Monday, June 12, 2006

வருத்தப்படாதீங்க ப்ளீஸ் !!

இப்படியெல்லாம் வருத்தப்படணுமா?


வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வந்த பின்னூட்டத்திலே பலபேரு தேவையில்லாமல் வருத்தப்பட்டுகிட்டு இருக்கறத நெனச்சு ‘தல’ கைப்பு ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருக்குறாரு. எப்படி வருத்தப்படாம இருக்கறதுன்னு ஆலோசனை நடக்குது.

கைப்பூ : இதப்பய புள்ளக எல்லாம் வருத்தப்படாம இருப்பங்கன்னும்னு தான் சங்கத்தை ஆரம்பிச்சா என்னய்யா அல்லாருக்கும் பார்த்தா ஒவ்வொரு கொறை இருக்கும் போல என்ன பண்ணலாம் சொல்லுங்கப்பூ.

சிபி : வருத்தத்தை வருத்தப்பட வைக்க வேண்டும் . வருத்தம் என்னும் விருத்தம் இங்கே தொக்கி நிக்கிறது ஏன் என்ற கோள்வியினை நம்முன் வீருகொண்டு எழுப்பி கெக்கலிட்டு பார்க்கிரது.

கைப்பூ : ஐயா ஐயா சிபி கொஞ்சம் புரியமாதிரி சொல்லுப்பூ. என்னடா சிபி சொல்றது கூட புரிய மாட்டீங்குடேன்னு அவனவன் அப்புறம் புதுசா வருத்தப்பட ஆரப்பிச்சுடுவாங்க !

தேவு : நிறுத்தச் சொல்லுங்க. அவனை நிறுத்தச்சொல்லு இவனை நிறுத்தச்சொல்லு.

கைப்பூ : தேவு எதையப்பா நிறுத்தச்சொல்றே ??

ஜொள்ளு பாண்டி : நான் வரும்போதே என் வண்டிய நிறுத்திட்டு தானே வந்தேன் !

தேவு : நிறுத்தனும். எல்லாரும் வருத்தப் படுறதை நிறுத்தனும் !! ஏன் எப்படி எதுக்குன்னு யாரும் எதுவும் கேள்வி கேட்காம வருத்தப்படுரதை நிறுத்தனும் !!!

பொன்ஸ் : என்ன இப்படி பேசறீங்க? எப்படி நிறுத்தது?? வருத்தப்படாத இருக்கனும்னா எப்படி வருத்தப்படரதுன்னு தெரிஞ்சாத்தானே வருத்தப்படாம இருக்க முடியும் என்ன நான் சொல்றது ??

ஜொள்ளுபாண்டி : ஐயா எல்லாரும் என்னமோ சொல்றீங்களே ‘தல’ என்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கய்யா !!!

கைப்பூ : ஏ வெளங்காத பயலே. நானே என்னடா சொல்றாங்க இவங்கன்னு மண்டையப் பிச்சிகிட்டு இருக்கேன் என்கிட்ட போயி வெளக்குன்னு கேட்டுகிட்டு.

விவசாயி : வருத்தம் அப்படீங்கறது வயக்காடுல சாகுபடி செய்யிறப்போ இடையிலே வளர்ற ‘களை’ மாதிரி. அதைய முற்றிலும் களைய முடியாட்டியும் அப்பப்போ களைய முடியும் அப்ப்டீங்கறதைத்தான் நம்ம விவசாய விஞ்ஞானி விஸ்வனாதனும் சொல்லியிருக்காறு. அப்படியே வயக்காட்டிலே ‘ வரப்பு’ ஓரமா ஒக்காந்து யோசிச்சா நல்லா தீர்வு கெடைக்கும் !

பொன்ஸ் : வாவ் !! சரியாகச்சொன்னீர்கள் விவசாயி.. இதையேதான் காளமேகப்புலவரும் சொல்லியிருக்காருன்னு நேத்துதான் படிச்சேன் !

ஜொள்ளு பாண்டி : என்னாச்சு எல்லாருக்கும் . குடுகுடுப்பை காரன் மாதிரி ஆளாளுக்கு என்னமோ புரியாத பாசையிலே சொல்லிகிட்டு இருக்காங்களே !’ இனிமே சங்க மீட்டிங்குக்கே ட்ரான்ஸிலேட்டர் வச்சிக்கனும் போல !

கைப்பூ : யப்பா கண்ணுகளா யாராச்சும் புரியரமாதிரி பேசுங்களேப்பா. உங்க பேச்சைக் கேட்கிறப்போ கண்ணை கட்டிகிட்டு வருதே !

பொன்ஸ் : ஐயோ தல இவ்ளோ நேரமா உயிரைக்கொடுத்து பேசிக்கிட்டு இருக்கேன் புரியலையா ?? ஐயகோ. இப்போதே ஒரு மன்னிப்பு அறிக்கை விடிறேன்.

கைப்பூ : ஆத்தா பொன்ஸு கொஞ்சம் நில்லும்மா ! நான் என்னாத்த சொல்லிபிட்டேன்னு இப்படி அறிக்கை விடுறேன்னு சொல்லுதே ?

பொன்ஸ் : யாரையும் அலட்சியம் செய்வது என் லட்சியமல்ல ! அலட்சியம் என்ற லட்சியம் கொண்டவருக்கு அதைக்கொள்ளாமல் இருக்கதானே நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ??

தேவு : வருத்தப்படாத சங்கத்திலிருந்து ஒப்பாரிச்சத்தம் வருவது அழகல்ல ! எங்கெல்ல்லாம் வருத்தமின்மை கண்ணகி சிலைபோல் களையப்பட்டு கொடும் கூற்றாம் ‘கவலை’ முன் வீழ்ந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் வருத்தப்பாடாதலை மீட்டு மீண்டும் நிறுவவேண்டிய கடமையைத்தான் செய்ய வேண்டுமெயொழியா ஏன் வீழ்ந்ததென வீண் வாதம் விளக்கம் தேவையில்லை !!

பொன்ஸ் : ஆஹா எப்படி முடியும்? வருத்தம் கொள்ளல் பாவமில்லை. வருந்தா மருந்தொன்று உண்டென்று சொன்னால் அது மருந்தல்ல அகழ்தெடுத்த அமிர்தம்.

சிபி : அதைத்தானே பொன்ஸ் நாம் கடைந்து கடைந்து சங்கம் வரும் தங்கங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஜொள்ளுபாண்டி : என்னய்யா ஆச்சு எல்லாருக்கும் ? ஏதோ சங்ககாலப் படம் பார்த்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீயளே !!

கைப்பூ : எலே பாண்டி. எனக்கு அப்படியே கண்ணை கட்டிகிட்டு வருது. கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிகிட்டு போறியா ??

தேவு : என்னாச்சு ‘தல’ சோமபானம் சுராபானம்னு எதாச்சும் உள்ள போச்சா ?

கைப்பூ : பானமாவது? பனங்காயாவது ? வருத்தப்படாம இருக்கரது எப்படீன்னுதனே கேட்டேன். இப்படி போட்டு பொளந்து கட்டீட்டீயளே ! ஒன்னூமே புரியலையே ? எவ்ளோ நேரந்தான் புரியரமாதிரியே நான் நடிக்கிறது ??


15 comments:

பொன்ஸ்~~Poorna said...

பாண்டி.. என்னதான் இருந்தாலும், இப்படி பப்ளிக்கா நம்ம மீட்டிங்கைப் பத்தி போட்டதே இப்போ எனக்கு வருத்தமா இருக்கு.. ஆமாம், ஒரு கொடியில் பூத்த இரண்டாவது மலரான என் அன்பு அண்ணண் பேராசிரியர் கார்த்திக் அவர்களின் கருத்துக்கள் ஏன் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன?
வருத்தப் படாத வாலிபர் சங்கப் பேராசிரியர் என்று சொல்லி தனியாக க.பி.க என்னும் கட்சி ஆரம்பித்த காரணத்தால் என் அன்பு அண்ணன் கமிட்மென்ட்ஸ் கார்த்திக்கின் கருத்துகளை நாம் கணக்கில் எடுக்காமல் விடுவது தவறு...

நன்மனம் said...

"சங்க உருப்பினர்களுக்கு ஒரு செய்தி." கடைசியாக வந்த தகவல் படி (இந்த வரி இல்லனா என் பதவி பறிக்க படும் என்று எனக்கு தகவல் வந்துள்ளது) இந்த பதிவை படித்து வருத்தபட்டு உள்ள மக்கள் சங்க உருப்பினர்களை வருத்தபட வைத்தால் தான் வருத்தத்தின் அருமை தெரியும் என்று சங்க உருப்பினர்களை தேடி வருகிறார்கள்.:-))

நாகை சிவா said...

நம்ம பய புள்ளைகளுக்கு என்னமோ ஆகிப் போச்சு. வேப்பிலை அடித்தால் தான் சரியா வரும். இந்த பதிவ போட்ட பாண்டிக்கு தான் முதல அடிக்கனும். ஏலேய் பாண்டி எங்க ஒடுற பேசமா என்கூட வந்துடு வேப்பிலைய மெதுவா அடிக்க சொல்லுறேன்.

நாகை சிவா said...

ஏனுங்க பொன்ஸ், காளமேக புலவர் நம்ம ஊருக்கு வந்து வாய் குடுத்து புண் ஆக்கி கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு.

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டி.. என்னதான் இருந்தாலும், இப்படி பப்ளிக்கா நம்ம மீட்டிங்கைப் பத்தி போட்டதே இப்போ எனக்கு வருத்தமா இருக்கு..//

கமான் பொன்ஸக்கா என்னாதிது கலாட்டா ? எல்லாத்துக்கும் வருத்தமா ?? ஐயகோ என்ன இது சோதனை !

//என் அன்பு அண்ணண் பேராசிரியர் கார்த்திக் அவர்களின் கருத்துக்கள் ஏன் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன?//

நான் எங்கக்கா இருட்டடிப்பு செய்யறேன்? இருந்த சொல்லாமலே போய்டுவேன். என்னையப்பத்தி இப்படி சொல்லீட்டீகளே :(

//வருத்தப் படாத வாலிபர் சங்கப் பேராசிரியர் என்று சொல்லி தனியாக க.பி.க என்னும் கட்சி ஆரம்பித்த காரணத்தால் என் அன்பு அண்ணன் கமிட்மென்ட்ஸ் கார்த்திக்கின் கருத்துகளை நாம் கணக்கில் எடுக்காமல் விடுவது தவறு... //

சங்கம் வேறு கழகம் வேறு என்று அறியாதவனா இந்தப்பாண்டி ? நானுமல்லவா கழகக்கண்மணி ??

ஜொள்ளுப்பாண்டி said...

//வேப்பிலை அடித்தால் தான் சரியா வரும். இந்த பதிவ போட்ட பாண்டிக்கு தான் முதல அடிக்கனும். ஏலேய் பாண்டி எங்க ஒடுற பேசமா என்கூட வந்துடு வேப்பிலைய மெதுவா அடிக்க சொல்லுறேன். //

சிவாண்ணே வேப்பிலை அடிக்க வேண்டியது எனக்கா?? ஐயகோ இது என்ன கொடுமை?? :(

Geetha Sambasivam said...

நிரந்தரத் தலைவலியான சீச்சீ, நிரந்தரத் தலைவியான என்னுடைய அனுபவ அறிவும், கருத்துக்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பற்றிய பேட்டி, இன்றிரவு சன் மற்றும் ஜெயா டி.வி. சானல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். அப்போது சங்கக் கண்மணிகளின் துயர் துடைக்க நான் வாங்கிய துணியும் சீச்சீ நான் போட்ட திட்டமும் அதை மறுத்துப் பேசிய உறுப்பினர்களும் இனம் காட்டித் தோல் உரிக்கப்படுவார்கள். பாரீர், இன்றிரவு, 00-00 மணிக்கு. நாளை இதே நேரம் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

சிவமுருகன் said...

:)

ஜொள்ளுப்பாண்டி said...

//Geetha Sambasivam said...
நிரந்தரத் தலைவலியான சீச்சீ, நிரந்தரத் தலைவியான என்னுடைய அனுபவ அறிவும், கருத்துக்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பதைப் பற்றிய பேட்டி, //

அமைதி அமைதி கீதாக்கா !! உங்களைய மறந்துடுவோமா? :) இது ஏதோ மினிட்ஸ் ஆப் மீட்டிங்குதான். உங்கள் பங்களிப்பை நான்ந்தேன் மறந்து போயி விட்டுட்டேன் :( கோச்சுகிட்டு டீவி பேட்டின்னு என்னாதிது? சின்னப்பிள்ளத்தனமா ?? :))

பொன்ஸ்~~Poorna said...

//ஏனுங்க பொன்ஸ், காளமேக புலவர் நம்ம ஊருக்கு வந்து வாய் குடுத்து புண் ஆக்கி கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு. //
அது என்ன சிவா? சூடான் வந்து காளமேகப் புலவர் ஏன் வாயைச் சுட்டுக் கொண்டார்? மோரென்று பேர்பெற்றாய்ன்னு தண்ணீரைப் பற்றிப் பாடிய கவி வாயைப் புண்ணாக்கி கொண்டதாகக் கூறுவது மேலும் வருத்தப் படுத்துகிறது.. :)))

பொன்ஸ்~~Poorna said...

//இருந்த சொல்லாமலே போய்டுவேன். //
பாண்டி, மேலும் மேலும் பேராசிரியரின் கோபத்துக்கு ஆளாகும் வழியைத் தேடிக் கொண்டிருக்கிறாய்.. உங்கள் க.பி.க கொ.ப.செ கார்த்திக்கின் இன்றைய பதிவை ஒரு முறை பார்த்து விட்டு வா.. அதைப் படிக்க நேர்ந்தால், அக்கா மீதுள்ள பாசத்தில், நீ தீக்குளிக்கவும் தயங்க மாட்டாய் என்று தெரிந்த போதும்,
பார்த்திபனும் கட்ட துரை (பெரிசு)ம் தீப்பெட்டி மண்ணெண்ணெயோட தயாரா இருக்கும் போதும்,
இதே மாதிரி உன்னையும் நாலு கேள்வி கேட்கிற மாதிரி ஒரு நிலைமை உனக்கும் வர வேண்டாம் என்னும் நல்லெண்ணத்தில் தான் சொல்லுகிறேன்..

பேராசிரியர் சொன்னதையும் சொல்லிடு தம்பி..

நாகை சிவா said...

அட போங்க பொன்ஸ், நம்ம ஊருனா அது என்னிக்குமே நாகப்பட்டினம் தாங்க.
அவர் ஒருமுறை நாகப்பட்டினம் வந்த பொழுது தமிழில் அவருக்கே தண்ணி காட்டுன பசங்க நம்ம ஊரு பசங்க. அத சொல்ல வந்தா நீங்க வேற எங்கயோ போறீங்களே.

பொன்ஸ்~~Poorna said...

அட என்ன சிவா.. சும்மா தான் சொன்னேன். சொல்லுங்க சொல்லுங்க.. நாகைப்பட்டணத்தில் என்னாச்சு காளமேகப் புலவருக்கு? எப்படிக் கலாய்ச்சாங்க அவரை?

Iyappan Krishnan said...

நல்லமனம் வாழ்கவெம் நாடுபோற்ற வாழ்கவே
அல்லாதார் சொல்லை அகற்றியே - நல்லோர்
கைப்பிள்ளை யாக கவிதை பிறந்தநாளில்
கைப்பு உமக்காக காண்

:D

வருத்தப்பட்டிருக்கும் தலைக்கு கொஞ்சம் ஆறுதலா இது இருக்குமில்ல.. பொறந்தநாளதுவுமா

அன்பு"டன்"
ஜீவா

பொன்ஸ்~~Poorna said...

தல...

இன்னிக்கு நோ வருத்தம்.. சங்கம் பூரா சந்தோசமா இருக்கு.. உங்க பிறந்த நாளாச்சே!! :)