போன பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்துகொண்டவை:
எனக்கு அடுத்தவரைக் கலாய்க்க வரவில்லை.
என்னை நான் நன்றகாவே கலாய்த்துக் கொள்கிறேன்.
சோ, எது வருதோ அதை செய்வோம்.
**********************
நான்: (பெருமையுடன்) இங்க பாரேன், விஜி என்னைக் கவிதை எழுத முயற்சி செய்யுமாறு கேட்டிருக்கிறார்
தங்க்ஸ்: ஏங்க, நீங்க அவங்களுக்கு எட்டு மெயில் அனுப்பிச்சு அடுத்து என்ன எழுதனும்னு கேட்டா அவங்க ஏதாவது சொல்லித் தானேங்க ஆகணும்
நான்: சரி விடு. அவங்க சொன்னத பேஸ் வேல்யுக்கு எடுத்துக்கலாம்
தங்க்ஸ்: ஏங்க அவங்க ஏதோ பிளான் பண்ணித்தான் கேட்டிருக்காங்க. நெஜமா சொல்லுங்க, ஒங்களுக்குக் கவிதா எழுத வருமா?
நான்: என்ன பெரிய விஷயம். அப்ப மத்ததெல்லாம் இந்தக் கதை, கட்டுரை இதெல்லாம் எனக்கு நல்லா வருதுன்னு நீ நினைக்கிறியா?
தங்க்ஸ்: (ஒரு வினாடி அதிர்ந்து போகிறார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு) நான் என்ன நெனைக்கிறேன் அப்படிங்கறது முக்கியம் இல்லீங்க. வாசகர்கள் என்ன நினைக்கிறாங்க அப்படிங்கறதுதான் முக்கியம்.
நான்: பரவா இல்ல. ஏதோ கொஞ்சம் கமென்ட் வருது. ஒரு 90 பாலோயர் இருக்காங்க
தங்க்ஸ்: அதுல 80 பேர் கிட்ட நீங்க பேசும்போதுதான் நான் பாத்தேனே. செல்போனையே அவங்க காலா நெனைச்சு தண்ட சேவை (அப்படின்னா என்னன்னு பின்னூட்டத்துல கேளுங்க) பண்ணாத குறைதான்.
நான்: சரி மத்த பத்து பேர்?
தங்க்ஸ்: அதுல அஞ்சு பேர உருட்டி மெரட்டி சேர்த்தீங்க.
நான்: அப்ப மத்த அஞ்சு பேர்?
தங்க்ஸ்: உங்க வலைப்பூல எதையோ கிளிக் பண்ணப் போய் தெரியாத்தனமா பாலோயர் பட்டனைக் கிளிக் பண்ணிட்டாங்க
நான்: அது சரி, ஒன தங்கைக்கு மட்டும் எப்படி இத்தனை பாலோயர்?
அவள்: அவள் நல்லா எழுதுறாங்க
நான்: அப்பா நான் நல்லா எழுதலையா?
தங்க்ஸ்: அத விடுங்க, ராத்திரி சமையலுக்கு என்ன பண்ணட்டும்?
நான்: ஒங்க வீட்ல எல்லார்க்கும் நான்னா இளப்பம்தான்
தங்க்ஸ்: என்னை அப்படிச் சொல்லாதீங்க
நான்: (ஒரு வித ஆறுதலுடன்) தேங்க்ஸ் பா
தங்க்ஸ்: கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் இந்த வீட்டுப் பொண்ணு, அதத்தான் நான் சொல்ல வந்தேன்
நான்: அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி நீயும் அப்படித்தான் நெனைச்சுக் கிட்டிருந்தியா?
தங்க்ஸ்: அப்பாடி டியுப் லைட் இப்பத்தான் பிரகாசமா எரியுது. காலம்பரலேர்ந்து வோல்டேஜ் ப்ராப்ம். ஆமா நீங்க என்ன கேட்டீங்க?
நான்: ஒன்னும் இல்ல, நீ கொடுத்த பல்பை எல்லாம் அள்ளி வைக்க ஒரு கூடை எடுத்துட்டு வா
காலிங் பெல் அடித்தது. திறந்தால் அசோசியேஷன் ப்ரெசிடென்ட்.
அவர்: ஒண்ணுமில்ல கோபி, நம்ம பார்க்கிங் ஏரியா பூரா இருக்க டியுப் லைட்டை எல்லாம் எடுத்துட்டு CFL பல்புன்னு ஏதோ புதுசா வந்திருக்காம். கரென்ட் செலவு நிறைய மிச்சமாகுமாம். ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு என்றாலும் நீண்ட நாட்களுக்கு நல்ல பயன் தரும். செக்ரட்டரி அப்படிங்கற முறைல நீங்க என்ன நினைக்கிறீங்க? காஸ்ட் பெனிபிட் அனலிசிஸ் பண்றதுக்கு உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல. நீங்க சொல்றதுதான் பைனல். நீங்க பல்பா டியுப் லைட்டா?
நான்: என்ன சார் சொல்றீங்க?
அவர்: சாரி, பல்பா டியுபான்னு டிசைட் பண்ணிச் சொல்லுங்க
அப்படியே செய்வதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தேன்.
தங்க்ஸ்: பல்புதான் அப்படின்னு முடிவு பண்ணீங்கன்னா, நீங்களும் எல்க்ட்ரிஷியானோட போயிட்டு வாங்க. நீங்கதான் நல்லா பல்ப் வாங்குவீங்களே
அவருக்குப் பதில் சொல்லுமுன் பொடியன் உள்ளே வந்தான்.
பொடியன்: அப்பா, கீழ் வீட்டுல கரண்ட் போனப்போ அந்தத் தாத்தா பெட்ரோமாக்ஸ் லைட்டப் பத்தி ஏதோ சொன்னார். இப்ப அதெல்லாம் இல்லையாமே. ஆனா அவர் ஒங்கப்பாகிட்ட இருந்தாலும் இருக்கும். கேட்டுப் பார்னு சொன்னார். பெட்ரோமாக்ஸ் பல்ப் வாங்கி வெச்சிருக்கியாப்பா நீ?
14 comments:
தேவையா தேவையா தேவையா? என்னைப்பார்த்து நானே கேட்டுக்கிட்டேன் :))
இத்தனை புத்திசாலித்தனத்தை பார்த்து எனக்கு அப்படியே கண்ணெல்லாம் கலங்கி வருது.. :))))
//இத்தனை புத்திசாலித்தனத்தை பார்த்து எனக்கு அப்படியே கண்ணெல்லாம் கலங்கி வரு//
repeatu
நமக்கு நாமே ஆப்பு திட்டம்தான் நல்லா வொர்கவுட் ஆகுது கோபி..:-))
என்ன வலைப்பதிவு பெயர் மாற்றி விட்டீர்களா
எல்லாரும் பல்பு வாங்குவாங்க.......... நீங்க ஒரு படி மேல போய்....... ம்ம்ம்ம்ம்ம்..........
அது சரி! பல்பு பேக்டரி வைக்கலாம்னு சொல்லுங்க. ரைட்டு!
சொந்த செலவில் சூனியம் வைப்பது உன்னதமான செயல்
விஜி, :)
விதூஷ், மிக்க நன்றி
இளா, மிக்க நன்றி
காபா, :)
ராம்ஜி_யாஹூ, சும்மா ஒரு மாசத்துக்கு இங்கே எழுதுகிறேன்
வழிப்போக்கன், :)
அபி அப்பா, :)
பார்வையாளன், :)
ம்ம்ம். நடக்கட்டும்..
பக்கத்துல இருக்கற எலெக்ட்ரிகல் ஷாப்புக்கெல்லாம் நீங்கதான் ஹோல்சேல் முறைல பல்ப் சேல்ஸா கோபி சார்
:)) Super!
:)) Super!
பாரத் பாரதி, :)
ராஜி மேடம், :)
அருணையடி, :)
Post a Comment