Showing posts with label Kaipullai. Show all posts
Showing posts with label Kaipullai. Show all posts

Tuesday, March 17, 2009

இளமுருகாற்றுப்படை

இது ஒரு மொய் பதிவு. சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு அரும்பணியாற்றி வரும் எங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் உரிய விவசாயி அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக வெளிவரும் சங்கத்தின் 501ஆம் பதிவு. சங்கத்துக்கு இளா அவர்கள் ஆற்றிய அரும்பணியினைப் பாராட்டி ஒரு பதிவு எழுதி தருமாறு சங்கத்தின் தளபதியும் அறங்காவலருமான சிபியைக் கேட்டோம். அவர் அளவிலாத குரோதம் கொண்டு பின்னங்காலைக் கொண்டு பிடரியில் அடித்து "என்னையா பதிவெழுதச் சொன்னாய். நான் புத்தகமே எழுதியிருக்கேண்டா" என்று ஒரு புத்தகத்தை மேசை மீது வீசினார். அந்த புத்தகம் "இளவாக்கிய சிபியடியார் ஸ்ரீலஸ்ரீ பித்தானந்தா சுவாமிகள் அருளிச் செய்த இளமுருகாற்றுப்படை". இந்த புத்தகத்தில் இருந்து உங்களுக்கு பரிட்சை வைக்கப் போகிறேன் என்று அரை மணி நேரம் கொடுத்தார். அந்த அரை மணியில் எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெட்ரூ செய்து பிட் அடித்து ஒருவாறு பரிட்சையை எழுதி முடித்தோம். சிபியடிகள் வழங்கிய வினாத்தாளும் அதற்கு எங்களின் பதில்களும் இனி உங்கள் பார்வைக்கு.

1. இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக
"வளிநாணும் வெண்புரவி மீதமர் கொற்றவ
நின்மதி கண்டு நாணி புறந்தள்ளியோடும்
புறந்தட்டி எழும்வேளை இலைமறை காயென
இளகும் கன்னியர் நிலையறிவரோ அண்ணியார்"
மேற்கண்ட இச்செய்யுளில் உள்ள அணிநயத்தையும் விளக்குக.




பஞ்ச பூதங்களில் ஒன்றான காற்றை விட வேகமாகப் பாயக் கூடிய வெண்மையான குதிரையின் மீது ஏறி அமர்ந்து பயணிக்கும் கொற்றவனே. சங்ககால இலக்கியத்தின் படி கொற்றவனே அப்படின்னா கொட்டு வாங்கறவனே என்று பொருள். அந்த குதிரையை நீ செலுத்த முற்படும் போது, "என்னை விட வேகமாக வேலை செய்யக் கூடிய மதியைப் படைத்த என் தலைவனைத் தாங்கிப் பயணம் செய்யக் கூடியது என்னால் இயன்ற செயல் தானோ" என்றெண்ணி நாணப்பட்டு உன்னை கீழே தள்ளிவிட்டு ஓடிவிடுகிறது. கீழே விழுந்த எம் மன்னவனான நீ மண்ணாலான மீசையையும் உன் பின்புறம் அப்பியிருக்கும் மண்ணையும் யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு கையால் தட்டி விட்டு விட்டு கண்டவர் விண்டிலாத பாங்கோடு ரே பான் கண்ணாடி அணியும் அழகை இலை மறை காய் போல ஒளிந்திருந்து பார்க்கும் பெண்கள் மயங்கி ரசித்து இளகி ஆனந்த கண்ணீர் வடிப்பதை அண்ணி அறிவாரா என்று கேட்கிறார் ஆசிரியர். இப்பாடலில் தற்குறிப்பேற்ற அணி இடம்பெற்றிருக்கிறது. அதாவது சொல்ல வந்த கருத்தை நேரிடையாக தெரிவிக்காமல் குறிப்பால் உணர்த்துவது. காற்றை விட அதி விரைவாக ஓடக் கூடிய குதிரையும் நாணப்படும் அளவுக்கு பல வித வேலைகளையும் ஒரே சமயத்தில் செய்யக் கூடிய ஆற்றல் படைத்தவர் என்பதும், தமிழ்மணத்தில் இவர் இட்ட பல பதிவுகளைக் கணப் பொழுதில் காணாமல் போக வைக்கும் இவருடைய வல்லமையையும் பாடலாசிரியர் வியந்து போற்றுகிறார்.

மாணவர் பெயர் : கைப்புள்ள
சுழல் எண் : 00.07
பள்ளி : இளமுருகு வித்யாஷ்ரம், சென்னை


2. மனப்பாடப் பகுதி - இளமுருகாற்றுப்படை

ஆணிபுடுங்கு காதையில் "பிசியோ பிசி" எனும் ஈற்றடி கொண்ட பாடலை அடி பிறழாமல் எழுதுக.

மாதமோ மார்ச்
விவாஜி நம்ம சங்கத்துக்கு டார்ச்
பதிவில்ல கிடையாது மேட்டர்
ஆனா போடுற பதிவெல்லாம் ஹீட்டர்

எப்படியோ ஏறிடும் ஹிட் மீட்டர்
அதுல்ல எங்க அண்ணன் பெரிய பீட்டர்
படிச்சிட்டு பிகிலு அடிச்சா
அண்ணன் செலவுல்ல ஆளுக்கொரு
குவாட்டர்..குவாட்டர்..குவாட்டரு..

பொறந்தது பவானி பக்கத்துல்ல
வளர்ந்தது தாவணி ஏக்கத்துல்ல
பிகரு பாத்தா கண்ணுல்ல ஏறும் கிளாஸ்
நகரு நகரு விவாஜிக்கு எப்பவுமே தனி மாஸ்



நட்புக்கு விவாஜி ஹோல்சேலு
நடப்புக்கு விவ்ஸ் டோட்டல் கோல் மாலு..
தமிழ் நாட்டுல்ல பொறந்த வில்லு
பெங்களூரு வீதியிலே திரிஞ்ச ஜொள்லு அசலூர்

ஆப்பிள் தோட்டக் காவல்காரன்
அந்தூர்ல்ல சேட்டுப் புள்ளக்கும்
அண்ணன் தான் ஏவல்காரன்
மெகா சீன் போடுறதுல்ல மில்லியனரு
போட்ட சீன் கிழிஞ்சா போதும்

அண்ணன் மில்லி யேறுனவரு...
பாசக்கார பயபுள்ள
பதிவுலகம் தந்த இந்த மாப்புள்ள
அண்ணனுக்கு ஆல்வேஸ் பதிவு பசி
பிங் பண்ணி பாருங்க அவரு 24 அவர்ஸும்

பிசியோ பிசி....

மாணவர் பெயர் : தேவ்
சுழல் எண் : 00.089
பள்ளி : இளா ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, சென்னை


3. புதரகத்து புரட்சி தலைவர் மக்களுக்கு ஆற்றிய பணியினை தூதுவன் வாய்மொழி சொல்வதாய் விளக்குக?

பழம்பெரும் பதிவரான இளா அவர்கள் புதரகத்தில் பல்லாண்டாய் தஞ்சம்புகுந்து ஆணி புடுங்குவதுமாதிரி பாவனை செய்வது நாமெல்லாரும் அறிந்ததே.... இதை நாம் தூதுவன் குவார்டர்க்கடியான் வாய்வழி விளக்கமாகக் காணலாம்.

சங்கத்து சிங்கங்களின் தூதுவனாக அதாவது ஒற்றனாக ஆகிய நான் இளா என விளிக்கப்படும் இளமுருகு'வே பின்படர்தலில் எனக்கு கிட்டிய சில கூறுகள்.

இளமுருகு'னு இவருக்கு பேரு வைச்சாலும் வைச்சாங்க... வயது 40 தாண்டியும் நான் யூத்'னு சொல்லிக்கிறதுக்காக மழை பெஞ்சாலும் சரி,வெள்ளை பனி மழை மட்டு மட்டுன்னு தலையிலே விழுந்தாலும் குருட்டு கருப்பு கண்ணாடியே மாட்டிக்கிட்டு பண்ணுற அலும்பு இருக்கே... அதெக்கெல்லாம் நூறு பக்கத்திலே ஜோக் புத்தகமென்னு போடலாம்.. அதிலே எங்க விவாஜி பேசுற இங்கிலிபிசு இருக்கு தெரியுமா? அதுவும் எஸ்பெசலி 100 மீட்டர் பின்னாடி அட்டுபிகர் நடந்து வர்றது தெரிஞ்சதும், ஓரே பீட்டர் மயம் தான்... அவரு பேசறதெல்லாம் இங்க போட்டா படிச்சு பார்க்கிற ஒங்களுக்கெல்லாம் கொஞ்சநஞ்சம் தெரியுற இங்கிலிபிசு'ல்லாம் மறந்து போயிரும்.

இது கூட ஓகே ஆப்பிசர்ஸ், நார்மலா எல்லா ஆம்பிளகளும் போடுற சீன் தான்.. இவரு பையன் படிக்கிற ஸ்கூல் டீச்சர் கொஞ்சம் அழகா இருக்குன்னு அவங்க ஸ்டூண்ட்'ஸ்கெல்லாம் Hot-Dog, ஆனியன் ரிங்'னு லஞ்சமா வாங்கி கொடுத்து ஃபிரண்ட் பிடிக்கிறாரு.. ஆனா அதெல்லாம் வாங்கிதின்னுட்டு அந்த பிள்ளைகள் வாயை தொறக்கலைகிறது வேற மேட்டரு...

மேற்கண்டவைகள் அனைத்தும் வெளியே நடந்தது. இனி வீட்டிற்குள் நடக்கும் சில அக்கப்போருகள்:-

எப்பவும் 'ஐம் ஷோ பிஜ்ஜீ'ன்னு ஸ்டேட்மெண்ட் விடுவாரு... சரி ஆப்பிசிலே தான் டேமேஜரா இருக்குற இவரு வேலை பார்க்க மாட்டாருன்னு நினைச்சி ஊடு போயி சேர்ந்ததும் ஃபிரியா இருப்பாருன்னு நினைச்சா.. அம்மணி உத்தரவுக்காக ஊட்டு முன்னாடி இருக்கிற பனி அள்ளறது பத்தாமே எதிர்த்த ஊட்டு மார்வாடி பொண்ணுக இருக்கிற அபார்ட்மெண்ட் வாசலிலேயும் சுத்தம் பண்ணிட்டு இருக்காரு... கேட்டா போறதுக்கு வழி வேணுமாம்...

தன்னோட ஊட்டு காரை கிளின் பண்ணுறது பத்தாமே பக்கத்து ஊட்டு கெழவி காருக்கெல்லாம் ஃப்ரி வாட்டர் வாஸ் பண்ணிட்டு இருக்காரு.... நோண்டி நொங்கு உருவி பார்த்ததும் தான் தெரியுது, அந்த கெழவி'க்கு பேத்தி ஒன்னு பாஸ்டன்'லே படிச்சிட்டு இருக்கிறது.. கொஞ்சநாளா ஆப்ஷிய்ல் வொர்க்'க்கா 'ஐ ஹவ் டூ கோ பாஸ்டன்'னு சொன்னப்பவே புரிஞ்சு போச்சு... இதையும் கொஞ்சம் எடுத்து சொல்லி ரெண்டாவது கோடி புண்ணியமும் வாங்கிக்கோங்க...

(பி.கு : மதிப்பிற்குரிய திரு.Evaluator ஐயா அவர்களுக்கு. நான் மிகவும் கஷ்டப் பட்டு இப்பரிட்சையை எழுதியிருக்கிறேன். இவ்விடையில் முதல் இரண்டு வரிகளைத் தவிர ஏனைய வரிகளை என் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் கூட குறைச்சல் இருந்தாலும் தயவு செய்து என்னை பாஸ் செய்து விட்டு விடவும். மிக்க நன்றி)

மாணவர் பெயர் : ராயல் ராம்
சுழல் எண் : 3 3/4
பள்ளி : டி.வி.எஸ் இளா மெட்ரிகுலேசன் மேனிலைப் பள்ளி, மதுரை


4. புதரகம் புகு காதையில் வரும் இளாவின் திருவிளையாடல் காட்சிகளைக் குறித்து விளக்கமாக எழுதுக.

அவரின் விளையாடலை விளக்கமாக எல்லாம் எழுதினால் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கியே அழிந்து போவோம், அதை ஒரு மெகா தொடர் கதையாக தான் எழுத வேண்டும். அதனால் கொஞ்சமாக அவரை பற்றிய சிறு குறிப்பு

விவசாயி.... விவசாயி
சிங்கம் என்னும் சங்கம் கண்டு எடுத்த தங்கம் விவசாயி விவசாயி
சிங்கம் என்னும் சங்கம் கண்டு எடுத்த தங்கம் விவசாயி விவசாயி

பிறந்தது - பவானி கரையோரம்
பிழைப்பது - சுகந்திர தேவி சிலையோரம்
பிரிக்க முடியாதது - இளாவும், டாலரும்
பிரிய கூடாதது - இளாவும், கடலையும்
சேர்ந்தே இருப்பது - இளாவும், கருப்பு கண்ணாடியும் (மிட் நைட்ல கூட கழட்ட மாட்டாரு)
சேராத இருப்பது - முன்னாள் பிகரும், இன்னாள் பிகரும் கடலையும்
சொல்லக் கூடாதது - தங்கமணியிடம் தண்ணி அடிப்பதை
சொல்லக் கூடியது - வயசு ஆனாலும் உங்க அழகும் ஸ்டைலும் குறையல
பார்க்க கூடாதது - கார் + கேமரா (உடனே போஸ் தான் )
பார்த்து ரசிப்பது - நமீதாவின் குத்தாட்டம்

மாணவர் பெயர் : புலிக்குட்டி நாகை சிவா
சுழல் எண் : 2 1/4
பள்ளி : அரசினர் இளமுறுக்கு மேனிலைப் பள்ளி, நாகை.


(பரிட்சையை எங்க திறனுக்கு ஏற்ப நாங்க எழுதிட்டோம். இப்போ யாராருக்கு என்னென்ன மார்க் போடலாம்னு நீங்க தான் சொல்லனும்...தேறிடுவோமா?)

Wednesday, February 25, 2009

எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்குவோருக்கு அக்காக்கள் சொல்லும் ஆலோசனைகள்

தொப்பை, தொந்தி, டயர், எக்ஸ்ட்ரா ஃபிட்டிங், லக்கேஜ், எக்ஸ்ட்ரா லக்கேஜ் இப்படின்னு இடைபாகத்துல இருக்கற சில நரம்பு புடைப்புகளையும் சதை புடைப்புகளையும் பல பேரும் ஒரு வித நக்கலோட விளிக்கிறாங்க. இது இப்படி இருக்க, இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல...இது இடுப்பு பகுதியில் முறைப்படி டெவலப் செய்யப்படும் பைசெப்ஸ்(Biceps) தான் என்று பெருமை பட்டுக் கொள்ளும் ஒரு சாராரும் இருக்காங்க. தொப்பை, தொந்தி இதெல்லாம் ஆண்களுக்கே உரித்தான பிரச்சனை மாதிரி ஒரு கருத்து நிலவுது. அதனால அதை குறைக்க நுகர்வோர்கள் அதாவது பெண்கள் கிட்டவே ஆலோசனை கேக்கலாம்னு சங்கத்துல முடிவு பண்ணோம். இங்கே நுகர்வோர்னா என்னன்னு வெளக்கிடறோம். ஆண்கள் சுமக்கும் இந்த எக்ஸ்ட்ரா லக்கேஜைப் பாத்து அதிகமா கவலை படறதும், அதை உடனடியா குறைச்சிக்கனும்னு கருத்து சொல்றதும் பெண்கள் தான். ஏன் இப்படி சொல்றோம்னா இந்தப் பக்கம் ஆண்கள் கிட்டயும் பேசிப் பாத்தோம். அவங்க என்ன சொல்றாங்கன்னா "தொப்பையும் தொந்தியும் ஆண்களுக்கே உரித்தான சொத்து மாதிரி பரவலா ஒரு கருத்து நிலவுது. ஆனா அது உண்மையில்லை. இந்த விஷயத்துல பெண்களும் ஆண்களுக்கு சளைச்சவங்க இல்லை. ஆனா எக்ஸ்ட்ரா லக்கேஜை கரைக்கிறது சுலபம், அதை சேக்கறது கஷ்டம். அதனால கஷ்டப் பட்டு சேத்ததை நாங்க கரைக்க மாட்டோம், அதே மாதிரி கரைக்க சொல்லவும் மாட்டோம்" அப்படின்னு சொல்லிட்டாங்க.

அதனால அவங்களோட பெருந்தன்மையைப் பாராட்டிட்டு, தன்னுடைய கணவனோ, பாய் ஃப்ரெண்டோ, அப்பாவோ, தம்பியோ, அண்ணனோ, மகனோ இந்த மாதிரி எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கறவங்களா இருந்தாக்கா அதை பாத்துட்டு முதல்ல குறைச்சிக்க சொல்லி ஆலோசனை சொல்ற நுகர்வோர்களான பிரபல பெண் பதிவர்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்றோம். எங்களோட இந்த வேண்டுதலுக்கு வரலாறு காணாத ஆதரவு இருந்தது. சங்கத்து தபால் பெட்டி ரொம்பி வழிஞ்சது. அதை முதன்முதல்ல ஓப்பன் பண்ணி பிரிச்சி படிச்சது நம்ம கப்பிப்பய தான். படிச்சிட்டு "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"னு கூக்குரலிட்டு அவ்வத் தொடங்கிட்டான். என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்க எல்லாம் பதறிப் போய் ஓடியாந்து நாங்களும் பிரிச்சிப் படிச்சிட்டு கும்பலா அவ்வத் தொடங்கிட்டோம். எங்களை அவ்வ வச்ச அந்த அக்காக்களின் ஆலோசனைகள்ல சில உங்கள் பார்வைக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

1. எக்ஸ்ட்ரா லக்கேஜ் அப்படின்னா என்னன்னு கேக்கற அளவுக்கு மெயிண்டேன் பண்ணிக்கிட்டு இருக்கற 'பாய்ஸ்' சித்தார்த்தின் அதிதீவிர விசிறியான மலேசிய மாரியாத்தா மை ஃப்ரெண்ட் சித்தார்த்தி சங்கத்துக்கு அனுப்பிருக்கற ஆலோசனை கடிதத்தைப் பாப்போம்.

தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட தொப்பை இருப்பவர்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன தொப்பையை குறைக்க ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதை எல்லாத்தையும் மீறி நான் சொல்லிக்கொள்ள விரும்பும் ஆலோசனைகள் கீழே.

டிப்ஸ் 1 : உருளை கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாகமரவள்ளி கிழங்கு சிப்ஸ் சாபபிடவும்.

டிப்ஸ் 2 : தண்ணி அடிக்கும் போது சிப்ஸ்க்கு பதிலாக ஊறுகாயைப் பயன்படுத்தவும்.

டிப்ஸ் 3 : உங்களை விட பெரிய தொப்பை இருப்பவர்களுடன் வெளியே செல்லவும். அப்பொழுது உங்கள் தொப்பை குறைந்துவிட்டது போல் தெரியும்.

டிப்ஸ் 4 : பதிவு எழுத யோசிக்கும் போது மல்லாக்க படுத்து யோசிப்பதற்கு பதில் குப்புற படுத்து யோசிக்கவும். அதனால் தொப்பை அழுந்தி தானாக குறைய வாய்ப்புள்ளது.

டிப்ஸ் 5 : நிக்கற பஸ்ஸில் ஏறுவதையோ இறங்குவதையோ தவிர்க்கவும். ரன்னிங்கில் இருக்கும் போதே ஏறவும், இறங்கவும் முயற்சிக்கவும். கைனெட்டிக் எனர்ஜி உடம்பில் வேலை செய்யும் போது லக்கேஜ் கரைய வாய்ப்புண்டு.



2. அடுத்ததா வலையுலக மேரி க்யூரி, மின்னல் சுமதி அவங்க சொல்லிருக்கற ஆலோசனைகள். ஏன் இவங்களை க்யூரி அம்மையாரோட ஒப்பிடறோம்னு நீங்க தெரிஞ்சிக்கனும். இயற்பியல், வேதியியல் இந்த ரெண்டு பிரிவுலயும் ஆஸ்கார் அவார்டு...சாரி...நோபல் பரிசு வாங்குன முதல் விஞ்ஞானி மேடம் மேரி க்யூரி. அதே மாதிரி ஆண்கள் தொந்தியைக் குறைப்பதற்காக இயற்பியல் ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் வெகு விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு நடத்தி ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்பான ஆலோசனையை இவர் வழங்கியிருப்பதால் இவருக்கு "வலையுலக மேரி க்யூரி" பட்டத்தை அளிப்பதில் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகிறது. இப்போ அவங்க சொன்ன ஆலோசனையப் பாப்போம்.

"...இதுக்குத் தான் நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காகவே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா? அப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை."

மேல இருக்கற அவங்களோட இந்த ஆலோசனையைப் படிச்சிட்டு, "நாங்கெல்லாம் ரெகுலரா பேருந்துல பயணம் செய்யறவங்க தான்...ஆனாலும் ரிசல்ட் எதுவும் இல்லை. உங்க ஆலோசனையை இன்னும் கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க" அப்படின்னு நம்ம தளபதி சிபி பதில் கடிதம் போட அதுக்கு அவங்க கிட்டேருந்து வந்த இன்னொரு பதில் கடிதத்தைப் படிச்சிட்டு நாங்க அவ்வ ஆரம்பிச்சது இன்னும் அடங்குன பாடில்லை. அது என்னன்னா...

"எப்படிங்க ரிசல்ட் இருக்கும்...இல்லை எப்படி ரிசல்ட் இருக்கும்னு கேக்கறேன். பஸ்சுல ஏறுனதும் முதவேலையா சீட்டைப் பாத்து உக்காந்துக்குவீங்க...அப்படி இடம் கெடைக்கலன்னா லேடீஸ் சீட்ல உக்காந்துக்குவீங்க...கொஞ்சம் ஏமாந்தா கண்டக்டர் சீட்ல உக்காந்துக்குவீங்க. இப்படி எல்லாம் இருந்தா எப்படி ரிசல்ட் இருக்கும். லக்கேஜை காணாப் போக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும். முதல்ல இந்த தானியங்கி கதவுகள் இருக்கற பேருந்துகள்ல ஏறக் கூடாது. பஸ் காலியா இருந்தாக் கூட படிக்கட்டுல தொங்கிட்டுத் தான் வரணும். கண்டக்டர் "ஏறி வாய்யா"ன்னு கத்துனா பதிலுக்கு நீங்க "நீ தான்யா தவளை வாயன், பன்னி வாயன்" அப்படின்னு பதிலுக்குக் கத்திட்டு படிக்கட்டுல தொங்கிட்டே பயணம் செய்யனும். நீங்க இந்த கமல் நடிச்ச சத்யா படம் பாத்திருக்கீங்களா? அதுல கமல் வளையோசை கலகல பாட்டுல பஸ்சுல ஃபுட்போர்ட் அடிச்சிட்டு போவாரு பாத்துருக்கீங்க இல்லை. அந்த மாதிரி டெய்லி பஸ்சுல கடைசி படிக்கட்டுல ஒத்த கால் சுண்டுவிரல்ல தொங்கிட்டு போவனும்ங்க.

அந்த மாதிரி தொங்கிட்டு போகும் போது லக்கேஜ் மேல காத்து வந்து மோதும். காத்து வந்து மோதுச்சுன்னா லக்கேஜ் சும்மா விட்டுருமா...அதுவும் காத்தை தன் மேல மோத விடாம பலமா பதிலுக்குத் தள்ளும். காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள இப்படியே தொடர்ச்சியா நியூட்டனின் மூன்றாம் விதி படி வினையும் எதிர்வினையும் நடந்து நடந்து லக்கேஜ் காலப்போக்குல மெல்ல கரைஞ்சிடும். இது ஒரு இயற்பியல் மாற்றம்(physical reaction)

பஸ்சுல ஃபுட்போர்ட்ல தொங்கிட்டு போகும் போது physical reaction மட்டும் இல்லாம ஒரு chemical reaction கூட நடக்கும். அது என்னன்னா பஸ் படிக்கட்டுல நீங்க தொங்கிட்டுப் போகும் போது வெளியில அடிக்கிற காத்தும் வெயிலும், அதாவது air and heat ஒன்னா சேந்து லக்கேஜ் மேல ஒரு வேதியியல் மாற்றத்தை நடத்தி அப்படியே அதை எரிச்சிடும். இதை oxidationனு சொல்லுவாங்க.

ஆனா இவ்வளவு ஐடியா குடுத்தாலும் ஃபாலோ பண்ண மாட்டீங்க. ஏன்னா உங்களை மாதிரி ஆளுங்க கூட அமலா மாதிரி ஃபிகர் இருந்தா தான் நான் ஃபுட்போர்ட் அடிப்பேன்னு சொல்லுவீங்க. அப்புறம் எங்கேருந்து ரிசல்ட் கெடைக்கும்?"

3. கண்ணனைக் கான துவாரகை செல்வதற்கு முன்னாடி சங்கத்தின் நிரந்தர தலைவி நம்ம கீதா மேடம் அனுப்பிச்ச ஆலோசனை கடிதம் இப்போ உங்க பார்வைக்கு. அவங்க கொஞ்ச வித்தியாசமா ஆண்களின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கரைய பெண்கள் பின்பற்ற வழிமுறைகளைப் பற்றி சொல்லிருக்காங்க.

"எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கற ஆண்களை, அந்த லக்கேஜைக் கரைக்க முயற்சி எடுக்க வைக்கனும்னா அதுக்கு அவங்க அடிமடியிலேயே கை வச்சாத் தான் திருந்துவாங்க. சாயந்திரம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சு இரவு பத்து மணி வரை ஓடற ஆனந்தம், திருமதி செல்வம், கலசம், கோலங்கள், அரசி இந்த மாதிரியான பாடாவதி மெகா சீரியல்களுக்குப் பெண்களுக்குச் சரிசமமா ஆண்களும் அடிமையாகிப் போய் இருக்காங்க. அதை எல்லாம் பாக்க அனுமதி வேணும்னா தெனமும் மாலை ஒரு மணி நேரம் ஜாகிங் போகனும்னு கட்டுப்பாடு விதிக்கனும். எண்ணெயில் பொரிச்ச சமாச்சாரங்கள் எதையும் கண்ணுலேயே காட்டப்படாது. அப்படியும் எப்பவாச்சும் ஆசை பட்டு பஜ்ஜி, போண்டா வேணும்னு ரொம்ப கெஞ்சி மன்றாடி கேட்டுக்கிட்டாங்கன்னா வீட்டுலேருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற ஒரு கடையைச் சொல்லி அங்கேருந்து எண்ணெய் வாங்கிட்டு வரச் சொல்லலாம். ஏன்னு காரணம் கேட்டாங்கன்னா உங்க சைடுல (உங்க வீட்டுக்காரரு சைடு கெடையாது) ரொம்ப ஒல்லியா லக்கேஜ் இல்லாத யாரையாச்சும் உதாரணம் காட்டி அவரு அந்த கடையில தான் எண்ணெய் வாங்கறாராம்...அதான் அப்படி இருக்குறாராம் அப்படின்னு சொல்லலாம். இப்படி சொன்னா ஒன்னு எனக்கு பஜ்ஜியே வேணாம்னு சொல்லிடுவாங்க இல்லைன்னா பத்து பத்து இருபது கிலோ மீட்டர் போயிட்டு வந்ததுல நல்லா பெண்டு நிமிந்து இருக்கும். அதுக்கப்புறம் பஜ்ஜி சாப்பிடற ஆசையே போயிருக்கும்"

Thursday, February 12, 2009

நாங்களும் கடவுள் தான்

மக்கா! இந்த சினிமா படம் எல்லாம் பாப்பீங்க இல்ல? நாங்களும் பாப்போம். சில படங்களைப் பாக்கும் போது, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கு நவுத்த வேண்டிய இந்த படம் மயிரிழையில் அந்த வாய்ப்பை தவற விட்டுருச்சேன்னு வருத்தமா இருக்கும். சனிப்பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் நம்ம கையில இல்லாட்டின்னாலும் ஒரு படத்தோட க்ளைமாக்ஸை மாத்தி ஒரு கட்டத்துலேருந்து இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தற சக்தி மட்டும் நம்ம கையில இருந்தா...



தமிழ் சினிமாவுல கதை சொல்லிருக்கற விதத்தைப் பாத்தீங்கன்னா, பெரும்பாலும் நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான் அப்படிங்கற மாதிரியாவோ, இல்லை எல்லாம் சுபமேன்னு முடியற மாதிரியாவோ இருக்கும். ஆனா நிஜ வாழ்க்கையில பாத்தீங்கன்னா, அப்படி இருக்கறதில்லை. மேல சொன்ன இந்த இரண்டு விஷயமும் இல்லாம போறதுனால தான் தமிழ் படங்கள் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாம தத்தளிக்குது. படத்தோட க்ளைமாக்ஸ் இப்படி இல்லாம இந்த மாதிரி இருந்துச்சுன்னா எப்படி இருந்துருக்கும்னு ஏங்கியிருக்கோம்ல? அந்த ஏக்கத்தை ஆக்கமா மாத்தா முடிஞ்சிச்சுன்னா...மாத்திப் பாப்போமா?

படம் 1 : குஷி

ஜெனி(ஜோதிகா), சிவா சாரி ஷிவா(விஜய்) இவங்க ரெண்டு பேரும் காதலைச் சொல்லிக்காம காலேஜ் முடிஞ்சு போகும் போது ஒருத்தரை நெனச்சி ஒருத்தரு ஃபீல் பண்ண ஆரம்பிக்கிறாங்க. பிரியறதுக்கு முன்னாடி காதலைச் சொல்லிடலாமேன்னு எக்மோர் டேசனுக்கும் செண்ட்ரல் டேஷனுக்கும் போவாங்க. அங்கே ரெண்டு பேரும் ஒவ்வொரு லெட்டரை எழுதி வச்சிட்டு அங்கே இருக்கற ரெண்டு பேரு கிட்ட கொடுத்துட்டு கெளம்பிடுவாங்க. அதுக்கப்பால ரெண்டு பேரும் லெட்டரைப் படிச்சிட்டு ஒருத்தரு மனசை ஒருத்தரு புரிஞ்சுக்கிட்டு கடைசியா ஒன்னு சேர்ந்துருவாங்க...இது ஒரிஜினல் கதை.

இப்போ லெட்டர் குடுத்த எடத்துலேருந்து க்ளைமாக்ஸை மாத்தி படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி பாப்போம்.

டாக்டர்.ஷிவாவுக்காக ஜெனி ஒரு பையன் கிட்ட லெட்டர் குடுத்துட்டுப் போறாங்க. அந்த பையனுக்கு, ட்ரெயின் கெளம்புறதுக்கு முன்னாடி ஒரு தம் போட்டா நல்லாருக்குமேன்னு தோனுது. உடனே அவனும் ப்ளாட்ஃபாரத்துல எறங்கி ஒரு தம் போடலாம்னு நெனச்சி எறங்குறான். அந்த நேரம் அந்த இரெயில் பெட்டியில, ஒரு அம்மா, அப்பா கைக்குழந்தையோட ஏறுறாங்க. குழந்தை அந்த நேரம் பாத்து ஆய் போயிடுது. "ஐயய்யோ! துடைச்சி விடறதுக்கு ஒரு பேப்பர் கூட இல்லையே"ன்னு அந்தம்மா பதறுறாங்க. "இரும்மா...இங்க எதோ பேப்பர் இருக்கு என்னன்னு பாப்போம்"னு பிரிச்சு படிக்கிறாரு குழந்தையோட அப்பா. படிச்சிட்டு "ஏதோ காதல் கடிதம் மாதிரி இருக்கும்மா" அப்படிங்கறாரு. "ஆங்...கக்கா போன குழந்தைக்கு துடைச்சி விட காயிதம் இல்லாம நாம அல்லாடிட்டு இருக்கும் போது, கருவாப்பயலுக்குக் காதல் ஒன்னு தான் கேடா, கொண்டாங்க இப்படி"ன்னு புடுங்கித் துடைச்சித் தூக்கிப் போட்டுடறாங்க.

அந்த பக்கம் செண்ட்ரல் டேஷன்ல ஜெனிக்காக ஷிவா ஒரு பொண்ணு கிட்ட லெட்டர் குடுத்துட்டு போறாரு. அங்கே பாருங்க...அந்த பொண்ணு காலைலேருந்து கொலை பசி. சரி எதாச்சும் பப்ஸ் சமோசா வந்தா வாங்கி சாப்பிடலாம்னு பார்க்கறாங்க. அந்த நேரம் பாத்து ஒருத்தன் ப்ளாட்ஃபாரத்துல சாம்பார் சாதம் வித்துக்கிட்டு போறான். கோக் பிஸ்ஸா இல்லாம சாப்பிடறது கஷ்டம் தான்னாலும் ஆபத்துக்குப் பாவமில்லன்னு சாம்பார் சாதத்தை வாங்கி அபுக்கு அபுக்குன்னு முழுங்கிடறாங்க. பசி அடங்குனதுக்கப்புறம் தான் ஸ்பூன் இல்லாம கையால சாப்பிட்டுட்டோம்னு உணருறாங்க. கையைக் கழுவலாம்னு வாஷ் பேசின் போயிப் பாக்கறாங்க...தண்ணியே வரலையாம். திரும்பி சீட்டுக்கு வந்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறாங்க. காதல் கடிதத்துல கை தொடைச்சு தூக்கிப் போட்டுடறாங்க. ஜெனிக்கும், ஷிவாவுக்கும் ஒருத்தரு மனசுல ஒருத்தருக்காக என்ன ஃபீலிங்க்ஸ் வச்சிருக்காங்கன்னு தெரியாமலே போயிடுது.

இங்கே...இந்த இடத்துல படத்தை டைரக்டர் தன்னோட டச்சைக் காட்டறாரு. "இளம் காதலர்களே! உங்களுக்கு காதல் வந்துச்சுன்னா நேரங்காலத்தோட சொல்லிடுங்க. இல்லைன்னா உங்க காதலுக்கு ஒரு சின்ன குழந்தையும், சாம்பார் சாதமும் கூட எதிரியாகக் கூடும் - நேசத்துடன் எஸ்.ஜே.சூரியா" அப்படின்னு முடிக்கிறாரு.

படம் 2 : காதலுக்கு மரியாதை

ஜீவா(டாக்டர் இளையதளபதி) மற்றும் மினி(ஷாலினி) ரெண்டு பேரும் காதலுக்கு ரெஸ்பெட்ட்டு குடுக்கறதுக்காக மீனவர் குப்பத்துல பிரிஞ்சிடறாங்க. அதுக்கப்புறம் க்ளைமாக்ஸ் காட்சியில ஜீவா எதுக்காகவோ தன்னோட மணிப்பர்ஸை நோண்டும் போது, மினியோட செயின் அவருக்கு கெடைக்குது. அந்த செயினைக் குடுக்கறதுக்காக குடும்பத்தோட மினி வீட்டுக்குப் போவாங்க. அங்கே ஜீவாவோட அம்மா குடுத்துடுங்கங்கறதும், மினியோட அம்மா எடுத்துக்கங்கங்கறதும் அந்த சமயத்துல இளையராஜாவோட புல்லாங்குழல் பிஜிஎம்மும் ஒலிக்க எல்லாம் சுபமா படம் முடியும். படமும் நல்லாத் தான் ஓடுச்சு.

ஆனா எங்களை பொறுத்த வரை "காதலுக்கு மரியாதை" ஒரு தொலைநோக்கு பார்வை இல்லாம எடுக்கப்பட்ட ஒரு படம். இப்ப இந்த படத்தையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி பார்க்கலாமே...

க்ளைமாக்ஸ் சீன்ல டாக்டர் மணிபர்சிலேருந்து மினியோட சங்கிலியை எடுத்து பாத்து எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிட்டு இருப்பாரு. தன்னோட அம்மா கிட்ட "அம்மா! இது மினியோட சங்கிலி. இது என்கிட்ட இருக்கக் கூடாது. இதை அவங்க கிட்டவே திருப்பிக் குடுத்துடணும்" அப்படீம்பாரு. உடனே அவங்க அம்மா அதை கையில வாங்கி பாத்துட்டு "இண்டர்வெலுக்கு முன்னாடி வச்ச சங்கிலியை, க்ளைமாக்ஸ் சீன்ல எடுத்துப் பார்க்கச் சொல்லி உனக்கு ஐடியா குடுத்தது யாருடா? சொல்லு...படத்தோட ப்ரொட்யூசர் சங்கிலி முருகன் தானே? டேய்! நீ இந்த சங்கிலியை பாத்து ஃபீல் பண்ணதுக்கு கூட நான் வருத்தப் படலைடா...ஆனா கல்யாணி கவரிங்ல வாங்குன இந்த ஐம்பது ரூபா சங்கிலியைத் திருப்பிக் குடுக்க குடும்பத்தோட க்வாலிஸ் கார் வச்சிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போகனும்னு சொல்றியே...அதை தான் என்னாலே ஜீரணிக்கவே முடியலை" அப்படீம்பாங்க.

மனைவி பேசிக்கிட்டு இருக்கறதை பார்த்த ஜீவாவோட அப்பாவும் சீனுக்குள்ளே இப்போ எண்ட்ரீ குடுக்கறாரு. இப்போ ஸ்க்ரீன்ல ஆடியன்சை நோக்கிப் பாக்கறாரு "தம்பீகளா! படிக்கிற வயசுல இந்த மாதிரி காதல் கத்திரிக்கான்னு சுத்துனா வாழ்க்கையில எந்த நாளும் முன்னேறவே முடியாது. இப்போ என்னையே எடுத்துக்கங்க...அப்படின்னு "டைரி 1946-1975" லெவலுக்குப் பேச ஆரம்பிக்கிறாரு. "ஐயயோ! இப்படியே இவரு பேசிட்டு இருந்தா அது ஈரோட்டுல பந்தல் கட்டி மைக் போட்டு பேசுனா மாதிரி ஆயிடுமே...படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாதுன்னு" ஜீவா ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிறாரு. சங்கிலியை மினி கிட்ட குடுக்க முடியலையேங்கிற ஏக்கத்துல அதே சங்கிலியாலே தூக்கு போட்டுக்க முயற்சி பண்ணறாரு. ஆனா பாருங்க...சங்கிலி யாருமே எதிர்பாராவிதமா அறுந்து போயிடுது. ஜீவா தொபுக்கடீர்னு தரையில் விழறாரு...தலையில பலத்த அடிபடறதுனால திடீர்னு லூசாயிடுறாரு...

இந்த இடத்துல டைரக்டர் ஒரு பயங்கரமான பிஜிஎம் போடறாரு "இவன் வாழ்க்கையில் வசந்தம் வீசுமா?..." அப்படின்னு படத்தை முடிக்கிறாரு.

நில்லுங்க. தொலைநோக்கு பார்வைன்னு சொன்னேன் இல்லை. அதையும் வெளக்கிடறேன்...உலகத் தரத்துக்கு ஏற்ப தமிழ் சினிமாவில் சங்கிலியால் தூக்கு போட முயற்சித்த ஜீவா லூசாயிடறாரு. லூசான ஜீவா வாழ்க்கையில் வசந்தம் வீசுச்சா இல்லையான்னு சொல்லற படம் தான் "கண்ணுக்குள் நிலவு". இதுவும் ஒரு மிகமிக எதார்த்தமான ஒரு காதல் படம். ஜீவா தன்னுடைய லூசுத்தனங்களையும் மீறி எப்படி மினி மாதிரியே இருக்கற இன்னொரு ஷாலினியோட ஒன்னு சேருறாருங்கிறது தான் கதை.

ஜப்பான் படம், ஸ்பானிஷ் படம், கிழக்காப்பிரிக்கா பஞ்சாயத்து யூனியன் படம் - இதையெல்லாம் பாத்து காப்பியடிச்சு தான் நம்ம தமிழ் படங்களை நகர்த்தனும் அப்படீங்கறது பலரோட மனசுல இருக்கற தப்பான அபிப்பிராயம். சிம்பிளான ஒரு கதை, எதார்த்தமான காட்சியமைப்புகள், அதை விட நிஜவாழ்க்கையில நம்ம எல்லோராலயும் பார்த்து ஏத்துக்கக் கூடிய க்ளைமாக்ஸ் காட்சிகள் இதெல்லாம் இருந்தா நம்ம தமிழ் படங்களையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். அதுனால "சங்கம் பிலிம்ஸ்" நிர்வாகக் குழு தீவிர ஆலோசனையில் இறங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பல ஏற்பாடுகளை எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் வரும் நாட்கள்லே நீங்களே பாப்பீங்க.

சரி அது என்ன "நாங்களும் கடவுள்"? கவிஞர் கண்ணதாசன் ஒரு பாட்டுல சொல்லிருப்பாரு -"நான் படை(கெடு)ப்பதனால் என் பேர் இறைவன்". இப்போ சொல்லுங்க நாங்களும் கடவுள் தானே?

வாங்க கடவுள்களே வாங்க! நீங்களும் வந்து உங்க திறமைகளை எல்லாம் காட்டுங்க!

Thursday, July 31, 2008

கப்பி எத்தனை கப்பியடி!

நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்துலேயே ஒருத்தருக்கு அதிகப்படியான பட்டப்பெயர்கள் இருக்குன்னா அது ஒருத்தருக்குத் தாங்க - இன்னிக்குப் பிறந்தநாள் கொண்டாடற சங்கத்தோட கடைக்குட்டி செல்லக்குட்டியான கப்பிக்குத் தாங்க. கப்பிபயங்குற பேரே ஷார்ட்டா ஸ்வீட்டா சுண்டியிழுக்கற மாதிரி தானே இருக்குதுன்னு நீங்கள்லாம் கேக்கறது புரியுது. ஆனாலும் ரொம்ப பாசக்கார பையங்குறதுனாலே ஆளாளுக்கு ஒவ்வொரு பேரு வச்சி கூப்பிடுவோம்.

ஆரம்பக் காலங்கள்ல ஜாவா மொழியிலேயே EJB, செர்வ்லெட்ஸ் இதையெல்லாம் வச்சி கவி புனையற அவரோட திறமையைப் பாத்து வியந்து ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவன்னு செல்ல்லமா விளிச்சோம்.

மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க இல்லையா...அது மாதிரி இந்த சின்ன வயசுலேயே இம்புட்டு ஞானமான்னு வியக்கற மாதிரி ஸ்பானிஷ் மொழி படங்களைக் கூட பாத்து விமர்சனம் பண்ணற அதீத திறமையைப் பாத்து "ஞானக் குழந்தை"ஆக்குனோம். இதுல ஒவ்வொருத்தருக்கும் அப்பப்போ என்ன மூட் வருதோ அதை பொருத்து ஞானக்குழந்தை ஞானப்பழம் ஞானப்பண்டிதர் இப்படின்னு பல வடிவங்களைப் பெறுவாரு.

அதுக்கப்புறம் தன்னோட ஒரு போஸ்ட்னால குருவி படத்தை சென்னை சிட்டி மட்டும் இல்லாம டோட்டல் தமிழ்நாட்டுல இருக்கற ஏ,பி,சி...இசட் தியேட்டருன்னு எல்லா இடத்துலேருந்தும் தூக்க வச்ச பெருமையைப் பாத்து "குருவி"ராவணன்னு பேரு வச்சோம்.

இதை தவிர்த்து காஞ்சித் தலைவன், கப்பி குருபரன், புன்னகை இளவரசன், கப்பி குப்தா, கப்பி கவுடா, கப்பியூரப்பா, கப்பி பிரகாஷ், கப்பி ஆண்டர்சன் இப்படின்னு செல்லத்துக்குப் பல பேருங்க.

நாங்க எதோ சாதாரணமானவங்க. எங்க லெவலுக்கு எங்களால பேரு தான் வக்க முடியும். ஆனா கவிஞர் கண்ணதாசன் கப்பி பயலைப் புகழ்ந்து ஒரு பாட்டே எழுதிருக்காருன்னா பாத்துக்கங்களேன். நீங்களும் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.

"கப்பி எத்தனை கப்பியடி
கப்பி எத்தனை கப்பியடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(கப்பி எத்தனை கப்பியடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணகப்பி
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாகப்பி
அரசாள வந்த மன்னன் - ராஜாகப்பி
அலங்கார ரூபம் அந்த - சுந்தரகப்பி
(கப்பி எத்தனை கப்பியடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலகப்பி
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதகப்பி
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டகப்பி
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயகப்பி
(கப்பி எத்தனை கப்பியடி)

வம்சத்திற்கொருவன் - ரகுகப்பி
மதங்களை இணைப்பவன் - சிவகப்பி
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீகப்பி
முடிவில்லாதவன் - அனந்தகப்பி

கப்பிஜெயம் ஸ்ரீகப்பிஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
கப்பிஜெயம் ஸ்ரீகப்பிஜெயம்
கப்பியின் கைகளில் நான் அபயம்!!!"

உங்களுக்குப் பிடிச்ச கப்பியை நீங்களும் தேர்ந்தெடுத்து உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டுப் போங்க.

Wednesday, April 30, 2008

என்னை பாடச் சொல்லாதே...நான் கண்டபடி பாடிபுடுவேன் :)

வணக்கம்ங்க. உங்களுக்குப் பாட்டுக் கேக்க பிடிக்குமா? பிடிக்கும் தானே? எங்களுக்கும் பிடிக்கும். பாட்டு பாட புடிக்குமா? என்னது புடிக்காதா? எங்களுக்கு ரொம்ப புடிக்கும். ஆனா நாங்க பாடுனோம்னா சாதாரண பாட்டைக் கூட ஸ்பெசலாத் தான் பாடுவோம். சிங் இன் தி ரெயின், சங்கீமங்கீ...இந்த மாதிரி பாட்டுங்களைப் பாடறதுன்னா எங்களை அடிச்சிக்க ஆளே கெடையாது. "சிங் இன் தி ரெயின்" பாணியிலே நாங்களே எழுதுன சில தமிழ் திரைப்படப் பாடல்கள் கீழே இருக்கு. ஆறாம் பாடல் வரிகளைத் தவிர எல்லா பாடல் வரிகளும் பாட்டில் வருகிற முதல் வரிகள் தான். ஆறாம் பாடல் வரிகள் மட்டும் பாட்டின் இடையில் வருகிற வரிகள். இதெல்லாம் எந்த பாட்டுன்னு கரெக்டா கண்டுபிடிங்க பாப்போம். படம் பேரு சொல்லனும்னு அவசியம் இல்லை. தெரிஞ்சா சொல்லலாம்.

எல்லாத்தையும் நீங்களே சொல்லிடுவீங்கன்னு தெரியும். ஒரு வேளை எங்க இங்கிலிபீசு ரொம்ப ஹை-ஃபையா(!) போய் யாருக்கும் புரியாம போயிடுச்சுன்னா க்ளூ தரோம். பத்து பாடல் வரிகளையும் முதல்ல யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பாப்போம்.

1. Fig vegetable vegetable vegetable Banyan Vegetable Oh White Moon
2. "Great meditation girl" Golden Peacock like girl spreads her tail feathers
3. Oh fire flintstones fire! Gently you will massage
4. Come earlier! Come my love! Come my flesh! Come my life!
5. You are Aphrodite I think eye mother
6. If money is there in the Indian Tie, song will come when the Hen crows
7. One Love Angel, came to Earth. One Love Epic, she gave along with hand
8. Lotus flower and Water have never fought...pick Uncle and wear half saree sister-in-law is not there
9. Golden girl came, things billion she gave, like flower stage entrance overflowing honey
10. Oh Spring King! Honey loaded Rose...Your body my nation

ரெடி...ஸ்டெடி...கோ:)

இந்த பதிவுக்கு ஐடியாவைக் கொடுத்த வெண்பா வாத்தியார் ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கும், சங்கத்து முதல் அட்லாஸ் வாலிபர் ரீபஸ் அரசன் இலவசக்கொத்தனாருக்கும் இப்பதிவைப் பணிவோடு சமர்ப்பிக்கின்றோம்.

Monday, April 28, 2008

அவன் அவள் அது

அது ஒரு சித்திரை மாத வெள்ளிக்கிழமை மாலை. அவனும் அவளும் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனந்தம், காதலிக்க நேரமில்லை, கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்கள் முடிந்து இருந்த அந்த ப்ரைம்டைம் வேளையில் போனால் போகட்டும் என்று கிரிக்கெட் பாக்க அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது. ஆங்...அவளையும் அவனையும் உங்களுக்கு அறிமுகப் படுத்தலை இல்லை? அவன் ஒரு வருத்தப்படாத வாலிபன். இப்போதும் அவ்வாறே இருப்பதாக ஊர் நம்பிக் கொண்டிருப்பதால் அவன் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவள் இன்னும் இந்த ஊர் நம்பிக் கொண்டிருக்கும் அவ்வருத்தப்படாத வாலிபனின் வாழ்க்கை துணை.

பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதையும், மட்டையாளர்கள் அதனை அடிப்பதையும் தொல்லைக்காட்சியில் மக்களுக்குக் காட்டி காட்டி அலுத்துப் போன ஒளிப்பதிவாளரின் கேமரா பார்வை, ஊக்கு விக்கும் நங்கையரின்(அதாங்க சியர் லீடர்ஸ்) பக்கம் திரும்பியது. கேமரா இயக்குபவர் தன் பார்வையைத் திருப்பியதால் அவர் பார்வையில் பட்டது டிவி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பார்வையிலும் பட்டது. உண்மையில் அவளுடைய பார்வையில் படுவதற்கு முன்னர் அவன் அதை பார்த்து விட்டான். ஆனால் ஆர்வமாகப் பார்ப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் நொடிப் பொழுதில் அவன் பார்வையும் கவனமும் வேறெங்கோ இருப்பது போல பார்த்துக் கொண்டான்.

"ஏங்க...ஐபிஎல் கிரிக்கெட்ல இந்த மாதிரி சியர் லீடர்ஸ் எல்லாம் ஆடறதைப் பத்தி நேத்து பார்லிமெண்ட்ல பேசிருக்காங்களாம். இனிமேல் இது மாதிரி ஆட மாட்டாங்கன்னும் அது டிவில வராதுன்னும் இன்னிக்கு பேப்பர்ல போட்டிருந்தான். ஆனாலும் வந்துக்கிட்டுத் தான் இருக்கு"

"ஹ்ம்ம்ம்"

"என்ன நான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். வெறும் ஹ்ம்ம்ம் தானா?"

இவ்விஷயத்தில் தலையிடுவதும் அது குறித்து கருத்து தெரிவிப்பதும் ஆபத்தானது என்று அவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் அவள் அவன் வாயிலிருந்து எதையாவது வரவைத்தே தீர வேண்டும் என்பதில் தீர்க்கமாயிருந்தாள்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை அவன் அறிந்திருந்தாலும் அந்த டாபிக்கைத் தட்டிக் கழித்தலும் உடம்புக்கு நல்லதில்லை என்று அவன் அறிந்திருந்த காரணத்தினால் "சியர் லீடர்ஸ் ஆடறதை எல்லாம் ஐபிஎல்ல நிறுத்த மாட்டாங்க" என்றான்.

"ஏன்? எப்படி" காரணகாரியங்களை அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம் எப்போதும் அதிகம்.

"இதனால எத்தனை குடும்பங்கள் பொழைக்குது தெரியுமா? அதை எப்படி நிறுத்துவாங்க?"

"என்னது குடும்பம் பொழைக்குதா?" -தன் ஆச்சரியத்தை அவளால் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

"ஆமாம்...இல்லியா பின்ன? படிச்சி டாக்டர் ஆகனும், இஞ்சினியர் ஆகனும் அப்படிங்கிறது தான் ஒவ்வொரு பொண்ணோட கனவும். வறுமையும் இயலாமையும் காரணமாத் தான் இந்த மாதிரி சியர்லீடர்ஸா ஆகறாங்க. யாரும் விரும்பி சியர் லீடர்ஸ் ஆகறதில்லை. கிரிக்கெட் ஸ்டேடியத்துல சியர் லீடரா ஆடற ஒவ்வொரு பொண்ணுக்கு பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு தெரியுமா?"

"வறுமையா? அவங்களைப் பாத்தா ஃபாரின் காரங்க மாதிரி இல்ல இருக்காங்க?"

"ஏன் ஃபாரின் காரங்கன்னா ஏழையா இருக்கக் கூடாதா? சியர் லீடரா ஆடற அவளும் ஒரு பெண் தானே? முறைவாசல் செஞ்சு குடும்பத்துக்குக் கால் வயிறு கஞ்சு ஊத்தற அம்மா, அம்மா சம்பாதிச்சு கொண்டாறதை புடுங்கிக் குடிச்சிட்டு அம்மாவைப் போட்டு அடிக்கிற பொறுப்பில்லாத அப்பா, படிக்கிற வயசுல சின்ன சின்ன தம்பி, தங்கச்சிங்க, கல்யாணம் ஆகாத அக்கா இவங்களை எல்லாம் பாத்து பாத்து கஷ்டப் பட்டு குடும்பத்துக்கு விடிவு காலம் பொறக்கணும்னு தான் இந்தப் பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டுலேருந்து இவ்வளவு தூரம் கண்காணாத இடத்துக்கு வந்து ராத்திரி பகல் வெயில்னு பாக்காம கஷ்டப் பட்டு உழைக்கிறாங்க"

அவன் சொல்வதை மேலும் ஆச்சரியத்தோடு அவள் கேட்கிறாள்.

"இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு தானே யோசிக்கிறே? கப்பின்னு என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் அமெரிக்கால டெக்சாஸ் மாநிலத்துல இருக்கான். அவன் பக்கத்து வீட்டுல இருக்கற ஆண்ட்டியோட பொண்ணு இந்த மாதிரி சியர்லீடரா ஐபிஎல்ல ஆடிக்கிட்டு இருக்காம். அவன் தான் இதெல்லாம் எனக்கு ஈமெயிலா அனுப்புனான். அதோட அவங்க படற கஷ்டத்தை எல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லற மாதிரி சிறுகதை ஒன்னெ எழுதிக்கிட்டு இருக்கான்.

அதோட இளான்னு இன்னொரு ஃப்ரெண்ட். அவரும் அமெரிக்கால தான் இருக்காரு. அவங்க பக்கத்து வீட்டுல இருக்கற பொண்ணு ஐபிஎல்ல சியர்லீடரா ஆகனும். நீங்க உங்க காண்டேக்ட்ஸ் யூஸ் பண்ணி எனக்கு சிபாரிசு பண்ணமுடியுமான்னு கேட்டிருக்காம். சூப்பர் பவுல், என்பிஏ சேம்பியன்ஷிப்ல எல்லாம் சியர்லீடரா இருந்த அனுபவம் எனக்கு இருக்குன்னு சொல்லுச்சாம். டெய்லி பேட்டாவும் வீட்டுக்குத் திரும்பப் போக பஸ் சார்ஜும் தான் அவங்க ஊர்ல தர்றாங்களாம். ஏற்கனவே பஸ்பாஸ் இருந்துச்சுன்னா பஸ் சார்ஜ் கூட தர மாட்டாங்களாம். ஐபிஎல்ல ஆடுனா கொஞ்சம் காசு பாக்கலாம்னு சொல்லுச்சாம்.

கதிர்னு இன்னொரு ஃப்ரெண்டு. அவன் துபாய்ல இருக்கான்மா. அவன் பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல மேல் வீட்டுல இருக்கற ஷேக் பொண்ணுங்கல்லாம் அங்கிள் நாங்க ஐபிஎல்ல சியர் லீடர்ஸ் ஆகனும், எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணுங்க...மூடாக்கு போட்டுக்கிட்டாச்சும் நாங்க ஆடியே தீருவோம்னு உறுதியா சொல்லுச்சுங்களாம். அரைகுறையா ஆடறாங்கன்னு தானே பார்லிமெண்ட்ல எதிர்த்து பேசியிருக்காங்க. இப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் சியர்லீடர்ஸையே எடுத்துக்கயேன். என்ன தான் வறுமையின் கொடுமையினால சியர்லீடரா ஆடுனாலும் மானம் தான் பெருசுன்னு ஃபுல் பேண்ட், சட்டை போட்டுக்கிட்டுத் தான் ஆடறாங்க. இப்போ அவங்க வீட்டுல எரியற அடுப்புல நம்ம கவர்ன்மெண்ட் தண்ணியை மொண்டு ஊத்தனுமா? யோசிச்சிப் பாரு"

இவ்வளவு நேரம் அவள் சொன்னதை எல்லாம் கேட்ட அவள் முகத்தில் ஒரு எக்ஸ்பிரெஷனை அவன் கண்டான். அந்நியன் படத்து விக்ரம் போல ஒரு முகபாவம்...சே...சே...இது அவள் இல்லையா...கே.பாலச்சந்தர் படத்து ஹீரோயின் போல ஒரு முகபாவம். ரசித்து, கோபப்பட்டு, ஆச்சரியப்பட்டு, ஏமாற்றத்தைத் தாங்கி, சந்தோஷப்பட்டு - எல்லாம் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவையான ஒரு எக்ஸ்பிரெஷன். அந்த "ராகமாலிகை"எக்ஸ்பிரெஷனில் கடைசியாக வந்தது ஒரு சிரிப்பு.

அந்த சிரிப்பைப் பார்த்து ஏமாந்து ஏதோ ஒரு உந்துதலில் உணர்ச்சிவசப்பட்டு அவன் சொன்னான் - "யப்பா! சியர்லீடர்ஸ் டிவில ஆடறதை பாக்கறதுக்கு என்னென்ன கதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு?"

"---"

தூரத்திலிருந்து தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றுவதற்கு உதவும் 'அது' அவனுடைய கபாலத்தை மூர்க்கத் தனமாக முத்தமிடும் போது அவனறிந்து கொண்டது 'ரெண்டு'
1. ஆபத்தான விஷயங்களை எப்படி 'well left' ஆக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுதல் அவசியம். அதை தெரிந்து வைத்துக் கொள்ளும்வரை பேசினாலும், பேசாது போனாலும் சேதாரம் பலமாகத் தான் இருக்கும்.
2. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உறுதியில்லாதவர்களை இவ்வுலகம் ஹர்பஜனையும் ஸ்ரீசாந்தையும் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதை போல் சிரிக்கும்.

Friday, March 7, 2008

வயசு ரெண்டாச்சு - பிரம்ம ரசங்களை ஓட விடும் போட்டி - அறிவிப்பு

வணக்கம் மக்கா. வர்ற ஏப்ரல் மாசத்தோட நம்ம சங்கத்துக்கு வயசு ரெண்டாகுது. நாலு கால்ல தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை இப்போ பல்லு முளைச்சு எந்திரிச்சு நிக்குது. சுத்தி நிக்கிறவங்களைப் பாத்து அழகாச் சிரிக்குது, ரொம்ப சந்தோஷமாயிடுச்சுன்னா ஒரு குதியாட்டமும் போடுது. ரெண்டு வருஷமா ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தையோட வளர்ச்சிக்குக் காரணமா இருக்கறது சங்கத்துக்கு ஆதரவு கொடுத்துட்டு இருக்கற நீங்க எல்லாரும் தான். சங்கத்தோட ரெண்டாவது பிறந்தநாளை உங்க எல்லாரோடயும் கொண்டாடலாம்னு ஏற்பாடு. எப்படி? ஒரு இருபது-இருபத்தஞ்சு வயசு பையனா இருந்தா ரோட்டுல பீரை நீரா ஓட விட்டு குளிச்சு, தெளிச்சு, நனைச்சு கொண்டாடலாம். ஆனா நம்ம சங்கம் ரெண்டு வயசு குழந்தை இல்லையா? அதனால தமிழ் வலைப்பூவுலகத்துல சங்கத்தோட இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரம்ம ரசங்களை ஓட விட வைக்கலாம்னு ஒரு ஐடியா.



சரி...அது என்ன பிரம்ம ரசம்? வெளக்கறேன்...ஆனா வெளக்கனதுக்கு அப்புறம் வெளக்கமாத்தால அடிக்க வரப்பிடாது...சரியா? பிரம்மா - யாரு?...படைப்புக் கடவுள் இல்லையா? படைப்புன்னா creation - creativityன்னு சொல்லலாமா? ரசம்ன்னா ஜூஸ்...அதாவது உங்க கிரியேட்டிவ் ஜூஸ்களை ஓட வைக்க ஒரு போட்டி. ஜூஸ்களை ஓட விடற போட்டின்னாலும் ரூல்ஸ் இல்லாமலா? இந்தா கீழே இருக்குப் பாருங்க...

ரூல்ஸ்...
1. ஒரு படத்தை(ஃபோட்டோ, இமேஜ்) எடுத்துக்கனும். இந்தப் படம் உங்க சொந்தப் படமா இருந்தா ரொம்ப நல்லது.
2. நீங்கப் போட்டியில உபயோகிக்கிற படம் வேற எங்கேருந்தாவது எடுத்தீங்கன்னா, அனுமதி வாங்கிக்கிட்டு பயன்படுத்துங்க.
3. அதுக்கப்புறம் உங்க பிரம்ம ரசங்களைக் கரை புரள ஓட விட்டு, அந்தப் படத்துக்குப் பொருத்தமா சின்னதா ஒரு துணுக்கோ, இல்லை அந்தப் படத்துல இருக்கறவங்க பேசிக்கிற மாதிரி ஒரு வசனமோ எழுதனும்.
4. நீங்க எழுதற துணுக்கு, வசனம் எப்படி இருக்கனும்னு தெரியுமில்லே? சங்கத்துல எப்படி இருக்கனும்னு எதிர்பார்ப்போம்? காமெடி தூக்கலா இருக்கனும்...அம்புட்டுத் தான்.
5. படத்துக்குப் பொருத்தமா நீங்க எழுதியிருக்கற துணுக்கு/ஜோக்/வசனம் இதை நீங்க தேர்ந்தெடுத்த படத்தோட சேர்த்து உங்க வலைப்பூவுல ஒரு பதிவாப் போட்டுக்கங்க.
6. அப்புறம் இந்தப் பதிவுல பின்னூட்டப் பகுதியில உங்கப் பதிவோடச் சுட்டியைக் கொடுத்துடுங்க. சுட்டியைப் பின்னூட்டமா கொடுத்தா மட்டும் தான் உங்கப் படத்தை ஆட்டையில சேத்துப்போம். சரியா?

போட்டி தொடங்கும் நாள் - இன்னைக்கே...இப்பவே
போட்டி முடியற நாள் - மார்ச் 31, 2008(அதுக்குள்ளாற ஒங்கப் படங்களைப் பதிவாப் போட்டு பின்னூட்டமா இங்கன தெரிவிச்சிடுங்க)
முடிவுகள் வெளியிடப்படும் நாள் - ஏப்ரல் 10, 2008

நடுவர்கள் : 'வலையுலகக் குத்தூசி' லக்கிலுக் மற்றும் 'சிரிப்பானந்தா' டுபுக்கு

பரிசுகள் : மொத்தப் பரிசுத் தொகை ரூபாய் 10,000. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெயரில் அவர்கள் பரிசு பெறும் தொகையினை ஒரு தொண்டு நிறுவனத்துக்குச் செலுத்திடுவோம். உங்கப் பெயரில் செலுத்தப்பட்டத் தொகைக்குண்டான ரசீதை உங்க முகவரிக்கு அனுப்பி வச்சிருவோம்.

அப்புறம் என்ன மக்கா? எல்லாம் ஓகே தானே? பட்டித் தொட்டியெல்லாம் உங்கள் பிரம்ம ரசங்கள் காட்டாறு வெள்ளம் போல கரை புரண்டு ஓடட்டும்...

போட்டியில் உள்ள பதிவுகள்
1. பேபி பவன்
2. கிரிக்கெட் ரசிகன்
3. வீரசுந்தர்
4. சத்யா
5. ஆயில்யன்
6. அம்பி
7. ஆயில்யன்
8. ச்சின்னப் பையன்

Friday, March 2, 2007

Alone... in a Woman's World #2

Alone... in a Woman's Worldடோடத் தொடர்ச்சி...

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி "அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு"ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க...

"இந்தப் பக்கம் என்னடா பார்வை? உன் வேலையைப் பாருடா"ன்னு ஒரு கத்து கத்திருந்தாங்கன்னாக் கூட ஒன்னும் இருந்திருக்காது.

ஆனா நான் திரும்பிப் பாத்ததை கவனிச்ச அந்த ஆண்ட்டிகள்ல ஒருத்தங்க ரொம்பப் பொறுமையாச் சிரிச்சிக்கிட்டே "நாங்க பேசறதெல்லாம் கேட்டா உங்களுக்கு ரொம்ப வித்தியாசமாவும் தமாஷாவும் இருக்குமில்ல?"ன்னு கேட்டாங்க. நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க. ஒரு வேளை அவங்க பிரைவேட் பேச்சைக் கலைக்கற மாதிரி திரும்பிப் பாத்திருக்கக் கூடாதோன்னு தோணுச்சு. கொஞ்சம் சங்கடமாவும் போச்சு. அதுக்கு நான்"அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க"ன்னு சொல்லி வச்சேன். ஒரு அஞ்சு நிமிஷம் அமைதிக்கப்புறம், "பாலை கேஸ்ல வச்சிருந்தது, அதை நிறுத்த நேரம் ஆனது, அதனால ஜீப்பை வெயிட்டிங்ல வெச்சிருந்தது, பசங்க ஸ்கூல் ஆனுவல் டே, வீட்டுக்காரரோட வாக்கிங் போறது" இதப் பத்தியெல்லாம் பேச்சு ஸ்டார்ட் ஆனதும் தான் என் குற்ற உணர்வுக்கு விடுதலை கிடைச்சது. இதையெல்லாம் படிச்சிட்டு லேடீஸ் பேசறதை நான் ஒட்டுக் கேக்கறேன் அது இதுன்னு யாராச்சும் பின்னூட்டம் போட்டீங்க...முப்பது பின்னூட்டம் நாப்பது பின்னூட்டம்னு கூட பாக்க மாட்டேன்...மிகக் கொடூரமான முறையில் மட்டுறுத்திப்புடுவேன்னு இப்பவே சொல்லிக்கிறேன். ஜாக்கிரதை. ஏன்னா நான் எழுதறது எல்லாம் ஒரு வழிப்போக்கனா தற்செயலா என் காதுல வாங்குனது தான். என்னாது அது...ஆங்...லோன்லி டிராவலரு...அதுவா இருக்கும் போது.

ஃபாஸ்ட் ஃபார்வர்டு பண்ணி எதிர்காலத்துல கொசுவர்த்திய சுத்துனப்ப போன பதிவுல சொன்ன எழுதாத சட்டத்தை(cardinal rule) நான் உடைச்சது நெனவுக்கு வந்தது. ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். என்ன தான் எதேச்சையா அந்த ஆண்ட்டியும் அக்காவும் பேசறது நம்ம காதுல வந்து விழுந்தாலும் ஒரு வேளை நாமப் பண்ணறதுக்குப் பேரு தான் 'e(a)vesdropping'ஓ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்துடும். "சே! சே! நாம யாரு. ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்? நாமளாவது? லேடீஸ் பேசறதைப் போய் ஒட்டுக்கேக்கறதாவது"ன்னு நியாபகப் படுத்திக்க அப்பப்போ கடல் அரிப்பைத் தடுக்க அரசாங்கத்துக்கு என்ன யோசனை குடுக்கலாம்னு ஒரு முன்னாள் சிவில் இஞ்சினியரா சிந்திக்க ஆரம்பிச்சிடுவேன், அந்த யோசனையெல்லாம் சேகரிச்சு முடிச்சதும் ரோட்டோரத்துல காயப் போட்டிருக்கற கருவாடு ஏன் இவ்வளோ நாத்தம் அடிக்குதுன்னு செந்தில் மாதிரி யோசிக்க ஆரம்பிப்பேன்.

ஆனா செந்திலா இருந்தாலும் சிவில் இஞ்சினியரா இருந்தாலும் Woman's Worldஇல் ஒரு தனி பயணியா இருக்கற த்ரில் கிடைக்காதுப்பா. "பாப்பா! கப்பல் பாரு...கப்பல் பாரு" தூங்கிக்கிட்டிருக்க பாப்பாவை எழுப்பி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துல நின்னுட்டிருந்த கப்பலைக் காட்டறதுக்கு பாப்பாவோட கிராண்ட்மா(சும்மா ஆயான்னு சொல்லாம ஒரு சேஞ்சுக்கு கிராண்ட்மா) முயற்சி பண்ணாங்க. பாப்பாவுக்கு நல்ல தூக்கம் போல. லைட்டா கண்ணை முழிச்சிப் பாத்துட்டு, மறுபடியும் படக்குன்னு கண்ணை மூடி சடக்குன்னு என்மேல சாய்ஞ்சு தூங்க ஆரம்பிச்சிடுச்சு.

மறுபடியும் அவங்களோட கொஸ்டின் ஆன்ஸர் ஆரம்பம் ஆச்சு. அந்த 50+ ஆண்ட்டி கேள்வி கேக்கறதும், 30+ அக்கா பதில் சொல்றதுமான்னு இப்படியே போச்சு அவுங்க பேச்சு. இடையிடையில அவங்க கத்துக்கிட்ட விஷய ஞானத்தை எல்லாம் அந்த அக்காவுக்குப் போதிக்கறதுமே அவங்கக் குறிக்கோளா இருந்துச்சு. அவங்க எதோ பேசிக்கிட்டே இருக்கறதும், நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாக்கறதும், உள்ள அவங்க பேசறதைக் கேக்கறதுமா போய்க்கிட்டிருந்தது.

ஒரு வாட்டி நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாத்துட்டு திரும்பவும் உள்ள வரும் போது "நேத்து ராத்திரி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளிச்சு பருப்பு கடைசல் வச்சேன்மா. ரொம்ப நல்லாருந்தது. காலையில அதையே பழையதுக்கு போட்டுக்கிட்டு சாப்புட்டாரு" அப்படின்னாங்க ஆண்ட்டி.

"யாரு? உங்க வூட்டுக்காரரா?"ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்... கேக்கவா முடியும்? நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?

"நேத்து பூண்டு வெங்காயம் போட்டு ஒரு குழம்பு வச்சேன். பாப்பாவுக்கு மட்டும் தனியா பருப்பு வேக வச்சி சாதத்துல போட்டுப் பெசஞ்சு பன்னெண்டு மணிக்கெல்லாம் ஊட்டிட்டேன்"னு வாயால வலைக்குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டாங்க அக்கா. அதுக்கப்புறமும் என்னென்னமோ பேசினாங்க...

துறைமுகத்துக்குள்ள நுழையறதுக்குத் தயாரா நின்னுட்டிருந்த பெரிய டிரெயிலர் லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆகி ஆட்டோ ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ஊர்ந்து ஊர்ந்து நகர வேண்டியதாப் போச்சு. அந்த அஞ்சு நிமிசம் மட்டும் ஆட்டோவில் அமைதி நிலவியது.

நெரிசல் குறைஞ்சு ஷேர் ஆட்டோ வேகம் கூட்ட ஆரம்பிச்சதும் "ஏம்மா! கட்டை செவுத்துல பாப்பா ஜட்டியைக் காயப் போட்டிருந்தியே? எடுத்து உள்ள வச்சிட்டியா?"ன்னு ஆண்ட்டி அக்காவைக் கேட்க, "அதையெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எடுத்து மடிச்சி வச்சிட்டேன்"னு பதில் வந்துச்சு.

குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஆனா சிரிப்பை வரவழைத்த அந்த விஷயத்தை மீறி ஒரு விஷயம் யோசிக்க வைத்தது. என்ன தான் பசங்க உக்காந்துருக்காங்களேன்னு ஆட்டோவில ஏற யோசிச்சிருந்தாலும், அந்த பசங்க கவனிப்பாங்க அப்படிங்கறதை மீறி அவங்க பேசன விஷயங்கள்ல ஆதார ஸ்ருதியா இருந்தது ஒன்னு தான்...அது தன்னை சார்ந்தவர்கள் மீது அவர்கள் காட்டும் 'அன்பு'. ஒரு சில்பான்ஸ் விஷயத்துக்கு இந்தளவுக்கு நான் பிலிம் காட்டறதாக் கூடத் தோணலாம். ஆனா எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரையும் பாத்து ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதிகமாப் படிச்சிருக்கக் கூட மாட்டாங்க...ஆனா அந்த அரை மணி நேர நெருக்கத்துல எத்தனை விதமான விஷயங்களைப் பத்திப் பேசியிருப்பாங்க... அதுக்கெல்லாம் எவ்வளவு வேகமா யோசிச்சிருப்பாங்கன்னும் நெனச்சி பாக்கறேன். Everything for somebody else's sake. பிரமிப்பாத் தான் இருக்கு.

அந்நேரம் பசங்க ஞாயித்துக் கெழமை ஒழுங்கா வேலை செய்யிறாங்களா இல்லை ஓபி அடிக்கிறாங்களான்னு தெரிஞ்சிக்கறதுக்காக எங்க பாஸ் என்னோட மொபைல்ல போன் பண்ணாரு. எல்லாம் நல்லபடியா ராயபுரம் கல்மண்டபத்தை நோக்கி பிரியாணிக்காகப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியப் படுத்திட்டு ராயபுரம் கல்மண்டபத்துல எறங்க ஆயத்தமாகிட்டு இருக்கும் போது "சோத்துக் கத்தாழையும் சீமை பொன்னாங்கண்ணியையும் ராத்திரி சட்டியில ஊறப்போட்டு வச்சிடு" அப்படின்னு எதோ பேசிட்டிருந்தாங்க. அடடா! எதோ அழகு குறிப்பு போலிருக்கே...இவுங்க சொல்லற சமாச்சாரத்தைத் தான் Aloe Veraன்னு சொல்லி லேக்மியும் கவின்கேரும் குப்பியில அடைச்சி விக்கிறானுங்கன்னு நெனச்சிக்கிட்டேன்.

நான் மட்டும் இருந்திருந்தா ஒரு வேளை ஆட்டோவுலேயே பீச் ஸ்டேஷன் போயிருப்பேனோ என்னவோ? ஆனா கூட வந்தவன் என்னைக் கொன்னு களையும்ங்கிறதுனாலயும் நான் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்னு நிலைநாட்ட வேண்டி இருந்ததுனாலயும் மயிலின் ஆட்டத்தை அறியா வான்கோழியின் சுவையைத் தெரிஞ்சிக்கிறதுக்காகவும் ஆட்டோவை விட்டு இறங்குனேன். எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman's Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.

Tuesday, February 27, 2007

Alone...in a Woman's World

இல்லத்தரசிகளுக்குன்னு, தனியான சின்னஞ்சிறு உலகம் ஒன்னு இருக்குதுங்க. தன்னையும் தன் குடும்பத்தையும் தன் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் தனது குடும்பத்தினரையும் கொண்ட ஒரு சின்னஞ்சிறு உலகம். (டிஸ்கி:இதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அதில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள், அந்த உலகத்தில் அவர்களை ஒத்தவர்களுடன் அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இவை எல்லாம் இயந்திரமயமான இவ்வுலகில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுவையாக இருக்கும். அவசரமாக எதையோ தேடிக் கொண்டு ஓடிக்கொண்டிருப்பது போன்ற நம் வாழ்க்கையில் ஒரு கணம் நின்று ஒரு 'அட!' போட வைக்கும், சில சமயம் ஒரு புன்னகையை உதிர்க்கச் செய்யும். "என்ன கார்த்திக்கம்மா பசங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டாங்களா? சமையல் எல்லாம் ஆச்சா"ன்னு ஒரு இல்லத்தரசி கேட்டா நாமளா இருந்தா என்ன பதில் சொல்லுவோம்? ஆமா தெனமும் தான் பசங்க ஸ்கூலுக்குப் போறாங்க தினமும் தான் சமைக்கிறாங்க என்னமோ இந்தம்மா புதுசா வந்து கேக்குதேன்னு தானே நெனப்போம்? ஆனா இதுக்கு இன்னொரு இல்லத்தரசியோட பதில் "போய்ட்டாங்க பாலாஜியம்மா. இன்னிக்கு கத்திரிக்கா சாம்பாரும் வாழைக்கா பொடிமாஸும் சமையல். காய் அரிஞ்சு வச்சிட்டுத் துணி காயப் போடலாம்னு மாடிக்கு வந்தேன். குக்கர்ல இப்பத் தான் பருப்பு வேகுது"ன்னு வரும். அதோட "அவரு கூட மதியானம் சாப்புட வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு...ஒத்த ஆளுக்குச் சமைக்கனுமேன்னு இருக்கு. இந்தப் பசங்களுக்கும் ஸ்கூல்லேருந்து வந்து மதியானம் சாப்பிடும் போது காய்கறின்னா மட்டும் எறங்கவே எறங்காது"ன்னு ஒரு கொசுறு தகவலும் வரும். இந்த கேள்வியும் பதிலும் அந்த உலகில் தினமும் கேட்கப்படுபவை, தினமும் பதிலளிக்கப்படுபவை. அவர்களுக்குள் இவற்றைக் கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் எப்போதும் அலுக்காதவை. அந்த 'Woman's World'இல் நடக்கும் இப்படிப் பட்ட நிகழ்வுகளை ஒரு வருத்தப்படாத வாலிபனாக, ஒரு 'invisible entity' ஆகத் தள்ளி நின்று அவர்களுக்கு இடையூறாக இல்லாமலும், அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் ரசிப்பது ஒரு தனி ஜாலி தான்.

2005ல கிட்டத்தட்ட ஒரு நாலு மாசம்ங்க...சென்னையில் வீட்டுல [அதாவது அம்மா வீட்டுல :)] தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிடைச்சது.தென் சென்னையிலிருந்து ஆபீஸ் இருக்கும் வடசென்னை வரை தினமும் ஊர்ப்பயணம் செஞ்சுக்கிட்டு வேலைக்குப் போயிட்டு வந்துட்டிருந்தேன். முந்தைய கம்பெனி ஒரு உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையாக இருந்ததால் வாரத்தில் ஆறு நாள் மட்டும் வேலை நாளாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு கம்பெனியில், நீங்க ஐடி துறையில் இருந்தால், மற்ற ஐடி துறையினருக்கு இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமையும் உங்களுக்கு வேலை நாளாகும் பாக்கியமும் கிட்டலாம். அப்படித் தான் ஒரு வாட்டி, நம்ம கஸ்டடில இருந்த ஒரு அப்ளிகேஷனோட டேட்டாபேஸ் வெர்ஷன் அப்கிரேட் செய்ய வேண்டியிருந்ததுனால, ஞாயித்துக் கிழமையும் ஆபிசுக்குப் போக வேண்டியதாப் போச்சு. சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் வெர்ஷனை அப்கிரேட் பண்ணிக்குவாரு, நான் திங்கக் கிழமை வந்து பாத்துக்கறேன்னு பாஸ்சு கிட்ட ஒரு பிட்டைப் போட்டுப் பாத்தேன், வர்க் அவுட் ஆகலை. "நான் ராத்திரி ஹார்டுவேர் வேலையெல்லாம் முடிச்சிட்டு காலாங்காத்தாலை சாஃப்ட்வேர் அப்கிரேட் பண்ணிடுவேன். நீ காலைல ஒரு பத்து மணிக்கு வந்தின்னா அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிட்டு பதினொன்னரை பன்னெண்டு மணிக்கு எல்லாம் திரும்பிப் போயிடலாம்"னு நம்ம அட்மிணிஸ்ட்ரேட்டன்(என்ன மரியாதை வேண்டி கெடக்கு?) சொன்னதை உண்மைன்னு நம்பி மாங்கு மாங்குன்னு பஸ்ஸைப் புடிச்சு ஆஃபிஸுக்குப் போனா, தரையில தினத்தந்தி பேப்பரை விரிச்சி போட்டுத் தூங்கிட்டு இருந்தான். 'அட பாவி! ஞாயித்துக் கெழமைக்கு மொத்தமா சங்கு ஊதிட்டியேடா'ன்னு திட்டிக்கிட்டே அவனை எழுப்பி வேலையைத் தொடங்கும் போதே மணி பதினொன்னரை ஆயிடுச்சு.

"ஸ்க்ரிப்ட் ரன் பண்ணி வுட்டிருக்கேன். டேபிள், இண்டெக்ஸ் இதெல்லாம் க்ரியேட் ஆக இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்"னு சொல்லும் போது "ஹையா! இவனோட சண்டேக்கும் சமாதி கட்டியாச்சு"ன்னு நெனைச்சு சந்தோஷமா சொல்லற மாதிரி இருந்துச்சு. சரி கெடக்குது கழுதைன்னுட்டு இன்னும் இரண்டு மணி நேரம் உக்காந்து ஸ்க்ரிப்ட் ஓடறதை சினிமா பாக்க வேணாம், அந்த நேரத்துல ஊட்டா மாடிட்டு வந்து வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணோம். எங்க ஆப்பீஸாண்டவே ஓட்டல் இருந்தாலும், "ஞாயித்துக் கெழமையும் அதுவுமா சாம்பார், ரசமா...நோ நெவர்"னு அட்மின் தடியன் அடம்புடிக்கவே ராயபுரம் கல்மண்டபத்துக்கு கிட்டே இருக்க ஹோட்டல் பாண்டியன்ஸ்ல சண்டே ஸ்பெசலான டர்ர்க்கி பிரியாணி சாப்பிடலாம்னு அஜாக்ஸ்லேருந்து ஷேர் ஆட்டோல பயணப் பட்டோம். சின்ன வயசுலேருந்து பழகிப் போன அல்ப புத்தியான ஜன்னலோர சீட்டுக்காக அவசர அவசரமா ஆட்டோல ஏறி உள்ளே குந்திக்கிட்டேன்.

வான்கோழியை ஊடகங்கள்ல பாத்துருந்தாலும்(அப்பா...ஊடகத்தையும் ப்ளாக்ல உபயோகிச்சாச்சு) ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. வான்கோழி பிரியாணி சாப்பிட போறோம்னு நெனச்சதும் காதல் பரிசு படத்துல வர்ற "வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா"ன்னு பாட்டு வரி நெனப்பு வந்து அந்த பாட்டையே முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன். மயிலின் ஆட்டத்தை அறியாத வான்கோழியை அன்னைக்கே பழி வாங்க மனம் வன்மம் கொண்டது.

ராஜா கடை வந்ததும், ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க ஆண்ட்டியும் ஒரு ரெண்டரை வயசு மதிக்கத் தக்க பாப்பாவை இடுப்புல தூக்கி வச்சிட்டிருந்த ஒரு முப்பது வயசு மதிக்கத் தக்க அக்காவும் ஷேர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்துனாங்க.

"பீச் டேஷன் போவுமா?" - இது அக்கா

"போவும்மா" - ஆட்டோகாரர்

"எவ்ளோ?"

"பதினைஞ்சு ரூபா"

"அஜாக்ஸ்லேருந்து தான் பதினைஞ்சு ரூபா. இங்கிருந்து பன்னெண்டு ரூபா தான்" - அக்கா கூட வந்த ஆண்ட்டி.

"சரி ஏறுங்க"

ஆட்டோக்கு உள்ளே ரெண்டு தடியனுங்க உக்காந்துருக்கறதை பாத்ததும் கொஞ்ச நேரம் தயங்கி நின்னாங்க. இருபத்தி நாலு ரூபா சவாரி கைவிட்டுப் போயிடுமோன்னு பயந்த ஆட்டோகாரர் அட்மினிஸ்டிரேட்டனைப் பாத்து "நீ இங்க முன்னாடி வந்துட்ணா" அப்படின்னவும், என் கூட வந்தவன் வேற வழியில்லாம ஷேர் ஆட்டோ டிரைவரோட சீட்டை ஷேர் பண்ணிக்கிட்டான்.

அப்படியும் அவங்க ரெண்டு பேரும் ஏறாம யோசிச்சி நின்னதைப் பாத்த டிரைவர் "நெறைய எடம் இருக்கும்மா...ஏறுங்க சீக்கிரம்"னு அவசரப்படுத்தவும் போனா போவுதுன்னு ஏறி உக்காந்தாங்க.

பாப்பாவை ஜன்னல் பக்கமா உக்காந்துருந்த என் பக்கத்துல உக்கார வச்சிட்டு, பாப்பா பக்கத்துல அவங்க ஆயாவும்(ஆயாவாத் தான் இருக்கணும்னு ஒரு யூகம்), அவங்க பக்கத்துல அவங்க டாக்டரும் உக்காந்துக்கிட்டாங்க(டாக்டர் இன் லாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு).

நியூட்ரல், ஃபர்ஸ்ட், செகண்ட், தர்டைத் தாண்டி ஆட்டோ ஃபோர்த் கியர்ல போறதுக்கு முன்னாடி "ஏம்மா..."ன்னு அக்கா கிட்ட பேச நம்ம ஆண்ட்டி.

என் பக்கத்துல உக்காந்துருந்த அந்த பாப்பா அப்பத் தான் வின்னர் படம் பாத்துட்டு வந்துருக்கும் போலிருக்கு. "ஏண்டா கைப்புள்ள இன்னும் முழிச்சிட்டிருக்கே"ன்னு சொல்ற மாதிரி பாப்பா என் கை மேலே சடக்குன்னு தலையைச் சாய்ச்சது, வெடுக்குன்னு கண்ணை மூடுச்சு, படக்குன்னு தூங்கிப் போச்சு. பரசுராமர் தூக்கத்தைக் கலைக்க விரும்பாத கர்ணன் மாதிரி பாப்பாவுக்குத் தலையணையா நான் ஆட்டோ ஓரத்துல உக்காந்துருந்தேன்.

"ஏம்மா..."னு ஆரம்பிச்சவங்க பாப்பா தூங்கறதைக் கூட கவனிக்காம பேச்சு சுவாரசியத்துல இருந்தாங்க.

"ஜோதி கிட்ட ஜல்லி கரண்டி குடுத்து வச்சிருந்தியே, வாங்கிட்டியா?"

"இல்லைம்மா"

"தீபாவளி நெருக்கத்துல நீயும் தானே பலகாரம் சுடணும்? உனக்கு வேணும்னு அவ நெனைக்க மாட்டாளா?"

"இன்னிக்கே கேட்டு வாங்கிடறேன்"

"நீ தான் இதுல எல்லாம் கரிட்டா இருக்கணும். இன்னும் நாலு நாள் தான் இருக்கு. இன்னும் மிச்சர் போடணும், லட்டு புடிக்கணும்...எவ்வளவு வேலை இருக்கு? ஒனக்குக் கூடமாட வேலை செய்ய ஆளா இருக்கு? நீ தனியாத் தானே செய்யணும்?"

"ஹ்ம்ம்ம்...."

"சூட்டைத் தாங்கிக்கிட்டு லட்டைப் புடிக்கறதுக்கும் எவ்வளோ நேரம் ஆகும். கொஞ்ச கொஞ்சமாப் புடிச்சாத் தானே முடியும்?"

"ஆமாமா...அது சரி தான். இல்லையா பின்ன?" - நியாயமான வாதத்தைக் கேட்டு மனசுக்குள்ளே தீர்ப்பு சொன்னது நானு.

எப்பவும் தண்டையார்பேட்டை வழியா பீச் ஸ்டேஷன் போற ஆட்டோ, ராஜா கடை கிட்டவே சவாரி கெடைச்சதும் டோல்கேட் டிப்போ கிட்ட திரும்பி கடலோரமா எண்ணூர் எக்ஸ்பிரஸ்வேல போக ஆரம்பிச்சது. மழை பெய்ஞ்சு குண்டும் குழியுமா இருந்த ரோட்டைப் பாத்து ஓட்டற கவனத்துல ஆட்டோ டிரைவரும், சின்ன சீட்டுல இடம் பத்தாம ஒட்டுல உக்காந்து வந்துட்டுருந்த நம்ம சகாவும் ரொம்ப அமைதியா வந்தாங்க. பாப்பாவுக்குத் தலையணையான நான் ஆட்டோவின் பின் சீட்டில் Woman's Worldஇல் ஒரு lone traveller ஆக உக்காந்துருந்தேன்.

எப்பவாச்சும் இந்த மாதிரி lone travellerஆக நேரும் போது கடைப்பிடிக்க வேண்டிய எழுதாத சட்டம்(cardinal rule) ஒன்னு இருக்கு. அது "பொறுமையிலும் பொறுமை", "அமைதியிலும் அமைதி" காப்பது என்பது தான். நாம மைனாரிட்டியா இருக்கும் போது சுதந்திரமாப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முழு உரிமை அவங்களுக்குத் தான் இருக்கு. அந்த நேரத்துல அவங்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது நல்லது.

இப்படித் தான் போன ப்ராஜெக்டில சித்தூர்கட்ல இருக்கும் போது நாங்க தங்கியிருந்த டவுன்ஷிப்பிலிருந்து ஃபேக்டரிக்கு ஜீப்புல போயிட்டு இருக்கும் போது எதோ பூமி பூஜைன்னு ஸ்டாஃப் குவார்டர்ஸ்லே இருந்த ரெண்டு மூனு இந்திக் கார ஆண்ட்டிங்க ஏறிக்கிட்டாங்க.

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி "அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு"ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க...

வெயிட்டீஸ் வுட்டுக்கறேன்பா...ப்ளீஸ்...ப்ளீஸ்...இப்ப மணி பன்னெண்டு ஆகுது... ரொம்ப தூக்கம் வருது.

Woman's Worldஇல் நம்ம பயணம் இன்னும் ஒரு எபிசோட் தொடரும்.

Monday, November 20, 2006

சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்...

உலகெங்கிலும் இருக்கும் சோமபானப் பிரியர்களே! பெக் அடிச்சா கிக்கு வரும்னு தீர்த்தம் சாப்பிடாதவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் சரக்கு உள்ளே போனதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் எப்படியெல்லாம் தெரியும்னு ஒரு புண்ணியவான் எழுதி வச்சிருக்காரு. இக்கட கொஞ்சம் ச்சூடண்டி...

மராட்டிய நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை கீழே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house

Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk

I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile

I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on Chopra’s daughter’s marriage
Wife: Nope, she doesn’t seem to be that lucky. Still they are looking out for her

I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg

Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…

I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink

Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard

Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!
Wife: Don’t just blabber something, go out and sit quietly…

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile

Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside

I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk

Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

மராட்டிய மூலக் கவிதையை மராட்டிய மொழியில் படிக்கனும்னா(!!???) இங்கு சுட்டுங்கள். சரி...இதை அப்படியே தமிழ்ல நம்மால பேக்க முடியமான்னு பாத்தேன். உஹும்...ஒன்னும் முடியலை. LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.

Thursday, October 19, 2006

தீவாளி கொண்டாடுங்க மக்கா

அருமை நண்பர்களே, சக வருத்தப்படாத வாலிபர்களே, வாலிபிகளே! ஒங்க அல்லாப்பேத்துக்கும் நன்றி. எதுக்கா? இதை படிக்கப் போறீங்கல்ல...அதுக்கு தான். இன்னும் ரெண்டு நாளுலே தீவாளிய்யா. முன்னாடி சின்னபிள்ளலே ஆசை ஆசையா இருக்கும் , அய் திவாளி வந்திருச்சு புதுச்சட்டை , பட்டாசு கிடைக்கும்னு. இப்பவும் தீவாளின்னதும் அதே சந்தோஷம் வந்து ஒவ்வொருத்தரையும் தொத்திக்கத் தான் செய்யிது. நமக்கெல்லாம் பலபேத்துக்கு வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அது கைகாலிலே வெடிச்சு வைச்சு விழுபுண்ணுக வாங்கிருப்பீங்க. அது கடைசிலே தீவாளியைப் புண்வாளியா ஆக்கி வைச்சிருக்கும். அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குதிரை வெடின்னு வெடியெல்லாம் வெடிக்க விட்டு தெரு,வீதியெல்லாம் குப்பையாக்கி காது கேட்காத பெருசுக காதிலே கூட ரத்தம் வர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு சரித்தர சாதனைகளும் நடத்திருக்கும். அதுதான் நானும் சொல்லவர்றேன், வெடி வெடிக்கிறது சுற்றுபுறச்சூழலுக்கு ஏத்தது இல்லன்னோ இல்லே வெடிக்க பயந்தோ அதை வாங்காம வெடிக்காம இருந்துராதீங்க அப்போய்.

வெடிக்கிறேன்னு சொல்லிப்பிட்டு கையிலே தூக்கிபோடுறேன் , காலால் ஏத்தி விளையாடிருன்னு சொல்லி விளையாட்டெல்லாம் பண்ணபிடாது. அப்புறம் பர்னால்லும், தேங்கண்ணே, ப்ளூ மையின்னு கையெல்லாம் ஊத்திக்கிட்டு திரியணும்.அப்புறம் இந்த 102 கீயையும் தட்டமுடியாது, ஓரமா கெடக்கிற எலியேயும் புடிச்சு ஆட்டமுடியாது. மொத்ததிலே இப்போ மாதிரி வேலை பார்க்கிறமாதிரி நடிக்க முடியாது. ஏதோ உங்க சத்துக்கு தக்கமாதிரி நாலஞ்சு பட்டாசு டப்பாவை வாங்குங்க, அடுத்தவங்களுக்கு தொல்லை குடுக்காத சத்தம் கம்மியா குடுக்கற பட்டாசைக் கொளுத்தி கொண்டாடுங்க. கீழே படத்துல இருக்கற மாதிரி பட்டாசெல்லாம் ரத்தத்தைக் கண்டு அஞ்சாத என்னைய மாதிரி வீரனுங்க தான் கொளுத்த முடியும். அதெல்லாம் நீங்க யாரும் முயற்சி பண்ணி பாக்காதீங்க.




நீங்கெல்லாம் வெடிக்கல்னன்னா பரவாயில்லே! ஏதோ உங்க ஏரியாக்குள்ளே இருக்கிற ஏழை குழந்தைகளுக்குக் கொடுங்க. நீங்கெல்லாம் பட்டாசு வாங்கலைன்னா அந்த பட்டாசு தொழிற்சாலை மொதலாளிக்கு கொஞ்சம் தான் நஷ்டம் ஆனா தொழிலாளிக்கு வருசம் பூராவும் கூலி நஷ்டமப்பா. நம்மால ஆனா உதவியா பட்டாசு செய்யிற தொழிலாளிக்கும் உதவி பண்ணின மாதிரி இருக்குமில்லே . அப்புறம் கொஞ்சூண்டு காசை உங்க ஏரியா பக்கத்திலே இருக்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும்,அனாதை ஆசிரம பிள்ளைகளும் கொடுங்கப்பா. இந்த உலகமே நம்மோட அன்பபை மையப் புள்ளியா வச்சு சுத்துற வட்டமின்னு சொல்லீருக்காங்க பெரியவங்க! நம்ம அப்பனும் மக்கா சுப்பனும் சொன்னது தப்பா போகுதில்லே? ஏதோ எனக்குத் தெரிஞ்சதே சொல்லிருக்கேன். நீங்க அதுக்காக பீலீங் ஆப் கேலக்ஸில்லாம் ஆவ வேணாம். அதுதான் வேலை பார்க்காட்டியும் வேலை பார்க்கிற மாதிரியே நடிச்சு பேரு வாங்குற ஒரு வருத்தப்படாத வாலிபனுக்கு ஏத்த ஜைனடிக்கப்போய்!

தீவாளிக்கு ரெண்டு நா கழிச்சு ரம்சான் வேற வருது. தீவாளி அன்னிக்கு மட்டும் ஒரு பத்து இட்லி கறிகொழம்போ, பருப்பு சாம்பாரோ ஊத்தி சாப்பிட்டு பிட்டு அப்புறம் சுட்டு வைச்சிருக்கே பலகாரமெல்லாம் தின்னு முடிச்சு மறுநா நல்லா தீவாளி லேகியத்தே வாங்கி ஒரு உருண்டை வகுத்துக்குள்ளே திணிச்சிருங்க . ஹி ஹி அப்போதான் பிரியாணி புல்கட்டு கட்டமுடியும்.

(இப்பதிவின் உருவாக்கத்துக்கு உதவி செய்த அருமை தம்பி மதுரை வீரன் "ராயல் ராம்"சாமிக்குச் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது)

Friday, September 29, 2006

பயில்வான் வர்றாரு...

ஒத்துங்கப்பா ஒத்துங்கப்பா... பயில்வான் வர்றாருபா. அக்டோபர் மாச அட்லாஸ் வாலிபரா வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சொமக்கறதுக்கு பயில்வான் வர்றாருபா. தமிழ் பளாக்கோட 'முடி'சூடா கிங், சூப்பர் ஹெவிவெயிட் சாம்பியன்பா நம்ம பயில்வான். அவரைப் பத்தி நாங்கோ சொல்லி நீங்கத் தெரிஞ்சிக்கறதுக்கு ஒன்னுமில்ல. அல்லாருக்கும் அவரைப் பத்தித் தெரியும். எதோ நம்ம பேட்டைக்குள்ள அவரு வர ஒத்துக்குனதே நாம செஞ்ச பாக்கியம் தான். பயில்வான் சார்...அப்ப்டியே நம்ம பசங்களுக்கும் கொஞ்சம் வித்தை எல்லாம் கத்துக் குடுத்துட்டு போ சார் இன்னா?

இப்ப வாங்கய்யா...ஒவ்வொருத்தரா வாங்கய்யா...லைன்ல வரிசையா வாங்கையா. தெகிரியம் இருந்தா எங்க பயில்வான் மேலே கையை வெச்சுப் பாருங்கையா. வாங்கையா...யாருக்குன்னா இருக்கா அம்புட்டு தில்லு? கையைக் கண்டி இந்தப் பதிவுல தெரியாத் தனமா வெச்சேன்னு வை...மூஞ்சு மொகரை எகிறுற லெவலுக்கு அடுத்த பதிவுல கிச்சு கிச்சு மூட்டிவிட்டுருவாரு ஆமா... இப்பவே சொல்லிட்டேன். அட! அப்படியும் நம்பிக்கை வரலியா? சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி இருக்குற அந்த பரந்து விரிஞ்ச அவரு ஜெஸ்டை பாருங்கைய்யா...பனை மரத்தை ஒத்தைக் கையாலப் புடுங்கி வீசற அந்த பராக்கிரமம் பொருந்துன சோல்டரைப் பாருங்கைய்யா...'நேர் கோடு' எடுத்து படிய சீவிக்கின்னு பால் வடியற பச்சைப் புள்ள மாதிரி ஃபேஸ்கட்ல இருக்காரேன்னு தப்புக்கணக்கு போட்டுறாதே நயினா... அப்பால பெஜாராயிடுவே இன்னா?

சட்டியா இருக்கட்டும், பல்பா இருக்கட்டும், ரசப்பொடியா இருக்கட்டும் அட லண்டனாவே கூட இருக்கட்டும்பா...நம்ம பைல்வான் அண்த்தை கையில எது கடைச்சிதுன்னாலும் வுயுந்து வுயுந்து சிரிக்கற மாதிரி ஹெவிவெயிட் காமெடி பண்ணுவாருபா. அப்படிப்பட்ட ஒரு கொயந்தை மனசு. சரி...இப்ப நான் வேற இன்னாத்துக்கு குறுக்கால நந்தி மாதிரி... எல்லாம் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்கப்பா... நீங்க அடிக்கிற பிகிலுல மவனே காது கிழியனும்...ஏன்னா அக்டோபர் மாசம் அட்லாஸ் வாலிபரா வரப் போறவரு ஹெவிவெயிட் பயில்வான்..."யோசிக்கிற பீரங்கி"....அண்ணாத்தே ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ...

Friday, September 22, 2006

சங்கத்து ஆல்பம் - 2

மக்கள் எல்லாம் வாரக் கடைசியிலே சிரிச்சுகிட்டே சந்தோஷமா வீட்டுக்குப் போகணும்ங்கற ஒரே நோக்கத்தோட தல கைப்புள்ளயே களத்திலே இறங்கி ஆல்பத்தின் அடுத்த பகுதியையும் பிரின்T போட்டு ரிலீஸ்க்கு ரெடி பண்ணிட்டார்.


"இந்தாப் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. நீயும் உள்ளே வரப்பிடாது.. நானும் வெளியே வர மாட்டேன்.. உன்னிய நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. அது வரைக்கும் என் சங்கத்து ஆள் உங்கூடப் பேசிகிட்டு இருப்பான்... வர்றட்டா"
" ஏய் நாங்க எல்லாம் கருஞ்சிறுத்த அப்பூ பறக்கிற பிளைட் ஓடுற பஸ்ன்னு எதில்லயுமே கம்பியைப் பிடிக்காம கையைப் புறம்பாக் கட்டிகிட்டு கச்சிதமா நிப்போம்ல்ல.. ப்பூ பேன் காத்துக்கெல்லாம் பயந்துருவோமா என்ன? கப்பித் தனமாக் கரண்டை வேஸ்ட் பண்ணாம பேனை ஆப் பண்ணுங்கடா"


"கௌரவ்ம் கௌரவம்ன்னு சொல்லி இப்படிக் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சு என் கௌரவத்தை நாறடிச்சு இப்படி ஒரு ஓரத்துல்ல உக்கார வச்சுட்டீங்களேடா"

இங்கேப் பார்டா... என்னிய மாதிரியே எவ்வளவு அலகா இருக்கான்... போட்டாவை சங்கத்துக்கு நடுவுல்ல மாட்டி வைங்கடா

மக்களே இப்போ சந்தோஷ்மா வீட்டுக்குப் போங்க ... ENJOY MAADI

Tuesday, September 5, 2006

ச்சிரிப்பு வருது...ச்சிரிப்பு வருது...

சர்தார்ஜி ஜோக்குகளைப் பத்தி நம்மள்ல பலரும் கேள்வி பட்டிருப்போம். சர்தார்ஜிகளோட "அறிவுத் திறமையைப்" பாராட்டி நெறைய ஜோக்குங்க இண்டர்நெட்லயும், மின்னஞ்சல்ல பார்வர்டுகளாவும் நாம படிச்சிருப்போம். அப்படி பட்ட சில சர்தார்ஜி ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு...

சந்தா சிங் என்கிற சர்தார்ஜி. தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல ஏறுறாரு. விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொல்றாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு. முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல சந்தாசிங் "போயிங்! போயிங்! போயிங்!"னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறாரு. இவுரு கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து "பீ சைலண்ட்" அப்படிங்குறாரு. ஒடனே சர்தார்ஜி கத்துறாரு "ஓயிங்! ஓயிங்! ஓயிங்!"

ஒரு சர்தார்ஜி ஒரு நாளேடு ஆசிரியரா வேலை செஞ்சிட்டு இருக்காரு. ஒரு முறை, ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்ங்கிற தலைப்புல ஆலோசனைகள் சொல்றதுக்காக, ரயில்ல மும்பை போயிட்டிருக்காரு. அவரோட பெட்டி ரயில்வண்டியின் கடைசிப் பெட்டி. கடைசிப் பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு...அதோட தூக்கி தூக்கி போடுது. ரொம்ப கடுப்பாகிப் போன சர்தார்ஜி மும்பை போனதும் ரயில்வே துறையினருக்கு கொடுத்த ஒரே ஆலோசனை "எந்த ஒரு ரயில் வண்டியிலயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது"

சர்தார்ஜி ஒரு பார்ட்டிக்குப் போறாரு. அங்க அவரோட நண்பர் ஒருத்தர், நம்ம பார்த்திபன் மாதிரி போட்டு வாங்குற டைப்பு. "எல்லாரும் உங்களை முட்டாள்னு சொல்றாங்களே, நீங்க முட்டாளா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு நீங்க சரியான பதில் சொல்லனும்" அப்படிங்கறாரு. சர்தார்ஜியும் "கேள்வி எல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு...கேளுப்பா" அப்படிங்கிறாரு. ஒடனே நம்ம பார்த்திப நண்பரும்"வெறும் வயித்துல ஒங்களால எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?"அப்படின்னு ஒரு கேள்வி கேக்கறாரு. சர்தார்ஜி சொல்றாரு "ஏழு"ன்னு. இதை கேட்ட அவரோட ஃபிரண்டு சொல்றாராம் "ஏம்ப்பா மொத சப்பாத்தியைச் சாப்புட்டதும் உங்க வயிறு எப்படி வெறும் வயிறா இருக்க முடியும்? வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும்?"னு கேள்வி கேட்டு கலாய்க்கிறாரு. பல்பு வாங்குனாலும், சர்தார்ஜி "சே! பாயிண்டா தாம்யா சொல்லிருக்கான். இது நமக்குத் தோணாமப் போச்சே?. பரவால்லை... நாமளும் இதே மாதிரி யாரையாச்சும் கேள்வி கேட்டு கலாய்க்கனும்"னு முடிவு பண்ணறாரு. வீட்டுக்குப் போன முதல் வேலையா சர்தார்ஜி அவர் மனைவி கிட்ட அதே கேள்வியைக் கேக்குறாரு "உன்னால வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?" அதுக்கு அந்தம்மா சொல்லுது "அஞ்சு". இதை கேட்ட சர்தார்ஜி "சே...ஜஸ்ட் மிஸ்ஸு! நீ மட்டும் ஏழுன்னு பதில் சொல்லிருந்தேன்னு வை உன்னை செமத்தியா கலாய்ச்சிருப்பேன்" அப்படின்னாராம்.

ஒரு சர்தார்ஜி ஓட்டலுக்கு சாப்புட போனாராம். சாப்புட்டு முடிச்சிட்டு கை கழுவுற எடத்துல கையைக் கழுவாம வாஷ் பேசினைக் கழுவ ஆரம்பிச்சிட்டாராம். ஓட்டல் முதலாளி ஓடி வந்து "சர்தார்ஜி! சர்தார்ஜி! எதுக்குங்க வாஷ் பேசினைக் கழுவிட்டு இருக்கீங்க" அப்படின்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி பதில் சொன்னாராம் "என்னை என்ன கேணைன்னு நெனச்சியா...நீ தானேய்யா இந்த எடத்துல "வாஷ் பேசின்"னு எழுதி போர்டு மாட்டி வச்சிருக்கே?" அப்படின்னாராம்.

ரெண்டு சர்தார்ஜிகள் ஒரு பரிசோதனைக் கூடத்து வாசல்ல உக்காந்திருக்காங்க. அதுல ஒரு சர்தார்ஜி அழுதுட்டு இருக்காராம். ரெண்டாவது சர்தார்ஜி அதப் பாத்து "ஏம்பா அழுவுறே" அப்படின்னாராம். அதுக்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம் "நான் பிள்ட் டெஸ்டுக்காக வந்தேன். ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுனியை லேசாக் கீறுனாங்க. பயங்கரமா வலிக்குது அதான் அழுவுறேன்" அப்படின்னாராம். இதை கேட்ட ரெண்டாவது சர்தார்ஜி "ஓ"ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டாராம். முதலாமவரு கேக்கறாரு"நீ ஏம்பா இப்பிடி அழுவுறே?" அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி "நீயாச்சும் பிளட் டெஸ்டுக்குத் தான் வந்தே...நான் யூரின் டெஸ்டுக்கு வந்துருக்கேன்பா"ன்னாராம்.

ஒரு சர்தார்ஜி உப்பு வித்துட்டு இருக்காரு. உப்பு வாங்க வந்த ஒருத்தரு "ஏங்க சர்தார்ஜி! ஆயிரக் கணக்குல உப்பு மூட்டை அடுக்கி வச்சிருக்கு. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா?"அப்படின்னு ஒரு சந்தேகத்துல கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாரம் "அட போப்பா! ஒரு மாசத்துல ரெண்டு மூட்டை தாம்பா விப்பேன். நான் ஒன்னும் அவ்வளவு நல்ல வியாபாரி இல்ல". இதுக்கு வந்தவரும் கொழப்பமாகி "அப்புறம் எதுக்குங்க இத்தனை மூட்டை குமிச்சி வச்சிருக்கீங்க"ன்னாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் "என்னப்பா பண்றது? எனக்கு விக்கிறவன் ஒரு நல்ல வியாபாரியாச்சே?"

ரெண்டு சர்தார்ஜி மாணவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்களைப் பத்திப் பேசிட்டு இருந்தாங்களாம். ஒருத்தரு சொன்னாராம்"என்னய்யா நெலாவுல எறங்குறது என்ன பெரிய விஷயமா...அமெரிக்கா காரன் பெருசா என்னத்த சாதிச்சிட்டான்? நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்"அப்படின்னாராம். அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்"சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்"அப்படின்னாராம். அதுக்கு மொதல் சர்தார்ஜி "இருந்துட்டு போவுது...அதுக்கென்ன? நாம ராத்திரில போவோம்"அப்படின்னாராம்.

குர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம். கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு. அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு. அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு. பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து "என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே?"ன்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்" சார்! நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்... ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன்"

நாலு சர்தார்ஜிக்கள் ரயில்வே பிளாட்பாரத்துல "பஞ்சாப் மெயில்"ங்கிற வண்டிக்காகக் காத்துட்டிருகாங்க. அப்ப ரயில் காலதாமதமா ஓடிட்டு இருக்கு அது வர்ற இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு ஒரு அறிவிப்பு பண்ணறாங்க. அதான் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே? வெளியிலே போய் எங்கேயாச்சும் சுத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நாலு பேரும் கெளம்பி வெளியே போயிடறாங்க. அவங்க சுத்திட்டு திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பாத்தா பஞ்சாப் மெயில் வேகம் எடுத்து கெளம்பி போயிட்டு இருக்கு. நாலு பேருல ஒருத்தரு ஓடிப் போய் ஒரு பெட்டியில ஏறிக்கிறாரு. இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி கடைசி பெட்டியில ஏறிக்கிறாரு. மத்த ரெண்டு பேரும் ஏற முடியாம நின்னுடறாங்க. குடுகுடுன்னு ஓடிப் போய் ஏறுன அந்த ரெண்டு பேரும் ரயில்வண்டிக்குள்ளேயே சந்திச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்ததும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க. அப்ப அங்க பக்கத்துல இருந்தவரு"ஏங்க என்னாச்சு? ஏன் இப்படி சிரிக்கிறீங்க"ன்னு கேட்டாராம். அதுக்கு ஒரு சர்தார்ஜி சொன்ன பதில்"வழியனுப்ப வந்த நாங்க ரெண்டு பேருமே ஏறிட்டோம்...பஞ்சாப் மெயில் ஏறி ஊருக்குப் போக வேண்டிய ரெண்டு பேரும் கீழேயே நிக்கிறானுங்க"


கல்லூரியின் பெண்கள் அறையை மேம்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன என்ற அறிவிப்பை, அறிவிப்பு பலகையில பாத்துட்டு சர்தார்ஜி பயங்கரமா யோசிச்சு கொடுத்த ஒரு ஆலோசனை"ஆண்களுக்கும் உள்ளே வர அனுமதி கொடுக்கலாம்"

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

கடைசியா சமீபத்துல டிவியில பாத்த ஒரு காமெடி (witty answer). ஜானி லீவர்னு ஒரு இந்தி திரைப்பட நடிகர். செமத்தியான காமெடியன். முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி நடிக்கிறதும் பேசறதும் அவரு மிமிக்ரி பண்ணறதையும் பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அவரோட "ஜானி ஆலா ரே"ங்கிற நிகழ்ச்சி ஒரு பிரபல இந்தி சேனல்ல வருது.


அந்த நிகழ்ச்சியில ஜானியை ஒரு பொண்ணு கேள்வி கேக்குது "ஏன் ஜானி சார்! உங்க காமெடியால பயங்கரமா மக்களை சிரிக்க வைக்கிறீங்க, உங்களைப் பாத்தாலே மக்கள் சந்தோஷமாயிடுறாங்க. நல்லா மிமிக்ரியும் பண்ணறீங்க. எப்படிங்க இப்பிடியெல்லாம்? எப்பிடி பண்ணறீங்க?" அதுக்கு முகத்தை அப்பாவியா வச்சிக்கிட்டு ஜானி சொன்ன பதில்"என்னம்மா பண்ணறது. எனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கு. ரெண்டு சின்ன குழந்தைங்க இருக்காங்க. அவுங்களுக்கு ரெண்டு வேளை கஞ்சி ஊத்தனும்னா(ரொட்டி) இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணினா தான் உண்டு"

Saturday, July 1, 2006

எருமை கன்னுக்குட்டி

கண்ணுங்களா! உங்கள்ல யார்னா 'மந்திரி குமாரி' படத்துல வர்ற 'எருமை கன்னுக்குட்டி'ங்கிற பாட்டைக் கேட்டிருக்கீங்களா? முந்தா நேத்து காலைல எந்திரிச்சதுலேருந்து இந்த பாட்டு திடீர்னு உதட்டுல வந்து எக்கச்சக்கமா உக்காந்துக்குச்சு. எதனாலன்னு தெரியலை. ஆனா பாட்டோட முதல் வரியான 'எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி'யைத் தவிர வேறு எதுவுமே நெனப்பு வரலைமா. என்ன தான் சொல்லு கண்ணு... எருமை கன்னுக்குட்டியும் பாக்கறதுக்கு அப்பாவியா க்யூட்டா சப்பியாத்(சரியா படிங்கய்யா - அது chubby) தான் இருக்கும். பசு கன்னுக்குட்டியைத் தூக்கி கொஞ்ச நம்ம பசுநேசன் உட்பட பல பேரு கெடச்ச மாதிரி, எருமை கன்னுக்குட்டிக்குன்னு யாரும் கெடக்கலை - இந்த பாட்டைப் படத்துல பாடிக்கிட்டு வர்ற அந்த சதரவட்டை பையனைத் தவிர. நான் கூட ரொம்ப நாளா ஒரு பெட் அனிமல்ஸ் வளக்கணுமின்னு ஆஸ் பட்டுக்குனுருக்கேன். பாப்போம். இந்த பாட்டைப் பாடுற வாய்ப்பு எனக்கு எப்பயாச்சும் வாய்க்குதான்னு பாப்போம்.

சில சமயம் இத மாதிரி எதாச்சும் பாட்டோட வரிகளோ, ஒரு படத்தோட பேரோ யோசிச்சி யோசிச்சி பார்த்தும், நெனப்புக்கு வராம ரெண்டு நாளைக்கு ஒரே மண்டை காய்ச்சலா இருக்கும். இருக்குற வேலையெல்லாம் போட்டுட்டு இதே வேலையாத் திரிய வைக்கும். நாம நெனச்ச விசயம், சம்மந்தமே இல்லாம வேற வேலையா இருக்கும் போது நியாபகம் வரும். ஆனா எருமை கன்னுக்குட்டி கேஸ்ல ரெண்டு நாளா முயற்சி பண்ணி பார்த்தும் தோல்வி தான். ரொம்ப கஷ்டப் பட்டு யோசிச்சதுல, படத்துல எம்.ஜி.ஆர் பேரு வீரமோகன்ங்கிறதும், ஆன்ட்டி-ஹீரோவா(Aunty இல்லப்பா) வர்றவரு பேரு எஸ்.ஏ.நடராஜன்ங்கிறதும், ஹீரோயின் பேரு மாதுரிதேவிங்கிறதும், 'அரண்மனை நாயே அடக்கடா வாயை'ங்கிற கலைஞர் வசனமும், தீபன் சக்கரவர்த்தி அவுங்க நைனா திருச்சி லோகநாதன் பாடுற 'வாராய் நீ வாராய்' பாட்டுல வர்ற "முடிவில்லா மோனநிலையை நீ மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்"ங்கிற வரியும், 'வாத்தியார்' அடிபட்டு கெடக்கும் போது ஜிம்மி மேலே ஒக்காந்துக்கிட்டு ஒரு 'பியூட்டிஃபுல் பாய்' எருமை கன்னுக்குட்டி...ன்னு பாடிக்கிட்டு வர்ற சிச்சுவேசனும் நியாபகம் வந்துச்சு.

ஆனா இதெல்லாம் நெனப்பு வந்து என்ன புண்ணியம்? 'எருமை கன்னுக்குட்டி...' பாட்டு மட்டும் தேய்ஞ்ச ரெக்கார்டு மாதிரி அதே எடத்துல நிக்குது. அதுக்கு மேலே ஒரு வார்த்தை கூட நெனப்பு வரலை. ஆகவே மகாஜனங்களே! இந்த பாட்டைக் கேட்டவங்களும் பாடல் வரிகள் தெரிஞ்சவங்களும் என் மண்டை காய்ச்சலுக்கு மருந்தாய் அவுங்கவுங்க எருமை கன்னுக்குட்டியைச் சங்கத்துப் பக்கம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு வாங்க.

அப்படி ஓட்டிக்கிட்டு வந்தீங்கன்னா இன்னிக்கில்லன்னாலும் என்னிக்காச்சும் ஒரு நாள், எளிய எருமை கன்றுகளும், அழகிய ஆர்மடில்லோக்களும், பிளிறும் யானை கன்றுகளும், கூவும் கூக்காபுர்ராக்களும் ஒரே தட்டில் ஒன்றாக, சப்பளங்கால் போட்டு சமத்தாச் சாப்புடும் காட்சியைக் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம். அதுனால "எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி..."இதுக்கடுத்த வரி என்னான்னு சொல்லுங்க, ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

(பி.கு : சொல்ல மறந்துட்டேனே! நம்ம 'கன்னிவெடி' சித்தர் பிரிகேடியர். நாகை சிவா வளர்க்கும் பெட் ஆர்மடில்லோவின்(Armadillo) பேரு டி.ஏ.மதுரம். காரணம் கேக்காதீங்க... சொல்லமாட்டேன்! யாரு கையிலயும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் போட்டுருக்கேன். பி.பி.சியில் பிஸ்கோத்து சாப்பிட்டு சி.என்.என்னில் சைனா டீ குடிக்கும் சங்கத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கீதா மேடத்தின் அன்பில் சங்கீத பயிற்சி பெறும் அந்த பேறு பெற்ற கூக்காபுர்ராவின்(Kookaburra)பேரு மகாலிங்கம்)

(ஐயோ! இன்னொரு பி.கு.வையும் மறந்துட்டேனே: "வீ வாண்ட் நாமக்கல்லார்"னு கோஷம் எழுப்பற தளபதி அவர்களின் பல நூறு கோடி ரசிகர்களுக்காக - இன்னிக்குக் காலையில சங்கத்துக்கு வந்த பேக்ஸ் செய்தி. அதுல "அருள்மிகு மலையாள பகவதி துணை. எண்டே ஒரே தலைவி கண்விண்மீனிற்கும் விரல்விளையாட்டு வித்தகருக்கும் தற்சமயம் சமாதானம் ஏற்படும் சூழல் நிலவிக் கொண்டிருப்பதால், அது ஏற்படாமல் தடுக்க தற்போது ரத, கஜப் படைகளையும் ஏவிப் பொருதிக் கொண்டிருக்கிறேன். இப்பணியைச் செவ்வனே முடித்துவிட்டு சங்கப் பணிகளை ஆற்ற இதோ வந்து கொண்டே இருக்கிறேன். இப்படிக்கு அ.உ.க.வி.மீ.ர.ம.தலைவர் சிபி 'ஷாஜி'. ஆலப்புழா மாவட்டம்"ன்னு போட்டுருந்துச்சுப்பா.)

(சாரி...சாரி...லாஸ்ட்டா இன்னும் ஒரே ஒரு பி.கு: கூக்காபுர்ராவோட இனிஷியலைச் சொல்ல மறந்துட்டேன் - "டி.ஆர்".)

இப்பாடலின் வரிகளை சிவஞானம்ஜி அவர்களின் "வ.வா.சங்கம் தேடும் பாடல்" எனும் பதிவில் காணலாம்.

Wednesday, June 21, 2006

'கை' திடீர் மாயம் - திடுக்கிடும் உண்மைகள்

'நாம ரெண்டு பேரும் செத்துச் செத்து வெளாடலாமா" என்று பாசத்தோட கூப்பிட்டு என்னைய கதிகலங்கச் செய்யும் பாசத்தின் பிறப்பிடம், சங்கத்தின் உண்மைத் தொண்டன் - "கை" என்று அனைவராலும் அழைக்கப்படும் தேவ் ஆறு வருசம் லீவு சொல்லிட்டு திடீர்னு மாயமா மறைஞ்சு போனது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். ஆனா காணாமப் போனவரு எங்கே போனாரு என்ன ஆனாருன்னு யாராச்சும் நெனச்சுப் பாத்தீங்களாய்யா? அந்தப் பாசப்பிழம்பை நீங்கல்லாம் இம்புட்டு சீக்கிரம் மறந்திட்டீங்கன்னு நெனக்கும் போது தான் மேல்(Male இல்ல) எல்லாம் கொதிக்குதுய்யா.

இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்க. எம்புட்டுத் தான் தல தெருத் தெருவாத் திரிஞ்சு ஆப்பு வாங்கினாலும் ஒரு மனுசன் இல்லறத்துல வாங்குற "ஆப்பு" மாதிரி வராதுன்னு அனுபவத்துல பட்டு பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட தேவ் ஒரு மெகா ஆப்புக்கு மெகா ப்ளான் போட்டாப்புல. தலக்கு இல்லறத்துல ஆப்பு வாங்க வைக்க என்ன பண்ணலாம்னு பயங்கரமா யோசிச்சதுல கட்டத்துரை பார்த்திபன் சதியால கெழக்காப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போன தன்னோட உடன்பிறவா அண்ணி "கைப்பொண்ணு"வைத் திரும்ப சங்கத்து ஹெட்குவார்ட்டர்ஸ்க்கு கூட்டியாறது தான் இதுக்குச் சரியானத் தீர்வுன்னு முடிவுசெஞ்சாப்புல. ஆறு வருசம் லீவுன்னு ஒரு மெகா பீலாவை அவுத்துவிட்டுப் புட்டு சங்கத்து ஆளுங்களுக்கும் டன் கணக்குல அல்வாவைக் குடுத்துப்புட்டு யாருக்கும் தெரியாம "கைப்பொண்ணோட பொறந்த வீடான கெழக்காபிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்குக் ராவோட ராவாக் கெளம்பிட்டாப்புல.

அங்கே போனா பட்டித் தொட்டியெல்லாம் கைப்பொண்ணு பேரு தானாம். அவுங்க நாட்டுலேயே கைப்பொண்ணு தான் செவத்தப்புள்ளங்கிறதால லோரியல் ஹேர் க்ரீம், லாங்கைன்ஸ் கைகடியாரம், கோகா கோலா இப்படின்னு இந்தியாவுல 'அக்கா ஐஸ்" வர்ற வெளம்புரத்துக்கெல்லாம் புக் ஆயிட்டாங்கப் போல. எங்கே பாத்தாலும் கைப்பொண்ணோட போஸ்டரும் பேனரும் தானாம். ஏற்கனவே 'மிஸ் கெலக்காப்பிரிக்கா'வா வேற தேர்ந்தெடுக்கப்பட்டுட்டாங்களாம். அடுத்ததா 'மிஸ் ஆப்பிரிக்கா' பட்டம் வாங்க பூனை நடை பழகிட்டு இருக்கும் போது தான் நம்ம தேவ் கைப்பொண்ணைப் பாத்துருக்காப்புல. "கண்டேன் கைப்புவை ஆப்பினுக் கணியாய்" அப்படின்னு கைப்பொண்ணுக் கிட்ட 'சொல்லின் செல்வர்' ஸ்டைல்ல சொல்லப் போன தேவைக் கைப்பொண்ணோட சித்தாப்புக்களல ஒருத்தரு பாத்துட்டாப்புல. பார்த்துட்டு சும்மா போயிருந்தா பரவால்லியே...அதுக்கப்புறம் நடந்ததை நெனச்சா தான் மறுபடியும் மேல் எல்லாம் பதறுது. எங்க நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தர்ற எங்க "குடும்பத்து குலவிளக்கு" கைப்பொண்ணைக் கூட்டிட்டு போகவாடா வந்திருக்கே?"ன்னு ஒரு நாலு நாளு கட்டி வச்சி பேக்சைட்ல கழுதைப்புலியை வச்சி கடிக்க வச்சிருக்கானுங்க. அம்புட்டு வலியிலயும் 'கை'க்கு சங்கத்து நெனப்பு தானாம்...ஐயோ தல இப்ப ஆப்பு இல்லாம் தவிச்சிட்டிருக்குமேன்னு ரொம்ப தவிச்சிப் போயிட்டாப்புலயாம். எப்படியோ அங்கேருந்து தப்பிச்சி யார் யார் கையைக் காலையெல்லாமோ புடிச்சி ஒரு வழியா எதோ ஒரு கடலோரப் பிரதேசத்துக்கு தேவ் வந்து சேர்ந்திருக்காப்புல.

எறங்குன எடத்துல கழுதைப்புலி கடிக்கு எச்சியைத் தொட்டுத் தொட்டு ஒத்தடம் குடுத்துக்கிட்டே மெல்ல நடந்து வந்தா சங்கத்து கீதமான "ஒன்றா ரெண்டா ஆப்புகள், எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா"ங்கிற பாட்டை யாரோ ரெண்டு கட்டையில பாடுறதைக் கேட்டுருக்காப்புல. ஆஹா...நம்ம சங்கத்து சிங்கங்கள்ல யாரோ ஒருத்தரு இங்கே பக்கத்துல இருக்காருன்னு நம்ம தேவ் புரிஞ்சிக்கிட்டாப்புல. கட் பண்ணா அங்கேருந்து ஒரு நாலு கல்லு தூரத்துல நம்ம வெவசாயி இளா 'கஜா கா தோஸ்த்'னு சொல்லி கள்ளத் தோணியில ஏறி கதாருக்குப் பதிலா கேரளால எறங்கி அங்கே வேஷ்டி கட்டுன அம்மணிங்களை லுக் விட்டுக்கிட்டே சங்க நாதத்தை மொழங்குன படியே போயிட்டிருக்காப்புல. மறுபடியும் கட் பண்ணா தேவ் சரி நாமும் சங்கத்துப் பாட்டைப் பாடினா அங்கிட்டுப் பாடுற சிங்கம் யார்னு கண்டுபிடிச்சிரலாம்னு இவரும் ஒரு நாலு கட்டையிலே பாட ஆரம்பிக்கிறாரு. அப்படியே வெவசாயி பாட, தேவ் பாட இப்படின்னு ரெண்டு பேரும் பக்கத்துல வந்து அண்ணா தம்பின்னு கட்டிப் பிடிச்சிக்கிறாங்க. தேவைக் கண்டுபிடிச்சாச்சு அடுத்த பஸ்ஸைப் புடிச்சு சீக்கிரம் விதவுட்ல வந்துடுறோம்னு நம்ம வெவசாயி நேத்து டிரங் கால் போட்டு சொன்ன சேதி தான் மேலே?

மக்களே! அப்பு வைப்பதே ஒன்றே தன் கடமை என்று எண்ணும் தேவ் தலக்காக முதல் முறையாகக் கழுதைப்புலியிடம் கடி வாங்கியுள்ளார். அந்த கடிக்கு அருமருந்தாய் கை தேவிடம் நீங்கள் சொல்லும் ஆறுதல்கள் அமைய வேண்டும் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

"தலக்காக கழுதைப்புலி கிட்ட கடி வாங்கினியாடா...'கை' செல்லம்? ரொம்ப வலிக்குதாடா? இனிமே நீ இந்த இல்லறம் இல்லாத அறம்னு இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண அப்புறம் என்னை மனுசனாவே பாக்கமுடியாது. எனக்கு நீங்க தாண்டா கண்ணுங்களா முக்கியம். அதை புரிஞ்சி நடந்துக்கங்க. இந்த சேதியை நேத்து நைட்டு கேட்டதுலேருந்து ரெண்டு ஃபுல் மீல்ஸ் ரெண்டு குவார்ட்டரு இதைத் தவிர அன்னந்தண்ணி எறங்கலைய்யா..எறங்கலைய்யா"

Wednesday, June 14, 2006

விவசாயி க(உ)தார் விஜயம்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒட்டகப் படையில் ஆள் சேர்ப்பதற்காக...(சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்...ஒட்டகம் சேர்ப்பதற்காக) ஞாயிற்றுக் கிழமை கதார் செல்லவிருக்கும் சங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவசாயி இளா அவர்களின் பயணம் இனிதே அமைய எங்கள் வாழ்த்துகள்.

இப்பயணத்தின் வாயிலாக கதார் சேக்குடன் வ.வா.ச. கதார் நாட்டு எக்ஸ்டென்ஷன் கவுண்டர் திறப்பது குறித்தும், வளைகுடா வட்ட சங்கத்து சிங்கங்களுக்குப் ப்ளாக்கில் விவசாயம் செய்வது குறித்தும் மகசூலை மேம்படுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கவிருக்கிறார்.

கதார் நாட்டு விமான நிலைய வாயிலில் கடலை சாகுபடி குறித்து கதார் நாட்டு காலேஜ் பசங்களுடன் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பர் விளைச்சல் பெறுவது குறித்து பேச சங்கத்துச் சிங்கம் பாண்டிக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வ.வா.ச. தென்மதுரை வட்ட கண்மணிகள் விவசாயியை ஞாயிற்றுக் கிழமை அன்று வழியனுப்ப சென்னை மெரினா கடற்கரையில் கரகாட்டம் ஒத்திகை நடத்தியபோது எடுக்கப் பட்ட படம்.

Monday, May 22, 2006

வாழ்த்து + போட்டி

இன்று _ _ ஆம் பிறந்த நாள் காணும் எங்கள் சங்கத்தின் பாதுகாப்பு அரண், தங்கத்தலைவி திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள், அனைத்து வளங்களையும் பெற்று பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ சங்கத்தின் சார்பாக மனதாற வாழ்த்துகிறோம்.

சரி இப்ப மேட்டரு... "_ _"க்கு மேலே சரியான நம்பரைப் பொருத்தும் முதல் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு, சங்கத்து சட்டியில் இப்போது கிண்டப் பட்டுக் கொண்டிருக்கும் டைமண்டு கல்கண்டு 100 கிராம் டிஜிட்டலாக வழங்கப்படும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படும் இரண்டு அதிர்ஷ்டசாலிகளுக்கு பம்பர் பரிசாக, சங்கத்து சார்பில் நாளை எங்கள் தானைத் தலைவியுடன் டீ நாஸ்தா பண்ணும் அரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.