Wednesday, June 14, 2006

விவசாயி க(உ)தார் விஜயம்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒட்டகப் படையில் ஆள் சேர்ப்பதற்காக...(சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்...ஒட்டகம் சேர்ப்பதற்காக) ஞாயிற்றுக் கிழமை கதார் செல்லவிருக்கும் சங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவசாயி இளா அவர்களின் பயணம் இனிதே அமைய எங்கள் வாழ்த்துகள்.

இப்பயணத்தின் வாயிலாக கதார் சேக்குடன் வ.வா.ச. கதார் நாட்டு எக்ஸ்டென்ஷன் கவுண்டர் திறப்பது குறித்தும், வளைகுடா வட்ட சங்கத்து சிங்கங்களுக்குப் ப்ளாக்கில் விவசாயம் செய்வது குறித்தும் மகசூலை மேம்படுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கவிருக்கிறார்.

கதார் நாட்டு விமான நிலைய வாயிலில் கடலை சாகுபடி குறித்து கதார் நாட்டு காலேஜ் பசங்களுடன் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பர் விளைச்சல் பெறுவது குறித்து பேச சங்கத்துச் சிங்கம் பாண்டிக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வ.வா.ச. தென்மதுரை வட்ட கண்மணிகள் விவசாயியை ஞாயிற்றுக் கிழமை அன்று வழியனுப்ப சென்னை மெரினா கடற்கரையில் கரகாட்டம் ஒத்திகை நடத்தியபோது எடுக்கப் பட்ட படம்.

9 comments:

ILA (a) இளா said...

நான் ஊருக்கு போறதா சொன்னாலும் சொன்னேன், கைப்புக்கு கற்பனை பிச்சிகிட்டு வருது. (உன்னை தேடி சுந்தரராஜன் ஸ்டைல படிங்க) விவசாயம் பண்ணா கத்தார் போறேன். அப்படி பாரிஸ் போறேன், லண்டன் கூட போறேன். உங்க ஊருக்கு வரணும்னா இப்பவே தேதி வாங்கிங்க.

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்களுடன் வழியணுப்பி வைக்கிறோம்!

கரகாட்டம், ஒயிலாட்டம்,

பொய்க்கால் குதிரை(தலை மன்னிக்கவும் உங்க அனுமதி இல்லாமலேயே இதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டோம்)

எல்லாம் உண்டு விவசாயியை வழியனுப்ப!

ILA (a) இளா said...

அங்கே மணலில் விவசாயம் பண்ணுவது எப்படி? என்பதைப்பற்றி கைப்பு ஸ்டைலில், கத்தார் மகராஜாவிடம் ஒரு சிறப்பு விளக்கம் அளிக்கவே செல்கிறேன். உங்களுக்கு ஏதாவது வேணுமின்னா புறா மூலம் தூது விடுங்கள்.
சங்கம் வளர, தோஹா என்ன பாலைவனம் கூட செல்வேன் தல, ஆணையிடு. என் உயிர் உனக்கே.

சுதாகர் said...

அப்படியே, லண்டனுக்கு வரும் போது சார்லஸ் பசங்க ரெண்டு பேரு சும்மா சுத்திகினு இருக்காய்ங்க. அவனுங்களையும் நம்ம சங்கத்துல சேத்துடுங்க..

நாமக்கல் சிபி said...

//சிங்கம் களம் இறங்கிடுச்சு!!!!!!!//

இப்படிச் சொல்லிதான் ஒரு வாயில்லாப் பூச்சியை அடிச்சி துவம்சம் பண்ண வெச்சாங்க! அது நீர்தானா ஐயா!

Syam said...

கடலை சாகுபடியின் மகிமயை உலமெங்கும் பரப்பும் நோக்கத்துடன் ஒட்டக தேசத்துக்கு போகும் அருமை அண்ணன் விவசாயி அவர்களுக்கு 8 ஆவது சதுரத்தின் சார்பில் புன் ஆடை (பொன் அல்ல) சாத்தி வாழ்த்தி வழியனுப்புகிறோம் :-)

பொன்ஸ்~~Poorna said...

விவசாயி, கதார் எங்க இருக்கு? அப்படியே நம்ம துபாய் ராசா, நிலவு நண்பன் எல்லாம் பார்ப்பீங்க தானே?

Unknown said...

கதார் என்று உதார் விட்ட எங்கள் தலயே! அமைச்சரின் மாடு பிடிப்பு - சே, ஒட்டகப் பிடிப்பு பயணத்திற்கு கூட உலக அளவில் பில்டப் கொடுக்கிற உங்கள் பெரிய மனசுக்கு என்னத்த சொல்றது?

தங்கச்சி பொன்ஸ் வேண்டி விரும்பி href="http://kekkepikkuni.blogspot.com">ஆனை அம்பாரி எல்லாம் வச்சு அழைச்சதினால, என் அகில பிரபஞ்ச ரசிகர் மன்றத்தையும் (நம்ம ரேஞ்சே தனி தாங்க) அழைச்சிகிட்டு கட்சியில் ஐக்கியமாக வந்திருக்கேன். தங்கச்சி புதரகத்திலியே வச்சு நமக்கு வேண்டியதை (ஒரு சின்ன சூட்கேஸ் - அதுல என்னா இருந்திச்சுன்னு அப்புறம் சொல்றேன்) கொடுத்திடுச்சு. அந்த அன்புக்கு முன்னால நான் எம்மாத்திரம்? (பில்டப் கொறவா இருந்திச்சின்னா சொல்லுங்க; எங்க இருந்து வந்ததோ அங்க இன்னும் இருக்கு:-))))) உங்க பேச்சு பீரங்கி (யோவ், யாராவது இந்த பேர்ல கை வச்ச, தெரியும்) ஆகவே ஓடோடி வந்திருக்கேன். என் திறமையில் சந்தேகம்னா என் பேர பாருங்க, "காரணப் பெயர்" ஆக்கும், என்னிய தெரிஞ்சவங்க எல்லாம் ஒத்துக்குவாங்க.

உங்களின் இன்னொரு தலைவலி.

Unknown said...

அந்த சுட்டி இங்க: ஆனை அம்பாரி எல்லாம் வச்சு...

அந்த சூட்கேஸ்ல இதான் நைனா இருந்திச்சு: "ஆற்றல் சோறு வடிப்பது எப்படி?" "ஆற்றாமல் டீ குடிப்பது எப்படி" போன்ற அரிய புத்தகங்கள்.

சங்கம் சரணம் கச்சாமி,
கெ. பிக்குணி.