வைகை போல் திரண்டிருக்கும், "மதுரை மாபாவியர்கள்" அனைவருக்கும் அடியேன் வணக்கம்!
தருமி சாருக்கு ஸ்பெஷல் வணக்கம்!:-)
மதுரைக்காரங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்து அழகான வலைப்பூ தொடங்கியிருக்காய்ங்க!
அதுல நம்ம சங்கத்துச் சிங்கம் அண்ணாத்த ராயல் வேறு, கெளரவம் மிக்க உறுப்பினர்!
மதுரை தாஜ் ஹோட்டல் பிரியாணிக்காகத் தான் அதுல அவர் சேர்ந்தாரா என்பதைப் பற்றிப் பாண்டியன் சபையில் பெருத்த விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது!:-)
கோவலன் கண்ணகி நாடகம் மிகவும் உணர்ச்சிகரமானது.
சினிமாவை விடச் சூடும் சுவையும் உள்ளது நாடகம் தான். பின்னே செட் போட்டு, கண் முன்னாடி ஒரு நகரமே எரிந்தால் சும்மாவா?
தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம் அது!
சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி அறியாதார் யார்!
முத்தமிழுள் ஒன்றான நாடகத் தமிழை மீண்டும் தூக்கி நிறுத்தியவர் அவர்!
கதை-வசனம்-பாடல்கள்-ஒளிப்பதிவு-டைரக்சன் என்று வித்தை காட்டிக் கொள்ளும் இன்றைய இயக்குநர்களுக்கு எல்லாம் அவர் தான் முன்னோடி. அவர் எழுதிய நாடகம் தான் கோவலன் கண்ணகி!
பல ஊர்களில் சக்கைப் போடு போட்ட அந்த நாடகம், கடைசியில் மதுரையிலேயே நடத்தப்பட்டது! அதில் இருந்து ஒரு சீன்!
கண்ணகி பாண்டியன் சபையிலே கூக்குரல் இட்டுப் பாடுகிறாள்.
"மா பாவியர் வாழும் மதுரை ஆளும் பாண்டிய மன்னா!!!"
ட்ட்ட்டங் ட்ட்ட்டங் டொய்ங்க்....
சபையில் ஒரே பரபரப்பு, குழப்பம், கூச்சல், விசில்!
"டேய், யாரைப் பாத்து இன்னா வார்த்தை சொன்னீங்கடா, கொக்க மக்கா".....மதுரை, சென்னைக்கு ஷிஃப்டானது, தமிழில்! :-)
மாப்பிள்ளை வினாயகர் கடை சோடா பாட்டில்கள் பறக்க...பயந்து போய் திரை போட்டார்கள்!
மதுரை மக்கள் உணர்ச்சி வேகத்துடன் கேட்டார்கள்! "மாபாவியர் வாழும் மதுரை என்று எப்படிச் சொல்லலாம்? அப்ப நாங்க-ல்லாம் என்ன மகா பாவிகளா?"
சபா செக்கரட்டரி மற்றும் பலர் ஓடியாந்தாய்ங்க.
"அது இல்லீங்கப்பு! கண்ணகி, கணவனைப் பறிகொடுத்த கோபத்தில் உணர்ச்சிகரமாப் பேசறா. அதப் பாத்து நீங்க ஏதும் உணர்ச்சி வசப்படாதீங்கப்பு!"
"எலேய்...மொதல்ல நாடகத்தை நிறுத்து.
எழுதியவரை மேடைக்கு வரச் சொல்லு!
மன்னிப்புக் கேட்ட பின் தான் நாடகம் தொடர அனுமதிப்போம்!"
சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி அடாவடி பண்ணுறாங்களே என்று நாடக நிர்வாகிகளுக்கும் கோபம் வந்தது. ஆனா வேறு வழியில்லை!
கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்! அதனால் சங்கரதாஸ் சுவாமிகளையே மேடைக்கு வரச் சொன்னார்கள்!
மேடைக்குச் சிரித்துக் கொண்டே வந்தார் சுவாமிகள்.
"தமிழன்பர்களே, உண்மையைத் தானே உயர்ந்த கருத்தாக எழுதினேன்.
இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாமா? தமிழ் தெரியாத கத்துக்குட்டிகளா நீங்கள்?
மதுரைக்காரங்களுக்கே தமிழ் தெரியலை என்று நாளை யாராவது பேசி விடப் போகிறார்கள்! அதனால் அமைதியுடன் நான் சொல்வதைக் கேளுங்கள்!"
"மாபாவியர்" என்றால் நீங்கள் நினைப்பது போல் ஒன்னும் மோசமான பொருள் அல்ல.
மா = மாதரசி, மங்களகரமான மகாலட்சுமி,
பா = பார்வதி,
வி = வித்தைக்கு அரசி, சரஸ்வதி.
முப்பெரும் தேவியரான திருமகள், மலைமகள், கலைமகள்!
மா, பா, வி வாழும் ஊர் தானே மதுரை?
இவர்கள் எல்லாம் உங்கள் ஊரில் வாழ வேணாம் என்றால் சொல்லுங்க, உடனே மாற்றி விடுகிறேன்".
பட பட பட பட வென்று ஒரே கைதட்டல். மதுரை மக்கள் ஆரவாரம்.
சங்கரதாஸ் சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, மாலை அணிவித்துப் பாராட்டி, மேலும் பணமுடிப்பு கொடுத்தார்கள்!
நாடகமும் பெருத்த அப்ளாசுடன் நடந்தேறியது!
பின்னர் சபா அங்கத்தினர்கள் சுவாமிகளிடம் ப்ரைவேட்டாக, உண்மையிலேயே அக்கருத்தில் தான் எழுதப்பட்டதா என்று கேட்டார்கள்!
"ச்சே ச்சே...இல்லை! இல்லை!
சமயத்திற்கு ஏற்றவாறு சமாளித்தேன். அவ்வளவு தான்!" என்றாராம் சுவாமிகள்.
பிழையான ஒரு பாட்டுக்குப் பாண்டியன் பரிசு அளிக்கிறான் என்று பல மணி நேரம் சண்டை போட்டு விட்டுக்....கடைசியில்
அதே பிழையான பாட்டுக்குத் தானே பரிசை அளிக்கச் சொன்னார்கள்!
பாருங்க, நமக்கும் அதிகமாப் பண முடிப்பு கொடுத்துள்ளார்கள் என்று அவர் சொல்ல...
சீரியஸ் கண்ணகி நாடகத்துக்கு நடுவே, குபீரென்று சிரிப்பலைகள் எழுந்து பாய்ந்தது!
பாசக்காரப் பயலுங்கப்பா, மருதக்காரய்ங்க!
மாமதுரை போற்றுதும் மாமதுரை போற்றுதும் என்று மாற்றிப் பாடலாமா?
ச்ச்சே வேண்டாம்! அதான் ஒரிஜினலாவே போற்றிப் பாடி இருக்காய்ங்களே!
நிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு...
சங்கம் வைத்த, வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாக
சங்கம் வைத்த, மதுரை மூதூருக்குச்
சிரிப்பலை வணக்கங்கள்!
இப்பச் சொல்லுங்க,
இந்தப் பதிவு போட்டதுக்கு என்னைய மருத மக்கா அடிப்பாய்ங்களா இன்னா? :-)
வ.வா - மதுரை வாலிபர்கள் | வ.வா - மதுரை வாலிபிகள் |
55 comments:
இந்த இடுகை இட்டதற்கு உங்களை அடிக்கப் போவதில்லை. ஆனால் 'வைகை போல் திரண்டிருக்கும்'ன்னு சொல்லி உங்க தருமமிக சென்னையின் தலைநகராக் கூட்டத்தின் அளவுக்கு எங்க பாசக்காரப் பயலுவ கூட்டம் இல்லைன்னு ஒரு உள்குத்து வச்சிருக்கீங்களே அதுக்குத் தான் நானும் இந்த வார்த்தையில ஒரு உள்குத்து வச்சிருக்கேன்.
இது என்ன ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனைக் கடிக்கிறதும்பாங்க; நீங்க ஆளுங்களை கலாய்க்கிறத விட்டுட்டு ஊரைக் கலாய்க்கத் தொடங்கியிருக்கீங்க?
//பின்னர் சபா அங்கத்தினர்கள் சுவாமிகளிடம் ப்ரைவேட்டாக, உண்மையிலேயே அக்கருத்தில் தான் எழுதப்பட்டதா என்று கேட்டார்கள்!
"ச்சே ச்சே...இல்லை! இல்லை!
சமயத்திற்கு ஏற்றவாறு சமாளித்தேன். அவ்வளவு தான்!" என்றாராம் சுவாமிகள்.
//
:)
இப்படித்தான் நம்மாளு ஒருத்தர் அவங்க தங்கமணியைப் பார்த்து மூதேவி அப்படின்னு திட்டிப்புட்டாரு. அப்புறம் நிலமை விபரீதமாகப் போக - சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என்ற மூன்று தேவியரும் சேர்ந்து இருப்பது போல் இருக்கும் உன்னை மூதேவி எனச் சொன்னது மூன்று தேவியர் என்ற பொருளில்தான் என்று சமாளித்து அன்று சாப்பாடு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார்.
அவர் யாரு, அவர் பதிவரா, அவர் இந்த மாதத்து அட்லஸ் வாலிபரா என கேட்டால் என்னிடம் பதில் இல்லை!!
நீங்க கூட ஒரு பொறுக்கி...
அவசரப்பட வேண்டாம்....
தகவல பொறுக்கி,பொறுக்கி எங்களுக்கு தருகின்றதாலே...பொறுக்கி
கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்! அதனால் சங்கரதாஸ் சுவாமிகளையே மேடைக்கு வரச் சொன்னார்கள்!
//
athe athe sabaapathe!!:)))
kobam irukkum idaththil kuNam irukkum theriyumaa Ravi.
ofcourse you will know:)))))
. unga ThangamaNi entha uuru????
very good post Ravi.
enga Madhuraiyaip pathivila pottathukku nanRi.
//குமரன் (Kumaran) said...
இந்த இடுகை இட்டதற்கு உங்களை அடிக்கப் போவதில்லை.//
முதற்கண் நன்றி, குமரன்!
//ஆனால் 'வைகை போல் திரண்டிருக்கும்'ன்னு சொல்லி உங்க தருமமிக சென்னையின்//
உள்குத்தா?
தருமம் மிகு சென்னை?
அதுவா? :-)) அது என்னமோ உண்மை தான் குமரன்!
வைகை திரளுமே! அணை திறந்து விட்டாக்கா திரளுமே! அழகர் ஆற்றில் இறங்கவே அஞ்சிய அளவுக்குத் திரண்டதே! அதைச் சொன்னாக் கூட உள்குத்தா?
என்ன கொடுமை இது மீனாட்சி!
//நீங்க ஆளுங்களை கலாய்க்கிறத விட்டுட்டு ஊரைக் கலாய்க்கத் தொடங்கியிருக்கீங்க?//
ஊரைக் கலாய்த்தலா? அதுவும் நானா?
ஆகா...மதுரைய கலாய்க்கக் முடியுமுங்களா? அதுவும் ஆனை கட்டிப் போரடித்த ஊரை!
பாருங்க, "பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர்" ன்னு புகழ்ந்து சொல்லியிருக்கேன்! என்னைய போயி இப்பிடிச் சொல்லிட்டீயளே!
சங்கரதாஸ் சுவாமியளே! நீங்க சொன்னதைப் பதிவா போட்டா இப்படிச் சொல்லுறாங்களே! இது நியாயமா? :-)))
Anandha Loganathan,
அது என்னங்க ஒரே ஒரு சிரிப்பூ!
//மா பாவிகளில் 1வன் said...
நீங்க கூட ஒரு பொறுக்கி...
அவசரப்பட வேண்டாம்....
தகவல பொறுக்கி,பொறுக்கி எங்களுக்கு தருகின்றதாலே...பொறுக்கி//
ஐயா மா பாவிகளில் 1வரே,
ரொம்ப நன்றிங்க! நீரை விட்டு பாலை மட்டும் பொறுக்கிக் குடிக்கும் அன்னம்-னு என்னையச் சொல்லிப் பெருமைப்படுத்தியமைக்கு!
பொறுமையை ஊக்குவிப்பவர்களை பொறு+ஊக்கி ன்னு சொன்னாய்ங்கன்னு எங்கோ படிச்சிருக்கேன்! அதுவும் ஞாபகம் வருது! :-))
//இலவசக்கொத்தனார் said...
மூன்று தேவியரும் சேர்ந்து இருப்பது போல் இருக்கும் உன்னை மூதேவி எனச் சொன்னது//
அலோ கொத்தனாரே!
மூன்று + மூர்த்தி = மும்மூர்த்தி
அதே போல
மூன்று + தேவி = முத்தேவி
மூதேவின்னு சொல்லிச் சப்பைக் கட்டு கட்டறதுக்கு வழியே இல்ல! தெரிஞ்சிக்கோங்க! :-))
நீங்க ஒங்க இட்டத்துக்கு தமிழை வளைக்கக்கூடாது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பிடித்து விடுவாய்ங்க!
//அவர் யாரு, அவர் பதிவரா, அவர் இந்த மாதத்து அட்லஸ் வாலிபரா என கேட்டால் என்னிடம் பதில் இல்லை!!//
உக்கும்! பதில் எங்க இருக்கும்?
அவர் பதிவர் தான்! ஒரு மாசமா காணாமப் போயி இருந்த பதிவரு! இப்பத் தான் மீண்டும் வந்தாரு. ஃப்ரீயா வீடு கட்டிக் கொடுக்கறவருன்னு காத்து வாக்குல பேசிக்குறாய்ங்க! :-)))
பொறுக்கிக்கு இவ்வளவு பொரு(று)ளா ??? உண்மையில்
பொருள் + ஊக்கி தானெ பொருக்கி - பொறுக்கி ஆன கதை
பல பொருள்களில் சிறந்த பொருளைப் பொறுக்குபவரே பொறுக்கி ஆவார்.
மதுரை என்றாலே கலக்கல் தானா!
நிஜமாகவே தனி பக்கம் போட்டு அங்கு கலக்கிருக்கிறார்கள்.
மூதேவி, மாபாவி, பொ'று'க்கி அப்பிடியெ இந்த நாதாரி, கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி எக்ஸட்ரா.. எக்ஸட்ரா.. எலாத்துக்கும் சொல்லிட்டீங்கன்னா அங்கங்க யூஸ் பண்ணிக்கலாம்.
மங்களூர் சிவா.
/அதுல நம்ம சங்கத்துச் சிங்கம் அண்ணாத்த ராயல் வேறு, கெளரவம் மிக்க உறுப்பினர்!/
அவர் வெறும் உருப்பினர் இல்லை, எங்கள் தலைவர்....
அது சரி, என்ன மதுரைப் பக்கம் வர வேண்டாம்ன்னு முடிவா?.....நாங்க தேடி வந்து கவனிப்போம் தெரியுமா?.
///மா = மாதரசி, மங்களகரமான மகாலட்சுமி,
பா = பார்வதி,
வி = வித்தைக்கு அரசி, சரஸ்வதி.
முப்பெரும் தேவியரான திருமகள், மலைமகள், கலைமகள்! ///
இப்படியே போனா தெருப்பொறுக்கி, கபோதி இதுக்கெல்லாம்கூட எழுத்துக்கு எழுத்து ஒரு சொல்லை தொடர்புபடுத்திடலாம்.
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.
'தலை நகரா' என்று எழுதியது எழுத்துப்பிழை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)
மங்களூர் சிவா. நீங்க கேட்டதுக்கு மட்டும் இல்லை. கஸ்மாலம் போன்ற சென்னைக்கே உரிய பொன்னான சொற்களுக்கும் இந்த தலைநகராக் கூட்டத்தின் தல விளக்கம் சொல்வார். :-)
@கண்ணன், முடிவு முதலிலேயே படிச்சுட்டேன், அதனாலே தப்பிச்சீங்க! :)))))))
@வல்லி, அது என்ன சந்தடி சாக்கிலே சிந்து பாடறீங்க? மதுரைக் காரங்க கோவம்னு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,.,.,., :P
Geetha.... ennaiththaan sollik konDen:)0)
vishayam ennannu theriyaRaththukkuLLa kobam mookku mela vanthudum.
adhukkaakak kuNam illainnu solla mudiyuma.
rendum ore idam thaan enRu sonnenpa.!!
ஹும்.. மதுரகாரவுக சங்கரதாஸ் சுவாமிகள் சொன்னதைக் கேட்டு ஏமாந்து போய்ட்டதாக எழுதியுள்ளீர்கள். அதெல்லாம் இல்லை தெரியுமா?
அவரின் தமிழ்ப் புலமையையும், சமயோசித புத்திக் கூர்மையையும் பாராட்டும் முகத்தான் யாம் அந்த நாடகத்தைத் தொடர அனுமதித்தோம் என்பது உங்களுக்கு எங்கே புரியப் போகிறது ... அதுக்கெல்லாம் ஒரு "இது" வேணும்னேன் ...
பட்டணத்துக்காரருக்கு 'இது' அப்படின்னா தெரியாது தருமியய்யா, நீங்க தெளிவாக்கிடறது நல்லது....
வாங்க வடுவூராரே, நீங்களாவது புரிந்துகொண்டீரே....
கஸ்மாலம் மட்டுமல்ல குமரன், நம்ம தலை இஸ்துகினு, இந்தாமே, இதுக்கெல்லாமும் பழந்தமிழில் உ.ம் எடுத்துக் காட்டுவார் நமது 'நகராத் தல'. அப்படித்தானே கே.ஆர்.எஸ்?
//வல்லிசிம்ஹன் said...
kobam irukkum idaththil kuNam irukkum theriyumaa Ravi.
ofcourse you will know:)))))
very good post Ravi. //
நன்றி வல்லியம்மா.
Thanks for taking in light and right spirit :-))
//enga Madhuraiyaip pathivila pottathukku nanRi//
அழகரும் ஆண்டாளும் இருக்கும் ஊரு! எங்க ஆண்டாளை ஒங்கூரில் இருந்து தானே எடுத்தோம்!
அது என்ன உங்க மதுரை?
எங்க மதுரையும் கூடத் தான்! நம்ம மதுரைன்னு சொல்லுங்க! :-))
//cheena said...
உண்மையில்
பொருள் + ஊக்கி தானெ பொருக்கி - பொறுக்கி ஆன கதை
பல பொருள்களில் சிறந்த பொருளைப் பொறுக்குபவரே பொறுக்கி ஆவார்//
ஆகா
கலக்கிட்டீங்க சீனா! பொருளூக்கி - எவ்வளவு அழகான பெயர்!
//வடுவூர் குமார் said...
மதுரை என்றாலே கலக்கல் தானா!
நிஜமாகவே தனி பக்கம் போட்டு அங்கு கலக்கிருக்கிறார்கள்//
ஆமாங்க குமார் சார்!
அதான் சுட்டியும் கொடுத்துள்ளேன்! அங்கன போயி பின்னூட்டம் போடும் போதே, மருத வாசனையும் மல்லி வாசனையும் தூக்கலாத் தான் இருக்குண்ணேன்!
//mglrssr said...
மூதேவி, மாபாவி, பொ'று'க்கி அப்பிடியெ இந்த நாதாரி, கேப்மாரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி எக்ஸட்ரா.. எக்ஸட்ரா.. எலாத்துக்கும் சொல்லிட்டீங்கன்னா அங்கங்க யூஸ் பண்ணிக்கலாம்//
ஐயா சாமீ...மங்களூர் சிவா!
ஆளை விடுங்க! நான் வரல இந்த விளையாட்டுக்கு!
சங்கரதாஸ் சுவாமிகளையே கேளுங்க! இல்லீன்னா சென்னையில பிரபலமான சாமியாரு கிட்ட கேட்டா ஏதாச்சும் கெடைக்கும்! :-)
//மதுரையம்பதி said...
அவர் வெறும் உருப்பினர் இல்லை, எங்கள் தலைவர்....//
ஆகா...மன்னிச்சிகோங்க தல!
தல மெய்யாலுமே தல-ன்னு கேக்க படா சந்தோசமா கீதுப்பா! :-)
//அது சரி, என்ன மதுரைப் பக்கம் வர வேண்டாம்ன்னு முடிவா?.....நாங்க தேடி வந்து கவனிப்போம் தெரியுமா?.//
ஆகா...மெளலி சார்...இப்படி மிரட்டறீயளே! நான் அடிக்கடி மதுரைக்கு வர்ற பையனாச்சே! அடுத்த தபா மாறு வேடத்தில் வரணும் போல இருக்கே! :-))
//Tharuthalai said...
இப்படியே போனா தெருப்பொறுக்கி, கபோதி இதுக்கெல்லாம்கூட எழுத்துக்கு எழுத்து ஒரு சொல்லை தொடர்பு படுத்திடலாம்//
வாங்க ஐயா!
இது நாடகச் சுவைக்காக போட்ட பதிவுங்க ஐயா!
அம்புடு தான்!
வார்த்தைக்கு வார்த்தைக்கு விளையாடிக்கிட்டே போனா முடிவே இருக்காது! :-)))
நகைச்சுவையில் கூட யாரும் புண்பட்டு விடக் கூடாது என்று தான் மாண்புடையார் வாழும் மதுரைன்னு சிலப்பதிகாரம் சொல்லி முடிச்சேன்!
// குமரன் (Kumaran) said...
'தலை நகரா' என்று எழுதியது எழுத்துப்பிழை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)//
மீண்டும் நன்றி குமரன்!
தலை நகரா = சினை ஆகு பெயர்!
தலை = சிந்தனை
சிந்தனை கண்ட இடங்களுக்கும் நகர வொண்ணாது, திட சித்தமாய், தமிழக முன்னேற்றம் குறித்தே சிந்தனையாக இருக்கும் தருமமிகு Chennai-ites, என்று எவ்வளவு பொருத்தமாச் சொன்னீங்க :-))
//மங்களூர் சிவா. நீங்க கேட்டதுக்கு மட்டும் இல்லை. கஸ்மாலம் போன்ற சென்னைக்கே உரிய பொன்னான சொற்களுக்கும் இந்த தலைநகராக் கூட்டத்தின் தல விளக்கம் சொல்வார். :-)//
ஆகா..
சிவா..கஸ்மாலம்-ன்னு பகவத் கீதையில் வருதுங்க! அதான் சென்னை மக்கள் கண்ணன் வழி நடக்குறாங்க...சாரி பேசுறாங்க! :-))
//கீதா சாம்பசிவம் said...
@கண்ணன், முடிவு முதலிலேயே படிச்சுட்டேன், அதனாலே தப்பிச்சீங்க! :)))))))//
Dank U கீதாம்மா.
இல்லீன்னா பூரிக்கட்டை பறந்திருக்கும்-னு சொல்றீங்க! புரியுது, புரியுது!!
//@வல்லி, அது என்ன சந்தடி சாக்கிலே சிந்து பாடறீங்க? மதுரைக் காரங்க கோவம்னு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.,.,.,., :P//
ஆகா..இப்படி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பற்களைக் கடித்தால் அதுக்குப் பேரு கோவம் இல்லை, ராகம்!
அப்படித் தானே கீதாம்மா? :-))
//வல்லிசிம்ஹன் said...
vishayam ennannu theriyaRaththukkuLLa kobam mookku mela vanthudum.//
கரீட்டா புடிச்சாங்கப்பா பாயிண்டை, நம்ம வல்லியம்மா!
//adhukkaakak kuNam illainnu solla mudiyuma.
rendum ore idam thaan enRu sonnenpa.!//
இது உண்மை தான்! 100/100 உண்மை!
//தருமி said...
ஹும்.. மதுரகாரவுக சங்கரதாஸ் சுவாமிகள் சொன்னதைக் கேட்டு ஏமாந்து போய்ட்டதாக எழுதியுள்ளீர்கள். அதெல்லாம் இல்லை தெரியுமா?//
ஹிஹி...
மதுரைக்காரங்க ஏமாறுவாங்களா தருமி சார்? :-)
நான் அப்படி எழுதவில்லையே! சங்கரதாஸ் சுவாமிகள் நகைச்சுவை கொட்டி கலகலப்பாக்கியதைத் தானே எழுதியுள்ளேன்!
//அவரின் தமிழ்ப் புலமையையும், சமயோசித புத்திக் கூர்மையையும் பாராட்டும் முகத்தான் யாம் அந்த நாடகத்தைத் தொடர அனுமதித்தோம் என்பது உங்களுக்கு எங்கே புரியப் போகிறது ... அதுக்கெல்லாம் ஒரு "இது" வேணும்னேன் ...//
சூப்பரு!
அதுக்கெல்லாம் ஒரு "இது" இருப்பதால் தானே புரிந்து கொண்டு மதுரையப் போற்றிப் பாட்டு போட்டுள்ளோம்!
முத்தமிழால் வைதாலும் ஆங்கே வாழ வைக்கும் பரங்குன்றத்தான் இருக்கும் ஊர் அல்லவா?
அப்புறம் சார். ஒரு கேள்வி!
மாப்பிள்ளை வினாயகர் சோடா இப்பவும் இருக்கா? பன்னீர் சோடா ரொம்ப பிடிக்கும். வெயிலோ இல்லையோ...அந்த ஜோடா ஜோடா தேன்! :-)
கே.ஆர்.எஸ்,
அப்போ மூவேந்தர்களை முவ்வேந்தர் சொல்விங்களா?
இந்த கஸ்மாலம் எல்லாம் தமிழ் அல்ல , பாரசீகம் என கேள்வி , அது எப்படி கீதைல வந்ததது, ஒரு வேளை , சமஸ்கிருதம் , பாரசீகம் எல்லாம் ஒரு வகையில் தொடர்பு இருக்கும் போல.
சாப்பாடு தயார்னு ஹோட்டல் ல எல்லாம் எழுதி வைப்பாங்க , தயார் என்பதும் பாரசீகம் தான் , ஆயத்தம் என்பதே தமிழ், அதனால் தான் ஆயத்த ஆடையகம் என்ற்ய் ரெடி மேட் துணிக்கடைக்கு பேர் வச்சு இருப்பாங்க.
குங்குமம் கூட பாரசீகம் தான் அதுவே ஹிந்தியில் கும் கும்! தமிழில் சாந்து போட்டு என்று சொல்ல வேண்டும்!
//கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்//
இது.............
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
//மதுரையம்பதி said...
பட்டணத்துக்காரருக்கு 'இது' அப்படின்னா தெரியாது தருமியய்யா, நீங்க தெளிவாக்கிடறது நல்லது....//
இது..இது!!!!! :-)
//நம்ம தலை இஸ்துகினு, இந்தாமே, இதுக்கெல்லாமும் பழந்தமிழில் உ.ம் எடுத்துக் காட்டுவார் நமது 'நகராத் தல'. அப்படித்தானே கே.ஆர்.எஸ்?//
யப்பா சாமீ!
தல தல ன்னு தலையை உருட்டறாங்களேப்பு!
நகராத் தலையோ, நகரத் தலையோ
நமக்குத் தெரிஞ்சதெல்லாம்
கோளிற் பொறியில் குணமிலவே - எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை!
அம்புடு தேன்! :-))
//வவ்வால் said...
கே.ஆர்.எஸ்,
அப்போ மூவேந்தர்களை முவ்வேந்தர் சொல்விங்களா?//
வாங்க வவ்வால்!
சரியாப் புடிச்சீங்க!
மூன்று+வேந்தர் மட்டும் மூவேந்தர் ஆகுது போல! ஒரு வேளை வேந்தர் "வ" வுல தொடங்குது!
இடையினம். அதனால இருக்குமோ!
புணர்ச்சி விதி எக்ஸ்ப்ர்ட் யாராச்சும் சொல்லுங்கப்பா!
இடையினம்:
மூன்று+வேந்தர்=மூவேந்தர்
மூன்று+வழக்கு=மூவழக்கு
மெல்லினம்:
மூன்று + நகரம் = முன்னகரம்
மூன்று + மூர்த்தி = மும்மூர்த்தி
வல்லினம்:
மூன்று + தேவி = முத்தேவி
மூன்று + காலம் = முக்காலம்
மூன்று + கண்ணன் = முக்கண்ணன்
மூன்று + தமிழ் = முத்தமிழ்
//இந்த கஸ்மாலம் எல்லாம் தமிழ் அல்ல , பாரசீகம் என கேள்வி , அது எப்படி கீதைல வந்ததது, ஒரு வேளை , சமஸ்கிருதம் , பாரசீகம் எல்லாம் ஒரு வகையில் தொடர்பு இருக்கும் போல.//
ஹூம்!
கீதையில் வருவது கஸ்மாலம் இல்லீங்க! அது போல தொனிக்கும் ஒரு சொல்! அதச் சும்மா நம்ம மக்கள் எடுத்து விளையாடறாங்க! அவ்வளவு தான் வவ்வால்!
குதஸ்த்வா கஸ்மலம் இதம்?
...அகீர்த்தி கரம் அர்ஜூனா!
இந்த மோசமான குழப்பம் எங்கிருந்து வந்தது அர்ஜுனா உனக்கு?
இது தான் கீதையில் கண்ணன் சொல்லும் "கஸ்மலம்"
Not கஸ்மாலம்! :-)))
//துளசி கோபால் said...
//கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்//
இது............. //
தருமி சாரும் ஒரு "இது' சொன்னாரு!
நீங்களும் ஒரு "இது" சொல்றீங்க டீச்சர்! - ஆனா நீங்க சொன்னது தான் எனக்குப் பிடிச்சிருக்கு! :-))
மெளலி சார். கவனிச்சீங்களா டீச்சர் சொல்லுறத?
இது!!!:-))
//துளசி கோபால் said...
உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
//
நன்றி டீச்சர்!
தேசி பண்டிட்-ல மதுர மக்கள் யாராச்சும் இருக்காய்ங்களா? :-)
பொறுக்கி,மாபாவி, மூதேவி இப்படி எல்லாம் திட்டினா சந்தோசமா இனிமே போயிரலாம்.
//ILA(a)இளா said...
பொறுக்கி,மாபாவி,மூதேவி இப்படி எல்லாம் திட்டினா சந்தோசமா இனிமே போயிரலாம்//
எங்கே போயிரலாம், இளா?
அவிங்க திட்டினா நீங்க போயிரலாம்!
ஆனா நீங்க திட்டினா அவிங்களே அனுப்பி வைச்சிருவாங்க! :-)))
//கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்!//
கரிக்கட்டு...
நானும் பார்த்த வரைக்கும் மதுரை, திருநெல்வேலிக்காரவங்களுக்கு கோபம் சட்டுனு வந்துடும்.
ஆனா பாசக்கார பயலுவ. சூது வாதெல்லாம் தெரியாது. சென்னை பசங்ககிட்ட தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் ;)
ஆமாம்பூ...இந்த பதிவ படிக்க நேர்ந்ததால மாபாவி ஆகிட்டாங்க..மதுரக்காரய்ங்க..
அப்படியெல்லாம் பேச்ப்படாது..
உங்க சங்கம் கண்ட தங்க தலைவன தந்த ஊருய்யா அது...
//வெட்டிப்பயல் said...
கரிக்கட்டு...
நானும் பார்த்த வரைக்கும் மதுரை, திருநெல்வேலிக்காரவங்களுக்கு கோபம் சட்டுனு வந்துடும்//
ஹூம்; தெரியுது தெரியுது, யாரைச் சொல்லுறீங்கன்னு :-))
//சென்னை பசங்ககிட்ட தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் ;)//
ஹூம்; தெரியுது தெரியுது, யாரைச் சொல்லுறீங்கன்னு :-))
CVR, கேட்டுக்கோங்க!
//TBCD said...
ஆமாம்பூ...இந்த பதிவ படிக்க நேர்ந்ததால மாபாவி ஆகிட்டாங்க..மதுரக்காரய்ங்க..//
அதே அதே!
முப்பெருந் தேவியர் அருள் கிடைக்குதுன்னா சும்மாவாங்க TBCD!
ஆமா, நீங்க மருத இல்லியே! :-))
//அப்படியெல்லாம் பேச்ப்படாது..
உங்க சங்கம் கண்ட தங்க தலைவன தந்த ஊருய்யா அது...//
சங்கத் தொலைவன்...
சாரி தங்கத் தலைவன், இந்த ஒலகத்துக்கே சொந்தம்! ஒத்த ஊரில அவர பூட்டி வைக்க முடியாதாக்கும்! :-))
//மீண்டும் நன்றி குமரன்!
தலை நகரா = "சினை ஆகு பெயர்!"
தலை = சிந்தனை
சிந்தனை கண்ட இடங்களுக்கும் நகர வொண்ணாது, திட சித்தமாய், தமிழக முன்னேற்றம் குறித்தே சிந்தனையாக இருக்கும் தருமமிகு Chennai-ites, என்று எவ்வளவு பொருத்தமாச் சொன்னீங்க :-))
//
சினை ஆகுமா? அப்புறம் குட்டி போடுமா??
மங்களூர் சிவா.
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//வெட்டிப்பயல் said...
கரிக்கட்டு...
நானும் பார்த்த வரைக்கும் மதுரை, திருநெல்வேலிக்காரவங்களுக்கு கோபம் சட்டுனு வந்துடும்//
ஹூம்; தெரியுது தெரியுது, யாரைச் சொல்லுறீங்கன்னு :-))
//சென்னை பசங்ககிட்ட தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் ;)//
ஹூம்; தெரியுது தெரியுது, யாரைச் சொல்லுறீங்கன்னு :-))
CVR, கேட்டுக்கோங்க!
//
நான் பொதுவாத்தான் சொன்னேன் ;)
//வெட்டிப்பயல் said...
நான் பொதுவாத்தான் சொன்னேன் ;)//
எப்பவும் போல பொதுவா அவரைச் சொல்வது போலப் பொதுவாச் சொன்னீங்களா? சரி சரி! :-))
இணையத்தில் வீற்றிருக்கும் "மாபாவி"யருக்கு கண்ணபிரானின்
இந்த பதிவு சமர்ப்பணமாகுக...
என் கேள்விக்கு என்ன பதில்??
மங்களூர் சிவா.
//ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
இணையத்தில் வீற்றிருக்கும் "மாபாவி"யருக்கு கண்ணபிரானின்
இந்த பதிவு சமர்ப்பணமாகுக...//
புஷ்பலதா
மதுரைகாரங்க கையால எனக்கு அடி விழ வைக்கறதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா? :-)))))
//mglrssr said...
என் கேள்விக்கு என்ன பதில்??
மங்களூர் சிவா//
என்ன சிவா கேள்வி?
சினை ஆகுமா? குட்டி போடுமா?? -அதுவா? :-)
சினையாகு பெயர்னு தமிழ் இலக்கணத்துல இருக்குங்க.
தலை என்றால் தலையில் உள்ள சிந்தனை-ன்னு ஆகி வரும்னு சொல்லுவாய்ங்க. அதான்!
நீங்க சொல்ற சினை...
அடப் போங்க! தமாஷ் பண்ணாதீங்க! :-))))
ரவி!
சும்மா அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல.. நான் தான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்... எல்லா பதிவையும் படிச்சுட்டேன்.. சும்மா கதறத அடிச்சுட்டீங்க....
அமர்க்களம்..... ஆராவாரம்.... அட்டாகாசம்... அம்புட்டு தான்...
//நாகை சிவா said...
ரவி!
சும்மா அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க போல.. //
அப்படி எல்லாம் இல்லீங்கண்ண்ண்ணா
நம்பள தான் அடிச்சி ஆடிக்கிட்டு இருகாய்ங்க! :-)
//நான் தான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்... //
புலி லேட்டா வந்தாலும் புல்லோட தான் வரும்! ஐ மீன் ஃஃபுல் பார்மோடு தான் வரும்! :-))
//அமர்க்களம்..... ஆராவாரம்.... அட்டாகாசம்... அம்புட்டு தான்//
நன்றி நன்றி நன்றி நன்றி! :-)
சற்றுமுன் கிடைத்த தகவலின் படி....திருவாளர் கண்ணபிரான் ரவிசங்கரர் தனது நண்பருக்குத் தொலைபேசி செய்து....பாத்தியா மதுரைக்காரங்களத் திட்டீட்டேன்...அது தெரியாம..ஏதோ பாராட்டுனதா நெனச்சுக்கிட்டிருக்காங்க. இதுல சங்கரதாஸ் சாமியையும் இழுத்துட்டதால....மதுரைக்காரனை எவ்வளவு வேணும்னாலும் மாபாவீன்னு சொல்லித் திட்டலாம். கேட்டா வெளக்கம் சொல்லிக்கலாம்...இப்பிடிச் சொல்லி வில்லன் வீரப்பா+நம்பியார்+அசோகன் எல்லாம் கலந்து சிரிச்சாராம். கேட்ட நண்பரை இன்னமும் காணலை.
// G.Ragavan said...
கேட்ட நண்பரை இன்னமும் காணலை.//
அந்த நண்பர் யார் என்றால்:
மயிலுக்குத் தோழர்!
மாதவனை விட நல்லாத் தமிழ் பேசுவார்! :-)))
//இப்பிடிச் சொல்லி வில்லன் வீரப்பா+நம்பியார்+அசோகன் எல்லாம் கலந்து சிரிச்சாராம்//
எம்.ஆர்.ராதா அண்ணன் போலவும், மற்றும் பிரகாஷ் ராஜ் போலவும்
சிரிச்சதை நண்பர் ஏனோ குறிப்பிட மறந்து விட்டாரே! ராதாவைப் பிடிக்காதோ? :-))
//இதுல சங்கரதாஸ் சாமியையும் இழுத்துட்டதால....மதுரைக்காரனை எவ்வளவு வேணும்னாலும்//
சங்கரா சங்கரா!
மதுரை தான் எனக்குப் பிடிச்ச ஊரு!
மல்லி தான் எனக்கு பிடிச்ச ஃப்ளவரு!
இதை நாடும் நகரமும் நன்கறியும்!
அண்ணன் ஜிராவும் அறிவார்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
கேட்ட நண்பரை இன்னமும் காணலை.//
அந்த நண்பர் யார் என்றால்:
மயிலுக்குத் தோழர்!
மாதவனை விட நல்லாத் தமிழ் பேசுவார்! :-))) //
மாதவன விட நல்லாத் தமிழ் பேசுவார்னா...சூர்யாவவிட மோசமாப் பேசுவாரா? இப்பிடியா ஒங்க நண்பரோட தமிழறிவைக் கிண்டலடிக்கிறது. அவர் ஒங்களுக்கு நண்பர். ஆனா நீங்க அவருக்கு எதிரி போலத் தெரியுது!
////இப்பிடிச் சொல்லி வில்லன் வீரப்பா+நம்பியார்+அசோகன் எல்லாம் கலந்து சிரிச்சாராம்//
எம்.ஆர்.ராதா அண்ணன் போலவும், மற்றும் பிரகாஷ் ராஜ் போலவும்
சிரிச்சதை நண்பர் ஏனோ குறிப்பிட மறந்து விட்டாரே! ராதாவைப் பிடிக்காதோ? :-)) //
ராதா அளவுக்குச் சிரிக்க ஒங்களுக்கு முடியாதுன்னு அவருக்கு நல்லாத் தெரியுமாம்.
////இதுல சங்கரதாஸ் சாமியையும் இழுத்துட்டதால....மதுரைக்காரனை எவ்வளவு வேணும்னாலும்//
சங்கரா சங்கரா!
மதுரை தான் எனக்குப் பிடிச்ச ஊரு!
மல்லி தான் எனக்கு பிடிச்ச ஃப்ளவரு!
இதை நாடும் நகரமும் நன்கறியும்!
அண்ணன் ஜிராவும் அறிவார்! //
மக்களே...நல்லாக் கேட்டுக்கோங்க...நன்கறியும்னா என்ன? நன்கு அறியும்னா நெனைக்கிறீங்க. அதுதான் இல்ல. ரவி என்ன சொல்றாருன்னா...நக-ரம்மும் நான் கறியும் அப்படீங்குறத அப்படி இலை மறை காய்மறையாச் சொல்றது..இந்த மறை வேலையெல்லாம் நல்லாத் தெரிஞ்சவர்தான் ரவி.
Post a Comment