Thursday, June 22, 2006

வ.வா.ச தொண்டனின் பதில் (பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த்)

கொஞ்ச நாட்களுக்கு முன் பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த் புதரகப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்திருந்தப் பேட்டியில் இருந்து சங்க மக்க்ளின் கவனத்திற்காக இப்போது சங்கப் பலகையில் மறு ஒளிபரப்பு

நான் இந்த பதிவை எழுதுவது ஒரு பொறை கடையிலிருந்து, ஆகவே இங்கு ஓடும் பாட்டுக்களும், வசனங்களும் எனது பதிவில் தெரிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

வ.வா. சங்கத்தின் மிக முக்கியஸ்தரான அக்கா ஆற்றலரசி பொன்ஸ் அவர்கள் சங்கத்துக்கு வந்ததாக கூறப்படும் ஒரு கடிதத்துக்கு பதில் சொல்லும் பதிவில், நான் இதுகாறும் அரசியல், பொது வாழ்வு, மக்கள் தொண்டு, இலக்கிய பணி, உருவாக்க சிந்தனை, பொருளாதார மேம்பாடு, இன்னும் என்னிலடங்காத்துறைகளில் நான் பெற்றிருந்த இடத்தை ஒரே நாளில் புல்டோசர் கொண்டு இடிக்கும் விதத்தில் இருப்பதாக சங்கத்தின் சில முக்கியஸ்தர்கள் கருதுவதால், இந்த அறிக்கையை சங்கத்தின் தூண் என்று சொன்னாலும் கூட சங்கபலகையில் இடம் / அனுமதி மறுக்கபட்ட நிலையில் நானே எனது சொந்த செலவில், எனது சொந்த ஊடகத்தில் வெளியிடும் கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளேன்.

மேலும் விவரமாய் படிக்க

இந்த அறிக்கைக்கு தொடர்பான பிற விவரங்கள் 1

இந்த அறிக்கைக்கு தொடர்பான பிற விவரங்கள் 2

17 comments:

ALIF AHAMED said...

//இந்த பதிவை எழுதுவது ஒரு பொறை கடையிலிருந்து, ஆகவே இங்கு ஓடும் பாட்டுக்களும், வசனங்களும் எனது பதிவில் தெரிந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல//

பாட்டுக்களும், வசனங்களும், எங்கே ???

அங்க போயி படிக்க ஒரு லிங்க் கொடுக்கலாமுல இந்தாங்க லிங்கு

http://www.karthikjayanth.blogspot.com/2006/06/blog-post_114990337558972127.html

பொன்ஸ்~~Poorna said...

மின்னல்,
அங்ஙனவே இருக்கு பாருங்க.. கழகப் போர்வாள் அதெல்லாம் சரியாத் தான் செய்வாரு..

ALIF AHAMED said...

ஹி ஹி ஹி :(

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா

(கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

பொன்ஸ்~~Poorna said...

நல்லா (ட்யூப்லைட்டா) மின்றீங்க ;)

ALIF AHAMED said...

தவ்ஸன் வாட்ஸா இருந்தா இந்நேரம் 100 பதிவு போட்டுருப்போமில :)))))

(வெளில சொல்லபிடாதுதான் என்ன பண்னுறது)

நல்ல வேள 40 வாட்ஸ்ஸுனாவது சொல்லி மானத்தை காப்பாத்திட்டிங்க டெங்ஸ்ஸு ::))

Geetha Sambasivam said...

பாவங்க பேராசிரியர், விட்டுடுங்க, எழுதிட்டுப் போகட்டும்.
அது சரி, டீக்கடைலேருந்து ஒரு பாட்டுச் சத்தம் கூடக் கேட்கக் காணோமே? என்ன ஆச்சு?

ALIF AHAMED said...

எங்க தல போயிட்ட சீக்கிரம் வா

(அப்பப்பா நம்மளாலன் ஆப்பு வாங்க முடியாதுப்பா)

ரவி said...

ஆமாம் இந்த புதரகம் புதரகம் அப்படீங்கறீங்களே...அது என்னங்க...

ஒன்ஸ் அப்பான் எ டைம், கட்ட துரை கைப்புவை அந்தரத்து தவளை மாதிரி தொங்கவிட்ட இடமா ( கீழே டாமிக்கள் காவல் காக்க ??)

Unknown said...

சஙகத்துக் கடைசி தொண்டன் கழுதைப் புலி கிட்ட கடி வாங்கினாலே துடிச்சுப் போற தலைவர் பேராசிரியர் இம்புட்டு மனசுக் கலங்கி எழுதி இருக்க விஷயத்துக்கும் எதாவது பதில் சொல்லுவார்...

தல வா தல வந்து என்னன்னு விசாரி... மின்னலு கூப்பிடுது பாரு.

Unknown said...

ஆமா அந்தக் கூட இருக்க ஆற்றலரசிக்குப் பத்துக் கேள்விகள்ன்னு ஒரு கதை,,,அந்த விஷயத்துல்லக் கூட நீ ஒண்ணுமே செய்யாம வேடிக்கைத் தான் பார்த்துகிட்டு நின்னுருக்கே...

சங்கத்துக்காக சன்டே கூட வேலைப் பாத்த அக்காவைப் பாத்து பத்து கேள்வி கேட்டத நீ சுத்தமாக் கண்டுக்கவே இல்ல...

அப்பாலே அக்கா அத்தனைக் கேள்விக்கும் தப்போ ரைட்டோ பதில் சொன்னப்போக் கூட நீ ஒப்புக்கு ஒரு வார்த்தை ஆதரவு தர்றல்ல...

பேராசிரியர் மேட்டர்ல்லயும் சைலண்ட்டா இருக்க நீ... தேவ்- கழுதைப்புலி மேட்டர்ல்ல மட்டும் இவ்வளவு ஸ்பீடு காட்டுறே... ஒய் தல ஒய்

எம் மேல இம்புட்டு அக்கறையா உனக்கு... நம்பவே முடியல்ல தல


லேசா ஒரு டவுட்டு...

உன் டயலாக் தான்

ஆமா என்னிய வச்சு ஒரு குரூப் சேத்து நீ ஒண்ணும் காமெடி கிமெடி பண்ணலியே....??????

பொன்ஸ்~~Poorna said...

தம்பி தேவ், பாசமலர்னு சொல்ல முடியாதுய்யா.. நீ பாசமே உருவா வந்த ஒரு பெரிய ஆலமரம்!!! கண்ல தண்ணி தள தளங்குது.. இரு இரு.. தலையை நாலு கேள்வி கேட்டுட்டு வந்து உணர்ச்சி வசப்படுறேன்..

தல, அண்ணாத்தே கைப்பு!!!
தேவ் தம்பி சொல்றதெல்லாம் நியாயம்.. அன்னிக்கி என் கிட்ட பொறாமைல கேட்ட பத்து கேள்விக்கும் நீ ஒண்ணியும் சொல்லல.. அதுக்கு நான் பதில் சொன்னதுக்கும் நீ கண்டுக் கிடலை.. அப்புறம் என் பாசமலர் அண்ணனான கூட்டாளி கார்த்திக் கேட்ட கேள்விகளுக்கும் ஒரு ரியாக்ஷனும் காட்டலை. அது என்னங்கப்பு தேவுக்கு ஒரு பிரச்சனைன்னா மட்டும் குதிச்சு வந்து பதிவே போடுறீங்க?!!

ஒரு கண்ணில்(கையில்) வெண்ணெயும், என்னை மாதிரி மூளையாகச் செயல்படும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும்... இதை எழுதும் போதும் என் கண்ணில் தண்ணி வந்து விட்டதால்.. படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்!!!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

இன்னொரு விஷயம் இப்போ தான் ஞாபகம் வருது... நம்ம சிபிக்கு நயந்தாராவுக்கும் நடுவே சிம்பு வந்தப்போக் கூட வாயேத் திறக்கல்ல... அது ஏன்?
நாடே நயந்தாராவைச் சொல்லி தளபதியைக் கலாய்ச்சப்போ நீ எங்கே போயிருந்தே... பதில் சொல்லு பதில் சொல்லு....

இது சத்தியச் சோதனைக் காலம் தல...

உனக்காக நோட்டம் பாக்க போய் பாட்டம் ஆட்டம் கண்ட ஒரு அப்பாவித் தொண்டனின் அலறலுக்கு உன் காதை மூடாதேத் தல....

நாகை சிவா said...

//ஆமாம் இந்த புதரகம் புதரகம் அப்படீங்கறீங்களே..அது என்னங்க...//
என்ன ரவி, உங்களுக்கு சங்கத்துல மக்கள் தொடர்ப்பாளர் பதிவி கொடுத்து இருக்காங்க... நீங்க என்னடானா புதரகம்னா என்னு கேட்கிறீங்க... சரி, காதை குடுங்க சொல்லுறேன்... அமெரிக்காவாம்....... இது யாரு வச்ச பெயருனு மட்டும் கேட்டுடாதீங்க.... ரணகளம் ஆயிடும். அது எல்லாம் பெரிய இடத்து மேட்டரு.

Karthik Jayanth said...

கழகத்தின் நிரந்தர மகளிர் அணி தலைவியே,

//டீக்கடைலேருந்து ஒரு பாட்டுச் சத்தம் கூடக் கேட்கக் காணோமே? என்ன ஆச்சு?

இந்த பதிவ அந்த டீக்கடைல இருந்து படிச்சா மட்டும்தான் பாட்டு கேட்கும் ஹி.ஹி..

Karthik Jayanth said...

தல வா தல,

வந்து இந்த பதிவுல நம்ம அல்கேட்ஸ் & கோ ஆசை பட்ட மாதிரி கார்த்திக்கும் கழுதை புலியும் / காட்டெருமை கூட்டமும் அப்படின்னு ஒரு பதிவு போட்டு அவங்க பெரிய மனசு நோகாம நடந்துக்கோ தல.

என்ன இருந்தாலும் நம்ம சங்க கொள்கைபடி அடுத்தவங்க மனசு நோகாம நடந்துகிடனும்ல்ல

Unknown said...

பதில் சொல்ல மாட்டீயாத் தல.... சரி உன் இஷ்ட்டம்.:-)

கைப்புள்ள said...

//அன்னிக்கி என் கிட்ட பொறாமைல கேட்ட பத்து கேள்விக்கும் நீ ஒண்ணியும் சொல்லல.. அதுக்கு நான் பதில் சொன்னதுக்கும் நீ கண்டுக் கிடலை.. அப்புறம் என் பாசமலர் அண்ணனான கூட்டாளி கார்த்திக் கேட்ட கேள்விகளுக்கும் ஒரு ரியாக்ஷனும் காட்டலை. அது என்னங்கப்பு தேவுக்கு ஒரு பிரச்சனைன்னா மட்டும் குதிச்சு வந்து பதிவே போடுறீங்க?!!//
ஆஹா ஒரு கூட்டமாத் தான்யா கெளம்பிருக்காங்க கேள்வி கேக்க. என்ன சொல்ல...ஆன்...ஆன் அன்னிக்கு எங்கூர்ல மழைமாரி பொத்துக்குட்டு ஊத்துச்சா அதுனால நான் ஆபிஸுக்கு மட்டம் போட்டுட்டேன். தாயீ!புதரகத்துலேருந்து கேள்வி இன்னிக்கு வரும் நாளைக்கு போவும்...ஆனா பேக்சைடு போச்சுன்னா வருமா? அதையே ஒருத்தன் தியாகம் பண்ணிருக்கான்னா பதிவு போடுறதா வேணாமா? நீயே சொல்லு தாயீ!

//நம்ம சிபிக்கு நயந்தாராவுக்கும் நடுவே சிம்பு வந்தப்போக் கூட வாயேத் திறக்கல்ல... அது ஏன்?
நாடே நயந்தாராவைச் சொல்லி தளபதியைக் கலாய்ச்சப்போ நீ எங்கே போயிருந்தே... பதில் சொல்லு பதில் சொல்லு....//
இது அப்பட்டமான பொய். மிஸஸ் சிபியிடம் போட்டுக் குடுத்த முதல் பத்து ஆளில் நான் தான் ஃபர்ஸ்ட்.