Tuesday, June 27, 2006

நமது கைப்பு

அதென்ன எல்லாரும் ஆறு ஆறுன்னு எழுத சங்கம் மட்டும் எழுதாம விட்டுட்டா என்ன ஆகிறதுன்னு நினைக்கும் போது, தேவ் "நமது கைப்பு" பத்திரிக்கையின் முதல் பிரதியை ரெடி பண்ணி வெச்சதா B.B.Cல செய்தி வந்துருச்சு.

அதுக்கு விளம்பரம் பண்ண பெரியம்மா நிர்மலா பெரியசாமியை அணுக நினைக்க கீதாக்காவுக்கு வந்துச்சே கோபம்.

அதனால இனிமே அவுங்க செய்தி மற்றும் ஒளிபரப்பு துறையின் ஆமைச்சாராக கைப்பு கைநாட்டு வெச்சு அறிக்கை குடுத்துட்டாரு.

கீதாக்காவும், விடியகாலையில தொண்டை தண்ணி வத்த வத்த அதே பாணியில பேச டிரெய்னிங் பண்ண ஆர்ம்பிச்சுட்டாங்க. அதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே..

* நயன் தாரா மேட்டரில் நடந்த கவிழ்ப்பு சதி என்ன? விளக்குகிறார் சிபி..

* சிந்து பைரவி ராகம் கேட்டு சிதறினேனா? சீறுகிறார் ஜொள்ளு பாண்டி

* ஐ.நாவில் பிடித்த மஞ்ச காட்டு மைனா.. விவரிக்கிறார் நாகை சிவா..

* சான் பிரான்ஸிச்கோவில் சரக்கு அடித்து விட்டு சறுக்கினேனா? சந்தோஷ் தன்னிலை விளக்கம்.

* சித்தூர் கேட்டில் சொப்பன சுந்தரியுடன் சில்மிஷமா? பதில் அளிக்கிறார் கைப்பு..

* யானைக்கு வைத்த கவளைச் சோற்றை பாதி விலைக்கு விற்றேனா? பொங்குகிறார் பொன்ஸ்

பக்கத்துக்கு பக்கம் ஆப்பு,

வாங்கி விட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

31 comments:

நாமக்கல் சிபி said...

//* நயன் தாரா மேட்டரில் நடந்த கவிழ்ப்பு சதி என்ன? விளக்குகிறார் சிபி..
* சிந்து பைரவி ராகம் கேட்டு சிதறினேனா? சீறுகிறார் ஜொள்ளு பாண்டி
* ஐ.நாவில் பிடித்த மஞ்ச காட்டு மைனா..விவரிக்கிறார் நாகை சிவா..
* சான் பிரான்ஸிச்கோவில் சரக்கு அடித்தால் சறுக்கினேனா? சந்தோஷ் தன்னிலை விளக்கம்.
* சித்தூர் கேட்டில் சொப்பன சுந்தரியுடன் சில்மிஷமா? பதில் அளிக்கிறார் கைப்பு..
* யானைக்கு வைத்த கவளைச் சோற்றை பாதி விலைக்கு விற்றேனா? பொங்குகிறார் பொன்ஸ்

பக்கத்துக்கு பக்கம் ஆப்பு, வாங்கி விட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

:))

சும்மா நச்சுன்னு இருக்கு "நம்ம கைப்பு"

நன்மனம் said...

//சும்மா நச்சுன்னு இருக்கு "நம்ம கைப்பு"//

தளபதி!!, நம்ம பத்திரிக்கை brand building நேரத்துல பேர இப்படி தப்பா சொன்னா எப்படி சந்தை "படு"த்தறது.

அது "நமது கைப்பு"
:-))

நாமக்கல் சிபி said...

சும்மா நச்சுன்னு இருக்கு "நமது கைப்பு"

ILA(a)இளா said...

நச்சு இருக்க இது என்ன நமீதாவா? அது சரி விளக்கம் தானே கேட்டு இருக்கு, இப்போ நயன் தாராவை விட்டுட்டு நமீதான்னு ஏன் ஆரம்பிக்கனும்?

வெட்டிப்பயல் said...

ம்ம் யாருமே கூப்பிடாம நீங்களாவே போட்டுக்க வேண்டியது!

கோவி.கண்ணன் said...

அது என்ன நமது கைப்பு தலைப்பே தப்பா இருக்கே, 'அண்ணன் கைப்பு'
னு மரியாதையா சொல்லுங்கப்பு, அண்ணன் பாத்துட்டு கோவம் வந்து குதிக்கரத்துக்குள்ள மாத்திடுங்க ஆமாம் சொல்லிப்புட்டேன்

கைப்புள்ள said...

//சும்மா நச்சுன்னு இருக்கு "நமது கைப்பு"//
எல்லாரும் தப்பும் தவறுமா சொல்றீங்களே(பதிவு எழுதுன வெவசாயி உள்பட). நம்ம பத்திரிகையோட பேரு "டாக்டர் நமது கைப்பு". கலர் கலரா வித விதமா ஆப்பு வாங்குனதை மதிச்சி ஆர்வர்டு குடுத்த டாக்டர் பட்டத்துக்குன்னு ஒரு மருவாதி கவுரதி இருக்குதுல்ல?

ஜொள்ளுப்பாண்டி said...

//* நயன் தாரா மேட்டரில் நடந்த கவிழ்ப்பு சதி என்ன? விளக்குகிறார் சிபி..//

'தள' வெளக்குங்க நல்லா சபீனா போட்டு வெளக்குங்க :)))

//* ஐ.நாவில் பிடித்த மஞ்ச காட்டு மைனா.. விவரிக்கிறார் நாகை சிவா..//

ஏதோ காஞ்சுபோய் ஆப்பிரிக்காவுலே கெடக்குறாருன்னு பார்த்தா நம்ம சிவாண்ணே இப்படி மைனாவைத்தான் புடிச்சுகிட்டு இருக்காரா?? :))

ஜொள்ளுப்பாண்டி said...

// சான் பிரான்ஸிச்கோவில் சரக்கு அடித்து விட்டு சறுக்கினேனா? சந்தோஷ் தன்னிலை விளக்கம். //

ஐயகோ தோழா சந்தோஷ் இப்படி கவிழ்ந்தா நம் குலப்பெருமை என்னாவது ?? :))

// சித்தூர் கேட்டில் சொப்பன சுந்தரியுடன் சில்மிஷமா? பதில் அளிக்கிறார் கைப்பு..//

தல இது என்ன புதுக்கதை ?? இல்லத காதலிக்குன்னு பதிவு போட்டப்பவே நெனச்சேன் !! :)))

//யானைக்கு வைத்த கவளைச் சோற்றை பாதி விலைக்கு விற்றேனா? பொங்குகிறார் பொன்ஸ்//

பொன்ஸக்கா! யானை இளைச்சா நல்லாவா இருக்கும்?? பாவம் அதோட சோத்துல கைய வைக்காதீங்க :)))

நிலா said...

நமது கைப்பு இதழோட Promo கலக்கல்

சர்குலேஷன் (!!!) எகிற வாழ்த்துக்கள் :-))

நாகை சிவா said...

//தலைப்பே தப்பா இருக்கே, 'அண்ணன் கைப்பு'
னு மரியாதையா சொல்லுங்கப்பு, //
இல்ல கண்ணன், இது "டாக்டர் நமது எம்.ஜி.ஆர்", மாதிரி "டாக்டர் நமது கைப்பு". பாருங்க தலயே வந்து சொல்லிட்டு போயிட்டாரு.

நாமக்கல் சிபி said...

சும்மா நச்சுன்னு இருக்கு "டாக்டர் நமது கைப்பு"

நன்மனம் said...

//நாமக்கல் சிபி @15516963 said...

சும்மா நச்சுன்னு இருக்கு "நம்ம கைப்பு" //

//நாமக்கல் சிபி @15516963 said...

சும்மா நச்சுன்னு இருக்கு "நமது கைப்பு" //

//நாமக்கல் சிபி @15516963 said...

சும்மா நச்சுன்னு இருக்கு "டாக்டர் நமது கைப்பு"//

இது என்ன டிராமால நடுல நடுல ஒருத்தர் வந்து சம்பந்தமே இல்லாம காமெடி பண்றாப்ள :-)))

நாமக்கல் சிபி said...

இதுக்கு மேலயும் பத்திரிக்கையோட பேரை மாத்தாதீங்கப்பூ!

என்னால முடியலை!

:(

நாகை சிவா said...

//'தள' வெளக்குங்க நல்லா சபீனா போட்டு வெளக்குங்க :)))//
இரு அவரசப்படாத வந்து பொறுமையா விளக்குவாரு....

//ஏதோ காஞ்சுபோய் ஆப்பிரிக்காவுலே கெடக்குறாருன்னு//
காஞ்சு போன ஆப்பிரிக்காவா....... உனக்கு யாரோ தப்பா சொல்லி இருக்காங்க. நைல் நதி பாய்ஞ்சு விளையாடுது.

//ஐயகோ தோழா சந்தோஷ் இப்படி கவிழ்ந்தா நம் குலப்பெருமை என்னாவது ?? :))//
பங்காளி சந்தோஷ், முதல சண்டை நிறுத்திட்டு வந்து சறுக்குன நம் குலபெருமையை தூக்கி நிறுத்து...

//இல்லத காதலிக்குன்னு பதிவு போட்டப்பவே நெனச்சேன் !! :)))//
எனக்கும் இதே டவுட் தான் பாண்டி, அதவும் இல்லாம இப்ப அடிக்கடி காணாம போறார். என்னனு டிப்பா விசாரிக்கனும்.

//யானை இளைச்சா நல்லாவா இருக்கும்?? பாவம் அதோட சோத்துல கைய வைக்காதீங்க //
என்னத்த சொல்ல. புரிஞ்சா சரி..

அது சரி, எல்லாத்தையும் கலாய்ச்சிட்டு உன் மேட்டர பத்தி ஒன்னும் சொல்லாம போயிட்ட..... சிந்து ஒ.கே. அது யாரு பைரவி........

இலவசக்கொத்தனார் said...

அட. என்னவெல்லாம் இலவசமா குடுப்பீங்க? அதை சொல்லலையே....

சொஜ்ஜி said...

சிறப்புச் செய்தி

கோதாவரி விஷயத்தில் பேராசிரியர் கார்த்திக்கும் சந்தோஷும் கோதாவில் இறங்கினர்

மின்னுது மின்னல் said...

::)))

தாங்க முடியலடா சாமி

தாங்க முடியல .:-))))))))

தேவ் | Dev said...

ஏலே பாண்டி என்ன இது உன்னியப் பத்தி கோக்கு மாக்கா செய்தி வருது... சிதறுற கூட்டமால்ல நாம எல்லாம்...
அங்கிட்டுப் பாரு தலயை சிமெண்ட் பேக்டரி சித்தாள் சொப்பனச் சுந்தரியோடச் சில்மிஷம் பண்ணிட்டு கித்தாப்பாத் திரியுறாரு.. நீயெல்லாம் சிதறுன்னா என்ன அர்த்தம்?

ஒடனே ஒரு மறுப்பு அறிக்கை கொடு...

தேவ் | Dev said...

ஆமா யாருய்யா இந்தப் பத்திரிக்கையோட ஆசிரியர்...

இப்படி அநியாயத்துக்கு உசுப்பேத்தி விட்டிருக்கீங்க....எங்கத் தல எவ்வளவு பெரிய ஆள் தெரியும்ல்ல அவர் இமேஜ்க்கு அழகுக்கு அந்த ஸ்மைலுக்கு அயல் நாட்டு அம்மணிகளே ஐ லவ் யூ சொல்லிட்டு லைன்ல்ல் நிக்குறாயங்க.. சித்தூர் சித்தாள்ன்னு என்னய்யா எழுத்து எழுதுற...

வளைகுடா ஷேக் வீட்டுச் செல்லப் பொண்ணுல்ல இருந்து வால்மார்ட்ல்ல வியாபாரம் பாக்குற சேல்ஸ் பொண்ணு வரைக்கும் அம்புட்டு பொண்ணுங்களும் அண்ணன் கைப்பு மேல மோகத்துல்லத் திரியுது...

அதை எல்லாம் எழுதணும்ய்யா...

ஆறு புருசன் கட்டி டைவர்ஸ் பண்ண அயர்லாண்ட் அம்மணி ஒண்ணு அண்ணனுக்கு வாழ்க்கை தர்றதாச் சொல்லி... சாரி வாழ்க்கைக் கேட்டு அண்ணனோட கொட்டாம்பட்டி மாளிகை முன்னாடி மூணு நாளா அன்னந் தண்ணி இல்லாமல் கிடக்குது... அதைப் பத்தி எழுதுவீயா.. சுப்பி பய்லாக் கண்டதைப் பத்தி எழுதுற..

தேவ் | Dev said...

ஆமா அ.உ.பி.சூ.இ.இ.அ.த அண்ணன் கொத்தனார் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கய்யா.. பத்திரிக்கைக்கு என்னய்யா இலவசமாத் தார்றீங்க?

கைப்பு போஸ்ட்டர் கட்டாயம் உண்டு.... ஏப்பூ பாண்டி.... வேற போஸ்ட்டர் எதாவது உண்டா.. பப்ளிக் கொர்லு வுடுரதுக்குள்ளே இலவ்ச லிஸ்ட்டை நீட்டுங்கப்பூ..

Syam said...

தல கூட நமீதா நச்சுனு நிக்கிறாமாதிரி ஒரு போஸ்டர் இலவசமா குடுத்துடுங்க...

Karthik Jayanth said...

//நயன் தாரா மேட்டரில் நடந்த கவிழ்ப்பு சதி என்ன? விளக்குகிறார் சிபி..

சிம்பு - எங்கிருந்தாலும் வாழ்க ! நீ எங்கிருந்தாலும் வாழ்க

நமது நண்பன் சிபி - நான் வெற்றி பெற்றவன் ! இமயம் தொட்டுவிட்டவன் ! என் வீரமே வாழ்வே மாலை சூடும் ! ஹஹா

//சிந்து பைரவி ராகம் கேட்டு சிதறினேனா? சீறுகிறார் ஜொள்ளு பாண்டி

நம்ம ஜொ.பாண்டி (சிந்தனையில்) - ஆகா நம்ம ஒரு 5 - 6 பேரு கூட ஜாலியா ஜொள்ளு விட்டுகிட்டு காலத்த ஓட்டலாம்னா. இவனுகளே எப்பாவோ சொன்ன ஒரு பேரை வச்சிக்கிட்டு கோர்த்துவிட்டுடுவாங்க போலயே ...

// ஐ.நாவில் பிடித்த மஞ்ச காட்டு மைனா.. விவரிக்கிறார் நாகை சிவா..

பங்காளி சிவா (சிந்தனையில்) - ஹூம்.. இது ஒண்ணுதான் இப்ப கொறைச்சல்.. நானே இங்க கண்ணி வெடிகளுக்கு நடுவுல குடித்தனம் நடத்துறேன். இருந்தாலும் இப்படியே இமேஜ் மெயின்டைன் பண்ணுவோம். இத நம்பி ஒரு நாலு மாக்கனுக இங்க வருவானுக :-))))))

//சான் பிரான்ஸிச்கோவில் சரக்கு அடித்து விட்டு சறுக்கினேனா? சந்தோஷ் தன்னிலை விளக்கம்.

பங்காளி சந்தோஷ் (சிந்தனையில்) - நல்ல நேரம்டா சாமி.. மத்த ஊர்ல பண்ணுன கூத்தையெல்லாம் எவனும் பார்க்கல போல.. நல்ல வேளை நான் பிழைத்துகொண்டேன்..

//சித்தூர் கேட்டில் சொப்பன சுந்தரியுடன் சில்மிஷமா? பதில் அளிக்கிறார் கைப்பு..

தல கைப்பு - நானே இங்க 45 C வெயில்ல இந்த ஒட்டகத்தை தவிர வேற் ஒண்ணையுமே பார்க்கமுடியலேயேன்னு நொந்து போய் இருக்குறப்ப.. உலக ப்ராஜெக்ட்ன்னு சொல்லி கூட்டிகிட்டு கிளையண்டு மாக்கன் பாலைவனத்துல இருக்குற மணலை எல்லாம் எண்ணி அடுக்கி வைக்க சொல்லுறான்.. இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது

//யானைக்கு வைத்த கவளைச் சோற்றை பாதி விலைக்கு விற்றேனா? பொங்குகிறார் பொன்ஸ்

பொன்ஸ் - இங்க சோறு பொங்குறதுக்கே வழி இல்ல.. இதுல நான் எங்க பொங்க போறேன். ?

கீதா சாம்பசிவம் said...

விவசாயி,
இதையும் சேர்த்துக்குங்க,
சங்கத்தின் மற்ற உறுப்பினர் ஃபோட்டோக்களைப் போடுகிறேன் என்று சொல்லி விட்டு விவசாயி இது வரை போடாத மர்மம் என்ன?
உறுப்பினர்கள் இருட்டடிக்கப் படுவதின் காரணம் என்ன?

தேவ் | Dev said...

பேராசிரியர் பெருந்தகையே.... அமெரிக்காவுக்கு தாய் தமிழகம் அளித்த தத்துப்பிள்ளையே.. வ.வா.சவின் முத்துப் பிள்ளையே...

அவரவர் மனத்தினில் ஓடும் சிந்தனைகளைத் தெளிவாய் படம் பிடித்துக் காட்டியிருக்கும் உன் திறமையை வியந்து உனக்கு இன்று முதல் வ.வா.ச தலைமை நிலையம் சார்பில் சிந்தனை சிட்டிசன் என்னும் சிறப்பு பட்டம் வழங்குகிறோம் நீ ஏற்று கொள்ளத் தான் வேண்டும் ... மறுக்கக் கூடாது...

தேவ் | Dev said...

சங்கத்தின் மொத்த மாணிக்கங்களின் சார்பாக பொன்னான பதில்களை எங்கள் சிந்தனை சிட்டிசன் பேராசிரியார் பெருந்தகை கார்த்தி சொல்லிவிட்டார்....

இப்படி இவர் பதில் சொல்லியக் காரணத்தினால் ஜப்பான் சரக்கு கப்பல் அடியில் ஒளிந்து பதில் சொல்லுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எங்கள் தல வைர மகன் கைப்பு அவசரமாக ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் ஊருக்குள் அந்த நீலக் கலர் லுங்கியில் வலம் வர ஆரம்பித்து விட்டார் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவ் | Dev said...

கீதா அக்கா நியூஸ் ரீடீங் பிராக்டீஸ் முடிஞ்சுதா?

சவுண்ட் பலமா விடுங்க.. விவசாயி போட்டோக்களை இருட்டடிப்பு செய்வதை எதிர்த்து நாளை நீங்கள் துவங்க இருக்கும் உண்ணும் விரதப் போராட்டத்துக்கு மை புல் சப்போர்ட் உண்டு...

கழகத்தின் தலைமைப் பேச்சாளர் கானா கீதாக்கா வாழ்க!!!!!

தேவ் | Dev said...

இங்கு வந்து நமது கைப்பு இதழின் மீது ஆர்வம் கொண்டு வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
தலக் கொள்கையின் இமயம் கைப்புள்ள
அன்பின் தளபதி சிபியார்
கொள்கை விளக்கு ஆற்றலரசி பொன் ஸ் அக்கா
சங்கப் போர்வாள் கொ.ப.செ தம்பி பாண்டி
நமது கைப்பு நிறுவன ஆசிரியர் இலக்கிய புயல் இளா
மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரது சார்பாகவும் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன்.

வரு.வா.ச தலைமை நிலையம்
சென்னை

யோவ் இளா பத்திரிக்கைக்குப் பெரிய ரேஞ்ச்ல்ல விளம்பரத்தை அள்ளி விட்டாச்சு...
இனி அடுத்த இதழ் பத்தி வந்துச் சொல்லுங்கய்யா... சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வாய்யா....

தேவ் | Dev said...

தல தல..சீக்கிரம் வாத் தல...

நம்ம சங்கத்துல்ல இருக்க எல்லார் பெயரையும் பத்திரிக்கையிலே பிரிண்ட் பண்ணணுமாம் அதுக்கு நிர்வாகிகள் பட்டியல் வேணுமாம் தல...

இந்த இங்கே மேல கொஞ்சம் பேரைச் சொல்லியாச்சு...

நம்ம மத்த சங்கத்துப் புலிகளுக்கெல்லாம் என்னஎன்ன பதவின்னு சீக்கிரம்வந்து சொல்லு தல

நம்ம சிவா... நன்மனம்.. மின்னல்... பெருசு... பேராசிரியர்.. சந்தோஷ் எல்லாம் மொறைக்கிறாப்ப்ல்ல

பொன்ஸ்~~Poorna said...

எல்லாத்துக்கும் பதில் சொன்ன பேராசிரியர் கார்த்திக் அல்கேட்ஸின் நடுநிலையான செய்திக்கு என்ன பதில் தருகிறார்?!!!

Karthik Jayanth said...

ஆற்றலரசி பொன்ஸ் நம்ம அல்கேட்ஸ் செய்தியோட தலைப்புதானே சொல்லி இருக்குறார். அவர் சிறப்பு செய்தியை முழுவதும் சொல்லட்டும்.. அப்புறம் சம்மந்தபட்ட நானும் பங்காளி சந்தோஷும் கழகம் கேள்வி கேட்கும் போது பதில் சொல்லுகிறோம் ;-)

அதுவும் தவிர எங்களுடைய வெளியுறவு துறை அமைச்சர்கள் இந்த வாரம் மறுபடியும் ஆர்பிட்ரேஷன்ல பேச போறங்க.. இதுக்கு நடுவில் நான் கருத்து சொல்லுவது அவ்வளவு நல்லாவும் இருக்காது ;-)