Monday, June 5, 2006

சங்கம் சாராத பதிவர்களுக்கு ஒரு மடல்

நண்பர்களே..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கத்தை ஆரம்பித்து இத்துடன் 30 பதிவுகள் ஆகி விட்டன. முதல் பதிவு ஆரம்பித்தது ஏப்ரல் 2006 இறுதியில்.

சங்கத்தின் கொள்கை என்று நாங்கள் சொன்னது கைப்புவைக் கலாய்த்தல் என்பது தான் என்றாலும், கைப்புவைத் தவிர, எங்கள் சங்கத்தில் சேரும் எல்லாரையும் கலாய்ப்பது எங்களின் பொழுதுபோக்காகிவிட்டது.

தமிழகத் தேர்தல் நேரத்தில் ஆரம்பித்த சங்கமாதலால், ஆரம்பத்தில் பல்வேறு தேர்தல் கால கேலிக் கூத்துகளைக் கிண்டல் செய்து தான் எங்கள் செயல்பாடுகள் இருந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக சில தமிழ் சினிமா ஸ்டன்டுகளையும் கிண்டல் செய்தோம். இப்போது உதைபந்து விதிகளைக் கலாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இதுவரை எங்கள் பதிவுகள் யாரையும் மனதறிந்து கேலி செய்பவை அல்ல. ஏதேனும் மறைமுக கிண்டலையோ பதிவுலக அரசியல் உள்குத்துகளோ இல்லாத பதிவுகளாகத் தான் அவை இருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மிகத் தீவிரமாக எழுதும், எழுதுவதை வாழ்க்கைக் கடமையாகக் கருதி எழுதும் யாரும் பொதுவாக எங்கள் சங்கத்துப் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் சும்மா எட்டிப் பார்ப்பதோடு சரி.

இந்த சுய விளக்கம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு:

இந்தப் பதிவின் ஒரே நோக்கம், எங்களைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது தான்.

எங்கள் பதிவுகள் நகைச்சுவையைத் தாண்டி வேறு யாரையேனும்/ எதையேனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கேலி செய்வதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனவா?

பதிவுகள் அளவுக்கு மீறிய நையாண்டியாக இருக்கின்றனவா?

வ.வா.சங்கத்தினரைத் தவிர்த்து மற்றவர்களின் பதிலை மட்டும் இதற்கு எதிர்பார்க்கிறோம். உங்கள் பின்னூட்டங்கள் எங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள உதவும்.

இந்தக் கேள்விகள் எழும்பக் காரணமான அனானிக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

56 comments:

அருள் குமார் said...

உண்மையிலேயே, பலப்பல சீரியஸான சண்டைகளையேல்லாம் கொண்ட இந்த தமிழ்மணத்தில், வ. வா. சங்கத்தின் பணிகள் மிக ரசிக்கத்தக்க வகையிலும், இதமானதுமாகத்தான் இருக்கிறது. தயவு செய்து நீங்களும் அரசியலில் இரங்கிவிடாமல், அப்படி உங்களை அரசியலுக்கு இழுக்கும் பின்னூட்டங்களை அலட்சியப்படுத்திவிட்டு சங்கப்பணிகளை செவ்வனே தொடருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

எல்லாம் சேர்ந்த கலவை தானே வாழ்கை,வெறும் சாம்பார் போட்டே சாப்புடுவாரா கூட கூட்டு,பொறியல் எல்லாம் வேணாமா? இதுல என்ன தப்பு இதுக்கென்று தனியா பதிவு போட்டு விளக்கம் ,கருத்து கணிப்பெல்லாம் போட்டுகிட்டு! நகைச்சுவை உணர்வு அனானிக்கு கம்மியா இருக்கும் போல விட்டு தள்ளுங்க!இதுக்கெல்லாம் உணர்சிவசப்படலாமா?

Anonymous said...

இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு.. தன் பெயரை கூறக்கூட தைரியம் இல்லாத அனானியின் சொல்லுக்கா மதிப்பு கொடுப்பது. உங்கள் பணி தொடரட்டும்.

க்ரிஷ்

Udhayakumar said...

உங்களையெல்லாம் யாரு சீரியஸா எடுத்துட்டா??? ஏப்பா, வடிவேலு பேசரதை எல்லாம் M.G.R பேசர மாதிரி நினைச்சா பொழப்பு சிரிப்பா சிரிக்காது...

வ.வா.ச. முதலில் ஆரம்பித்தது பிரபு. படம்: கன்னி ராசி. அதனால் இதை நான் காமெடியாத்தான் நினைக்கிறேன். ஆனால், பாதிக்கப்பட்ட பார்ட்டி மன்னிப்பு கடிதம் கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டும் என்பதும் என் கருத்து...

துபாய் ராஜா said...

பொன்சின் கருத்துகளை நானும் வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

வ.வா.சங்கத்தினரைத் தவிர்த்து மற்றவர்களின் பதிலை மட்டும் இதற்கு எதிர்பார்க்கிறோம் என்று பொன்சு கூறியிருந்தபோதும்,
ஆரம்பத்தில் அனானியாக வந்து பின்
சங்கத்தில் சங்கமமனவன் என்ற முறையில் இங்கு நானும் கருத்து கூற
கடமைப்பட்டுள்ளேன்.

//மகேஸ் ஏற்கனவே சென்ற பதிவில் கூறியதுபோல்,எல்லாரோலும், எந்தநேரமும் சர்ச்சைக்குரிய பதிவுகளையே படித்துக்
கொண்டும் விவாதித்தித்துக் கொண்டும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் விரைவில் மனஅழுத்த நோயால் பாதிக்கப்பட்டு விடுவோம். நகைச்சுவை நிகழ்சிகளும்,
வலைப் பதிவுகளும் நம்மைப் புத்துணர்ச்சியாக்குகின்றன. ஒருபக்கம் அலுவலகப் பணிச்சுமை, மறுபக்கம் நீங்கள் சொல்வதைப்போன்ற பிரச்சினைகளை விவாதிக்கின்ற
பதிவுகள், மனிதன் எப்படிச் சிரிப்பது? இது போன்ற பதிவுகளால் தான்.//

ஆம்!இந்த சங்க வலைப்பூவில் பின்னூட்டம் இடும் பெரும்பாலானோர் பலநாடுகளில் பல்வேறுசூழ்நிலைகளில்
பலநாட்டுமக்களோடு பணிபுரிந்து வருபவர்கள்.அதிகப்படியான பணிஅழுத்தம்,அன்னியநாட்டுசூழ்நிலை
போன்றவற்றிற்கு வடிகாலாகவும், நமது மெல்லிய நகைச்சுவை உண்ர்வு மறைந்துபோகாமலும் இருக்க
இதை பயன்படுத்திவருகிறோம்.பல புதிய நண்பர்களையும் பெற்று வருகிறோம்.இதில் மற்றவர் மனம்
புண்படும்படியான செய்திகள் இல்லை
என்பதே எனது கருத்து.

எனவே சங்கம் சாராத பதிவர்களே!! உங்கள் மேலான கருத்துகளை பின்னூட்டங்களாக இங்கு இட்டு எங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள உதவுங்கள்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

யேசு பிரானை சிலுவைல அறைந்த உலகம் இது, காந்தியை சுட்டுக் கொன்ற உலகம் இது. கடவுளால கூட எல்லா மனிதர்களையும் திருப்திப் படுத்த முடியாது ஆகவே யாரோ ஒருவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுத்து நீங்க இந்தப் பதிவை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தது வ.வா.ச எல்லாம் வந்த பிறகுதான். உங்களின் பதிவுகள் மிக அருமையாக உள்ளன. ஒருத்தருக்கு பிடிக்கவில்லை என்பதால் நீங்கள் அவருக்காக இந்த பதிவை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதனால் நீங்கள் தோய்வு அடையவும் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் முன் போலவே பதிவுகளை வெளியிட்டு என் போன்றவர்களின் இதழ்களில் புன்னகை அரும்ப செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

துளசி கோபால் said...

பொன்ஸ்,

என்னம்மா நடக்குது?

மணியன் said...

சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே :))

Muthu said...

நீங்க ஒரு பத்து பேர் உங்களுக்குள் மட்டும் எழுதிக்கிட்டும் கலாய்ச்சிகிட்டும் இருக்கறது கூட அனானிக்கு பிடிக்கலையா?

என்ன கொடுமை சார் இது?

அனானி,

எழுதட்டும்க.என்னாங்க கஷ்டம் உங்களுக்கு? எங்க பிரச்சினை இல்லை? சீரியஸா எழுதறம்னு காமெடி பண்ற பலபேர் மத்தியில் காமெடி பண்றோம்னு சொல்லித்தானே பண்றாங்க.செய்யட்டும் விடுங்க.

Geetha Sambasivam said...

பொன்ஸ்,
நான் நல்லா என்னை மறந்து சிரிக்க ஆரம்பிச்சதே இந்த சங்கம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான். யாரோ என்னவோ சொன்னாங்கனு நீங்களும் கவலைப் பட ஆரம்பிச்சா, என் போன்ற சிரிப்புக்கு வருபவர்களின் கதி என்ன? சங்கத்தைச் சேர்ந்தவர் பதில் கூற வேண்டாம் என்ற விதியை மீறித்தான் கூறுகிறேன். வேண்டுமானால் என்னை மட்டும் கலாய்க்கலாம் எவ்வளவு வேண்டுமானாலும்.

Chellamuthu Kuppusamy said...

அதெல்லாம் இருக்கட்டும்.. எப்ப சார் கடயத் தெறப்பீங்க? சாரி பார் த டிஸ்டப்பன்ஸ்..
ஏதாவது பின்னூட்டம் நாமும் போடலாமே என்பதால் எழுந்தது; சின்னப் புள்ளத்தனமான பதிவுக்கேல்லாம் சீரியசா பின்னூட்டம் போடக்க்கூடாது.

-குப்புசாமி செல்லமுத்து

ரிஷி said...

ஏன்ன ஆச்சு?

எதற்கும் வருத்தப்படாத சங்கம், இதுக்கு போய் கவலைபடலாமா?

வ.வா.ச உறுப்பினர்கள் மட்டும் அல்ல அனைவரும் இதை நையாண்டியாக தான் நினைகிறார்கள்.
ஒரு சில அனானி'க்காக இப்படி தனியா பதிவு போட்டு விளக்கம் வேறா?

உங்கள் பணி தொடரட்டும்.

என்றென்றும் பிரியமுடன்.

ரிஷி

இலவசக்கொத்தனார் said...

நாலு பேரு நீங்க நல்லவங்கன்னு வந்து சொல்ல ஒரு பதிவா? எனக்கென்னவோ நீங்களே அதுக்காக ஒரு அனானி பின்னூட்டம் போட்டுக்கிட்டதா தெரியுது. ;)

(ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க)

பொன்ஸ்~~Poorna said...

நாங்களே எவ்வளவு நாள் சொல்லிக்கிடறது கொத்ஸ்...

ஐடியா நல்லாருக்கு.. அடுத்தமுறை பயன் படுத்திக்கிடறோம்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

சிரித்து வாழ வேண்டும் பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே..

கலக்குங்க வ.வா.சங்கம் வளர வாழ்த்துக்கள்

தருமி said...

உங்க தலயின் ஆஸ்தான ஜோஸ்யர் என்ற முறையிலும், இணைய ஜோஸ்யர் என்று நீங்களே தெரிந்து கொண்டதாலும் நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க:

உங்க தலயோட ஜாதகப்படியும், சனி 8-ம் வீட்டிலிருந்து அடுத்த வீட்டை எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதாலும் இந்த தடங்கல். ' இனிமேல் அனானிகளைக் கண்டு கொள்ள மாட்டேன்' அப்டின்னு ஆற்றலரசி பொன்ஸ் 100 தடவை இம்பொஸிஷன் எழுதிட்டா இந்தப் பிரச்சனை தீரும்.

பொன்ஸ்~~Poorna said...

ஜோஸ்யர் சொல்லிட்டா செஞ்சிட வேண்டியது தான்..

ஹைடெக் இணைய ஜோசியரா இருந்தாலும் பரிகாரம்னு சொல்லி இம்போஸிஷன் எழுத வைக்கிற வாத்தியார் வேலையை விட முடியலை பாருங்க!! :))))

குமரன் (Kumaran) said...

//ஹைடெக் இணைய ஜோசியரா இருந்தாலும் பரிகாரம்னு சொல்லி இம்போஸிஷன் எழுத வைக்கிற வாத்தியார் வேலையை விட முடியலை பாருங்க!! :))))

//

ஹாஹாஹாஹாஹா.... அதானே?!!! :-)

பொன்ஸ் மற்றும் வ.வா.ச. மக்களே. வழக்கம் போல :-) போட்டுட்டுப் போலாம்னு தான் வந்தேன். ஆனா சீரியஸா இருக்கீங்க எல்லாரும்... என்ன இது? சின்னப்புள்ளத்தனமாவுல்ல இருக்கு. வந்துட்டாய்ங்க கேட்டுக்கிட்டு... நோ கொஸ்டின் ஒன்லி ஆன்சர். அம்புட்டுதான்.

Unknown said...

சீரியஸா எழுதறேன் பேர்வழின்னுட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையோ மதத்தினரையோ சாடி எழுதுவதைவிட இந்தமாதிரி கலாய்ச்சிகிட்டு இருக்கறது எவ்வளவோமேல். யார் யாருக்கோ ரசிகர்கள் இருக்கும்போது உங்களுக்குன்னு இருக்கற ரசிகர்களான எங்களை ஏமாத்தாம தொடர்ந்து இப்படியே எழுதிட்டு இருங்க.

பொன்ஸ்~~Poorna said...

Manikandan Vaa's comment from Mail :

ஒண்ணும் பிரச்சினையில்லைனு சொல்லிடலாம்....ஆனால் நம்ம சிபிய நினைச்சா சொல்ல தைரியம் வரலை...:(

Anonymous said...

Ok You made your point and gained your support. I always respect and take Dharumi seriously. Since he says there is a point, I can not, or should I say, i don't want to oppose it.

Santhosh said...

பொன்ஸ்,
என்னமோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது. மூகமுடியோட பதிவுல அவரு என்னான்னா எனக்கு இந்த புதுக்கட்சியினால் பொறாமை ஏதும் இல்லை அப்படின்னு ஆறிக்கை விடுறாரு. யாராவது ஆட்டோ விட்டு மிரட்டினாங்களா என்ன? தொடரட்டும் உங்கள் சிரிப்புப்பணி.

நாமக்கல் சிபி said...

//ஒண்ணும் பிரச்சினையில்லைனு சொல்லிடலாம்....ஆனால் நம்ம சிபிய நினைச்சா சொல்ல
தைரியம் வரலை...:( //

பழி வாங்கும் நடவடிக்கை இல்லைன்னு சொன்னீரே மணிகண்டன்!

நாமக்கல் சிபி said...

//' இனிமேல் அனானிகளைக் கண்டு கொள்ள மாட்டேன்' அப்டின்னு ஆற்றலரசி பொன்ஸ் 100 தடவை இம்பொஸிஷன் எழுதிட்டா இந்தப் பிரச்சனை தீரும்.//

தருமி சார்,
அடுத்த பதிவுக்கு இப்பவே ஐடியா குடுத்து விட்டீர்கள்.

:-)

நாமக்கல் சிபி said...

//இங்கன சதயம்...சதயம்..னு ஒரு பயபுள்ள சுத்திட்டு இருக்கு, எப்டியாவது கஸ்டப்பட்டு அவன புடிச்சு உங்க சங்கத்துல சேத்துட்டீங்கன்னா...தீந்தது தலைவலி//

//தீந்தது தலைவலி//

சதயம்!

(சங்கத்துக்கு) வந்ததும் வராததுமா வாங்கிக் கட்டிக்கப் போறீங்க கீதா மேடம்கிட்ட!

பொன்ஸ்~~Poorna said...

அருள், வவ்வால், செந்தில் குமரன், க்ரிஷ், உதய், துளசிக்கா, மணியன், முத்து, குப்புசாமி, ரிஷி, கொத்ஸ், ஞானியார், குமரன், ரமணி, சதயம், மணி எல்லாருக்கும் எங்க நன்றி.. நாங்க "சங்கம் சாராப் பதிவர்"னு பதிவு போட்டா முதல்ல யாராச்சும் வந்து பார்ப்பாங்களான்னு எனக்கு சந்தேகமாவே இருந்தது.. விளையாட்டுப் பசங்களை யாரு கண்டுக்கிடப் போறாங்கன்னு தான் நான் நிஜமாவே நினைச்சிகிட்டு இருந்தேன்.
இத்தனை பேர் வந்து பாத்திருக்காங்கன்னு நினைக்கும் போதே நம்ம இந்த மாதிரி சின்ன பிள்ளைத்தனமா பதிவு போட்ருக்க வேண்டாமோன்னு தோணுது :) ஆனா, சில சமயத்தில் சில நிலைப்பாடுகளை உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் வந்துடுது.. பெயர் சொல்லாத பதிவாளர்/பின்னூட்டுநரா இருந்தாலும் (எத்தனை நாளுங்க அனானினு அடிக்கிறது? :) ) அவரையும் காயப் படுத்தாம எழுதுவது தான் எங்க நோக்கம். விளையாட்டுன்னாலும் அதுக்கு ஒரு அளவு இருக்கே.. எல்லாருக்கும் பொதுவான அளவுகளுக்கு உட்பட்டு கலாய்க்கத் தான் இந்தப் பக்கத்தைத் தொடங்கினோம்.

முதல் முறை அனானி வந்து எழுதின போது எனக்கு எந்த தயக்கமும் இருக்கலை..ஏதோ கடுப்புல இருப்பார் போலிருக்குன்னு விட்டுட்டேன். ஆனா, அடுத்த முறை தொடர்ந்து வந்து எழுதும் போது தலைவர் ஏதோ சொல்ல வர்றாருன்னு தோணிச்சு.. அதான் இந்தப் பதிவு.. இரண்டு நாளைக்கு ஒரு முறை தான் புதுப் பதிவு போடணும்ங்கிற எங்க சங்க விதிமுறையை (அட, ஆமாங்க, எங்க சங்கத்துக்கும் விதி, முறை எல்லாம் இருக்கு..) மீறி அவசர அவசரமா போட்டது இது.. சிலரோட பின்னூட்டங்களைப் பிரசுரிக்க முடியாம போனதுக்கு வருந்துகிறோம்.. எங்க சங்க விதிகளான "கைப்பு மற்றும் சங்கத்தவரைக் கலாய்த்தல்"ங்கிற விதிக்கு அப்பாற்பட்டு மத்தவங்களைக் குறிப்பா கிண்டல் செய்யும் அப்படிப்பட்ட பின்னூட்டங்கள் எத்தனை முறை வந்தாலும் பிரசுரிக்கப்படாது.

பொன்ஸ்~~Poorna said...

தருமி, நீங்க சொன்ன பரிகாரத்தை செய்யறேன்னு சொன்னதுக்கே இந்த மாதிரி ஒரு "அனானி அங்கீகாரம்" வந்திருக்கே, செஞ்சு தனிமடல்ல அனுப்பிட வேண்டியது தான்!!! :))))

நீங்க எழுதின ஜோதிடத் தொடரை உங்க ஜோசியமே இப்படி பொய்யாக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ;)

பொன்ஸ்~~Poorna said...

// Ok You made your point and gained your support. I always respect and take Dharumi seriously. Since he says there is a point, I can not, or should I say, i don't want to oppose it. //

Anony, I am not even sure if you are the same anony! First thing is you cant "oppose" anything by coming without even a nick name..

Who are you to call us Masks or Agents, when you come without a name? - Never Mind, I should have asked this long back, what to do, I still have a long way to go...

Anyway, this post was not for u.. it was just a trigger. I am happy that we were able to make our point right to our respectable fellow-bloggers at this stage and even identify people who are ready to use us in other sorts of politics.

As per Dharumi's advice, I am not really thrilled to know that you have stopped opposing us. Once again thanks a lot for giving us this chance.

Thekkikattan|தெகா said...

ஒரு மூணு நாள கொஞ்சம் வேளையாப் போச்சு, அதுக்குள்ள இங்கன என்னென்னமோ நடந்துருக்கு...

வந்துட்டோம்மில்லெ கருத்துக் கண்ணாயிரம்... சிபி கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டுங்க, சிரிச்சு ரெண்டு வாரம் ஆச்சு... அப்பு என்மேல கோவம் கீவமில்லையெ... சிரிச்சு வைங்கப்பு ;-))))

இல்லைன்னா, எரிகிறதா இல்லை புதைக்கிறதாவ தட்டி எழுப்பு உலாவ விட்டுடுவேன் ஜாக்கிரதை!! :-0

தெகா.

பொன்ஸ்~~Poorna said...

பதிவு விதிகளுக்கு உட்படாமல் பின்னூட்டம் போட்ட சங்கத்தினரான துபாய் ராஜா, கீதா, மற்றும் சந்தோஷ் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் :))) இன்னும் நாலு பதிவுகளில் இவர்களைத் தான் கலாய்க்க முன்னுரிமை வழங்கப்படும் ;)

செந்தில் குமரன், ஆனாலும் மோசங்க நீங்க, எங்க சங்கத்துக்கெல்லாம் காந்தியையும் ஏசுவையும் கூப்பிடறீங்க!! :)

முத்து,
//என்ன கொடுமை சார் இது?//
இதை நாங்க பிரபு ஸ்டைல்ல படிக்கணுமா? :)

குப்பு, சாவியத் தேடிகிட்டு இருக்கோம்.. கிடைச்சதும் திறக்க வேண்டியது தான் :)

சதயம், உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப் படுகிறது.. இன்டர்வியூவுக்குத் தயாராகுங்கள். அட, இன்டர்வியூன்ன உடனே ஆள் காணாம போய்ட்டீங்க!!! :)

Anonymous said...

igga daily varallanna thukkam varamaattanguthu keep it up va vaa sa

BY ALIF AHAMED

இலவசக்கொத்தனார் said...

//(எத்தனை நாளுங்க அனானினு அடிக்கிறது? //

அதைத்தான் ஏற்கனவே பெயரிலி அப்படின்னு தமிழ்ப்படுத்தியாச்சே. இப்போ என்ன புதுசா?

அடடா! உங்ககிட்ட போயி சொல்லிட்டேனே. நீங்கதானே ஏன் சிரிப்பான்? சிரிப்பின்னு சொல்லக் கூடாதான்னு கேட்ட ஆளாச்சே. இப்போ ஏன் பெயரிலி? பெயரிலன்னு சொல்லக்கூடாதான்னு கேட்பீங்க. அய்யய்யோ! ஆளை விடுங்க!

பொன்ஸ்~~Poorna said...

பெயரிலின்னு ஒரு பதிவர் இருக்காரு போலிருக்கே.. அதான்.. அதைப் பயன் படுத்தலை.. :)

பொன்ஸ்~~Poorna said...

தெ.கா,
எரிக்கவோ புதைக்கவோன்னு ஆரம்பிச்சிடாதீங்க.. சிபி தூங்கப் போய்ட்டார்னு நினைக்கிறேன். இங்க போய் பார்த்தீங்கன்னா, கிச்சு கிச்சு எல்லாம் இல்லாமயே சிரிக்கலாம்.. அதுக்குள்ளார சிபி வந்துருவாரு!!

Anonymous said...

இங்க போய் சிரிக்கலாம்.. :)

http://niyajudeen.blogspot.com/2006/04/comedy.html


alif ahamed

ILA (a) இளா said...

//' இனிமேல் அனானிகளைக் கண்டு கொள்ள மாட்டேன்' அப்டின்னு ஆற்றலரசி பொன்ஸ் 100 தடவை இம்பொஸிஷன் எழுதிட்டா இந்தப் பிரச்சனை தீரும்.//
100 போதுமா?
எங்க சங்கத்து பேரே வருத்தபடாத வாலிபர் சங்கம் நாங்கெல்லாம் இதுக்கு போயி கவலைப்படபோறோமா. எங்களுக்கு 1008 வேலை இருக்குங்க.

துபாய் ராஜா said...

//"பதிவு விதிகளுக்கு உட்படாமல் பின்னூட்டம் போட்ட சங்கத்தினரான துபாய் ராஜா, கீதா, மற்றும் சந்தோஷ் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் :))) இன்னும் நாலு பதிவுகளில் இவர்களைத் தான் கலாய்க்க முன்னுரிமை வழங்கப்படும் ;)"//

அப்ப நம்ம 'தல பாணியில நாங்களே
தான் வந்து மாட்டிக்கிட்டமா????!!!.

ஆஹா!!போட்டு வாங்கிட்டீங்களே பொன்சு !!!!!!.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி Babble.. ஊக்கத்துக்கு நன்றி

-/பெயரிலி. said...

கொத்தனார் ப்ரதர், பொன்ஸ் ஸிஸ்டர் நம்ம நாமத்த வேறே சகுனி தாயக்கட்டையாட்டம் பாக்குறவன் கண்ணுக்குப் படாம இந்த உருட்டு உருட்டுறீங்களே? இது நல்லாவா இருக்கு? விட்ருங்க. புண்ணியமா போகும். வேணுன்னா வருத்தப்படுகிற வயோதிபர் சங்கமுன்னு ஒண்ணைத் தொடங்குங்க. சேந்துகிறேன். எடுத்தேன் கவிழ்த்தேன்னு சைடாலே உதைக்காதீங்க மவராசன் மவராணிங்களா. :)

Unknown said...

சங்க உறுப்பினர்கள் தானே ஆதரவு தெரிவிக்க கூடாது?கூட்டணிக்கட்சி உறுப்பினர் என்ற முறையில் வ.வா.சா வுக்கு என் அமோக ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

Unknown said...

ஆகா.. ஆகா.. ஒருகாலத்துல பதிவுலகை ஆட்டிப்படைச்ச பெயரிலியே வந்து பின்னூட்டிட்டு போயிருக்காரு. ரொம்ப நாளா அவர் பேரை எந்த பதிவுலயும் பாத்ததில்லை. இதுவே நீங்க எவ்ளோ பிரபலம்கிறதை காட்டுது.

Geetha Sambasivam said...

சதயம்,
உள்ளே நுழையும்போதே என்னைத் தீத்துக்கட்டணும்னு சொல்றீங்களே, எனக்கு இணைய இணைப்புக் கிடைக்காமல் போறது கூட உங்க சதியா இருக்குமோனு நினைக்கிறேன்.
கைப்புள்ள, பார்த்துங்க, வாயே திறக்காம உக்காந்துக்கிட்டு இருக்கீங்க. துரோகிகளை இனம் காண முடியலியா?

Geetha Sambasivam said...

அம்மா பொன்ஸ்,
உங்களோட ஒழுங்கு நடவடிக்கையை துபாய் ராஜா மேலே மட்டும் (துபாய் ராஜா:நற நற நற) எடுங்க. நான் நிரந்தரத் தலைவலியாக்கும்.

நாமக்கல் சிபி said...

//ஏப்பா சிபி, நாம்பாட்டுக்க அப்லிகேசன் போடறப்ப இப்டி பண்ணலாமா.... //

சரி, சரி இனிமேலாவது புரிஞ்சி நடந்துக்குங்க!
:-)

நானும் மேடம்கிட்ட சொல்றேன், சதயம் தெரியாம சொல்லிப்பிட்டாருன்னு!

நாமக்கல் சிபி said...

//ஏப்பா சிபி, நாம்பாட்டுக்க அப்லிகேசன் போடறப்ப இப்டி பண்ணலாமா.... //

ஆனா! இப்ப "பிகிலு" பொன்ஸ் கிட்ட மாட்டிகிட்டீங்க!

அப்லிகேசன்னு எழுதணுமா? இல்லை அப்ளிகேசன்னு எழுதணுமா?

பொன்ஸ்~~Poorna said...

அதானே.. அது தமிழா இருந்தாலும், ஆங்கிலமா இருந்தாலும், தமிங்கிலமா இருந்தாலும், தப்பா பேசுறது எனக்குப் பிடிக்காது..

சிபி, இப்படிப் பட்டவங்களைச் சங்கத்துல சேர்த்தா வேற பயன் இருக்கோ இல்லையோ என்னோட தமிழ் வகுப்புகளுக்காவது ஆள் கிடைக்கும்.. காற்றாடிகிட்டு இருக்கு இப்போ:))) என்ன சொல்றீங்க??

ஏஜண்ட் NJ said...

ஏஜெண்ட்டின் எச்சரிக்கை:
=================
முதல் நாளே நான் இட்ட எனது 2 பின்னூட்டங்கள் இன்னும் பிரசுரிக்கப்படாமல் இருப்பது, சங்கத்திற்கு நல்லதல்ல!


;-)

நாமக்கல் சிபி said...

//முதல் நாளே நான் இட்ட எனது 2 பின்னூட்டங்கள் இன்னும் பிரசுரிக்கப்படாமல் இருப்பது, சங்கத்திற்கு நல்லதல்ல!

:-)

//

ஞான்ஸ்,

இந்த மாதிரி உள் குத்து இல்லாம தெளிவா எழுதியிருந்தா நாங்க ஏங்க பிரசுரிக்காம இருக்கோம்.

ஸ்மைலியாவது போடணுமில்லே!

(காரணம்தான் தனி மடல்லே சொன்னொமில்ல)

VSK said...

நெனச்சதை சாதிச்சுட்டீங்க!
ஸெயின்ஃபீல்ட் மாதிரி ஒண்ணுமில்லாததை வெச்சு ஒரு 50 பின்னூட்டம் வாங்கியாச்சு!
எல்லாரும் நீங்க நல்லவங்கன்னு சர்டிபிகேட்டும் கொடுத்தாச்சு.
அப்புறம் என்ன?
கலாய்ங்க!

நாமக்கல் சிபி said...

//நெனச்சதை சாதிச்சுட்டீங்க!//

நீங்க நெனச்சதையா எஸ்.கே?
உங்கள மாதிரி நல்லவங்க நெனக்கும்போது நடக்காம போயிடுமா என்ன?

துபாய் ராஜா said...

//"Geetha Sambasivam சொல்றாரு...
அம்மா பொன்ஸ்,
உங்களோட ஒழுங்கு நடவடிக்கையை துபாய் ராஜா மேலே மட்டும் (துபாய் ராஜா:நற நற நற) எடுங்க. நான் நிரந்தரத் தலைவலியாக்கும்."//

கீதாக்கா!எம்மேல அப்படியென்ன கோபம்??!!.(ஓ!25வது பதிவுல எக்குத்தப்பா ஏகப்பட்ட பின்னூட்டம்
போட்ட கடுப்பா??!!!!:-))))))

மனதின் ஓசை said...

Flash News : அந்த அனானி பின்னூட்டம் நம் சங்கத்தை முடக்க நடந்த சதி என்றும், பின்னூட்டம் இட்டவர் நம் வளர்ச்சியை பார்த்து பொறாமை பட்ட போட்டி சங்கத்தோட செயளாளர் எனவும் வ.வா.ச ஒட்டர் படை(??!) தகவல் அனுப்பி உள்ளது....

தகடூர் கோபி(Gopi) said...

ச்சே... லேட்டா வ‌ர்ற‌தே என‌க்கு பொழ‌ப்பாப் போச்சி.

என் க‌ருத்து கேட்டீங்க‌ன்னா...

என்ன‌ இது சின்ன‌ப்புள்ள‌த்த‌ன‌மா?

வேணாம்... அழுதுருவேன்.

Iyappan Krishnan said...

where is my comment which i posted yesterday ? :O

யோசிப்பவர் said...

அனானிக்கெல்லாம் மதிப்பு கொடுக்கும் பொன்ஸ்க்கு,
முதலில் இந்த அனானியே Grown upதானா என்று எனக்கு புரியவில்லை. எல்லோருக்கும் அவரவர் விருப்பங்கள் இருக்கும். எல்லோருக்கும் தனி தனி டேஸ்ட் இருக்கும். பார்வைகள் மட்டுமல்ல, அணுகு முறையே வேறுபடும். உலகத்தில் பெரும்பாலோர் சோகத்தில் மூழ்கி கிடக்கும்போது, உனக்கு மட்டும் என்ன சந்தோஷம் வேண்டி கிடக்கிறது என்ற வாதம் முட்டாள்தனமானது. மற்றவர்களை புரிந்து கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முயற்ச்சி கூட செய்யாதவர்கள்தான் இப்படி ஆரம்பிப்பார்கள். நீங்கள் இதற்கெல்லாம் கவலைப் படாதீர்கள். இது போன்ற அசட்டு கேள்விகளை வலைப்பூக்களின் ஆரம்பத்திலிருந்தே நான் சந்திதிருக்கிறேன். இவற்றை உதாசீனம் செவதுதான் என்னுடைய அணுகுமுறை. இதுக்கு போய் தனியா பதிவெல்லாம் போட்டுக்கிட்டு.....! போய் வேலையப் பாருங்க!வேலையப் பாருங்க!!

பொன்ஸ்~~Poorna said...

யோசிங்க, எல்லப்பன், ரமணி, செல்வன், எல்லாருக்கும் ரொம்ப தாங்க்ஸுங்க..

ஊர் விட்டு ஊர் வந்து இந்த கணினி முன்னாடியே உட்கார்ந்திருக்கேனா, அதான் கொஞ்சம் ப்ளட் சீக்கிரமா பாயில் ஆய்டுச்சு.. இந்த ஊர்ல வேற இது சம்மராம்..

இனி இப்படி ஆகாது.. அனானி சொன்னதை விட அதிகமா எல்லாப் பக்கத்திலேர்ந்தும் இப்படி ஓவர் சீன் உடம்புக்காகாதுன்னு அறிவுரை கன்னாபின்னான்னு வந்து விழுந்துடுச்சு.. இத்தோட இதை நிறுத்திக்கலாம்னு பார்க்கிறேன்..

எல்லப்பன், உங்க கமென்டைக் கூட அதுனாலதான் பிரசுரிக்காம நிறுத்தி வச்சிருந்தோம்..

இனி இது மாதிரி ஓவர் ரியாக்ஷன் இருக்காதுன்னு உறுதி தர்றேன்.. அத்தோட, இந்தப் பதிவையே எடுத்துடலாம்னு தான் நினைச்சேன்.. சரி, நம்ம சங்கத்துக்கு ஒரு திருஷ்டி பொட்டு மாதிரி இருக்கட்டும்னு தோணிடுச்சு..

அத்தோட, பர்சனலா நான் என்னிக்காவது ஓவரா ஆடும் போது இந்தப் பக்கத்துக்கு வந்துட்டுப் போனா தலைல தட்டி உட்கார வச்சிடும்.. அதுக்குத்தான் இதுவும் இருக்கட்டும்னு விட்டு வச்சிருக்கேன். :)

எல்லாருக்கும் மறுபடி நன்றி.. இனி இந்தப் பதிவுக்கு comments are not welcome... :)