Friday, June 30, 2006

2. அறிஞன் அநிர்பிரும்ம தேவன்: வ.வா.ச. வரலாறு

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

ஆப்பிரிக்கா தந்த அஞ்சா நெஞ்சனாம் கைப்போங்கா, யானையின் பிளிறலில் சற்று அதிர்ந்த இதயத்தைக் கையால் பிடித்துக் கொண்டு, பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து யானையைப் பார்த்தான். அதே நேரம், தங்கவை நாச்சியார் என்னும் அந்தக் கம்பீரமான போர்யானையும் நம் நாட்டில் இது என்ன புது மிருகம் என்ற எண்ணத்துடன் கைப்போங்காவைப் பார்த்தது.

அண்ணலும் நோக்கினார்...........
.....
.....
.....
....



தங்கச்சியும் நோக்கினார்...

நோக்கியா போனைக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் காட்சியை விவசாயியும் க்ளிக்கினார்.


பார்த்த நொடியே இருவருக்கும் அந்தப் பேருண்மை தெரிந்து விட்டது. ஆப்பிரிக்கக் கிராமத்திலும் இந்தியக் காடுகளிலும் பிறந்திருந்தாலும், ஏதோ ஒரு இனம் தெரியாத, "அட எல்லாம் நம்ம இனம் தான்" என்று தெரிந்து கொண்ட பாசம், ஒரு கொடியில் பூக்காத அந்த இரு மலருக்குள்ளும் இருப்பது இருவருக்கும் நொடியில் புரிந்து விட்டது.

அன்பு மேலிட்டால், அண்ணனை நோக்கி ஓடி வந்த யானை அப்படியே துதிக்கையில் தூக்கித் தட்டாமாலை சுற்றியதில் இதைச் சற்றும் எதிர்பார்க்காத கைப்போங்காவின் அலறல்கள் விண்ணை முட்டின. கைப்போங்காவின் அதிர்ச்சிக் கூவல்களை, பாசத்தின் ஒலிவடிவமாக எண்ணிய விவசாயி ஆனந்தக் கண்ணீர் மல்க அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கைப்போங்காவும் அதிர்ச்சிக் கண்ணீருடன் "காப்பாத்து காப்பாத்து" என்று வாய் திறக்கப் பயந்து கையால் மேலும் கீழும் அடிக்கத் தொடங்கினான்.

யானை ஓடிவந்ததால், அருகில் பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த அறிஞன் அநிர்பிரும்ம தேவனின் தபேலாக்கள் ஒரு முறை விண்ணில் எழும்பிப் பின் கீழே இறங்கின. அநிர் பிரம்ம தேவன் இனிமையான சாரீரம் உடையவன் அல்லன் என்றபோதும் கச்சேரி செய்வதை மட்டும் விடுபவனில்லை. ஏற்கனவே அவரது சத்தம் தாங்காமல் காதை மூடிக் கொண்டிருந்த பக்கத்துத் திண்ணைப் பெரியவர்களும் இதுவரை போல் இல்லாமல் இன்று, தாம் அமர்ந்திருக்கும் இடமே லேசாக ஆட்டம் கண்டதைப் பார்த்து, அநிர்தேவனின் குரலுக்குப் பூமாதேவியே ஆட்சேபம் தெரிவிக்கிறாள் என்று எண்ணி நடுங்கத் தொடங்கி விட்டனர்.

தபேலாக்களை அசைத்துத் தன் இசைத் தவத்தைக் கலைத்தவன் யாரென்று அறிய எண்ணி அநிர்தேவன் கோபத்துடன் வீதியில் இறங்கிப் பார்த்தான். எப்போதும் அவனது கச்சேரித் திண்ணையில் வந்து வாத்தியங்களை அசைத்துப் பார்க்கும் தங்கவை நாச்சியாரின் சேட்டை தான் இது என்பதைப் பார்த்த கணமே புரிந்து கொண்டான்.

இந்த யானையை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அவன் நிமிர்ந்தபோது தங்கவையின் பிடியில் ஒரு புதுவிதமான உருவம் இருப்பதையும், அது பயத்தில் அலறுவதையும் கைகாலை அடித்துக் கொள்வதையும் பார்த்த தேவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.

விவசாயியும் மற்றவர்களும் அந்த விபரீதத்தை உணராமல் கைகொட்டி ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.

சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.

(தொடரும்)

26 comments:

Unknown said...

எதுக்கம்மா ரெண்டு தரம் வரலாறு? வரலாறு திரும்பத்திரும்ப நிகழும் என்கிறீர்களா?

நன்மனம் said...

பொன்ஸ்,

கைப்புவின் வரலாறு மட்டும் தான் எதிரொலியோட வரும்னு சிம்பாளிக்கா ரெண்டு தடவ போட்டு சொல்லிட்டீங்க, சூப்பரு....:-))

Unknown said...

அடுத்த பாகத்துல சிபிச்சக்கரவர்த்தியும் வருவாரா?

பொன்ஸ்~~Poorna said...

வார்ப்புரு பிரச்சனை.. சிபி தானே சோழ நாட்டுத் தளபதி... இனிமே வருவாரு...

siva gnanamji(#18100882083107547329) said...

யானைக்கே அவ்வளவு துணிச்சலா?
கைப்பொங்காவிற்கே மிரட்டலா?
இருக்காது.....இருக்காது....நம்பமுடியவில்லை...
ஒருவேளை யானைக்கு கைப்பொங்கா மீது உள்ள பாசத்தின் வெளிப்பாடோ.........?

ஜொள்ளுப்பாண்டி said...

//தங்கவை நாச்சியார் என்னும் அந்தக் கம்பீரமான போர்யானையும் //

தேவையா இந்த பில்டப்பு தேவையா யக்கா பொன்ஸக்கா உங்களைத்தான் !!

//அநிர் பிரம்ம தேவன் இனிமையான சாரீரம் உடையவன் அல்லன் என்றபோதும் கச்சேரி செய்வதை மட்டும் விடுபவனில்லை. //

:))) தேவண்ணா பார்த்தீயளா ! பொன்ஸக்கா எப்படிப் போட்டுத் தாக்குதுன்னு ?? :))

//சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன்.//

இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டு?? அநிர்த்த தேவனுக்கு பக்கவாத்தியம் வாசித்து அந்தத்திறமைக்கு பரிசாக சோழநாட்டு green card holder ஆகியவனல்லவா வில்லுப்பாண்டி!! :)))

ஜொள்ளுப்பாண்டி said...

தங்கவை நாச்சியே நின் திறமை கண்டு என் கண்கள் கசிகிறது அக்காய் !
( தங்காய்க்கு எதிர்ச்சொல்!)

ILA (a) இளா said...

//ஓடி வந்த யானை அப்படியே துதிக்கையில் தூக்கித் தட்டாமாலை சுற்றியதில்//
சுற்றியதில் யானைக்கு என்ன ஆச்சு?
//அநிர் பிரம்ம தேவன் இனிமையான சாரீரம்//
தேவு ஜிம்முக்கு போற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?
//சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட//
அது வேற காரணம் பொன்ஸ்.

Syam said...

//இதைச் சற்றும் எதிர்பார்க்காத கைப்போங்காவின் அலறல்கள் விண்ணை முட்டின//

இது அலறல்கள் அல்ல கைப்போங்காவின் அட்டகாச சிரிப்பு..அப்படினு சொல்லி அதயும் சமாளிப்பார் தல

ALIF AHAMED said...

இப்படி சஸ்பெ(பொ)ன்ஸ் வச்சிட்டிங்க........

ம்.. டெய்லி வந்து எட்டி பாக்குரேன்

இலவசக்கொத்தனார் said...

அங்க செல்வனைப்பாருங்க சும்மா ராக்கெட் வேகத்தில் கதை எழுதறாரு. நீங்க சும்மா ரெண்டு பாத்திரங்கள் இண்ட்ரோவிற்கு இப்படி ஒரு பதிவு. யப்பா சாமி, ஷூவில் ஒட்டிய பப்பிள்கம் மாதிரி இழுக்குது.

அடுத்த பதிவும் பார்க்கறேன். இம்ப்ரூவ்மெண்ட் இல்லைன்னா நிறையா ஹோம்வொர்க்தான் தரணும்.

கைப்புள்ள said...

//இந்த யானையை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அவன் நிமிர்ந்தபோது தங்கவையின் பிடியில் ஒரு புதுவிதமான உருவம் இருப்பதையும், அது பயத்தில் அலறுவதையும் கைகாலை அடித்துக் கொள்வதையும் பார்த்த தேவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.//

யாருக்கோ யார் மேலேயோ இருக்குற கோவத்துலயும் சிக்கி சின்னாபின்னம் ஆவறது என்னவோ ஒரு இளிச்சவாயன் தான்...ஹ்ம்ம்
:((

நாகை சிவா said...

//ஆப்பிரிக்கக் கிராமத்திலும் இந்தியக் காடுகளிலும் பிறந்திருந்தாலும், ஏதோ ஒரு இனம் தெரியாத, "அட எல்லாம் நம்ம இனம் தான்"//
கலர் காம்பினேஷன் வொர்க் அவுட் ஆகியிருக்கும்.

////தங்கவை நாச்சியார் என்னும் அந்தக் கம்பீரமான போர்யானையும் //

தேவையா இந்த பில்டப்பு தேவையா யக்கா பொன்ஸக்கா உங்களைத்தான் //

நல்லா கேளு பாண்டி, அதுவும் வேற யாராச்சும் கொடுத்து இருந்தால் பரவாயில்லை. யாரும் சொல்ல மாட்டாங்கனு இவங்களே ஒரு பில்டப் கொடுத்துக் வேண்டியது. அதிலும் இந்த கம்பீரம் ரொம்பவே ஒவர். ஒரு சிங்கத்தையோ, ஒரு புலியையோ சொல்லி இருந்தால் சரி, போயும் போயும் ஒரு யானைக்கு இம்புட்டு பில்டப் கொடுக்குறது சரியில்லை. ஆமாம் சொல்லிபுட்டேன்.

Chellamuthu Kuppusamy said...

மிருக வதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தாலும் வந்தாங்கப்பா.. இதுக கொட்டம் தாங்க முடியல:-)

யாரங்கே இவன் தலையை யானைக் காலால் இடறுங்கள்.

பொன்ஸ்~~Poorna said...

//ஒருவேளை யானைக்கு கைப்பொங்கா மீது உள்ள பாசத்தின் வெளிப்பாடோ.........? //
சிவஞானம்ஜி, உங்களுக்குச் சந்தேகம் வேறயா? யானை ரொம்ப பாசக்கார பொண்ணுங்க!! :)

பொன்ஸ்~~Poorna said...

//
தேவையா இந்த பில்டப்பு தேவையா யக்கா பொன்ஸக்கா உங்களைத்தான் !!
//
ஜொ.பா, யானைன்னாலே ஒரு பெரிய பில்டப்பு தான்.. ஏன் ப்ராட் அப்புனு(brought-up) கூட சொல்லலாம் :)

பொன்ஸ்~~Poorna said...

//தங்கவை நாச்சியே நின் திறமை கண்டு என் கண்கள் கசிகிறது அக்காய் !
( தங்காய்க்கு எதிர்ச்சொல்!)

//

அப்போ அது கூட தலைக்காக கசியலையா?!! :)))

பொன்ஸ்~~Poorna said...

//சுற்றியதில் யானைக்கு என்ன ஆச்சு?//
ம்ம்.. பக்கத்துலயே நின்னு பார்த்துகிட்டிருந்தது ஏன்னு இப்போத் தான் புரியுது.. யானைக்குத் தானே பிரச்சனைன்னு கண்டுக்காம இருந்துட்டீங்க போலிருக்கு..

// தேவு ஜிம்முக்கு போற விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?//
அட, அது சரீரம் இல்லைய்யா.. சாரீரம்.. இருந்தாலும் நம்ம ரஜினி ரசிகர் ஜிம்முக்கெல்லாம் போகணுமா என்ன ? :))

//அது வேற காரணம் பொன்ஸ். //
என்ன காரணம் விவசாயி? எனக்குத் தெரியலையே...

பொன்ஸ்~~Poorna said...

//இது அலறல்கள் அல்ல கைப்போங்காவின் அட்டகாச சிரிப்பு..அப்படினு சொல்லி அதயும் சமாளிப்பார் தல //
இப்படிச் சொல்லி அவரைக் காப்பாத்தாம இருக்க வழி.. அதானே? ஸ்யாம், பாசக் காரப் பயல்னா நீதாம்பா.. :))

பொன்ஸ்~~Poorna said...

//ம்.. டெய்லி வந்து எட்டி பாக்குரேன் //
மெதுவா வாங்க மின்னல், இது ஒரு வாரம் ஒருமுறை தொடர் தான்..

பொன்ஸ்~~Poorna said...

//அடுத்த பதிவும் பார்க்கறேன். இம்ப்ரூவ்மெண்ட் இல்லைன்னா நிறையா ஹோம்வொர்க்தான் தரணும்.
//
ஆகா.,. உம்ம ஹோம்வோர்க்கை பண்ணா, கால்கரி ட்ரிப் மாதிரி ஒரு நாள் மேட்டரை நாலு பதிவா இல்ல போடணும்?!! மக்கள் இதுக்கே அலுத்துக்கிடறாங்க.. :)

பொன்ஸ்~~Poorna said...

//என்னவோ ஒரு இளிச்சவாயன் தான்...ஹ்ம்ம்
:((
//
என்ன தல.. நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்னு படிக்கிறவங்க எல்லாரும் ஒத்துக்க வேணாமா? :))

பொன்ஸ்~~Poorna said...

// ஒரு சிங்கத்தையோ, ஒரு புலியையோ சொல்லி இருந்தால் சரி, போயும் போயும் ஒரு யானைக்கு இம்புட்டு பில்டப் கொடுக்குறது சரியில்லை. ஆமாம் சொல்லிபுட்டேன்.
//
புலி வரும்போது இதை நினைவு வச்சிக்கிறேன்.. இப்போதைக்கு பாண்டிக்கு சொன்னது தான் உங்களுக்கும் :)

பொன்ஸ்~~Poorna said...

// யாரங்கே இவன் தலையை யானைக் காலால் இடறுங்கள். //

குப்பு, யார் தலையைங்க? எங்க தலயா இல்லை எங்க சங்கத் தலையா?!! :)))) பயம்மா இருக்குங்க :)

Unknown said...

பொன்ஸ் சொல்ல மறந்த செய்தி....

கைப்போங்காவைப் பார்த்ததும் தங்கவை நாச்சியார் பேரலறலோடு அய்யோ பூச்சாண்டி என்று மயக்கமுற...
கடுப்பான கம்பீரக் கைப்போங்கா விவசாயிடம்... வேணாம் இந்தப் பிள்ள என்னியக் கலாய்க்குது ஆமா... நான் கெத்தா விருமாண்டி மாதிரி விறைப்பா நிக்குறேன் ஆனா இது என்னியப் பூச்சாண்டிங்குது நல்லா இல்ல சொல்லிட்டேன்...

Unknown said...

//இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டு?? அநிர்த்த தேவனுக்கு பக்கவாத்தியம் வாசித்து அந்தத்திறமைக்கு பரிசாக சோழநாட்டு green card holder ஆகியவனல்லவா வில்லுப்பாண்டி!! :)))//

பாண்டி பக்குவமாய் பக்க வாத்தியம் வாசித்து பச்சை அட்டை வாங்கியது குறித்து சோழ வரலாற்று குறிப்புகளே குறுக்குச் சிறுத்தான் அகழ்வாராச்சியில் கிடைத்தது உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமே பொன்ஸ்