Sunday, June 4, 2006

தளபதியின் அறிக்கை

சங்கத்தின் புதிய சிங்கங்களாம் புதிய தோழர்கள் சங்கத்துப் பணியை செவ்வனே செய்வதோடு கடமையை எள்ளளவும் மறக்காது கேள்விகள் எழுப்புகின்றனர். இவற்றிற்கு விளக்கம் கொடுப்பது ஆற்றலரிசி பிகிலு அவர்களின் கடமை எனினும் சங்கத்து சிங்கங்களுக்கு தலை கைப்புவின் அனுமதியோடு ஒரு சில வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்.

உடன் பிறப்புகளே..... சங்கத்து வரலாற்றை கொஞ்சம் உன்னிப்பாய் ஆராய்ந்து பாருங்கள். சங்கத்து உறுப்பினர்கள் எப்பொழுதெல்லாம் சற்று கண்ணயர்ந்து காணப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் இது போன்ற பிரச்னைகள் தலை தூக்குகின்றன. இவற்றின் காரணம் என்ன?

நமக்குள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் அவநம்பிக்கையை பயன்படுத்தி சூழ்ச்சிகளால் சங்கத்தில் கலகம் ஏற்படுத்தி சங்கத்தின் புகழையும், அதிவேக வளர்ச்சியையும் கெடுக்க நினைக்கும் வீணர்களின் வேலை என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடிதத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் அனைத்தும் சங்கத்தின் கொ.ப.செ வான தங்கத் தலைவி, ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் அவர்கள் மேல் களங்கத்தை சுமத்தி, கேள்விகள் கேட்பதும் நம் சங்கத்தின் உறுப்பினர்களே என்ற மாயத் தோற்றத்தை உண்டாக்கி சங்கத்தில் சலசலப்பை உண்டாக்குவதே இது போன்ற புல்லுருவிகளின் வேலை. இத்தகு விஷமங்களுக்கு இனி நாம் இடம் கொடுக்கலாகாது.

இனி நாம் கைப்புள்ளயை எப்படியெல்லாம் புதிது புதிதாய்க் கலாய்ப்பது என்பது குறித்து உட்கார்ந்து யோசிக்க வேண்டிய நிலையில், இது போன்ற வெளி கலாய்த்தல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பதில் காலத்தை வீணாக்கலாமா?

சற்றே சிந்திப்பீர்.

வாழ்க வ.வா.சங்கம். வளர்க நமது கடமைகள்.

10 comments:

Anonymous said...

It is very pathetic.
Why don't you behave like a grown up? Look around. People are dying and suffering. Some of you people in tamil blogdom behave like bunch of spoiled kids in a kindergarden. You people should be ashamed of yourselves for the stupid contents that you post without shame. Same rhetoric from kaipuLLa to you. Grow up and make sense.

Anonymous said...

இது ஏதோ பூசி மொழுகுற வேலையாத் தெரியுது.. பொன்ஸ் அக்கா, பாத்து நடந்துக்குங்க.. ஆமாம் சொல்லிட்டேன்!!

- அல்கேட்ஸ்

பொன்ஸ்~~Poorna said...

English anony,
Around us, I dont find much of grown-ups. People are fighting over age-old controversial topics with no resolutions..
If you feel kaippuLLA is rhetoric, non sense and pathetic, please contact Thamizmanam admin so that these wont catch your eyes. Somehow, I dont think fellow-Thamizmanamites feel the same as you.
We dint come here to keep talking about resolution less issues. Thanks for visiting our page anyway.

ALIF AHAMED said...

see this link kaipu

http://niyajudeen.blogspot.com/2006/04/comedy.html

மகேஸ் said...

அய்யா இங்குலீசு அனானி, எல்லாரோலும், எந்த நேரமும் சர்ச்சைக்குரிய பதிவுகளையே படித்துக் கொண்டும் விவாதித்தித்துக் கொண்டும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் விரைவில் மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டு விடுவோம். நகைச்சுவை நிகழ்சிகளும், வலைப் பதிவுகளும் நம்மைப் புத்துணர்ச்சியாக்குகின்றன. ஒருபக்கம் அலுவலகப் பணிச்சுமை, மறுபக்கம் நீங்கள் சொல்வதைப்போன்ற பிரச்சினைகளை விவாதிக்கின்ற பதிவுகள், மனிதன் எப்படிச் சிரிப்பது? இது போன்ற பதிவுகளால் தான். நீங்கள் சொல்வது போல எழுதுவதற்கு ஏற்கனவே பல பேர் உள்ளனர். 'பிகிலு' பொன்ஸ் சொன்னது போல தமிழ்மணத்தில் சர்ச்சைகளை விவாதிப்பதால் எந்தவித தீர்வையும் கொடுத்துவிடப் போவதில்லை.

பொன்ஸ்~~Poorna said...

இது பற்றி மற்ற தொண்டர்களின் கருத்தை அறியாமல் என்னால் ஏதும் சொல்ல முடியாத போதும், ஒரே ஒரு சந்தேகம் மட்டும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!!!!!!
ஆமாம், இதை ஏன் ஓவியம்./நிழற்படம்னு வகைப் படுத்தி இருக்கு?!!!

மகேஸ் said...

//இது பற்றி மற்ற தொண்டர்களின் கருத்தை அறியாமல் என்னால் ஏதும் சொல்ல முடியாத போதும், ஒரே ஒரு சந்தேகம் மட்டும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!!!!!!//

ஆகா, சங்கத்துக்குள்ள என்ன ஒற்றுமைப்பா.

நாமக்கல் சிபி said...

//ஆமாம், இதை ஏன் ஓவியம்./நிழற்படம்னு வகைப் படுத்தி இருக்கு?!!!
//

எனது கனிணியில் வகைப்படுத்தும் தலைப்புகள் வரும் காம்போவில் தமிழ் வருவதில்லை. கட்டம் கட்டமாகவே தோன்றுகிறது. எனவே குத்து மதிப்பாக ஒன்றை தேர்வு செய்தேன். அவ்வளவுதான்.

:-))))

Anonymous said...

Once again you people have proved your ignorance. Ponds this has nothing to do with ThamizhmaNam. I am not here just becasue ThamizhmaNam connects you. I am here only because you people have your own blogs. now you said that age old controversial issues, This just shows your ignornace and excapism. I suspect neither of you have faced any problem regarding the old-controversial issues. If you do not care about the issues, why on earth, time to time, write here and there about politics?

One more underlying themes in all your posts are rediculing dravidian parties. Is it natural inclining? You are nothing, but the Light versions of Agents and Masks. Good luck.

Anyways, I have a second thought-
Who I am to tell you?

BYE.

பொன்ஸ்~~Poorna said...

Anony,
//Once again you people have proved your ignorance. Ponds this has nothing to do with ThamizhmaNam. I am not here just becasue ThamizhmaNam connects you. I am here only because you people have your own blogs. //
OK.. If you are here on yourself and not from Thamizmanam, its fine. I take back my words on Thamizmanam.

//now you said that age old controversial issues, This just shows your ignornace and excapism. //
Yes sir/maam.. I never said we know everything.. No one can claim that they know everything in this world and is interested in every discussion that happens.

//I suspect neither of you have faced any problem regarding the old-controversial issues. //
Fine.. Please do suspect.

// If you do not care about the issues, why on earth, time to time, write here and there about politics? //
Well, we never said we dont care. There are lot of bloggers who dont write about them though they care. Please check them out before questioning us.

//One more underlying themes in all your posts are rediculing dravidian parties. Is it natural inclining? //
We have also made joke of Football and Cinema. Lot of other things are following. Hope you dint read them.

//You are nothing, but the Light versions of Agents and Masks. Good luck.//
I differ here.. We do not have even the slightest intention of making joke of any writer/blogger in Thamizmanam.. not even an anonymous commenter. We know what we are doing and what we are upto.

//Anyways, I have a second thought- Who I am to tell you? //
Fine. Thanks for your comments anyway. It has given us a chance to recheck our strategy and also alerted us to be careful on our light hearted teasing.

One last point I want to make is we are harmless and funloving people and we are not here to disturb others. Its just that there has to be a comedy track in every serious issue - after all we are also Tamil cinema watchers :)

Once again thanks for your comments Anony.