Friday, August 31, 2007

கடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா? நற்றமிழுக்கா??

சிவபெருமான் முக்கண்ணனா? - யார் சொன்னா? அரைக் கண்ணு தான்!
பெருமாள் உலகத்தையே தாங்குறாரா? - யார் சொன்னா? - ஒரு ஈயைக் கூடத் தாங்க முடியலை அவரால!


சென்ற மதுரைப் பதிவில்,
நண்பர் குமரன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தாரு!
//இது என்ன ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனைக் கடிக்கிறதும்பாங்க;
நீங்க ஆளுங்களை கலாய்க்கிறத விட்டுட்டு ஊரைக் கலாய்க்கத் தொடங்கியிருக்கீங்க?//
அவரு இந்தப் பதிவுக்கு வந்து, இன்னொன்னு சொல்றதுக்குள்ள, நானே சொல்லிடறேன்...."ஹூம்....இப்போ கடவுளையே கலாய்க்கும் டைமா?"

.......அச்சோ, கடவுளைக் கலாய்ப்பது நான் இல்லீங்க! தமிழ் இலக்கியம் தான்!
தளபதி சிபி, கலாய்த்தல் திணையைத் துவங்கினாரே!
எங்கிருந்துன்னு இப்ப தெரியுதா? எல்லாம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருந்து தான்! :-)



ஆன்மீகப் பதிவர் ஒருவரைச் சங்கத்தில் கூப்பிட்டாலும் கூப்பிட்டாக!
பெருமாளைப் பற்றிச் சங்கத்தில் ஒன்னுமே சொல்லாமப் போனா எப்படி? நாளையோட அடியேன் அட்லாஸ் மாதமும் முடியுது! அதுக்குள்ளாற சுவாமியின் திருமுக மண்டலத்தை ஒரு வவாச பதிவிலாச்சும் போடாமப் போனா எப்படி? :-))

அதுக்காக நான் திருப்பதி பிரம்மோற்சவத்தை வவாச-வில் போட முடியுமா? அந்தப் பாலாஜி சும்மா விட்டாலும், இந்த வெட்டி பாலாஜி சும்மா வுட மாட்டாரே!
வவாச-வில் நகைச்சுவையோட கலந்து வேணும்னா எழுதலாம்! அதான் இந்தக் கலாய்த்தல் ஐடியா! சங்கத்துக்குக் காவி பெயிண்ட் அடிக்கும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஒரு விக்ரமாதித்தன்....இதோ!

வைகைப்புயல், சின்னக் கலைவாணர் என்று பல பட்டப் பெயர்கள் தமிழ்ச் சினிமாவில் இருக்கு! அதே போல் நகைச்சுவைச் செம்மல் ஒருத்தர், தமிழ் இலக்கியத்திலும் இருக்காரு! ஓகோ மேகம் வந்ததோ என்று அவரைப் பற்றிப் பாடலாம்.
சாதாரண மேகம் இல்ல அவர். கருத்த மேகம்! சிரிப்பு மேகம்!
ஒரு பொண்ணை டாவடிச்சி, லவ்ஸ் பண்ணி, அவளுக்காகத் திருவரங்கத்தில் சுடச்சுடக் கிடைக்கும் நெய் தோசையை விட்டு விட்டு, பொண்ணு பின்னாடி ஓடியாந்தாராம்!
இந்நேரம் கண்டு புடிச்சிருப்பீங்களே யார் என்று! - அவரே தான்! கவி காளமேகம்!!!


சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்?
பொதுவாச் சொல்லறதுன்னா முக்கண்ணன்; திருமுகத்தில் இரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணுமாய் மூன்று கண்கள்!
ஆனாப் பாருங்க, இல்லவே இல்லை, என்று சாதிக்கிறார் காளமேகம்!
சரி எத்தனை கண்ணுன்னு நீயே சொல்லுப்பா என்று கேட்டால், அரைக் கண்ணு தான் என்கிறார்!

துரைக்கண்ணு தெரியும்; அது என்னா அரைக்கண்ணு?
இது என்ன சின்னபுள்ளத்தனமா-ல்ல இருக்கு? சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க! ஆனா, அது என்னா அரைக்கண்ணு? அவர் சொல்ற கணக்கைப் பாருங்க!

சிவபெருமானில் சரி பாதி அன்னை பார்வதி.
அப்படின்னா, இருக்குற மூன்று கண்ணில், சரி பாதியான ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தம்!
அப்ப மீதி இருப்பது ஒன்றரைக் கண் தான்! ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம்! அதுல ஒரு கண்ணு, கண்ணப்ப நாயனார் தன்னுடையதைப் பிடுங்கி வைத்த கண்!

அப்படிப் பாத்தா, ஒன்றரை கண்ணில் ஒரு கண்ணு, கண்ணப்பருடையது!
அப்ப, பாக்கி எவ்ளோ இருக்கு? - அரைக் கண்ணு தான்!
எனவே சிவபிரானின் ஒரிஜினல் கண், அரைக் கண் மட்டும் தான் என்று சாதிக்கிறாரு காளமேகம்! :-)))
முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரை மற்றுஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

பாருங்க, கவிஞருக்கு என்னமா கலாய்த்தல் தெறமை!

அன்னிக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு சொன்னாரு ஒருத்தரு! இங்க என்னடான்னா, அதுக்கும் வழி கொடுக்காம, முக்கண்ணனை அரைக்கண்ணன் ஆக்கிட்டாரு காளமேகம்!
இப்படி இறைவனிடமே கலாய்த்து விளையாடும் உரிமை தெய்வத் தமிழுக்கு அல்லால் வேறு ஏது?





சரி சிவனை மட்டும் கலாய்த்து விட்டுப் பெருமாளை விட்டுட்டா?
அது வேற இன்னொரு ப்ப்ப்ப்பெரீய்ய்ய்ய்ய்ய் சண்டையாப் போயிடுமே, பதிவுலகில்! - நம்ம ஜிரா மேல ஒரு பயம், காளமேகத்துக்கு அப்பவே இருந்திருக்கு போல! :-)
பிறப்பால் வைணவர் - காதலுக்காகச் சைவர் - அப்பறம் திருவானைக்கா அம்பாளின் உச்சிஷ்டமான, எச்சில் வெற்றிலையை உண்டதால், ஆசு கவி என்று புகழ் பெற்ற காளமேகம்!

அந்த ஆசு கவியைப் பார்த்து,
"உன்னால ஈ ஏறி மலை குலுங்கியதாகப் பாட முடியுமா டோய்?",
என்று சவால் விட்டார் ஒரு புலவர். அந்தக் காலத்து இலக்கிய அரசியல்-ல இதெல்லாம் சகஜம்! ஒருத்தர் நல்ல திறமையால முன்னுக்கு வந்துட்டாருன்னா அதைப் பார்த்து ஏற்கனவே இருந்தவங்களுக்குப் பொறாமை!

அறிவால் ஆசுகவியை அடக்கவும் முடியலை! என்னா தான் செய்யறது?
இந்த மாதிரி எடக்கு மடக்காக் கேள்விய கேக்கறது தான் வேலை! கேள்வியைத் தான் யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கேக்கலாமே! பதில் சொல்லறதுக்குன்னே பல நூறு பின்னூட்டம் வருமே! :-)))

காளமேகம் இதுக்கெல்லாம் சளைத்தவரா என்ன?
ஆனால் என்ன விஷயம்-னா, அந்த ஆற்றல் எல்லாம், பாதி நேரம் இந்த மாதிரி ஆட்களைச் சமாளிக்கவே போயிடும்! அப்புறம் எங்கிருந்து ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணி செய்யறது? ஆனா காளமேகம் அதையும் தாண்டித் தெறமையானவரு!

டோய், மலை என்னய்யா மலை!
ஈ உட்கார, அண்ட சராசரமே குலுங்கியதாகப் பாடுகிறேன் பாரு என்றார்!
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைக் கிருஷ்ணாவதாரத்தில் தாயாக வளர்த்தவள் ஒரு இடைச்சி! யசோதைப் பிராட்டி!
தயிர் கடையும் மத்தினால் ஒரு முறை குழந்தையை அடித்து விட்டாள்! அதனால் கண்ணனுக்கு பாவம், வாயில் ஒரு காயம், புண்!

சேட்டையே பையனாய்ப் பிறந்திருக்கும் பையன் அவன்! இதுக்கெல்லாம் அஞ்சுவானா? அடப் போம்மா என்று மண்ணை எடுத்து மீண்டும் மீண்டும் உண்கிறான். யசோதைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது!
அடேய், வாயைத் திறடா என்கிறாள்! குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து காட்ட....

அம்மாடியோவ்...மில்கே வே கேலக்சியில் இருந்து, சகல கேலக்சியும் டெலஸ்கோப் இல்லாமலே தெரியுதே வாயில்!
சூரிய சந்திரர்கள், அண்ட சராசரங்கள்,
சமுத்திரங்கள், பூமி, பாரதம், ஆயர்ப்பாடி........
அப்படியே zoom in பண்ணா, அவனும் யசோதையும் கூடத் தெரியறாங்க!
Google Earth-இல், Zoom out/Zoom in, மொதல்ல கண்டு புடிச்சது இப்படித் தானோ? :-))

அந்த நேரம் பார்த்து,
கண்ணன் வாய்ப்புண்ணில் ஒரு ஈ வந்து மொய்க்கிறது!....
கூச்சத்தில் கிருஷ்ணனின் உடல் சற்றே குலுங்குகிறது!....

அதனால்........அவனுள் அடங்கி இருக்கும் அண்ட சராசரங்களும் குலுங்குகின்றன!
"ஈ உட்கார, உலகமே குலுங்கியது! போதுமா?" - காளமேகம் இப்படிச் சொன்னதும், ஈயாடவில்லை, அவைப் புலவன் எவன் முகத்திலும்!

இப்படி அண்டம் எல்லாம் தாங்கும் பெருமாளால், ஒரு சாதாரண ஈயைக் கூடத் தாங்க முடியவில்லை! - இது தான் காளமேகம் கலாய்ச்சல் :-)
வாரணங்கள் எட்டும் மகமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால் - நாரணனைப்
பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த
புண்வாயில் ஈமொய்த்த போது

(எட்டுத் திக்குகளையும் தாங்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் யானைகளும், மகா மேரு மலையும், கடலும், உலகங்களும் குலுங்கின! நன்றாகப் பண்கள் பாடும் இடைச்சியான யசோதை, பருத்த மத்தினால் கண்ணனை அடித்தாள். அந்தப் புண்ணில் ஈ மொய்த்த போது, கண்ணன் கூச்சத்தால் குலுங்க, சகலமும் குலுங்கியது!)

(அப்பாடா, ஆசை தீர, வவாச-வில் பெருமாள் படம் போட்டாச்சுப்பா! :-)

இப்படித் தமிழ் இலக்கியத்தில் பல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து , நகைச்சு வைக்கலாம்! - சங்கம் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் - எங்க ஒரு முறை உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! :-)

48 comments:

இம்சை said...

ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே!

Anonymous said...

ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,ஜய ஜய கிருஷ்ணா,

வடுவூர் குமார் said...

நல்லா இருக்கு ஈ உட்கார்ந்து அண்ட சராசரம் குலுங்கியது.
படிச்ச உடனே "குலுங்குதுல்ல".

CVR said...

// பட்டைய கிளப்புனது kannabiran, RAVI SHANKAR (KRS)//
உண்மையாவே பட்டைய கிளப்பிட்டீங்க போங்க!!
இந்த மாதமே செம கலாய்த்தல் மாதம் (அதுல ஒரு பாவமும் அறியாத ஒரு அப்பாவிய வேற டேமேஜ் பண்ணிட்டீங்க!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
அதுவும் இலக்கியம்,தமிழ்,ஆன்மீகம் என கலந்தடித்து இந்த போஸ்ட் கலக்கிட்டீங்க!!

வாழ்த்துக்கள்!! :-)

இலவசக்கொத்தனார் said...

அண்ணா, ஆனாலும் இப்படி சங்கத்தைக் கோயிலாக்கிட்டீங்களே.

அங்கமெல்லாம் நோக அடிவாங்கும் வல்லவனின்
சங்கத்தில் என்றும் சிரிப்புதான் - தங்கமே
நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறு

வெட்டிப்பயல் said...

காளமேக புலவர் அப்பவே கலாய்த்தல்ல பெரிய ஆளா இருந்திருக்கிறாரு...

ILA (a) இளா said...

கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய

cheena (சீனா) said...

சங்க இலக்கியங்களில் தேடிப் பிடித்து கவி காளமேகத்தைக் கண்டு பிடித்து சிவனையும் திருமாலையும் கலாய்த்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி தமிழ்த் தொண்டு செய்து வரும் வவாச வாழ்க - வளர்க - தமிழ்த் தொண்டு தொடர்க -

Unknown said...

கே.ஆர்.எஸ் உங்கள் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் உழைப்பும் உற்சாகமும் துல்லியமாய் தெரிந்தது..அந்த உழைப்பும் உற்சாகமும் நிச்சயமான பலனை அடைந்திருப்பதாய் உறுதியாக நம்புகிறேன்.. ஆன்மீகத்தையும் இலக்கியத்தையும் இவ்வளவு எளிதாக நகைச்சுவை விருந்தாக்கி வாசகர்களுக்குத் தர முடியும் என்று நிருபித்துக் காட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

Unknown said...

சங்கத்தின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் மாதத்தை ஒரு கலகலப்பான அட்லாஸ் மாதமாக வழங்கிய கே.ஆர்.எஸ் அவர்களுக்கு "ஆன்மீகச் சிரிப்பு சித்தர்" என்னும் பட்டத்தை சங்கம் வழங்கி கவுரவிக்கிறது..

இனி வரும் மக்கள் அன்னாரைச் ஆ.சி.சித்தர் என அன்போடு அழைக்கக் கடவார்கள்

வாழ்க ஆ.சி. சித்தர்.. வளர்க ஆ.சி. சித்தர் புகழ்

பி.கு. சங்கத்துக்கு வந்த அட்லாஸ் வாலிபர்களை நாங்கள் வழக்கமாய் கலாய்த்து அனுப்புவோம். அதற்கும் உங்களுக்கு கொடுத்த இந்த சிரிப்பு...சாரி சிறப்பு பட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பின்னர் நேரில் வந்து வெட்டி உங்களிடம் தெளிவுப் படுத்துவார் :)))

Sumathi. said...

ஹாய் K.R.S,

எப்படி தான் இப்படியெல்லம் யோசிக்க முடியுதோ?

அப்பப்பப்பா...சூப்பர் காமடி போங்க.

நிஜமாவே இந்த மாசம் முழுக்க ரொம்ப நல்லாவே காமடி பண்ணியிருந்தீங்க...
நல்லாயிருங்க...

G.Ragavan said...

பச்சைமாமலைபோல் மேனி
பவழவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே
ஊரிலேன் காணி இல்லை
உழவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேனே
ஆருளர் களைகண் அம்மா
செந்தில்மாநகருளானே ;)

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கல்....ஆ.சி.சித்தரே.

மெளலி (மதுரையம்பதி) said...

மாதம் அதுக்குள்ள முடியுதா?, அடடா.....

அப்பா சிங்கங்களா, கே.ஆர்.எஸ்ஸை வவாச-ல பர்மனண்ட் பண்ணுங்கப்பா.....அப்பத்தான் இந்தமாதிரி பதிவுகள் நிரம்ப கிடைக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இம்சை, கிருஷ்ணா

அடடா...என்ன ஒரு பக்திப் பரவசம்! பார்த்தாலே பரவசம்! இப்படி ஜய ஜயன்னு பாடறீங்களே! வாழ்க! வாழ்க!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வடுவூர் குமார் said...
நல்லா இருக்கு ஈ உட்கார்ந்து அண்ட சராசரம் குலுங்கியது.
படிச்ச உடனே "குலுங்குதுல்ல".//

ஆகா...குமார் சார், அடுத்த ரஜினி பட பஞ்ச் டயலாக்கா இது? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
// பட்டைய கிளப்புனது kannabiran, RAVI SHANKAR (KRS)//
உண்மையாவே பட்டைய கிளப்பிட்டீங்க போங்க!!//

எந்தப் பட்டை, CVR?
லவங்கப் பட்டை? :-)) பிரியாணி வாசம்??

//அதுல ஒரு பாவமும் அறியாத ஒரு அப்பாவிய வேற டேமேஜ் பண்ணிட்டீங்க!!//

ஓ...டெவில் ஷோவில் அன்பு ஜிராவையும், நம்ம வெட்டியையும் பண்ணத சொல்றீங்களா? ஆமாங்க, எனக்கே பாவமாத் தான் இருக்கு! பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகர்கள் அவங்க!

//அதுவும் இலக்கியம்,தமிழ்,ஆன்மீகம் என கலந்தடித்து இந்த போஸ்ட் கலக்கிட்டீங்க!!வாழ்த்துக்கள்!! :-)//

நன்றி CVR!
பதிவுலகப் பெருந்தகை உங்க வாயால வாழ்த்துன்னா, சும்மாவா! நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
அண்ணா, ஆனாலும் இப்படி சங்கத்தைக் கோயிலாக்கிட்டீங்களே.//

தலைவா, எல்லாம் உங்க ஆசி தான்!
அதுக்காக பிரசாதம் எல்லாம் கேட்கக் கூடாது! பேக்பைப்பர் தீர்த்தம் வேணும்னா ரெண்டு ஸ்பூன் கொடுக்கலாம் :-)

//அங்கமெல்லாம் நோக அடிவாங்கும் வல்லவனின்
சங்கத்தில் என்றும் சிரிப்புதான் - தங்கமே
நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறு//

அப்படிப் போடுங்க வெண்பாவை!
மெய்யாலுமே பட்டைய கெளப்பறது நீங்க தான்!

நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறவா? - சேரணும்
சங்கமே சங்கமே சத்சங்க சங்கமே
தங்கமே தெரிந்துகொள் நீ!

:-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
காளமேக புலவர் அப்பவே கலாய்த்தல்ல பெரிய ஆளா இருந்திருக்கிறாரு...//

ஆனா ஒங்க அளவுக்கு பெரிய ஆளா (தில்லாலங்கடியா) இருந்தாரா என்பது தான் சந்தேகம், பாலாஜி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
கிருஷ்ணா, முகுந்தா, முராரே! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே!//

இளா
பாடினா மட்டும் போதுமா?
ஆடுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//cheena said...
சங்க இலக்கியங்களில் தேடிப் பிடித்து கவி காளமேகத்தைக் கண்டு பிடித்து சிவனையும் திருமாலையும் கலாய்த்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி தமிழ்த் தொண்டு செய்து வரும் வவாச வாழ்க - வளர்க - தமிழ்த் தொண்டு தொடர்க//

நன்றி சீனா!
வவாச சிங்கங்களே, நல்லாக் கேட்டுக்கோங்க!
தமிழ்த் தொண்டு தொடர்ந்து செய்யணும்! ஞாபகம் வச்சிக்கோங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவ் | Dev said...
கே.ஆர்.எஸ் உங்கள் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் உழைப்பும் உற்சாகமும் துல்லியமாய் தெரிந்தது..அந்த உழைப்பும் உற்சாகமும் நிச்சயமான பலனை அடைந்திருப்பதாய் உறுதியாக நம்புகிறேன்.. //

நன்றி தேவ் அண்ணா!
மாதவுப் பந்தல் பதிவெல்லாம் அரை மணி ஒரு மணியில் எழுதிடலாம்! இது போல் வாய் விட்டுச் சிரிக்கும் பதிவு எழுதத் தாங்கண்ணா பெண்டு கழன்டிடுச்சு! :-))

நீங்க எல்லாம் எப்படித் தான் அசால்டா வெளுத்து வாங்கறீங்களோ! சரி பிஸ்துங்க, சங்கச் சிங்கங்கள் எல்லாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவ் | Dev said...
சங்கத்தின் அழைப்பை ஏற்று ஆகஸ்ட் மாதத்தை ஒரு கலகலப்பான அட்லாஸ் மாதமாக வழங்கிய கே.ஆர்.எஸ் அவர்களுக்கு "ஆன்மீகச் சிரிப்பு சித்தர்" என்னும் பட்டத்தை சங்கம் வழங்கி கவுரவிக்கிறது..//

ஆகா...இது என்ன ஆசிசி?
ஏதோ இருக்கு டோய் இதுக்குள்ளாற!!!

//இனி வரும் மக்கள் அன்னாரைச் ஆ.சி.சித்தர் என அன்போடு அழைக்கக் கடவார்கள்//

அப்படியே ஆகட்டும் தேவ் மன்னா, சாரி தேவ் அண்ணா! :-)

//பி.கு. சங்கத்துக்கு வந்த அட்லாஸ் வாலிபர்களை நாங்கள் வழக்கமாய் கலாய்த்து அனுப்புவோம். அதற்கும் உங்களுக்கு கொடுத்த இந்த சிரிப்பு...சாரி சிறப்பு பட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பின்னர் நேரில் வந்து வெட்டி உங்களிடம் தெளிவுப் படுத்துவார் :)))//

வெட்டி எப்போ நேரில் வந்தார்?
எப்பமே குறுக்காத் தானே வருவார்! :-))

சரி சரி, வந்து
"தெளிவு" "படுத்தட்டும்" :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sumathi. said...
ஹாய் K.R.S,
எப்படி தான் இப்படியெல்லம் யோசிக்க முடியுதோ?//

ஆல் சங்கம் எஃபெக்ட்!

//நிஜமாவே இந்த மாசம் முழுக்க ரொம்ப நல்லாவே காமடி பண்ணியிருந்தீங்க...
நல்லாயிருங்க...//

நன்றி சுமதி! தொடர்ந்து மாதவிப் பந்தலுக்கும் வாங்க! இனிமே அங்கேயும் காமெடி பண்ணறேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
பச்சைமாமலைபோல் மேனி
//

சூப்பரு! இதான் எங்க ஜிரா!

//ஊரிலேன் காணி இல்லை
உழவு மற்றொருவர் இல்லை//

உழவா? உறவா??
இளா போட்ட பின்னூட்டமா? போலி ஜிராவா? உழவு என்று விவசாய வார்த்தை வருதே! அதான் கேட்டேன்!

//பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே....
செந்தில் மாநகருளானே ;)//

அச்ச்சோ...எங்க ஜிராவா இது? கையக் கொடுங்க! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
செந்தில் மாநகரில் பெருமையுடன் இருப்பது காரொளி வண்ணன், கண்ணன் தான் என்று சொல்ல ஒங்களுக்கு எம்மாம் பெரிய மனசு வேணும்! :-)))

அட அங்கேயும் கண்ணன் இருக்காருப்பா மாப்ஸ் முருகன் கூடவே!
போதாக்குறைக்கு குலசேகரப்பட்டினம் பள்ளி கொண்டவனும் பக்கம் தேன்!

இலவசக்கொத்தனார் said...

//நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறவா? - சேரணும்
சங்கமே சங்கமே சத்சங்க சங்கமே
தங்கமே தெரிந்துகொள் நீ!//

ஈற்றடி தளை தட்டுதே. சரி பண்ணுங்க.

(ஆமாம் நீங்க சங்கத்தை கோயிலாக்குனா நான் வெண்பா கிளாஸ் ஆக்கக்கூடாதா? )

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
ஈற்றடி தளை தட்டுதே. சரி பண்ணுங்க.//

ஓக்கே மாஸ்டர்! சரி பண்ணிடறேன் மாஸ்டர்! :-)

நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறவா? - சேரணும்
சங்கமே சங்கமே சத்சங்க சங்கமே
தங்கமே தெளிவாய் நீ!

//(ஆமாம் நீங்க சங்கத்தை கோயிலாக்குனா நான் வெண்பா கிளாஸ் ஆக்கக்கூடாதா?)//

ஹிஹி...பாவம் சங்கத்துச் சிங்கங்கள்! :-)

இலவசக்கொத்தனார் said...

//தங்கமே தெளிவாய் நீ!//

மிஸ்டர் அட்லாஸ் வாலிபரே!

இந்த ஈற்றடியைப் பிரித்தால்

தங்/கமே தெளி/வாய் நீ

என வருகிறது. இதில் தங்கமே என்பது கூவிளமாக (நேர் நிரை) வருவதால் அதனைத் தொடர்ந்து வரும் அசை நேர் கொண்டு தொடங்க வேண்டும். ஆனால் இங்கு தெளி என்ற நிரை கொண்டு தொடங்குகிறது.

அது மட்டுமில்லாமல் தெளிவாய் என்பது புளிமா (நிரை நேர்). மா முன் நிரை வர வேண்டும். ஆனால் நீ என்ற நேர் வந்திருக்கிறது.

ஆகவே ஒரு தளை தட்டல் இருந்த இடத்தில் இரண்டு தளை தட்டல்கள் வந்து விட்டதே.

சரி செய்து போடும்.

G.Ragavan said...

// //பரமமூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே....
செந்தில் மாநகருளானே ;)//

அச்ச்சோ...எங்க ஜிராவா இது? கையக் கொடுங்க! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
செந்தில் மாநகரில் பெருமையுடன் இருப்பது காரொளி வண்ணன், கண்ணன் தான் என்று சொல்ல ஒங்களுக்கு எம்மாம் பெரிய மனசு வேணும்! :-)))

அட அங்கேயும் கண்ணன் இருக்காருப்பா மாப்ஸ் முருகன் கூடவே!
போதாக்குறைக்கு குலசேகரப்பட்டினம் பள்ளி கொண்டவனும் பக்கம் தேன்! //

படிச்சவன் பாட்டக் கெடுத்தாங்குறது சரியாத்தான் இருக்கு. நான் என்ன பொருள்ள சொல்லீருக்கேன். நீங்க என்ன பொருள்ள திரிக்கிறீங்க? நடுவுல ஒரு வரிய வேற முழுங்கீட்டீங்க.

காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேனே
ஆருளர் களைகண் அம்மா
செந்தில்மாநகருளானே ;)

கண்ணனே...கதற்றேனே...யாரும் இல்லைன்னு நெனச்சியா? செந்தில்நகர் முருகன் இருக்கான் தெரிஞ்சுக்கோன்னு முடிச்சிருக்கேன். நீங்க சொன்ன மாதிரியெல்லாம் பொருள்ள நான் சொல்லல. ;)

நீங்கதான் பழைய இலக்கியங்கள திரிச்சிப் புதுப்புது பொருளாச் சொல்லிக் கொடுமை செய்றவரா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
//தங்கமே தெளிவாய் நீ!//
ஆகவே ஒரு தளை தட்டல் இருந்த இடத்தில் இரண்டு தளை தட்டல்கள் வந்து விட்டதே.//

யப்பா சாமி..இந்த தட்டு தட்டறீங்களே, வெண்பா வாத்தி!

நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறவா? - சேரணும்
சங்கமே சங்கமே சத்சங்க சங்கமே
தங்கமே தள்ளிப் பார்!

கரெக்டா யா?
எதைத் தள்ளிப் பார் ன்னு கேட்காதீங்க! அதுக்கு உரை ஆசிரியர் வந்து பொழிப்புரை சொல்லுவாரு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
படிச்சவன் பாட்டக் கெடுத்தாங்குறது சரியாத் தான் இருக்கு//

ஆமா...
ஆனா நான் படிச்சவன் இல்லை ஜிரா! பரந்தாமன் பற்றினைப் பிடிச்சவன்!
அதுனால பாட்டை நான் கெடுக்கல!:-)

//கண்ணனே...கதற்றேனே...யாரும் இல்லைன்னு நெனச்சியா? செந்தில்நகர் முருகன் இருக்கான் தெரிஞ்சுக்கோன்னு முடிச்சிருக்கேன்//

அதுக்கு முன்னாடி ஒரு வரியில
பரமமூர்த்தி, பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன்-னு சொல்றாரு!
பரந்தாமனைப் பற்றாமப் போயிட்டோமேன்னு தான் அவரு கதறுகிறார்! அத கவனிக்காம, மண்டபத்தில் ஆழ்வாரிடம் வாங்கியாந்த பாட்டை நீங்க தான் ஒட்டி வெட்டறீங்க! :-)

காரொளி வண்ணனே
கண்ணனே கதறுகின்றேனே
ஆருளர் களைகண் அம்மா
செந்தில்மா நகரு ளானே

என் கண்ணனே, உன் திருவடியைப் பற்றாமல் போனேனே! அதனால் இன்று கதறுகின்றேனே!
யார் இருக்கா இதைக் களைய?

செந்தில் மாநகரில் கூடச் செந்திலைக் காப்பதற்காகவே, உன் இடம் (அரங்கம்)விட்டு, வேறிடம்(செந்தூர்) பள்ளி கொண்டாய்!
இந்தக் கருணை வேறு யாருக்கு வரும்? அந்தக் கருணையால் என்னையும் காக்க வேணும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீங்கதான் பழைய இலக்கியங்கள திரிச்சிப் புதுப்புது பொருளாச் சொல்லிக் கொடுமை செய்றவரா?//

அது நான் இல்லை ஜிரா!
என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. ஜி.ராகவன்ன்னு பேரு. அவரு தான் அப்படிச் செய்யறவரு! (மயிலார் எவ்வளவு சொல்லியும் கேட்காமல்)

அவர் ஊர் என்னமோ மதுரையாம்.
ஆனாப் பண்ணறது எல்லாம் திரிச்சி!

தொண்டரடிப்பொடியாழ்வாரின் "அரங்க மாநகர் உளானே"-ங்கற பாட்டை
திரிச்சி, திரிச்சி
"செந்தில் மாநகர் உளானே"ன்னு தன் இட்டத்துக்குச் சொல்லிக் கொடுமை செய்றவரு அவரே தான்! :-)))

என்ன கொடுமை ராகவன்! :-))

இலவசக்கொத்தனார் said...

//தங்கமே தள்ளிப் பார்!//

தங்கமே - ஒரு வரியில் இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கறீங்களே. இதுக்கு இன்னும் ஒரு கலாய்த்தல் பதிவே போட்டு இருக்கலாமே.

தள்/ளிப் - நேர் நேர் - தேமா
பார் - நேர்.

மா முன் நேர் வந்ததால் தளை இன்னும் தட்டுதப்பா!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

////தங்கமே தள்ளிப் பார்!//
தங்கமே - ஒரு வரியில் இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கறீங்களே. இதுக்கு இன்னும் ஒரு கலாய்த்தல் பதிவே போட்டு இருக்கலாமே.//

கிழிஞ்சுது போங்க!
ஒத்த வரியிலே
சத்தாக மொத்திடும்
கொத்தனார் கொற்றம்
வாழ்க வாழ்க! :-))

"சங்கத் தமிழ்மூன்றும் தா" - அந்த மெட்டில் வரேன் இருங்க!

நாரணன் கோயிலாய் நற்சங்கம் ஆனதன்
காரணம் ஏனென்று கூறவா? - சேரணும்
சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே
தங்கத் தமிழ்மூன்றும் கா!

G.Ragavan said...

// சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே //

ஒரு வெண்பாவுக்குள்ள சொல்லு மூனு வாட்டி வந்தாலே புலவர்களுக்குப் பிடிக்காது..நீங்க ஒரு வரியில நாலு சங்கம் வைக்கிறீங்க. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சங்கமா? வெண்பாவை எனது பாண்டி நாட்டு சங்கப்பலகை ஏற்கவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// G.Ragavan said...
// சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே //
ஒரு வெண்பாவுக்குள்ள சொல்லு மூனு வாட்டி வந்தாலே புலவர்களுக்குப் பிடிக்காது..//

ஓ...அப்படியா புலவர் ஜிரா?
வந்துட்டாருப்பா ஒட்டக் கூத்தராட்டும்! :-)

இதுக்குப் பதில் சொல்லுங்க புலவரே!
குறளும் ஒரு வெண்பா தான்! குறள் வெண்பான்னே பேரு!

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!

முதலடியில் நாலு "பற்று"!
ஈற்றடியில் இரண்டு "பற்று"!!
ஆக மொத்தம் ஆறு பற்று!!!

ஆக, ஐயன் வள்ளுவரின் குறள் வெண்பாவில் இத்தனை "பற்று" வருவதால் குறள் உங்களுக்கும் பிடிக்காது! புலவருக்கும் பிடிக்காதா?
என்ன கொடுமை ராகவன்! :-(((

//வெண்பாவை எனது பாண்டி நாட்டு சங்கப்பலகை ஏற்கவில்லை//

யார் சொன்னா பாண்டி நாட்டு சங்கப் பலகை உங்களதுன்னு? :-)

இப்படித் தான் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சங்கப் பலகை ஏற்கவில்லை-ன்னு ரொம்ப பிகு பண்ணாங்க ஜிரா போன்ற பழம்பெரும் புலவர்கள்!

ஆனா அது அத்தனை பேரையும் தள்ளிவிட்டு மாறன் மொழியை மட்டும் காதலுடன் ஏற்றுக் கொண்டது!

அடங்குஎழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கு எழி்ல் அஃதென்று அடங்குக வுள்ளே
இங்கேயும் மொத்தம் நாலு அடங்கு ஜிரா! இதுக்கு என்ன சொல்றீங்க? :-)))

இலவசக்கொத்தனார் said...

//தங்கத் தமிழ்மூன்றும் கா!//

எழுத வந்தது ஒரு வெண்பா. அதில் ஆயிரம் தளை தட்டல்கள். கடைசி நேரத்தில் காரியம் கை கூடி வரும் வேளையில் இப்படிக் கவுத்துட்டீரே.

தங்கத் தமிழ்மூன்றும் தா எனக் கேட்க வேண்டிய இடத்தில் மூன்று தமிழோட கா விட்டுட்டீரே!!

இனிமே பதிவு எல்லாம் என்ன தமிங்கலமா? அல்லது ஒரேடியா ஆங்கிலம்தானா? :))

இலவசக்கொத்தனார் said...

//முதலடியில் நாலு "பற்று"!
ஈற்றடியில் இரண்டு "பற்று"!!
ஆக மொத்தம் ஆறு பற்று!!!//

அவரு பற்று வெச்சாரு. அது நமக்கு வரவு. ஆனா நீர் சங்கம் வெச்சா நமக்கு செலவு.

அதான் அவருக்கு ஆஹா சொல்லும் போதே உமக்கு இதோடா அப்படின்னு சவுண்ட் விடறோம்!! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
எழுத வந்தது ஒரு வெண்பா. அதில் ஆயிரம் தளை தட்டல்கள்.//

யோவ்..ரெண்டு வாட்டித் தான் தளை தட்டிச்சி! நைசா ஆயிரம்ன்னு சொல்றீரு! கணக்குல நீரு வீக்கா? :-)

//தங்கத் தமிழ்மூன்றும் தா எனக் கேட்க வேண்டிய இடத்தில் மூன்று தமிழோட கா விட்டுட்டீரே!! //

காயும் விடல! பழமும் விடல!
சங்கம் எதுக்கு?
தங்கத் தமிழ் மூன்றையும் காப்பாத்த தான்!
அதான் தங்கத் தமிழ் மூன்றும் "கா"!

கா = காப்பாற்றல்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
அவரு பற்று வெச்சாரு. அது நமக்கு வரவு. ஆனா நீர் சங்கம் வெச்சா நமக்கு செலவு.//

ஓ...பொருளாளர் சாரே! செலவுக் கணக்கு பாக்கறீங்களா?
இப்பல்லாம் கொத்தனாரே பைனான்சியரும் ஆயிடறாங்கப்பா! :-))

//அதான் அவருக்கு ஆஹா சொல்லும் போதே உமக்கு இதோடா அப்படின்னு சவுண்ட் விடறோம்!! :))//

சவுண்டு தானே! சவுண்ட் சர்வீஸ் நடக்கட்டும்! நடக்கட்டும்!

Dr.N.Kannan said...

நம்ம கண்ணபிரானுக்கு இன்னொரு டைட்டிலுண்டு. அது "பெத்த பெருமாளுக்கே வத்தி கொடுத்த நம்மாளு" என்பது!

G.Ragavan said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
// சங்கம் சங்கமே சத்சங்க சங்கமே //
ஒரு வெண்பாவுக்குள்ள சொல்லு மூனு வாட்டி வந்தாலே புலவர்களுக்குப் பிடிக்காது..//

ஓ...அப்படியா புலவர் ஜிரா?
வந்துட்டாருப்பா ஒட்டக் கூத்தராட்டும்! :-)

இதுக்குப் பதில் சொல்லுங்க புலவரே!
குறளும் ஒரு வெண்பா தான்! குறள் வெண்பான்னே பேரு!

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!

முதலடியில் நாலு "பற்று"!
ஈற்றடியில் இரண்டு "பற்று"!!
ஆக மொத்தம் ஆறு பற்று!!!

ஆக, ஐயன் வள்ளுவரின் குறள் வெண்பாவில் இத்தனை "பற்று" வருவதால் குறள் உங்களுக்கும் பிடிக்காது! புலவருக்கும் பிடிக்காதா?
என்ன கொடுமை ராகவன்! :-((( //

ஓஓ அதாவது நீர் திருவள்ளுவர் அளவுக்குப் பெரிய ஆளுன்னு சொல்லிக் காட்டுறீரு. ஆனா ஒன்னு....அம்பிகையின் அருள் பெற்ற கூத்தனைப் போலன்னு சொன்னது எனக்குப் பெருமைன்னாலும் தமிழ்ப்புலமைச் செம்மல் கூத்தனுக்கு இழுக்கு. ஆகையால அப்படிச் சொல்லாதீங்க.

////வெண்பாவை எனது பாண்டி நாட்டு சங்கப்பலகை ஏற்கவில்லை//

யார் சொன்னா பாண்டி நாட்டு சங்கப் பலகை உங்களதுன்னு? :-)

இப்படித் தான் மாறன் சடகோபன் நம்மாழ்வாரின் திருவாய்மொழியைச் சங்கப் பலகை ஏற்கவில்லை-ன்னு ரொம்ப பிகு பண்ணாங்க ஜிரா போன்ற பழம்பெரும் புலவர்கள்!

ஆனா அது அத்தனை பேரையும் தள்ளிவிட்டு மாறன் மொழியை மட்டும் காதலுடன் ஏற்றுக் கொண்டது! //

ஓஓ! மொதல்ல திருவள்ளுவரப் போலன்னு எடுத்துக்காட்டு....மொழியரசர் அவர். இப்ப மாறனாரையும் எடுத்துக்கிட்டாச்சா! இறையரசர். அவங்களப் போல நீங்களும்னு நிரூபிக்கப் படாதபாடு படுறீங்க. ம்ம்ம்ம்..மக்களே..கேட்டுக்கோங்க. உஷாராயிக்கோங்க. "நான் கடவுள்"னு இவரப் போல நெறையப் பேரு சொல்லிக்கிட்டு கெளம்"பீரு"க்காங்க.

// அடங்குஎழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கு எழி்ல் அஃதென்று அடங்குக வுள்ளே
இங்கேயும் மொத்தம் நாலு அடங்கு ஜிரா! இதுக்கு என்ன சொல்றீங்க? :-))) //

இதவிட ஒரு யமகம் சொல்றேன் பாருங்க....

சேயவன் புந்தி வனவாசமாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசாசராந்தகச் சேந்த வெண்ணில்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிப்பொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாறா வேதருஞ் சேதமன்றே

இப்பிடியும் எழுதலாம். ஆனா ஒவ்வொன்னுக்கும் பொருள் வேறங்க. எங்க நீங்க சொன்ன பாவுக்கு விளக்கம் சொல்லுங்க பாப்போம்.

VSK said...

30 நாளும் கலக்கிய ஆசிசித்தருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நா.கண்ணன் said...
நம்ம கண்ணபிரானுக்கு இன்னொரு டைட்டிலுண்டு. அது "பெத்த பெருமாளுக்கே வத்தி கொடுத்த நம்மாளு" என்பது!//

ஆகா...
நான் கொசுவத்தி கொடுத்ததை இன்னும் மறக்கலை போல!
நீங்களும் டைட்டில் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா கண்ணன் சார்? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
30 நாளும் கலக்கிய ஆசிசித்தருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!//

நன்றி SK!
உங்களிடம் உரையாடிய போது கிடைத்த டிப்ஸ்-உம் உதவியாத் தான் இருந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
ஓஓ அதாவது நீர் திருவள்ளுவர் அளவுக்குப் பெரிய ஆளுன்னு சொல்லிக் காட்டுறீரு//

ஹிஹி
எப்படி ஜிரா நீங்க இப்படிக் காமெடி பண்ணுறீங்க? :-)
திருவள்ளுவரை முதலில் திட்டிட்டீங்க...புலவருக்கு அவரைப் பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்க! இப்ப இப்படி ஒரு நாடகமா? :-))

//அவங்களப் போல நீங்களும்னு நிரூபிக்கப் படாதபாடு படுறீங்க//

திருப்பு திருப்புன்னு திருப்பியும் காமெடியா?

//ம்ம்ம்ம்..மக்களே..கேட்டுக்கோங்க. உஷாராயிக்கோங்க. "நான் கடவுள்"னு இவரப் போல நெறையப் பேரு சொல்லிக்கிட்டு கெளம்"பீரு"க்காங்க.//

பீரு..பீரு..பாருங்கப்பா ஜிரா சொல்ற பீரை! :-)

//ஆனா ஒவ்வொன்னுக்கும் பொருள் வேறங்க. எங்க நீங்க சொன்ன பாவுக்கு விளக்கம் சொல்லுங்க பாப்போம்//

ஒங்க யமகத்துல ஒவ்வொன்னுக்கும் பொருள் வேற தாங்க!
ஆனா வள்ளுவர் சொல்ற
பற்றினை-அப்பற்றை
பற்றுக-பற்றுக
பற்று அற்றான்-பற்று விடற்கு,
எல்லாம் ஒரே பொருளில் வரும் பற்று தான், ஜிரா!
அதைப் பற்றாமல், பற்ற வைத்திக் கொண்டு இருக்கீங்க நீங்க! :-))

G.Ragavan said...

// எல்லாம் ஒரே பொருளில் வரும் பற்று தான், ஜிரா!
அதைப் பற்றாமல், பற்ற வைத்திக் கொண்டு இருக்கீங்க நீங்க! :-)) //

பற்று வரவெல்லாம் பொருளை வெச்சுத்தானே. அது தெரியாதா! சரிய்யா..நாங்க பத்த வெச்க்கிறவங்கதான். என்னயப் பாத்து பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு சொல்றீங்க. நீங்க நல்லவங்க. வல்லவங்க. சரிதானாய்யா..இனிமே ஒன்னும் சொல்லலைய்யா நானு.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
என்னயப் பாத்து பத்த வெச்சிட்டியே பரட்டைன்னு சொல்றீங்க//

பற்ற வைக்கறீங்க-ன்னு சொன்னேன்!
பத்த வைக்கறீங்க-ன்னு சொல்லலை!
பற்ற வைக்கறீங்கன்னா....இனியது கேட்கின்-இல் எழுதி எங்களையும் அவனைப் பற்ற வைக்கறீங்களாக்கும்!
அதை எண்ணிக் கைப் பற்றுங்க! :-)
எப்பமே தமிழோடு நீங்க மட்டும் விளையாடினாப் போதுமா? நாங்களும் விளையாட்டில் சேர வேண்டாமா? :-))

//நீங்க நல்லவங்க. வல்லவங்க. சரிதானாய்யா..//

இது உண்மை தானே ஜிரா!
ஹா ஹா ஹா ஹா :-)))
ரொம்ப நேரம் சிரிச்சேன் ஜிரா!

//இனிமே ஒன்னும் சொல்லலைய்யா நானு//

அட, ஜிராவுக்கு கோபத்த பாரு! இருங்க நெதர்லேண்ட்ஸ் வரேன்! :-))