எழுத வேண்டியதெல்லாம் எழுதி விட்டு பராக்கு பார்த்து கொண்டு உட்கார்ந்திருக்கும் அந்த கடைசி ஒரு மணி நேரமும் அப்படியே மனசுல உற்சாகம் பீறிட்டுக்கொண்டிருக்கும்!
நாளையிலேர்ந்து லீவு ஜாலி எங்க போகலாம்?
ஊரைசுத்தலாமா?
ஊரை விட்டு ஓடிப்போகலாமா? - தனியாத்தான்:-(
இப்படியாக பல நினைப்புக்கள் ஒரு பத்து நிமிஷத்திற்குள் வந்து ஆளை புரட்டி சந்தோஷக்கடலில் ஆழ்த்தி விட்டுச்செல்லும் சமயத்தில் தான் அது தோணும்!
சரி இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கே சும்மா ஒரு அடிஷனல் பேப்பர் வாங்கி எழுதுனா என்ன? என்று நினைத்து பேப்பர் வாங்கிய பிறகுதான் ஆமாம் என்ன எழுதுறது என்று நினைக்கதோணும்!
எழுதுவோமே! அப்படின்னு மெயின் பேப்பர்ல இருக்கற விஷயங்களை ஆங்காங்கே பொறுக்கி எடுத்து சாய்ஸ் கொஸ்டீன் எழுதி (சிவுப்பு இங்க்ல அண்டர்லைன் பண்ணனும்!) அதுக்கு பொறுக்கிய விசயங்களை எடுத்துகொண்டு வந்து போட்டா போதும்! ஒ.கே ஆயிடும்! ( இப்படி பரீட்சை எழுதி பெத்த படிப்பு முடிச்சாச்சு!)
அப்படி ஒரு மீள் பதிவு நன்றி போட்டுக்கிறேன்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நன்றி சொல்லும் நேரம்!
நானாக நானிருந்த காலம் போய்,
வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;
வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்
ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்???
நகர்ந்து விட்டது நாட்கள்!
தகர்ந்து விட்டது ஆசை!
நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம் தான்
எல்லோருக்கும் உண்டு.!
நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!
நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!
நகர்வு இருக்க வேண்டும்
நன்மை செய்யும் நகர்வாகவே..!
என் நகர்வு வரும் பயணிக்கு,
நலமாக அமையவேண்டும்!
நாளும் நல்லது சொல்வோம்
நாளும் நல்லது செய்வோம்
நாளும் நலமுடன் வாழ்வோம்!
நாளும் நல்லவராக வாழ்வோம்!
நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரி ஒரு மாசம் இங்க குந்திக்கினு எழுதுன பரீட்சைக்கெல்லாம் ரிசல்ட் வந்தாத்தான் தெரியும் பாசா பெயிலான்னு!
சரி இங்க் அடிச்சுக்கிற நேரம் வந்துடுச்சு!
இது வரைக்கும் இந்த பக்கமே வராத சிங்கங்களெல்லாம் கொஞ்சம் வந்து நில்லுங்கப்பா!
நான் இங்க் அடிச்சுட்டு எஸ்கேப்பு ஆகுறேன்!

பதிவு போட்டே டென்ஷன் ஆகிட்டேன்!
முழுசா மூணு நாள் ரெஸ்ட் எடுத்தாத்தான் இனி உசுரு வாழமுடியும்!






















