Friday, June 23, 2006

வரு.வா.சங்கம் - BEHIND THE SCENES 1

சமீப காலமா வந்திருக்கும் புதிய வலைப்ப்திவர்களுக்காகவும்.. ஏற்கனவே வலைப் பதிந்து வலையை அறித்தெறியும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் பல கோடி வருத்தப்படாத வாலிபர்களுக்காகவும் இந்தப் பதிவு.

எப்படி வரு.வா.சங்கம் உருவானது?

சுமார் சில நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ராஜ ராஜ சோழன் ஆண்டு கொண்டிருந்தக் காலம்.
அப்போது கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஒரு குக் கிராமத்தில் கழுதைப் புலிகள் கண்ட படி ஊளை இட அந்த சிம்பொனி சவுண்டில் அவதரித்த குழந்தையின் பெயர் கைப்போங்கா ஆப்புமாங்க.
அது ஒரு தெய்வீக குழந்தை.
அந்தக் குழந்தை நாளொரு மொள்ளமாரித்தனம் பொழுதொரு கேப்மாரித்தனம் எனக் கண்டபடி கட்டுக்கு அடங்காமல் கட்டவிழ்த்த கழுதையாக வளர்ந்து நின்றது.

வருத்தம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் வளர்ந்த அந்த வாலிபனைக் கண்டு ஊரே பயந்தது.
அந்தப் பக்கமாய் சுற்றும் கழுதைபுலிகளின் வாலில் வெடி கட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது...அது வெடிக்கிறதா எனச் சோதனை செய்ய கிட்டப் போய் பார்த்து மூக்கு கிழிவது என்ப் பெரும் கவுரவமாய் வாழ்ந்தான் அந்த வாலிபன்.
அணில் குட்டிகளை விரட்டி சென்று அதன் முதுகில் இருக்கும் பின் கோட்டுக்கான முகவ்ரி தேடுவது எனத் திரிந்தான் அந்த வாலிபன்...

இப்படியிருக்க அந்த வாலிபன் ஒருநாள் ஆப்பிரிக்கா மன்னனின் அந்தப்புரத்தில் எட்டிப் பார்த்ததாய் கைதுச் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தான். மன்னன் அவனிடம் விசாரிக்க

டேய் கைப்போங்கா... என் மகளைக் கையப் பிடிச்சு இழுத்தியா?

ஒரு இளைஞன் ஒரு இளைஞியைக் கையைப் பிடிச்சு இழுக்குறது எல்லாம் சகஜம் அதை எல்லாம் பெரிசுப் பண்ணப்பிடாது...

என் அந்தப் புரத்தில் எட்டிப் பார்த்தீயா?

என்ன எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...

ஒழுங்காச் சொல்லு எட்டிப் பார்த்தீயா?

என்ன ஒழுங்காச் சொல்லு எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...
என்னடா நான் பேசுறதையேத் திருப்பிப் பேசுறே எட்டிப் பார்த்தீயா?

என்ன என்னடா நான் பேசுறதையேத் திருப்பிப் பேசுறே எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...

அடேய் கைப்போங்கா வேணாம்டா உண்மைய சொல்லிரு எட்டிப் பார்த்தீயா?

என்ன அடேய் கைப்போங்கா வேணாம்டா உண்மைய சொல்லிரு எட்டிப் பார்த்தீயா? என இவனும் திருப்பிக் கேட்க...

மன்னர் மயக்கமாகிச் சரிகிறார்.

ஆப்பிரிக்காவிற்கு விவசாயக் கலையை அறிவிக்கச் சென்ற ஒரு தமிழ்நாட்டு விவசாயி இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்து வியந்து நினறார்.
விவசாய பிரசென்டேஷன் முடிந்த நிலையில் இந்த வாலிபனின் வருத்தப் படாத தன்மையைக் கண்டு கண் கலங்கிய அந்த விவசாயி.. அவனைத் தனியே சந்தித்து தன் விசிட்டிங் கார்டைக் கொடுக்கிறார்.
தன்னோடு வரமுடியுமா? வந்தால் நல்ல ஆபர் தருவதாய் கூறுகிறார். கடலைச் சாகுபடி வித்தைகளை பக்காவாகச் சொல்லித் த்ருவதாய் வாக்கும் கொடுக்கிறார்.

கழுதைப் புலி வால்களில் வெடி வைத்து அதுகளிடம் கடி பட்டும் கண்ட மன்னர்களிடம் அடிப்பட்டும் இன்னும் எவ்வளவு நாள் வாழ்கிறது என யோசித்த அந்த வாலிபன் ஓ.கே சொல்ல அங்கு அக்ரிமெண்ட் சைன் ஆப் ஆகிறது...

ஆப்பிரிக்கா கண்டமே அன்றைய தினத்தைப் பேரல் பேரலாக பீர் குடித்துக் கொண்டாடின. குறிப்பாக கழுதைப் புலிகளை அந்த வாலிபனுக்கு தங்கள் பேக் ஏரியா பலவாறு ஜெர்க் காட்டியபடி குதூகாலமாய் கொண்டாடின...

அந்த விவசாயியோடு கப்பலேறிய கைப்போங்கா வந்து இறங்கியது பூம்புகார் கடற்கரை...
அங்கு வாசலில் யானைக் கட்டப் பட்டிருந்த ஒரு அரண்மனைக்குள் கைப்போங்கா அழைத்துச் செல்லப்பட்டான்.

வரவேற்பறையில் பொற்குவியல் குவிந்திருந்தது கண்ட கைப்போங்கா ஹே..ஹேன்னு எகத்தாளமாய் சிரித்தான்...

சுவர்களில் வெண்பாக்கள் வடிக்கப் பட்டு வழிந்துக் கொண்டிருந்தன... கைப்போங்கா வெண்பாக்களைப் பார்த்து லேசாய் மிரண்டாலும் பார்வையில் கெத்து குலையாமல் நின்றது விவசாயிக்குப் பெரும் பீதி ஏற்படுத்தியது...

ஆமா விவசாயி பாய் என்னிய எதுக்கு இங்கேக் கூட்டிட்டு வந்தே.. இது என்ன இடம்.. இதுக்கு ஓனர் யாரு என்று நக்கலாய் கேட்டான் கைப்போங்கா...

விருந்து ரெடி... விருந்து ரெடி... என ஒரு பெண்குரல் கேட்க பல சைடுகளில் இருந்தும் மக்கள் மாளிகைக்குள் வெள்ளமெனப் பாயந்தனர்.
ஆகா... அமிர்த்ம்... ஓஹோ... என விருந்து உண்ணும் முன்னே பாராட்டுக்கள் தொடங்கின...

ஏய்யா விவ் ( விவசாயிக்கு நிக் நேம்) ஆமா இன்னும் சோறே கண்ணுல்ல காட்டல்ல அதுக்குள்ளே அம்புட்டு பேரும் அப்படி சவுண்ட் விடுறாங்க... ஆமா இவக யாரு.. என்ன?

இவங்க ரொம்பப் பெரிய ஆளு... அரச பரம்பரை ஆனா ரொம்ப நல்லவங்க... யார் ஊரை விட்டு வெளியே போயிட்டு ஊருக்குத் திரும்பி வந்தாலும் உட்னே விருந்து வச்சு கொண்டாடிடுவாங்க.. அவ்வளவு உயர்ந்த மனசு...

ஆமா இப்போ யார் திரும்பி வந்துருக்கா.. பெரிய ஆளா...

பெரிய ஆள் தான்..

யாருப்பா

அந்தா வாசல்ல நிக்குதுப் பாரு யானை அது தான் போருக்குப் போயிட்டு திரும்பி வந்துருக்கு அதுக்கு தான் இம்புட்டு மரியாதை.. இந்த விருந்து சமைச்சதும் அதுக்கு தான் ....இவங்களைப் பத்தி நீங்கத் தெரிஞ்சிக்க இன்னும் நிறைய இருக்கு....

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

தொடரும்

34 comments:

நன்மனம் said...

//அணில் குட்டிகளை விரட்டி சென்று அதன் முதுகில் இருக்கும் பின் கோட்டுக்கான முகவ்ரி தேடுவது எனத் திரிந்தான் அந்த வாலிபன்...//

கற்பனையின் சிகரமே!!!

தேவு, வகுப்பு எடுயா எப்படி "வொக்காந்து யோசிக்கறதுனு"

எத எடுப்பது எத விடுப்பதுனு ரொம்பவே வருத்தபட வெச்சிட்டயா.:-))))))))))

நன்மனம் said...

//அப்போது கிழக்கு ""ஆப்""பிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ஒரு குக் கிராமத்தில்...//

//தன்னோடு வரமுடியுமா? வந்தால் நல்ல ""ஆபர்"" தருவதாய் கூறுகிறார். //

//அந்த வாலிபன் ஓ.கே சொல்ல அங்கு அக்ரிமெண்ட் சைன் ""ஆப்"" ஆகிறது...//

ஆப்பு வாங்கறதுக்கு இதெல்லாம் தான் முன்னோடியா:-)))))

இலவசக்கொத்தனார் said...

யப்பா தேவு. யானை உனக்கு விருந்து வைக்கிறதா சொல்லி ஆப்பு அடிக்கிறதுக்கு பதிலடியா? நடத்துங்க.

:=D

ILA(a)இளா said...

//என் அந்தப் புரத்தில் எட்டிப் பார்த்தீயா?//

எப்படி தேவு அங்க நடந்ததை இப்படி நாகரிகமா சொல்ல முடியுது

//கடலைச் சாகுபடி வித்தைகளை பக்காவாகச் சொல்லித் த்ருவதாய்//

எந்த கடலைன்னு சொல்லவே இல்லியே..

//அணில் குட்டிகளை விரட்டி சென்று..//
இன்னும் உங்கிட்ட இருந்து இன்னும் நிறைய விளக்கம் எதிர்பார்க்கிறேன் தேவு.

செந்தழல் ரவி said...

கைப்போங்கா ஆப்பிரிக்காவில வாலிப வயசுல யாரையும் கையைப்புடிச்சி இழுக்காம கழுதைப்புலிகளோட கபடியாண்டதை கபடமா எழுதிய தேவு அவர்களே....

அங்க அவர் யாருக்கு குருவி ரொட்டியும் குச்சுமுட்டாயும் வாங்கிகொடுத்து சீடனாக்கிக்கிட்டாருன்னு சொல்லவே இல்லையே..

கைப்புள்ள said...

ஏன்யா தேவு,
உன்னைத் தான் சங்க வைத்தியர் எஸ்.கே. கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லிருக்காரு இல்ல? அப்புறம் ஏன் இவ்வளவு கஷ்டப் பட்டு ஒத்த கையால(இன்னொரு கை எங்கேயிருக்குன்னு யாரது சின்னப்புல்லத் தனமாக் கேக்குறது ரேஸ்கல்?) நம்ம வாழ்க்கை வரலாறெல்லாம் எழுதறே? என்னமோ போப்பா... இந்தப் பதிவையும் இந்தத் தொடர்ல வர்ற மத்தப் பதிவுகளையும் "My experiments with Aappu"ங்கிற தலைப்புல Oxford University Press ப்ரிண்டு பண்ணி பொஸ்தகமாப் போடுறேன்னு ஒத்துக்கிட்டாங்க. நீ நடத்து... வாழ்க உன் மக்கள் தொண்டு.

சரி...கேக்க மறந்துட்டேன்...வைத்தியர் எஸ்.கே சொன்ன மாதிரி க.புலி கடியோட அரிப்பைக் குறைக்க கீரிப்புள்ள முட்டை ஆம்லெட் சாப்பிட்டியா...இல்லியா? இந்த விஷயத்துல கவனக் குறைவா இருந்தே...அப்புறம் நான் பொல்லாதவனாயிருவேன் ஆமா!

ஜொள்ளுப்பாண்டி said...

//ஆகா... அமிர்த்ம்... ஓஹோ... என விருந்து உண்ணும் முன்னே பாராட்டுக்கள் தொடங்கின...//

அப்படியா என்ன ?? :))

//ஆப்பிரிக்கா கண்டமே அன்றைய தினத்தைப் பேரல் பேரலாக பீர் குடித்துக் கொண்டாடின. குறிப்பாக கழுதைப் புலிகளை அந்த வாலிபனுக்கு தங்கள் பேக் ஏரியா பலவாறு ஜெர்க் காட்டியபடி குதூகாலமாய் கொண்டாடின...//

தேவு தேவு கலக்கிபுட்டீயளே !! :))))))))))

செந்தழல் ரவி said...

என் பின்னூட்டம் வரவில்லையே இன்னும்...

இராம் said...

//கழுதைபுலிகளின் வாலில் வெடி கட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது...அது வெடிக்கிறதா எனச் சோதனை செய்ய கிட்டப் போய் பார்த்து மூக்கு கிழிவது என்ப் பெரும் கவுரவமாய் வாழ்ந்தான் அந்த வாலிபன்.//

சாமி வயிறு வலிச்சுப்போச்சுப்பா... இன்னிக்கு சரியான வேலையா இருந்து ஒரே டென்சன்ல இருந்தேன்.இத படிச்சுப்புட்டு அப்பே சாமி ....

மின்னுது மின்னல் said...

//சுவர்களில் வெண்பாக்கள் வடிக்கப் பட்டு வழிந்துக் கொண்டிருந்தன... கைப்போங்கா வெண்பாக்களைப் பார்த்து லேசாய் மிரண்டாலும் பார்வையில் கெத்து குலையாமல் நின்றது விவசாயிக்குப் பெரும் பீதி ஏற்படுத்தியது...//

ஏலே தேவு ஹிஸ்டரியை தப்பா எழுதகூடாதுல. தல கழுதைபுலி வாலுலையே வெடி வைச்சவரு அவர போயி வெண்பாக்கெல்லாம் பயபிட்டதா சொல்லுரது நல்லா இல்ல சொல்லிபுட்டேன் ஆமா.......

பயமா யாருக்கு....சிங்கமுல

செந்தழல் ரவி said...

வந்துடுச்சிய்யாயா...வந்துடுச்சிய்யா....

தேவ் | Dev said...

ஒற்றர் படையின் ஒப்பற்ற தலைவா... உன் கடமை உணர்ச்சி என்னைக் கதி கலங்க வைக்கிறது...

ஆப்பு வரலாறை இப்படி தோண்டி எடுத்து விட்டீரே வாழ்க உம் புகழ்....

தேவ் | Dev said...

அ.உ.பி.சூ.இ.இ.அ.த மாண்புமிகு பதிவுல அரசாங்கத்தின் உணவுத் துறை அமைச்சர் அண்ணன் கொத்தனார் அவர்கள் வரு.வா.சங்கத்தி வரலாற்றை நன்கு அறிந்தவர். வரு.வா.சங்கத்தின் உணவு விழாக்களை முன்னின்று நடத்தியவர்.. அந்த விவரங்கள் வரும் பதிவுகளில் வெளியாகும்.
அண்ணனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் பதிவுகள் வெளிவரும் வரை வரு.வா.ச பதிவுகளை அன்போடு ஆதரித்துப் படித்து ஆசிக் கூறுமாறு அ.உ.பி.சூ.இ.இ.அ.த கொத்தனாரின் அனைத்துலக ரசிகர்களையும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

தலைமை நிலையம் வ.வா.ச, சென்னை.

பி.கு. அண்ணன் கொத்தனாரின் அடுத்தப் பதிவை ஆவலோடு எதிர்பார்க்கும் லட்சோப லட்சம் பின்னூட்டாளர்களின் சார்பாக ஒரு அன்பான வேண்டுகோள்.

கொத்ஸ் அடுத்தப் பதிவு எப்போ?

கைப்புள்ள said...

//கொத்ஸ் அடுத்தப் பதிவு எப்போ?//

என்னை மாதிரியான கைநாட்டுகள் பங்கேற்கக் கூடிய அடுத்தப் பதிவு எப்போ?
:)

பொன்ஸ்~~Poorna said...

அண்ணன் நாமம் வாழ்க..
யானை அப்புறம் என்னங்க செஞ்சுது?

பக்கத்துல உட்கார்ந்து தாவணி, சிந்துன்னு ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருந்த பாண்டி நாட்டு சிங்கத்தை மறந்துட்டீங்களே!!
இன்னும் நிறைய பேரைக் காணோம். வரலாற்றில் இருட்டடிப்பு செய்வதாக யாராச்சும் (நயன்தாராவைத் தேடிப் போயிருக்கும்) சோழ நாட்டு தளபதி வந்து நிக்கப் போறாங்க ஆமாம், சொல்லிட்டேன் :)

கைப்புள்ள said...

//அங்க அவர் யாருக்கு குருவி ரொட்டியும் குச்சுமுட்டாயும் வாங்கிகொடுத்து சீடனாக்கிக்கிட்டாருன்னு சொல்லவே இல்லையே..//

செந்தழலாரே! பொறுமை...பொறுமை...இவ்ளோ சொன்னவரு அதையெல்லாம் சொல்லாம வுடுவாரா? ...எல்லாரும் ஒவ்வொருத்தரா வருவாங்க. கொஞ்சம் வெயிட்டீஸ்.

கவிதா|Kavitha said...

//அணில் குட்டிகளை விரட்டி சென்று அதன் முதுகில் இருக்கும் பின் கோட்டுக்கான முகவ்ரி தேடுவது எனத் திரிந்தான் அந்த வாலிபன்...//

என்ன..தேவ்..அணில்குட்டிய சொல்லியிருக்கீங்க.. நம்ம அணில் குட்டிக்கு தெரிஞ்சிது வந்து சாமி ஆடிடும்...கொஞ்சம் உஷாராவே இருங்க

மின்னுது மின்னல் said...

கைம்பொன்னுவை பற்றி ஒன்னும் சொல்லாமல் கிழக்காபிரிக்காவை உட்டு இங்கு வந்துட்டே ப்ளாஸ்பேக் எல்லாம் இனிமேதான் வருமா??

//கற்பனையின் சிகரமே!!!

தேவு, வகுப்பு எடுயா எப்படி "வொக்காந்து யோசிக்கறதுனு"//

இது ஒண்னும் திரிலர் கதை கிடையாதுபா.

வரலாறு உண்மை சம்பவம் அம்புட்டுதான் சொல்லுவேன்...::)))

ILA(a)இளா said...

தேவு, இப்படி ஒரு உண்மைக்கு புறம்பான பதிவை எதிர்க்கிறேன். பின்னாடி குதறியது எல்லோருக்கும் தெரியும், அதுக்கு முன்னாடி என்ன ஆச்சுன்னு சொல்லவே இல்லையே.

நாகை சிவா said...

//சோழ நாட்டு தளபதி வந்து நிக்கப் போறாங்க ஆமாம் சொல்லிட்டேன் :)//
இது தவறு. அவரு சேர நாட்டு தளபதி.
அப்புறம் சோழா நாட்டு புலி(கள்) உங்களிடம் சண்டைக்கு வந்து விடும்.

பொன்ஸ்~~Poorna said...

சிவா,

அமைதி!! அமைதி!!
சோழ நாடு உங்களுக்கு மட்டுமில்லை.. எங்க சொந்த ஊரும் தரணிக்கே சோறுடைத்த சோணாடு தான்.. நமக்குள்ள இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் வேண்டாம் அப்பு :)

Syam said...

தலயின் வரலாறு, புவியியல், "அறிவில்லா"யியல் எல்லாத்தையும் உலகுக்கு எடுத்து சொன்ன தேவு வாழ்க...

இலவசக்கொத்தனார் said...

அடுத்த பதிவா? இப்போதான் நம்மளை இந்த ஆறு விளையாட்டுக்கு குமரன் இழுத்து விட்டுட்டாரு. அதுக்குதான் எதாவது எழுதணும். இந்த வாரயிறுதி வேலையா அதைப் பண்ணறேன். ஓக்கேவா? அதுல வெண்பா இல்லாம பாத்துக்கறேன். அதனால கட்டாயம் வந்து பாருங்க கைப்ஸ்.

நாகை சிவா said...

//நமக்குள்ள இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் வேண்டாம் அப்பு :) //
ஹாங் இது மேட்டரு.... நான் ஆப் ஆயிக்குறேன்

கீதா சாம்பசிவம் said...

சங்கத்தின் மற்றப்பெரும் தலைகளை இருட்டடிப்புச் செய்த "கழுதைப்புலி கடி புகழ் தேவ்" சதி அம்பலம். யானையைக் கடத்தி வந்து வேலை வாங்குவதாகச் செய்தி. யானையே வந்து அழுதிருக்கிறது நிரந்தரத் தலைவலியிடம். இப்போது யானை எங்கே? இரண்டு நாளாக யானை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

கீதா சாம்பசிவம் said...

அது சரி, கைப்பொண்ணை என்ன செஞ்சீங்க?

கீதா சாம்பசிவம் said...

இந்த வாரக் கல்கிலே "கைப்புள்ள" என்று படித்ததும் நம்ம கைப்புள்ளதானாக்கும் னு நினைச்சுப் போய்ப் பார்த்தால் அது யாரோ "எடுப்பார் கைப்புள்ள". கைப்புள்ளக்கு வர வர போட்டி ஜாஸ்தி ஆயிடும் போல் இருக்கு.

தேவ் | Dev said...

//கைப்பொண்ணை என்ன செஞ்சீங்க? //


கீதாக்கா நல்ல கேள்வி.... நம்ம சங்க வரலாறை முழுமையாக இந்தத் தமிழ் கூறும் நல்லுலகமும் அதில் வலைப் பின்னும் நம் அன்பு நெஞ்சங்களும் அறிந்து ஆனந்தம் கொள்ள வேண்டும் என்ற ஒரே லட்சியத்தை மனத்தில் கொண்டே இந்த வரலாற்று சிறப்பு மிக்கத் தொடரை எழுத ஆரம்பித்துள்ளோம்.. ஆம் உள்ளோம்.. நான் ஒருத்தன் அல்ல... பல பேர் இதில் ஈடுப்பட்டுள்ளோம்..

கைப்பொண்ணுவைப் அறிய நீங்கள் மட்டுமல்ல எழு நூறு கோடி கைப்பொண்ணு ரசிக கண்மணிகளூம் ஆர்வம் கொப்பளிக்க காத்துக் கிடக்கின்றனர்...

பொன்ஸ் அக்கா இந்தத் தொடரின் அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுவதாய் வாக்குக் கொடுத்துள்ளார். கைப்பொண்ணுவைப் பற்றிய பல 'உண்மை'கள் அறிந்தவர் என்ற நிலையில் அவர் உங்கள் கேள்விக்கு தக்க விடை தருவார் என எதிர்பார்ப்போம்.

தேவ் | Dev said...

//சங்கத்தின் மற்றப்பெரும் தலைகளை இருட்டடிப்புச் செய்த "கழுதைப்புலி கடி புகழ் தேவ்" சதி அம்பலம். //

கழுதைப் புலியிடம் கடி வாங்குவதாப் புகழ் அக்கா தலயின் புகழ் பாட கழுதையாய் உழைப்பதையேப் புகழ் என நினைப்பவன் நான்.. என்னைப் போய் சதி என்று சொல்லி வார்த்தைகளால் மிதி மிதியென மிதிக்கலாமா

தேவ் | Dev said...

//இரண்டு நாளாக யானை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. //

பொன்ஸ் உங்க மேல கீதாக்கா எதோ பிராது கொடுக்குறாங்க என்னன்னு கேளுங்க வாங்க

பொன்ஸ்~~Poorna said...

//கைப்பொண்ணுவைப் பற்றிய பல 'உண்மை'கள் அறிந்தவர் என்ற நிலையில் அவர் உங்கள் கேள்விக்கு தக்க விடை தருவார் என எதிர்பார்ப்போம்..//

அடப் பாவி.. இப்படி வேற ஒரு உள்குத்தா?!!! இருக்கட்டும்..

வரேன்.. வரேன்.. கொஞ்சம் வெளி வேலையெல்லாம் அதிகமாய்டுச்சு.. இப்போ தான் சங்கத்திண்ணைக்கு வர முடிஞ்சிது.. கொஞ்சம் நேரம் கொடுங்கப்பா.. வரேன் ..

எல்லாரும் யானை பின்னாடி துரத்தினா எப்படி? :))) ஏற்கனவே படு வேகமா ஓடிகிட்டிருக்காரு :)

சந்தோஷ் aka Santhosh said...

ஆகா தேவு,
கலக்கிப்பூடியேபா.. ஆமா சங்கத்துல ஆறுவருசம் லீவு கேட்டு இருந்தே.. என்ன லீவை கேன்சல் பண்ணிட்டாங்களா? ஏதோ எலி சே புலி கடிச்சிடுச்சாமே கேள்விப்பட்டேன் ஒடம்பை பாத்துக்கோப்பா?... புலி கடிக்கு யானை கறி நல்லதூன்னு கேள்விப்பட்டேன் ஏதாவது கண்ணுல தட்டுப்படுதான்னு பாரு... ஏய் ஏன் ஏன் பொன்ஸ் அக்கா பக்கம் பாக்குற சங்கத்துக்கு வெளியே பாருய்யா....

தேவ் | Dev said...

வா சந்தோஷ்.. பேன் பாத்து இப்போத் தான் முடிச்சியாக்கும்.. சிபி சங்கம் பக்கம் வரமா இருக்கார்ன்னு நீ வந்து இருக்க வாய்யா வா...

அந்த எலி.. சீ.. புலி மேட்டர் பத்தி எல்லாம் நம்ம சங்க வரலாற்றிலே விவரமா எழுதுறேன் மச்சி.. அதுவரைக்கும் நோ கிராஸ் கொஸ்டீன் ஸ்...

அந்த ஆறு வருசம் லீவு மேட்டர் ஒரு குதிரை மேட்டரால நின்னுப் போச்சுப்பா... அது பத்தியும் சங்க வரலாற்றில் விரிவா வரப் போகுது...

ஆமா நமது கைப்பு படிச்சியா இலக்கிய இமயம் இளா உன் வண்டவாளத்தை தண்டவாளத்துல்ல் ஏத்தி கீரின் கொடி ஆட்டிக்கிட்டு கெக்கே பிக்கேன்னு சிரிக்கீரார்...வந்து விசாரி.

தேவ் | Dev said...

அழகான சரி சோடி...
ஆனை மேல அம்பாரி...

அந்தப் பாட்டுக் கேட்டுத் தான் ஆனை இப்படி ஓடுதோ...