'நாம ரெண்டு பேரும் செத்துச் செத்து வெளாடலாமா" என்று பாசத்தோட கூப்பிட்டு என்னைய கதிகலங்கச் செய்யும் பாசத்தின் பிறப்பிடம், சங்கத்தின் உண்மைத் தொண்டன் - "கை" என்று அனைவராலும் அழைக்கப்படும் தேவ் ஆறு வருசம் லீவு சொல்லிட்டு திடீர்னு மாயமா மறைஞ்சு போனது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். ஆனா காணாமப் போனவரு எங்கே போனாரு என்ன ஆனாருன்னு யாராச்சும் நெனச்சுப் பாத்தீங்களாய்யா? அந்தப் பாசப்பிழம்பை நீங்கல்லாம் இம்புட்டு சீக்கிரம் மறந்திட்டீங்கன்னு நெனக்கும் போது தான் மேல்(Male இல்ல) எல்லாம் கொதிக்குதுய்யா.
இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்க. எம்புட்டுத் தான் தல தெருத் தெருவாத் திரிஞ்சு ஆப்பு வாங்கினாலும் ஒரு மனுசன் இல்லறத்துல வாங்குற "ஆப்பு" மாதிரி வராதுன்னு அனுபவத்துல பட்டு பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட தேவ் ஒரு மெகா ஆப்புக்கு மெகா ப்ளான் போட்டாப்புல. தலக்கு இல்லறத்துல ஆப்பு வாங்க வைக்க என்ன பண்ணலாம்னு பயங்கரமா யோசிச்சதுல கட்டத்துரை பார்த்திபன் சதியால கெழக்காப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போன தன்னோட உடன்பிறவா அண்ணி "கைப்பொண்ணு"வைத் திரும்ப சங்கத்து ஹெட்குவார்ட்டர்ஸ்க்கு கூட்டியாறது தான் இதுக்குச் சரியானத் தீர்வுன்னு முடிவுசெஞ்சாப்புல. ஆறு வருசம் லீவுன்னு ஒரு மெகா பீலாவை அவுத்துவிட்டுப் புட்டு சங்கத்து ஆளுங்களுக்கும் டன் கணக்குல அல்வாவைக் குடுத்துப்புட்டு யாருக்கும் தெரியாம "கைப்பொண்ணோட பொறந்த வீடான கெழக்காபிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்குக் ராவோட ராவாக் கெளம்பிட்டாப்புல.
அங்கே போனா பட்டித் தொட்டியெல்லாம் கைப்பொண்ணு பேரு தானாம். அவுங்க நாட்டுலேயே கைப்பொண்ணு தான் செவத்தப்புள்ளங்கிறதால லோரியல் ஹேர் க்ரீம், லாங்கைன்ஸ் கைகடியாரம், கோகா கோலா இப்படின்னு இந்தியாவுல 'அக்கா ஐஸ்" வர்ற வெளம்புரத்துக்கெல்லாம் புக் ஆயிட்டாங்கப் போல. எங்கே பாத்தாலும் கைப்பொண்ணோட போஸ்டரும் பேனரும் தானாம். ஏற்கனவே 'மிஸ் கெலக்காப்பிரிக்கா'வா வேற தேர்ந்தெடுக்கப்பட்டுட்டாங்களாம். அடுத்ததா 'மிஸ் ஆப்பிரிக்கா' பட்டம் வாங்க பூனை நடை பழகிட்டு இருக்கும் போது தான் நம்ம தேவ் கைப்பொண்ணைப் பாத்துருக்காப்புல. "கண்டேன் கைப்புவை ஆப்பினுக் கணியாய்" அப்படின்னு கைப்பொண்ணுக் கிட்ட 'சொல்லின் செல்வர்' ஸ்டைல்ல சொல்லப் போன தேவைக் கைப்பொண்ணோட சித்தாப்புக்களல ஒருத்தரு பாத்துட்டாப்புல. பார்த்துட்டு சும்மா போயிருந்தா பரவால்லியே...அதுக்கப்புறம் நடந்ததை நெனச்சா தான் மறுபடியும் மேல் எல்லாம் பதறுது. எங்க நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தர்ற எங்க "குடும்பத்து குலவிளக்கு" கைப்பொண்ணைக் கூட்டிட்டு போகவாடா வந்திருக்கே?"ன்னு ஒரு நாலு நாளு கட்டி வச்சி பேக்சைட்ல கழுதைப்புலியை வச்சி கடிக்க வச்சிருக்கானுங்க. அம்புட்டு வலியிலயும் 'கை'க்கு சங்கத்து நெனப்பு தானாம்...ஐயோ தல இப்ப ஆப்பு இல்லாம் தவிச்சிட்டிருக்குமேன்னு ரொம்ப தவிச்சிப் போயிட்டாப்புலயாம். எப்படியோ அங்கேருந்து தப்பிச்சி யார் யார் கையைக் காலையெல்லாமோ புடிச்சி ஒரு வழியா எதோ ஒரு கடலோரப் பிரதேசத்துக்கு தேவ் வந்து சேர்ந்திருக்காப்புல.
எறங்குன எடத்துல கழுதைப்புலி கடிக்கு எச்சியைத் தொட்டுத் தொட்டு ஒத்தடம் குடுத்துக்கிட்டே மெல்ல நடந்து வந்தா சங்கத்து கீதமான "ஒன்றா ரெண்டா ஆப்புகள், எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா"ங்கிற பாட்டை யாரோ ரெண்டு கட்டையில பாடுறதைக் கேட்டுருக்காப்புல. ஆஹா...நம்ம சங்கத்து சிங்கங்கள்ல யாரோ ஒருத்தரு இங்கே பக்கத்துல இருக்காருன்னு நம்ம தேவ் புரிஞ்சிக்கிட்டாப்புல. கட் பண்ணா அங்கேருந்து ஒரு நாலு கல்லு தூரத்துல நம்ம வெவசாயி இளா 'கஜா கா தோஸ்த்'னு சொல்லி கள்ளத் தோணியில ஏறி கதாருக்குப் பதிலா கேரளால எறங்கி அங்கே வேஷ்டி கட்டுன அம்மணிங்களை லுக் விட்டுக்கிட்டே சங்க நாதத்தை மொழங்குன படியே போயிட்டிருக்காப்புல. மறுபடியும் கட் பண்ணா தேவ் சரி நாமும் சங்கத்துப் பாட்டைப் பாடினா அங்கிட்டுப் பாடுற சிங்கம் யார்னு கண்டுபிடிச்சிரலாம்னு இவரும் ஒரு நாலு கட்டையிலே பாட ஆரம்பிக்கிறாரு. அப்படியே வெவசாயி பாட, தேவ் பாட இப்படின்னு ரெண்டு பேரும் பக்கத்துல வந்து அண்ணா தம்பின்னு கட்டிப் பிடிச்சிக்கிறாங்க. தேவைக் கண்டுபிடிச்சாச்சு அடுத்த பஸ்ஸைப் புடிச்சு சீக்கிரம் விதவுட்ல வந்துடுறோம்னு நம்ம வெவசாயி நேத்து டிரங் கால் போட்டு சொன்ன சேதி தான் மேலே?
மக்களே! அப்பு வைப்பதே ஒன்றே தன் கடமை என்று எண்ணும் தேவ் தலக்காக முதல் முறையாகக் கழுதைப்புலியிடம் கடி வாங்கியுள்ளார். அந்த கடிக்கு அருமருந்தாய் கை தேவிடம் நீங்கள் சொல்லும் ஆறுதல்கள் அமைய வேண்டும் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
"தலக்காக கழுதைப்புலி கிட்ட கடி வாங்கினியாடா...'கை' செல்லம்? ரொம்ப வலிக்குதாடா? இனிமே நீ இந்த இல்லறம் இல்லாத அறம்னு இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண அப்புறம் என்னை மனுசனாவே பாக்கமுடியாது. எனக்கு நீங்க தாண்டா கண்ணுங்களா முக்கியம். அதை புரிஞ்சி நடந்துக்கங்க. இந்த சேதியை நேத்து நைட்டு கேட்டதுலேருந்து ரெண்டு ஃபுல் மீல்ஸ் ரெண்டு குவார்ட்டரு இதைத் தவிர அன்னந்தண்ணி எறங்கலைய்யா..எறங்கலைய்யா"
33 comments:
இவ்வளவு நடந்திருக்கிறது....எப்படி உங்களால் பதறாமல் பதிவிடமுடிகிறது??
செப்டிக் எல்லாம் ஒண்ணும் ஆகவில்லையே!!?
வாங்க எஸ்.கே உங்கப் ஆறுதலுக்கு நன்றி. இம்புட்டு பேரு சங்கத்துல்ல இருந்தும் சங்கம் சாராத நீஙக் தான் பாசத்தோட வந்து முதல் வார்த்தைச் சொல்லியிருக்கீங்க,,,, உங்கப் பதிவுல்ல இது வரைக்கும் நான் ஒத்தப் பின்னூட்டம் கூடப் போட்டது இல்ல இருந்தும் நீங்க எனக்கு ஆறுதல் சொல்லியிருக்கீங்க்... நீங்க எங்கேயோப் போயிட்டீங்க.... என் உயிர் இருக்கும் வரை இந்தப் பாச மொழிகளை நான் மற்க்க மாட்டேன் எஸ்.கே...ஆமா மெய்யாலுமா மற்க்க மாட்டேன்
ஆழ்ந்த வருத்ததைத் தெரிவிக்கின்றேன்
ஆமா! அந்த கழுதைக்கு என்னாச்சு?
உயிரோட இருக்கா?
பெல்பாட்டம் முதலாளி கைப்புவுக்காக கைப்பொண்னுவை தேடப்போயி கடிவாங்கிவந்து நிக்கறீங்க...காக்கா கறி துன்னா காயம் எல்லாம் பறந்தோடிடும் அப்படின்னு கைப்பு சங்கத்துக்கு பக்கத்தில் டீகடை வச்சிருக்க சார்லி சொன்னான்..அவன் சங்கத்து ஆளு இல்லைன்னாலும் நல்ல விஷயம் யாராவது சொன்னா தலை கைப்பு சொல்லுறமாதிரி 'இது வாலிப வயசு' அப்படின்னு தள்ளிவிடாம கேட்டுக்கனும் சரியா...
வாங்க ரவி,
நீங்களும் பாசக்காரராத் தான் தெரியறீங்க... சங்கத்துப் பக்கம் சார்லியா? ஏலேய் பாண்டி அது ஆர்டா சார்லி... அவன் கிட்டே எதோ மருந்து இருக்காம் கேட்டு வாங்கி வைடா....
காக்கா கறி மேட்டர் சொல்லுறீங்களே நீங்க கருத்து கந்தசாமி மச்சானா... சங்கத்துக்கு வாங்க...
சங்கத்துல்ல மக்கள் தொடர்பாளர் பதவி காலியாத் தான் இருக்கு..உங்களுக்கு ஓ.கேவா?
//என் உயிர் இருக்கும் வரை இந்தப் பாச மொழிகளை நான் மற்க்க மாட்டேன் எஸ்.கே...ஆமா மெய்யாலுமா மற்க்க மாட்டேன் //
தேவ், நீ பாட்டுக்கு வழி கொடுமையில் அவரை உசுப்பேத்தி விடாத. அவரு அப்புறம் சங்கத்துல கவிதை மழையை பொழிய ஆரம்பித்து விடுவாரு. அந்த கொடுமைக்கும் கழுதை புலி கடி எவ்வளவோ மேல்.
//எப்படி உங்களால் பதறாமல் பதிவிடமுடிகிறது??//
நாங்க என்னைக்கு எதற்கு பதறி இருக்கோம். இத விட ரணகளம் எல்லாம் நடந்து இருக்கு. இது சும்மா ஜுஜிபி மேட்டரு........
//செப்டிக் எல்லாம் ஒண்ணும் ஆகவில்லையே!!? //
நீங்க வைத்தியரு. வந்து கொஞ்சம் பாத்து சொல்லுங்க. அப்புறம் நம்ம தேவுக்கு கார சட்னி பிடிக்காது. வேற மாற்று மருந்து இருந்தா சொல்லுங்க....
நீங்க என் நம் சங்கத்தின் நிரந்திர வைத்தியர் பதவியை எடுத்துக் கொள்ளக் கூடாது.
//நீங்க கருத்து கந்தசாமி மச்சானா... சங்கத்துக்கு வாங்க...//
வாணாம் தேவ், நமக்கு எப்பவுமே கருத்து கந்தசாமி சகவாசம் ஆகாது. அவன் ஷீவை துடைத்து நம்ம தல முஞ்சியில் வைத்தவன். நம்ம தல கஷ்டப்பட்டு ஆங்கிலம் எல்லாம் பேசி, "Sing in the Rain, I want more in the Rain"னு பாட்டு எல்லாம் பாடி Correct பண்ணின பிகர கை இல்லாத மாதிரி வேஷம் போட்டு களவாடிய களவாணி.அந்த பொண்ணு அப்பவே நம்ம தலக்கு கிடைத்து இருந்தால் கைம்பொண்ணு Characterரே வந்து இருக்காது. நீயும் கழதை புலியால் பின்னால் புண்பட்டு வேண்டி இருந்துக்காது. அவன் சக்காத்தம் நமக்கு வேணாம் வேணாம். அம்புட்டு தான் சொல்லுவேன். ரவி கந்தசாமியை கடாசி விட்டு கைப்பூவின் புகழை பரப்புவத இருந்தால் வாங்க...
ஆஹா தேவண்ணா சங்கப்பணிகள் 'முன்னால்' அழைத்தாலும் கழுதப்புலி 'பின்னால்' கடித்ததை அறியாமல் இருந்துவிட்டேனே !!
'தல'காக கழுதப்புலியென்ன நிஜப்புலி கடித்தாலும் பின்வாங்குவோமா என்ன??
கடிக்கெல்லாம் காக்கா கறி ஆகாதுண்ணா ! மொளகு போட்ட
கொளதாரி சூப்பும் வெடக்கோழி வருவலும் நான் வாங்கியாறேன்.அப்படியே பாங்கா இருங்க என்னா??
//"ஒன்றா ரெண்டா ஆப்புகள், எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா"ங்கிற பாட்டை யாரோ ரெண்டு கட்டையில பாடுறதைக் கேட்டுருக்காப்புல. //
'தல' நம்ம சங்கத்து தேசியகீதத்தை இப்படிம பகிரங்கப்படுத்தீட்டியளே !
//இந்த சேதியை நேத்து நைட்டு கேட்டதுலேருந்து ரெண்டு ஃபுல் மீல்ஸ் ரெண்டு குவார்ட்டரு இதைத் தவிர அன்னந்தண்ணி எறங்கலைய்யா..எறங்கலைய்யா"//
'தல' நீங்களே இப்படி விரதம் இருந்தா அடிமட்ட தொண்டன் நான் சும்மா இருக்கலாமா ?? இப்போவே போயி ரெண்டு ஃபுல்லோட என் விரதத்தை ஆரம்பிக்கிறேன். தேவண்ணா பச்சத்தண்ணி பல்லுல படாது ! கவலைய விடுங்க புண்ணாவது புண்ணாக்காவது என் விரதம் இருக்கு கொணப்படுத்த !:))
கழுதப் புலிக்கு என்ன ஆச்சு? அதையுஞ் சொல்லுங்க.
//செப்டிக் எல்லாம் ஒண்ணும் ஆகவில்லையே!!?//
யாருக்குன்னு கேக்கவே இல்லையே? ஆனா கழுதைப்புலி உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லன்னு கேள்வி.
//ஆமா! அந்த கழுதைக்கு என்னாச்சு?
உயிரோட இருக்கா?//
சிவஞானம்ஜி! என்னங்க நீங்க? அருமருந்து போட சொன்னா இப்படி படார்னு அருவாமனை போட்டுட்டீங்க? தேவ் மனசு எப்படி வேதனை படும்னு கொஞ்சம் நெனச்சு பாருங்க. அவன் என்ன பேக்சைடுல தினத்தந்தி பேப்பரா ஒட்டி வச்சிருக்கான் கழுதை வந்து கடிக்க? கடிச்சது ஒரு பயங்கரமான கழுதைப்புலிங்க.
தேஏஏஏஏஏஏவ்...
வார்த்தையே வரலைய்யா.. தலைக்காக நீ இத்தனை பாடு படும்போது...
இன்னிலேர்ந்து ரெண்டு பிட்சா, நாலு பர்கர், அஞ்சு ஹாட் டாக் தவிர, நான் எதுவுமே சாப்டாம உண்ணாவிரதம் இருக்கிறதுன்னு.. இதோ.. இதோ.. இப்போ சொல்லிகிறேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சங்கத்தின் இளம் சிங்கம், நம்ம கைப்புவின் இணை பிரியாத் தோழராக இருந்து விட்டு அவர் துணையைத் தேடச் சென்று, வென்று வந்த தங்கத் தமிழன், தம்பி "தேவ்" அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்திச் சங்கத்தின் சார்பில் மருத்து உதவி செய்யப்படும்.
ஓஹோ. இப்படி ஒரு விவகாரம் இருப்பதால்தான் நான் உன்னை கோவா கடற்கரையில் அரை நிஜாரோட சுத்திக்கிட்டு இருந்ததை பார்த்ததை யார் கிட்டயும் சொல்ல வேண்டாமுன்னு சத்தியம் வாங்கிகிட்டையா.
என்னா பில்டப்பூ. என்னா பில்டப்பூ. நல்லா இருங்கடா சாமிகளா.
ஆமா இம்புட்டு நடந்துருக்குது தளபதியை கானோம் , தலை(வலி)வியை கானோம்,சங்கத்தை கூட்ல விருந்து வைக்கல, :)
என்னய்யா பண்னுறீங்க நிங்க.
பாராட்டு கழுதைப்புலிக்கு, அதை எழுத மறந்துட்டேனே அதான்.
சங்கத்துல இத்துன சிங்கங்கள் இருக்கும் போது ஒரு கழுதைபுலி கடிச்சுடிச்சே !!
கெளம்பு தல கழுதைபுலியை வேட்டையாடிவோம் இல்லயேல் கடிவாங்கிடுவோம்....
::))
//கழுதப் புலிக்கு என்ன ஆச்சு? அதையுஞ் சொல்லுங்க.//
வாங்க ராகவன்!
கழுதப்புலி நல்லாருக்குன்னு தான் கேள்வி. ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க...நல்லாருக்கீங்களா?
இத்தனை பேர் கழுதைப்புலி நலனைப் பத்தி அக்கறையா விசாரிக்கும் போது அதப் பத்தி தெரிஞ்சு சொல்ல வேண்டியது நம்ம தலையாய கடமை. ஒற்றர்படை தலைவர் நன்மனம் அவர்களை இது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஊர்காரங்களை எல்லாம் கள்ளிப்பால் ஊத்தி கொல்லுவேன் அப்படின்னு சொல்லிப்புட்டு கைப்பு கிட்ட வாங்கி கட்டிக்கிட்ட பயதான்...
அவன் கடையில தான் ஒருநாள் கைப்பு சும்மா பில்டப் கொடுக்குரேன்னு ஒத்த ஸ்டூல்ல உக்காந்து மோடா மொட்தமா சாய்ஞ்சுட்டாரெ ஞியாபகம் இல்லையா...(தலை மூஞ்சியில அவன் சாக்கடை தண்ணிய வேற ஊத்திட்டான்..அது வேற கதை விடுங்க)
சங்கத்துல மக்கள் தொடர்பா...கலக்கிரலாம்..பட்டம் பதவி எல்லாம் ஆகாதுன்னு சோசியர் சொல்லிப்புட்டாலும் "என் சங்கத்து பதவிய ஏத்துக்காதவன் எவன்?" அப்படின்னு கைப்பு மூனுசக்கர வண்டியில கிளம்பிர போறாரு !!!
கட்டங்கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிட்டு அப்பீட்டு ஆகிக்கறென்...தமிழ்நாடு பூரா எந்த வண்டியில ஏறுனாலும் கம்பிய புடிக்காம நிக்கிற நம்ம கைப்பு அவுத்து உட்ட மேட்டர்தான்...
தனியா போனா தகறாறு...தண்ணியோட போனா அது வரலாறு...
வர்ட்ட்டாடாடா...அவ்வ்வ்வ்வ்
நம்ம பதிவுல வந்து அருமைன்னு சொல்ல வேண்டியது;
இங்கெ வந்து கொடுமைங்கறீங்க!
நாகை.சிவா., நியாயமா இது?
:))
வாங்க எஸ்.கே சங்கத்தின் அவை முன்னவர் பதவி உங்களுக்கு தான்... அந்தப் பதவியை உங்களுக்கு வாங்கி தர உயிரையும் கொடுப்பேன்... பாசமிகு பங்காளி நீங்க தான்
தல சீக்கிரம் வந்து இந்த இரண்டு ஆபர் லெட்டர்ல்ல உன் கைநாட்டை வச்சிட்டுப் போ
செந்தழல் ரவி நம்ம சங்கத்துக்கு மக்கள் தொடர்பாளர்.
செந்தமிழ் நாவலர் எஸ்.கே வ்ரு.வா.சவின் அவை முன்னவர்.
வாங்க எஸ்.கே. அது வேறு. இது வேறு. சங்கத்துல சங்க பணியை சரியாக ஆற்ற வேண்டுமா இல்லையா.
நீங்க தான் அவை முன்னவரா? நம்ம தேவ் எப்பவுமே செம விபரம். இப்ப கூட பாருங்க... உங்களை அவை முன்னவரா இருக்க சொல்லி இருக்காரு. வர வர சங்கத்தில மருத்துவ செலவின் பட்ஜெட் அதிமாகிட்டே போகுது. அவை முன்னவரே ஒரு மருத்தவரா இருந்துட்டா. அவரே முன்னாடி இருந்து அடி வாங்கிட்டு அவரே அதுக்கு வைத்தியமுன் பாத்துப்பாரு.... சூப்பரு தேவ்......
ஏம்பா தேவ் தல கைநாட்டு என்பதை இப்படி பப்ளிக்குல போட்டு உடைச்சிட்டியே ??
தல இத இப்படியே உட்டா சரியா வராது சொல்லிபுட்டேன் ஆமா ......
(கழுதைபுலி கடிச்சதில தப்பே இல்ல என்ன பின்னாடி கடிச்சிருக்க கூடாதுல?? ::))) )
டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனிங்களா? அட கழுதப்புலியை சொன்னேபா..
ஏம்ப்பு
ஒரு சிகர்த்தண்டா வாங்கி சால்னா போட்டு குடிச்சுப் பாக்கறது?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
(துக்கத்துல வார்த்தயே வரலீங்கண்ணா..)
////ஆமா! அந்த கழுதைக்கு என்னாச்சு?
உயிரோட இருக்கா?//
//
முருகேஷா நான் கேட்டேனா??
பட்டம் பதவியை பட்டுனு கொடுத்துட்டு கை கிளம்பிட்டாரு...எனக்கு படபடன்னு வருது....ஒரு வாழ்த்து அறிக்கையோட கிளம்பி வர்ரேன்...
அதுக்கு முன்னாடி கைப்பு புகழ் பாடும் ஒரு நியீஸ எடுத்து விட்டுட்டு போறேன்..
தமிழ்நாடு பூரா எந்த பஸ்ல போனாலும் கம்பிய புடிக்காம போகும் நம்ம கைப்பு, இப்ப புதுசா ஒரு சாதனை முயற்ச்சி பன்னிக்கிட்டு இருக்கு..
அது என்னான்னா, உலகம்பூரா எந்த ப்ளேன்ல போனாலும் சீட் பெல்ட்டு போடுறதில்ல்லைன்னு கொள்கை முடிவு எடுத்து இருக்கு...(பிளேன்ல டிக்கட் வாங்காம போகலாம்னு சங்க விரோதி பார்த்தி ஏமாத்தினதுக்கு அப்புறம்)
இப்போதைக்கு ஜூட்டு விட்டுக்கறேன்...
சங்கம் வாழ்க...வருங்கால சனாதிபதி சங்க தலை கைப்பு புகழ் ஓங்குக..
//ஏம்ப்பு
ஒரு சிகர்த்தண்டா வாங்கி சால்னா போட்டு குடிச்சுப் பாக்கறது?//
வாங்க எஸ்.பி.பி. சுந்தர்,
நம்ம சங்கத்துப் பக்கம் மொத முறையா வந்திருக்கீங்கன்னு நெனக்கிறேன். தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
யப்பா தேவு, சார் ஆல் இன் ஆல் அழகுராஜா பாணியில கழுதைப்புலி கடிக்கு வைத்தியம் சொல்லிருக்காரு பாரு...சீக்கிரம் செஞ்சு பாரு.
:)
Post a Comment