~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Wednesday, April 30, 2008
என்னை பாடச் சொல்லாதே...நான் கண்டபடி பாடிபுடுவேன் :)
எல்லாத்தையும் நீங்களே சொல்லிடுவீங்கன்னு தெரியும். ஒரு வேளை எங்க இங்கிலிபீசு ரொம்ப ஹை-ஃபையா(!) போய் யாருக்கும் புரியாம போயிடுச்சுன்னா க்ளூ தரோம். பத்து பாடல் வரிகளையும் முதல்ல யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பாப்போம்.
1. Fig vegetable vegetable vegetable Banyan Vegetable Oh White Moon
2. "Great meditation girl" Golden Peacock like girl spreads her tail feathers
3. Oh fire flintstones fire! Gently you will massage
4. Come earlier! Come my love! Come my flesh! Come my life!
5. You are Aphrodite I think eye mother
6. If money is there in the Indian Tie, song will come when the Hen crows
7. One Love Angel, came to Earth. One Love Epic, she gave along with hand
8. Lotus flower and Water have never fought...pick Uncle and wear half saree sister-in-law is not there
9. Golden girl came, things billion she gave, like flower stage entrance overflowing honey
10. Oh Spring King! Honey loaded Rose...Your body my nation
ரெடி...ஸ்டெடி...கோ:)
இந்த பதிவுக்கு ஐடியாவைக் கொடுத்த வெண்பா வாத்தியார் ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கும், சங்கத்து முதல் அட்லாஸ் வாலிபர் ரீபஸ் அரசன் இலவசக்கொத்தனாருக்கும் இப்பதிவைப் பணிவோடு சமர்ப்பிக்கின்றோம்.
Tuesday, April 29, 2008
வ.வா.சங்கத்துக்கு நன்றியுடன் என் தொகுப்பு

ஏப்ரல் மேயிலே பாட்டு பாருங்க
"பெளர்ணமி நேரம் பாவை ஒருத்தி" பாட்டுக் கேளுங்க
Software engineers' Dream Girl - 100% ஜொள்ளு பதிவு
எடுத்த எடுப்பிலேயே பில் கேர்ட்ஸ் மகள் என்று நினைத்துப் ஜொள்ளுப் புதிர் போட்டு மண் கவ்விய பதிவு.
பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook
I am a tamil, I can speak tamil ;-)
வெளிநாட்டில் வளரும் இந்தத் தமிழ்ப்பையன் தமிழ் பேசுவாராம், தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் குழைத்துப் பாடுகிறார்.பாடல்: பூபாளம் இசைக்குழுவின் தமிழ் ரெகே.
Computer programmer காதலன் எழுதும் கடிதமே...!
Computer programmer காதல் கடிதம் எழுதினா எப்படியிருக்கும், இப்படி இருக்குமா?
யாரோ எழுதியது, பிடித்ததால் பகிர்கின்றேன்.
யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி
இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-)
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......
வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)
கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்)
பல்குரல் கலைஞர்கள் மூர்த்தி கோபி இரட்டையர்கள், கட்டபொம்மன் நாடகத்தை நகைச்சுவை நடிகர்கள் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் நடித்துக் காட்டுகின்றார்கள்
இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாக
மொக்கை சூப்பர் ஸ்டார் ரித்திஷ் குறித்த பதிவு
பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?
நம் அன்புக்குரிய பதிவர்கள் சிலர் படம் எடுத்தால் எப்படிப் பழைய படத்தலைப்புக்களைச் சுட்டு வைப்பார்கள் என்று சின்னக் கற்பனை.
Monday, April 28, 2008
அவன் அவள் அது
பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதையும், மட்டையாளர்கள் அதனை அடிப்பதையும் தொல்லைக்காட்சியில் மக்களுக்குக் காட்டி காட்டி அலுத்துப் போன ஒளிப்பதிவாளரின் கேமரா பார்வை, ஊக்கு விக்கும் நங்கையரின்(அதாங்க சியர் லீடர்ஸ்) பக்கம் திரும்பியது. கேமரா இயக்குபவர் தன் பார்வையைத் திருப்பியதால் அவர் பார்வையில் பட்டது டிவி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பார்வையிலும் பட்டது. உண்மையில் அவளுடைய பார்வையில் படுவதற்கு முன்னர் அவன் அதை பார்த்து விட்டான். ஆனால் ஆர்வமாகப் பார்ப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் நொடிப் பொழுதில் அவன் பார்வையும் கவனமும் வேறெங்கோ இருப்பது போல பார்த்துக் கொண்டான்.
"ஏங்க...ஐபிஎல் கிரிக்கெட்ல இந்த மாதிரி சியர் லீடர்ஸ் எல்லாம் ஆடறதைப் பத்தி நேத்து பார்லிமெண்ட்ல பேசிருக்காங்களாம். இனிமேல் இது மாதிரி ஆட மாட்டாங்கன்னும் அது டிவில வராதுன்னும் இன்னிக்கு பேப்பர்ல போட்டிருந்தான். ஆனாலும் வந்துக்கிட்டுத் தான் இருக்கு"
"ஹ்ம்ம்ம்"
"என்ன நான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். வெறும் ஹ்ம்ம்ம் தானா?"
இவ்விஷயத்தில் தலையிடுவதும் அது குறித்து கருத்து தெரிவிப்பதும் ஆபத்தானது என்று அவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் அவள் அவன் வாயிலிருந்து எதையாவது வரவைத்தே தீர வேண்டும் என்பதில் தீர்க்கமாயிருந்தாள்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை அவன் அறிந்திருந்தாலும் அந்த டாபிக்கைத் தட்டிக் கழித்தலும் உடம்புக்கு நல்லதில்லை என்று அவன் அறிந்திருந்த காரணத்தினால் "சியர் லீடர்ஸ் ஆடறதை எல்லாம் ஐபிஎல்ல நிறுத்த மாட்டாங்க" என்றான்.
"ஏன்? எப்படி" காரணகாரியங்களை அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம் எப்போதும் அதிகம்.
"இதனால எத்தனை குடும்பங்கள் பொழைக்குது தெரியுமா? அதை எப்படி நிறுத்துவாங்க?"
"என்னது குடும்பம் பொழைக்குதா?" -தன் ஆச்சரியத்தை அவளால் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
"ஆமாம்...இல்லியா பின்ன? படிச்சி டாக்டர் ஆகனும், இஞ்சினியர் ஆகனும் அப்படிங்கிறது தான் ஒவ்வொரு பொண்ணோட கனவும். வறுமையும் இயலாமையும் காரணமாத் தான் இந்த மாதிரி சியர்லீடர்ஸா ஆகறாங்க. யாரும் விரும்பி சியர் லீடர்ஸ் ஆகறதில்லை. கிரிக்கெட் ஸ்டேடியத்துல சியர் லீடரா ஆடற ஒவ்வொரு பொண்ணுக்கு பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு தெரியுமா?"
"வறுமையா? அவங்களைப் பாத்தா ஃபாரின் காரங்க மாதிரி இல்ல இருக்காங்க?"
"ஏன் ஃபாரின் காரங்கன்னா ஏழையா இருக்கக் கூடாதா? சியர் லீடரா ஆடற அவளும் ஒரு பெண் தானே? முறைவாசல் செஞ்சு குடும்பத்துக்குக் கால் வயிறு கஞ்சு ஊத்தற அம்மா, அம்மா சம்பாதிச்சு கொண்டாறதை புடுங்கிக் குடிச்சிட்டு அம்மாவைப் போட்டு அடிக்கிற பொறுப்பில்லாத அப்பா, படிக்கிற வயசுல சின்ன சின்ன தம்பி, தங்கச்சிங்க, கல்யாணம் ஆகாத அக்கா இவங்களை எல்லாம் பாத்து பாத்து கஷ்டப் பட்டு குடும்பத்துக்கு விடிவு காலம் பொறக்கணும்னு தான் இந்தப் பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டுலேருந்து இவ்வளவு தூரம் கண்காணாத இடத்துக்கு வந்து ராத்திரி பகல் வெயில்னு பாக்காம கஷ்டப் பட்டு உழைக்கிறாங்க"
அவன் சொல்வதை மேலும் ஆச்சரியத்தோடு அவள் கேட்கிறாள்.
"இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு தானே யோசிக்கிறே? கப்பின்னு என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் அமெரிக்கால டெக்சாஸ் மாநிலத்துல இருக்கான். அவன் பக்கத்து வீட்டுல இருக்கற ஆண்ட்டியோட பொண்ணு இந்த மாதிரி சியர்லீடரா ஐபிஎல்ல ஆடிக்கிட்டு இருக்காம். அவன் தான் இதெல்லாம் எனக்கு ஈமெயிலா அனுப்புனான். அதோட அவங்க படற கஷ்டத்தை எல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லற மாதிரி சிறுகதை ஒன்னெ எழுதிக்கிட்டு இருக்கான்.
அதோட இளான்னு இன்னொரு ஃப்ரெண்ட். அவரும் அமெரிக்கால தான் இருக்காரு. அவங்க பக்கத்து வீட்டுல இருக்கற பொண்ணு ஐபிஎல்ல சியர்லீடரா ஆகனும். நீங்க உங்க காண்டேக்ட்ஸ் யூஸ் பண்ணி எனக்கு சிபாரிசு பண்ணமுடியுமான்னு கேட்டிருக்காம். சூப்பர் பவுல், என்பிஏ சேம்பியன்ஷிப்ல எல்லாம் சியர்லீடரா இருந்த அனுபவம் எனக்கு இருக்குன்னு சொல்லுச்சாம். டெய்லி பேட்டாவும் வீட்டுக்குத் திரும்பப் போக பஸ் சார்ஜும் தான் அவங்க ஊர்ல தர்றாங்களாம். ஏற்கனவே பஸ்பாஸ் இருந்துச்சுன்னா பஸ் சார்ஜ் கூட தர மாட்டாங்களாம். ஐபிஎல்ல ஆடுனா கொஞ்சம் காசு பாக்கலாம்னு சொல்லுச்சாம்.
கதிர்னு இன்னொரு ஃப்ரெண்டு. அவன் துபாய்ல இருக்கான்மா. அவன் பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல மேல் வீட்டுல இருக்கற ஷேக் பொண்ணுங்கல்லாம் அங்கிள் நாங்க ஐபிஎல்ல சியர் லீடர்ஸ் ஆகனும், எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணுங்க...மூடாக்கு போட்டுக்கிட்டாச்சும் நாங்க ஆடியே தீருவோம்னு உறுதியா சொல்லுச்சுங்களாம். அரைகுறையா ஆடறாங்கன்னு தானே பார்லிமெண்ட்ல எதிர்த்து பேசியிருக்காங்க. இப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் சியர்லீடர்ஸையே எடுத்துக்கயேன். என்ன தான் வறுமையின் கொடுமையினால சியர்லீடரா ஆடுனாலும் மானம் தான் பெருசுன்னு ஃபுல் பேண்ட், சட்டை போட்டுக்கிட்டுத் தான் ஆடறாங்க. இப்போ அவங்க வீட்டுல எரியற அடுப்புல நம்ம கவர்ன்மெண்ட் தண்ணியை மொண்டு ஊத்தனுமா? யோசிச்சிப் பாரு"
இவ்வளவு நேரம் அவள் சொன்னதை எல்லாம் கேட்ட அவள் முகத்தில் ஒரு எக்ஸ்பிரெஷனை அவன் கண்டான். அந்நியன் படத்து விக்ரம் போல ஒரு முகபாவம்...சே...சே...இது அவள் இல்லையா...கே.பாலச்சந்தர் படத்து ஹீரோயின் போல ஒரு முகபாவம். ரசித்து, கோபப்பட்டு, ஆச்சரியப்பட்டு, ஏமாற்றத்தைத் தாங்கி, சந்தோஷப்பட்டு - எல்லாம் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவையான ஒரு எக்ஸ்பிரெஷன். அந்த "ராகமாலிகை"எக்ஸ்பிரெஷனில் கடைசியாக வந்தது ஒரு சிரிப்பு.
அந்த சிரிப்பைப் பார்த்து ஏமாந்து ஏதோ ஒரு உந்துதலில் உணர்ச்சிவசப்பட்டு அவன் சொன்னான் - "யப்பா! சியர்லீடர்ஸ் டிவில ஆடறதை பாக்கறதுக்கு என்னென்ன கதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு?"
"---"
தூரத்திலிருந்து தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றுவதற்கு உதவும் 'அது' அவனுடைய கபாலத்தை மூர்க்கத் தனமாக முத்தமிடும் போது அவனறிந்து கொண்டது 'ரெண்டு'
1. ஆபத்தான விஷயங்களை எப்படி 'well left' ஆக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுதல் அவசியம். அதை தெரிந்து வைத்துக் கொள்ளும்வரை பேசினாலும், பேசாது போனாலும் சேதாரம் பலமாகத் தான் இருக்கும்.
2. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உறுதியில்லாதவர்களை இவ்வுலகம் ஹர்பஜனையும் ஸ்ரீசாந்தையும் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதை போல் சிரிக்கும்.
Saturday, April 26, 2008
பதிவர்கள் நடிக்கும் ரீமேக் படங்கள்

இப்பவெல்லாம், ரீமிக்ஸ், ரீமேக் யுகம். ஆளாளுக்கு மொக்கைப் படம் எடுப்பதை விட்டு விட்டு பழைய படத்தையே மைக்ரே வேவ் இல் சூடாக்கிக் கொடுக்கிறார்கள். அந்தவகையில் நம் அன்புக்குரிய பதிவர்கள் சிலர் படம் எடுத்தால் எப்படிப் பழைய படத்தலைப்புக்களைச் சுட்டு வைப்பார்கள் என்று சின்னக் கற்பனை. படத்தலைப்பு மட்டும் தான் மேட்டரே, அந்தப் படத்தை முழுமையாகப் பிரதிபலிக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதோ சில பதிவர்களும், அவர்களுக்குப் பொருத்தமான பழைய படத் தலைப்புக்களும்:
சிவிஆர் - எத்தனை கோணம் எத்தனை பார்வை (காமிராக் கோணங்களை அடிக்கடி மாற்றுவதால்)
வெட்டிப்பயல் - அம்மா நானா ஓ தமிழ அம்மாயி - Amma Naana O Tamila Ammai (தொடர்ந்து தெலுங்குப்பட மேட்டர் கொடுப்பதால்)
இளா - சங்கமம் அல்லது விவசாயி (இதற்கு விளக்கம் தேவையா)
இராம் - மதுரைக்காரத் தம்பி or மதுர (வைகைப்பதிவுக்காரர்) or பாய்ஸ் (வா வா சங்கத்துத் தூண்களில் ஒன்று)
ஆயில்யன் - தினமும் என்னைக் கவனி ( சராசரியாக ஒவ்வொரு நாளும் பதிவுத் தீனி கொடுப்பதால்)
ஜி.ராகவன் - ஜகன் மோகினி ( தங்க மரம் என்ற வெற்றிகரமான மர்மம் பிளஸ் மாயாஜாலத் தொடர் கொடுப்பதால்)
கொழுவி - நான் அவன் இல்லை ( ;-) விளக்கம் கிடையாது)
தல கோபி - எல்லாமே என் ராசா தான் ( ஆனந்த விகடனில் இருந்து பழைய பேப்பர் வரை இளையராஜா மேட்டர் தேடிப் படிப்பதால்)
கும்மி பதிவர்கள் - கும்மிப்பாட்டு (விளக்கம் தேவையா?)
சயந்தன் - இது ஒரு தொடர்கதை ( நிறையத் தொடர்களைத் தன் வலைப்பதிவில் ஆரம்பித்து முதல் பாகத்தோடு அல்லது அறிமுகத்தோடு நிறுத்திக்கொண்டதால், கிட்டத்தட்ட ஐம்பது தொடர்கள் தேறும்)
சோமிதரன் என்கிற சோமி - வெள்ளித்திரை ( இயக்குனர் ஆகும் கனவுடன் கடந்த 20 வருஷமாக கோடம்பாக்கத்தை வளைய வருவதால்)
டிபிசிடி - புரியாத புதிர் ( புரியல தயவு செய்து விளக்கவும்)
வந்தியத்தேவன் - யாரடி நீ மோகினி ( கொழும்பில் ஊரடங்கு போட்டாலும் சலனமின்றி கொன்கோர்ட் சென்று நயன்தாராவின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதால்)
கண்ணபிரான் ரவிசங்கர் - கிருஷ்ண லீலை ( கிருஷ்ணபகவானின் ஜாதகத்தையே கையில் வைத்திருப்பவர்)
துர்கா - துர்கா ( இந்தப்படத்தில் அப்பாவிச் சிறுமியுடன் கூடவே நட்போடு நாய், குரங்கு எல்லாம் நடித்திருக்கும்)
.:: மை ஃபிரண்ட் ::. - Aata மற்றும் Chukkallo Chandrudu ( சித்து நடித்த இந்த இரண்டு தெலுங்குப்படங்களையும் ஜெயம் ரவி இன்னும் வாங்கல)
அமீரகப் பதிவர்கள் கூட்டு - பாலைவன ரோஜாக்கள்
சங்கம் ஒன் டூ முடிஞ்சு இப்போ த்ரீ
என் ரத்தத்தின் ரத்தங்களே அப்படின்னு ஆரம்பிச்சா அது புரட்சித் தலைவர் ஸ்டைல்
என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களே அப்ப்டின்னு ஆரம்பிச்சா அது சூப்பர் ஸ்டார் ஸ்டைல்
எங்கப் பாசத்துக்குரிய சிங்கங்களே அப்படின்னு ஆரம்பிச்சா அது நம்ம வ.வா.சங்கம் ஸ்டைல்ன்னு ஆகிப் போச்சு...
இதே ஏப்ரல் 26, 2006 சங்கம் ஆரம்பிச்சோம்... இரண்டு வருசம் ஓடிப் போச்சு... மூணாவது வருசம் பொறந்திருச்சு...சந்தோசமா இருக்கு... எதோ சாதிச்ச மாதிரி இருக்கு... ஆரம்பிக்கும் போது என்னவோ தமாசாத் தான் ஆரம்பிச்சோம்....குழு பதிவு அதுவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊருல்ல இருந்துகிட்டு குழுவா செயல்படுறது அவ்வளவு சுலபம் இல்லை...சங்கம் ஆரம்பிக்கும் போது இருந்த உற்சாகத்துல்ல இளையதளபதி விஜய் சொல்லுற மாதிரி எவ்வளவோ செஞ்சுட்டோம் இதை செய்யமாட்டோமான்னு தான் ஆரம்பிச்சோம்... மக்களும் எவ்வளவோ படிச்சிட்டாங்க இதை படிக்க மாட்டாங்களான்னு ஒரு நம்பிக்கை... அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை... நகைச்சுவைக்கு என்றுமே மரியாதை உண்டு என்பது நாடறிந்த செய்தி... எங்கள் நகைச்சுவைக்கும் பதிவுலக மக்கள் கொடுத்த வரவேற்பும் ஆதரவும் தான் எங்களை இப்போ மூணாவது ஆண்டுக்குள்ளே அழைத்து வந்திருக்கு...
350க்கும் அதிகமான பதிவுகள், அதுக்கு அச்சு ஊடகங்களில் கிடைத்த ஆதரவு அங்கிகீகாரம், தொடர் வாசகர்கள் அதையும் தாண்டி சங்கத்து மக்களாகிய எங்களுக்கு கிடைத்த நட்பு வட்டம்.இதெல்லாம் சங்கத்தின் சின்னச் சின்ன சாதனைகள்...
முதல் ஆண்டு விழாவில் நடத்திய போட்டிகள்..அதில் உற்சாகமாய் பங்கேற்ற பதிவுலக நண்பர்கள்..அதின் மூலம் கொடுக்கப்பட்ட பரிசினை, பரிசு வென்ற நண்பர்களின் இசைவோட தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தது என சங்கம் மூலம் கிடைத்த மனநிறைவான அனுபவங்கள்...
இரண்டு ஆண்டுகள் முடிந்து மூணுல்ல அடியெடுத்து வைக்கும் போது கொஞ்சம் கொசுவர்த்தி சுத்தல்லன்னா எப்படி?
சங்கம் துவங்கிய 2006 ஆம் ஆண்டு வெளியான சில சுவாரஸ்யமான பதிவுகள் உங்கள் பார்வைக்குப் படைக்கிறோம்... பாருங்க... ரசியுங்க...எங்களோடு கொண்டாட்டத்தில் இணையுங்கள்
வ.வா.சங்கத்தின் முதல் சுவரொட்டி இது தானுங்க
சங்கத்தின் தல கைப்புள்ள சங்கத்தில் வெளியிட்ட முதல் அறிக்கையைப் படிக்க இங்கே வாங்க
சங்கத்தின் தல கைப்புள்ள பதிவுலக அரசியல் பிரவேசம் குறித்து அளித்த பேட்டியைப் படிக்க
கல்கி இதழில் சங்கம் வந்த நிகழ்வு பற்றி அறிய இங்கே பாருங்க
சங்கத்து இளம் சிங்கம் ஜொள்ளு பாண்டியின் கொள்கை முழக்க கவிதைப் படியுங்கள்
சங்கம் நடத்திய முதல் பற்றிய விவரம் இங்கே
தலக் கைப்புள்ளயின் காதல் கதை பத்திய விவரம் வேணுமா?
சங்கத்து மக்களின் கிரிக்கெட் ஆர்வம் பத்தித் தெரிஞ்சிக்கங்க
கிரிக்கெட் மட்டுமா கால்பந்தாட்டத்திலும் நாங்க குறைஞ்சவங்க இல்ல
சங்கத்தின் முதல் அட்லாஸ் பதிவர் யார்ன்னு தெரியுமா... சங்கத்தின் முதல் அட்லாஸ் பதிவு இதோ
பின்னூட்டக் கயமை ஆரம்பித்த வரலாறு இங்கே.. இந்தப் பதிவு பின்னூட்டக் கயமையை எதிர்த்து சிறப்பு பதிவுலக போலீஸ் வரும் அளவுக்கு பெயர் போன கொத்தனாரின் பதிவு
ஐன் ஸ்டீன் எடிசன் எல்லாரும் வியக்கும் அளவுக்கு சங்கத்து தளபதி சிபி உலகுக்கு எடுத்துச் சொன்ன சரித்திரப் புகழ் தத்துவம் இங்கே
சமீபக் காலத்தில் பதிவுலக ரங்கமணிகள் படித்து பயனடைந்த பெனத்தலாரின் MSc WIFEOLOGY ஆரம்பித்ததும் நம்ம சங்கத்தில் தான்
கொங்கு ராசா போட்டுத் தாக்குன ஒன் லைனர்ஸ்
கொங்குராசா கொடுத்த அட்லாஸ் வாலிபன் விளக்கம் கேளுங்க
நம்ம வெட்டிப் பயலின் ஆட்டோகிராப் பாகம் 1, பாகம் 2 பாகம் 3
டுபுக்கு சங்கத்தில் சொன்ன தீவாளி அனுபவம்
வானத்தில் இருக்க நிலாக் கிட்டவே பிரண்ட்ஷிப் வச்சிகிட்ட இவரை இந்தக் கெட்டப்புல்ல சங்கத்திலே தான் பாருங்க...
சங்கத்தின் 100வது பதிவில் சங்கம் பற்றி பாஸ்டன் பாலா அளித்த ரிப்போர்ட்
BLOGGERS MEET அப்படின்னா என்ன அப்படின்னு சங்கத்துல்ல நடந்த அலசல்
ஆர்குட் அலம்பல் பற்றி சங்கத்தில் வெட்டி பயல் அளிக்கும் தகவல்
தலக்கு வச்ச ஸ்பெஷல் கச்சேரி படிங்க
ராயல் தம்பியின் கன்னிப் பதிவு படிங்க...
இது ஓலக குடி மக்களுக்காக தலயோட ஸ்பெஷல் கட்டுரை
பேராசிரியர் தருமி சாரின் கலைவாணர் பிறந்த நாள் சிறப்பு பதிவு பாருங்க
சவுண்ட் பார்ட்டி உதயின் அசத்தலான சேட்டன் பத்தி தெரிஞ்சுக்குங்க
சங்கம் நடத்திய ஸ்டார் நைட் பத்தி இங்கே
2006 முடிஞ்சு 2007 ஆரம்பிச்ச தளபதி சிபியின் இந்த டைமிங் போஸ்ட் பாருங்க
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து சங்கத்தின் பயணம் இனிதே தொடர்கிறது..
இப்படிக்கு
இளா- மோகன்ராஜ்- தேவ் - சிபி- நவீன்பிரகாஷ் - நாகை சிவா - பாலாஜி - ராம் - அப்பாண்டை ராஜ் - கதிர்
வ.வா.சங்கம்
Friday, April 25, 2008
ரெண்டு அறிவிப்பு
போட்டிக்கான கடைசி நாள். May - 4 - 22:22:22 PST...
மறுபடியும் ரெண்டு சொல்லிக்கறேன்.
தலைப்புல இரண்டுன்னு வரணும்னு அவசியம் இல்லை.
பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரணும்னு அவசியமில்லை. இன்னும் கொஞ்சம் Out of the box யோசிங்களேன்
*சித்தி
* அப்பா (வீட்டுக்காக எவ்வளவு உழைச்சாலும் ரெண்டாவது இடம் தான். அம்மாக்குத்தான் முதல் இடம்.)
*ஒரு மனுஷனுக்குள்ள இருக்குற ரெண்டுங்கெட்டான் மனம்., (ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...)
*சூப்பர் சிங்கர் ஜூனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை... இப்படி...
போட்டி சுவாரஸ்யமா இருக்கும் இல்லை.
இதுவரை வந்த ஆக்கங்கள்:-
(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)
1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்
2) பாஸ்டன் பாலா
அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்
3) அம்பி
அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்
4) சென்ஷி
அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு
5) ச்சின்னப் பையன்
அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!
6) தமிழரசன்
அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்
7) கோவி.கண்ணன்
அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)
8) PPattian : புபட்டியன்
அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா
இ) குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்
9) ramachandranusha(உஷா)
அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு
10) king
அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...
11) பாச மலர்
அ) நதியொன்று விதி தேடி..
ஆ) நிறைமதி காலம்
12) ஆயில்யன்
அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !
உ) இரண்டு கோட்டுத்துண்டுகள்
ஊ) ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!
எ) எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!
13) திகழ்மிளிர்
அ) இதயம் இரண்டாகிறது
14) கண்மணி
அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...
15) இரா. வசந்த குமார்
அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?
ஊ) என்ன தலைப்பு வைக்கலாம்?
எ) ஒளியிலே தெரிவது...
ஏ) எனவே, நான், வேண்டாம்.
ஐ) இரட்டைக் கிளவி..!
16) அபி அப்பா
அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!
17) சுல்தான்
அ) இரண்டுமே அவள்தான்
18) பினாத்தல் சுரேஷ்
அ) இதென்ன கலாட்டா?
19) இளைய கவி
அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"
20) நிஜமா நல்லவன்
அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!
ஆ) யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!
21) சிறில் அலெக்ஸ்
அ) இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்
22) மங்களூர் சிவா
அ) ரெண்டு
23) இரவு கவி
அ) வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவு...
24. Sen22
அ) எனது புலம்பல்கள்_(9)
25) லக்கி லுக்
அ)திரும்பிப் பாருடி!
26) KRP
அ) கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...
ஆ) ரெண்டாவது குரல்
27) Radha Sriram
அ) இரட்டை பதிவர்கள் இம்சை...
28) sathiya
அ) இரண்டக்க இரண்டக்க...
ஆ) ரெண்டே ரெண்டு ஆசைதான்...
29) தமிழ் பிரியன்
அ) தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''
Thursday, April 24, 2008
பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?

கடந்த முறை யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி போட்டேன். பெருவாரியான இளவட்டங்களின் ஹஸ்புல் காட்சிகளோடு பதிவு வெள்ளி விழாவைத் தாண்டி விட்டது. இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.
என்ன தான் மாஞ்சு மாஞ்சு நாலைந்து பக்கங்களுக்கு பதிவு எழுதி என்னத்தைக் கண்டோம் ;-)
சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம். லவ்ஸ் அகராதி பழைய பதிப்பு எண்டு சொன்ன ஆட்களின் ஆலோசனையும் ஏற்கப்பட்டு இந்தப் பதிவில் அவர்கள் சொல்லும் பாதுகாப்பான வழிமுறைகளும் சேர்க்கப்படும் ;-)
வழிமுறை 1
ஜீமெயில் கணக்கு மூலம் தான் விரும்பும் காதலிக்கு மின்னஞ்சல் மூலம் காதலைச் சொல்லலாம். குறித்த பெண்ணின் ரியாக்க்ஷன் நேர்மாறானதாக இருப்பதை அறிந்தால் உடனே நீங்கள்
"ஐயையோ என்னோட ஜீமெயில் ஹாக் (hack)பண்ணுப்பட்டுடுத்து" என்று சமாளிப்பிக்கேஷன் சொல்லலாம்.
வழிமுறை 2
காதலி உள்ளூர்க்காரி என்றால் கோயிலுக்குப் போகும் சமயம் பார்த்து உள்ளே சென்று காதல் கடிதத்தைக் கொடுக்கலாம். இதில் இருக்கும் பாதுகாப்பு என்னவென்றால் பாதணிகளோடு (செருப்பு, ஹீல்ஸ்) கோயிலுக்கு உள்ளே செல்லமுடியாது. எனவே நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு. இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால் இந்துக் கோயிலுக்குத் தான் இது பொருந்து. சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.
வழிமுறை 3
ஏப்ரல் முதலாம் திகதி வரை காத்திருக்கவும். அந்த நாள் வந்ததும் காதல் கடிதத்தைப் பரிமாறலாம். கடிதத்தைக் கண்ட பெண் கடு கடு என்று மாறினால், உடனே சமாளித்துக் கொண்டு
"ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.
வழிமுறை 4
மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சைக்கிள் கேப்பில் காதலை உயர்வாகச் சொல்லும் பொன்மொழிகள், ஸ்கிரீன் சேவரை அனுப்பிப் பாருங்கள். மறுமுனை ரியாக்க்ஷன் எப்படி என்று நாடி பிடித்து அறியலாம். பிடிக்கலை என்றால் இருக்கவே இருக்கு இன்னொரு கிளி.
வழிமுறை 5
காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.
வழிமுறை 6.
இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில் இருந்து, வைரமுத்து, பா.விஜய், தபூசங்கரை காப்பி அடிச்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு காதல் கடிதத்தை எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்கும் போது ஒரு வரி கூடப் படிக்காமல் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு "இடியட்" என்று அவள் திட்டினால் உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
எனவே முதல் கடிதத்தில் ஒன்றுமே எழுதாதீர்கள். வெறும் வெற்றுத் தாளையே நாலாக மடிச்சு நீட்டுங்கள். அந்தக் கடிதத்தை வாங்கி உங்கள் முன்னிலையிலேயே ஆவலோடு (காதல் பனிக்க) பிரித்தாள் என்றால்
"இந்தத் தாளைப் போல என் மனசு இப்பவெல்லாம் வெறுமையாவே இருக்கு, சம்மதமா" என்று பல்டி பிளஸ் லூட்டி அடிக்கலாம்.
படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)
Wednesday, April 23, 2008
தாரே வடபழனி பார்..
முருஹன்:- "என்னாங்க நம்ம நிலமை இப்பிடி ஆகிப்போச்சு.கண்டமேனிக்கு வியர்வை உதிர்த்து உழைச்சு படமெடுத்து ரீலிஸ் பண்ணா ஆனந்தவிகடனிலே மிருகவதை மனிதவதை'ன்னு நம்ம சிம்புசாரை நக்கல் விடுறானுக. கொஞ்சநாளைக்கு முன்னாடி சிகப்புரோஜாக்கள்'லே லேசா டிக்கரிங் பார்த்து எச்சா ஒன்னா சேர்ந்து மன்மதனா காட்டின்னா நல்லாயிருக்குன்னு சொல்லுறாங்களே?"ன்னு பீலிங் டயலாக் பேசி ஒத்த சிப்'லே சரக்கை முடிக்கிறாரு.
சி.பே:- ஆமாம் பாஸ். எங்க தல, எதுகை மோனையா வசனம் பேசி ஹை டெசிபல் மீயூசிக்'லே இண்ட்ரோ கொடுத்தா தியேட்டரிலே வந்துட்டாண்டா கோமாளி'ன்னு பசங்க தம்மடிக்க கிளம்புறானுக. லேடிஸ்'க தூக்கிட்டு வந்த பிள்ளைக கிட்டே இடைவேளையிலே பாப்கார்ன் வேணுமின்னு கேட்டு அடம்பண்ண இன்னொருதடவை இந்த மாமா எடுக்கிற படத்துக்கு கூட்டிட்டு வந்துருவேன்னு டிரெஜிடி பண்ணுறாங்க. நம்ம தல'க பாடுதான் காமெடியா போகுது.
முரு:- "இதுக்கு என்னா பண்ணலாமின்னு சொல்லுங்க. ஊருக்குள்ளே கலவரமான எப்க்ட்'லே எங்க தல'ய பத்தியே அவரு நடிப்பை பத்தியே எல்லாரும் பேசனும். அந்தமாதிரியே ஒரு படத்தை எடுத்துறனுமின்னு துடியா துடிக்கிறேன்."
சி.பே:- நானும் உங்களமாதிரியேதான் இப்பிடிதான் எந்நேரமும் திருத்தணிய பத்தியே நினைச்சிட்டே இருக்கேன்.
முரு:- "அப்பிடியா அதுக்குள்ளே டைட்டில் எல்லாம் வைச்சாச்சா?"
சி.பே:- "இதுக்கே இப்பிடி ஆச்சரியப்படுறீங்க? நாங்க எங்க தல பேசப்போற அடுக்குமொழி பன்ச் டயலாக்'ல்லாம் எழுதியாச்சு.
முரு:- "என்னா பாஸ் அது??"
சி.பே:- "நிறைய கிடைச்சு குடிக்க முடியாத கடல்தண்ணி இல்லாடா, கொஞ்சமா கிடைச்சாலும் தேனாட்டாம் இனிக்கிற சுனைத்தண்ணி, அவந்தாண்டா திருத்தணி, என்னவிட்டு விலகி நில்லு நீ" எப்பிடி??"
முரு:- " கேட்டதும் கால் கட்டைவிரலிலே இருக்கிற நாலு முடியிலே இருந்து உச்சத்தலையிலே இருக்கிற எல்லா முடியும் ஜிவ்'ன்னு கரண்ட் அடிச்சமாதிரி நட்டுக்கு நிக்கிது பாஸ்"
எல்லாரும் நாசமா போகப்போறிங்கடா, இன்னும் கொஞ்சநாளிலே பூமாதேவி சிரிக்க போறா எல்லாரும் உள்ளே போகப்போறீங்கன்னு கொஞ்சம் அதிகமாக பீல் ஆகி சிசர் மனோகர் டேபிளிலே நின்னு கத்துறாரு. அவருக்கு கூட வந்த கஞ்சா கருப்போ அய்யோ நீதான் அடுத்த படத்துக்கு ஹிரோ'ன்னு உப்புக்கு சப்பாணியா போட்டு படுத்துறானுக'ன்னு சரக்கைவிட்டாவது நிம்மதியா இருக்கலாமின்னு வந்த தண்ணிய போட்டு சலம்பலை கொடுத்துட்டு இருக்கானே'னு அவரும் பீல் ஆகுறாரு.
க.க:- "ஏலேய் செவனேன்னு ஒக்காருய்யா. பெரிய வெள்ளக்காரனட்டாம் பெர்முடா போட்டு வந்துட்டு டேபிள் மேலே ஏறிக்கிட்டு உள்ளே போகப்போறீங்கன்னு கத்திட்டு இருக்கே? நீ உள்ள என்னத்தாயவது போட்டு வந்தியா? இருக்கிறவனை நொள்ளைகண்ணாகிறது'ன்னே வந்துறாய்ங்கன்னு சவுண்டு விட்டு சரக்கை அடித்து ஊறுகாயை உறிஞ்சுகிறாரு."
சி.பே:- "இங்க பாருய்யா, இவனுக அலும்பை... ஏலேய் படம் எடுக்கிறேன்னு அதுக்கு பேரு கடவுள் அது இதுன்னு வந்த மொக்கையிலே நடிச்சது நீதானே??"
க.க:- "அண்ணே , ஏண்ணே, அந்த சோகத்தயெல்லாம் போட்டு கெளறிக்கிட்டு கெடக்கீங்க, அந்த சோகத்தை மறக்கதானே தண்ணியாத்த வந்தேன். இங்கன என்னாடா'ன்னா ரெண்டாவது ரவுண்டு'லே சிசர் அலும்பை கூட்டிக்கிட்டு கெடக்கு..
முரு:- "என்னாய்யா இப்பிடி பீல்'ஐ போடுறே? தயாரிச்சது யாரு அடுத்தவன் காசு'லே சமைச்சு திங்கிற ஆளு, அவரு காசு போட்டு சமைச்சு கொடுக்கிறாருன்னா என்னாதயாவது சொல்லி வித்திற மாட்டாரா?"
க.க:- " அண்ணே அதை நம்பிதானே நானும் வந்ததும் வரமிட்டுமின்னு அந்த படத்திலே நடிச்சேன், மருத திருவிழா'க்கு ஆத்துக்கு கூட்டம் கூடுறமாதிரி நைட்'லே தீயேட்டருலே கூட்டம் சேருவாய்ங்க, ஆனா போனவாரம் திருவிழா வந்துச்சு'லே ,மருத போயிருந்தேன், எதிர்சேவை'க்காக அறை எண்'க்கு நடுநீசி 1.30 காச்சின்னு போட்டுருந்தாய்ங்கன்னு நடனா தீயேட்டரு'க்கு ஓடினேன். அங்கன இருக்கிற சேர்களோட அதிகமா கொசு திரிஞ்சுக்கிட்டு கெடந்துதக...
முரு:- "அப்புறம் என்னாய்யா.... இப்பிடி பீல்'ஐ போட்டு திரியுறே?
க.க:- மக்கா எண்ணிக்கைய விட கொசு எண்ணிக்கைதான் அதிகமா இருந்துச்சு'ன்னு சிம்பாலிக்கா சொன்னேண்ணே, அதுக்கூடய புரியல?"
சி.பே:- "நானு செல்லாகாசா போயிட்டேன்னு சொல்லாமே சொல்லுறான்"
முரு:- "அவனா நீயீ? கொஞ்சம் தள்ளி ஒக்காரு, கொஞ்சமா செயிக்கிறவங்களுக்கு பெருசா செயிக்க வைக்கனுமின்னு இருக்கோம், தோத்துப் போனதுகளோட கூட்டு சேர்ந்தா என்னத்துக்கு ஆகுறது?"
சிசர் மனோகர்:- " கூஜா தாங்கியேதாய்யா நீங்கல்லாம் நாசமா போறீங்க, அவனுக எல்லாம் நீங்க சிந்திச்சது எல்லாத்தையும் திஸ் இஸ் .......... ஃபிலிம்'ன்னு போட்டுக்கிறான்."
முரு:- " ஹிம், பெரிய மனுசன் நெஞ்சுல சந்தனத்தை பூசிக்கிட்டு வந்து நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்லிட்டாருய்யா! போய்யா போ எங்கனயாவது அடுத்த படத்துக்கு ஒட்டு ரோலுக்கு சப்போர்ட் ரோலு கிடைக்குதான்னு பாரு"
கஞ்சா கருப்பும், சிசர் மனோகரும் சோகத்திலும் சோகமாய் அடுத்த பாருக்கு நடைய கட்ட ஆரம்பிக்கும் வேளையில் பெருங்கூட்டமாய் சத்தமாய் தானும் முன்னாடி போகாமல் பின்னாடி வந்தவன் பின்னாடி நிக்காமல் முன்னாடிக்கு வந்துருன்னு நடுவிலே நிக்கறவன் கொடுக்கிற ஆதரவுமாக இருக்கிற பெருங்கூட்டமொன்று பாருக்குள்ளே நுழைக்கிறது.
இந்த பார்'க்கு வந்ததை நான் வழிமொழிகிறேன்னு குரல் கேட்க அட ஙொங்யாலே இங்கனயயும் ஆரம்பிச்சிட்டிங்களா?'ன்னு சன்ன குரலிலே அழுவாச்சியோட பாவப்பட்ட ஜீவன் சிணுங்க ஒத்த டேபிளுக்கு சைடுக்கு மூணு மூணு சேரு இழுத்து போட்டு விஷ ஜந்துகளாக அமர்க்கிறார்கள்.(பி.கு:- மனநோயாளிகளை விட விஷ ஜந்துகள் அடைமொழி நல்லாயிருக்குமின்னு நம்புறோம்)
"ஙொங்யாலா என்னாத்தாயாவது ஆர்டர் பண்ணுங்கய்யா! நீயூஸ் வாசிக்கிறக்குமுன்னாடி நான் போயி சிலேடு தூக்கிட்டு நிக்கனும்"
"டவுசர் கிழியுது டாவு தீருது, சாப்பாத்தி திங்கப்போனா மாவூ தீருது, தகரநெடுகாதனுக்கு செவடு ஆகுது, மூணு ரவுண்டுக்கு மேலே அடிச்சதான் போதை ஆகுது, மை தீர தீர எழுதி பார்த்தாலும் சொம்பு'ப்பன் மாதிரி ஆக முடியல'ன்னு உருவம் மருகுது!.
ஐயா சாமி இதுக எதோ வேத்து கெரகத்திலே இருந்து பலத்தரப்பட்ட உயிரினங்கள் ஒன்னாக்கூடி சரக்கு போட வந்திருக்காங்ய்க, இந்த இடத்தை விட்டு கெளம்புனாதான் நம்ம குடும்பத்தையும், நாமே பார்க்கிற தொழிலையும் காப்பாத்தமுடியுமின்னு முருஹனும்,சின்ன பேரரசும் எஸ் ஆக பேரர் ஆர்டர் எடுக்க வர்றாரு.
தள:- "நாங்க உள்ளே வந்ததும் ரெண்டு பேருக முக்காடு போட்டு வெளியே போறாங்களே! அவங்க யாரு"
பேரர்:- "அவங்க ரெண்டு பேரும் சினிமாகாரய்ங்க, இம்புட்டு நேரமா சினிமா எடுக்க போறதா நாலு கட்டிங்க போட்டு கூத்து பண்ணிட்டு இருந்தானுக, ஒங்களுக்கு எத்தனை கட்டிங் வேணுமின்னு சொல்லுங்க"
லக்கி:- "கட்டிங் விடலன்னா நைட் ஒடம்பு நடுங்குது,விடிச்சு எந்திரிச்சா அடுத்த தெரு ஆத்துக்குள்ளே இட்லி வேகுது, பக்கத்து வீட்டிலே சுண்டகஞ்சி ரெடியாகுது, ஆனா எங்கவீட்டிலே மட்டும் அடி விழுகுது. தாவூ தீருது"
பேரர் மெரண்டு போய் பேஸ்தடிச்சு அந்த இடத்தை விட்டு தெறிச்சு ஓடுறாரு, பக்கத்திலே ஒக்கார்ந்தவாய்ங்க எல்லாம் வேப்பிலை மரத்தை கிளையோட பிடுங்கி சாமியடிச்ச மாதிரி வாசலை பார்த்து ஓடுறாங்க.
அடடே நாமே வந்ததும் நார்மல் பிளேசஸ், அன் - நார்மல் பிளேசஸ்'கிருச்சுலா, இதை மாதிரிதான் நான் மலேசியா'விலே இருக்கிறோப்போயும் ஆச்சு'லா'னு சரக்கு விடாமலே தள பொலம்ப ஆரம்பிக்க லக்கி குடிக்க வைச்சிருந்த தண்ணிய எடுத்து குடிச்சு போதையிலே அங்கயும் போலி-தகரநெடுகாதன் இருக்காறான்னு கேட்டு மட்டையாகிறார்.
ஙொய்யாலா சரக்கு வரலை, பெப்சி வரலை, தண்ணி வரலை, முத்தம் கவுஜ எழுதுனா பத்து கமெண்ட் வரலை, நாமெல்லாம் பைத்தியாமன்னு கேட்டு வைச்சா "ஆமாம்"னு ஐம்பது கமெண்ட் போடுறாய்ங்க'ன்னு ஈனஸ்வரத்திலே சுதியோடு கஷ்டஜீவன் சிணுங்கலாய் புலம்ப சிபி வந்து ஆபாந்துவானாக முன்னுக்கு வருகிறார்.
தள:- "ஒங்களுக்கு ஆயிரம் கஷ்டமின்னா அதிலே ஒன்னை ஒன்னையாவது நினைச்சி சிரிப்போம், இப்போ ஒங்களுக்குன்னு இருக்கிற பிரச்சினை போயி ஒட்டு மொத்த பாருக்குள்ளே பிரச்சினை ஆகிப்போச்சே"
ப.பா:- " என்னாய்யா இந்த பாருக்குள்ளே பிரச்சினை?"
தள:- " நாமே வர்றதுக்கு முன்னாடி யாரோ ரெண்டு பேருங்க கோமாளிய வைச்சி படம் எடுக்கிறத பத்தி பேசிட்டு இருந்தாங்களாம், நாமே வந்ததும் சத்தமில்லாமே எஸ் ஆகிட்டாங்க"
ப.பா:- " சரிய்யா, அதுக்கு நீ என்னாய்யா பண்ணப்போற?"
தள:- "அவங்க எடுக்க நினைச்ச படத்தை நான் எடுக்க போறேன்"
ப.பா:- " ஐயா சாமிகளா, எல்லாரும் புல் அடிச்சிம் மட்டையாகிறாதிங்கய்யா, நம்ம தள கதை சொல்ல போறாராம், அந்த கதையிலே படம் எடுக்க போறாரம்"
அய்யோய்யோ சும்மாவே ஆவிக்கே ஆம்பிள்ள பொம்பிள்ள'ன்னு பேதம் பிரிச்ச தெய்வம் இப்போ சினிமா எடுக்கப்போறேன்னு அவதாரம் எடுக்கப்போகுதான்னு உண்மைதமிழன் அந்த படத்துக்கு நாப்பது பக்கதுக்கு விமர்சனம் எழுதிடனுமின்னு மனசுக்குள்ளே கங்கணம் கட்டுக்கிறாரு.
தள:- "அவ்வளவு சீக்கிரத்திலே எல்லாம் வந்துறாது, இப்"போதை"க்கு டைட்டில் மட்டும் போடுவோம். அப்பாலிக்கா இன்னும் வருவோம்.
சங்கம் புரெடக்சன் பெருமையோடு வழங்கும்,
தள சிபியின் கைவண்ணத்தில்,
இளைய தளபதியின் "குருவி" க்குப் போட்டியாக...

Saturday, April 19, 2008
கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 2

பாகம்1
Friday, April 18, 2008
Wishes: ராம்
அவரு ஆர்குட்டுல நடத்தின அலப்பரைய ஏற்கனவே வெட்டி கிழிச்சு தொங்கப்போட்டாலும், அதென்னமோ ராமை உசுப்பேத்தி விடறதுல சங்கத்து சிங்கங்களுக்கு போட்டா போட்டி எப்பவுமே நடக்கும். அவர் ஆர்குட் புரைபுலை பாருங்க..
relationship status: single
(எலேய் எதுக்கு பிட்ட போடறேன்னு தெரியுது..)
birthday: April 19
(இருக்கட்டும், வருஷம் என்ன?)
languages i speak: English (US), Tamil, Kannada.
(சும்மா கதை விடக்கூடாது, i walk, talk, english எல்லாம் இங்கிலீசுன்னா தெருவுல வடை சுடற பாட்டிக்கும் இங்கிலீசு தெரியும்னு சொல்லும்.)
here for: friends
(girl friendsன்னு நேரா சொல்ல வேண்டியதுதானே)
children: no
(யாருக்குத்தெரியும்..)
humor: campy/cheesy, friendly
(அதை நாங்க இல்லே சொல்லோனும். நீங்களா சொல்லிக்க கூடாது)
fashion: classic
(தோடா, கிழிஞ்ச சாக்ஸ், சட்டை போட்டுகிட்டு போயி, அதை எல்லாருக்கும் காட்டுறதுதான் இப்போ fasshion. அந்த நாத்தம் புடிச்ச சாக்ஸ்ஸ தொவச்சு போடக்கூடாதா? செத்து போன எலி கூட உங்களைப் பார்த்தவுடனே எந்திருச்சு ஓடிச்சாமே? classic ன்னா ஹோம்லியா ஃபிகர் கிடைக்கும்னு நினைப்பா?)
smoking: no
(அடப்பாவி, அடப்பாவி, இது போதுமே உங்க புளுகு மூட்டைக்கு அச்சாரம்)
drinking: no
(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு வெளி வேசம், தேவையா இது எல்லாம்?ஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களா?)
pets:i love my pet(s)
(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு, இதுல உங்களுக்கு pet(s)அதுவும் பிராக்கெட்ல, ரெண்டு அனகோண்டா வளர்த்துறதுதானே?)
living:alone, with roommate(s).
(தனியா ரெண்டு பேரு வந்து இருக்கோம்னு சொல்ற கவுண்டமணி மாதிரி இருக்குலே)
hometown: மதுரை
(மதுரை என்ன பாவம் செஞ்சுதோ தெரியல)
webpage: http://raamcm.blogspot.com/
(இதை எவனும் hack பண்ணித்தொலைக்க மாட்டேங்கிறானே :()
sports: ரம்மி,மூணு சீட்டு, மங்காத்தா
(நல்லா வருது வாயில, இதெல்லாம் எப்போ sportsல சேர்த்தாங்க?)
books:இன்னும் படிக்கணும்.
(ஆமா ஒன்னாங்கிலாஸ் பொஸ்தகத்தையே எத்தனை வருசமாத்தான் படிப்பீங்க?)
cuisines: Amma senchu kodukkira ethuvum..
(பக்கத்து ஊடு, எதிர்த்த வூடு, கீழ் வூடு இப்படி எந்த அம்மா எப்போ சாப்பாடு செஞ்சாலும் முதல்ல ஓடிப்போயி அம்மா.. தாயேன்னு நிப்பீங்களே அந்த அம்மாக்களா?
இப்படித் தெருவுல எந்த கார் நின்னாலும் ஓடிப்போயி நின்னு போஸ் குடுத்து போட்டோ
எடுத்துக்கும் எங்க அன்புத் தம்பி, ஆருயிர் நண்பன், தைரிய துருவம், சங்கத்தின் சிங்கம்(கருமம், எப்படி எல்லாம் சொல்லி தொலைக்க வேண்டி இருக்கு பாருங்க) பொறந்த நாள் வாழ்த்துக்கள்! சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.
('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....)
Thursday, April 17, 2008
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......

வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.
பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)
பாடல்: பூபாளம் இசைக்குழு.
பாடல் வரிகள்:
Come on Mohan, come on..don't cry
mummy will be here in a minute
சோ றற சோ.......றொகான் சோ றற சோ
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
சோறு கறியோ வெறி சொறியப்பா
களைச்சுப் போனேன் ரேக் எவே என்பா
உங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா
ஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
வீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா
நீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா
நாலுபேர் போல் நாங்களுமப்பா
வாங்க வேணும் புதுக்கார் என்பா
உடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்
ஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா
எங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்
இண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா
செலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்
ஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா
நன்மை தீமையேதும் சொல்லிப்போட்டனெண்டால்
நல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா
Tuesday, April 15, 2008
யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு முன்பே, தாய்நாட்டில் வாழா வெட்டி வாலிபர் சங்கம் அமைத்து குட்டிச் சுவர் மாநாடெல்லாம் நடாத்தியிருந்தோம் என்று முந்திய பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-) விடுபட்டவை பின்னர் வரும்.
1. காய் - பிகரு, பொண்ணு
2. எறிதல் - சைட் அடித்தல்
3. காய் பார்த்தல் - பிகரை சைட் அடித்தல்
4. சுழட்டல் - பிகர் ஏரியாவில் ரவுண்ட்ஸ்
5. காயிதம் - லவ் லெட்டர்
6. அவர், அத்தான் - காதலனைப் பிரியமாக அழைத்தல்
7. அவ, என்ரை ஆள் - காதலியைப் பிரியமாக அழைத்தல்
8. வில்லன், நம்பியார் - காதலியின் அப்பா, அண்ணன்
9. வில்லி - காதலியின் அக்கா
10. தேவதாஸ், ராஜேந்தர் - காதலில் தோற்றவர்
11. சரக்கு - வடிவான (அழகான) பெண்களை அழைக்கும் பொது வார்த்தை
சந்திக்கும் இடங்கள்
1. டியூசன் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வரும் நேரம்.
2. கோயில் திருவிழா காலங்கள்
3. காய் (பிகர்) வீட்டின் வெளிக் குந்தில் (திண்ணையில்) காத்திருக்க,
சைக்கிளில் மாம்ஸ் ரவுண்ட் அடிப்பார்.
4. பள்ளிக்கூட விளையாட்டு மைதானம்
5. கிடுகுவேலி மறைப்புக்கள்
குண அம்சங்கள்
நிறைய மனோ, சித்ரா ஜோடிப்பாடல்கள் கேட்டல் - அண்ணன் சந்தோசமா இருக்கிறார் எண்டு அர்த்தம்
இளையராஜா, டி.ராஜேந்தரின் தனிப்பாடல்கள் கேட்டல் - அவவை (காதலியை) சந்திக்கேல்லை எண்டு அர்த்தம்
நிறைய ஆனைக்கோட்டை நல்லெண்ணை வைத்து தலையை பக்கவாட்டில் இழுத்தால் - "படிப்பு தான் முக்கியம், அப்பா, அம்மா பேசிச் செய்த கல்யாணம் தான் கட்டுவன்" இப்படி வசனம் பேசும் பெடியன்.
தலைக்கு ஜெல் வைத்து மேவி இழுத்தால் - காதல் பூப்பூக்கும் பருவம்.
Friday, April 11, 2008
Computer programmer காதலன் எழுதும் கடிதமே...!
Wednesday, April 9, 2008
கலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 1

சங்கம்னா ரெண்டு
சரி இரண்டாவது வருடத்துக்கான இரண்டாவது போட்டிக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு சங்கத்துல கூடி யோசிச்சப்ப, நம்ம தல பேசாம "இரண்டு"னே தலைப்பு வெச்சிடலாம்னு பிரச்சனையை சுலபமா முடிச்சிட்டாரு.
"இரண்டு" என்ற கருவில் கதை/கட்டுரை/நகைச்சுவை/அனுபவம்/ கவிதை எது வேண்டுமென்றாலும் சமர்ப்பிக்கலாம். நீங்க எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதலாம் ஆனால் ஒருவர் "இரண்டு" ஆக்கங்களை மட்டுமே போட்டிக்கு சமர்பிக்கலாம்.
என்ன எல்லாம் எழுதறதுனு யோசிக்கறவங்களுக்கு சில டிப்ஸ் :
1. இரண்டாவது மதிப்பெண்.
2. Split Personality
3. சித்தி (இரண்டாவது தாய்)
4. இரண்டாம் வகுப்பு டீச்சர்
5. இரண்டாவது காதல்
6. இரண்டாவது நட்பு
7. பெரிய அளவிளான போட்டியில் இரண்டாம் இடம்... (தோல்வியை இப்படி கூட சொல்லலாம் இல்லை)
இப்படி நிறைய.... எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனு நீங்க ஃபீல் பண்ணக்கூடாது இல்லை. அதான் ;)
தலைப்பில் இரண்டு இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. கருதான் முக்கியம்.
முதல் இருபது போட்டியாளர்களுக்கு நீங்களே ஆச்சரியப்படும் வகையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்படும்.
* அதிக ஆக்கங்களை எழுதபவருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு.
* கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, ஆன்மீகம், சினிமா, இலக்கியம், அனுபவம், மொக்கை இப்படி அதிக பிரிவுகள் எழுதுபவருக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு
முதல் பரிசு - மூன்றாயிரம் ரூபாய்
வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் முறை :
1. மக்கள் தீர்ப்பு (ஓட்டெடுப்பு) - 34%
2. பங்கெடுப்பவர்கள் தீர்ப்பு -
மக்கள் ஓட்டெடுப்பிலிருந்து முதல் 20 ஆக்கங்களை எடுத்து, அதில் உள்ள 20 நபர்கள் தங்களை தவீர மீதமுள்ள 19 பேர்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள் - 33%
3. சங்கத்து சிங்கங்கள் - 33%
சமர்பிக்கும் முறை
உங்கள் ஆக்கங்களுக்கு கீழே இந்த இணைப்பை கொடுக்கவும்.
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை
மேலும் இந்த பதிவில் நீங்கள் போட்டிக்கு சமர்பிக்கும் இரண்டு ஆக்கங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நீங்க நிறைய எழுதினா எல்லா சுட்டிகளையும் கொடுக்கலாம். அதில் போட்டிக்கான இரண்டு இடுகைகளின் சுட்டியை குறிப்பிட்டு தெளிவாக கொடுக்கவும்...
போட்டியில் பங்கேற்க இறுதி நாள் ஏப்ரல் 26. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு... அடிச்சி ஆடுங்க மக்கா;)
இதுவரை வந்த ஆக்கங்கள்:-
1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்
2) பாஸ்டன் பாலா
அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்
3) அம்பி
அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்
4) சென்ஷி
அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு
5) ச்சின்னப் பையன்
அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!
6) தமிழரசன்
அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்
7) கோவி.கண்ணன்
அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)
8) PPattian : புபட்டியன்
அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா
9) ramachandranusha(உஷா)
அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு
10) king
அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...
11) பாச மலர்
அ) நதியொன்று விதி தேடி..
12) ஆயில்யன்
அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !
13) திகழ்மிளிர்
அ) இதயம் இரண்டாகிறது
14) கண்மணி
அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...
15) இரா. வசந்த குமார்
அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?
16) அபி அப்பா
அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!
17) சுல்தான்
அ) இரண்டுமே அவள்தான்
18) பினாத்தல் சுரேஷ்
அ) இதென்ன கலாட்டா?
19) இளைய கவி
அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"
20) நிஜமா நல்லவன்
அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!
பிரம்ம ரச போட்டி முடிவுகள்
இதோ இரண்டாம் பரிசு வென்ற அம்பியோட(;)) படம்...
முதல் பரிசு...
எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...
குட்டீஸ் கார்னர் - பேபி பவன்
இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை

இது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...

போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கு சங்கத்து சிங்கங்களின் சார்பாக வாழ்த்துக்கள். போட்டியில ஜெயிக்கறதை விட பங்கெடுத்துக்கறது தான் முக்கியம் ;)
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அனுப்ப சின்ன தலை தனி மடலில் தொடர்பு கொள்வார்.
நம்ம தலயும், சின்ன தலயும் கேமிரா கவிஞர்களா இருக்கறதாலதான் போட்டோ வெச்சி காமெடி போட்டி நடத்திட்டார். கேமிராவையே பார்க்காத எங்களுக்கு எல்லாம் அநியாயம் செஞ்சிட்டார்னு ஃபீல் பண்ணி பல பிராதுகள் சங்கத்துக்கு வந்துச்சு. அதுக்கு அமைச்ச விசாரனை கமிஷன் அடுத்து ஒரு போட்டி வைக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கான விபரம் இன்னும் அரை மணி நேரத்தில்...
அடுத்த பதிவில் சந்திக்கலாம்...
Sunday, April 6, 2008
Friday, April 4, 2008
இந்த வார கிசு கிசு
சரி, காதுல விழுந்த விஷயங்களை சொல்லுவோம்...அதென்னமோ கிசு கிசு படிக்கிறதுன்னாவே மக்கள் குதூகலாமாகிடறாங்க.
* வவ்வாலு சென்னையில இல்லையாம், புதரகவாசியாம். வேற பேருல பதிவு கூட எழுதிட்டு இருக்காராம்.
* திரட்டியும் தமிழ்ப் பதிவுகளும் இணையும் காரணம் என்ன? இதன் பிண்ணனியில் நடந்த விசயம் என்னவா இருக்கும்?
* இந்த வாரம் குடுமிப்புடி யாரு? பெயரில்லாதவர் சம்பந்தப்பட்ட பதிவுகள்னு நினைச்சா தப்பு. அது கில்லியில நடக்குது -http://gilli.in/digg-for-tamil-blogs/
* முகமூடிப் பதிவரும் மராம என்ற பதிவரும் ஒருத்தர்தானாம்.
விளம்பர இடைவேளை.

சங்கத்தின் இரண்டாமாண்டு கொண்டாட்டம்
* KRSம், ஜிராகவனும் இருவரும் ஒரே நேரத்துல இந்தியா போனதுக்கு காரணம் ஏதோ ஒரு திரட்டி சம்பந்தமா இருக்கலாம்னு லோவெல் இருந்து ஒரு சேதி.
*தமிழ்வெளி தனியா வேலை வாய்ப்பு வலைத்தளம் ஆரம்பிச்சிருக்காங்க.
* மலேசியா போன சங்க(ம)ம் மூத்தப் பதிவர் அந்த பதிவர்களை பார்க்க முடியலேன்னு வருத்தத்துல இருக்காராம். புகைச்சல் இல்லைன்னு ஒருதரம் ஆத்தா மேல பண்ணின சத்தியமும் புஸ்ஸாகிருச்சாம்.
* இந்த மாதிரி கிசு கிசு வருதுன்னு தெரிஞ்சிகிட்ட தேனி அலெக்ஸ் ஒரு பதிவா போட்டு எஸ் ஆகிட்டாராம்.
* சிங்கப்பூரிலிருந்த பல பதிவர்கள் புதரகம் வரப்போறாங்களாம். அதுக்குக் காரணம் "அவராம்". நல்லதுதானே.
விளம்பர இடைவேளை.
பட்டையா போட விருப்பம் இருக்கிறவங்க போட்டுக்கலாம், கட்டாயம் ஒன்னும் இல்லே.
* கேள்வி பதில் சீசன்ங்கிறதனால வ.வா.சவுலயும் கேள்வி பதில் போடுறாங்களாம். முதல்ல பதில் சொல்றவருக்கு எதைச் சொன்னாலும் புரியாதாம்.
* ஐசுவர்யா பிறந்த ஊருல இருக்கிறவருக்கு ராத்திரியான செல் போன் பிரச்சினையாம், பொண்ணுங்க தொந்தரவு தாங்கலைன்னு தினமும் "புல்" நைட்டும் முழிச்சு இருக்க வேண்டி இருக்காம்.
*இட்லி வடை பத்துப்பேராமே? அந்தப் பத்துப் பேரு யாரு?
* எனி இந்தியன் - வார்த்தை பத்தி இட்லி வடை விமர்சனம் போட்ட காரணம் என்னவா இருக்கும்?
* ஓமம் ஒரு வெள்ளை வீட்டுல அடைக்கலம் ஆகிட்டாராம். இனி இந்தியாவுக்கு போற அவசியம் இல்லைன்னு சூலூருல பேசிக்கிறாங்க.
* சாம்புவும், ஈகிளும் வேலை இல்லாம இருக்காங்களாமே....
*சங்கமம் எல்லாப் பதிவுகளையும், அசையும் படங்களையும் திரட்டுறதால நெறைய கில்மா பதிவுகளையும், யூ டுப் கில்மாக்களும் வருதாம், அதை எல்லாம் என்ன சொல்லி நிறுத்துறன்னு தெரியாம எல்லாரும் மண்டை காயறாங்களாம். நல்ல படங்களை விட தமிழ்ல கில்மா படங்கள்தான் அதிகமா இருக்காம், என்ன கொடுமை சார் இது.
* இந்த மாசம் வலைப்பதிவுல 2 (அ-மீரா-கம்) மக்களுக்கு கண்ணாலம். அதுல ஒருத்தருக்கு நிறைய குசும்பாம்..
அடுத்த வாரம் கிசுகிசுக்கலாம்..
உங்களுக்கு தெரிஞ்ச கிசு கிசுக்களை இந்தப் பதிவுல் பின்னூட்டமாவே போடுங்க. அடுத்த வாரம் வெளியிடப்படும்.
Wednesday, April 2, 2008
Software engineers' Dream Girl - 100% ஜொள்ளு பதிவு


தாயகத்தில் இருந்த அந்தப் படிக்கிற வயசிலே நம்ம நண்பர்களோடு சேர்ந்து வாழாவெட்டி வாலிபர் சங்கம் அமைச்சு வெற்றிகரமா குட்டிச்சுவர் மாநாடு எல்லாம் செய்திருந்தோம். அந்தக் கதையெல்லாம் சொல்லப்போனா இன்னொரு "பாலைவனச் சோலை" படம் எடுத்தது மாதிரியாகிவிடும். அதையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இப்போதைக்கு நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒரு மாத கெளரவப்பதவியில் அமர்த்தியிருக்கு. சங்கத்துக்கு ஒரு நன்றி போட்டு ஜொள்ளு, லொள்ளு, கலாய்ப்பு பதிவு மாதிரி ஏதாவது கொடுக்கலாம் என்றிருக்கின்றேன். சகிக்கக்கடவுது ;-)
முதல் பதிவே ஒரு புதிரோடு வருது. இந்தப் பதிவில் இருக்கும் அம்மணி ஒரு பிரபலத்தின் மகள், அந்தப் பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்களேன் பார்ப்போம்.
பிந்திக் கிடைத்த தகவலின் படி கேள்வியே தப்பாம், நம்ம மங்களூர் அண்ணாச்சி சொன்னார். யாரோ ஒரு எடுபட்ட பயல் இது பில்கேட்ஸ் பெண்ணு என்று சொன்னாலும் சொன்னார். அதை உறுதிப்படுத்தாமலே போட்டுவிட்டேன். இது நடிகை Rachael Leigh Cook
எனவே கேள்வி நேரம் மூடப்படுகின்றது ;)

