Saturday, June 17, 2006

விருந்து சமைக்கிறாங்க வ.வா.சவிலே..

நூறாவது பதிவில் அண்ணன் கைப்புவின் புகழைப் பறை சாற்றிப் பெருமை சேர்த்த கழகப் போர்வாள் கச்சேரி தேவ் தம் வலையுலகப் பயணத்தில் நூறு என்னும் மைல்கல்லை அடைந்ததைப் பாராட்டி அண்ணன் கைப்பு சொந்த சமையல் செய்து விருந்து வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அண்ணன் இதுவரை சமையற்கட்டுப் பக்கம் வந்ததே தன் தாயாரிடமிருந்து தீய்ந்த தோசையை வாங்க மட்டுமே என்பதால் சமையலறையில் உதவிக்காக சங்கக் கண்மணிகள் கை கொடுக்க வருகிறார்கள்.

கைப்பு டீக்காக ஏப்ரான் எல்லாம் அணிந்து தொப்பியுடன் சமையலுக்குத் தயாராக வருகிறார்.

கைப்பு: ஓகே.. சங்க மெம்பர்ஸ், எல்லாரும் ரெடியா? சமையலை ஆரம்பிப்போமா?


பாண்டி: எல்லாம் ரெடி தல.. நீ சொன்னதும் ஆரம்பிக்க வேண்டியது தான்..

கைப்பு: ஆமாம், சங்கத்து மக்கள் எல்லாரும் இருக்காங்க சரி, அதோ அந்தாண்ட நிக்குதே ஒரு பொண்ணு, அது யாரு பாண்டி?

பாண்டி: ஹி ஹி.. தல, என்ன தல அப்படிக் கேட்டுப்புட்டீங்க.. அதான் நம்ம சிந்து.. ஹி ஹி..


பார்த்தி: சிந்துவா? அந்த கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டர்?என்னாது இது.. பெரிய ஊழலா இருக்கும் போலிருக்கு... கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டருக்கு இங்க என்ன வேலைன்னு கேக்கறேன்?.. விசாரிக்கறேன். விசாரணை கமிஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.. இது ஒண்ணும் சரியில்லை..

சிபி: பார்த்தி, கொஞ்சம் சும்மா இரு.. பாண்டி, ஹி ஹி.. சிந்துவுக்கு சமையல் தெரியும்னு கூட மாட ஒத்தாசையா கூட்டிகிட்டு வந்த தானே?

பாண்டி: இல்ல சிபியண்ணே.. நம்ம சமையல் செய்ய என்ன வேணும்?

பொன்ஸ்: என்ன வேணும்? மைக்ரோவேவ் ஒவன் வேணும்.. அதுல பவர் பட்டனைப் பார்த்து..

இளா: ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. விட்டா சோறு வடிச்சி, கொழம்பு வச்சி, வெண்பாவும் வடிச்சிட்டுத் தான் மூடுவாங்க.. அக்கா.. பொன்ஸக்கா.. கொஞ்சம் சும்மா இருங்கக்கா.. பாண்டி சொல்லட்டும்...


பாண்டி: சமையல் செய்ய, முதல்ல ரெசிபி வேணாமா? அதான், என்னென்ன ரெசிபி வேணும்னு சொல்றீங்களோ, அதையெல்லாம் கம்ப்யூட்டர்ல தேடிக் குடுக்க எனக்கு உதவியாத் தான் சிந்து வந்திருக்கு.. சிந்து, கமான் யா.. கொஞ்சம் டீ போடுவது எப்படின்னு தேடு பார்க்கலாம்..

பொன்ஸ்: டீ போட எல்லாம் எதுக்கு கம்ப்யூட்டர்.. என் கிட்ட விடுங்க தல.. என்னோட அடுத்த பதிவே.. மைக்ரோவேவில் டீ போடுவது எப்படி?ங்கிறது தான்

பெருசு: ஐயோ ஐயோ.. இந்த டீ போடுவது மாதிரி சின்ன மேட்டரை எல்லாம் விடுங்கப்பா.. என்னா இது.. சின்ன பிள்ளத் தனமா. அப்படியே முன்னேறி ஹைடெக்கா உப்புமா சாப்பிடுவீங்களா.. டீப் போடறாங்களாம் டீ..

கைப்பு ( பெருசுவை அதிசயமாகப் பார்க்கிறார், தனக்குள்): நம்ம சங்கத்துல உப்புமா எல்லாம் செய்யத் தெரிஞ்ச ஆளா?!!! பெரிய ஸ்டார் குக்கா இருப்பார் போலிருக்கே.. இவரை விடக் கூடாது.. (வெளியில்) அட பெருசு, வெவரமான ஆளாத் தான் இருக்கீரு.. உப்புமாவே செஞ்சுடுவோம்.. உப்புமா உங்க டிபார்ட்மென்ட் ஆமாம், சொல்லிட்டேன்.. பாண்டி, இவருக்கு உப்புமா செய்ய என்ன வேணும், ஏது வேணும்னு கேட்டு லிஸ்டுவாங்கிக்க..


பாண்டி (மனசுக்குள்): தலைக்கு புத்தி போவுது பாரு.. போயும் போயும் விருந்துக்கு உப்புமா எவனாவது செய்வானா?!! ஒரு பிரியாணி, ஒரு சிக்கன் 65ன்னு போட்டா சொகமா சாப்டுட்டு சொகமாத் தூங்கலாம்..ம்ஹும்.. நேரம், (சத்தமாக) பெருசு, முத ஐட்டம் உன் ஐட்டம் தான்யா.. என்ன வேணும் உப்புமா செய்ய? சேமியா உப்புமாவா, இல்லை ரவா உப்புமாவா?

பெருசு: இல்லை இல்லை.. இதெல்லாம் இல்லை.. உப்புமா செய்யணும்னா, எனக்கு இட்லி வேணும்..

பொன்ஸ்: என்னது இட்லியா?

இளா: இட்லி யெல்லாம் யாருக்கு செய்யத் தெரியும்? இட்லி வடைன்னு ஒருத்தர் இருக்காரு.. அவரை வேணா கூட்டிட்டு வரலாம்..

பெருசு: எனக்கு இட்லி இருந்தாத் தான் உப்புமா செய்ய வரும்.. கரெக்டா சொல்லுங்க, இட்லி எப்போ வாங்கியாருவீங்க? எனக்கு அஞ்சுமணிக்கு வெண்பா க்ளாஸ் இருக்கு.. கொத்தனார் வரச் சொல்லி இருக்காரு.. போகணும்..

கைப்பு: ஏய்யா? !! இட்லி எல்லாம் செஞ்சா அத விட்டுட்டு எவனாவது உப்புமா செஞ்சி சாப்டுவானாய்யா? இட்லி செய்யும் அளவுக்கு சமைக்கத் தெரிஞ்சா நாங்க இப்படிப் பேசிகிட்டு இருப்போமா? ம்ஹும்.. இது தேறாத கேஸு.. சரி சரி பாண்டி, நம்ம தான் மெனு முடிவு பண்ணணும் போலிருக்கு.. யாருக்கு என்னென்ன சமைக்கத் தெரியும்னு சொல்லுங்க..

பொன்ஸ்: எனக்கு சாதம் வடிக்க நல்லா தெரியும்ணே.. அதாவது... மைக்ரோவேவ்ல,,

கார்த்திக்: ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.. நீங்க சாதம் வடிச்ச கதை தான் அமெரிக்காலேர்ந்து நியூசிவரைக்கும் எல்லாருக்கும் தெரியுமே.. கொஞ்சம் எங்களையும் பேச விட்டா நல்லா இருக்கும்..

அப்போது கீதா வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே வருகிறார்

பொன்ஸ் (முணுமுணுப்பாக) வந்துட்டாங்க.. தலைவலி

கீதா : என்ன தலைவரே.. நிரந்தரத் தலைவலியான என்னை விட்டுவிட்டு எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்? "சிபி ஏன் குமார காவியம் எழுத வில்லை" என்று திடீர் என்று நினைவு வந்ததால், பாதி சாப்பாட்டில் எழுந்து அவருக்கு போன் செய்த காரணத்தால் நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தது.. இல்லைன்னா என்னை விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் என்ன சதி செய்கிறீர்கள் என்றே தெரியாமல் போயிருக்கும்.

பாண்டி: கீதாக்கா, அமைதி அமைதி..சதி இல்லைக்கா, சமையல் தான் செய்யறோம். எதுக்கு இத்தனைக் கோபப் படுறீங்க.. நம்ம தேவ் நூறாவது கச்சேரி போட்டுட்டாப்ல.. அதுக்குத்தேன் எல்லாரும் சேர்ந்து விருந்து சமைக்கப் போறோம்.. இப்போ பொன்ஸக்கா சாதம் வடிக்கப் போறாங்க.. (பொன்ஸ் ஏதோ பேச ஆரம்பிக்கிறார்..)
அக்கா.. இருங்கக்கா.. எப்படி வடிக்கிறதுன்னு கேட்கலை.. இருங்க இருங்க.. பேராசிரியர் கார்த்திக் தோசை சுடுவதில் எக்ஸ்பர்ட்.. அவரு தோசை செஞ்சிடுவாரு.. நீங்க என்னக்கா செய்வீங்க?


கீதா: நான் சாம்பார் நல்லா வைப்பேன்.. நானே சாம்பார் வைக்கிறேன்..

பொன்ஸ்: ஆனா அதுல உப்பு மட்டும் போட மறந்துருவாங்க!!

கீதா திரும்பி பொன்ஸை முறைக்கிறார்.

கீதா: சிலப்பதிகாரத்துல சாம்பாரைப் பத்தி என்ன சொல்லி இருக்குன்னா,..

சிபி: இருங்க இருங்க.. இதெல்லாம் வேண்டாம்... சரி, பாண்டி, எனக்கென்ன வேலை.. நான் என்ன செய்யணும்? கமான்.. டெல் மீ.. கமான்... கை பர பரங்குது..

கார்த்திக்: ஆமா, என்னவோ விருந்துங்கறீங்க ஒரே வெஜிடேரியனா இருக்கு.. மருந்தாகிடப் போகுது.. பார்த்து...

மகேஸ்: ஆமாம்.. எல்லாம் மருந்து ஐட்டமாவே இருக்கு.. ஒரு கிடா வெட்டி பிரியாணி போட்டோம்னு வைங்க..

பொன்ஸ்: ஆடெல்லாம் வெட்டக் கூடாது.. ஆடு பாவம்.. மல்லிச் செடி கூட பாவம்.... இருங்க நான் போய் மேனகா காந்தி கிட்ட சொல்லப் போறேன்..

கைப்பு : ஆகா.. இந்தப் பொண்ணை வச்சிகிட்டு ஒண்ணுமே செய்ய முடியாது போலிருக்கே.. பூனையை மடியில கட்டி சகுனம் பார்த்த மாதிரி..

பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..

பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..


கீதா: ஆமாம்..இந்த ஆடு கோழி எல்லாம் பேசாதீங்க.. பேசாம, போளி செய்யலாம்...

பெருசு: ஆகா, போலியா.. எனக்கு வெண்பா க்ளாசுக்கு நேரமாச்சு..

கைப்பு: இருங்கம்மா.. இந்த மகளிர் அணியைச் சும்மா இருக்க வைக்கிறதுக்குள்ள மனுசனுக்கு உயிர் போய் உயிர் வருது.. ரெண்டு பேர் இருக்கும் போதே இப்படின்னா, இன்னும் புதுசா கெக்கே பிக்கேன்னு எல்லாத்தையும் போய் கூட்டிட்டு வருது இந்த பொன்ஸு.. கொஞ்சம் அடக்கி வைக்கணும் எல்லாத்தையும்.. சரி சரி.. விவசாயி இளா.. உங்க பண்ணையிலேர்ந்து ஒரு பத்து ஆடு, இருபது கோழி, அஞ்சு கிலோ கோஸ், பத்து கிலோ வெங்காயம் எல்லாம் எடுத்துட்டு வாங்க.. சமையலை ஆரம்பிக்கலாம்..

இளா: (தனக்குள்) அடடா.. என்னது இது.. தின்னே அழிச்சிடுவாங்க போலிருக்கே.. கட்சி நிதி வேற காலியா இருக்கு.. அப்டியே எஸ்கேப் ஆக வேண்டியது தான்.. (சத்தமாக) அண்ணே.. அதெல்லாம் இந்த முறை வெளில வாங்கிக்குங்க.. எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு.. கதார் வேற போகணும்.. இப்போ தான் நேரம் பார்த்தேன்.. வரேண்ணே...


கைப்பு: தம்பி.. இளா.. இளா.. (கூப்பிடக் கூப்பிட திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. )

(இதற்குள் கட்ட துரை பெருசு, சிபி காதில் ஏதோ சொல்கிறார்)

சிபி: இருங்க தல.. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..

கைப்பு: அட நீ வேறயா? என்ன உண்மை?

சிபி: நானும் சங்கத்துல தானே இருக்கேன். நானும் இப்போ தானே ஒரு நூறாவது பதிவைப் போட்டேன்.. எனக்கு மட்டும் எந்த ட்ரீட்டும் வைக்கலை.. இப்போ கச்சேரில நூறாவது பதிவுன்ன உடனே பிரியாணி என்ன, ஜிகிர்தண்டா என்னன்னு ஒரே பெரிய ஸ்பெசல் விருந்தே தயார் பண்றீங்க.. அதை வேற என்னை வச்சே வேலை செய்ய வைக்கிறீங்க?? என்ன நடக்குது?

பொன்ஸ்: தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது..


கைப்பு: ஐயோ, ஐயோ பேச ஆரம்பிச்சிட்டாளே.. டேய் பாண்டி.. அவளைக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூட்டிப் போடா...

சிபி: அப்டீன்னா? என்ன சொல்ல வர்றீங்க?

பொன்ஸ்: இப்போ, தேவோட நூறாவது பதிவைப் பாருங்க.. நம்ம சூப்பர் ஸ்டாரு, கைப்புன்னு போட்டு அசத்திட்டாரு.. நீங்களும் போட்டீங்களே ஒரு நூறாவது பதிவு.. ப்ரோபேசன் பதிவாம்ல..
நூறாவது பதிவிலயே நீங்க ப்ரோபேஷன் லெவல் தான் நினைவிருக்கட்டும்..


இதைக் கேட்டதும் தளபதி சிபிக்குக் கோபம் வந்து விடுகிறது, அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது.(refer to Sibi's profile). இத்துடன் சங்க உறுப்பினர்களும் பயந்து போய் ஒவ்வொருவராக எஸ்கேப் ஆக, சிபி கோபத்தோடு கைப்புவின் எறும்பை எடுத்து பொன்ஸின் யானை மீது போட்டுவிட்டு "அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள..." என்று கத்தத் துவங்க.. கைப்புவும் எஸ்கேப்..

46 comments:

கார்திக்வேலு said...

:-)

Santhosh said...

//தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது.. //

ஆகா நீங்க பாட்டுக்கு பேன் பிரச்சனையில் கொஞ்ம் அசந்த நேரத்துல மகளிர் அணி மொத்தமும் கட்சில இருந்து உங்களை ஓரம் கட்டிடாங்களே.. கட்சியையும் கொஞ்ம கண்டுகங்க தளபதி எனக்கு என்னமே நம்ம ஜொள்ளு பாண்டிக்கு உங்க போஸ்டை குடுத்துடுவாங்க போல இருக்கு...SK நீங்க இதுக்கு மேல பாத்துகோங்க..கட்சியை ஒடச்சிடுவிங்க இல்ல..

நாமக்கல் சிபி said...

//தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது.. //

அது பிளாக்கர் செய்த சதியால்

தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு பேருந்தில் இன்னொரு பெண்ணின் தலையில் பேன் பார்த்த சந்தோஷை ஒரு வழி பண்ணி விட்டீர்களாமே?

என்ற வரிகள்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன.

Santhosh said...

//அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது//
ஆகா நீங்க ஒரு பேச்சுக்கு சொன்னதை பாத்தீங்களா எப்படி பில்டப்பு குடுத்து உங்க இமெஜயை(ஆமா எங்க உங்க போட்டோவை காணோம்..) கெடுத்துடாங்க..

பொன்ஸ்~~Poorna said...

////அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது//
ஆகா நீங்க ஒரு பேச்சுக்கு சொன்னதை பாத்தீங்களா எப்படி பில்டப்பு குடுத்து உங்க இமெஜயை(ஆமா எங்க உங்க போட்டோவை காணோம்..) கெடுத்துடாங்க.. //

அது நம்ம தளபதியின் வெள்ளை உள்ளத்தைக் காட்டுகிறது..

Santhosh said...

//தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு பேருந்தில் இன்னொரு பெண்ணின் தலையில் பேன் பார்த்த சந்தோஷை ஒரு வழி பண்ணி விட்டீர்களாமே?//
அடப்பாவி சிபி நடக்காத ஒண்ணை நடந்ததா சொல்லி .. நல்லதுகே காலம் இல்லப்பா..

ALIF AHAMED said...

:))

(appuram varen)

Vaa.Manikandan said...

//சிபி கோபத்தோடு கைப்புவின் எறும்பை எடுத்து பொன்ஸின் யானை மீது போட்டுவிட்டு "அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள..." என்று கத்தத் துவங்க.. //

எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?

பொன்ஸ்~~Poorna said...

இந்தச் சமையல் வேலைக்கு சந்தோஷும் வருவதாகத் தான் இருந்தது.. அவர் ஏன் வரவில்லை என்பதைக் கண்டு பிடித்த தளபதி சிபி வாழ்க..

நயன் தாரா அறிக்கையால் சிபி கொஞ்சம் மந்தமாக வேலை செய்வதாகக் கேள்விப் பட்டது தப்பு தான் போலும்..

நன்மனம் said...

//SK நீங்க இதுக்கு மேல பாத்துகோங்க..கட்சியை ஒடச்சிடுவிங்க இல்ல.. //

யாருப்பா அது பார்திபனோட டுட்டியா SKக்கு கொடுக்கறது, வாங்க SK வந்த என்னனு கேளுங்க.:-)

பொன்ஸ்~~Poorna said...

சிபி,
//எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே? //
என்ன வேலை இது? ஏற்கனவே ஒரு சமயம் கார்த்திக் நம்ம கொத்ஸோட அறிக்கையைக் காப்பி அடிச்சாருன்னு காப்பி ரைட் கேஸ் வந்து அதை நாம டீ பார்ட்டி கொடுத்து சரி கட்ட வேண்டியதாச்சு.. இப்போ மணியோட பிரச்சனை கொண்டு வர்றீங்க?!!

முதல்ல வேற ஏதாச்சும் சொல்லுங்க உங்க எறும்பு கிட்ட!!!..

துளசி கோபால் said...

:-)))))))))))))))))))

( office வேலை எதாச்சும் நடக்குதா?)

Santhosh said...

//இந்தச் சமையல் வேலைக்கு சந்தோஷும் வருவதாகத் தான் இருந்தது.. அவர் ஏன் வரவில்லை என்பதைக் கண்டு பிடித்த தளபதி சிபி வாழ்க..//
ஆகா பிகிலு நீங்களுமா? ஆனா தாங்க முடியலை பிடிங்க சிந்தனை சிற்பி அப்படிங்கிற பட்டத்தை..அப்ப நம்ம மேட்டரு சைடு வாங்கிடும் இப்போ..

Santhosh said...

//office வேலை எதாச்சும் நடக்குதா?)
//
அக்கா கட்சி ஆபிஸை கேட்டிங்களா? நிஜ ஆபிஸ்னா இன்னிக்கு லீவுங்கோ.. அதும் வெள்ளிக்கிழமை இரவு.. ஒரே கூத்து தான்..

தருமி said...

முடிச்சிருக்கிறது ரொம்ப டாப்!

ஜொள்ளுப்பாண்டி said...

//சிந்துவா? அந்த கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டர்?என்னாது இது.. பெரிய ஊழலா இருக்கும் போலிருக்கு... கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டருக்கு இங்க என்ன வேலைன்னு கேக்கறேன்?..//

இதுல என்ன ஊழல்?? சமையலரையும் ஒரு கெமிஸ்ரி லேப் தானே ?? ஒரு ஓரமாத்தேன் நின்னு ஆன்லை சப்போர்ட் கொடுக்கட்டுமே :))

ஜொள்ளுப்பாண்டி said...

//நம்ம சங்கத்துல உப்புமா எல்லாம் செய்யத் தெரிஞ்ச ஆளா?!!! பெரிய ஸ்டார் குக்கா இருப்பார் போலிருக்கே.. இவரை விடக் கூடாது..//

ஹய்யய்யோ ! இப்படி போகுதா கதை. சரி நானும் ஏப்ரானைக் கட்டிகிட்டு சமயலறைக்குள்ள குதிச்சி ஒரு பதிவை சமைச்சிட வேண்டியதுதான் !!

ஜொள்ளுப்பாண்டி said...

//பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..//

அட என்னங்க பெருசு உங்களுக்கு கதை தெரியாதா? பொன்ஸக்காவுக்கு தலைப்பு கூட தேவையில்லை கொட்டாவி விடறதுக்கு வாயைத்திறந்தாலே போதும்! கொட்டாவி விடரதைப்பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க :)))))

ஜொள்ளுப்பாண்டி said...

//தளபதி எனக்கு என்னமே நம்ம ஜொள்ளு பாண்டிக்கு உங்க போஸ்டை குடுத்துடுவாங்க போல இருக்கு...//

ஐயகோ என்ன இது தேவையிலாத சந்தேகம் சந்தோஷ்? காலையில் எழுந்து 'பேஸ்ட்'டைத்தேடும் சிறுவன் நான். தளபதி போன்ற பெரிய 'போஸ்ட்'டை அல்ல என ஆணித்தரமாக கூறிக்கொள்ள விழைகிறேன் :)))

ராபின் ஹூட் said...

முதல்ல சங்கத்து ஆளுங்களுக்கு வெந்நீர் வைப்பது எப்படின்னு சொல்லிக் கொடுங்க.

அமா வெந்நீர்/வென்னீர்/வெந்னீர்/வென்நீர் இதுல எது சரியான சரியான தமிழ் வார்த்தை?

நாமக்கல் சிபி said...

//வெந்நீர்/வென்னீர்/வெந்னீர்/வென்நீர் இதுல எது சரியான சரியான தமிழ் வார்த்தை?
//

மனசுக்குள் : "போச்சுடா! இனி பொன்ஸோட இம்ஸை ஆரம்பம்"

சத்தமாக : "ஐயா! ராபின், நல்ல கேள்வி, இத்தகைய ஆர்வத்தைத்தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம். சங்கத்தின் ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் அவர்களுக்கு இந்த வினா ரீடைரக்ட் செய்யப் படுகிறது. அவர்கள் ஒவ்வொரு வார்த்தைக்கும் இலக்கணக் குறிப்புடன் உதாரணங்களைக் கூறி உங்கள் ஐயத்தை நீக்குவார்.

ஒவர் டூ பொன்ஸ்!

ராபின் ஹூட் said...

//ஆற்றலரிசி பிகிலு பொன்ஸ் //

இது என்ன ஆற்றலரிசி? ஐ.ஆர்.8, பொன்னி,பாசுமதி இது போல அரிசியில் ஒரு வகையா? புதரகத்தில் மைக்கோவேவ் ஓவனில் சோறு வடித்த தலைவிக்குச் சரியான பட்டம் தான்.

ஹா! ஹா! ஹா!

Geetha Sambasivam said...

ஆற்றல் அரிசி பொன்ஸ் கடைசிலே எங்கே சமைச்சாங்க.? என் கிட்ட வேலையைக் கொடுத்துட்டு யானை மேலே ஏறிப்போறாங்க, கேட்டாப் புரியலியாம். முன்னாலே இருந்த தங்க வேட்டையே பரவாயில்லை. யானை வந்ததும் மேலே ஏறிக்கிட்டு கீழேயே இறங்க மாட்டேங்கறாங்க. தலைவா, நீங்க பாட்டுக்கு இல்லாத காதலிக்குப் பாரதியையும், ஆண்டாளையும் காப்பி பண்ணிச் சமர்ப்பணம் பண்ணுறீங்க? என்ன ஆச்சு?

இலவசக்கொத்தனார் said...

உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. அக்குழுவின் (ஜிகர்தண்டா, சால்னா போன்ற பதிவுகள் போட்ட) தலைவராக கால்கரி சிவா நியமிக்கப் படுகிறார்.

VSK said...

சங்கத்துல இல்லேன்னாலும் இது மாதிரி விருந்துக்குக் கூப்பிடுவாங்களேன்னு பாத்தா பேரையே காணும்!

எதோ கடைசி வரில அப்பிடி இப்பிடி நம்ம பேரு கிட்டத்தட்ட வந்துருச்சு!

இப்ப, பின்னூட்டத்துல வேற கூப்பிட்டுட்டாங்க!

என்னன்னு ஒரு கேள்வி கேட்ருவோம்!

"என்ன?"

பொன்ஸ்~~Poorna said...

//முடிச்சிருக்கிறது ரொம்ப டாப்!//

ஜோசியரே.. நீங்க வேற.. பதிவு போட்ட நேரமே சரியில்லை.. மணியண்ணன் காப்பி ரைட் கேஸ்னு போகப் போறேங்கிறாரு!!!

இப்படிப் பாராட்டு வேற போட்டுட்டீங்கன்னா, அதுக்கு வேற தனியா பின்னூட்டக் நஷ்ட ஈடு கேட்கப் போறாரு..

பொன்ஸ்~~Poorna said...

//சமையலரையும் ஒரு கெமிஸ்ரி லேப் தானே ??//
கண்டுபிடிப்பாண்டி என்னும் வ.வா.ச.வின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் பாண்டி வாழ்க!!!!

வ.வாச.வில் என்ன ஆராய்ச்சி செய்யறாங்கன்னு கேட்காதீங்க.. பாண்டி செய்யறது எல்லாமே ஆராய்ச்சிதான்.. :)

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸக்காவுக்கு தலைப்பு கூட தேவையில்லை கொட்டாவி விடறதுக்கு வாயைத்திறந்தாலே போதும்! கொட்டாவி விடரதைப்பத்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க :))))) //

அதாவது பாண்டி, கொட்டாவி என்பதை கெட்ட+ஆவி என்று பிரிப்பார்கள்..
என்னது?!! இப்போ வேணாங்கிறியா? கொட்டாவியா வருதா? சரி சரி... (மேலும் டைப் செய்ய விடாமல் பாண்டி ஒரு வைரஸை அனுப்பி கம்ப்யூட்டரைக் க்ளோஸ் செய்து விட்டார் )

பொன்ஸ்~~Poorna said...

//முதல்ல சங்கத்து ஆளுங்களுக்கு வெந்நீர் வைப்பது எப்படின்னு சொல்லிக் கொடுங்க. //
வென்னீர் வைப்பது எப்படி என்பதைப் பற்றி பாண்டி ஆராய்ச்சிப் பதிவு போடுவார்..

//அமா வெந்நீர்/வென்னீர்/வெந்னீர்/வென்நீர் இதுல எது சரியான சரியான தமிழ் வார்த்தை? //
அடுத்த க்ளாஸ் தமிழ் வகுப்பு தான்.. அங்க வாங்க.. இதெல்லாம் பேசலாம்.. மறக்காம உங்க வில்லைத் தூக்கி கிட்டு வாங்க.. உடைச்சிப் பார்க்கணும்...

பொன்ஸ்~~Poorna said...

//சங்கத்துல இல்லேன்னாலும் இது மாதிரி விருந்துக்குக் கூப்பிடுவாங்களேன்னு பாத்தா பேரையே காணும்!//
சங்கத்துல நடக்குற கூத்தெல்லாம் பார்த்தும் விருந்துக்கு வரணும்னு அடம்பிடிச்சா எப்படி? பேசாம உங்க பேர்ல ஒரு ப் சேர்த்துகிட்டு நகருங்க, நகருங்க... :) :)

மீறி வருவேன்னு சொன்னா, அடுத்த வாரம் வேற ஏதாவது செஞ்சா கூப்பிடறோம்.. அனேகமா இந்த மாதிரி கூட்டம் எல்லாம் முடியும்போது கொஞ்சம் ரத்தமெல்லாம் துடைச்சி கிடைச்சு வைத்தியம் பார்க்க சங்கத்துலயும் ஒரு ஆள் தேவை தான்.. எப்படி வசதி? :))

VSK said...

//பேசாம உங்க பேர்ல ஒரு ப் சேர்த்துகிட்டு நகருங்க, நகருங்க... //

'ப்'பிட்டதற்கு மீண்டும் நன்றி!

//எப்படி வசதி? :)) //

'ப்'பிட்டேன்! :))

Unknown said...

இ.கொ. சொன்னது: //உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. அக்குழுவின் (ஜிகர்தண்டா, சால்னா போன்ற பதிவுகள் போட்ட) தலைவராக கால்கரி சிவா நியமிக்கப் படுகிறார்.

ஐயா, யாரு யாரு உணவு பற்றிய விசாரணை குழு அமைக்கிறது, தலைவராக இருக்கிறதுன்னு கேப்பாரு இல்லையா! நாடு விட்டு நாடு சில பண்டங்களை கடத்தினதாக / அதை தின்னதாக, விசாரணை குழுவ முன்மொழிந்தவர் / குழுத் தலைவர் இரண்டு பேரிலயும் இருக்கிற ஆதாரங்கள எடுத்து விடவா?

இது அறுவை - அதாங்க அறுசுவை உணவு பற்றிய ஆராய்ச்சின்னு ஆற்றின டீயரசி சொல்லிட்டாங்க. பாத்து!

சின்ன குறிப்பு: இந்த ஆராய்ச்சி ஆனப்புறம் மிச்சம் இருந்த "ஆராய்ச்சி பொருள்"களை(அதுக்கு என்னாய்யா பேர் சொல்றது) சாப்பிட்ட பூனை கவலைக்கிடம் னு ராய்-ட்ட்ட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ல செய்தி.

சங்கம் சரணம் கச்சாமி!
கெ. பிக்குணி

Syam said...

மைக்ரோவேவ் மங்கை!
பர்கர் பாவை!!
வெண்பா வேங்கை!!!
பிட்சா பதுமை!!!! அக்கா பொன்ஸ் அவர்களே சமையல் முடிஞ்சுதா பசிக்குது.....

ராபின் நல்ல கேள்வி :-)

//இது என்ன ஆற்றலரிசி? ஐ.ஆர்.8, பொன்னி,பாசுமதி //

இதுக்கு விவசாயி பதில் அளிப்பார் என் நம்புகிறோம்...

பொன்ஸ்~~Poorna said...

கெ.பி,
புதுசா வந்தாலும் புள்ளி விவரப் புலியா இருக்கீங்களே!!!

அதானே, கடத்திய கொத்தனாருக்கும், கடத்தல் பொருளுக்குப் பதிலாக மீன்கொத்திய சிவாவுக்கும் என்ன தகுதி இருக்கு விசாரணை கமிசன் போட?!!

ஆமாம் கொத்ஸ், புதரக உணவுத் துறை அனுமதியோட தான் நீங்க உங்க வீட்ல சமையல் செய்யறீங்களா? :)

இல்லை, எங்க வெண்பாத் துறையின் அனுமதியோட தான் வெண்பா அந்தாதி ஆரம்பிச்சீங்களா?!! இதெல்லாம் ஒத்துக்க முடியாத வாதம்.. சாரி :)

பொன்ஸ்~~Poorna said...

கெ.பி.
நீங்க சொன்னதுல இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலை.. இந்த "ஆற்றின டீயரசி" அப்படீங்கிறது யாரு? நீங்கதானா, இல்லை உங்க பூனையா? ;)

கைப்புள்ள said...

எல்லாம் சரி தான்...இத்தனை பேரு கூடி நின்னு கும்மியடிச்சும் ஒரு வா சோறு அம்புடலை...
:(

இலவசக்கொத்தனார் said...

// அதானே, கடத்திய கொத்தனாருக்கும், கடத்தல் பொருளுக்குப் பதிலாக மீன்கொத்திய சிவாவுக்கும் என்ன தகுதி இருக்கு விசாரணை கமிசன் போட?!! //

அட லூஸுங்களா! அதுதானே தகுதியே. மேலும் உணவுத்துறை அமைச்சராக நான் மக்களுக்கு தொண்டாற்றி வருவதைப் பற்றித் தெரியவில்லை என்றாம் எங்கள் கட்சி, வேண்டாம், எனது ர.ம. செயல் தலைவர் தேவை கேட்டால் சொல்வாரே.

//ஆமாம் கொத்ஸ், புதரக உணவுத் துறை அனுமதியோட தான் நீங்க உங்க வீட்ல சமையல் செய்யறீங்களா? :)//

புதரக உணவுத்துறையா? விஷயமே தெரியாம இருக்கீங்களே. இது தமிழ் மணத்தில் நடக்கும் ஒரு சமாந்தர ஆட்சி பற்றிய விஷயமல்லவா!

//இல்லை, எங்க வெண்பாத் துறையின் அனுமதியோட தான் வெண்பா அந்தாதி ஆரம்பிச்சீங்களா?!!//

ஆமாம். பின்புலத்தில் நடப்பவை பற்றி அறியாமல் பேச வேண்டாம். அந்த பதிவு போடும் முன் நான் வெண்பா துறையின் நிரந்தர அமைச்சரான எங்கள் வெ.வா. காலடி முன் அப்பதிவை சமர்ப்பித்து அவரின் ஆசி பெற்று அதன் பின்னரே அதனை வெளியிட்டோம். அதுதான் முறையும் கூட. என்றுமே முறை தவற மாட்டான் இந்த இ.கொ.

இந்த வரலாறு அறியாமல் தூற்றும் சிறு பிள்ளைகள் நீங்கள் என பதில் சொல்ல முடியாமல் போக என்னால் முடியும். ஆனால் அறியாமல் பேசும் உங்களுக்கு உண்மையை புகட்டும் ஒரு பொறுப்பு இருப்பதால்தான் இத்தனை விளக்கமும்.

//இதெல்லாம் ஒத்துக்க முடியாத வாதம்.. சாரி :)//

கண்களை மூடினால் உலகமே இருண்டதாக நினைக்கும் உங்களைக் கண்டால் எனக்கு சிரிப்பு வந்தாலும். சிறிது வருத்தமும்தான் இருக்கிறது. கண்களை திறந்து பாருங்கள். உலகம் எங்கேயோப் போய் கொண்டிருக்கிறது.

பொன்ஸ்~~Poorna said...

//, வேண்டாம், எனது ர.ம. செயல் தலைவர் தேவை கேட்டால் சொல்வாரே.
//
தலைவர் தேவுக்குத் தான் இந்த விருந்தே சமைச்சோம்.. நூறு பதிவு கன ஜோரா போட்ட அவரை வளர விடாமல், இருபத்தஞ்சு பதிவைப் போட்டு நூறு பின்னூட்டம் வாங்கியே என்னவோ ரொம்ப நாளா தமிழ்மணத்துல இருக்கிறா மாதிரி பில்டப் கொடுக்கும் உங்களுக்கு ரசிகர்னு சொல்றதே ஓவர்!! இதுல அவருக்காக தயாரிச்ச விருந்தை உங்ககிட்ட கேட்காம செஞ்சிட்டோம்னு சொல்லி தடுக்கிறது ஒரு தலைவர் செய்யும் செயலா?!!

//அட லூஸுங்களா! //
தேவ், காலைல நம்ம பேசும் போது சொன்னியே ஒரு டயலாக் ("அதிகமா ஆசைப்படுற.." ), அந்த மாதிரி டயலாக் பேசுறவருக்கும் ரசிகரா இருந்து, உங்க சங்கத்து மகளிர் அணியினரை இந்த மாதிரி அழைக்கிறவருக்கும் ரசிகர் மன்றம் நடத்தப் போறியாப்பா? !! நல்லா யோசிச்சிக்க தேவ்.. அம்புட்டுதான் சொல்வேன்.. !!

நம்ம பேசின இன்னோரு ரசிகர் மன்றத்தைப் பத்தியும் நினைவுப் படுத்திட்டு.. ஜகா வாங்கிக்கிறேன்...;)

இலவசக்கொத்தனார் said...

//இதுல அவருக்காக தயாரிச்ச விருந்தை உங்ககிட்ட கேட்காம செஞ்சிட்டோம்னு சொல்லி தடுக்கிறது ஒரு தலைவர் செய்யும் செயலா?!!//

முதலாவது எங்கள் இயக்கத்தின் தங்கமான தேவு தம்பிக்கு ஒரு விழா என ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருந்தால் அகில உலக விழாவாக நடத்தியிருக்கலாம் அல்லவா?

இரண்டாவது அவருக்கு விருந்து என்ற பெயரில் நீங்கள் எல்லாரும் கூத்தடித்தீர்களே தவிர தம்பி தேவுக்கு ஒரு வாய் காப்பியாவது கொடுத்தீர்களா? இல்லையே.

இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க தம்பி தேவின் பக்கம் யாரும் இல்லையென நினைத்தீர்களா? அதற்காகத்தான் விசாரணை கமிஷன் அமைத்ததே. அது புரியாமல் எதோ விழாவைத் தடுக்க வந்த மாதிரி அல்லவா கட்டுக்கதை அமைக்கிறீர்கள்.

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் தனி மனித தாக்குதல்களுக்கு மட்டும் குறைவே இல்லை. வாழ்க சனநாயகம்.

கடைசியாக ஒன்றே ஒன்று.

//உங்க சங்கத்து மகளிர் அணியினரை//

ஏங்க உங்க கொடுமையெல்லாம் தாங்காமத்தானே அவரு ஐயாம் தி எஸ்கேப்ன்னு ஓடிட்டாரு. அப்புறம் என்ன உங்க சங்கம், புண்ணாக்குன்னுகிட்டு.

Unknown said...

பொன்ஸ் சொன்னது:
//கெ.பி.
நீங்க சொன்னதுல இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் புரியலை.. இந்த "ஆற்றின டீயரசி" அப்படீங்கிறது யாரு? நீங்கதானா, இல்லை உங்க பூனையா? ;)

பொன்ஸ், நல்லா இருக்கே இது. நீங்க தான் ஆற்றல் டீயரசி. நீங்க மைக்ரோவேவில் டீ செய்தது புதரகத்தில் ஃபுட் சானலில் நாள் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறதே. உங்கள் முன் நானும் என் பூனையும் (?! இது எங்கேருந்து வந்தது?) எம்மாத்திரம்?

இ.கொ. சொன்னது:
//மேலும் உணவுத்துறை அமைச்சராக நான்...
இவர் எப்ப அமைச்சரானார்? இவர் கட்சி எப்ப ஆட்சிக்கு வந்தது? இல்ல, நிழல பாத்துட்டு பேசறாரா? (shadow cabinet:-)) எப்படி இருந்தாலும் உணவுத்துறை அமைச்சரே முறுக்கு சீடை கடத்தியதை ஐ!நா. சபைக்கு எடுத்துச் சொல்லுவது நம் கடமை:-)) ஏதோ நம்மால முடிஞ்சது:-)))

இ.கொ., சிறு பிள்ளை என்று என்னையும் சேர்த்து சொன்னதுக்கு நன்றி. இல்லை, கைப்புள்ள-யை தல-யாக ஏற்று கொண்ட அனைவரையும் சொன்னீர்களா? (ஹிஹி, உசுப்பேய்!)

பொன்ஸ்~~Poorna said...

அம்மணி, என்னவோ நான் தப்பா சொன்னது மாதிரி ஒரு நிமிசம் குழப்பிட்டீங்க.

ஆமாம், நீங்க தானே உங்க சிறு குறிப்புல ஒரு பூனையையும் நுழைச்சிருக்கீங்க!! அதைத் தான் கேட்டேன்..

பொன்ஸ்~~Poorna said...

////உங்க சங்கத்து மகளிர் அணியினரை//

ஏங்க உங்க கொடுமையெல்லாம் தாங்காமத்தானே அவரு ஐயாம் தி எஸ்கேப்ன்னு ஓடிட்டாரு. அப்புறம் என்ன உங்க சங்கம், புண்ணாக்குன்னுகிட்டு//
இதற்குக் காலம் பதில் சொல்லும்!!!

Udhayakumar said...

//பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..

பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..//

:-) பேசறக்கு ஒன்னுமே இல்லை. பேசுனா பொன்ஸ் மட்டுந்தான் பேசுவாங்கன்னு பெருசு தெளிவா சொல்லிருக்கு....

Unknown said...

உணவுத் துறை ஊழலா???? தல இதுக்காவது வந்துப் பதில் சொல்லு தல...

கொத்ஸ் விவரம் தெரிஞ்சவர் அவரே குற்றம் சொல்லுறாருன்னா... கட்டாயம் நீ வந்து எதாவது பேசியே ஆகணும் தல...

பாவம் அக்கா எவ்வளவு தான் சமாளிக்கும்... நாளைக்கு ஊருக்குள்ளே யாராவது உன்னியப் பாத்து உனக்கெல்லாம் எதுக்கு தலைவர் பதவி தப்பாப் பேசிடக் கூடாதுப் பாரு...அப்படி பேசி அதைக் கேட்டா கழுதைப் புலி கடிச்சதை விட அது அதிகமா வலிக்கும் ஆமா

கைப்புள்ள said...

//உணவுத் துறை ஊழலா???? தல இதுக்காவது வந்துப் பதில் சொல்லு தல...//

இது இன்னாதுபா? நான் கேள்வியே பட்டதில்லியே? என்னான்னு இன்னொருக்கா ரிப்பீட்டு...என்னான்னு வெசாரிக்கிறேன்.

கால்கரி சிவா said...

//உணவுத்துறையின் அனுமதி இல்லாது நடந்த இந்த சம்பவம் பற்றிய விபரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப் படுகிறது. அக்குழுவின் (ஜிகர்தண்டா, சால்னா போன்ற பதிவுகள் போட்ட) தலைவராக கால்கரி சிவா நியமிக்கப் படுகிறார்//

அப்பா.. புல்லரிக்க்ர்துப்பா... ஒரு வேளை சாப்பாட்டுக்கே தலைவர் பதவியா?

அடுத்தவாரம் நான் அழைக்க போற ஆட்களை பார்த்து காசி தமிழ்மணத்தை ஓசியாகவே கொடுத்துடுவார் என நினைக்கிறேன்