்.. சே ஞானம்தான்

நாகை சிவா said...

//இதைப் படிச்சு நான் பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்.. உனக்கு வைக்க கண்ணி வெடிக்குக் கூட ஆர்டர் கொடுத்துட்டேன்.//
நீ பீர்ல குளிச்சு குப்பற படுத்துக்கோ இல்ல நேரா படுத்துக்கோ. ஆர்டர் கேன்சல் பண்ணுனியா இல்லையா, அத முதல் சொல்லு.

இலவசக்கொத்தனார் said...

//100 ஆச்சா?//

பிளாக்கர் சொதப்புனதையும் சேர்த்தாக் கூட வெறும் ஆறுதான் உங்க கிட்ட இருந்து. 100க்கு இன்னும் ரொம்ப தூரம் போகணும்.

ILA(a)இளா said...

//யாரைக் கேட்கறீங்க? அது அந்த சங்க ஆளுங்க சொன்னது. அவங்களையே கேளுங்க.

இவ்வளவு சொன்னவர் இந்த பதிவு பத்தி என்னவான்னா ஒரு வார்த்தையாவது 'அட்லீஸ்'டா சொல்லி இருக்கலாம்லெ? அட்லாஸ்ட்....//

ஐயோ, ஐயோ, கண்டிப்பா ஒரு விளக்கம் போட்டுதான் அடுத்த வாலிபரை களம் இறங்க சொல்லுவ்வோம். இதுவும் ஒரு தேர்தல் ஸ்டண்ட் தான்

தேவ் | Dev said...

//நீ பீர்ல குளிச்சு குப்பற படுத்துக்கோ இல்ல நேரா படுத்துக்கோ. ஆர்டர் கேன்சல் பண்ணுனியா இல்லையா, அத முதல் சொல்லு. //

யப்பா புலிக்குட்டி நீ டோண்ட் ஓர்ரி.. ஆர்டர்ல்ல அவசரத்துல்ல கொத்ஸ் பேருக்குச் சொல்லிட்டேன். அங்கிட்டு பார்சல் போயிருச்சாம்.. அதுன்னால நியும் பாருக்கு போய் பீர் அடிச்சுட்டு குப்புறவோ நேராவோ படுத்துக்க்லாம்....

கொத்ஸ் இந்த கண்ணி வெடி எல்லாம் உங்கள் தம்மாத்தூண்டு மேட்டர்.. அதை வாங்கி செல்வனுக்கோ எஸ்.கேவுக்கோ அனுப்பி என் ஜாய்...

பி.கு. மறுபடியும் எனக்கு மட்டும் அனுப்பிடாதீங்க.. ஆல் ரெடி இங்கிட்டு ஆபிஸ்ல்ல நிறைய கண்ணி இப்போவோ அப்போவோன்னு வெடிக்க ரெடியா இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசக்கொத்தனார் said...

//தலைவா நாம என்னிக்குப் பதிவோட ஆட்டத்தை முடிச்சுருக்கோம்... வரலாற்றில் இந்த வாக்கியம் உங்கள் வாக்குச் சறுக்குலை அல்லவா சொல்லும்...

இன்னிக்குத் தான் பின்னூட்ட ஆட்டமே ஸ்டார்ட் ஆகி இருக்கு அதுக்குள்ளே முடிஞ்சுப் போச்சு பேசிக்கிட்டு... சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு//

தம்பி தேவு, நீ இவ்வளவு உணர்ச்சிவசப்படறது எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? இப்படி ஒரு ர.ம.செ.த கிடைச்சதுக்கு நான் எவ்வளவு குடுத்து வைச்சுருக்கணும் தெரியுமா?

(என்னது? குடுத்து வைச்சது தெரிஞ்சதுனாலதான் இவ்வளவு சவுண்டா? கம்ன்னு இருப்பா. இதெல்லாம் சொல்லிக்கிட்டு)

ILA(a)இளா said...

//என்னமோ பக் கண்டுபிடிச்சு பிக்ஸ் போட்டா//
அட, பேட்ச் ரிலீஸ் நாளைக்குதான் சாமி...சங்க முதல்ல பேட்ச் ரிலீஸ் அப்புறம் தான் பிராடக்ட் ரிலீஸ், இது வாலிப வயசுக்கார கைப்பு ஸ்டைல்

இலவசக்கொத்தனார் said...

//தலைவா நாம என்னிக்குப் பதிவோட ஆட்டத்தை முடிச்சுருக்கோம்... வரலாற்றில் இந்த வாக்கியம் உங்கள் வாக்குச் சறுக்குலை அல்லவா சொல்லும்...//

தேவு. பதிவுதான் ஓவர்ன்னு சொன்னேனே தவிர பின்னூட்டம் ஓவர்ன்னு சொன்னேனோ? அப்படி சொல்லவும்தான் சொல்வேனோ?

இலவசக்கொத்தனார் said...

//இந்தப் பின்னூட்டம் மூலம் பேரன்பு கொண்டு தேன் கூடு அமைப்பாளர்களிடம் நாம் வேண்டி கேட்டுக் கொள்வ்து என்னவென்றால் பதிவுகளுக்காக்ப் போட்டி நடத்துவதுப் போல் பின்னூட்டங்களுக்காக ஒரு போட்டி நடத்தி அதில் நிரந்தர வெற்றியாளராய் எங்கள் தலைவர் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் அறுசுவைத் தமிழ்ன் பின்னூட்டப் புயல் இலவ்சக் கொத்தனாரை அறிவிக்க வேண்டுமென மகா தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
தேவ்
பின்னூட்டப் புயல் இ.கொ. தலைமை நற்பணி மன்றம்
இந்தியா.//

இதுதான்யா பாசம். நல்லா இருடே!

நாகை சிவா said...

//என்னமோ பக் கண்டுபிடிச்சு பிக்ஸ் போட்டா மாதிரி அலுத்துக்கறது மட்டும் குறைச்சலே இல்லை. ) //
இதுக்கே அண்ணாத்த பல் விளக்காம, குளிக்காம கஷ்டப்பட்டு போட்டு இருக்காரு. அவருக்கு படி அளக்கும் கம்பெனிக்கு கூட அவரு இம்புட்டு உழைத்து இல்ல தெரியுமா. கொத்துஸ் பின்னூட்டங்களுக்கு விளம்பரம் தடைப்படுவதை கண்டு தனக்கு தெரிந்த அனைத்து டகால்ட்டி வேலையை எல்லாம் பார்த்து உங்க பின்னூட்டங்களை முகப்பில் வர வச்சு இருக்காரு. அவரு போயி இப்படி தப்பா சொல்லிட்டீங்களே. எனக்கு ஒரே அழுக்காச்சியா வருது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசக்கொத்தனார் said...

//ஆமா. தலைவரே.. இந்த எஸ்.கேவுக்கு உங்களுக்கும் என்னப் பிரச்சனை?

இல்ல அவரைத் தாக்கி எதுனாச்சும் போஸ்ட்டர் போடுனுமா... இல்ல அவர் பின்னூட்டப் பொட்டி ப்யூஸ் பிடுங்கி விடணுமா? இல்லன்னா அவரை த் திட்டி நம்ம ஊரு கேபிள் டி.வி.யிலே ஆங்கிலத்துல்ல பேட்டி கொடுக்கணுமா? சொல்லுத் தலைவா...//

பிரச்சனை எல்லாம் ஒண்ணுமில்ல. அவருதான் கேட்டு வாங்கிக்கறாரு, என்ன குடுத்தாலும் வாங்கிக்கறாரு, கிட்டத்தட்ட உங்க தலைக்கு உண்டான அத்தனை மேட்டரும் இருக்கு. ஆகவே....

//மன்ற பணி செய்ய உங்கள் ரசிகர்கள் நானூத்து நாப்பதே முக்கால் லட்சம் ரசிகர்க்ளும் துடித்துப் போய் உள்ளனர்.//

நம்ம பசங்க கிட்ட உணர்ச்சி வசப்பட வேண்டாமுன்னு சொல்லி வை. (இப்போ கைவசம் அவ்வளவு காசு இல்ல)

//அப்புறம் நீங்கக் கொடுக்கிற மால் பொறுத்து டீ குடிக்கிற போராட்டம், விளக்குமாரு வீசும் போராட்ட்ம் எனவும் தூள் கிளப்பலாம்... என்னச் சொல்லுறீங்க?//

நல்ல வேளை. சங்கத்துல மகளிர் அணி எல்லாம் இல்லையோ பொழச்சுது.

இலவசக்கொத்தனார் said...

மகேந்,

சுட்டிகள் குடுத்ததுக்கு நன்றி. நம்ம பசங்க யாராவது வெளிய சொல்லிக்கிற மாதிரி புத்தகம் எல்லாம் வச்சிருந்தீங்கன்னா போயி பதிவு போடுங்கப்பா.

இலவசக்கொத்தனார் said...

//கணக்குல ஒன்னு குறையுதே.//

ஒண்ணு இல்லப்பா. ரெண்டு. அது யாரு தெரியுமில்ல. நான் தூங்கற டயத்துக்க வந்து ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டு ஓடற உங்க தல. மற்றும் காணாமல் போட்டிப் பதிவு போடும் தள.

இலவசக்கொத்தனார் said...

//ஒத்துகிறேன், நீ ஒரு ...பையன் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன்.//

அந்த சிசு மேட்டர்தானே. ஆமாம். ஆமாம்.

இலவசக்கொத்தனார் said...

//பின்னூட்ட வளர்ச்சிக்காக தன் வாழ்நாளையே தியாகம் செய்யும்
'அட்லாஸ் வாலிபர்',
'அட்லாண்டிக் கண்ட அண்ணா',
'பின்னூட்ட பிஸ்தா',
'இலவச இமயம்'
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி
இலவசக்கொத்தனார் வால்க..வால்க..வால்க...//

தேவு, இந்த தம்பிக்கு எவ்வளவு குடுத்த, நம்ம பட்ஜெட்டுக்குள்ள வருமா? அடங்காது போல தெரியுதேன்னு கேட்டேன்.

இலவசக்கொத்தனார் said...

//வேளாண் தோழரே உங்கள் நக்கல் நல்லா இல்ல.. இது எங்கள் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் பதிவு..
சோ நீங்க அவரை மட்டுமே புகழவோ இகழவோ செய்யலாம்... ரூல் புக்கைப் படிச்சுட்டு வந்து ஆட்டம் போடணும் புரியுதா ...?//

தேவு, திரும்பி தப்புப் பண்ணறயே. யாரு வேணா யாரை வேணுமானாலும் நக்கலடிக்கலாம். ஆனா நக்கல் அடிக்கிற இடம் நம்ம பதிவா இருக்கணும். அதான் ரூல்.

இலவசக்கொத்தனார் said...

//ஆட்டோதானே வரும், உருட்டுகட்டை, ஆசிட் எல்லாம்தான் கேள்விபட்டு இருக்கோம். இப்போ லாரியா?//

மத்தது எல்லாம் இருக்கற ஆளுங்கள சிலையா மாத்த, சிலையாவே இருந்தா லாரிதான்.

இலவசக்கொத்தனார் said...

//சரி அம்புட்டையும் எதாவது ஜுஸ் கடைக்குக் கொடுத்து ஒரு விலை வாங்கிற வேண்டியது தான்...//

இவ்வளவு அவசரமா? இரு. உனக்கும் ஒரு நாள் வைக்கறேன்யா.... (அட பாராட்டு விழாவைச் சொன்னேன்.)

இலவசக்கொத்தனார் said...

//ஆஹா, கொத்ஸ் மண்டூகங்களுக்கு நல்லாவே தனிப்பயிற்சி தராருப்பா. கண்டிப்பா அவர் போய்தான் ஆகனுமா? நான் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கே.//

கவலை வேண்டாம். நம்ம பதிவுல ஒரு டூட்டோரியல் காலேஜ் ஆரம்பிக்கறேன். அங்க வந்துருங்க.

இலவசக்கொத்தனார் said...

//(ஸ்ப்ப்பா முடிஞ்ச அள்வுக்கு ஏத்தி விட்டு அழ்குப் பார்த்தாச்சு)//

அதான் ஒரு மாசமா அழகு பார்த்தாச்சே. இப்போ என்ன புதுசா?

ILA(a)இளா said...

//அவரு போயி இப்படி தப்பா சொல்லிட்டீங்களே. எனக்கு ஒரே அழுக்காச்சியா வருது. //
வாப்பா என் சிங்கமே, என் கஷ்டம் உனக்காவது புரியுதே.(ஹ்ம்ம் என்னம்மோ பண்ணி பார்த்தாச்சு, புது வார்ப்புரு நம்ம தலை விட பெரிய டகால்டியா இருக்குது). அதுக்கு வெச்சு இருக்கேன் ஒரு ஆப்பு

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்ண்ணா.. வாங்குனக் காசுக்கு மேல கூவுறாரு கப்பி... இதுக்கு நான் பொறுப்பு இல்ல.. டக்குன்னு செல் போனை ஆப் பண்ணி வைங்க.. ராத்திரி யாராவது புஷ் கட்சிகாராயங்க நாராசமாத் திட்டி திருப்பாச்சி நீட்டப் போறாயங்க... ஆமா//


நாராசமா திட்டுவாங்களா? புதர் கட்சி போலிக்கு சப்போர்ட்டா? விடப்பா, வந்தா பாத்துக்க மன்ற கண்மணிகள் நீங்க இருக்கீங்களே. எனக்கு என்ன கவலை.

கப்பி பய said...

//கொத்ஸ்ண்ணா.. வாங்குனக் காசுக்கு மேல கூவுறாரு கப்பி... //

இதுக்கு தனியா போட்டு குடு நைனா..

ILA(a)இளா said...

இந்தப் பின்னூட்டம் மூலம் பேரன்பு கொண்டு தேன் கூடு அமைப்பாளர்களிடம் நாம் வேண்டி கேட்டுக் கொள்வ்து என்னவென்றால் பதிவுகளுக்காக்ப் போட்டி நடத்துவதுப் போல் பின்னூட்டங்களுக்காக ஒரு போட்டி நடத்தி அதில் நிரந்தர வெற்றியாளராய் எங்கள் தலைவர் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் அறுசுவைத் தமிழ்ன் பின்னூட்டப் புயல் இலவ்சக் கொத்தனாரை அறிவிக்க வேண்டுமென மகா தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
இளா
பின்னூட்டப் புயல் இ.கொ. தலைமை நற்பணி மன்றம்
விவசாயிகள் பாசறை.

ILA(a)இளா said...

//ஒத்துகிறேன், நீ ஒரு ...பையன் அப்படிங்கிறத ஒத்துக்கிறேன்.//

அந்த சிசு மேட்டர்தானே. ஆமாம். ஆமாம். //

கக்கக்கபோ. கொத்ஸ்

கப்பி பய said...

//இந்தப் பின்னூட்டம் மூலம் பேரன்பு கொண்டு தேன் கூடு அமைப்பாளர்களிடம் நாம் வேண்டி கேட்டுக் கொள்வ்து என்னவென்றால் பதிவுகளுக்காக்ப் போட்டி நடத்துவதுப் போல் பின்னூட்டங்களுக்காக ஒரு போட்டி நடத்தி அதில் நிரந்தர வெற்றியாளராய் எங்கள் தலைவர் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் அறுசுவைத் தமிழ்ன் பின்னூட்டப் புயல் இலவ்சக் கொத்தனாரை அறிவிக்க வேண்டுமென மகா தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
இளா
பின்னூட்டப் புயல் இ.கொ. தலைமை நற்பணி மன்றம்
விவசாயிகள் பாசறை//


வழிமொழிவது மாண்டிவிடியோ 22-ம் வட்ட 'குடி'யிருப்போர் நல்வாழ்வு சங்கம்...

Sivabalan said...

இகொ,

ரொம்ப நேரம் Wait பண்னுனிங்களா... மன்னிச்சுடுங்க...

சாப்பிட்டு உட்காந்தா தூக்கம் சுகமா வந்தது.. சேரின்னு தூங்க போயாச்சு...

சேரி ஒரு Attendance கொடுக்கலாமேன்னு தான் வந்தேன்...

ILA(a)இளா said...

இந்த மாதிரி நம்ம சங்கத்திலேயும் நடந்து இருக்குமோ
அட காமெடி பத்தி சொன்னேன் சாமி.

இலவசக்கொத்தனார் said...

//பின்னூட்ட புயல் மேல் கை வைக்கும் வேலையை நம்ம தல கைப்பூ பார்த்துக் கொள்ளவார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.//

ஏம்பா அவரை போயி தொந்தரவு பண்ணிக்கிட்டு. அவரே அவரு சங்கத்துக்கு நான் இல்லாத நேரமா பாத்து வர வேண்டிய நிலமையில் இருக்காரு. நீங்க வேற சும்மா ஏத்தி விட்டுக்கிட்டு.

இலவசக்கொத்தனார் said...

//யப்பா இளா அப்படின்னா? இப்படின்னா? நீர் கேள்வி குடையறதுக்கு முன்னாடியே என்னன்னு சொல்லியாச்சு.
//

என்னா கேள்வி? என்னா பதிலு?

ILA(a)இளா said...

ருத்துகளை ச்சிதமாக வ்வுகிறீகள் போங்கள்,
இதுதான் கக்கக்க போ வின் உள் அர்த்தம். பின்னூட்டம் ஃபார் டம்மீஸ் படிச்சதால வந்த ஞானம்

இலவசக்கொத்தனார் said...

//ஆனா இதைப் படிச்சதும் பொங்குன பீர்ல்ல குளிச்சுக் குப்புறப் படுத்த மாதிரி குளுந்துப் போயிட்டேன். நீ கொள்கை குலக் கொழுந்துடா புலி//

பீர்ல குளிச்சா பொடுகே வராதாம். கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வழுக்கை தல உனக்கு எதுக்கு இது?

இலவசக்கொத்தனார் said...

//எத்தனை பின்னூட்டம் வேணும்?//

நான் யாருப்பா இதான் வேணும் அதான் வேணும்ன்னு சொல்ல. எவ்வளவு வந்தாலும் தாங்கும்டா சாமி.

ILA(a)இளா said...

//ஏம்பா அவரை போயி தொந்தரவு பண்ணிக்கிட்டு//
அவரே ஓணான் படமும், அது கக்கா போறதையும் படம் புடிச்சுகிட்டு இருக்காரு,, அவர போயி....

இலவசக்கொத்தனார் said...

//என்னாது இது யாரையும் காணும்.. செல்வன் சும்மா வெளையாண்டுட்டுப் போயிருக்கார்... பின்னூட்டப் புயலை அவ்வளவுச் சீக்கிரம் அடிச்சுற முடியுமா என்ன? நான் நீங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?//

எதுக்கு இருக்கீங்களா? என்ன எல்லாம் சேர்ந்து அடிக்கப் போறீங்களா? ஓண்ணு மட்டும் சொல்லறேன், புயல் அடிக்கும். ஆனா புயலை அடிக்க முடியுமா?

இலவசக்கொத்தனார் said...

//இதே டவுட் தான் தேவ், நீ எவ்வளவு பேசுன. பேசுனப்ப சரியா சொன்னியா, பணம் இந்திய ரூபாயில் தான் என்று, கப்பி பாட்டுக்கு டாலர் என்று தவறாக நினைத்து கூவி இருக்க போறாரு. கப்பி அப்படி ஏதும் இருந்தால் நாங்க பொறுப்பு இல்லை. சொல்லிட்டோம்.//

தேவு, மொத்த காண்ட்ரேக்ட் பேசியாச்சு. இதுக்கு எல்லாம் தனியா வரக்கூடாது சொல்லிட்டேன்.

ILA(a)இளா said...

//எவ்வளவு வந்தாலும் தாங்கும்டா சாமி.//
சே, உங்க தியாக மனசு தெரிஞ்சுகிட்டு ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசக்கொத்தனார் said...

//// நீ கொள்கை குலக் கொழுந்துடா புலி //
என் இனம்டா இனி//

இளா, நீங்களுமா சிங்கம்புலி???

ILA(a)இளா said...

//புயல் அடிக்கும். ஆனா புயலை அடிக்க முடியுமா//
அட குத்து வசனம்.
அதாங்க PUNCH DIALOGUE

இலவசக்கொத்தனார் said...

//எங்க தல சுத்துதுங்க கொத்ஸ், அதாவது எங்க அருமை அண்ணன் தலை கைப்பு சுத்துறாருன்னு சொன்னேன்(இப்படியும் கூட சமாளிக்கலாம்)//

என்ன பண்ணறீங்களோ இல்லையோ. இந்த மாதிரி சமாளிப்பு மட்டும் சரியா செய்யுங்க.

ILA(a)இளா said...

//சமாளிப்பு மட்டும் சரியா செய்யுங்க//
வேற என்ன பண்ணிட்டு இருக்கோம்னு நெனச்சீங்க? இத மட்டும்தான் சரியா தப்பா பண்ணிட்டுஇருக்கோம்..

ILA(a)இளா said...

//இளா, நீங்களுமா சிங்கம்புலி??//
அதுக்கெல்லாம் அஞ்சு அறிவு இருக்காம். கோவிச்சுக்கப்போகுதுங்க., மண்டூகங்களுக்கு ஒன்னுதான் டம்மீஸ் பொஸ்தகுத்துல படிச்சேன்.

இலவசக்கொத்தனார் said...

//கைப்பு மட்டும்தான் சரியா லேட்டா வருவார், நாங்கெல்லாம் சரியா வருவோம்.//

முதல்ல அவரைக் காணும். அப்புறம் சிபி, அடுத்தது பெருசு. என்னய்யா ஆவுது?

இலவசக்கொத்தனார் said...

//இதெல்லாம் சொல்லிதான் தெரியனுமா சொல்லுங்க.//

சரியா புரிஞ்சுக்கிட்டீங்களான்னு பார்க்கத்தான்.....

ILA(a)இளா said...

ஐயா, கப்பி.. எங்களையும் நீங்க போட்ட ஒரு பின்னூட்டத்தை மறுக்க வெச்சுடீங்களே(குருதிப்புனல் கமல் மாதிரி படிச்சுக்குங்க).

கப்பி பய said...

//ஐயா, கப்பி.. எங்களையும் நீங்க போட்ட ஒரு பின்னூட்டத்தை மறுக்க வெச்சுடீங்களே(குருதிப்புனல் கமல் மாதிரி படிச்சுக்குங்க).//

பிரியுது..அப்பவே யோசிச்சேன்..

விடுங்கா பாஸ்...இதெல்லாம் சாதாரணப்பா..வொய் டென்சன்?

ILA(a)இளா said...

அப்பாடா, என்ன நினைச்சுக்குவீங்களோன்னு யோசிச்கிட்டு இருந்தேன். நன்றிங்க கப்பி...

இராம் said...

ஆஹா இது இன்னும் அடங்கலயா.... :-))))))

கப்பி பய said...

//அப்பாடா, என்ன நினைச்சுக்குவீங்களோன்னு யோசிச்கிட்டு இருந்தேன்.//

நீங்க ரொம்ப நல்லவருங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

SK said...

//ஆஹா! நல்லா காமெடி பண்ணறீங்க சாமி. வர வர எனக்கு நீங்க வெறும் எஸ்.கே வா அல்லது என்.எஸ்.கே வான்னு சந்தேகமே வருது. :D//

sariyaa sollittiinggaLE,, for a change!! :)

naan ungga SKthaan.

[surathaa kaalaiyil makkar seygiRadhu!!]

pEsikkitta padi royaltila 30% anuppi vessrungga!

SK said...

நான் 'உங்க' எஸ்.கே.தான்னு சரியா, [ஒரு தடவையாவது] சொன்னதற்கு நன்றி.

நாம்பாட்டுக்கு முருகான்னு போய்ட்டிருக்கென். என்னையப் போயி இந்த வாங்கு வாங்குறீங்களே!

இந்த சலசலப்புக்கெல்லாம் அசர்றவன் இல்லை இந்த எஸ்.கே.!

சிங்கம்ல!

அடுத்த போட்டிலியும் தோத்து, மறுபடியும் ஒரு நன்றி நவிலாம விடமாட்டேன்!

சரி, சரி, பேசினபடி அந்த 30% கமிஷனை ஞாபகமா அனுப்பி வெச்சருணும், தெரிஞ்சுதா?

வெளையாட்டுத்தனமா இருந்துரப்புடாது!

அப்பறம் நா என்ன செய்வென்னு..... எனக்கே தெரியாது!

ஆமா!

[surathaa restored!]

நாகை சிவா said...

//பிரியுது..அப்பவே யோசிச்சேன்..//
கப்பி, யோசிச்சல அப்புறம் ஏன் போட்டே. Bad Boy..

//என்ன நினைச்சுக்குவீங்களோன்னு யோசிச்கிட்டு இருந்தேன். நன்றிங்க கப்பி... //
என்னங்க இளா, கப்பி யாரு, எப்படி பாத்தாலும் நம்ம பயங்க. பக்குவமா சொன்னா கேட்டுப்பாரு. என்ன கப்பி நான் சொல்வது சரி தானே!

நாகை சிவா said...

//புயல் அடிக்கும். ஆனா புயலை அடிக்க முடியுமா//
இ.கொ.வின் தத்துவம் நம்பர் 1008.
தேவ் நோட் பண்ணிக்கோ....

கப்பி பய said...

//என்னங்க இளா, கப்பி யாரு, எப்படி பாத்தாலும் நம்ம பயங்க. பக்குவமா சொன்னா கேட்டுப்பாரு. என்ன கப்பி நான் சொல்வது சரி தானே//

அதே அதே..

Vaa.Manikandan said...

ennangga look ellaaam maari irukku!!!
eppoo irunthu? :)

SK said...

இந்தப் பதிவுல 1000 அடிச்சவுடனே, எனக்கு ஒரு நன்றி நவிலணும்!
மறந்துரக் கூடாது!

நாகை சிவா said...

//அதே அதே//
அப்படி சொல்லுய்யா என் தங்க கம்பி
:))))

«Oldest ‹Older   1 – 200 of 641   Newer› Newest»